​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 22 September 2023

சித்தன் அருள் - 1435 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!



31/8/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!!!!!

அப்பனே நலன்கள்!!!!  அப்பனே நலன்கள்!!!!  

அப்பனே நிச்சயம் இறைவன் கொடுத்துக் கொள்ள அப்பனே எதை என்றும் அறிந்தும் அப்பனே பல வழிகளிலும் கூட ஞானத்தை!!!! அப்பனே பெறவே !!!!!!!அப்பனே பின் அதாவது இறைவன் சோதித்து சோதித்து அப்பனே பல வெற்றிகளை அப்பனே நிச்சயம் கொடுப்பான்.

ஆனாலும் அப்பனே அதன் உள்ளே பின் சோதனைக்குள்ளே அப்பனே பின் அடங்கினாலும் அதை வெறுப்பதற்கு ஆள் அப்பனே அதாவது அப்பனே பின் இறைவனை அதாவது இறைவனை நாடிட்டால் ஏதாவது பின் கிடைக்கும்!!!!! என்று கூட இறைவனை எதிர்பார்த்து?!?! எதிர்பார்த்து?!?!? வணங்கி!!!!! வணங்கி!!!!..........

ஆனாலும் சில அதாவது பின் கடைசியில் பின் ஒன்றும்  இறைவனாலும் செய்ய முடியாது என்று எதை என்று கூட மனம் மாறி தோல்வி அடைந்து விடுகின்றான்.

ஆனால் பின் கடைசியில் தான் அதிக அளவு சோதிப்பான்!!!!......... பார்ப்போம்!!.... கடைசியில் நிச்சயம் சோதித்து அனைத்தும் கொடுப்போம் என்று!!.......

ஆனாலும் அப்பொழுதும் கூட இறைவன் பலத்தை அப்படியே அதாவது நிச்சயமாய் இறைவா!!!!!!!!!! நீ தான் அனைத்தும் கொடுக்க வேண்டும்!!!!!!! என்று நிலை இருந்தால் அப்பனே நிச்சயம் உயர்த்தி விடுவார்களப்பா!!!!

அதனால் அப்பனே எப்பொழுதும் கூட அப்பனே பக்திகள் செலுத்தும் போது சில வினைகளால் கஷ்டங்கள் வரலாம்!!!!

ஆனாலும் அப்பனே அதை எதிர்த்து எதிர்த்து மீண்டும் மீண்டும் அப்பனே இறைவனிடையே அப்பனே சரணாகதி அடைந்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் மாறுமப்பா!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய பல வாக்குகளிலும் கூட யான் தெரிவித்து விட்டேன் அப்பனே.... பல சித்தர்களும் கூட!!!!........

அப்பனே இறைவனை நெருங்க!!!!! நெருங்க!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!! 

சூரியனை நெருங்க நெருங்க!!!!! அப்பனே நெருங்க!!!...... முடியாதப்பா!!!!! 

ஆனாலும் அப்பனே!!! எதை என்று அறிய அறிய நெருங்க!!!!! நெருங்க !!!அப்பனே எப்படி? சுடுவான்!!!!!!!! என்பதை கூட அனைவருக்கும் தெரிந்ததே!!!!!!! 

ஆனாலும் அது போலத்தான் இறைவனை நெருங்க நெருங்க அப்பனே எதை என்று அறிய அறிய பல கஷ்டங்கள் எவை என்று அறிய அறிய அறியாமலே புரியாமலே அப்பனே பல இழப்புக்கள்!!!!! இவையெல்லாம் வரும்.

ஆனாலும் அப்பனே அப்படி இருந்தும் நிச்சயம் அப்பனே பின் இறைவன் பாதையை அதாவது கெட்டியாக பிடித்துக் கொண்டு நெருங்கிட்டால் அப்பனே அனைத்தும் வாரி வழங்குவான் இறைவன்!!!!

அப்பனே கலியுகம் அதனால் அப்பனே கலிகம் என்றாலே சோதனை காலம் தானப்பா!!!! அனைவருக்கும் சோதனைகள் தான் வரும் என்பேன் அப்பனே!!!! நோய்கள் தான் வரும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அவையெல்லாம் எப்படி??? அகற்றுவது???? என்பதையெல்லாம்!!.... யாங்கள் சொல்வோம் அப்பனே !!!

அதை சரியாகவே கேட்டுணர்ந்து அப்பனே நடந்து கொண்டால் போதுமானதப்பா!!!!! 

அப்பனே இவ்வுலகத்தில் நிச்சயம் வாழ்ந்து விட்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்விதமாகவே அப்பனே போய் அதாவது மோட்ச கதியை அடைந்து விடலாம்.

ஆனாலும் அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் மனிதர்கள் அப்பனே தெரிந்து வாழ வேண்டும் அப்பனே!!!!

என்ன?? தெரிந்து வாழ வேண்டும் ???? 

அப்பனே! இறைவன் பலம்!!!

எப்படி? இறைவனை காணுதல்!!!!

இறைவன் எங்கிருக்கிறான்??

என்பதையெல்லாம் நிச்சயம் தெரிந்து காண வேண்டும் அப்பனே.

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் இப் பெருமான் அதாவது எதை என்றும் அறிய அறிய நாராயணன் பல வழிகளிலும் கூட அனைவருக்குமே ஆசிகள் தந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!! 

ஆனால் ஏன்? ஒருவருக்கு மட்டும்! அப்பனே லாபங்கள்?????????????

இன்னொருவருக்கு கஷ்டங்கள்!!!!!

பார்த்துக் கொண்டிருந்தால் என்பவையெல்லாம்!!!!!

ஆனாலும் அப்பனே!!!நல்லெண்ணங்கள்!!! நற்செயல்கள்!!!பிறருக்கு உதவும் குணம்!!!! 

அப்பனே இவையெல்லாம் இருந்தாலே அனைவருக்குமே அதாவது பெருமான் அப்பனே அப்படியே சென்று கொண்டு இருப்பான் அப்பனே!!!! பின் எதை என்றும் அப்பனே!!!

ஆனாலும்  அவ் ஒளியானது அப்பனே எப்படி ஈர்க்கும்??? என்றால் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் மனதில் எதுவும் இருக்கக் கூடாது!!! பிறருக்கு நன்மை தான் செய்ய வேண்டும்!!!! போட்டி பொறாமைகள் இருக்கக் கூடாது!!!....... இவ்வாறு பெருமானே நீ தான் என்று மனம் பின் எதை என்று அலை பாயாமல் பின் எதனையும் நினைக்காமல் இருந்தால் அவ் சக்தியானது!!!!!! உடனடியாக உந்தனுக்கு கிடைத்துவிடும் அப்பனே!!!

இதனால் அப்பனே உடனடியாக மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா!!!!

ஆனாலும் அப்பனே எதை? எதையோ? நினைத்துக் கொண்டு அப்பனே எதனை? எதனையோ? செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் அப்பனே!!! அவ் ஒளியானது நம் மீது படாதப்பா!!!!! 

இது தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே சரியான வழியில் நீங்கள் வந்தாலே போதுமானதப்பா!!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய பல பேர்கள் அப்பனே எதை என்றும்  உணர்ந்தும் கூட எவை என்றும் அறிய பிற உயிர்களை கொன்று கொன்று குவித்து அப்பனே நாராயணனிடம் வருகின்றார்கள் அப்பனே!!!!

என்ன பிரயோஜனம்????அப்பனே!!!! 

ஆனால் போகும் வழியிலே பல வகையிலும் கூட இன்னல்கள் கஷ்டங்கள் பட்டு ஆனாலும் அப்பனே!!!

இதனால்தானப்பா!!!! பக்தியும் பொய்களானது!!!..... அப்பனே!!!!

இதனால் யான் பின் நாராயணனிடம் சென்று பார்த்து வந்தேன்!!! வரும் வழியில் சில கஷ்டங்கள் துயரங்கள் எல்லாம் வந்து விட்டது என்பது!!!

ஆனால் அப்பனே நீ என்ன?? தவறு செய்திருக்கின்றாய் என்பதை கூட உணரவில்லை!!!!

அதனால் அப்பனே நம்மிடையே என்ன? குற்றம் இருக்கின்றது? அதை காண வேண்டும் முதலில்!!!

அதை நீக்க வேண்டும் அப்பனே!!! அதனை நீக்கிவிட்டு அப்பனே சென்றால் தான் வெற்றி அடையும் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய நாராயணனை தரிசிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய விரதங்கள் அப்பனே!!!! 

விரதம் என்றால் என்ன??????

எதையென்று அறிய அறிய யார் மனதையும் புண்படுத்தாமல் அப்பனே பேசாமல் அப்பனே மவுனம் காத்து !!  இறைவனையே எண்ணிக்கொண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது ஐம்புலன்களையும் அடக்கி அப்பனே அமைதியாக இறைவனை வணங்கி வணங்கி அப்பனே நல் முறையாகவே அப்பனே இவ் மலைக்கு ( திருமலை திருப்பதி) வந்தால்!!!!!

அப்பனே வெற்றிகள் நிச்சயமப்பா !!!!

அவைதன் சில நாட்களல்ல!!!!!

பல நாட்களை பயன்படுத்த நன்று என்பேன் அப்பனே!!!!

(இப்படியான விரதம் எடுத்து பல நாட்கள் கடைபிடித்து பலமுறை இப்படி தொடர்ந்து திருப்பதிக்கு வந்து கொண்டு செய்து கொண்டே இருந்தால் நன்று)

இதனால் இங்குள்ள (ஏழு) மலைகளில் அப்பனே ஒவ்வொன்றும் அப்பனே விசித்திரமானது!!! என்பேன் அப்பனே!!!!

அவ் மலைகளை பற்றியும் கூட வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!

அவ்வாறு அவ் மலைகளில் இருந்து வரும் ஒளிகள் (ஒளிக்கற்றைகள்) அப்பனே அப்படியே படுமப்பா!! சுத்தமாகவே இருந்தால்!!! 

ஆனாலும் அப்பனே எப்பொழுதும் கூட சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே நிச்சயம் ஒரு உயிரை கொல்லலாகாது !!!!!சொல்லி விட்டேன்!!!!அப்பனே!!!! 

அப்படி இருந்தால் உடனடியாக மாற்றம் ஏற்படுவது உறுதியப்பா!!!!

ஆனாலும் அப்பனே இன்னொரு தத்துவத்தையும் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே நல்லோர்கள் எவை என்றும் வெறுத்து!!! வெறுத்து !!!!  (வாழ்க்கையில்) ஆனாலும் உயர்வார்களப்பா!!!

தீயோர்கள்!!!! திடீரென்று மாற்றம் அப்பனே ஆனாலும் எதை என்றும் ஆனாலும் அவ் மாற்றங்கள் சிறிதளவே என்பேன் அப்பனே!!!

அப்பனே அனைவருமே எவை என்று கூட பின் புண்ணியங்கள் பாவங்கள் செய்ததற்கு தக்கவாறே அனைத்தும் நடக்கிறது அப்பனே!!!

அவ்வாறு புண்ணியங்கள் செய்து வந்தால் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் கிட்டுமப்பா!!!!

இதனால் அப்பனே வரும் காலங்களில் அப்பனே அதாவது பெருமான் எங்கு? ஒளிந்து இருக்கின்றான்? என்பதைக் கூட யான் சொல்வேன் உங்களுக்கு அப்பனே!!!!!! 

சரியாகவே நீங்களே பார்த்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!

ஆனால் அதற்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் குணங்கள் சரியில்லையப்பா!!!!

அவ் குணத்தை எதை என்று கூட நல் வழிப்படுத்தி அப்பனே அனைவரும் தன் அனைவரையும் தன்னை போன்றே எண்ண வேண்டும் அப்பனே!!!!

அனைவருமே சொந்த பந்தங்கள் எவை என்றும் அறிய அறிய எண்ண வேண்டும்!!! அப்பனே!!!

போட்டி பொறாமைகள் அப்பனே நிதானம் இவை எல்லாம் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே போட்டி பொறாமைகளை அறவே நீக்க வேண்டும்!!!

அப்பனே நிதானம் தேவை!!!

அப்பனே!!! சாதிப்பதற்கு எவை என்று கூட நிதானம் தேவை!!!! அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைவரும் சமமே!!!

அப்பனே அனைத்திற்கும் அப்பனே பொறுத்துக் கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய மற்றவன் எதை என்று எதைச் சொன்னாலும் அப்பனே பின் கொன்றாலும்!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! பல வகையிலும் மாற்றங்கள் உண்டு என்பதற்கு இணங்க!!!

ஆனாலும் அப்பனே அதாவது இவ் நாராயணனை பற்றி அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இப் பிறவியிலேயே நடந்தது தானப்பா!!!!! எதை என்றும் அறிய அறிய அதாவது இப்பொழுதே!!!!

ஆனாலும் சில சில அதாவது பல வருடங்களுக்கு முன்பே!!! அப்பனே!!!!

ஒருவன் அவந்தனுக்கு எதை என்று கூட தாய் தந்தையை இழந்து விட்டான்!!!

ஆனாலும் அப்பனே எப்படி வாழ்வது? என்பதை தெரியாமல்!!!!!!!! அப்பனே இங்கு அதாவது இவ்மலையிலே!!!! மலைக்கு வந்து விட்டான்!!! வந்து அப்பனே எவை என்றும் தெரியாமல் அப்பனே எப்படி வாழ்வது??? என்பது தெரியாமலே!!!!

ஆனாலும் அப்பனே அன்னத்தை இங்கு ஈந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!(திருமலையில் நித்யா அன்னதானம்)

அவ் அன்னத்தை உண்டு விட்டு உறங்குவது!!!!......... ஆனாலும் அவந்தனுக்கும் காசுகள் தேவைப்பட்டது ஏதாவது காசுகள் இருந்தால் ஏதாவது செய்யலாம் என்று.

ஆனாலும் அப்பனே எப்படி எல்லாம் ஆனாலும் அப்பனே ஒன்றை எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது தரிசனத்திற்கு செல்வது நாராயணனை பார்ப்பது அப்பனே பின் இனிப்புகளை(லட்டு) அப்பனே வாங்கிக் கொள்வது!!!

இனிப்புகளை(லட்டுக்களை) எல்லாம் ஒன்றாக சேர்த்து மற்றவர்களுக்கு விற்பான் என்பேன் அப்பனே!!! சரியான விகிதத்திலே அப்பனே!!!

இதனால் அப்பனே இப்படியே செய்து கொண்டிருந்தான் அப்பனே பல வருடங்கள் ஆயிற்று அப்பனே!!!! 

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பல நபர்கள் இவனை பார்த்திட்டு!!!! ஏன்?  எதற்காக? என்றெல்லாம்!!!

ஆனாலும் சொல்லுவான் இவன்!!!! எந்தனுக்கு தாய் தந்தை யாரும் இல்லை ஆனாலும் இப்பெருமான் தான் எந்தனுக்கு தாய்!! தந்தை!! அதனால் இவனையே நம்பி அனுதினமும் பார்த்திட்டு!!!! பார்த்திட்டு!!! எவை என்றும் அறிய எதை என்று கூட இங்கு இருக்கும் நிச்சயம் அன்னத்தை ஈந்து ஈந்து எதை என்றும் அறிய பின் ஈந்தார்கள் பின்...ஈந்தார்கள் என்றால் எவை என்றும் புரிந்து அறிந்து பின் நல்விதமாக அதை மற்றவர்களுக்கும் அதை ஈந்து பின் யான் உண்ணுவேன் என்றெல்லாம்!!!!!

ஆனாலும் சில சில மாற்றங்கள் பின்பு ஏதாவது பின் அதாவது உதவிகள் செய்வது பின்பு இதனால் சிறிய சிறிய தொகைகளும்(சேமிப்பு) கூட ஆயிற்று!!!!

இப்படியே செய்து கொண்டிருந்தான்!!! ஆனாலும் நாராயணனும் பார்த்தான்!!!!

இவன் இப்படி செய்து கொண்டிருக்கின்றானே!!!........... யாருமே இல்லையே!!.......

ஆனாலும் சில உதவிகளும் கூட மனசாட்சிப்படி நடந்து கொண்டான் பின் உண்மையையே பேசினான் இவ்வளவு யான் கஷ்டங்கள் படுகின்றேன்... ஏதாவது பின் இவ்வளவு பின் ரூபாய் கொடுத்து ஏதாவது கொடுங்கள்!!! உங்களால் முடிந்தவற்றை என்பதையெல்லாம்.

ஆனால் இது போலவே நிச்சயம் செய்து வந்தான் ஆனால் பெருமானும் பின் பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் ஒரு நாள் பெரிய மனிதன் வந்தான் ஆனாலும் இவனைப் பார்த்து எதை என்றும் அறிய அறிய இவனால் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று நாராயணன் எண்ணினான்.

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பெரிய மனிதனின் மனதில் நுழைந்து பின் இவனிடத்தில் பேச எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய ஆனாலும் அவந்தனும் நன்குணர்ந்து உணர்ந்து!! உணர்ந்து!! பின் நேராக வந்து!!!!

இதோ!!!!! எதை என்று கூட இத்தனை இனிப்புகள் இருக்கின்றது வாங்கிக் கொள்கின்றீர்களா??? என்றெல்லாம்!!!

நீங்கள் பார்த்தால் மாமனிதராக !!!!..... அதாவது ஏதோ?!! ஒன்று !!!! புகழ்ந்தான்!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய பின் மனம் மகிழ்ந்து பின் ஏன்? இவ்வேலை செய்கின்றாய்???! என்னிடத்தில் வந்துவிடு என்று கூறி!!! ஆனாலும் அழைத்து சென்று விட்டான்.

இதனால் பல வழிகளிலும் கூட நன்மைகள் ஆனாலும் அவ் பெரிய மனிதனுக்கு பல உதவிகளை இவன் செய்தான். நல்ல அறிவாளியாகவே இருந்தான்.

இதனால் எதை என்றும் அறிய அறிய அவனை நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்படுத்தி எதை என்றும் அறிந்தும் எவை என்றும் புரிந்தும் புரியாத அளவிற்கும் கூட எதை என்றும் அறியாத அளவிற்கும் எதை என்றும் புரிந்து புரிந்தும் புரிந்தும் கூட ஆனாலும் உண்மை நிலையை உணர உணர!!!!

இதனால் இவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் ஆனாலும் பல வருடங்கள் மனசாட்சியோடு வாழ்ந்து வருகின்றான் என்று அவ் பெரிய மனிதனுக்கு தெரிந்தது!!!

அவனுடைய நாமத்தையும் சொல்லி விடுவேன் ஆனால் வேண்டாம் இப்பொழுது!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இவந்தனை பின் எதை என்று கூட அதாவது இவ் மாநிலத்திற்கே (ஆந்திர மாநிலம்) அமைச்சராக்கினான் அவன்!!!!!

ஆனாலும் அமைச்சர் பதவியில் இருந்து பல பொருள்களையும் கூட சம்பாதித்தான்!!!! ஆனாலும் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய பல பல வழிகளிலும் கூட எதை என்றும் அறியாமலே சம்பாதித்து சம்பாதித்து பல வழிகளிலும் கூட பின் நிலங்கள் !! இன்னும் வாகனங்கள்!!! இன்னும் எதையெதையோ வாங்கி விட்டான்.

இதனால் நல்விதமாகவே ஆனாலும் இப்படியே பின் எதை என்று கூட இன்னும் உயர்ந்தால் எதை என்றும் அறியாமலே எவை என்றும் புரியாமலே இன்னும் சொத்துக்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசைகள்.

இதனால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் நாராயணனுக்கு நாராயணனுக்கே!!!! இவை தெரிந்தது!!!!!

எவை என்றும் அறிய அறிய ஆனாலும் எவை என்று கூட அவ் அமைச்சர் பதவி கொடுத்தவனை கொல்ல பின் சதித்திட்டம் தீட்டினான்!!!!

அப்பொழுது உணர்ந்தான் நாராயணன்!!!!

ஆனாலும் பின் கொடுத்தவன் எதை என்று அறிய அறிய பின் நாராயணன் பக்தனே!!!!!

ஆனாலும் பின்பு எவை என்றும் அறிய அறிய பின் இவனை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் எதை என்றும் அறியாமலே எவை என்றும் புரியாமலும் அனைத்தும் அழித்து விடுவான் என்று பெருமான் மீண்டும் சோதிக்க!!!!

எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று கூட பின் மறு ரூபத்தில்(மாறு வேடத்தில்) அவன் இல்லத்திற்கே சென்று விட்டான் நாராயணன் !!!!!எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் எப்படியோ சென்றிட்டு ஆனாலும்.....ஏனப்பா??????????  எவையென்று கூட எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட நீ எப்படி இருந்தாய்??????????

உனை யான் மலையில் பார்த்திருக்கின்றேன்!!! ஆனால் இப்பொழுது எப்படி இருக்கின்றாய்!!!!!!!! என்பதையெல்லாம் நாராயணனை மறந்து விட்டாயா ???? என்று மனித ரூபத்தில் அதாவது நாராயணனே போய்!!!!

ஆனாலும் அவந்தனும் எதை என்று அறிய அறிய 

நாராயணனா???????????????

எப்படி எதை என்று அறிய அறிய நான் கஷ்டங்கள் பட்டு!!! பல பல வழிகளில் இன்னல்கள் பட்டு!! வந்தேன்!!! 

இப்பொழுது நீ யார்????? நாராயணன் என்று சொல்லிவிட்டாயா?????

எந்தனுக்கு அனைத்துமே இருக்கின்றது ஏன்? எதை என்று அறிய அறிய எந்தனுக்கு நாராயணன் கொடுக்கவில்லை!!!!!

அதனால் யான் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் யான் சம்பாதித்தது தான் என் உழைப்பினாலே!!!! என்று சொல்லிவிட்டான்.

அப்பொழுதே நாராயணனுக்கு கோபம் வந்துவிட்டது!!!!!!!

அப்படியா!!!!!!!!!!!!!!!..... சரி!!!  பார்த்துக் கொள்வோம்!!!! அதனால் யானும் நாராயணன் பக்தனே!!!!! ஆனால் நீ இப்படி பேசியதில் நிச்சயம் உன்னிடத்தில் இன்னும் எதை என்றும் அறிய அறிய இருக்க எவை என்று கூட யான் சென்று விடுகிறேன் என்று!!!!

ஆனாலும் அவ் மனிதனும் கூட அறிந்தும் பின் சிரித்தான்!!! எவை என்று அறிய அறிய நாராயணன் என்ன செய்யப் போகின்றான்??????? நீயோ ஏழ்மை எதை என்றும் அறிய அறிய என்று!!!!

ஆனாலும் நாராயணன் கோபமாக முறைத்து பின் நீ எப்படி இருந்தாய்?????? பார்த்தாயா என்று!!!!! 

ஆனாலும் யான் எப்படியோ? இருக்கின்றேன்!!!!! நீ முதலில் நன்றாக இருக்கப் பார்!!!!!!!! என்று!!!!

ஆனாலும் நாராயணனும் (திரும்பி) வந்து விட்டான்!!!!!!!!!!!

ஆனாலும் எப்படியாவது விதிவிலக்காக எதை என்றும் அறிய அறிய விதியை எவை என்றும் புரியாமலும் கூட மீண்டும் சோதிக்க ஆரம்பித்து எதை என்று கூட ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொண்டான் நாராயணன் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!கூட... 

இதனால் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் ஆனாலும் நிச்சயம் அனைத்தும் அவந்தனுக்கு தோல்விகளே ஏற்பட்டது!!!

தோல்விகள் ஏற்பட்டு கடைசியில் நிச்சயம் பின் எதை எதை என்று அறிய அறிய எதையுமே அனுபவிக்காமல் பெரிய நோய் ஒன்றையும் கூட அதாவது நாராயணனே கொடுத்திட்டான்!! அதனால் பல துன்பங்களும் கூட!!

அதனால் பின் எவை என்று கூட பல சொத்துக்கள் இருந்தும் எதை என்று புரிய அவன் உடம்பை பாதுகாக்கவில்லை எதை என்று கூட பாதுகாக்கவும் முடியவில்லை!!!! எத்தனை மருத்துவங்கள் மருத்துவர்கள் இருந்தாலும் ஒன்றும்!!!!!!!!......... செய்ய முடியவில்லை!!!!!!

அறிந்தும் அறிந்தும் கூட

ஆனால் கடைசியில் பார்த்தால் அனைத்தையும் இழந்து எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய ஆனாலும் அப்பொழுது ஞாபகம் வந்தது அனைத்தையும் இழந்த பிறகு!!!!......... நாராயணனை நிச்சயம் மூன்று வேளை தொழுதோம்!!!!! நிச்சயம் எதை என்று கூட பின் அன்னத்தை!!!!!...... ஆனாலும் அவனை மறந்திட்டோம் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மீண்டும்  இப்படி ஆகிவிட்டோம் என்று!!!!! மீண்டும் இங்கு வந்தான். (திருமலை திருப்பதி)

இங்கு வந்து எதை என்றும் அறிய அறிய எதை என்று கூற நாராயணா!!!!!! கோவிந்தா!!!!!! போதும்!!......…...... ‌ எதை என்றும் அறிய அறிய ஒன்றுமில்லாமலே இருந்தேன் ஆனால் அனைத்தும் கொடுத்திட்டாய் ஆனால் உன்னை மறந்திட்டேனே!!!!!!

நான் பாவி!!!!!!............ என்றெல்லாம் பின் அழுது புலம்பினான்.

ஆனாலும் நாராயணன் அமைதி காத்தான்.

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் அறியாமல் கூட ஆனாலும் எதை என்றும் தெரிந்தும் தெரிந்தும் கூட!!!

இப்படித்தானப்பா!!!!... சில பேர்கள் இருக்கின்றார்கள்!!அப்பனே எவை என்று கூட !!!!!

அப்பனே நல்விதமாக இறைவனை அப்பனே வணங்க!! வணங்க !! ஏதாவது கிடைத்து விடும் என்று பக்திகள் செலுத்தி செலுத்தி கொடுத்த பிறகு இறைவனையே மறந்து விடுகின்றான் அப்பனே!!!

பல தேவையில்லாத செயல்களை செய்கின்றான்!! என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே பின் நல்லோர்களுக்கும் எதை என்றும் அறிய அறிய இறைவன் மட்டும் இவந்தனுக்கு மட்டும் கொடுக்கின்றான் நம் தனக்கு ஏழைகளாகவே வைத்திருக்கின்றான் என்ற எண்ணமும் கூட!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே நல் மனதாக இருக்க வேண்டும் அப்பனே!!!

""""""" எதை கொடுத்தாலும்!!!!!!! இறைவன் அப்பனே அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அதை!!!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்படி இருந்தால் தான் அப்பனே இவ்வுலகத்தை கடக்க முடியும் அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்படி இல்லையென்றால் நிச்சயம் கடக்கவும் முடியாது ஒன்றும் செய்ய இயலாது அப்பனே!!!

எதை என்றும் அறிந்தறிந்து அதனால் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே இன்னும்!! இன்னும்!! அப்பனே வாக்குகள் சொல்ல எதை என்று கூட காத்து கொண்டிருக்கின்றோம்.

அவையெல்லாம் சொல்லிட்டு பக்குவங்கள் ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் இறைவனை காண வைப்போம் அப்பனே!!!

இதனால் நல் மனதோடு இருங்கள் அப்பனே போதுமானது!!! அப்பனே!! 

யானே அப்பனே பெருமான் எங்கு இருக்கின்றான்???????????? என்பதைக் கூட எப்படி வருவான்???? என்பதைக் கூட!!!...... யான் சொல்லிவிடுகின்றேன் அப்பனே.

அதனால் அப்பனே!! """"""""""பிறவி """"""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!!!!!!

அப்பனே!! ""'"""'"'கண்கள்""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!! 

அப்பனே!! """"""காதுகள்""""""" இறைவன் நாமத்தை கேட்பதற்கே!!!!!!!!!!!! 

அப்பனே!!!!!!  """""""வாய் """""""""

எதையென்றும் அறிய அறிய இறை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

பின் எவை என்று கூட பின் """"""""சுவாசித்தல் """""""""

அப்பனே இறைவனுக்காகவே!!!!!

அப்பனே எதை என்று 

""""""""""""நாவு """""""""""""" அப்பனே பின் இறைவன் கொடுப்பதை தின்பதற்கே!!!!!!!!!!!!!!!

அப்பனே இப்படி இருந்தால் அப்பனே அனைத்தும் பார்த்து விடலாம் அப்பனே!!!!

அப்படி மாறுபட்டு இருந்தால் அப்பனே அழிந்து விடுவாய் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய சில நேரங்களில் நன்றாக இருக்கலாம்!!!............ மற்றவை எல்லாம் வீணாக போய்விடும் என்பேன்!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே !!!!!

அதனால் சித்தர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனிதர்கள் என்னென்னவோ??!!!!!! கண்டுபிடித்தாலும்!?!?!?! அப்பனே ஒன்றும் இல்லாமல் தான் போகும் என்பேன் அப்பனே!!!!!

ஆனாலும் இறைவனை!!!! எங்கு இருக்கின்றான்????? என்பதை யாராவது சொல்ல முடியுமா??? என்றால் நிச்சயம் சொல்ல முடியாது என்பேன் அப்பனே!!!!

அதுபோலத்தான்  இறைவன் அப்பனே எதையென்றும் அறிய அறிய மறைபொருளாக இருந்து கொண்டு அப்பனே 

மறைத்து எதை என்றும் அறிய அறிய அதனால் """மறைக்கும்!! எதை என்றும் அறிய அறிய அதாவது மறைப்பொருளுக்கு அப்பனே மதிப்பு அதிகம்!!!! என்பேன் அப்பனே!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!வெற்றிகள் பெறுவதற்கு அப்பனே யாங்கள் எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே உங்களுக்கு கூட அனைத்தும் கொடுத்து விடுவேன்!!!!! ஆனாலும் அப்பனே அதை நீங்கள் சரியாக பயன்படுத்துவீர்களா?????!!!!!! என்று எங்களுக்கு தான் தெரியும்!!!! 

அதனால் தான் அப்பனே சோதனைகள் கொடுத்து கொடுத்தால் அப்பனே நீங்களும் எவை என்று கூட!!!..........

ஆனாலும் அப்படியே கொடுத்து(வரங்கள்) விட்டாலும் அப்பனே இப்பொழுது பின் எவை என்றும் அறிய அறிய செய்தானே!!!!!!!......... ஒருவன்!!!! அப்படி செய்திட்டு தான் கடைசியில் அழிந்து போவீர்கள்!!!

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யோசித்து!! யோசித்து!! கொடுப்பார்கள் என்பேன்!! அப்பனே!!!

எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய கொடுத்துவிட்டால் மீண்டும் வாங்குவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.

ஆனாலும் அப்பனே ஏதாவது தவறு நடந்தால் அப்படியே எதை என்று கூட """"""""""அழித்தும் """!!!!!!!! விடுவோம் !!!!!! அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய சித்தர்கள் இன்னும் அப்பனே வாக்குகள் பரப்புவார்கள் என்பேன் அப்பனே!!!! 

அனைவருக்குமே பின் எதை என்று கூட நாராயணனோடு ஆசிகள் என்பேன் அப்பனே !!!

ஆசிகள் !!!! ஆசிகளப்பா!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. அண்ணா, விரதம் என்ற தலைப்பிற்கு கீழே உள்ள வரியில் பேசாமல் என்பதற்கு பதிலாக சாமல் என்ற பிழை ஒன்று உள்ளது. அது உங்கள் பார்வைக்கு மேற்கோள் காட்டுகிறேன் நன்றி அண்ணா

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete