6/8/2025 அன்று கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் சிருங்கி ரிஷி தவ பூமியில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: சிருங்கி ரிஷி தவ பூமி. டடோபானி வெந்நீர் ஊற்றுகள்.கோதாரி..சிந்துபால்சௌக்.நேபாளம்..திபெத் (சீன எல்லை)
கைலாஷ் மானசரோவர் செல்லும் வழி.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே நலன்கள் ஆசிகள்!!!.. இன்னும் பெருகுமப்பா!!!
அப்பனே குறைகள் வேண்டாம் அப்பனே..
நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தர்மம் தலைகீழாக மாறும்! என்பதையெல்லாம் சித்தர்கள் எடுத்துக் கொண்டே எடுத்துக் கொண்டே!!!(உரைத்துக் கொண்டே) அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட
ஆனாலும்...இவ் தர்மத்தை மேல் நோக்கி மாற்ற அதாவது... இன்னும் அதாவது அப்பனே..... தர்மத்தை சரியாகவே நிலைநாட்ட அப்பனே பின் பக்தி எனும் இன்னும் பெரிய அப்பனே ஒரு வேலை தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே
அதனால் தான் மக்களுக்கு பக்தி என்பது என்ன?? பக்தி எவ்வாறு இறைவனிடம் செலுத்துதல்?? நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அறிந்து அறிந்து செப்பிக் கொண்டே வருகின்றேன் அப்பனே அதை ஏற்றால் நன்று!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... அப்பனே இவைதன் கூட நல் முறைகளாகவே வாக்குகள்.. பல கோடி அப்பனே..
இவ்வாறாக பக்தி மார்க்கத்தில் எடுத்து வந்து விட்டால்.. மனிதனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அப்பனே அனைத்து விஷயங்களிலும் கூட மாறிவிடுவான் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே தர்மம் தலை நிமிர்ந்து நிற்குமப்பா!!!
அப்பனே தர்மம் தலைகீழாக இருக்கும் பொழுது உண்மையை.. பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே.
பொய்யை உண்மையாகுவார்கள் என்று அப்பனே.
இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
பக்திக்குள் பின் இருப்பவனே.. ஒன்றோடு ஒன்று நிச்சயம்.. யான் பெரியவன்.. பின் என்னிடத்தில் தான்.. இறைவன் இருக்கின்றான் என்றெல்லாம்... அப்பனே... நிச்சயம் ஆனாலும்.. அவனை அவனே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட காப்பாற்ற முடியாதப்பா!! நிச்சயம் அவனையே காப்பாற்ற முடியாத பொழுது!?!?!?
எப்படியப்பா??? கலியுகத்தில் மனிதனை காப்பான்????
அப்பனே இதனால் உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள்... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சக்தி இருக்கின்றதப்பா!!
அவ்விடத்திற்கெல்லாம் சென்றால் அப்பனே..யாங்களே வழிவிடுவோம் என்போம் அப்பனே...
ஆனாலும் அப்பனே மாய வித்தையில்.. பின் விழுந்து அப்பனே அவ் சக்திகளை!!!!
(சக்தி வாய்ந்த புனித இடங்களை தரிசனம் செய்வதற்கு)
காணவருவதே இல்லை!!.... என்பேன் அப்பனே... பக்த மார்களும் கூட அப்பனே...
ஏன்??? எதற்கு?? எவை என்று புரிய!!!... இன்னும் கூட அப்பனே இவ் ஞானி (சிருங்கி முனிவர்)... இங்கு ஏன் அமர்ந்தான்??? என்பதையெல்லாம் யான் இப்பொழுது எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே.
அதாவது கர்நாடகா மாநிலம் அங்கு பல வழிகளிலும் கூட...இவ் வூரே... அதாவது சிருங்கேரியே... எதை என்று புரிய !!!
(சிருங்கி முனிவரின் பெயரில் நேபாளத்தில் இந்த வெந்நீர் ஊற்றி இருக்கும் ஊர்... மற்றும் கர்நாடகாவில் சிருங்கேரி மடம் இருக்கும் ஊர்)
(சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. மட வளாகம் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள சிவாலயங்களைக் கொண்டுள்ளது)
அப்பனே.. நிச்சயம் பின் அவ்வாறு அழைக்க!!!.. அங்கிருந்து பின்.. நிச்சயம் தன்னில் கூட அதாவது இவன்..(சிருங்கி முனி).... அதாவது இவ் ஞானி அப்பனே..... அதாவது (தெய்வங்கள்) அனைவரும் ஒன்றே!! என்று நினைத்து துதித்து கொண்டிருந்தான்!!!
துதித்து பாடிக்கொண்டிருந்தான்!!
நிச்சயம் அங்கே நமச்சிவாயா என சொல்வதும்... பிரம்மா பிரம்ம ஈஸ்வரரே.. என்று சொல்வதும்.. விஷ்ணு ஈஸ்வரா... என்று சொல்வதும்!!.. இப்படியே!!!
ஆனாலும் அங்கு வருபவர் எல்லாம்... இவந்தன் பைத்தியக்காரன் என்றே!!!
இவ்வாறாக எதை எதையோ.. உளறிக் கொண்டிருக்கின்றான்!!! என்றெல்லாம்...
ஆனாலும் நிச்சயம் அவன்.. பின் அதாவது மறைந்து நின்று ஆனாலும்.. பார்ப்பான் எதை என்று.. சிரிப்பான் அனைவரையும் பார்த்து....
பின் பைத்தியங்களே... நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்... பைத்தியங்களே சென்று வாருங்கள் என்றெல்லாம்.... ஆனாலும் அருளும் பெற்று வருவதில்லையே என்றெல்லாம் அனைவரையும் பார்த்து சிரித்து ! சிரித்து....
ஆனாலும் வருபவர்கள் அனைவருமே இவனை பார்த்து பைத்தியக்காரன்.. பைத்தியக்காரன் என்று!!!
ஆனாலும் பின் அறிந்தும்... அதாவது ஒருவன் வந்தான் அதாவது.... இவந்தன் அவனைப் பார்த்து!!! உள்ளே சென்று இறைவனை கண்டாயா???
என்று கேட்டதற்கு!!
நிச்சயம் அதாவது அவன் சொன்னான்... நிச்சயம் நீ ஒரு.. பைத்தியக்காரன்.
யான் இறைவனை நிச்சயம் கண்டால்!!.. உந்தனக்கு என்ன??? காணாவிடில் உந்தனுக்கு என்ன???
உன்னிடத்தில் சொல்லி என்ன பயன்???
நீ எதையெதையோ உளறிக் கொண்டிருப்பாய்... அதனால் உன்னிடத்தில் சொல்லி பயனும் இல்லை.. என்று!!!
ஆனாலும் அவனும் ஒரு பக்தன் அல்லவா!!!
இப்படித்தான் அப்பா அங்கங்கு... நிச்சயம் ஞானிகள் உலகத்தைக் காக்க... ரகசியமாக இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே...
ஆனாலும் உண்மையான பக்திகள் செலுத்தினால் மட்டுமே....அவ் ரகசியத்தை தெரிந்து கொள்ள முடியும் என்பேன் அப்பனே..
இதனால் உண்மை பக்தி உள்ளவன் அவன் யார் ? என்று தெரிந்து கொண்டிருப்பான்...
ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறுதான்... கலியுகத்தில் நடக்கும் என்பேன் அப்பனே...
அங்கங்கு அப்பனே நிச்சயம்.. ஞானிகள் அப்பனே பின் எவ்வாறு எல்லாம்... உள்ளே செல்கின்ற பொழுது விதியை.. மாற்றி அமைப்பார்கள் என்பேன். அப்பனே...
உண்மையான பக்தியும் ஞானமும் அப்பனே இறைவனிடத்தில் இருக்கின்ற பொழுது அப்பனே உண்மைதனை தெளிவடைய.. செய்து அப்பனே பின் உள்ளே.. அனுப்புவான் என்பேன் அப்பனே..
இவை தன் அப்பனே பொய்யானவர்களை கூட இன்னும் இவன் பொய்யானவன்!!! இவனை!!.... இவனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டால் நிச்சயம் இவன் மற்றவர்களை அழித்து விடுவான் என்று அப்பனே நிச்சயம் சில சில வழிகளிலும் கூட துன்பத்தைக் கூட செலுத்தி தான் அனுப்புவார்கள் என்பேன் அப்பனே.
புரிந்துகொள்ளுங்கள் என்பேன் அப்பனே...
புரிந்து கொள்ள வில்லை என்றால் அப்பனே... தன்னையும் கூட காப்பாற்ற முடியாமல்... குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமல்......
ஏனென்றால் அப்பனே உலகம்.. அழிவு நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது...
ஆனால் அப்பனே நிச்சயம்... உடனே (ஒரேடியாக) அழிந்துவிட்டால் கூட பரவாயில்லை என்பேன் அப்பனே!!!
நிச்சயம் சிறுகச் சிறுக அனுபவித்து அனுபவித்து.. நோய்வாய்ப்பட்டு இறக்க வேண்டும் என்பேன் அப்பனே. இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே..
அவ்வாறு நிச்சயம் அவசியம் இல்லை உங்களுக்கு.....
அதனால்தான் சித்தர்கள் யாங்கள்!! மனிதனே!! திருந்திக் கொள்!! திருந்திக் கொள்!!! என்றெல்லாம் அப்பனே!!
அப்படி திருந்தவில்லை என்றால்.. அப்பனே நிச்சயம் பின் அனுபவித்து அனுபவித்து அப்பனே!!!
நீ மட்டும் அனுபவிக்காமல் அப்பனே மற்றவர்களும் அனுபவித்து அனுபவித்து அப்பனே.. சித்திரவதை செய்து செய்து... அப்பனே இறைவன் எங்கு இருக்கின்றான்???? இறைவன் எங்கு இருக்கின்றான்???
இறைவன் பொய் என்றெல்லாம் சொல்லுவான்.. அப்பனே
இறைவன் மெய்!!!
அப்பனே மனிதன் பொய்!!!.. என்று உணர்வதே இல்லை அப்பனே...
ஆனாலும் அவ் ஞானி அங்கே அமர்ந்திருந்தான்!!!.. ஆனாலும் அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்...
ஆனாலும் நிச்சயம் பெரியோர்கள் எதை என்று புரிய... புரிந்து கொள்ளவே இல்லை.... மீண்டும் பின் நிச்சயம் தன்னில் கூட...
ஒரு பெண்மணி பக்தியாக ருத்ராட்சை மாலைகள் எல்லாம் பல வழிகளிலும் கூட அணிந்து கொண்டு.. நிச்சயம் உள்ளே சென்றாள்!!!
நிச்சயம் தன்னில் கூட அவளை இவ் ஞானி பார்த்தான்!!!
அவளைப் பார்த்து!!
பைத்தியக்காரியே!!! என்று!!
அவள்!!... நிச்சயம் என்னையவே பைத்தியக்காரி!! என்கின்றாயா!?!?!
யான் யார் தெரியுமா???
நிச்சயம் யான் இறைவனுடைய பக்தை.... மதியம் இறைவனிடத்திலே பல வரங்கள் பெற்றவள்!!
நிச்சயம் எதை என்று அறிய அறிய அதாவது
என்னையே பைத்தியக்காரி.. என்கின்றாயே!!!... நீ எவை என்று கூற நீ இங்கு.. இனி இருக்கக் கூடாது என்று அங்கிருந்த ஒரு கம்பை எடுத்து நிச்சயம் அப்பனே... ஞானி தலையில் ஒரே போடு!!!!
அறிந்தும் கூட ஞானிக்கு தலையில் பின் இரத்தம் வந்தது!!!
ஆனாலும் அப்பா எதை என்று அறிய அறிய... அவளைப் பார்த்து!!!
பைத்தியக்காரியே!!!.. எதை என்று புரிய இறைவனை.. நீ இன்னும் இறைவனை புரிந்து இருக்கவில்லையே!!! அதனால் இவ் வேடங்களா?? என்று!!
ஆனாலும் அவளும் ஞானியைப் பார்த்து!!! பைத்தியக்காரனே!! இறைவனை யான் புரிந்து வைத்திருக்கின்றேன்!!
நீ புரிந்து வைத்திருக்கின்றாயா????
என்பதை எல்லாம் அப்பனே ஞானியைப் பார்த்து கேட்டாள்!! அப்பனே இவ்வாறெல்லாம்!!
ஆனாலும் அவ் ஞானியும் கூட பலமாக சிரித்தான்!!!
ஆனாலும் அங்கிருந்த அனைவருமே முடிவு கட்டி விட்டார்கள்...
இவன் பைத்தியக்காரன் தான் என்றெல்லாம்... எவ்வளவு அடித்தாலும் எவ்வளவு சொன்னாலும் நிச்சயம்... தன்னில் கூட பின் இவ்வாறாகவே சொல்லிக் கொண்டு திரிகின்றானே.. என்று!!
ஆனாலும் அப்பனே... இங்கு வருபவர்கள் தான் பைத்தியக்காரர்கள்.. என்று யாருக்கும் தெரியவில்லை அப்பனே.
இதுதான் பக்தியா??? அப்பனே!!...
கலியுகத்தில் அப்பனே பக்தி இவ்வாறு தான்.. போகும் என்பேன் அப்பனே!!!
அறிந்தும் மீண்டும் எதை என்று அறிய அப்பனே அதாவது.... முப்பெரும் தேவர்களும் எதை என்று அறிய அறிய !!... அறிந்தும் கூட பார்த்துக் கொண்டே இருந்தார்கள்!!! நலமாக!!
இவன் என்னதான் செய்கின்றான்?? என்று!!!
நிச்சயம் அப்பனே ஒன்றும் தெரியாமல்.. இதனால் தான் அப்பனே ஞானி ஆவதற்கு.. அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே...
யான் ஞானி என்று கூறுகின்றான் அப்பனே மனிதன்!!! யான் சித்தன் என்று கூறுகின்றான் அப்பனே!! யான் ரிஷி என்று கூறுகின்றான் அப்பனே....
அத்தனையும் பொய்யப்பா!!!
அப்பனே வேண்டுமென்றால் வெறும் வாயில் சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே... ஏனென்றால் இவ்வாறு சொன்னாலே
. அப்பனே ரிஷியின் சாபங்களும் கூட.. சித்தர்களின் சாபங்களும் கூட... அப்பனே ஞானிகளின் சாபங்களும் கூட.. கிடைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அவந்தன்... எவ்வாறு? என்பதை எல்லாம் அப்பனே!!!.. எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
கர்மத்தை சேகரித்துக் கொண்டு அப்பனே... நிச்சயம் பின் அவன்.. பின் இல்லத்தாளுக்கும் நிச்சயம் பின் அவன் பிள்ளைகளுக்கும் கூட நோய்கள் வந்து கொண்டே இருக்குமப்பா!!
இதனால் அப்பனே பின் பரம்பரையாக.. மீண்டும் மீண்டும் அப்பனே!!
இதனால் அப்பனே.... பின் யாரிடத்தில் எதை என்று.. அறிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட...... அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே...
இறைவனை உணர்ந்து விட்டால் அப்பனே எதனையும்... எதையும் செய்ய மாட்டானப்பா!!!
அமைதியாக இருந்திடுவான் என்பேன் அப்பனே...
ஆனால் இவ்வுலகத்தில் அப்படி இல்லையப்பா...
இன்னும் அப்பனே .... யாங்கள் யார் ? என்று காட்டுவோம் அப்பனே!!
பொய்யானதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் அடித்து.... பொய்யாக்கி... உண்மைதனை யாங்களே நிலை நிறுத்தி விடுவோம்...
இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக கலியுகத்தில்.. சென்று கொண்டே இருந்தாலே.... சித்தர்களே பொய்!!! என்று சொல்லிவிட்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே!!
இதனால்தானப்பா!!! யாங்கள்!!.. வந்து அப்பனே நிச்சயம் எதை என்று.. அறிய அறிய மீண்டும் தர்மத்தை நிலை நாட்டவே... வந்திருக்கின்றோம் அப்பனே!!!
நிச்சயம் நிலைநாட்டுவோம் அப்பனே!!
யார் மூலம்.... நிலை நாட்ட வேண்டும்???.. என்பதையெல்லாம் அறிந்து நிச்சயம் தன்னில் கூட... நிலைநாட்டுவோம் அப்பனே!!!
இதனால் மீண்டும் அவ் ஞானி... நிச்சயம் தன்னில் கூட பின்....
அப் பெண்மணி நிச்சயம் பின்... நீ இங்கே இருக்கக் கூடாது... நீ தூரத்தில் தான் இருக்க வேண்டும்..
ஏனென்றால் இவந்தன்.. எதை என்று புரிய... இங்கு வருவாரையெல்லாம் பைத்தியக்காரன் பைத்தியக்காரன்.. என்றெல்லாம் சொல்லி.. பின் மனக்குழப்பத்தை ஏற்படுத்துகின்றான் என்றெல்லாம்..
நிச்சயம் அனைவரும் வந்து இவனை பின் தூக்கினார்கள்... நிச்சயம் என் இவனை தூரே...எறிய!!!
ஆனால் நிச்சயம் தன்னில் கூட...
ஆனாலும் பின் ஈசனே!!! விஷ்ணுவே!!! பிரம்மனே!!!... அனைவரும் நீங்கள் ஒன்றுதானே!!!
நிச்சயம் இவ்வாறெல்லாம் நடக்கின்றதே எந்தனக்கு!!!
உங்கள் பார்த்தும் கொண்டிருக்கின்றீர்களே!! என்று!!
பரவாயில்லை என்றெல்லாம் சிரித்தான்... பலமாக சிரித்தான்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட மீண்டும் இவனுக்கு அறிவே இல்லையே!!.. என்றெல்லாம்!! அங்கிருந்த மக்களும் கூட!!
ஆனாலும் உற்று நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.. அனைவரும் கூட..
ஆனாலும் எதை என்று புரிய இப்படித்தானப்பா!! உண்மை ஞானி (ஆவதற்கு).இறைவன் பல சோதனைகள் செய்வானப்பா!!!
அனைத்தையும் கடந்து வந்தால் தான் அப்பனே .. இறைவன் பின் அணைத்துக் கொள்வானப்பா!!!
அனைவரும் இவனை தூக்கி தூரே வீசி விட்டார்களப்பா!!!
ஆனாலும் அப்பனே அறிந்தும்.. புரிந்தும் கூட இதனால்... எவ்வாறு என்பதையெல்லாம் மீண்டும்... பின் எதை என்று புரிய நிச்சயம் மீண்டும்... பின் வந்தானப்பா...
நிச்சயம் இவ்வுலகத்தில் எந்தனுக்கு இறைவன் மட்டும்தான் சொந்தம் என்று!!! மீண்டும்.. வாசற்படியிலே அமர்ந்தானப்பா!!! அறிந்தும் கூட!!
ஆனாலும்.. எதை என்று புரிய அப்பனே.....
இறைவா!!!... நீ மட்டும் தான்.. எந்தனுக்கு துணை!!!
ஆனாலும் இதனை மனிதன் புரிந்து கொள்வதே.. இல்லையே!!!
என்னையே பொய்யாக்கி!!.... அதாவது யான்.. பொய் என்று!!!
ஆனால் வருகின்றவர்கள் தான் பொய்..
ஆனால் பின் எவ்வாறு? மனிதனுக்கு!!!.. இதனை யான் எப்படி உணர்த்துவது? என்றெல்லாம்!!!
அப்பனே மீண்டும்.. அங்கு வருவோர்களை எல்லாம் பின் பைத்தியக்காரர்கள்!! திருடர்கள்!! புத்தி கெட்டவர்கள்!!!.. நிச்சயம் இவ்வாறெல்லாம் திட்டி தீர்த்துக் கொண்டே இருந்தான்!!!
ஆனாலும் அறிந்தும், புரிந்தும் எதை என்றும் அறிய!!!.
ஆனாலும் சரி!!!, நிச்சயம் தன்னில் கூட. ஈசன் ஒரு முடிவு முடிவெடுத்தான். நிச்சயம் தன்னில் கூட. நாம் செல்வோம்!!! (அங்கு செல்வதற்கு ஈசன் முடிவெடுத்தார்)
எதை என்று புரிய. நம்தனை அவன் என்னதான்??? சொல்கின்றான் என்று பார்க்கலாம் என்று!!!
அப்பனே, ஈசனும் வந்தானப்பா,!!!
(மாறுவேடத்தில் வந்த ஈசனை பார்த்து)
பின் நிச்சயம் பலமாக அவ் ஞானி சிரித்தான். அப்பா, பின் பைத்தியக்காரனே!!!!! என்றெல்லாம் ஈசனையும் கூட!!.
ஈசன் கோபமுற்றானப்பா!!!!
, என்னையே பின் பைத்தியக்காரன் ஆக்குகின்றானே என்று நிச்சயம் சிறிது!!! (கோபம்)
. ஆனாலும் பின் இவ் ஞானி. ஆனாலும் ஏதோ நம் பக்தன் தான்.!!!
ஆனாலும் உணர்ந்துதான் நம்தனை, நிச்சயம் திட்டுகின்றான் என்று ஈசன் அப்பனே பரிபூரணமாக, அப்பனே அமைதி காத்தானப்பா!!!
, நிச்சயம் தன்னில் கூட.
இதனால் எதை என்று அறிய அறிய பைத்தியக்காரனே?, ஏன் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்???? என்று.
நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறெல்லாம் எதை என்று புரிய. !!!
ஆனாலும் ஈசன், அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று புரிய. ஏன்????, அதாவது ஈசன் கேட்டான். அவ் ஞானியை பார்த்து, ஏன் அனைவரையும் பைத்தியக்காரன் என்கிறீர்கள்??? என்றெல்லாம்.
அவ் ஞானியும் !!!!நிச்சயம் அனைவருமே பைத்தியக்காரர்கள் தான் என்று.
ஈசன் ஞானியை பார்த்து
என்னை பார்த்தாயா? யானும் பைத்தியக்காரனா???? என்று.
அவ் ஞானி பின் பலமாக சிரித்து, நீயும் பைத்தியக்காரன் தான் என்றெல்லாம்.
நிச்சயம் ஈசனும் கூட. எதை என்று அறிய. ஆனாலும் ஞானி வந்தது யார் ??? என்று, நிச்சயம் பின் புரிந்து கொண்டான். நிச்சயம் தன்னில் கூட
அறிந்தும்,
அறிந்தும்!!!
இதனால் பின் ஈசனும் கூட வந்தது யார் ?என்று தெரிகின்றதா?????
பின், அதாவது சீடனே!!! என்றெல்லாம்.
ஞானியும் ஈசனை பார்த்து!!!!
நிச்சயம் வந்தது யார்? என்று தெரிகின்றது.
ஈசனே!!!!! நிச்சயம் நீயும் மனித ரூபம் எடுத்து, நிச்சயம் தன்னில் கூட மனிதன் போல் ஆகப் போகின்றாயா?????? என்றுதான் உன்னை பைத்தியக்காரன் என்று சொன்னேன்!!.
இதனால், நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் இதனால்தான் அப்பனே. நிச்சயம் இறைவன் மறைமுக பொருளாகவே இருந்து இயக்குகின்றான். அப்பனே, தெரிவதில்லை என்பேன். அப்பனே!!!
மீண்டும் அறிந்தும், புரிந்தும். அதாவது, நிச்சயம்
(அதாவது என்னை)
இவ் பைத்தியக்காரனை இவ்வாறெல்லாம் படைத்தாயே!!!!!!!.
இதனால், பின் இவ் பைத்தியத்தை நிச்சயம் படைத்தவன் ஒரு பைத்தியக்காரனாக இருக்க வேண்டும் அல்லவா?
(யான் ஒரு பைத்தியம் என்னை படைத்த ஈசனே நீயும் ஒரு பைத்தியம் என்று ஞானி கூறினார்)
நிச்சயம் இறைவா!!!, அப்பா!!! என்று ஈசனை கெட்டியாக பிடித்துக் கொண்டான். கால்களை!!!!, நிச்சயம் தன்னில் கூட.!!!
இவ்வாறெல்லாம், நிச்சயம் அன்பாக. நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, பின் அன்பை செலுத்தி, செலுத்தி நீங்களும் கூட இறைவனிடத்தில் வாதாடலாம்.!!!!
எந்தனுக்கு ஏன் செய்யவில்லை????? என்றெல்லாம்.அப்பனே
அப்பனே, இதுதான் அப்பனே உண்மையான பக்தி என்பேன்.
இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கெட்டியாக பிடித்துக்கொண்டு, நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும், அறிந்தும்!!!
ஈசனும் !!! , அதாவது உந்தனுக்கு என்ன வேண்டும். நிச்சயம் தன் சீடனே!!! என்றெல்லாம். நிச்சயம்!!!
அவ் ஞானியும் நிச்சயம். அதனால், நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று அறிய அறிய, அனைவரையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றெல்லாம். நிச்சயம் ஒரே இடத்தில்!!!. நிச்சயம் அனைவரும் வந்து ஆசிகள் கொடுத்தனர் என்பேன். அப்பனே
இப்பொழுது கூட அவ் நகரம் எதை என்று அறிய அறிய கருநாடகத்தில்!!
(கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடம்)
அப்பனே, பின் ஒரு பெரிய ஸ்தலமாகவே விளங்குகின்றது என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அவ்வாறாக, நிச்சயம் வந்து, நிச்சயம் யான் பின் இங்கு இருக்க விரும்பவில்லை. இதனால், நிச்சயம் கைலாயத்துக்கே யான் வருகை தர வேண்டும் என்றெல்லாம். நிச்சயம் அவ் ஞானியும் கூட.
ஈசனும்!!!!
நிச்சயம் உன் எண்ணப்படியே ஆகட்டும் என்று.
ஞானியும்!!!!
ஆனாலும், பின் ஈசனாரே ஒரு வேண்டுகோள்!!!
. நிச்சயம் தன்னில் கூட. அதனால், யான் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து, உன்னை நிச்சயம் தன்னில் கூட பார்க்க.
நிச்சயம் சில கர்மாக்கள் எல்லாம் எடுத்து, தூரே எரிந்து!!!, தூரே எரிந்து,!!! நிச்சயம் தன்னில் கூட உன்னை காண வழிவகை செய்ய வேண்டும்.
இதனால், உன் அதாவது கைலாயத்திற்கு போக வேண்டிய வழியில் எல்லாம் என்னை, நிச்சயம் பின், அதாவது அங்கேயே என்னை இட்டு விடு. பல ரூபங்களில் கூட என்றெல்லாம்!!!!
ஈசனும். நிச்சயம் அவ்வாறே ஆகட்டும் என்று சொல்லி, நிச்சயம் அங்கங்கு பின் கைலாயத்திற்கு செல்லும் இடமெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றான். அப்பனே,!!!!
இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பிறந்தால் யாருக்காவது பிரயோஜனமாக பிறக்க வேண்டும். இல்லையென்றால், இறைவன் கூட ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!!
, செப்பி விட்டேன் அப்பனே .
இதனால்தான் அப்பனே, நிச்சயம் பல வழியிலும் கூட. அப்பனே, அங்கங்கு. அப்பனே, பின் பல பெயர்களில் கூட. அப்பனே, இவன் தங்கி.!!! அப்பனே, பின் வருவோருக்கெல்லாம் தெரிந்தும் தெரியாமலும் சில பாவத்தை ஏற்பவன் கூட சில ரகசியங்களாக கழித்து.
(கைலாஷ் யாத்திரை செல்லும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை கூட அவர்களுக்கு தெரியாமல் ரகசியங்களாக பாவ கணக்கை கழித்து கைலாஷ் ஈசனை காண்பதற்கு பரிபூரணமாக அனுப்புகின்றார் சிருங்கி முனிவர்)
அப்பனே, ஈசனை அப்பனே பரிபூரணமாக காணச் செய்கின்றான்...என்பேன் அப்பனே,!!!!
இன்னும் ஞானிகள் பல பல கோடி இருக்கின்றார்களப்பா, இங்கு!!! (நேபாள தேசத்தில் கைலாஷ் செல்லும் வழியில்)
இன்னும் சொல்வேன். அப்பனே, தெளிவடையுங்கள். அப்பனே!!!
, பின் தெளிவடையா விட்டால் விட்டால், அப்பனே, நிச்சயம் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!
, இதனால் எவை என்று அறிய அறிய. இவ் ஞானியின் அப்பனே, நிச்சயம் சில ரகசியங்கள் கேட்பதே சில புண்ணியங்கள். அப்பனே,!!! அதனால் தான் அப்பனே உங்களையும் கூட புண்ணியங்களாக்கி. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!! அனைவரையும் புண்ணியங்களாக்கி. அப்பனே, உண்மைதனை அவரவரே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சித்தர்கள் நோக்கம்.!!!
எம்முடைய ஆசிகள் மறுவாக்கும். செப்புகின்றேன். ஆசிகள், ஆசிகளப்பா!!!.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள்!! நேபாள் நாட்டு எல்லையில் சைனா வழியாக செல்லும் வழிகளில் எல்லாம் சிருங்கி முனிவர் ஈசனை காண செல்லும் பக்தர்கள் பாவங்களை கழித்து... புண்ணியங்களாகி ஈசனை காண்பதற்கு... மறைமுகமாக ரகசியமாக வீற்றிருக்கின்றார்.
நேபாள் சைனா எல்லையில் கோதாரி எனும் கிராமத்தில் சிருங்கி முனிவர் தங்கி தவமிருக்கும் இந்த இடத்தில் சிவாலயம் ஒன்றும் வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன. கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்கள் இங்கு சென்று வெந்நீர் ஊற்றில் குளித்து சிருங்கி முனிவரை ஈசனை வணங்கிவிட்டு தான் யாத்திரை செல்ல வேண்டும்.
கைலாஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாவத்தை குறைத்து புண்ணியத்தை கொடுத்து அருளாசிகள் தந்து இப்படி அனுப்பி வைக்கின்றார் இப்படி பல திருத்தலங்கள் ரகசியமாக கைலாஷ் மானசரோவர் செல்லும் வழியில் எல்லாம் இருக்கின்றது அவை எங்கெங்கு இருக்கின்றது என்பது தெரியாது குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கில் கூறிய பிறகு தான் நமக்கு அனைவருக்கும் தெரிகின்றது. இப்படி குருநாதர் அகத்தியர் பெருமான் ஒவ்வொரு ரகசியத்தையும் நமக்காக வாக்குகளில் உரைத்துக் கொண்டே வருகின்றார்.
கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்கள் அனைவரும் குருநாதர் கூறும் ஆலயங்கள் வழிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)

.jpeg)

புண்ணியம் கொடுத்த தந்தையே நன்றி! நன்றி!! நன்றி!!!
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete