அகத்திய மாமுனிவர் அருளால் நடைபெற்ற சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனையில் , இடைக்காடர் சித்தர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு ( 05 October 2025) - பகுதி 1
வாக்குரைத்த மாநகர்:- அன்னை மீனாட்சி தேவி உடனுறை சொக்கநாதர் அருளும் மதுரை மாநகர்.
நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி வரை
இடம் : லட்சுமி சுந்தரம் ஹால் & T S ராஜம் ஆடிட்டோரியம், 15.A, கோகலே ரோடு , தமுக்கம் மைதானம் எதிரில், தல்லாக்குளம், மதுரை - 625002.
அழகாக உலகமெல்லாம் ஆளக்கூடிய இறைவா, இறைவியே போற்றியே பணிந்து பணிந்து பரப்புகின்றேனே இடையன் அவன்.
என்ன, ஏது என்று அறிய அறிவதற்குள்ளே காலங்கள் சென்று விடுகின்றது. அக்காலங்களை வெல்ல வேண்டும் என்றால் கிரகங்களை நிச்சயம் வெல்ல வேண்டும். கிரகங்கள் நிச்சயம் தன்னில் கூட வெல்ல முடியாத, வெல்ல முடியாதடா. ஏன், எதற்கு, எவை புரியாமல் இருந்தாலும், அவை தன் நிச்சயம் பின் புரிய வைத்திட சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம்.
ஆனாலும் அறிந்தும், அதாவது மந்திரத்தை ஓதச் சொல்கின்றார்கள். ஆனால் ஒருமுறை ஓதினால், பின் என்ன பயன் தரும், என்ன அறிந்தும், இவை தன் நிச்சயம் பயன் தராது. அதாவது பின் கிரகத்தை, அதாவது பின் காலத்தை வெல்ல வேண்டுமென்றால், கிரகங்களை வெல்ல வேண்டும். நிச்சயம் தன்னில் அறிந்தும்.
இவை தன், அதாவது எப்படி பின் வெல்வீர்களாக. ஆனாலும் அறிந்தும், ஒவ்வொரு கிரகத்திற்கும் பின் மந்திரங்கள் உண்டு. ஆனாலும் அதை ஒருமுறை செப்பினால், நிச்சயம் பயனளிக்காது. இருமுறை ஏன், லட்சம் எதை, எவை என்று புரிய.
அதாவது 100 கோடி அளவிற்கு மேலே செப்பினால்தான், அவ் கிரகங்களும் கூட அடங்கும். ஆனால் இவ்வுலகத்தில் செப்புவோர் உண்டா என்றால், இல்லை.
அதனால் கிரகத்தை, கிரகம், கிரக பாதையை கூட நிச்சயம் வகுத்து, அனைவரும் கிரகப் பாதையில் செல்வதால், எப்படி வெல்ல முடியும்?
இதனால்தான் சித்தர்கள் சரியாகவே பின், அதாவது குருவானவன் அகத்தியனே நின்று அறிந்தும், இப்படி சொல்லப் போவதில்லை. இதனால் அறிந்தும், இவ்வாறு கூட்டிட்டு, நிச்சயம் மந்திரத்தை கூறினால், அனைவரும் பின் கூட்டோடு. அதனால் ஒருவர் ஒருவர், நிச்சயம் ஒரு மந்திரத்தை கூறினால், நிச்சயம் அவரவர் பின் அருகில், நிச்சயம் இதைத்தன் இப்படியே கூறிக்கொண்டு இருந்தாலே, நிச்சயம் வெல்லலாம்.
பல பல 100 கோடி இப்படித்தான் மந்திரங்கள். ஆனாலும் இதைத்தன் பின் உருவேற்றி, உருவேற்றி. ஆனால் நிச்சயம் பின் மந்திரங்கள் செப்ப முடியுமா என்றால், நிச்சயம் செப்ப முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :-
என்ன சொல்றாங்கன்னா, இந்த உலகத்துல கிரகங்களை நம்ப வென்றால் மட்டும்தான் நமக்கு வாழ்க்கை வரும் என்று சொல்றாங்க. அப்ப கிரகங்களை வெல்ல முடியும்னு சொல்றாரு. அப்ப என்ன செய்யணும் சொல்றாருன்னா, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் இருக்குன்னு சொல்றாரு இடைக்காடர். அவர் சொல்றதுபோல, அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னா லாபம் இல்லை. இரண்டு முறை சொன்னாலும் லாபம் இல்லை. பல கோடி, நூறு கோடி முறை சொன்னால்தான் பலன் கிடைக்கும். ஆனா அதற்குள்ளே என்ன ஆகுதாம்? காலங்கள் போய்விடுகின்றன. அதனால காலத்தை வெல்ல முடியல. அதனாலதான் காலத்தையே வெல்லணும்.
அதுக்காக கிரகங்கள் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு, அகத்தியர் என்ன செய்றாருன்னா, நீங்க ஒரு தடவை சொன்னா எத்தனை பேர் இருக்காங்க? ஒரு ஆயிரம் பேர் இருக்காங்களா? அப்ப நீங்க ஒரு தடவை சொன்னாலே என்ன ஆகுது? ஆயிரம் ஆயிரம் முறை சொன்ன மாதிரி ஆகுது. அதே மாதிரி பத்து தடவை சொன்னா 10,000 முறை சொன்ன மாதிரி ஆகுது. இப்படித்தான் வெல்ல முடியும்.
தவிர ஒவ்வொரு மந்திரத்துக்கும் — இப்போ திருவாசகத்துக்கும் கூட — இப்படித்தான் சொல்றாரு. படிச்சா ஒரு முறை படிச்சா ஒன்னும் ஆகாது. ரெண்டு மூணு முறை படிச்சாலும் ஒன்னும் ஆகாது. எல்லாரும் சேர்ந்து படிக்கும்போது தான் அதனோட தத்துவம் வேற மாதிரி வெளிப்படும். அப்பதான் அந்த கிரகத்தையும் நீங்க அடக்க முடியும் என்று சொல்றாரு.
இடைக்காடர் வாக்கு :- இதைத்தன் உணர ஆனாலும் அனைவருமே இன்றைய காலகட்டத்தில், அதாவது அறிந்தும் கலியுகத்தில் ஜாதகத்தை கையில் எடுத்து எடுத்து ஓடுகின்றார்கள். ஆனால் பலனோ இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்துல ஜாதகத்தை எடுத்துட்டு ஓடுறாங்க. ஆனால் பலன் இல்லைன்றார்.
இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் எவை என்று அறிய ஆனாலும் இப்பொழுது பின் சக்திகள் அதிகமாகிவிட்டது. அறிந்தும் ராகு கேதுக்களுக்கே. இதனால் அவைதான் ஜெயிக்கும். இதைத்தன் எவை என்று உணர அறிந்தும் அறிவின் பலனாக இதைப் பொறுத்தே அறிந்தும் இவை வெல்ல, பல பல நிச்சயம் நால்வர் எழுதிய துதி பாடலை பாடினாலே தான் வெல்ல முடியும். ஆனால் உங்களால் அதவும் பாட முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :-
அப்போ ராகுவும் கேதுவையும் வெல்ல வேண்டும் என்றால் நால்வர் தெரியுங்களா? அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் இவர்கள் இயற்றிய பாடலைப் பாடணும். அப்பதான் வெல்ல முடியும். ஆனாலும் உங்களால பாட முடியாது.
இடைக்காடர் வாக்கு :-
அறிந்தும் ஒருமுறை சொன்னால் போதும். பின் அதாவது பின் தூக்க நிலைக்கே சென்று விடுவீர்கள். அறிந்தும் எதை என்று அறிய இறைவன், அதாவது மனிதனை, அதாவது பாவத்தை அனுபவித்து வா என்று உலகிற்கு அனுப்பினான். அப்பொழுது (இறைவன்) எதைச் செய்வான் முதலில்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ இறைவன் என்ன செய்றாரு தெரியுமா? நீ பாவத்தை கழிச்சுட்டு வா என்று உலகத்துக்கே அனுப்புறாரு. அவராலே நேரடியாக வந்து உங்க பாவத்தை கழிக்க முடியாது. அப்படி இருக்கும்போது, இறைவன் உங்களை எப்படி நேரடியாக காப்பாற்ற முடியும்? ஆனா இப்போது கலியுகத்தில் இருக்கும் பாவங்களை கழிக்க வழியே இல்லையாம். அதனால்தான், அந்த பாவங்களை நாம் மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம் என்று அவர் சொல்கிறார்.
இடைக்காடர் வாக்கு:-
அறிந்தும் ஆனாலும் அனுப்புவவனிடமே முறையிட்டு, முறையிட்டு கூட்டிட்டு, கூட்டிட்டு வந்தாலே நிச்சயம் வெல்ல முடியும். அதனால்தான் நால்வர்கள் முடிவெடுத்து, முடிவெடுத்து பின் உருகி உருகி பாடினார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :-
தேவாரம், திருவாசகம்.
அப்ப பாவம் போய் அனுபவிச்சிட்டு வான்னு சொல்லிட்டு இறைவன் நம்மள அனுப்புறாரு. அப்ப திரும்பவும் வந்து அவர் நினைச்சாதான் அந்த பாவத்தை ஒழிக்க முடியும். அப்ப இதுக்கு என்ன பண்ணாங்களாம்? முடிவெடுத்தார்கள் நால்வர்கள். யார் பாவத்தை வந்து அனுபவிச்சிட்டு வான்னு சொன்னாரோ, அவரே நினைச்சு நினைச்சு உருகி உருகி பாடனும்னா, (இறைவன்) அவர் வந்து மனசு இறங்கிருவாரு.
இடைக்காடர் வாக்கு:-
அறிந்தும் ஆனால் இவர்களோ பின் ஒரு பாடலை பல வருடங்கள் பாடினார்கள். மனம் இறங்க ஆனால் நீங்களோ ஒரு பாடலை பாடிட்டு நடக்கவில்லையே என்று.
சுவடி ஓதும் மைந்தன்:-
அப்ப அவர்கள் பாடலை பாடிக்கிட்டே இருந்தாங்க. இதான் வேலை அவர்களுக்கு. அவங்களுக்கு பாடிட்டு நன்மை செய்றது, உலக நன்மைக்காக பாடிட்டே இருந்தாங்க. பாடனும்னு ஒரு வருஷம் பாடுனாங்க. அப்ப அவங்களுக்கு என்ன நடந்தது? நம்ம ஒரு பாடல்ல ஒரு அனுபவம் சொல்றதுக்கு முடியல.
இடைக்காடர் வாக்கு :-
ஆனாலும் இப்படி இருக்க, பின் நிச்சயம் நீங்கள் பின் நினைத்தது எவ்வாறு நடக்கும்.
இதனால்தான் அறிந்தும் புரிந்தும் கூட. அதனால் அனைவரும் பின் ஒன்று சேர்ந்து, (500) கூக்குரலிட்டு, பலமாக சத்தத்துடனே நிச்சயம் எது என்று அறிய, பின் எவ்வாறு புரிய.
(எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடினால், அதற்கு சக்திகள் அதிகம். )
இவை அறிந்து, ஆனாலும் பின் அறிந்தும் சொல்கின்றேனடா. இதை புரிய பின் பாம்புகள், பின் லக்னத்திலிருந்தோ, ராசியிலிருந்தோ, ஒன்றோ. பின் அதாவது அறிந்தும், பின் சந்திரனோ, பின் ஒன்றோ, இதனை அறிவித்து வாழ்க்கையே போயிற்று.
சுவடி ஓதும் மைந்தன்:-
லக்னத்திலோ அல்லது சந்திரனின் நிலையிலோ, (1) லக்னத்தில் ராகு இருந்தாலும், அதற்கு எதிராக ஏழாம் இடத்தில் கேது இருந்தாலும், (2) சந்திரனின் இடத்தில் ராகு இருந்தாலும், அதற்கு ஏழாம் இடத்தில் கேது இருந்தாலும் — இப்படி இந்த அமைப்புகள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையை வெல்ல முடியாது என்கிறார்.
இடைக்காடர் வாக்கு :-
இதை அறிவித்து ஆனாலும் பல பரிகாரங்கள் வீணே. இவை அறிவிக்க ஓடோடி, ஓடோடி. ஆனால் கடைசியில் அனைத்தும் பொய் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :-
இதற்காக பல பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் பயனற்றவை என அவர் கூறுகிறார். இப்படி ராகு, கேது ஒன்னுலையும் ஏழுலையும் இருந்தா என்ன செய்வாங்க தெரியுமா? ஜாதகத்தை பார்த்தவுடன் தூக்கி ஓடிவிடுவார்கள்! எல்லாரிடமும் காட்டவே மாட்டாங்க. பார்த்துக்கோங்க — ஜாதகம் எடுத்துட்டு ஓடுவாங்க. ஆனாலும், எந்த பரிகாரமும் பயனளிக்காது. எத்தனை பரிகாரம் செய்தாலும், பலன் கிடைக்காது என அவர் தெளிவாக சொல்கிறார்.
இடைக்காடர் வாக்கு:-
இதுவோ இப்படி இருக்க, பிரம்மன் எழுதி வைத்தது. வாழ்க்கை முழுவதுமே கஷ்டம்.
(லக்கினத்திலோ அல்லது ராசியிலோ ராகு தேவன் இருந்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்று பிரம்ம தேவரால் எழுதப்பட்ட விதி. சித்தர்களைத் தவிர, இதனை நீக்க யாராலும் இயலாது.)
சுவடி ஓதும் மைந்தன்:-
இப்படி இருந்தா பிரம்மன் தலைவதியில வந்து இப்படி இருந்தா, ஜாதகத்துல எழுதி வச்சது என்ன தெரியுமா? வாழ்க்கையே போராடி தான் ஆகணும். போராடி தான் ஆகணும்னு சொல்றார்.
இடைக்காடர் வாக்கு:-
ஆனால் இவ்விதியை மாற்ற மனிதன் முயற்சி. அறிந்தும் எவை புரிந்த இதற்காகத்தான் விதியை கூட மாற்றுகின்ற நேரம் இது. முருகன் அறிந்தும் அருணகிரி. அருணகிரியே.
சுவடி ஓதும் மைந்தன் :-
அதனால் இந்த நிலைமையை மாற்றவேண்டும். இதே சூழ்நிலையில்தான் அருணகிரிநாதர் வாழ்ந்தார். அருணகிரி யார் தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்த ஒரு மகான். திருப்புகழ் இயற்றியவர். அவருடைய ஜாதகமும் இதே மாதிரியான அமைப்பில்தான் இருந்தது. அந்த கிரகநிலைகளால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தார். அவருடைய வாழ்க்கை இதே நிலைமையிலிருந்ததால்தான், இது ஒரு எடுத்துக்காட்டு என இடைக்காடர் சொல்கிறார் — “அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை”.
இடைக்காடர் வாக்கு :-
அறிந்தும் எதை பின் ஆனாலும் பிரம்மன் அறிந்தும் புரிந்தும் ஆனால் அவன் தலையெழுத்தியே.
சுவடி ஓதும் மைந்தன்:-
அருணகிரிநாதர் போன்ற மகான் ஒருவர் இருந்தும், அவருடைய தலையெழுத்தை மாற்ற முடியவில்லை. அதாவது, அவருடைய விதியை மாற்ற இயலவில்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் — எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெருமகன் — அவரும் அந்த விதியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார். ஆனாலும் அந்த விதியை மாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.
இடைக்காடர் வாக்கு :-
கடையில் பின் விழுந்து (திருஅண்ணாமலை ஆலய கோபுரத்தில் இருந்து அருணகிரி நாதர் தற்கொலை செயவதற்காங கீழே விழுந்தார் என்ற கதை) அவ் நேரத்தில் நிச்சயம் வெல்வதற்கான வழிகள். அழகாக, அழகாக சொல்லிக் கொடுத்த எதை என்று பாடு, பாடு என்று எவை என்று உணர. ஆனால் முடியவில்லையே. வாழ்க்கை போயிற்றே என்று.
(முருகப் பெருமான் வேல் கொண்டு அரிணகிரிநாதர் நாவில் எழுதிய பிரணவ மந்திரம்)
அறிந்தும் ஏது எவை என்று பின் (முருகப் பெருமான் வேல்) வீசினான். எதை புரிய ஆனாலும் அன்று பாடினானே. எதை இவை தன் பாட, பாட. பின் (விதி) இவை தன் மாறும்.
———————————-
(உங்கள் விதியை மாற்றும் மகத்தான அந்த திருப்புகழ் பாடல் )
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
————————————-
இடைக்காடர் வாக்கு :-
இவை அறிவித்த அந்நேரத்தில் அறிந்தும் இவை தன் பின் பிரம்மனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த நேரத்துல விதி மாற்ற முடியல. ஆனால் முருகர் சொல்லி மாத்தி வச்சிட்டாருன்னு யார் வந்துட்டாரு? பிரம்மன். பிரம்மன் வந்துட்டார்.
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்த யானே சொன்னேனே. இவை அறிந்து, இவை புகழ. இவை தன் அண்ணாமலை சுற்றி சுற்றி பாட. பின் இவை தன் மாற்றலாம். ஆனால் விடுவாய் என்ன விதி?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்கிறார்னா — இந்த பாடலை திருவண்ணாமலையைச் சுற்றி, கிரிவளமாகச் சென்று, திருப்பி திருப்பி பாடணுமாம். அந்த பாடலை இப்படிச் சொன்னால்தான், ஜாதகத்தில் ஒன்னுலையும் ஏழுலையும் இருக்கும் கிரகநிலையை வெல்ல முடியும். ஆனா, அவ்வளவு எளிதா விடுவானா? மறுபடியும் இடைக்காடர் கேட்கிறார் — பிரம்மன் கூட அந்த பாவங்களை எளிதில் விடுவாரா
இடைக்காடர் வாக்கு :-
இவை அறிவித்த பின் பிரம்மனே கோபம் கொண்டு, முருகா விளையாட்டுப் பிள்ளையாக உன் பக்தன் என்றால், இப்படியா என் விதியை வெல்வது யார்? என்று கோபமாக.
சுவடி ஓதும் மைந்தன் :-
(அப்போ பிரம்மன் வருகிறார். அங்க வந்து சொல்கிறார் — “ஏய், நீ ஒரு சின்ன பிள்ளைதானே! என்னடா, எப்படி நீ? எப்படி சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்கிறாய்? அது எப்படி சாத்தியமா?” “அவனுடைய விதியை மாற்ற நீ எப்படி முயற்சி செய்கிறாய்? உன் விளையாட்டுத்தனத்தில நீ என்ன செய்ய நினைக்கிறாய்? அந்த விதியை நான்தான் எழுதி வைத்தேன், நான்தான் அனுப்பினேன். நீ எப்படி வந்து அந்த தலையெழுத்தை மாற்ற முயற்சி செய்யலாம்? தலையெழுத்து மாற்ற முடியுமா?” — என்பதையே பிரம்மன் கேட்கிறார்)
இடைக்காடர் வாக்கு :-
எவை புரிய? எவை நான் அறிய அனைத்தும்? அதாவது இவையன் புரிய யான் மாற்றினேனா என்ன? என் தந்தையன் வந்துவிட்டானே?
சுவடி ஓதும் மைந்தன் :-
அப்போ அவர் என்ன செய்கிறார் தெரியுமா? “முருகர் நானாகவே அந்த விதியை மாற்றினேன்? என்று சொல்கிறார். “என் தந்தை இங்கே இருக்கிறார். அவர் அண்ணாமலையைப் பற்றியே பேசுகிறார். என் தந்தை கேட்க வேண்டியது இதுதான்” என்று கூறுகிறார்.
இடைக்காடர் வாக்கு :-
இவை உணர இன்னும் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்) நால்வரும் கூட பின் பிரம்மனே நில்லும். எங்களுக்கு பதில் சொல்லிட்டு பின் பாரும்.
இதை அறிவித்த எவை என்று மூன்று அறிந்தும் ஆனாலும் இவை என்று எதை என்று புரிய நிலைமையில் இல்லாமல் ஆயிற்றே. பிரம்மனே, எதை என்று அறிய உன் இஷ்டத்திற்கு எழுதி வைத்துவிட்டு, நிச்சயம் மனிதன் இங்க கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை. ஈசனே நினைத்து எவ்வாறு என்பதையெல்லாம் இதனால் எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :-
அப்புறம் சண்டை புடிச்சிக்கினாங்க. நாலு இந்த நால்வரும்.. நீ வந்து எழுதிட்டு, எதுதான் எழுதிட்டு அனுப்பிச்சிடுவ. அப்ப மனுஷன் கஷ்டப்பட்டு இருக்கிறான். நீ எனக்கு பதில் சொல்லிட்டு அங்க போன்ட்டார்.
இடைக்காடர் வாக்கு :-
இவை அறிவித்த எதை என்று புரிய. பின் நீங்கள் சாதாரணமானவர்கள். யான் ஈசனிடம் பேசிக் கொள்கின்றேன் என்று. நிச்சயம் இதை என்று அறிய. அப்பொழுது எவை என்று (நால்வரும்) கிரகங்கள் பற்றி பாடி, பாடி நிச்சயம் தன்னில் கூட பின் தொட்டுப்பார் என்று. இவை பின் ஒன்று ரெண்டு என்றென்று அறிந்தும் எவை என்று புரியாமல் பின் எதை என்று அறிய எங்களுக்குள்ளே ஈசன் இயக்கியதுதான் பாடல்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ அந்த நால்வரும் சொல்கிறார்கள்: “நாங்க ஒன்னும் சாதாரணமாக பாடப்போறதில்லை. எங்களுக்குள்ளே ஈசனே வந்து சொல்லிக் கொடுத்தார். அந்த அருளால் நாங்க இப்ப பாடப்போகிறோம். இங்க நீ என்ன செய்றேனு பார்ப்போம். நாங்க இந்த பாடலால் கிரகங்களை மாற்றப்போகிறோம். மாற்றுவோம். நீ அப்புறம் பார்த்துக்கோ. நீ நேரடியாக ஈசனைப் பார்க்கச் சென்றிருந்தாலும், எங்களுக்குள்ளேயே ஈசன் இயங்கியதை நாங்க பாடுகிறோம். பார்ப்போம்னு சொன்னார்கள்.
இடைக்காடர் வாக்கு :- இதை அறிவித்த அறிந்தும் இவை என்று புரிய. ஆனால் சேர்ந்து சேர்ந்து ஒவ்வொன்றாக இவை தன் அறிய மீண்டும் தலைவலி என்று நிச்சயம் பின் சென்றுவிட்டான் பிரம்மனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா? இவங்க பாட ஆரம்பிச்சாங்க. அந்த பாடல், பாடி பாடி பாடி... பிரம்மாவுக்கே தலைவலி வந்துருச்சு! அவர் கையெழுத்து போட்ட விதி எல்லாம் குலுங்க ஆரம்பிச்சதும், உடனே கை தூக்கி சொல்றாரு — “வேணாம்ப்பா! வேணாம்ப்பா! உன் பிரச்சனையே வேண்டாம்!” அப்படியே திரும்பி, “நான் போறேன்!”ன்னு சொல்லிட்டு, பிரம்மா போயிட்டாரு. பாடலின் சக்திக்கு முன்னால் பிரம்மனே ஓடினாரு — இதுதான் அந்த பாடலின் மாயம்!
இடைக்காடர் வாக்கு :- எதை எவை என்று அறிய ஈசனும் நகைத்தான். எதை புரிய அறிந்தும் இவை ஒன்றும் அறியாத நிலையில் அண்ணாமலையிலிருந்து பேசினான் பிரம்மாவிடம். ( ஈசன் அண்ணாமலையிலிருந்து பிரம்மாவிடம் பேசினார். )
இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் ஓ பிரம்மனே, அறிந்தும் ஏன் என்னை காண அன்புடனே ஓடோடி வந்தாய்? ஆனால் இப்பொழுது என்று. ஆனால் பின் அடியார்கள் இருக்கின்றார்களே. பெரும் தலைவலி அப்பா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :-
“பாருங்க! ஈசனை காண ஓடி ஓடி வந்தேன். ஆனா பாருங்க, எங்க போயிட்டாரு?” “என்னைப் பார்க்கத்தான் நீ வந்தாயே!” — ஈசன் சொல்றாரு. அப்போ பிரம்மன் பதிலளிக்கிறார்: “உன் அடியார்கள் பாடும் பாடல்களால எனக்கு பெரிய தலைவலி வந்துருச்சுப்பா! பாட, பாட, பாட... என் மூளை சுழன்று போச்சு. அதனாலதான் நான் ஓடி போயிட்டேன். ஓடி போயிட்டேன்ப்பா!” ஈசன் கேக்குறாரு: “என்னை காண தானப்பா நீ வந்தாய். அந்த பாசத்தோட ஓடி வந்த நீயே, இப்போ ஓடிட்டேன்பா?”. பிரம்மன் சொல்றாரு: “அடியார்கள் பாடிய பாட்டிலேயே எனக்கு தலைவலி வந்துருச்சுப்பா. அதனாலதான் நான் ஓடிட்டேன்ப்பா!
இடைக்காடர் வாக்கு :-
“”””””””””””””””””””””””””இவை நிச்சயம் தன்னில் கூட இதுதான் பலமுறை. பின் வாசகத்தையும் இன்னும் இன்னும் எதை என்று கூற நால்வர் துதிகளை பாடிக்கொண்டே வந்தாலே, பின் அவதனக்கே தலைவலி ஏற்பட்டு விடும். தலைவிதி நிச்சயம் பின் மாறும். “””””””””””””””””””””””””””””””””””””””””””””
இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் சரியாகவே சொன்னேனே. நீங்கள் பின் அதாவது கல்விதனை பின் படிக்க படிக்கத்தான் நிச்சயம் முன்னேற்ற பாதையில்
இவைதன் எதை என்று அறிவித்த இப்படி மீண்டும் எதை என்று அறிய பின் முருகனும் பிரம்மனே என்று பின்கூப்பிட்டான். எவை என்று கூறிய மனதுக்குள்ளே மீண்டும் என்னதான் நடக்கப்போகின்றது என்று பயந்து பயந்து வந்தான் பிரம்மனே. இவை தன் உணர அறிந்தும் எதை என்று அறிய (பிரம்மா) நேரடியாகவே பின் அருணகிரிநாதனிடம்.
எதை அறிவித்த பிரம்மனும் அருணாகிரியே தவறான வழியில் எழுதிவிட்டேன். இவர் பெரும் தொல்லைகளாக போயிற்று. என்னதான் செய்ய வேண்டும்? எதை என்று கூற, எவை என்று அறிய. ஆனால் நிச்சயம் மனமகிழ்ந்தேன் பிரம்மனே என்று அருணகிரியும் கூட. அதை எவை என்று அறிய. இப்பொழுது அழகாக பாடி துதித்தேனே. இதை பாடியவர்கள் நிச்சயம் தலைவிதியை மாற்றும் என்று. (பிரம்மா) நிச்சயம் மாற்றுகின்றேன். ஓடோடி விடுகின்றேன் முருகா, ஈசனே சென்று விடுகின்றேன். சிறிது கூட பின் எந்தனைக்கு இங்கு நேரமில்லை என்று .
இடைக்காடர் வாக்கு :- இவை தன் உணர அகத்தியர் அழகாக சொன்னானே எதை என்று அறிய விதி நேர்கோடாக. ஆனால் கோணல் மாணலாக இருக்கின்ற பொழுது பின் எதையும் ஆனாலும் எவை புரிய இதுவும் அறிவில் ரீதியாகவே நிச்சயம் இப்பாடலை பாடினாலே அதிர்ந்து நேராகும். சீர்கோடாகும்.
—---------------------------------------------------------------------------------------
( அடியவர்கள் பின்வரும் பதிவினை படித்து உங்கள் விதியின் ரகசியங்களை தெரிந்துகொள்ளவும்
https://www.youtube.com/watch?v=R-EpkRg5nmo
உங்கள் நெற்றியில் உள்ள சித்தர்கள் ரகசியங்கள்- சித்தன் அருள் 1188 )
—---------------------------------------------------------------------------------------
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ அந்த விதி எப்படி இருக்கும் தெரியுமா? கோணலாக, சிக்கலாக, குறும்பாக இருக்கலாம். வளைந்து, நலிந்து, சுழன்று இருக்கலாம். ஆனாலும் இந்த பாடலை அழகாக, மனதோடு பாடிக்கொண்டே வந்தால் — அந்த அதிர்வலைக்குள் நேரா நம்மை கொண்டு சேர்க்கும்
இடைக்காடர் வாக்கு :- இவை என்று புரிய ஆனால் புரியவில்லையே. பின் அதாவது இறைவன் மக்களிடத்திலே அனைத்தும் தந்தான். ஆனால் பின் நிச்சயம் அதை இயக்க ஆள் இல்லையே. சொல்லித் தர ஆள் இல்லையே. இவை அறிவித்து எதனையோ பின் நீங்கள் வெல்ல, பின் மற்றவர்களையும் வெல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதெல்லாம் நான் சொன்னேன்னா, உங்களை நீங்களே வெல்லிடலாம். முதல்ல மற்றவர்களையும் வெல்லலாம்.
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்த நிலையில் ஆனாலும் ஒன்று எதை என்று மீண்டும் ஓடோடி வந்தான். பின் பிரம்மனே அண்ணாமலைக்கு. பின் எதை என்று அறிவித்து ( பிரம்மனே மீண்டும் அண்ணாமலைக்கு ஓடோடி வந்துட்டார்).
இடைக்காடர் வாக்கு :- முருகா, அருணகிரி எதை புரிந்து. இங்கே முடித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். ஆனாலும் எங்கெங்கேயோ சென்று. ஆனால் இப்பொழுது அதாவது ஆயுள் பாகத்தை யான் ஒன்றை மட்டும் சொல்லி, அதாவது ஆயுள் பாகத்தை இப்படித்தான். ஏனென்றால் அதை விட்டுவிட்டால் மனிதன் பின் ஒன்று ஒருவருக்கொருவர் நிச்சயம் பின் இடமில்லாமல் புவி தன்னில் போய்விடும். இதனால் பின் அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ என்ன சொல்றார்னா — “இறப்பு மட்டும் எனக்கு விட்டுவிடணும். ஏன்னா, நான் அந்த வயதில் எழுதி வைத்திருக்கிறேன். அந்த வயதில்தான் அது வரவேண்டும். ஆனா, அதையும் இவங்க வென்றுவிட்டார்கள் என்றால், பூமியில் அவர்களுக்கு இடமே இருக்காது. பூமியில இடம் இருக்காதுப்பா. “இதையாவது எனக்காகச் செய்து கொடுப்பான்றாரு” — என்கிறார்.
இடைக்காடர் வாக்கு :- இவைதன் அருணகிரி, அருணகிரி முந்திக்கொண்டு, பின் குருவே, பிரம்மாவே , பிரம்மாவே அறிந்தும் இவை தன் அறிய. இதனால் நிச்சயம் அப்படியே முடி. ஆனாலும் இவை என்று அறிவித்து மிக்க மிக்க புண்ணியங்கள் பின் செய்தால், பின் இன்றும் அதாவது வயதினை நீ நீட்டிக்க வேண்டும். சத்தியம் செய்து கொடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இவர்கள் புண்ணியம் செய்ய, செய்ய, நிறைய செய்துவிட்டார்கள் என்றால் — அவர்களுடைய ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்று அருணகிரி நாதர் பிரம்மனிடம் சத்தியம் செய்து கொடுக்கச் சொல்கிறார்கள்.
இடைக்காடர் வாக்கு :- எதை புரிய இதுவும் பெரும் தொல்லையை ஓடு விடுகின்றேன். சரி என்று. எவை என்று அறிய. ஆனால் பிரம்மனே மறைவாக இவன் புண்ணியம் செய்யக்கூடாது என்று எழுதி, எழுதி ( ஒவ்வொருவருக்கும் புண்ணியமே செஞ்சிரக்கூடாது என்று மறைவாக எழுதி அனுப்ப ஆரம்பிக்கின்றார் )
இடைக்காடர் வாக்கு :- இவை தன் பின் நமக்கும் மரியாதை வேண்டும் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பிரம்மன் என்ன சொல்றாரு? எனக்கும் மரியாதை வேண்டும் இல்ல. நான் எப்படி வெல்றது? அப்படின்னு சொல்லிட்டு (பிராக்கெட்ல) மறைவாக புண்ணியம் செய்யக்கூடாது விதியில் என்று .
இடைக்காடர் வாக்கு :-இதை அறிவித்த பிரம்மனே, ஏன் இவ்வாறெல்லாம் செய்யலாமா? என்று முருகனே, அப்பா நீ குழந்தை அப்பா ஒன்றும் தெரியாது என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை தெரிந்து கொண்ட முருகன், பிரம்மனிடம் பிரம்மனிடம் இவ்வாறெல்லாம் செய்யலாமா? என்று.
இடைக்காடர் வாக்கு :-அதாவது யானே சொன்னேன் அல்லவா? அவன் அவன் வினைப்படியே பின் எதை என்று புரிய யான் என்ன செய்யட்டும் என்று.
இடைக்காடர் வாக்கு :-எவை என்று புரிய பின் நிச்சயம் எதை என்று அறிவித்த நிலையில் பிரம்மாவும் பின் மீண்டும் தலைவலி ஆகிவிட்டதே. இவர்களோடு என்று யான் ஏன் திருவண்ணாமலையில் சென்றிருக்க வேண்டும் என்று.
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்து மீண்டும் இவர்கள் வருவார்கள் என்று நன்றாக எதை என்று அறிவித்த நிச்சயம் பிரம்மாவும் பின் பெரும் தலைவலி அண்ணாமலையிலே. பின் அதாவது எவை என்று மீனாட்சியிடம் ஓடுவோம் என்று.
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்த நிச்சயம் இவை புரியாமல் ஈசன் பின் ஆடிப்பாடி காலை மாட்டினான். ஐயோ, இதுவும் தலைவலிடா என்று.
(ஈசன் கால் மாற்றி ஆடிய இடம் மதுரை வெள்ளியம்பலம் ஆகும். இங்கு நடராஜப் பெருமான், பொதுவாக வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடுவதற்குப் பதிலாக, இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். )
இடைக்காடர் வாக்கு :- இவை என்று அறிவித்த வேறு எவை என்று கூட அறிந்தும் கூட இதனால் விதியை மாற்றும் தகுதியில் ஒன்று இவ்விடம் கூட ( அப்போ, இரண்டு விஷயங்கள் விதியை மாற்றக்கூடியவை. ஒன்று — திருவண்ணாமலை. அடுத்தது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் ).
இடைக்காடர் வாக்கு :- இவையன்று அறிய மீண்டும் அதாவது சோர்வாக இருப்பார். ஈசன் இதனால் மறைமுகமாக எதை என்று அறிய மறுவழியில் செல்வோம். அதாவது எதை என்று கூறிய அதாவது தேவியை பார்த்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்று.
எவை என்று அறிய தாயே, நீதான். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அறிந்தும் கூட பின் பிரம்மனே என்ன வேண்டும் என்று
இதை புரிய என்ன? ஏது என்று அப்படி பார்த்தாலும் முருகன் இப்படி பார்த்தாலும் ஈசன் இருக்கின்றான். எப்படி யான் சொல்வது கேட்டு விடுவார்களா? என்ன?
எவை என்று அறிய பின் இவ்வாறாகவே பின் அதாவது பிரம்மன் வந்திருக்கின்றான் என்று கணபதிக்கு தெரிய. கணபதியும் குழந்தை ரூபத்தில் ஓடி வந்தான். பின் எதை என்று அறிய பிரம்மனும் பார்த்து, இதுவும் ஒரு தலைவலிடா என்று.
எது என்று புரிய. இதனால்தான் முதலில் வேண்டிக்கொள்ளுகின்ற பொழுது நின்றிருப்பானே, நின்றிருப்பானே. பிள்ளையோன் ( முதலில் முக்குறுணி விநாயகர், விபூதி விநாயகர் - தரிசனம்.)
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்த நிச்சயம் என்னதான் செய்வது என்று முழி முழித்தான். இவை அறிவித்த, (மீனாட்சி அம்மை) பிரம்மனே எதற்காக வந்தாய் என்று?
இடைக்காடர் வாக்கு :- இவை என்று அறிய தேவியே சொல்கின்றேன் என்று. அதனுள்ளே பின் அறிந்தும் கூட, இவை என்று புரியாத நிலையிலும் கூட கிரகங்கள் கூட ஓடி ஓடி. இவை என்று அறிய அனைத்தும் ஒன்றாக இணைந்து, பின் அதாவது மறைமுகமாக சென்றானே பிரம்மன். எவை என்று அறிய நாமும் மறைமுகமாக செல்லலாம். அனைத்து கிரகங்களும் இணைந்து, அதாவது ஈசன் மறைமுகமாக வந்தான். எதை என்று புரிய, பின் கிழவன்.
( அப்போ ஈசனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. ஏன்னா, நம்மை விட்டுவிட்டு நேராக “அம்மா, அம்மா”னு சொல்லிக்கொண்டு அவரைச் சந்திக்க போனாரே! நம்ம கண்ணுக்கு என்ன தெரிகிறது தெரியுமா? ஈசன் நேரா இல்லாமல், ஒரு கிழவன் ரூபத்தில் மறைமுகமாகச் சென்றுவிட்டார். )
இடைக்காடர் வாக்கு :- (பிரமன் கிழவன் ரூபத்தில் இருந்த ஈசனாரை பார்த்து ) நிச்சயம் உன்னை எங்கேயோ பார்த்தது போல் என்று.
(ஈசனார்) எதை என்று புரிய, அப்பா என்னை என்னை என்னை எங்கே காணப் போகின்றாய்? இதோ இங்கேதான் மீனாட்சி தேவி, நீதான் பார்த்திருப்பாய். அறிந்து கூட யானை ஒரு கிழவன். இதனால் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி இருப்பேன் என்று.
(பிரம்மதேவர்) அறிந்தும் எவை என்று அறிய பின் கிழவனே என்ன செய்வது? எதை என்று புரியாமல் இருக்கின்றேன். பின் நீ வேறவா வந்து இங்கு? எவை என்று புரிய, அதாவது அறிந்தும், அதாவது எதற்காக வந்தாய்? தெரிந்து வைத்துக் கொள்ளலாமா என்று அக்கிழவனும் கூட (என்று ஈசன் கேட்கிறார்).
(பிரம்மதேவர்) எதை என்று புரிய, அதாவது விதியை எவை என்று அறிய என்னால் மட்டுமே பின் வெல்லலாம். அறிந்தும் எவை என்று கூட பின் யாராலும் வெல்லக்கூடாது என்று மீனாட்சி தாயிடம் பின் கேட்கின்றேன் என்று.
(ஈசனார்) எவை புரிய, எதை என்று அறிய. அப்பொழுது பின், அதாவது உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம். எதை என்று புரிய, அதாவது பின் (ஈசன்) என் விதியில் என்ன எழுதி இருக்கிறது என்று நீ (பிரம்மதேவர்) கூறு. சரியாக கூறிவிட்டால், பின் நிச்சயம் யானே மீனாட்சியிடம், நிச்சயம் நீதான் அரசன் என்று.
(பிரம்மதேவர்) எவை புரிய, எதை என்று அறிய நீண்ட ஆயுசுகள் இருக்கின்றது என்று எழுதுவி.
அப்ப பிரம்மா என்ன சொல்லிட்டாரு? இல்ல, இந்த ஆயுள் நீண்ட ஆயுள் இருக்குதுப்பா. உனக்கு வந்து இது சாக மாட்டேன் என்று சொல்லிட்டார்.
இடைக்காடர் வாக்கு :-இதை உடனடியாக எவை என்று அறிய. பின் இதுதான் சமயம் என்று ஈசன் பின் பக்கத்தில் மரணித்து விட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதான்டா சாக்கு அப்படின்னு சொல்லிட்டு பக்கத்துல என்ன பண்ணிட்டாரு? இறந்துட்டார்.
இடைக்காடர் வாக்கு :- எவை என்று அறிய பிரம்மனும் ஐயயோ, இவன் எதை என்று அறிய கிழவன் என்ன எது என்று அறிய. ஆனாலும் பின் ஈசன் பேசினான். வந்தது யார் என்று தெரிகின்றதா என்று. மீண்டும் ஓடிவிட்டான். நிச்சயம் பிரம்மன் இதை அறிவித்து பின், அதாவது அருகிலேயே நிற்கின்றானே. அவன்தான் ஈசன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்தர் ரூபத்தில் இருக்காரு. பார்த்தீங்களாங்க? எல்லாம் வல்ல சித்தர். அவர் யாரு? ஈசன்.
இடைக்காடர் வாக்கு :- எவை என்று அறிவித்து கஷ்டம் வரும் நேரத்தில் (எல்லாம் வல்ல சித்தர்) அங்கு அமர்ந்து விட்டால் போதும். பிரம்மனும் வெளியேறி விடுவான். (அங்கே சென்று உட்கார்ந்தால் , விதி வேலை செய்யாது. கஷ்டங்கள் குறைந்துவிடும்.)
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப யார் யாருக்கெல்லாம் எங்க ரொம்ப துன்பம், ரொம்ப இருக்குதோ, அந்த மீனாட்சி அம்மா பக்கத்துல யார் இருக்கிறது? எல்லாம் வல்ல சித்தர் இருக்காரு இல்ல, அவர் யார்? ஈசன். அவரும் ஒரு ஈசன் தான். ஏன்னா விதியை வெல்வதற்காக.
இடைக்காடர் வாக்கு :- மீண்டும் பின் யோசித்தான். நிச்சயம் எவை என்று கூற. பின் அனைவரும் இப்படி விளையாடுகின்றார்களே. நிச்சயம் நாம் தான் வெல்ல முடியாது என்று. மீண்டும் முயற்சிப்போம். பின் ஒருவேளை நடந்துவிட்டால் நன்று. நிச்சயம் இங்கும் சென்றுவிட்டோம். அங்கும் சென்றுவிட்டோம். வேறெங்கு செல்வது?
சுவடி ஓதும் மைந்தன் :- “அண்ணாமலையும் போயாச்சு. மதுரையும் போயாச்சு. எல்லா இடங்களும் பார்த்தாச்சு. இப்போ அடுத்து எங்க போறது?” “நம்ம எங்கே முறையிடப் போறோம்?” — யாரும் தெரியாமல், பிரம்மா தான் யோசிக்கிறார். ஆமாம், பிரம்மா யோசிக்கிறார்!
இடைக்காடர் வாக்கு :- (அடுத்த முயற்சி) இதைத்தன் பின் அறிவித்து பின், அதாவது அபிராமியிடம், அதாவது திருக்கடையூர் பின் சென்று திருக்கடையூர், இவை அறிவித்து, அதை புரிய. இதைத்தன் அறியாமலும் கூட தேவியே, தேவியே என்று. (திருக்கடையூர் அபிராமி அன்னை) பிரம்மனே எதற்காக வந்தாய் என்று.
எவை என்று அறிய என்னால் விதிக்கப்பட்டதை யான்தான் வெல்ல வேண்டும் என்று. ஆனாலும் நிச்சயம் எங்கெங்கோ எது என்று அறிய அறிய விளையாட்டாக இவர்கள் விளையாடுகின்றார்கள்.
இவை எதை என்று புரிய, இப்பொழுது ஒன்றை பின் ஏன் எவை என்று அறிய. ஆனாலும் நிச்சயம் இவைதன், அதாவது (யமன்) காலனை அனுப்புகின்றேன். இவன் தனக்கு விதி எழுது என்று. அதாவது பின் ஒரு மணி நேரத்திலே இவன் இறந்துவிட வேண்டும் என்று.
(பிரமதேவன், யமன் விதியை மாற்றி எழுதிய பின்னர்) இவை என்று அறிய ஆனால் (யமன்) இறக்கவில்லை. இதுவும் பெரும் பாடு ஆயிற்று.
இவைதன் கையில் எடுத்தான். இதுதான் சமயம் என்று கலியன் (கலிபுருஷன்) அனைவரையும் அழித்துக் கொண்டிருந்தான். எதை என்று புரிய. அனைவரையும் அழி அழி என்று அழித்தான்.
எதை என்று அறிய பின் பிரம்மனும் எவை என்று அறிய. எவை என்று புரிய பிரம்மனும் திகைத்தார். எவை என்று அறிய மீண்டும் நிச்சயம். அனைத்தும் அனைத்திற்கும் காரணம் யான்தான் என்று மீண்டும் அண்ணாமலை வந்து சரணாகதி அடைந்தான். பின் பிரம்மாவும், பின் தந்தையே தாயே என்று. (ஓடி வந்து அப்பா அம்மா என்று சொல்லிட்டு கதறி அண்ணாமலை அண்ணாமலைக்கு வந்துட்டார்.) ஆனால் நிச்சயம் தன்னில் அம்மையை காப்பாற்ற வேண்டும். எதை எதையோ யான் நினைத்தேன். அனைத்தும் தலைகீழாக.
(திருக்கடையூர் அபிராமி அன்னை) :- இதைத்தன் நிச்சயம் எப்பொழுதும் பிரம்மனே கவலை விடு. பின் கலியனை (கலிபுருஷன்) காலடியிலே வைத்திருக்கின்றேன் என்று.
இடைக்காடர் வாக்கு :- இவை தன் மாறி மாறி எதை என்று உருவெருக்க, எதை என்று அறிவிக்க. நிச்சயம் (திருவண்ணாமலை, மதுரை, திருக்கடையூர் ) அவ் தலங்களுக்கு சென்று பின் வாசகத்தை இயற்றினால் உங்களுக்கும் அனைத்தும் மாறும். விட்டுவிடுவான் பிரம்மனே.
காலத்தை, காலன் மீண்டும் நிச்சயம் யான்தான் பெரியவன் என்று. அதாவது மீண்டும் அண்ணாமலைக்கு சென்று, அதாவது அனைவரும் காலம் 60 வயதுதான். அது மேலே நிச்சயம் மனிதன் இருந்தால் யானை கொல்வேன் என்று (காலன்).
இடைக்காடர் வாக்கு :- எதை என்று அறிவித்து நிச்சயம் இவ்வாறு இருப்பவரெல்லாம் நிச்சயம் கடையூருக்கு சென்று, பின் அபிராமி அந்தாதி அழகாக பாடிக்கொண்டு வாருங்கள் போதுமானது. ( 60 வயதை கடந்தவங்க என்ன செய்யணும்? வாழ்நாளை நீட்டிக்க, திருக்கடையூர் சென்று அபிராமி அந்தாதி அழகாக பாடிக்கொண்டு வரவேண்டும் ). இல்லை என்றால் கஷ்டங்கள் சென்று கொண்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- “60 வயதை கடந்தவுடன், திருக்கடையூர் செல்லவேண்டும். அது தவிர்ந்தால் என்ன ஆகும் தெரியுமா? வாழ்க்கையின் சவால்கள் நீண்டு கொண்டே போகும்… நீண்டு கொண்டே போகும்,” என்றார் இடைக்காடர்.
இடைக்காடர் வாக்கு :- எவை அறிய நிச்சயம் பின் மூணு மாதமோ
சுவடி ஓதும் மைந்தன் :- 60 வயசு ஆச்சுன்னா திருக்கடையூருக்கு மூன்று மாசத்துக்கு ஒரு முறை போகணும். மூன்று மாசத்துக்கு ஒரு முறை திருக்கடையூருக்கு போய் கண்டிப்பாக தரிசனம் பண்ணனும். (அபிராமி அந்தாதி அழகாக பாடிக்கொண்டு வரவேண்டும்.)
இடைக்காடர் வாக்கு :- எவை என்று அறிவிக்க காலன் நடுங்கி விட்டான். எவை என்று அறிய ஈசன் தீர்மானித்து விட்டான் என்று. இவை என்று அறிய பின் நோய் கொடுப்போம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப காலன் என்ன பண்ணிட்டாரு? அதுக்குள்ள நம்ம வந்து நோயை கொடுத்து உந்துகிட்ட ஒரு 50 வயசுல இருந்து நோயை கொடுத்துருவோம். அப்புறம் எப்படி தப்பிடுவாங்க?
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்து எதை புரிய, எதை என்று அறிய அழகாக மீனாட்சி அறிந்தும் எவை என்று அறிய பின் (சந்தனம் ) அரைத்து எதை என்று அவ்விபூதியை நிச்சயம் எதை என்று அறிய இல்லத்திலும் வைத்து பூஜைகள் செய்து அனுதினமும் பின் நீரும், அறிந்தும் இவை என்று பின் ருத்திராட்சம் நீரில் இட்டு அருந்தி வர சிறப்பாகும். சில சில நோய்களும் பின் இடத்தையும் மாற்றலாம். பொறுமையாக . இவைதன் அதிர்ஷ்டம் வாய்க்கும்
( சந்தனத்தை அரைத்து, அந்த விபூதியை நிச்சயமாக அறிந்து, இல்லத்தில் வைத்து தினமும் பூஜைகள் செய்து, நீருடன் சேர்த்து, ருத்திராட்சத்தை நீரில் இட்டு அருந்தி வந்தால் சிறப்பாகும்.சில சில நோய்களும்தீரும். அதிர்ஷ்டமும் கிடைக்கும்.)
இடைக்காடர் வாக்கு :- இவை கூட பின் தெரிவிப்பது வேண்டும் என்றால் தெரிவிப்பது என்ன? ஏது என்றால் நிச்சயம் பிரம்மாவிடமே, பிரம்மாவிடமே அனுமதி பெற்றுத்தான் எதையும் வந்து நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம்னா பாருங்க, இடைக்காடர் சொல்றாரு. இது ஒரு ரகசியத்தை சொல்றாரு. பிரம்மா கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் இந்த ரகசியத்தை சொல்றாங்க.
இடைக்காடர் வாக்கு :- இவைதன் இப்படி எப்படி இருக்க? ராகு கேதுக்களை கலைப்பீர்களோ நீங்கள்?. இவைதன் அதாவது பின் நீந்துவது தெரியாமல் கிணற்றில் பின் நிச்சயம் அதாவது ஒருவனை இட்டுவிட்டால் எப்படியோ அப்படித்தான்.
இந்த வாக்கின் பகுதி 2 - அடுத்த பதிவில் வெளிவரும் என்று அறியத்தருகின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகுருநாதரின் அருளால் ஒரு உரையாடல் பதிவு.
ReplyDeleteமோட்ச தீப ஞானம் பாகம் 2
https://youtu.be/Nng8bC9r91o?feature=shared
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDelete