​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 28 September 2023

சித்தன் அருள் - 1441 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் இன்று காசியில் இருந்து மஹாளய பட்சத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார். இதை அனைவரும் கடைப்பிடித்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன். அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

இவ் மாதத்தில் அப்பனே வளிமண்டலத்தில் இருந்து  அணுக்களானது புவியை நோக்கி வரும் எதை என்று கூற அதாவது  அவ்அணுக்களானது என்பது அப்பனே ஆன்மாக்கள் என்பேன் அப்பனே!!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் இவ் மாதத்தில் வளிமண்டலத்தில் இருந்து தானாக உதிர்ந்து புவியை நோக்கி வரும் அப்பனே. இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் அதிகம் ராமேஸ்வரத்தில் விழும் என்பேன் அப்பனே !!!

ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி அதிக அளவில் ராமேஸ்வரத்தில் அப்பனே அதனால்தான் அப்பனே இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு என்பேன் அப்பனே!!!

இவ் மாதத்தில் கங்கை காவேரி தாமிரபரணி நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே

இவ் ஆன்மாக்களை மீண்டும் இங்கிருந்து அதாவது புவியிலிருந்து அப்பனே மீண்டும் மேல் நோக்கி அனுப்ப வேண்டும் அப்பனே! இல்லையென்றால் அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுத்து விடும்!!!!

இப்படி மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் அப்பனே!!!

அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி தனை எடுக்கக் கூடாது என்பேன் அப்பனே !!!

அதாவது ஆன்மாக்கள் புவியில் தங்க நேரிட்டால் அப்பனே மனித உடலில் இழுத்துக் கொள்ளும் அப்பனே அதனால் பல கஷ்டங்களும் நோய்களும் ஏற்படும் அப்பனே!!!!! அவ் ஆன்மாக்களை நல்முறையாக மேலே செலுத்த இவ் மகாளய பக்ஷத்திலிருந்து கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அப்பனே அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் அப்பனே. இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும் அப்பனே.

இவைதன் மகாளய பக்ஷ காலங்களில் தொடங்கி அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம் பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்படி என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இவ் கன்னி (புரட்டாசி) திங்களில்தான் இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் பெரும்வாரியாக புவியை நோக்கி வரும் புவியில் இருக்கும் வாயில்லா ஜீவராசிகள் அணுக்களை ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அதனால் தான் அப்பனே உயிரை கொன்று தின்றால் அணுக்கள் மனிதர்கள் உடலில் உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் கஷ்டங்களும் நோய்களும் அதிகப்படியாக வந்து சேரும் அப்பனே.

இதனால்தான் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே!!! இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா!!!!

இவ் மாதத்தில் தான் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது எதற்கென்றால் அப்பனே காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வான் அப்பனே. அவ் ஆன்மாக்கள் இப்புவியில் தங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!! பெருமான் ஆன்மாக்களை மேலே அனுப்பி விடுவான் அப்பனே!!!! ஆன்மாக்களுக்கு நல்ல முறையாக உதவி செய்வான் அப்பனே!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் தன் பந்தங்களை தேடி இவ் மாதத்தில் தான் புவியை நோக்கி வரும் அப்பனே அவை மனித உடலில் சேரக்கூடாது என்பேன் அப்பனே!!!!! அவை சேராத படி அவற்றிற்கு முக்தியை அளிக்க வேண்டும் என்பேன் அப்பனே இதற்கு பெருமான் உதவிடுவான் என்பேன், அப்பனே.

இவ் மாதத்தில் பெருமானை யான் உரைத்தபடி நல்படியாக வணங்கிட்டு யான் கூறியவற்றை செய்து வந்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

இதனைப் பற்றி இன்னும் மார்கழி திங்களிலும் விரிவாக வாக்குரைப்பேன் அப்பனே!!!

பெருமானை இவ் மாதத்தில் நல் முறையாக  விரதம் இருந்து அப்பனே ஏற்கனவே விரதம் எப்படி இருப்பது என்பதை பற்றி உரைத்திருக்கின்றேன் அப்பனே!!!! 

அப்பனே விரதம் என்றால் என்ன எப்படி கடைப்பிடிப்பது என்பதை பற்றியும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

அதன்படி எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும் அப்பனே!!!!

இவ் மாதத்தில் அசைவ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு உடனடியாக அந்த அணுக்கள் ஆனது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே இதனால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே அத்துகளானது மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன். அப்பனே!!!! அப்படி உடலில் ஒட்டிக் கொண்டால் பல நோய்களும் கஷ்டங்களும் வரும்ப்பா!!!

அணுக்களை வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அப்படி ஜீவராசிகளை கொன்று சமைத்து உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே.

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றால் மிகப்பெரிய பாவம் வந்து சேரும்!!!! இதனால் பிறவி எடுத்து பிறவி எடுத்து கஷ்டங்களை பட்டு துன்பங்கள் அடைந்து நிம்மதி இல்லாத நோய்களோடு கஷ்டங்களும் சேர்ந்த பிறவியாகவே போய்விடும் அப்பனே!!

இவ் மகாளய பட்ச காலங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே.

கலியுகத்தில் அப்பனே அதிகப்படியான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் கஷ்டங்களும் வருமப்பா!!!!

யான் கூறியதை என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் அப்பனே இப்படி செய்தால் அவர்களுடைய சந்ததியினர் நல்ல முறையில் வாழ்வார்கள் அப்பா!!

இதனைப் பற்றி அறிவியல் ரீதியாகவும் அறிவியல் வழியாகவும் வாக்குகளாக எடுத்துரைப்பேன் அப்பனே!!!

என் பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

பிறப்பினை வீணாக்கக்கூடாது என்பேன் அப்பனே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் அப்பனே நீங்கள் யான் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் அப்பனே இறைவனை யான் காட்டுவேன் அப்பனே!!!

அப்பனே தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பு எடுத்து!!!! அப்பனே எதற்கப்பா??? பிறவிகள் அப்பனே!!!!

பிறவிகளே வேண்டாம் என்பேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு யான் நல்முறையாக வழிதனை காட்டி என் வழியில் வருபவர்களுக்கு முக்தியையும் மோட்சத்தையும் அளித்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனே!!!!

என் பக்தர்கள் அனைவரும் யான் கூறியதை செய்து வர வேண்டும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

11 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. மகாளய பக்ஷ்ம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்.

    " மகாளயம் ' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.

    இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

    மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

    நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

    அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

    மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

    முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
    2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
    3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
    4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
    5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
    6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
    7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
    8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
    9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
    10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
    11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
    12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
    13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
    14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
    15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

    எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்

    ReplyDelete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Thank You Sir.
    We would be grateful if you kindly tell us the method of fasting or kindly provide us the link of the same by Ahathiya Bhagavan. Thank you once again.

    ReplyDelete
    Replies
    1. Contact 7405361658, he will assist you/explain you in Hindi.

      Delete
    2. Thanks for the reply Only Tamil explanation please.

      Delete
    3. சித்தன் அருள் - 1435 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!

      அப்பனே எதை என்றும் அறிய அறிய நாராயணனை தரிசிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய விரதங்கள் அப்பனே!!!!

      விரதம் என்றால் என்ன??????

      எதையென்று அறிய அறிய யார் மனதையும் புண்படுத்தாமல் அப்பனே பேசாமல் அப்பனே மவுனம் காத்து !! இறைவனையே எண்ணிக்கொண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது ஐம்புலன்களையும் அடக்கி அப்பனே அமைதியாக இறைவனை வணங்கி வணங்கி அப்பனே நல் முறையாகவே அப்பனே இவ் மலைக்கு ( திருமலை திருப்பதி) வந்தால்!!!!!

      அப்பனே வெற்றிகள் நிச்சயமப்பா !!!!

      அவைதன் சில நாட்களல்ல!!!!!

      பல நாட்களை பயன்படுத்த நன்று என்பேன் அப்பனே!!!!

      (இப்படியான விரதம் எடுத்து பல நாட்கள் கடைபிடித்து பலமுறை இப்படி தொடர்ந்து திருப்பதிக்கு வந்து கொண்டு செய்து கொண்டே இருந்தால் நன்று)

      Delete
    4. மிகவும் நன்றி.

      Delete
  5. NANRI AYYANE, GURUVADI SARANAM,THIRUVADI SARANAM
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  7. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1441 , 1179 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!

    youtube link for details

    https://www.youtube.com/watch?v=CoOvUantDSw

    வாக்கு சுருக்கம் :-

    இவ் புரட்டாசி மாதத்தில்
    1.இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு
    2.கங்கை, காவேரி, தாமிரபரணி, நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும்.
    3.கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது, ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் . இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும்.
    4.குருநாதர் வாக்கின்படி புரட்டாசி பௌர்ணமி மறுநாள் பிரதமை திதி ஆரம்பிக்கும் தேய்பிறையில் தொடங்கி , மஹாளய அமாவாசை முடிந்து அடுத்து வரும் வளர்பிறையில் திரிதியை - மூன்றாம் பிறை வரை 18 நாட்கள், குருநாதர் சொல்லிய இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். தான தர்மங்களைச் செய்யவேண்டும். இப்படி முடித்த பின்னர் மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும்.
    5.எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே. இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா.
    6.காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வார்கள். நம் உடலில் சேராத படி நம் முன்னோர்களுக்கு முக்தியை அளிக்க பெருமான் உதவி செய்வர்.எனவே புரட்டாசி மதம் முழுவதும் பெருமாளை நல்படியாக வணங்கி வர வேண்டும்.
    7.புரட்டாசி விரதம் இருக்கும் முறை : - உண்ணாமல் இருப்பது விரதம் இல்லை. முதலில் வாய் பேசாமல் இருத்தலே முதல் வகையான(விரதம்). இதனால் இல்லத்திலே இருந்து கொண்டு சரியாகவே அதிகமாக பேசலாகாது . ( மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்). கோபமும் கொள்ளக்கூடாது. அதனுடனே காமத்தை விட்டு ஒழிக்க வேண்டும். இதுதான் விரதம். மற்றவை எல்லாம் விரதம் ஆகாது.
    8.முன்னோர்கள் அணுக்களை, வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும். ஜீவராசிகளை கொன்று சமைத்து அசைவம் , மாமிசம் உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும். வாழ்நாள் முழுவதும் அசைவம் , மாமிசம் சாப்பிடக்கூடாது.
    9.புரட்டாசி மாதம் நீங்கள் குருநாதர் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் இறைவனை குருநாதர் உங்களுக்கு காட்டுவார்கள் என்று உரைத்துள்ளார்கள்.
    10.புரட்டாசி அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி, அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்.

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete