வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
சமீபத்தில் பிருகு மகரிஷி தன் பக்தர்களுக்கு உரைத்த வாக்கில்.. பொதுவான வாக்குகளும் கொடுத்திருக்கின்றார்.
அனைவரும் இதை கடைப்பிடிப்பது அவசியம்.
இருளகற்ற ஓடோடி வா!! இறைவா!! இறைவா உன்னை எண்ணியே வாக்குகள் ஈகின்றேனே பிருகானவனே
அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற பல தவறுகள் பிறவிகளில் கூட...
இதை உணர்ந்து நினைத்து அருள் ஈபவன் ... அகத்தியனே!!
இதனால் பல மாற்றங்களை நிச்சயம்.. அகத்தியன் எடுத்து வருவான்.
அவ்வாறாக.. எடுத்து வந்து எடுத்து வந்து சில பக்குவங்களை.. கொடுக்கின்ற பொழுதே நன்மைகள் நடக்கும்.
நடக்கும் அறிந்தும் இவை தன்.. உணராவிடிலும் நிச்சயம்.. உணரத்தான் வேண்டும்.
வேண்டும்!! என்பதனை பின் வேண்டி கேட்டாலும்.. நிச்சயம் அறிந்தும்.. இவை என்று பின் வேண்டாததை கேட்டாலும்.. அதை தன் நிச்சயம் அறிந்தும்.. உண்மைதனை பல கோடியாய்.. புரிந்து வைப்பவன் இறைவனே.
இதை தன் உத்தமனாகவே இறைவன் பக்குவங்களாகவே பெற்று வழிநடத்தி எண்ணற்ற கோடி ஆசிகளை.. ஆசிகளை இதற்கு சமமான பின் விதித்தாலும் அறிந்தும்.. இவை உண்மைகளை.. புரிந்து கொண்டோர் எவர்????
எவர் என்ற போதிலும் வாழ்க்கையில் முட்டுக்கட்டைகள் பல பல.
ஏன் எதற்கு.. என்று புரியாது..?? என்று பார்த்தாலும்.. நிச்சயம் ஆழ்ந்த சிந்தனையோடு இன்னும்.. இறை பக்திக்குள் நுழைய வேண்டும்!!!
வேண்டுமடா பிள்ளைகளே அறிந்தும் இதை தன் அப்பொழுது இன்னும்.. சித்தர்கள் வந்து பின் வாக்குகள் செப்புகின்ற பொழுது புரியுமடா.
புரிந்து அருள் ஈந்து அதை உணர்த்தி.. நல் நடத்தையில் பின் இட்டு .. பின் வந்தால் தான்... பக்குவங்களாக பக்குவங்களாகவே...
நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் அவை சொன்னான் இவை சொன்னான்.. என்றெல்லாம்.
ஆனால் மனதில் பின் நிற்பதோ சில. சில விஷயங்கள்..
பின். அதாவது சில சில விஷயங்கள் என்றாலும்... அவை தன் பாவம் பொறுத்தே அமைகின்றது.
பல விஷயங்கள்.. நன்கு உணர்ந்து கொண்டாலே புண்ணிய விஷயங்கள்..
ஒரு வரியில் அனைத்தும் பின் முடித்து விடுவோம் யாங்கள்.
ஆனாலும் அதற்கு நீங்கள் தேடி அலைய வேண்டும்.
தேடினாலும் கிட்டாது உண்மை நிலையை கூட.
அப்படி இருக்கையில் உங்களுக்கு பக்குவங்கள்.. போதவில்லை.
அறிந்தும் கோள்களும் கூட.. கெட்டியாக பிடித்துக் கொண்டு வாட்டும்... வதைக்கும் சில நேரங்களில்...
அறிந்தும் இவை தன் உணராத... உணர்ந்து கொள்ளும்.. சில வருத்தங்கள் வந்தாலும் அதற்குள்ளே... நிச்சயம் அனைத்தும் பின் மறந்து போகுமடா..
போகுமடா.. அது எல்லையில்லா துன்பங்கள் வந்தாலும்.. அறிந்தும் பின் நிச்சயம்... எல்லையில்லா இன்பங்கள் வந்துவிடுமடா...
ஆனாலும் இதனையும் கூட அன்றின்றி என்றென்றி.. என்று நிற்க ஏது.. தெய்வமாக வந்து நின்று.. அதனை பின் கண்டாலே.. போதுமடா.
கண்டுணர ஆளில்லை என்பதற்கு இணங்க.. ஆட்டங்கள் மேலடா.
அப்பப்பா இதுதான் மனிதனுடைய இயல்பே..
இதனால் தான் இன்னும் பக்குவங்கள் வேண்டும்.. உங்களுக்கு..
அறிந்தும் இவை என்று யான் அறிய பின் சொல்கின்றேனே...
அறிந்தும் இதையென்று புரிய இதனால்தான்... ஆழ்ந்த சிந்தனையுடனே செல்ல வேண்டும்.பின் குழந்தைகளே!!
அறிந்தும். அதாவது இவை என்று அறியாத வகையிலும் உண்டா?? உண்டு என்பதை நினைத்து விட்டால்... போகுது போகின்ற பாதை ஏதடா??? மறைத்து நின்று வந்து நின்று... எதிரொலித்து அரும் பாடுபட்டு... அப்பொருள் வந்து நின்றது ஏதடா???
பின் கண்ணிமைக்கும் நேரத்தில் பின் எங்கே சென்றதடா??
இது என்ன???
அறிந்தும் போதுமடா !!இதற்கு பதில்... உயிர்.
அறிந்தது ஒன்று... அறியாது எங்கு? மனம்....ஏது நின்று அறிந்தும்... இவை தன் மனம் உணராவிடிலும்.. நிச்சயம் இதை தன் பரிபூரணமாக ஈவது ஏது?...
பக்தி மார்க்கத்திலா??..
இன்னும் இதை அறிந்து பின்.. சொல்வது மனிதனின் பின்.. மார்க்கத்திலா????
மனிதனின் மார்க்கத்தில்.. இருக்கின்ற பொழுது பக்தி இங்கு செயல்படாது நிற்கும்.
அறிந்தும் இதன் தன்மை உணர.. பின் ஆள் இல்லை என்பதற்கு இணங்கவே... நிச்சயம் எவ்வாறாகவே.. நின்று நின்று.
இதனால் நிச்சயம் ஆசிகள் தருவதோடு...
ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து இருக்கின்றேன் இன்னும் எதைப் பொறுத்து..??? இன்னும் குழப்பங்கள் ஆகவே...
ஏன் இந்த குழப்பங்கள்??
என்றெல்லாம் அறிந்தும் பின் அதாவது உண்மைதனை உணர்த்துவதற்கும் அறிந்தும்.. இவையில்லாமல் போனதே... என்றெல்லாம் தெளிவாக..
அறிந்தும் இதைத் தன் அதாவது பின் வந்து வந்து தாக்குவது ஏது??
ஆனாலும்.. எங்கெங்கோ மனதுகள்.. எக் குழப்பங்கள் எவ்வாறாகவே...
எதை ?எவை? என்று நிறை குறை ஏது எவை என்று அறிந்து... ஆனாலும் சித்தர்களின் ஆசிகள் இருக்கின்ற பொழுது இன்னும்.. குழப்பங்கள் ஆகி குழப்பங்களாகி... சென்றால்தான் ஒரு பதிலே கிடைக்கும்.
எதை என்று நிரூபிக்க இதனால்.. பதில் இங்கு உயிர் இதற்கு தீர்வு.. தேடி அலையுங்கள்.
இதை என்று அறிவித்த நிலையில் பின்.. தெரிவித்த நிலையில் தெரிந்து.. பொருள்பட எங்களுடைய ஆசிகள்.
பரிபூரணம்.
ஒவ்வொருவரிடத்திலும் பூதங்கள் ஒளிந்துள்ளது
யான் கண்டேன்.
அறிந்தும் இவை தன் உணர ஆனாலும்.... இவை எவ்வாறு பின் நிச்சயம்... பூதம் என்பது என்றால்.. மாயையே!!
மாயையை நினைத்துக் கொண்டு.
மண் பொன் பொருள்.
பெண்.
இதை இவ் பூதத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும்.
அறிந்தும் இதை தன் நினைத்தார் போல் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய..
ஆனாலும் இவ் பூதம் கலியுகத்தில் தானாகவே வந்து நிச்சயம் ஏறிக்கொள்ளும் ஒவ்வொருவனிடத்திலும் கூட.
அதை அறிந்து இறையருள்கள் பலமாக.. சேர்த்திருப்பார்கள் அறிந்தும்... இவை என்று புரியாமல் இருக்க...
ஆனால் கலியுகத்தில் இவ் பூதம்.. பின் நிச்சயம்.. இவை என்று அறியாத சில.. மன மாற்றங்கள் !!
பின்
(அவர்களுக்கு வாழ்க்கை)
பின் நல்லதாகவே... போய்க்கொண்டிருக்கும்
(ஆனால் கலிபுருஷன் வரும் பொழுது பிரச்சனைகள் குழப்பங்கள்)
(பரிபூரணமாக பக்தி செலுத்தி இறையருளை பெற்றுக்கொண்டு வாழ்க்கைப் பாதை நன்றாக நடந்து கொண்டிருக்கும் அப்போது கலியின் வினையால் மாய பூதங்கள்)
ஆனால் அவ் பூதம் நிச்சயம் இவனை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று.
ஏனென்றால் கலியுகத்தில் கெடுதல் நடக்க வேண்டும் என்ற விதி இருக்கின்ற பொழுது... ஏறிவிடும்.
இதற்கு என்ன செய்வீர்கள் நீங்கள்??
இதனால்தான்.. எங்கள் பாதை நிச்சயம் பின்.. அவை தன்.. வேண்டும்!! அவை தன் சாகடிக்க வேண்டும்....
(உங்களை) சாகடிப்பதையே சாகடிக்க வேண்டும்.
அறிந்தும் உண்மைதனை புரிந்தும் இதனால் எத்தனை?? எத்தனை?? பிறவிகளில் கூட... எதை என்று!!
ஆனாலும் உண்மைதனை கூட புரியும் அளவிற்கும் கூட சந்தர்ப்பங்கள்... இன்னும் உங்களுக்கு வருகின்ற பொழுது... சித்தர்களும் வாக்குகள் செப்புகின்ற பொழுது !!
இவ்வாறாக நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இன்னும் ஞானங்கள் ஏற்படும்.
இவை அறிந்து புரிந்து இதனால் அறிந்தும் புரிந்தும் தெளிந்தும் பெற்றும் உண்மைதனை உணர்ந்தும்.... பல கோடிகளாக குவிக்கப்பட்டு இருக்கும் பாவத்தை ஒழித்தும்.. மீண்டு நிச்சயம் இவை புரிந்து.. கீழ்நோக்கி விட்டு அறிந்தும்.. அதாவது எதை என்று.. எவை புரிய.. நிச்சயம் கீழ்நோக்கி பின் அமுக்கி... புண்ணியத்தை மேல் நோக்கினால் மட்டுமே..
உண்டு பின் உயர்வுகள்... பின் மனக்குழப்பங்களும் போய்விடும்...
அதை சித்தர்கள் செய்வார்கள் வரும் காலத்தில்.
இன்னும் மாயைகள் ஒளிந்து இருக்கின்றது
அதனை நிச்சயம் சித்தர்கள் அடித்து நொறுக்குகின்ற பொழுது உங்களுக்கு பின் மனக்குழப்பங்கள் வரும்.
ஆனாலும் நிச்சயம் நில்லுங்கள் அழகாகவே.
ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு மாயை.
கண்களில் பார்த்தால் பின் பெண் என்கின்ற மாயை.
தலையில் பார்த்தால் அறிந்தும் பணம் என்ற மாயை.
அறிந்தும் வயிற்றில் பார்த்தால்.. பின் நிலம் என்ற மாயை.
இன்னும் இன்னும் அறிந்தும் பின் முதுகில் பார்த்தால் இன்னும் அதாவது பின் பொழிய வேண்டும் ஸ்வர்ணங்கள்..(தங்க மழை) என்ற மாயை.
இன்னும் இன்னும் எங்கெங்கு.. இதை இதற்கெல்லாம் பின் எங்கு? ஆசைபட்டு எதை என்று செல்கின்றீர்களோ???
அங்கெல்லாம் பலமாக.. அதாவது எதை என்று.. புரிந்து கொள்ள !!!
எங்கு ? தலையில் சொன்னேனே!!! (பணத்தாசை) அதற்கு... முதலில் ஆசைப்பட்டாலே... எதையும் உணர முடியாது.
இவையெல்லாம் பின் எப்படி விளக்க வேண்டும்??... என்பவை எல்லாம்!!
கண்.. அதாவது தலை இன்னும்.. அறிந்தும் இவையெல்லாம் நிச்சயம்.. செப்புகின்ற பொழுது.. அப்பொழுது உங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும்.
கிடைக்குமடா குழந்தைகளா...
தெரியாமல் செய்கின்றீர்கள் அல்லவா!!
யான் தெரிந்து சொல்கின்றேன்
இவையென்று பின் ஒவ்வொன்றாக செப்பி செப்பி... ஆனாலும் அறிந்தும் கூட..
இதை இவ்வாறாகவே இவ் அழுக்குகள் இருந்தால்... நிச்சயம் மன குழப்பங்கள் ஆகவே... வாழ்க்கையில் விரக்தி தான் ஏற்படும்.
அனைத்தும் மனிதனுடைய பொறுப்புகள் தான் இது.
நீங்களும் சொல்லலாம் இறைவன் படைத்தான் அல்லவா.. என்று
ஆனால் இறைவன் அழகாகவே. (படைத்தான்)
அதாவது நிச்சயம் இவையெல்லாம்.. தானாகவே..
ஆனாலும் இன்னும் உங்களுக்கு விளக்கங்கள் போதவில்லை... இன்னும் விளக்கங்கள் தருகின்ற பொழுது.. அறிவீர்களாக நீங்கள் !!
இன்னும் அதாவது நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்... இன்னும் பல வகையான வாக்குகள் பின் வருகின்ற பொழுது தான் உண்மை நிலை தெரியும்.
இல்லையென்றால் நிச்சயம் மீண்டும் மீண்டும்... பின் வந்து வந்து உங்கள் உடம்பில் மாயைகள் இருக்கின்ற பொழுது மீண்டும் சந்தேகம்தான்... இறைவன் மீதும் கூட.
அறிந்தும் இவை என்று புரிய இதனால்.. சனீஸ்வரன் உங்களை பக்குவம்.. அடைய வைத்து நிச்சயம் ஏற்றங்கள் பல பல.
எங்களால் கொடுக்க முடியாததா என்ன???
ஆனாலும் பின் பக்குவங்கள் வேண்டுமடா.
அறிந்தும் சிறு குழந்தைகள் போல இப்பொழுதும்... ஏதாவது குழப்பிக் கொண்டே வாழ்ந்து வருகின்றீர்கள்.
ஏன்? எதற்கு ? என்று சொல்லி அறிந்தும் அகத்தியன் பலவகையிலும் கூட..
சந்திரன் பின் நிச்சயம் தன் கோடிலிருந்து..(சுற்றுவட்ட பாதையில் இருந்து) நீங்குகின்றது... இதனால் அனைவருக்குமே.. குழப்பங்கள் தான் உலகத்தில்.. அனைவருக்குமே...
(சந்திரனுடைய நிலைமை குறித்து குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே வாக்குகளில் உரைத்தெடுக்கின்றார்.
சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி. இவ் வாக்கினை மீண்டும் படிக்கும் பொழுது மேலும் புரியும்.
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் அவை மட்டுமில்லாமல் சந்திரனின் துகள்கள் அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய பின் சாதாரணமாகவே அப்பனே அறிந்தும் கூட பின்... அதனுள்ளே ஒரு கோள் அப்பனே சந்திரனை தாக்கி அப்பனே ஆனாலும் அப்பனே அதிலுள்ள துகள்கள் அப்பனே பின் பரவி விட்டன என்பேன் அப்பனே
அதாவது அப்பனே மனிதனை தாக்கவே!!! அப்பனே இன்னும் இன்னும் சிறிது தான் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே
அதற்கே!!!! இவ்வளவு மனக்குழப்பங்கள் என்பேன் அப்பனே!!! அதாவது கஷ்டங்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் இன்னும் அவை தன் (சந்திரனின் துகள்கள்) உதிர்ந்து விட்டால் அப்பனே மனிதன் பைத்தியமாக போய்விடுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே அனைவருமே பைத்தியக்காரனாக ஆகிவிடுவார்கள் என்பேன் அப்பனே)
சந்திரனுக்கு இவ்வாறாக போக்குவதற்கு... அழகாக பின்... வெள்ளை தன்னில் கூட அறிந்தும்... சரியாக நிச்சயம் பின்... அங்கங்கு பல வகையிலும் கூட.. உணவு பண்டங்களை இட்டு அதாவது இனிப்பு பண்டங்களை இட்டு... சரியாகவே சந்திரனின் பின் மந்திரங்களை ஜெபிக்க ஜெபிக்க நிச்சயம்... இவையெல்லாம் அதாவது குழப்பங்கள் எல்லாம்... சிறுக சிறுக போகுமடா.
உட்காருவதும் நிச்சயம் பின் அவ் வெள்ளையே!! (துணி)
அடியவர் ஒருவர் பிருகு மகரிஷியிடம் சந்திரனுக்கு நிறைய காயத்ரி மந்திரங்கள் உள்ளன அதில் எதை கூறி ஜெபம் செய்வது? என்று கேட்டதற்கு
அறிந்தும் சந்திரனுக்கு உரியது எவையோ அவை.. அனைத்துமே பொருந்தும்.
(அதாவது சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரங்கள் அனைத்தும் அவரைச் சாரும் அனைத்தும் பொருந்தும்.. என பிருகு மகரிஷி கூறி இருக்கின்றார்.
(சந்திர காயத்ரி மந்திரம்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ஷரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
அம்ருதேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ: சோமஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்)
அறிந்தும் இவை தன் உணர்ந்தும் இதனால்.. நன்மைகள் பெருகும்.
இவை தன் உணர்ந்து அறிந்து... இவை தன் உணராத வகையிலும் கூட இருந்தாலும்... உணர வைத்து உணர வைத்து.
இதனால் நாள்தோறும் சிறிது நேரங்களை.. நிச்சயம் மயமாக்கி அறிந்தும்...
(அனுதினமும் நேரம் ஒதுக்கி)
இவை என்று அறிய.. விநாயக பெருமானுக்கு நன்றாக பின்... பிடித்த அதாவது.. அருந்துவது அவை தன் நிச்சயம் பின் நன் நீராகவே.. நிச்சயம் பின் நீங்களும் அருந்தி வாருங்கள்... நிச்சயம் ஞானங்கள் அதிலிருந்தே கிடைக்கும்.
(அருகம்புல் சாறு)
மறைமுகமாக (அருகம்புல்) இவை தன் கேதுவின் பின் நிச்சயம்.. அரசன் இதுவே.
அறிந்தும் இவை தன் அறிய அனைவருக்குமே... நிச்சயம் கேதுவானவன் அதிக இப்பொழுது உச்சம்.
இன்னொன்றும் சொல்கின்றேன் அப்பொழுது... நீங்கள் வைத்துள்ள அதாவது... இன்னும் கூட அழகாகவே பின்... சொன்னேனே வெள்ளை தன்னில் கூட அழகாக... அதில் தன்னில் கூட பின் மஞ்சளை பின் சரியான மஞ்சளை இட்டு அதை தன்... பிள்ளையோனாகவே எண்ணி...(மஞ்சளில் பிள்ளையார் பிடித்து).. அவனுக்கும் பல அறிந்தும் பின்.. நிச்சயம் மந்திரங்கள் ஓதி... அதில் இருக்கும் சிறிதளவு கீறி... அறிந்தும் இதை தன் நீரில்... பின் துளசியுடன்.. வில்வத்துடன் சேர்க்க.. சேர்த்து அறிந்து வர நலமாகும் இவைதன் பிரச்சனைகள்.
(இதனுடன் சந்திரனுடைய காயத்ரி மந்திரங்களை முடிந்த வரை குறைந்தபட்சம் 108 முறையாவது வெள்ளைத் துணியில் அமர்ந்து தியானம் போல சந்திர காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும்)
(கேதுவின் அரசனான அருகம்புல் சாறை அருந்தி வரவேண்டும்)
(வெள்ளைத் துணியில் வீட்டில் பூஜையறையில் இருக்கும் பிள்ளையாரையும் வைத்து... தனியாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையார் மந்திரங்கள் விநாயகர் அகவல் ஓதி அதன் பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாரில் இருந்து சிறிதளவு மஞ்சளை எடுத்து நீரில் வில்வத்துடன் துளசியுடன் கலந்து குடித்து வரவேண்டும்)
சித்தன் அருள் 1947 காசியில் குருநாதர் அகத்தியர் பெருமான்..... இதயத்தில் நடுவில் ஒரு துகள் உள்ளது அதை எரிய வைக்க வேண்டும் அதை எரிய வைத்து விட்டால் மனிதர்களுக்கு துன்பம் வராது நோய்களும் வராது என்று.... குருநாதர் கூறியிருக்கின்றார்
இறைவனுக்கு ஏன் விளக்கு ஏற்றுகின்றோம் தீபங்கள் ஏன் ஏற்ற சொல்கின்றோம் என்றால் உங்கள் உடம்பில் இப்படித்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அர்த்தம் என்று மேலும் மனிதர்கள் நம் உடம்பிற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி குருநாதர் கூறி இருக்கின்றார் அந்த வாக்கினை மேலும் மீண்டும் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள முடியும்)
இதைத் தன் உணர நிச்சயம்... உங்கள் மனதில் பின் எப்படி.. விளக்கு அழகாக எரிய வைப்பீர்கள் என்பதையெல்லாம்.. சித்தர்கள் செப்புவார்கள்.உங்களுக்கு!!!
தயாரித்து விட்டான் அகத்தியன்.
ஆனால்.. அதை பின் நிச்சயம்.. பின் நெருப்பு ஊட்டுகின்ற பொழுது மாயை.. வந்து அனைத்திலும் தடுக்கின்றதல்லவா!!
அவை புகுத்துபவன்... கலியவன்.
(கலி புருஷன்)
அதை விலக்குவது யாங்களே!!!
நிச்சயம் இக்கலி யுகத்தில் கலியவன் சரியாகவே.. புரிந்து வைத்திருக்கின்றான்.
மாயையை மனிதனுக்கு இட்டால் பின் நிச்சயம்.. அதை வெல்ல முடியாது...
ஏனென்றால் கலியனை வெல்லக் கூடாது என்று!!
(கலிபுருஷன் யான் தான் இங்கு ராஜா மனிதர்களுக்கு ஆசைகள் என மாயையை கொடுத்து விட்டால் மனிதர்களால் தன்னை வெல்ல முடியாது என்று )
நிச்சயம் அறிந்தும் இதை கூட நிச்சயம் கருணை வடிவான... ஈசனே... இவந்தன் தவத்திற்கு.. கொடுத்து விட்டான்.
(கலிபுருஷன் தவம் இருந்து ஈசனிடம் வரம் வாங்கி விட்டார் ஈசனும் கருணையோடு கலி புருஷனுக்கு வரம் தந்து விட்டார் ஏனென்றால் இதைப் பற்றி ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார் கலியுகத்தில் கலியின் ஆட்டம் தான் அதிகம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு சக்தி அந்த யுகத்தினை இயக்கும் கலியுகத்தில் கலியின் சக்தி அதாவது மாயையின் சக்தி அனைவரையும் இயக்குகின்றது)
ஈசனும் நினைத்துக் கொண்டிருக்கின்றான்..
சற்றுப் பொறுத்திருந்தால் அனைத்தும் விடிவெள்ளியாகும்.
அறிந்தும் இதனால் தான் இன்னும் பலமாக அதாவது நீங்கள் கேள்விகளை நிச்சயம் உங்கள்.. மனதிற்குள்ளே வையுங்கள்!!
நிச்சயம் அனைத்தும்.. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது.. புரியும் அனைத்தும்.
குற்றங்கள் இல்லை!!
அழகாக யான் சொல்லியதை எடுத்துக்காட்டுங்வ(பிருகு மகரிஷி சொன்னதை அனைவரும் செய்ய வேண்டும்
நிச்சயம் சித்தர்கள் அடுத்தடுத்த வாக்குகள் தெளிந்து புரிந்து வைப்பார்கள்.
அறிந்தும் புண்ணியங்கள் தேடிக் கொள்ளுங்கள்!! இன்னும்.. நிச்சயம் மீதி அறிந்தும்.. அறிந்தும் எவை என்று கூற நினைத்துக் கொண்டே இருங்கள்...
அம்மையை அறிந்தும் வடிவமாக !!
(பார்வதி அன்னையை நினைத்துக் கொண்டு புண்ணியம் செய்து கொண்டே இருங்கள்)
பின் இவ்வாறாகவே... சில புண்ணியங்கள் செய்தால் நிச்சயம்.. பின் தானாகவே சித்தர்கள் வந்து வாக்குகள்.. செப்புவார்கள்..
இதை சரியாகவே... புண்ணியங்கள்.. காலங்கள் புண்ணியங்கள் சம்பாதிக்கும் நேரம் இது.
அழகாக எம்முடைய ஆசிகள்.. இன்னும் வாக்குகள் பரப்புகின்ற பொழுது புரியும்.
இவை என்று புரிய இதை என்று அறிய நிச்சயம் எவை என்று அறிய.. எவ் நேரம் என்றெல்லாம் நிச்சயம் யாங்கள் .... இல்லை.
(எங்களுக்கு காலம் நேரம் சூழ்நிலை எதுவும் கிடையாது யாங்கள் நினைத்த நேரத்தில் வந்து வாக்குகள் செப்புவோம்)
அடியவருடைய கேள்விக்கு பிருகு மகரிஷி உரைத்த வாக்கு
குருவே கலிபுருஷனுக்கு அவருடைய பக்தி தவத்தின் வலிமையாக ஈசன் வரம் தந்து விட்டார்.....
பக்தர்களாகிய நாங்களும் பக்தியை செலுத்திக் கொண்டே இருக்கின்றோம் அனைவருடைய வாழ்க்கையும் எப்பொழுது மாறும்????
பிருகு மகரிஷி.
அறிந்தும் எவை என்று புரிய... எவை மாற வேண்டும்???
அனைத்தும் மாற்றம் அடைய செய்து விட்டான் அகத்தியனே!!
மாற வேண்டும் மாற வேண்டும் என்று இப்படியே இருந்தால்.. வாயில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்..
மாறிவிட்டது என்று சொல்லுங்கள் அனைத்தும் மாறும்!!
மறந்துவிடாதீர்கள் எங்கள் பின்னே தான் வந்து கொண்டே இருக்கின்றீர்கள்... உங்களுக்கே இப்படி என்றால்????
மற்றவர்களை எண்ணிப் பாருங்கள்!!!
(சித்தர்கள் வழியில் செல்பவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் பக்தியை சரியாக கடைப்பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்)
அறிந்தும் நீங்களும் சொல்லலாம்!!
உங்கள் பின்னால் வராதவர்கள் எல்லாம்..(சித்தர்களைப் பின்பற்றி வராதவர்கள்) நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று...
ஆனால் அவர்களுக்கு வரப்போவது..?? என்னவென்று??? நிச்சயம் யாங்களே உணர்வோம்.
இவை என்று அறிந்து புரிந்துகொண்டு நடக்க நன்று!!!
அடியவர்... குருவே இதை புரிந்து கொள்வதற்கு புத்தியும் அறிவையும் தாருங்கள்!!!
எதை இதை என்று யாம் அறிவோம்!! இதை நீங்கள் கேட்பீர்கள் என்று...
யாமே முன் உரைத்தோமே... சந்திரன் நிலையை பற்றி..
இதை ஏன் உங்கள் மனதிற்கு படவில்லை????
அடியவர்
குருவே மன குழப்பங்கள் அதிகமானதால் புரிந்து கொள்ளும் சக்திகள் எங்களுக்கு குறைவு சக்தி வேண்டும்!! புத்தி வேண்டும்.
இதை சொல்லவே!!! இதை தெரிவித்துக் கொண்டே வருகின்றோமே!!!
(ஒவ்வொன்றாக உங்களுக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை வாக்குகளில் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோமே)
அடியவர் குருவே எவ்வளவு வணங்கினாலும் பக்தியை நாங்கள் செலுத்தினாலும் மனம் குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது
பிருகு மகரிஷி:
அறிந்தும் இப்படித்தான்.. சித்தன் நிலை பைத்திய நிலையே.... ஆனாலும் அறிந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டால்.. மட்டுமே!!
(உண்மை பொருளை கண்டறிய வேண்டும்)
முதலில் இருந்தே எடுத்து வந்தேன்!! நீங்களும் முதலில் இருந்தே வருகின்றீர்களா என்ன????
அனைத்து சித்தர்களும் வெவ்வேறு கருத்துகளாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது... அனைத்திலும் கடைசியில் பார்த்தால் ஒன்றே!!!
ஆனாலும் நீங்கள் தான் குழப்பிக் கொள்வீர்கள்.. பின் அங்கு அப்படி இங்கு இப்படி... எங்கு ஏது எவை என்று.. அறிய!!!
(அனைத்து சித்தர்களின் வாக்குகளும் ஒரே கருத்தை ஒரே உபதேசத்தை வலியுறுத்தும்)
குழப்பங்கள் அறிந்தும் புரிந்தும் அறிய... சரியான வழியிலே நிச்சயம் அகத்தியன் சொல்லியிருந்தாலும்.. அதைக் கூட தட்டிக் கழிக்கும்... பாவங்கள்!!
(குருநாதர் அகத்தியப் பெருமான் வழிமுறைகளை சொன்னாலும் அதை புரிந்து கொள்வதற்கும் செய்வதற்கும் தடுக்க பார்க்கும் மனிதருடைய பாவங்கள்)
அடியவர் குருவே இதிலிருந்து மீள்வதற்கு சக்தியை கொடுங்கள்.
பிருகு மகரிஷி
அப்பப்பா!!!!!! அறிந்தும் அனைத்தும் தெரிவித்து விட்டேன்!!
இதை எவை என்று அறிவிக்க!!! நிச்சயம்.
உங்கள் பாதை ஏன்? எதற்கு???.. எதை .. எவற்றிற்காக???வந்தீர்கள் ??? இதையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம்... இவையெல்லாம் கேட்கவே மாட்டீர்கள்.. தயங்குவீர்கள்.
அறிந்தும் இதனால் இதை அறிந்து தெளிவு பெற இன்னும் மாற்றங்கள்.. நடந்த வண்ணம் !!
அறிந்தும்... எப்படியும் எங்கள் ஆசிகளோடும் உங்களை காக்குகின்றோம் அறிந்தும்.
இன்னும் தத்துவங்கள் என்னனென்ன?? ஏது?? என்று... சித்தர்கள் பின் வாக்குகள் ஈகின்ற பொழுது.. அழகாக புரியும்... புரியும்படி அதை நடத்திக் கொண்டாலே... போதும் பின் குழப்பங்கள்.
குழப்பங்கள் குழப்பங்கள் பின் நீண்டு கொண்டே போனால்....அவ் குழப்பங்களே உங்களை கொன்றுவிடும்.
அறிந்தும் எதை என்று புரிந்தும்
நிச்சயம் பின் அனைத்திற்கும்... நல்லதே நல்லதே என்று சொல்லிக் கொண்டு போனாலே.... நல்லது நடக்கும் என்றெல்லாம் நிச்சயம்.
(நடப்பதெல்லாம் நல்லதற்கே என்று)
பாவத்தின் சம்பளம் என்பது குழப்பங்களே!!
அதனால் நிச்சயம் இன்னும் இன்னும் பின் இறைவன் கொடுத்திருக்கின்றான்... அதை வைத்து வாழ்ந்து வருவோம் என்று.
(மனிதர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இறைவன் கொடுத்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு பேராசைப்படாமல் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று நடக்க வேண்டும் இப்படிப்பட்ட எண்ணத்தில் இருந்தாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு என்று எண்ணிக் கொள்ள வேண்டும் இதனால் புண்ணியங்களும் ஏற்படும்)
நிச்சயம் வெற்றி உண்டு !!என்று எண்ணிக் கொண்டு சென்றாலே... புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பாவம் செய்வதும் நிச்சயம் பின் புண்ணியம் செய்வதும்... நிச்சயம் உங்களிடத்திலே..
சொல்லி அறிந்தேன்!!
என் செல்ல குழந்தை லட்சுமி தேவியின் அருளும் பரிபூரணமாக லட்சுமி தேவியின் இன்னும் பின் பரிபூரணமாக ஆசிகள் கிடைக்கும் பொழுது வந்து கொண்டே இருக்கும் சென்று கொண்டே இருக்கும் .. எதை என்று புரிய!!!
(செல்வம் தன லாபம் பணம்)
அவ்வாறாக வந்து கொண்டே சென்று கொண்டே இருந்தால் நிச்சயம் பின் உங்களை எப்பொழுதும் பின் பாவம் அண்டாது!!!
புண்ணியமே அண்டி கொண்டிருக்கும்.. நிச்சயம். பின் எவை என்று கூற
(பணங்கள்) பின் வந்து கொண்டே அதை சேர்த்துக் கொண்டே நிச்சயம் தன்னில் கூட. இருந்தால். நிச்சயம் எவ்வாறெல்லாம் உண்மைகள் என்றெல்லாம் .. அவை தன் ஒரு பூரணமாக நிச்சயம் பரிபூரணமாக நிச்சயம் ஒரு நாள்
நிச்சயம் பின் மருத்துவ செலவிற்காக இடவேண்டும்.. நிச்சயம் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தி நிச்சயம் பின் சித்தர்கள் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி!!!
(தனலட்சுமி என் அருளால் அனைவருக்கும் பண வரவு வரும் பொழுது பணம் வரும் போகும் அதை சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது கடைசியாக பெரிய மருத்துவச் செலவிற்கு வழி வகுத்து விடும்.. பணங்கள் வரும்பொழுது நேர்மையாக தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தனலட்சுமி அருள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்)
ஏது எதை என்று புரிந்தும் உண்மை நிலையை அறிந்தும் நிச்சயம் பின் எவ்வாறு என்பதையெல்லாம் ஏன் உங்களுக்கு? செப்ப வந்தேன் என்பதையெல்லாம் நீங்கள் பிள்ளைகளே!!! அறிந்தும்!!!
இதனால் நிச்சயம் யாங்கள்... பாதுகாப்போம்!!!
ஆனாலும் அனுபவித்து... (தீர்க்க வேண்டும்) சித்தர் வழியில் வருபவர்களுக்கு அனுபவித்து தீர்க்க வேண்டும் ஏனென்றால் எவை பின் எப்பொழுது அவை சாபங்கள்... மீண்டும் வரக்கூடாது.
என்பதற்கிணங்க... அனுபவித்தே தீர்க்க வேண்டும்.
ஆனாலும் எங்கள் துணை !! அதை கடப்பதற்கு உங்களுக்கு தெரியாமலே!!! ஏதோ சில மனக்குழப்பங்களாகவே போய்விடும்.
நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இல்லாவிடில் நிச்சயம் ... எவ்வாறெல்லாம்?? பின் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் ... நிச்சயம் பின் கலியுகத்தில்.. தெரிந்ததே.... தெரிந்த விஷயமே!!!!
இவ்வாறெல்லாம் நடப்பது.. நன்றன்று பின் பிறப்பது பிறப்பென்று நிச்சயம் பின் வந்தது வந்ததென்று... எவை என்றெல்லாம் நிச்சயம் பின் ... வகுப்பது பின் கழிப்பது.. பின் கூட்டுவது பின் பெருக்குவது.. எதை என்று எதை தீர்மானிப்பது?? என்றெல்லாம் பின் உடம்பிற்குள்ளே அனைத்தும் இருக்கின்றது..
ஒவ்வொரு நேரத்திலும் கூட்டுவது கழிப்பது பின் பெருக்குவது எதை என்றெல்லாம் நிச்சயம் அவையெல்லாம்.. நிச்சயம் இயங்குகின்ற பொழுது சரியாகவே நிச்சயம் உங்களுக்குள்ளே ஒளி தோன்றும்!!!
அவை தன் பரிசுத்தமான ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன் பிள்ளைகளே
பிள்ளைகளே நன்கு ஆராய்ந்து இதை உண்மைதனை பின் புரிந்து கொண்டு நிச்சயம் தன்னில் கூட வழி நடந்தால் நிச்சயம் அப்பொழுது கிட்டும் எதை என்று கூற சில யோகங்கள்...
ஆனாலும் எப்பொழுதும் எவை என்று கூற இன்னும் சித்தர்களை வணங்கி வணங்கி .. இப்பொழுது இவ்வாறாகவே குழப்பமாகி போய்க் கொண்டிருக்கின்றது... வாழ்க்கையின் தத்துவத்தை கூட உணராமல் .. நிச்சயம் இவ்வாறு என்பதையெல்லாம் .. புரியாமல் நிச்சயம் வீழ்ந்து நிச்சயம் தாழ்ந்து தாழ்ந்து நிச்சய நிச்சயம் மீண்டும் குழப்பங்களாக ... எவ்வாறு வாழ்வது??? எதை என்று தீர்மானித்து!!...
தீர்மானித்தாலும் அவை பின் செயல்படவில்லையே.. என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.
இதனையென்று நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அவ்வாறாக இவ்வாறாக..
எதை என்று கூறஇவ்வாறு போகலாமா பின் அவ்வாறு நடக்குமா..
என்பதையெல்லாம் பின் சிந்தித்து செயலாற்றுவதற்கு வாழ்க்கையில் பல தொல்லைகள் வந்து விடுகின்றது..
நிச்சயம் அத் தொல்லைகளை எவ்வாறு நீக்குவது??
என்று தெரியாமல் மீண்டும் எதை என்று அறிய அறிய பின் மீண்டும் குழப்பங்கள்... தெரிந்தும் தெரியாமல் இருந்தும் அறிந்தும் எவை என்று புரிந்தும் கூட நிலையில் இருந்தாலும் மீண்டும்.. எதை என்று கூற.
ஆனாலும் இவை தன் நன்கு உணர்ந்து கொண்டார்கள் சித்தர்கள்.
அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..
அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..
. எதை என்று துன்புறுத்த கலியவன் முயற்சி செய்து கொண்டே இருக்க.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் பின் நீக்க நிச்சயம் பல வகையிலும் உங்களுக்கு பின் வாய்ப்பாடாகவே ( வாக்கில் பரிகாரம்) நிச்சயம் தன்னில் இதை என்று கூற இப்பொழுது... சொல்லிவிட்டேன்.
அதை சரியாகவே தீர்மானித்து நிச்சயம்.. அப்பனே அறிந்தும் இவை என்று புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின்.. எதை என்று அறிய அறிய
அப்பனே என்றெல்லாம் நிச்சயம் அகத்தியன் பின் பரிபூரணமாக ஆசிகள்...
பரிபூரணமாக ஆசிகள்... பின் செல்ல குழந்தைகள்... எப்படி வாழப் போகின்றீர்கள்??? என்பதையெல்லாம்... செல்லமாகவே நிச்சயம் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் நிச்சயம்!!!
ஆனாலும் ஏன் எதற்கு பின் செல்லமாக ???... அப்பனே வந்து விட்டீர்களே நிச்சயம்.. கர்மா உலகத்தில் நிச்சயம் தன்னில் கூட...
எவ்வாறு அனுபவிக்க போகின்றீர்கள்?? நீங்கள் பாவங்களை... என்றெல்லாம்!!!
அகத்தியன் இதனால் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் பின் மறுபடியும்.. மறுபடியும்...
(குருநாதர் அகத்திய பெருமான் கருணையோடு ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே அப்பனே அப்பனே அப்பனே அம்மையே அம்மையே தாயே என்றெல்லாம் சொல்வதன் மகத்துவம் நம்மீது குருநாதருக்கு இருக்கும் பாசம்)
இதை உணர்ந்து கொள்ள என்றெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து. குழந்தைகளுக்கு..
ஆனாலும் மீண்டும் பின் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும்.. செய்வது பின் தவறே அறிந்தும் புரிந்தும்!!
ஆனாலும் அத் தவறையும் கூட திருத்தி திருத்தி... உங்களை மேற்கொண்டு நிச்சயம் குறிக்கோளாக... அழைத்துச் சென்று நல்வழி பாதையிலே இவை தன் நிச்சயம் பின்... அகத்தியன் செய்வான்.
எம்முடைய ஆசிகள்.. நிச்சயம் கூறுகின்றேன் இன்னும் வாக்குகள்... மறு வாக்குகளில் கூட...
ஆசிகள் ஆசிகள் குழந்தைகளே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.
ReplyDeleteYouTube Link:
பிருகு மகரிஷி அடியவர்களுக்கு உரைத்த பொதுவான உபதேசங்கள் சித்தன் அருள் 1948
https://www.youtube.com/watch?v=GRsZMFseVM4
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!