வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமான் காட்டுகிற வழியில் நடந்து செல்கையில், அடியேனின் வாழ்க்கையில் சமீபத்தில் சந்தித்த சில நிகழ்ச்சிகளை உங்கள் அனைவருக்கும் "ஓர் உயர்ந்த பாடமாக" தெரிந்து கொள்வதற்காக கீழே விவரிக்கிறேன்.
பல முறை நாடியில் அகத்தியப்பெருமானை சந்தித்து, பலவிதமான கேள்விகளை கேட்டு, அதற்கு அவர் கூறிய பதிலை உங்கள் முன் சமர்பித்திருக்கிறேன். சமீபத்தில், மதுரையில் ஒரு அடியவரின் வீட்டில் அகத்தியப்பெருமான் பொதுவாக்கு கொடுத்ததை கவனிக்கிற சாட்சி பூதமாக அமர்ந்திருந்தேன். திரு,ஜானகிராமன் அகத்தியப்பெருமானின் ஜீவநாடியை வாசித்தார். அடியவரின் வீட்டில் எங்கும் நிற்க இடமின்றி நிரம்பி வழிந்த கூட்டம். அடியேன், சற்று முன்னரே வந்ததால் ஒரு ஓரத்தில் அமைதியாக அமர்ந்து பலரும் கேட்கிற கேள்விகளையும் அதற்கான அழகான பதிலையும் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய் செல் போனில் தன் மகனை தொடர்பு கொண்டு, "உடனே வா! அகத்தியர் நாடியில் வாக்கு கொடுக்கிறார்! உனக்கும் கேட்க வேண்டும் என்று சொன்னாயே!" என்று அழைத்தார்.
அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகன், 15 நிமிடத்தில் நாடி வாசிக்கும் இடத்திற்கு வந்தார். உள்ளே வர இடமின்றி வெளியே நின்ற அவரை, அந்த தாயானவள், பலரை விலகச்சொல்லி வழி கேட்டு மகனை நாடியின் அருகில் அழைத்து சென்று அமரச் சொன்னார்.
இவர் சென்று அமர்ந்ததும், நாடியில் வேரொருவருக்கு வாக்குரைத்துக் கொண்டிருந்த அகத்தியப்பெருமான் அதை நிறுத்திவிட்டு, ஜானகி ராமனுக்கு நாடி வழியாக உத்தரவிட்டார்.
"தற்போது எம் முன்னே அமர்ந்த மகனை எழுந்து பின்னாடி கடைசியில் போய் நிற்கச்சொல்" என்றார். அதை ஜானகி ராமன் கூறியதும், ஒரு நிமிடம் அந்த அறையே அமைதியாயிற்று, மொத்த கூட்டமும், யார் அவன் என்று நோக்கிற்று. வேகமாக வந்து அகத்தியர் முன் அமர்ந்தவன், எழுந்து, "ஏன்க?" என்று நின்று கொண்டே கேட்டார். அவரின் தாயும் அமர்ந்திருந்த அனைவரும் ஜானகிராமன் வாசித்து கூறப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர். அடியேனும்!
"நீ! ஒரு உயிரை கொன்று தின்றிருக்கிறாய்!" என்றார் அகத்தியர்!
"இல்லை, இன்று நான் அசைவம் சாப்பிடவில்லை" என்றான் அவன்.
"இன்று சாப்பிட்டாய் என்று நான் கூறவில்லை. நேற்று இரவு உயிரை கொன்றதை உண்டாய்!" என்று தீர்க்கமாக அகத்தியப்பெருமான் கூறினார். மேலும் "நீ யாம் கூறியபடி சற்று விலகியே நில்!" என்றார்.
அடியேனுக்குள் கோபம் பயங்கரமாக பொங்கியது. என்ன தைரியம் இருந்தால், அசைவம் உண்டுக்கொண்டு, ஒரு மிகப்பெரிய சித்தரிடம், "என் வாழ்க்கை நல்லபடியாக அருள் புரியுங்கள்" என்று கேட்கத் தோன்றுகிறது? அகத்தியப்பெருமானை இவர்கள் போன்றவர்கள் வெறும் சோதிடனாக நினைத்து விட்டார்களா? இவனையும் இவன் குடும்பத்தையும் ஒரு சித்தர் சபிக்காமல் விட்டதே மிகப்பெரிய பாக்கியம். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.
அனைவருக்கும் வாக்கு கொடுத்த பின் கடைசியில் அகத்தியப்பெருமான் இவனிடம், "முதலில் ஒரு உயிரை கொன்று தின்பதை நிறுத்திவிட்டு வா! பிறகு வாக்குரைக்கிறேன்" என்று மறுத்துவிட்டார்.
"சரிங்க! நிறுத்திவிடுகிறேன்!" என்று உறுதியளித்த மனிதன் அடுத்து ஒரு கேள்வியை கேட்டான் பாருங்க! நானே ஆடி போயிட்டேன்!
"எங்க வீட்டுல ரெண்டு வயசு பாப்பா இருக்குங்க! அதுக்கு உடம்பு தேறுவதற்கு டாக்டர் தினமும் ஒரு முட்டை கொடுக்க சொல்லியிருக்காங்க! அது மட்டுமாவது கொடுக்கலங்களா?" என்றான்.
இப்படிப்பட்ட மனிதனுக்கெல்லாம் வாக்குரைக்க வேண்டியுள்ளதே என்று அகத்தியப்பெருமான் நினைத்திருப்பார்!
"உயிர் கொலை புரிவது தவறு என்கிறோம்! அதெப்படியாப்பா, இது சரியாகும்? என்று யோசி" என உரைத்து வாக்கை முடித்துக் கொண்டார்.
சித்தன் அருளில் எத்தனையோ வருடங்களாக அரிய வாக்குகளை அகத்தியரின் அருளோடு உங்களுக்கெல்லாம் சமர்பித்துள்ளேன். அத்தனையும் படித்துவிட்டு, "அகத்தியருக்கு என்ன தெரியப்போகிறது!" என்று இன்னமும் பலவிதமான தவறுகளை செய்யும், அகத்தியப்பெருமானை/மற்ற சித்தர்களை இன்னமும் மறைமுகமாக திட்டிக் கொண்டிருக்கும் நன்றி கெட்ட மனிதர்கள் அனைவருக்கும் இந்த தொகுப்பு சமர்ப்பணம்! சித்தன் சாபத்துக்கு பரிகாரம் கிடையாது. வேறு வழியை பாருங்கள்! உண்மையாக இருந்தால், அகத்தியப்பெருமான் சூழ்ந்து நின்று காப்பாற்றுவார் என்பதற்கு அடுத்த அனுபவம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Agatheesaya Namah! I recently heard that non veg eating was not seen too bad in olden days when they had difficulties finding food and Agathiyar tried to correct even rishis and gods that only practicing vegetarianism brings peace and progress to spiritual growth. I don't know if it is true but proud to be a follower of Agathiyar. Thanks for sharing.
ReplyDeleteThis message is wrong.
Deleteஅகத்தீசாய நம 🙏 இந்த பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙇♂️
ReplyDeleteநாடி படிக்கும் இடங்களில் ஒரு குழு உருவாகி
ReplyDeleteதங்களை சார்ந்தவர்களையே முன் நிறுத்துகின்றனர்
இது எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்துகிறது
தவறு! நாடி வாசிப்பவர் எப்போது, எங்கு செல்லவேண்டும் என்று அகத்தியப்பெருமான் தீர்மானிக்கிறார். ஊர் விட்டு ஊர் வந்து ஓரிடத்தில் அமர்ந்து நாடி வாசிக்கும் பொழுது, ஒரு சிலர் உதவிக்காக அழைக்கப்படுவர். இவ்வளவுக்கும், மதுரையில் நாடி வாசித்த இடத்தில், குழுவில் இருந்த ஒருவருக்கும் வாக்கு கிடைக்க வில்லை. அப்படி என்றால், யாருக்கு வாக்கு உரைத்தார் என்று விசாரித்த பொழுது, வந்து வாக்கு கேட்டு போனவர்கள் யாரையும் அந்த குழுவில் உள்ளவர்களுக்கு தெரிய வில்லை. வேறொன்றையும் சொல்கிறேன். அகத்தியர் உங்களை வேகமாக நெருங்கி வர வேண்டுமென்றால், முதலில் வேண்டியது பொறுமை. சுய கர்மா சுத்தம். சுய பரிசோதனை. குறை கூறுவது எளிது. ஒரு மணிநேரம் நிறுத்தாமல், சத்தம் போட்டு "திருவாசகம்" சொல்லிப்பாருங்கள். அப்பொழுது அதன் சிரமம் புரியும்!
Deleteதிருவாசகம் மட்டுமல்ல எது படித்தாலும் சிரமம்
ReplyDeleteபட்டாத்தான் அருள் கிடைக்கும் நீங்களே நெருங்கி
இருங்கள் நாங்கள் விலகியே இருக்கிறோம்
Agathiyarin "பிள்ளைகளை " அவர் ஒரு போதும் தள்ளி வைக்க மாட்டார். அவர் அருகில் இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு அவர்கள் தகுதியுடையவர்கள் என்று அர்த்தம். நீங்கள் கோவம் இல்லமால் என் இல்லம் வாரும் அப்பா என்று கூப்பிடுங்கள் உங்கள் இல்லத்தில் அகத்தியரின் விஜயம் கிடைக்கும்
Deleteபணிவான வணக்கம் 🙏 நான் 15 ஆண்டுகளாக சைவம் மட்டுமே உட்கொள்கிறேன்.என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தர்ம சிந்தனையுடன் வாழ்கிறேன்.ஆனால் வாழ்க்கை முழுவதும் கடந்த 47 ஆண்டுகளாக இன்னலை மட்டுமே அனுபவிக்கிறேன்.இதற்கெல்லாம் காரணத்தை அகத்தியர் கூற மாட்டார் போலும் இதுதான் கலிகாலம் என்பதோ✍️
ReplyDeleteஜீவ நாடி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் நாடி வாசிக்கும் அகத்திய பெருமானின் மைந்தனையும், அவருக்கு உதவி புரியும் அடியார் களையும் எல்லாவற்றிருக்கும் மேலாக தம்மை வணங்காதவருக்கும், திட்டி ஏசுவோருக்கும் கூட தாயுள்ளத்தோடு அருள் புரியும் தந்தை அகத்திய பெருமானை நிந்திப்பது தவறு.ஜுவநாடி வாசிக்க ப்படும் இடத்தில் அமர்ந்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.
ReplyDeleteOm Agatheesaya Namaha! Podhu vakku is like Bhagvad Gita, for everyone. We should just try to follow that to get his grace. No use of getting angry or frustration. In march 2021, i was shouting at gods with lot of anger and frustration. Next day i got message from janagiraman aiya, he said he would read naadi over phone 2 days later. But due to a distant relative death i couldnt get and was really sad. Then came lot of podhu vakku from so many Gods and siddhas as torrential rain. I got so much satisfaction and happiness. Its how we take podhu vakku.
ReplyDeleteChitra
பணிவான வணக்கம் 🙏 தாங்கள் கூறும் கருத்துக்களை நான் ஏற்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இன்னலான சூழல் இருக்கும். உருவான இன்னலான சூழ்நிலை மாறி நன்னிலை பெற வழி எவ்விடமும் இல்லையே.வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் ஆனால் வேதனை மட்டுமே வாழ்க்கை என்பது உசிதமான செயல் அல்லவே
ReplyDeleteநூற்றுக்கு 90 விழுக்காடு மனிதர்களுக்கு சித்தர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் தெரிவதில்லை.
ReplyDeleteதன் சுய தேவைக்காக மட்டுமே இறையையும் இரையையும் தேட கூடியவன் மனிதன்.
"தேவைக்காக இறைவனை தேடாமல், தேவையே நீ தான் இறைவா என்று இரு" என அகத்தியப்பெருமான் உரைத்திருக்கிறார். இதன் சூட்ச்சுமம் புரிந்தால், சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள் என்பது மனிதர்களுக்கு புரிவதில்லை.
DeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete