​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 30 September 2023

சித்தன் அருள் - 1444 - அகத்தியர் அடியவர் இல்லத்தில் உரைத்த பொது வாக்கு!


​​ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, அம்மையே எம்முடைய ஆசிகள் நலங்களாக கூடிக்கொண்டு போகும். போகும் என்பேன் ஆனாலும் சில சில வருத்தங்கள் மனக்குழப்பங்கள் ஆனாலும் இவை எல்லாம் வருவது இயல்பே. இவை எல்லாம் தாண்டி சென்றால் தான் நிச்சயம் பல வழிகளில் கூட உண்மை நிலைகளை பின் அறிந்து அறிந்து அதாவது உண்மை நிலையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் சிறிது அளவாவது நிச்சயம் பின் அதாவது இறைவன் கஷ்டங்கள் கொடுக்காவிடிலும் கூட நிச்சயம் பின் உண்மை நிலையை அதாவது ஞான வழியை நிச்சயம் பின்பற்றல் ஆகாது.

இதனால்தான் நிச்சயம் யானே இருக்கின்றேன். அதனால்தான் வாக்குகள் எப்பேர்பட்ட அதாவது எப்படி பின் கொடுக்க வேண்டும் என்பவை எல்லாம் யான் உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் எவை என்றும் அறியாமலே எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான்கூட எவை என்று அறிய அறிய நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு பின் விதத்தில் உண்மைகள் அதாவது புரிந்து உதவிகள் அங்கும் யான் இருந்து உங்கள் பக்கத்திலேயே கவணித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இதனால் யான் உங்களுக்கு என்ன கூறுவது? நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதனால்தான், சில சில வழிகளில் கூட உண்மை நிலைகள் இன்னும் இன்னும் செல்லச்செல்ல சில சில வழிகளில் கூட கஷ்டங்களை கொடுத்தாகினும் நிச்சயம் எப்படி இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் பக்குவப்படுத்தவே யான் சில சோதனைகளும் செய்தாலும் நிச்சயம் எளிதில் அனைத்தும் கொடுத்து விடுவேன். கவலைகள் இல்லை. ஆனாலும் விதியில் போராட்டங்களும் அறிந்தும் மாறி மாறி வருவது இயல்பு.

அவை எல்லாம் நிச்சயம் மாற்றி அமைத்து மாற்றி அமைத்து பக்குவப்படுத்தி அழைத்து சென்று கொண்டேதான் இருக்கின்றேன். இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.

ஆசிகள் என்பதைவிட எதை என்றும் பொறுத்துப் பொறுத்து அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தைக்கூட யான் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றேன். நிச்சயம் அதனால்தான் அறிந்தும் கூட என் பக்கத்திலேயே இருப்பவர்களைக்கூட யான் கவனித்துக் கொள்ளமாட்டேனா ? என்ன? பின் அவ்நம்பிக்கை உங்களுக்கு இல்லையே…… (நீங்கள் வேண்டி) கேட்டால்தான் யான் சொல்வதா? எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் நீங்கள் கேட்டு பெறத்தேவையே இல்லை.

எதை என்றும் அறிய அறிய எப்பொழுது எங்கு செப்ப வேண்டும்? எதனை செப்ப வேண்டும்? என்பவை எல்லாம் யான் நிச்சயம் வாக்குகளாக ஏன்? எதற்காக இப்பிறவிகள் எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறியாமலும் வந்து விட்டீர்கள். இதனால் நிச்சயம் இப்பிறவியின் ரகசியத்தை எல்லாம் ஓர் நாள் உரைப்பேன். கவலைகள் இல்லை. பின் அனைத்து குருமார்களின் ஆசிகளையும் கூட உங்களுக்கு பெற்றுத் தந்தேதான் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் அறிந்தும் இருப்பினும் சில சில வினைகள் ஆனாலும் மனிதனாக பிறந்து விட்டாலே சில வினைகள் ஏன்? எதற்காக ? என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் ஏதோ ஒர் ரூபத்தில் மனிதனை பின் கவலைகள் (தொற்றிக்) கொள்ளும். ஆனாலும் அதைக்கூட யான் பாரத்திருக்கின்றேன் உங்கள் அருகில் இருந்து. ஆனாலும் அதைக்கூட மறுகணமே நீக்கி உள்ளேன். ஆனாலும் இதனால் பின் எவர்? எப்பேர்பட்டவர்கள்? எதை என்று அறிய அறிய இன்னும் பேச்சுக்கள் இவை எல்லாம் வந்த வண்ணம் (இருக்கும்).

ஏனென்றால் நிச்சயம் உலகத்தில் அறிந்தும் அறியாமலும் கூட பிறந்து விட்டு ஆனால் எப்படி எப்படி எல்லாம் வாழந்தாலும் மனிதனின் பேச்சுக்கள் நிச்சயம் எடுபடாது மனிதன் ஏதோ ஒன்றை குறை கூறியே் சென்று் கொண்டிருப்பான். இதுதான் இவ்வுலகம்.

அவை எல்லாம் நிச்சயம் சாதித்து பின் இருக்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்பவை பின் நம்பி பின் நம் தன் அதாவது கடமையை சரியாக செய்து வந்தால் இதைத்தான் யான் செய்வேன் யார் எதைச்சொன்னாலும், ஆம்
எதை என்று அறிந்து பின் இறைவன் இருக்கின்றான். எந்தனுக்கு பக்க பலமாக இருக்கின்றான். நான் தர்மத்தைத்தான் கடை பிடிக்கின்றேன். இதனால் நல்லதாகவேதான் நடக்கும் என்று யார் ஒருவன் மனதில் எண்ணி, எண்ணி தனக்கு போராட்டங்கள் வந்தாலும் சென்று கொண்டிருக்கின்றானோ அவன் தனக்கு இறைவனே வழிகள் காட்டுவான்.

தர்மத்தின் பின் வழிகள் செல்லச் செல்ல ஆனாலும் குழப்பங்களும் போராட்டங்களும் வரும். இது இயல்பே. அவை எல்லாம் தட்டிச் சென்று பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது பின் ஆறு. ஆறிலே ஆறு எதை என்று அறிய அறிய அதாவது நீர் சரியாக போய்க்கொண்டே இருக்கும். எத்தடைகள் வந்தாலும் பின் அடித்து நொறுக்கிச் செல்லும். அது போலத்தான் பின் தர்மம் செய்யும் பொழுது பின் பல தடங்கல்கள் இன்னல்கள் வரும் பொழுது பின் அடித்து நொறுக்கிச் சென்றால் கடைசியில் இறைவன் பாதையை அடைந்து விடலாம். இதனால் பின் தர்மம் செய்பவர்களுக்குக் கூட சில தடங்கல், தாமதங்கள் , மனக்குழப்பங்கள் எவை என்றும் அறியாமலேயே வரும். இவை எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட எப்படி பட்டு எதை என்றும் அறிய அறிய பின் சென்று கொண்டே இருந்தால் நீரைப்போல நிச்சயம் ஒர் நாள் இறைவனிடத்தில் சரணடைந்து பின் மோட்ச கதி அடைந்து விடலாம்.

இறைவனே அனைத்தும் செய்வான். இதனால் எப்பொழுது பின் வாக்குகள் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் யான் சொல்வேன்.

ஆசிகள் ஆசிகள். அனைவருக்குமே.

அடியவர் கேள்வி:- அன்னை லோபாமுத்ரா எப்பொழுது எங்களுக்கு வாக்குகள் செப்புவார்கள்?

அகத்தியர் வாக்கு:- அறிந்தும் அறிந்தும் அம்மையே எவை என்றும் அறிய அறிய அம்மையே திடீர் திடீரென்று கூற ஆனாலும் அம்மையே நிச்சயம் உண்டு அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே நீயும் மேற்கல்வி படிப்பதற்கு அம்மையே சிறிது சிறிதாக படித்துத்தான் மேல் செல்கின்றாய் அம்மையே. அது போலந்தான் சிறுகச் சிறுகச் சொல்லி அம்மையே அனைத்தும் தெளிவு படுத்துகின்றேன் பொறுத்திருருக்க.

அடியவர்:- மகாகுரு , ஈசனுக்கும், பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் மேலே உள்ள அகத்தியப் பெருமான் இந்த இல்லத்தில வந்து எங்களுக்கு …( இந்த அடியவர் சொல்லி முடிக்கும்
முன்னரே)

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யார் மனது எவை என்று கூற நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே இவை எல்லாம் ஒரு முறை கேள். அனைவரும் கேளுங்கள். நல்விதமாக அனைத்தும் அதிலே தெளிவு. உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டு இருந்தால் யானே உங்கள் இடத்திற்கு வந்து வாக்குகள் கூறுவேன். இதுதான் புண்ணியமப்பா.

அடியவர்:- இந்த பிறவியில குருநாதரின் திருவடியையே (எப்போதும்) சேவை செய்து இருக்க வேண்டும்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கவலையை விடு. அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே. யானேதான் உனை அழைத்தேன். நீயாக வரவில்லை. அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே அப்படித்தானப்பா!!! நீங்கள் என்னை  தேடி வரவில்லை அப்பனை, யான்தான் அப்பனே ஏதாவது ஒரு கஷ்டத்தை (உங்களிடத்தில்) வைத்து என்னிடத்தில் வர வைத்திருக்கின்றேன் அப்பனே.

அடியவர்:- நாங்க கஷ்டத்திலேயே இருந்து விடுகின்றோம்.

அகத்தியர் வாக்கு :- அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் அப்பனே நீக்குகின்றேன். கவலைகள் இல்லை. ஆசிகளப்ப்பா!!!

அடியவர் கேள்வி:- சேவை செய்யும் சமையலில் ஏதாவது குறை உள்ளதா என்று கூற வேண்டுகின்றோம்.

அகத்தியர் வாக்கு:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டு இருந்தேன் அப்பனே. நீங்கள் செய்யும் எதை என்று அறிய அறிய அனைத்திலும் எவை என்றும் புரியாமலும் யான் அருகிலே இருப்பேன் அப்பனே!!!

​ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு!





23/9/2023 புரட்டாசி முதல் சனிக்கிழமை பிரம்மோற்சவம் சமயத்தில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு !! வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி .

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உயர்ந்த பக்தியும் அப்பனே இறைவன்பால் அப்பனே அன்புமே அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இறைவனே!!!!!! அனைத்தும் நீயே!!!! பின் நீ கொடுத்தது அனைத்தும் எவை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் சமர்ப்பணம்..... நீயே கொடுத்தாய்!!!!!!

நீயே எடுத்துக் கொண்டாய்!!!! உந்தனுக்கே அனைத்தும் சொந்தம் என்று ஒருவன் விட்டு விட்டால் அப்பனே அனைத்தும் நல்குமப்பா!!!!

இறைவன் பார்த்து பார்த்து கொடுப்பானப்பா!!!!!

அப்பனே இப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே இப்பொழுது கூட அப்பனே பார்த்தசாரதி என்றே இவன் நாமத்தை அழைத்து அழைத்து அப்பனே தலம்( சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி) அப்பனே மாநகரில் எவை என்றும் அறிய அறிய!!!!!!!

அங்கே அப்பனே பிருகு( மகரிஷி) முனியின் பக்தர்கள் (ஒரு வயதான தம்பதியர்) அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே நன்கு அறிந்து உணர்ந்து உணர்ந்து அப்பனே பெருமானுக்கு அங்கு சேவை செய்து கொண்டிருந்தனர் அப்பனே. 

இன்னும் பின் எதை எதை என்று பின் பெருமானுக்கு என்னென்ன தேவை என்று அழகு பார்த்து நிச்சயம் தன் குழந்தை போல என்று அதாவது எண்ணி !! எண்ணி !! பெருமானுக்கு அப்பனே அனுதினமும்!!!!!!!

ஆனாலும் இவர்களுக்கும் கூட அப்பனே நோய்வாய் பட்டவர்கள் என்று எண்ணி உற்றார் உறவினர் அனைவருமே ஒதுக்கி விட்டனர்!!! பெருமானே நீ தான் சொந்தம் என்று!!!

ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனாலும் அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் எதை என்றும் உணராமலே பெண் குழந்தை ஒன்று நிச்சயம் வீதியில் விட்டு விட்டாள் ஒருவள். 

அவளைப் பற்றியும் சொல்கின்றேன்!!!! ஏன்? எதற்கு? என்பவை எல்லாம் ஆனாலும் இப்படி வீற்றிருக்கும் பெருமானையும் பார்த்து ஆனாலும் வீதியில் இப்படி எதை என்றும் ஒருத்தி வந்து பின் அவ் தம்பதிகள் நம்தனுக்கே குழந்தைகள் பாக்கியம் இல்லை வயதும் ஆகிவிட்டது அதாவது 60, 70 எவை என்றும் அறிய அறிய தம்பதியருக்கு வயதும் ஆகிவிட்டது இனிமேல் பெருமான் இக்குழந்தையும் நம்தனக்கே கொடுத்திருக்கலாம் என்று எண்ணி அதாவது இல்லம் கூட இல்லை!!! வெளியே கூட புஷ்பங்களை விற்பது எவை என்றும் இவை இவை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமலும் கூட இதனால் புத்தகங்களையும் விற்று பெருமான் நாமத்தை அதாவது பெருமான் நாமங்களால் எழுதப்பட்ட புத்தகங்களையும்( விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகங்கள்) விற்று பின் ஆனாலும் அறிந்தும் நம் தனக்கும் வயதும் ஆகிவிட்டது!!!!

ஆனாலும் குழந்தையும் சிறிய வயது ஆகி ஆகி ஆனாலும் இவள்தனும் பெருமான் பக்தி பாடல்களை எல்லாம் பாடி பாடி பரவசம்!!!!!

ஆனாலும் இப்படி குழந்தை யார் என்று தெரியாமல் நம் தனை அம்மை அப்பனாக நினைத்துக் கொண்டிருக்கின்றாளே!!!!!!! இவள்தனக்கு என்னதான் செய்யப் போகின்றோம்?????? நம்தனுக்கும் நோய்கள்!!! இன்றும் அதாவது வயதும் ஆகிவிட்டது நம்தனுக்கும் நோய்கள் நோய்கள் என்று.

ஆனாலும் பெருமானின் ஆசிர்வாதத்தோடு யார் இவளை காப்பார்?????

ஆனால் பக்திமான் பக்திமான் என்றெல்லாம் நிச்சயம் வருகிறார்கள் ஆனால் எதை என்று அறிய அறிய மனது பக்தியில் இல்லையே!!!!! இப்படி எப்படி என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் நிச்சயம் ஒரு முதியவன் வந்து இதனை நிச்சயம் அறிந்தும் அதாவது வயதான கோலத்தில் வந்து ஆனாலும் பின் அம்மையே அப்பனே உனை பலமுறை இங்கு பார்த்திருக்கின்றேன்!!! நிச்சயம் அதாவது பின் ஏழுமலையான் இடத்திற்கு சென்று இவள்தனை விட்டு விட்டால்... அவந்தனே இக் குழந்தையை நிச்சயம் அவந்தன் பார்த்துக் கொள்வான்.... அதனால் அங்கே விட்டு விடு என்று எண்ண!!!!!!! 

சரி!!!!!  யாரோ!!!! சொல்கின்றார்கள் நம்தனும் இங்கே இருக்கின்றோம் அனுதினமும் அதாவது பெருமானுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம்!!!!! இருப்பினும் எமக்கும் ஆசைகள் என்று அதாவது அப் பெண்மணி பின் கணவனிடத்தில் சொல்ல அதாவது எந்தனுக்கும் ஆசைகள்!!!!! உயிர் துறந்தால் அங்கேயே துறந்து விடுவோம் என்று எண்ணி!!!!!

ஆனாலும் அங்கே அழைத்து அழைத்து ஆனாலும் நிச்சயமாய் போகும் வழியிலே பின் அவர்களும் அதாவது எங்கிருந்து எதை என்று அறிய அறிய பத்மாவதி தாய் அலமேலு( மங்காபுரம்) எதை என்றும் அறிய அறிய பின் மங்காபுரம் என்றே!!! பின் அழைக்க எதை என்று கூட அங்கேயே அவர்கள் உயிரை மாய்க்க!!!!!!!!!

ஆனாலும் அக்குழந்தையும் அழுது புலம்பினாள்!!!! என் தாய் தந்தையர் மடிந்து விட்டனர்!! மடிந்து விட்டனர்!!

யாரும் இல்லையே!!!!!! யாரும் இல்லையே!!! என்று அழைத்து அழுது கூக்குரல்  இட்டு!!!!

ஆனாலும் யாரும் வரவில்லை!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் மனசாட்சி எப்படி உள்ளது என்பதை கூட அப்பனே யாருமே வரவில்லை நெருங்கவும் கூட இல்லை!!! அப்பனே இவை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இக் குழந்தை பெருமானே!!! பெருமானே!! நாராயணனே!!! நீ எங்கிருக்கிறாய்??? என் தாய் தந்தையருக்கு எவை என்று அறிய யாருமே இல்லையே !!!! இவை என்று அறிய அறிய என்னையும் காத்துக் கொண்டு!!...........

எந்தனுக்கும் யாரும் இல்லையே!!!! உனைத்தானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!

வா!!!!!!  ஓடோடி வா!!!!! 

என்றெல்லாம்!!!! ஆனாலும் யாரும்??!!!..............

ஆனாலும் பெருமானும் பின் மௌனத்தோடு!!!!...... 

ஆனாலும் நிச்சயம் அதாவது மனித!!  எவை என்று கூற ஒரு இளைஞன் ரூபத்தில் வந்து......

'''' குழந்தாய்!!!!........

எதை என்றும் அறிந்தும் கூட!!!!! யான் உந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்று!!!!!

ஆனால் அக் குழந்தையோ இப்பேர்பட்ட அதாவது யானும் பெருமானை பாடி பாடி துதித்துள்ளேன்!!!

ஆனாலும் பெருமானின் பக்தர்கள் என்று எண்ணி எண்ணி அனைவரும் சேவை செய்கின்றார்கள் ஆனால் இப்படி ஒதுக்கி விட்டார்களே!!!........   என்று!!! 

ஆனாலும் அவ் இளைஞன் யான் இருக்கின்றேன் என்று சரியாகவே அங்கேயே பின் அவர்களை அடக்கம் செய்து விட்டு!!!! அ குழந்தை பார்த்து நீ எங்கு செல்ல வேண்டும் ????என்று!!!

ஆனாலும் பின் அக்குழந்தையும் நாராயணன் இருக்கின்றானே அங்கு மலையின் மீது!!!!(திருமலை) அங்கு செல்ல வேண்டும் என்று!!!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இங்கே அக் குழந்தை வந்து விட்டாள்!!!!! 

ஆனாலும் நாராயணனும் ஏதோ ஒரு  ரூபத்தில் மாறி எவை என்று கூட அதாவது பின் சென்று விட்டான்.

இதனால் அக்குழந்தையும் கூட ஆனாலும் இவள் தனக்கும் கூட கோபம் நாராயணனும் கூட நம் தன்னை காக்க வில்லையே!!!!! ஏன்??  எதற்கு?? எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய ஏன்? எதற்காக? என்றெல்லாம்!!!!!

ஆனாலும் ஏதோ ஒன்றை நிச்சயம் இங்கு செய்யலாம் என்று வருபவருக்கெல்லாம் இங்கே தீபம் எதை என்று அறிய அறிய அதாவது ஓர் இடத்தில் இருந்து தீபம் பெற்றுக் கொள்வது மற்றவர்களுக்கு தீபம் ஏற்றுங்கள் இந்தா!!!!!! எதை என்று அறிய அறிய புஷ்பங்களை கூட இந்தா!!!! எதை என்றும் அறிய அறிய சில சில வழிகளிலும் கூட இன்னும் புகையை அதாவது கற்பூரம் என்கின்றார்களே எதை என்று அறிய அறிய அதையும் கூட அனைவரிடத்திலும் சுற்றி திரிந்து பரந்து விரிந்த இவ் மலையின் மீதே விற்று திரிந்து நிச்சயம் பின்  பிழைப்பிற்காக!!!.. .. 

ஆனாலும் எதை என்று கூட பெருமாளை கண்டு கொள்ளவே இல்லை!!!! எதை என்றும் கூட உன் வேலையை நீ செய்கின்றாய்!!!! என் வேலையை யான் செய்கின்றேன்!!!! அவ்வளவுதான் என்று பெருமானை பார்த்து!!! பார்த்து!!

ஆனாலும் பக்தர் அனைவருமே வரிசையில் நின்று பெருமானை!!........

ஆனாலும்இவள்தனும் பார்த்து அனைவருமே மனசாட்சி உள்ளவர்களா??? என்று!! இவள் தனும்!!

ஆனாலும் நாராயணனை பார்த்து!!!!நாராயணனே!!!!! இவர்கள் எல்லாம் மனசாட்சி படி தான் உன்னிடம் வருகின்றார்களா??? என்பது எனக்கு சந்தேகமே!!!!!!! 

உந்தனை ஏதோ பார்க்க வருகின்றார்கள் அவ்வளவுதான் ஏனென்றால் மனிதன் பக்தியை பற்றி யான் கீழே அதாவது பத்மாவதி தாயார் இடத்திலேயே யான் கண்டு கொண்டேன் இதனால் எப்படி ஏது என்று அறிய அறிய அதனால் நிச்சயம் யானும் சிறுவயதிலிருந்தே உன்னை தான் நினைத்துக் கொண்டிருந்தேன்..

ஆனாலும் நீ எதை என்று அறிய அறிய யான் என்ன செய்கின்றேன் என்று பார் உழைத்து உழைத்து பின் எவை என்று அறிய அறிய எதல என்று புரிய புரிய காசுகள் வந்தால் தான் என்னாலும் எவை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் செய்து கொள்ள முடியும் என்று அதனால் உன் வேலையை நீ சரியாக பார்க்கின்றாய் என் வேலையை நீ சரியாக பார்க்கின்றாய் எதை என் வேலையையும் கூட எதை என்று அறிய அறிய சரியாகவே யான் பார்க்கின்றேன் என்று!!!!

ஆனாலும் இவைதன் உணர உணர ஆனாலும் இப்படியே பின் பெருமான் இப்பெண்மணியை அதாவது இக் குழந்தையை சோதிக்க விரும்பினான்!!!!

ஆனாலும் நேரடியாக வந்து விட்டான்!!!!!

அம்மையே !!உனைதனை இங்கே  யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் யான் காவலாளியாக இங்கு இருக்கின்றேன்!!!! ஆனாலும் நீயும் பெருமானை கண்டு கொள்வதே இல்லை ஒரு நாளும்!!!!!

இங்கு உள்ளே அதாவது இங்கே தான் திரிந்து கொண்டிருக்கின்றாய்!!! ஒருமுறையாவது நீ பார்த்து இருக்கலாமே!! இவ் நாராயணனை!!! என்று!!!

ஆனாலும் அறிந்தும்!!!...எதையென்றும் புரியாமலும் கூட ஆனாலும் குழந்தை ஆனாலும் எவை என்று கூட!!!! 

ஏன்? பார்க்க வேண்டும்??????

அதாவது எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் அதாவது அவ் நாராயணன் அவந்தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!

ஆனாலும் என்னுடைய வேலையை யான் பார்த்தால்தான் யானும் இங்கே வாழ முடியும் இதனால் நிச்சயம் அதனால் தான் சொல்கின்றேன்!

ஏன் பெருமான் உதவிகள் செய்ய மாட்டானா!? என்று!!

ஆனாலும் சிறிதளவாவது யானும் அதாவது இங்கே உட்கார்ந்து பெருமாள் உதவி செய்கின்றான் பெருமான் உதவி செய்கின்றான் பெருமானே!! நாராயணா!! கோவிந்தா!! என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்னுடைய பிழைப்பு அவ்வளவுதான்!!! எதை என்று அறிய !!அறிய!!

ஏதோ சிறிதளவு யான் முயற்சித்தால் பெருமான் ஏதோ பின் அதற்கு நிச்சயமாய் வழி செய்வான். எவை என்றும் அறிந்து அதைத்தான் யானும் செய்து கொண்டிருக்கின்றேன் என்று கூற.

அதனால் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் குழந்தாய்!!!! நாராயணனை ஓர் முறையாவது போய் பார் என்று!!!!!

ஆனாலும் யான் ஏன் போய் பார்க்க வேண்டும்!????

யான் எதை என்றும் அறிய அறிய எந்தனுக்கும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை!!! ஆசைகள் இல்லை!!! இன்னும் எதற்காக வாழ்கின்றோம் ??? என்றும் தெரியவில்லை!!!!!

எதை என்றும் புரியாமலும் கூட யாருக்கும் துரோகம் செய்ததில்லை!!!! அதனால் என் (மனம்) போன போக்கில் அதாவது யான் என்ன எவை என்று அறிய அறிய என் போக்கிலே செல்கின்றேன் அப்பொழுது எதை என்று அறிய அறிய யான் எதை???????? கேட்கப் போகின்றேன்?????? பெருமானை பார்த்து!!!!!!

அதனால் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து தெரியாமலும் கூட அதனால் வந்தால் வரட்டும் எவை என்று கூட!!!!!

அதனால் சிறு வயதில் இருந்தே அவனை நினைத்துக்கொண்டு பல பாடல்களையும் பாடி அவனுக்கே தொண்டுகள் செய்திருக்கின்றேன் அதனால் எவை என்றும் கூட எதை என்றும் அறிய அறிய !!!!

"""""வரட்டும் !!!!!! அவர்.!!! 

எதை என்று புரியாமல் கூட அதனால் யான் ஏன்? எதற்காக? அவரிடத்தில் செல்ல வேண்டும் ?என்று எண்ணி !!எண்ணி!!!

ஆனாலும் பின் நாராயணனும் பொறுத்திருந்து ஆனாலும் இதை என்று அறிய அறிய ஆனாலும் இதற்கும் தாயே காரணம் நாராயணன் தானே!!!!!!

எவை அறிந்தும் அறிந்தும் இவ்வாறு பின் நாராயணனை பார்க்க வந்தவர்கள் தானே உந்தனுக்கு உதவிகள் செய்கின்றார்கள் என்று எண்ணி!! எண்ணி!!

ஆனாலும் நிச்சயமாய் சரி!!! அப்படியா!!!!

எவை என்று அறிய அறிய இனிமேல் இதையும் யான் இனிமேல் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட செய்ய மாட்டேன் அறிந்தும் கூட!!!!

அதனால் எவை என்றும் அறிய அறிய இதனால் நாராயணனின் உதவிகளும் எந்தனக்கு தேவையே இல்லை!!!!!

வேண்டுமென்றால் நாராயணனுக்கு யான் உதவிகள் செய்யப் போகின்றேன் என்று அக்குழந்தையும் கூட!!!

அதனால் நாராயணனும் நாராயணனுக்கே!!!!!!!!!!!!! உதவிகளா !?!?!?!?!?! என்னதான் செய்யப் போகின்றாய் என்று அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் இங்கே அதாவது நாராயணனை சுற்றியுள்ள பகுதிகளில் கூட எவை என்று அறிந்து அறிந்து சுத்தம் செய்யப் போகின்றேன் நிச்சயமாய்!!!!

அதுவே  பின்  நாராயணனுக்கு யான் செய்யும் தொண்டு!!!! ஏனென்றால் இங்கு சுத்தமில்லாமல் என்றெல்லாம்!!!

ஆனால் இதற்காக காசுகள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை நிச்சயம் நாராயணனுக்கே சேவைகள் செய்கின்றேன் என்று!!!!

ஆனாலும் இதனால் நிச்சயம் அங்கே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் அனைத்தும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

ஆனாலும் பின் கேட்டாள் உள்ளே போகலாமா??? என்று!!!! சில சில எவை என்றும் அறிந்தும் கூட சில சில மனிதர்களைக் கூட!!!

ஆனாலும் சில மனிதர்கள் கூட உள்ளே செல்லக்கூடாது என்று!!!!

ஆனாலும் எவை என்று அதன் உள்ளே நாராயணனும் சென்று விட்டான் ஆனாலும் மீண்டும் காவலாளிகளை யான் உள்ளே செல்ல வேண்டும் என்று எண்ணி!!! எண்ணி!!!!

உள்ளே செல்லக்கூடாது!!! நிச்சயம் உள்ளே செல்லக்கூடாது!!!

எவை என்று அறிய அறிய நீ சுத்தம் செய்யும் நீ உள்ளே சென்றால் நாராயணன் அசுத்தமாகி விடுவான்!!!! அதனால் உள்ளே செல்லக்கூடாது என்று 
காவலாளிகள்!!

ஆனாலும் நாராயணனுக்கு வந்தது கோபம்!!! ஆனாலும் சற்று பொறுத்து!!! பொறுத்து!!!

ஆனாலும் எவையென்றும் அறிய அறிய இதனால் மீண்டும் பெரிய பெரிய மனிதர்கள் பின் உள்ளே சென்றார்கள். ஆனாலும் அக்குழந்தையும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுடனே உள்ளே செல்லலாமே என்று எண்ணி அறிந்தும் கூட!!!

ஆனாலும் காவலாளிகள் அவளை அடித்து பின் அறிந்தும் ஆனாலும் மாமனிதர்கள் அதாவது பெரிய மனிதர்கள் கூட அறிந்தும் எவை என்றும் தெரியாமலே பின் அமைதியாக மௌனம் காத்தனர். 

குழந்தை என்று கூட எண்ணாமல்!!...... அறிந்தும் அறிந்தும்!!!......கூட. 

இதனால் அக் குழந்தையும் வயதாகி அதாவது வயதிற்கு எட்டி விட்டது..... இதனால் என்னவென்று செய்வது புரியாமல் ஆனாலும் பெருமானை கூட பார்க்க முடியவில்லை நிச்சயம் பார்க்கத்தான் போகின்றேன் பெருமானே நாராயணனே கோவிந்தா அறிந்தும் கூட உந்தனுக்கு அதாவது எதை என்றும் அறிய அறிய உந்தனை யான் திட்டித் தீர்க்கவில்லை ஆனாலும் உள்ளே சென்று யான் பார்க்கவும் வரவில்லை!!!!!! யான் சுத்தம் தான் செய்யப் போகின்றேன் ஆனாலும் நிச்சயம் எதை என்றும் அறிந்து!!!!!

ஆனாலும் காத்துக் கொண்டிருந்தாள்!!! யாராவது உள்ளே விடுகிறார்களா?? என்று!!!

ஆனாலும் நிச்சயம் விடவில்லை !!!

ஆனாலும் நிச்சயம் ஒரு காவலாளி வந்து இது போலே இவைதன் இக்குழந்தை செய்து கொண்டிருக்கின்றாளே!!!! என்று எண்ணி பின் எவை என்று கூற ஒரு கம்பை எடுத்து அடித்து நொறுக்கி வெளியே செல் என்று!!!!....... ரத்தம் எவை என்று கூட குடம் போலே!!!!.... நொறுக்கி அடித்தான் இதனால் கீழே விழுந்து சாகும் நிலைக்கு சென்று விட்டாள்!!!! அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் வந்தது கோபம் பெருமானுக்கு!!!!!!

நடந்ததை எதை என்றும் அறிய அறிய சென்று பின் அதாவது மீண்டும் இளைஞன் வடிவில் சென்று தெரியாமலும் கூட இப்படி பின் மனசாட்சி இல்லாமல் அடித்துக் கொண்டிருக்கின்றீர்களே!!!! நீங்கள் எல்லாம் காவலாளிகளா???? என்று பெருமானே மாறுவேடத்தில் வந்து!!!!!!

(காவலாளி) 

எதை என்று கூட பின் அவள் தனக்கே யாருமில்லை!!!! அனாதை!!!! நீ அவள் தனக்கு எதை என்று கூட பின் எதை என்று அறிந்து அறிந்த (ஆதரவாக) வந்து விட்டாயா?????

அவள்தனே ஒரு உருப்படாதவள்!!!! நீயும் உருப்படாதவன் தான் என்று நாராயணனை!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!! இப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது புவிதனில் அப்பனே எதை என்று அறிய அறிய பக்திகள் எவை என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன் அப்பனே வாழ்வோம் வாழ்வோம் என்று!!!

ஆனால் இறைவனும் வீழத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே வீழ்வதற்கு எதை என்றும் அறியாமல்!!!

ஆனாலும் சரி எப்படி என்பதைக் கூட ஆனாலும் மீண்டும் பெருமான் பின் எதை என்று அறிய அறிய ஏதோ அக்குழந்தையை கூட நன்றாக கவனித்து பின் சரியாக்கி விட்டான்!!!!

ஆனாலும் பெருமானும் எதை என்று கூட சரி பின் எவை என்று கூட மாயமாக மறைந்திடக்கூடாது..இச் சமயத்தில்...நம்தன். அப்படியே நுழையலாம் என்று !!!!

ஆனாலும் நுழைந்தான் பெருமானைக் கூட அக்காவலாளி உள்ளே விடவில்லை!!!!

யார்??? நீ!!! எதையென்றும் அறிந்தும் அறிந்தும் நீ தரித்தரன் எவை என்று கூட பின் சக காவலாளிகள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர்... இவன் திருடன் எதை என்று அறிய அறிய அடித்து நொறுக்குவோம் என்று!!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய கற்களை வீசினார்கள் பெருமான் மீது!!!

அப்பனே பக்திகள் இதுபோலத்தான் அப்பனே அன்பு பாசங்கள் ஆசைகள் இன்னும் வேண்டும் அவை வேண்டும் இவை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே இறைவன் கண்ணுக்குத் தெரிய மாட்டான்!!!!

அப்பனே இறைவன் திரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!

இறைவனை காண வேண்டும் என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் இறைவன் செயலே என்று எண்ணிக் கொண்டிருக்க அப்பனே அப்பொழுதுதான் இறைவன் கூட கண்ணுக்குத் தெரிவான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதுபோல் அப்பனே இதுதான் பக்திகளா?? என்று!!!

ஆனாலும் அப்பனே மீண்டும் பெருமான் உள்ளே சென்று விட்டான் மறைமுகமாக!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய இதே போலத்தான் சேவையும் கூட!!!!

""" கருட சேவை"""""" அப்பனே எதை என்றும் புரியாமல் அப்பொழுதும் கூட நடந்து கொண்டுதான் இருந்தது என்பேன் அப்பனே!!!!!

(திருப்பதி திருமலையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கருட சேவை நடைபெறும். ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி உடன் புனித நான்கு மாட வீதியிலும் கருட வாகனத்தில் உலா வருவார். வருடத்தில் புரட்டாசி மாதம் வரும் பிரமோற்சவம் போதும் மிகப் பிரமாண்டமாக கருட சேவை நடைபெறும்)


எவை என்று அறிய அறிய இதனால் அப் பெண்மணியும் எதை என்றும் எவை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் கூட ஆனால் உள்ளே விடவில்லை!!

கருட சேவைக்கு அப்பனே பல பக்தர்கள் கூடினர் அப்பனே!!!!

 இவ் (திரு) மலையே ஸ்தம்பித்தது!!!!  எதை என்றும் அறிந்து அறிந்து !!!


ஆனாலும் எவை என்று கூட இப்பொழுது நிச்சயமாய் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பார்க்க!!!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட ஆனாலும் இங்கே எவை என்றும் அறியாமலும் கூட நாராயணனை கூட நிச்சயம் விட மாட்டார்கள் என்று எண்ணி அமர்ந்து கொண்டாள். 

நாராயணா!!! எதை என்றும் அறிய அறிய எந்தனுக்குமே யாருமே இல்லை!!!!!!

இவர்களுக்கெல்லாம் அனைவருக்குமே சொந்த பந்தங்கள் என்றெல்லாம் உள்ளது என்னை யார் பார்ப்பார்கள்!!!!

ஒருமுறை காண்பித்தால் யான் நிச்சயம் மறு நொடியே இறந்து விடுவேன் என்று!!!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அப்பனே அச்சேவை வரும் பொழுது நிச்சயம் அப்பனே எவை என்றும் புரியாமல் கூட அப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட பெருமான் அப்பனே பின் மனித ரூபத்தில் அப்பனே எடுத்து எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று கூட அவளிடத்திற்கு வந்தான் அப்பனே!!!!

அவந்தன் கூறினான் யான் தான் நாராயணன்!!!!! அம்மையே என்று கட்டி அணைத்து கொண்டான்.

உந்தனுக்கு என்ன தேவை??? என்று கூட!!!

அனைவரும் ஆச்சரியப்பட்டனர் எதை என்றும் அறிந்தறிந்து ஓர் ஏழை குழந்தைக்கா???? எதை என்றும் அறிய பெருமான் இவ்வாறு இரங்கியிருகின்றான் என்று கூட அனைவருமே இக்குழந்தையின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டு எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் பெருமானும் கூடகெட்டியாக அணைத்துக் கொண்டு!!!! குழந்தாய் உந்தனக்கு என்ன தேவை?? என்று!!!  இவர்களை என்ன தண்டிக்கலாம் என்று!!!!!

தண்டிக்க வேண்டாம் அனைவருமே தவறு செய்கின்றார்கள் இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் கூட

அதனால் அவரவர் கர்மா அவரவர் அனுபவிக்கட்டும் என்று அக் குழந்தையும் கூட!!

ஆனாலும் உந்தனுக்கு என்ன தேவை என்று கூட

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் உன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணி!!!

ஆனாலும் சரி என்று கூட பின் எவை என்று கூட அக்குழந்தையும் கூட இப்பொழுதும் கூட அருகிலே இருக்கின்றாள் மறைமுகமாகவே உலா வந்து கொண்டிருக்கின்றாள்!!!

அனைவருக்குமே ஆசிகள் தந்து கொண்டுதான் இருக்கின்றாள் பெண்களுக்கும் கூட உயர்வுகள் வாழ்வில் உயர்வுகள் ஏற்பட பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றாள் நலமாகவே!!!

அப்பனே எதை என்றும் புரிய அப்பனே இவையெல்லாம் இன்னும் அப்பனே சொல்லத்தான் போகின்றேன் அப்பனே சொல்லிச் சொல்லி இவ் மலையின் ரகசியங்களை கூட அப்பனே சொல்லப் போகின்றேன் அப்பனே!!!

பக்தி என்பதை கூட அப்பனே இன்னும் இன்னும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்க அப்பனே எப்படித்தான் அப்பனே நலன்கள் ஆகும்????? என்பதையெல்லாம் கூட அப்பனே இன்னும் விவரிக்கின்றேன் அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்கள் அப்பனே வந்து வாக்குகள் செப்பி அப்பனே மனதை மாற்றி அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பல நபர்களைக் கூட கோடி மக்களை எவை என்று அறிய அறிய திருத்துவதற்கு அப்பனே ஒரு மனிதன் போதும் என்பேன் அப்பனே!!!!

அவர்களுக்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே அவர்களை யாங்களே தேர்ந்தெடுப்போம் அப்பனே வாக்குகளை செலுத்தி செலுத்தி அப்பனே மனதை மாற்றச் செய்து அப்பனே அவர்கள் மூலம் எதை என்றும் அறிய அறிய எவர்கள் மூலம் அப்பனே அதாவது இவ்வுலகத்தை கூட மாற்றப்பட வேண்டும் என்று எண்ணி எண்ணி அப்பனே  நிச்சயம் வாக்குகள் செப்பி அவர்கள் மூலம் எடுத்துச் சென்று அப்பனே அனைவரையும் மாற்ற வைப்போம் அப்பனே நல் விதமாகவே ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே!!!

மறுவாக்கும் சொல்கின்றேன் அப்பனே!! ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 29 September 2023

சித்தன் அருள் - 1442 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 28 September 2023

சித்தன் அருள் - 1441 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் இன்று காசியில் இருந்து மஹாளய பட்சத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார். இதை அனைவரும் கடைப்பிடித்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன். அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

இவ் மாதத்தில் அப்பனே வளிமண்டலத்தில் இருந்து  அணுக்களானது புவியை நோக்கி வரும் எதை என்று கூற அதாவது  அவ்அணுக்களானது என்பது அப்பனே ஆன்மாக்கள் என்பேன் அப்பனே!!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் இவ் மாதத்தில் வளிமண்டலத்தில் இருந்து தானாக உதிர்ந்து புவியை நோக்கி வரும் அப்பனே. இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் அதிகம் ராமேஸ்வரத்தில் விழும் என்பேன் அப்பனே !!!

ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி அதிக அளவில் ராமேஸ்வரத்தில் அப்பனே அதனால்தான் அப்பனே இராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு என்பேன் அப்பனே!!!

இவ் மாதத்தில் கங்கை காவேரி தாமிரபரணி நர்மதா கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே

இவ் ஆன்மாக்களை மீண்டும் இங்கிருந்து அதாவது புவியிலிருந்து அப்பனே மீண்டும் மேல் நோக்கி அனுப்ப வேண்டும் அப்பனே! இல்லையென்றால் அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுத்து விடும்!!!!

இப்படி மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் அப்பனே!!!

அவ் ஆன்மாக்கள் மீண்டும் பிறவி தனை எடுக்கக் கூடாது என்பேன் அப்பனே !!!

அதாவது ஆன்மாக்கள் புவியில் தங்க நேரிட்டால் அப்பனே மனித உடலில் இழுத்துக் கொள்ளும் அப்பனே அதனால் பல கஷ்டங்களும் நோய்களும் ஏற்படும் அப்பனே!!!!! அவ் ஆன்மாக்களை நல்முறையாக மேலே செலுத்த இவ் மகாளய பக்ஷத்திலிருந்து கோமாதாக்களுக்கு அகத்திக்கீரை வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிப்பது ஏதாவது அவர்களுக்கு உணவளித்து வந்தால் அப்பனே அவ் ஆன்மாக்கள் அமைதி பெறும் அப்பனே. இயலாதவர்களுக்கு அன்னத்தையும் வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்னம் மற்றும் நீர் வழங்கிடுதல் வேண்டும் அப்பனே.

இவைதன் மகாளய பக்ஷ காலங்களில் தொடங்கி அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம் பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்படி என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இவ் கன்னி (புரட்டாசி) திங்களில்தான் இவ் அணுக்கள் அதாவது ஆன்மாக்கள் பெரும்வாரியாக புவியை நோக்கி வரும் புவியில் இருக்கும் வாயில்லா ஜீவராசிகள் அணுக்களை ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அதனால் தான் அப்பனே உயிரை கொன்று தின்றால் அணுக்கள் மனிதர்கள் உடலில் உடனடியாக ஈர்த்துக் கொள்ளும் கஷ்டங்களும் நோய்களும் அதிகப்படியாக வந்து சேரும் அப்பனே.

இதனால்தான் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றலாகாது என்பேன் அப்பனே!!! இதனால் பெரும் துன்பங்களும் நோய்களும் கஷ்டங்களும் வந்து சேருமப்பா!!!!

இவ் மாதத்தில் தான் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது எதற்கென்றால் அப்பனே காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வான் அப்பனே. அவ் ஆன்மாக்கள் இப்புவியில் தங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!! பெருமான் ஆன்மாக்களை மேலே அனுப்பி விடுவான் அப்பனே!!!! ஆன்மாக்களுக்கு நல்ல முறையாக உதவி செய்வான் அப்பனே!!!

முக்தி பெறாத ஆத்மாக்கள் தன் பந்தங்களை தேடி இவ் மாதத்தில் தான் புவியை நோக்கி வரும் அப்பனே அவை மனித உடலில் சேரக்கூடாது என்பேன் அப்பனே!!!!! அவை சேராத படி அவற்றிற்கு முக்தியை அளிக்க வேண்டும் என்பேன் அப்பனே இதற்கு பெருமான் உதவிடுவான் என்பேன், அப்பனே.

இவ் மாதத்தில் பெருமானை யான் உரைத்தபடி நல்படியாக வணங்கிட்டு யான் கூறியவற்றை செய்து வந்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

இதனைப் பற்றி இன்னும் மார்கழி திங்களிலும் விரிவாக வாக்குரைப்பேன் அப்பனே!!!

பெருமானை இவ் மாதத்தில் நல் முறையாக  விரதம் இருந்து அப்பனே ஏற்கனவே விரதம் எப்படி இருப்பது என்பதை பற்றி உரைத்திருக்கின்றேன் அப்பனே!!!! 

அப்பனே விரதம் என்றால் என்ன எப்படி கடைப்பிடிப்பது என்பதை பற்றியும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

அதன்படி எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும் அப்பனே!!!!

இவ் மாதத்தில் அசைவ உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு உடனடியாக அந்த அணுக்கள் ஆனது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே இதனால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே அத்துகளானது மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன். அப்பனே!!!! அப்படி உடலில் ஒட்டிக் கொண்டால் பல நோய்களும் கஷ்டங்களும் வரும்ப்பா!!!

அணுக்களை வாயில்லா ஜீவராசிகள் அதிகப்படியாக ஈர்த்துக் கொள்ளும் அப்பனே அப்படி ஜீவராசிகளை கொன்று சமைத்து உண்டால் அணுக்கள் எளிதில் மனித உடலில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே.

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே எந்த ஒரு உயிரையும் கொன்று தின்றால் மிகப்பெரிய பாவம் வந்து சேரும்!!!! இதனால் பிறவி எடுத்து பிறவி எடுத்து கஷ்டங்களை பட்டு துன்பங்கள் அடைந்து நிம்மதி இல்லாத நோய்களோடு கஷ்டங்களும் சேர்ந்த பிறவியாகவே போய்விடும் அப்பனே!!

இவ் மகாளய பட்ச காலங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் அப்பனே.

கலியுகத்தில் அப்பனே அதிகப்படியான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் கஷ்டங்களும் வருமப்பா!!!!

யான் கூறியதை என் பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் அப்பனே இப்படி செய்தால் அவர்களுடைய சந்ததியினர் நல்ல முறையில் வாழ்வார்கள் அப்பா!!

இதனைப் பற்றி அறிவியல் ரீதியாகவும் அறிவியல் வழியாகவும் வாக்குகளாக எடுத்துரைப்பேன் அப்பனே!!!

என் பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

பிறப்பினை வீணாக்கக்கூடாது என்பேன் அப்பனே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் அப்பனே நீங்கள் யான் கூறியவற்றை அப்படியே கடைப்பிடித்து வந்தால் அப்பனே இறைவனை யான் காட்டுவேன் அப்பனே!!!

அப்பனே தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பு எடுத்து!!!! அப்பனே எதற்கப்பா??? பிறவிகள் அப்பனே!!!!

பிறவிகளே வேண்டாம் என்பேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு யான் நல்முறையாக வழிதனை காட்டி என் வழியில் வருபவர்களுக்கு முக்தியையும் மோட்சத்தையும் அளித்து இறைவனையும் காண வைப்பேன் அப்பனே!!!!

என் பக்தர்கள் அனைவரும் யான் கூறியதை செய்து வர வேண்டும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1440 - அன்புடன் அகத்தியர் - உக்ரதாரா தேவி சக்தி பீடம் தேவாலய். கௌகாத்தி அஸ்ஸாம்!







16/8/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :உக்ரதாரா தேவி சக்தி பீடம் தேவாலய்.  கௌகாத்தி அஸ்ஸாம் .

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே எதை என்றும் அறியறிய அப்பனே நல் பலன்கள் அப்பனே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே இறைவன் அப்பனே கொடுக்க தயார்!!!!!!!!!!

ஆனாலும் அப்பனே ஏனைய எதை என்று அறிய அறிய  பிறவிகளில் செய்த தவறுகள் அப்பனே ஆனாலும் அதையெல்லாம் திருத்தி கூட தயாராக!!!!!!!!!!அப்பனே!!!!! 

ஆனாலும் அப்பனே மனிதனின் நிலைமைகள் அப்பனே மாறிக்கொண்டே தான் வருகின்றது !!!... எதை என்றும் தெரியாமலும் கூட!!!!! எதை என்றும் அறியாமலும் கூட !!!!!

அதனால் அப்பனே உயர்ந்த பக்திகள் அப்பனே எதை என்றும் உணரும் அளவிற்கும் கூட!!!......

புலவன் அததாவது ஒரு புலவன் பெருமையை கூட இப்பொழுது உரைக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!! 

ஆனாலும் அப் புலவன்  பெயர் பின் """"" கிழான்!!!

கிழான் புலவர்!!!!! அறிந்தும் கூட இதனால் அறிந்தும் இவன்தனை ஆனாலும் எதை எதையோ கண்டுபிடிப்புகள்!!!! பல பல வகைகளாக!!!!! 

இறைவனுக்கு பல சேவைகள் ஆனாலும் இச் சேவைகள் எப்படி எதை என்றும்  அறிந்தும் அறிந்தும் கூட பல சேவைகள்!!!

பின் திருத்தலங்களாக சென்று கொண்டே இருந்தான் இங்கே!!!!

ஆனாலும்  அவந்தனுக்கு பின் இறை!!!!   ஆனாலும் நம்பிக்கை எதை என்றும் அறிய அறிய!!!! 

ஏதோ!!!! இறைவனுக்கு செய்கின்றோம் அவ்வளவுதான் !!!! எதை என்றும் அறிய அறிய!!!!!

ஆனாலும் செய்திட்டு அனுதினமும் அதிகாலையில் வந்து ஆனாலும் எதை என்றும் கூட பல திருத்தலங்களையும்  இங்குள்ள  அனைத்தையும் கூட அனைத்தும் கவனத்தில்!!!!!

இதனால் பின் தேவியருக்கும் இறைவனுக்கும் நல்விதமாக செய்து செய்து மீண்டும் எதை என்றும் அறிய அறிய மதிய வேலையில் சிறிது நேரம்
உறங்கச் செல்வான்!!!!

மீண்டும் பின் சாயும் காலம் நேரத்தில் எதை என்றும் தெரிவிக்கும் அளவிற்கு மீண்டும் வருவான் இதுதான் அவனுடைய வேலை!!!!!

ஆனாலும் பின் கண்காணித்து கண்காணித்து ஆனாலும் இறைவன் கூட எதை என்றும் அறிய அறிய பின் அவன் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆனாலும் பின் இறைவியும் கூட வந்து பின் ஐயனே எதை என்றும் அறிந்தும் கூட ஏன்? எதற்காக செய்கின்றாய்??? பின் எதனால் ??என்பதை கூட!!!

ஆனாலும் வந்தது இறைவி தான் என்று கூட அவந்தனுக்கு தெரியவில்லை!!!!!!

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அதனால் பாசத்தோடு செய்கின்றேன் அவ்வளவுதான் எந்தனுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று எண்ணி செய்து வந்தான்

ஆனாலும் பின் அத் தேவியே!!!!! எதை என்று அறிய அறிய உந்தனை பலமுறையும் யான் பார்த்திட்டேன்!!! 

ஆனாலும் இப்படி எதை என்றும் அறிய அறிய நீயும் கூட  இத் தேவிக்கு சேவைகள் இறைவனுக்கு சேவைகள் செய்து செய்து அனு தினமும் கூட எதை என்றும் அறிய அறிய உறங்க சென்று விடுகின்றாய்!!!

அதனால் உந்தனுக்காக யாரும் ஒன்றும் இல்லை செய்வதற்கு ஒன்றுமில்லை யாரும் இல்லை!!!!

அதனால் உந்தனுக்கு யான் சேவை செய்யட்டுமா??? என்று!!!

ஆனாலும் இல்லை அம்மையே!!!! நீயும் வயதானவளாக இருக்கின்றாய்!!!! எதை என்றும் அறிய அறிய அதனால் உன்னால் முடியுமா????

யானே பல கஷ்டங்களை பட்டுப்பட்டு இறைவிக்கும் இறைவனுக்கும் சேவை செய்து செய்து இனிமேலும் அப்படியே காலங்கள் தள்ளிப் போய்க் கொண்டு!!!! 

இதனால் அறிந்தும் கூட வேண்டாம் என்று!!!!

இல்லை இல்லை எதை என்றும் அறிய அறிய இறைவன் இறைவிக்காக நீ சேவை செய்கின்றாய் ஆனால் உந்தனுக்காக யான் சேவை செய்தால் அவ் இறைவனுக்கே இறைவிக்கே சேவை செய்வது போல் என்று!!!!

நிச்சயம் பின் சரி என்றுஒத்துக்கொண்டான்!!!! அனைத்தும்  என்று இறைவன் கிருபையே என்று எண்ணினான்!!!

இதனால் அனு தினமும் எதை என்று கூற தேவியே இவந்தனுக்கு பல வகையிலும் கூட உபசரித்தாள்!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இப்படியே பின் இவந்தனுக்கும் அனைத்தும்  சொகுசாக பின் உணவுகள் கிடைத்தது!!!

இதனால் பின் அதனால் எதை என்றும் அறியாமல் கூட சில சில நேரங்களில் ஏன்?? எதற்காக?? இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்???????????

ஆனாலும் இவள்தனும் வந்துவிட்டாள்!!!! நன்றாக பின் சமைத்து!!! தருகின்றாள்!!!!!

இதனால் உண்டு உண்டு காலத்தை  கழித்து விடுவோம்!!!!!.... செய்தது போதும் என்று எண்ணி சோம்பேறி ஆகி விட்டான்!!!!

இதனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் அத் தேவி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள்!!!! எவை என்றும் அறிய அறிய இவந்தனை!!! இப்படியே என்று எறிய ஆனாலும் கூட பல மாதங்கள் கடந்தும் விட்டது!!!!

ஆனாலும் உண்பது!!! உறங்குவது !!! இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய இறைவனையே மறந்து விட்டான் எதை என்று அறிய அறிய!!!!! 

ஆனாலும் தேவிக்கு வந்தது கோபம்!!!!!

எதை என்று அறிய அறிய இவ்வளவு பின் எவை என்று கூட பக்தியாக இருந்து அனைத்தும் எதையென்று அறிய அறிய யாமே சேவைகள் செய்தும் கூட இவன் சோம்பேறி ஆகி விட்டான் என்று!!!!

இதனால் தேவிக்கு கோபம் வந்ததும் இவனிடத்தில் சென்று எதை என்றும் அறிந்தும் கூட!!... 

ஏன்? எவை என்று கூற இவ்வளவு தேவிக்கும் இறைவனுக்கும் சேவைகள் செய்து கொண்டிருந்தாயே!!! ஏன்??? நிறுத்தி விட்டாய்?? என்று!! கூற!!! 

ஆனாலும் நிச்சயம் எந்தனுக்கு  போதுமானது இறைவிக்கும் இறைவனுக்கும் பல சேவைகள் செய்திட்டேன் ஆனாலும் அறிந்தும் கூட அதனால் இனிமேலும் செய்யப் போவதில்லை!!!!

அதனால் நீ இருக்கின்றாயே தாயே!!! என்று கூற!!!!!

இனி மேல் யானும் கூட இங்கு இருப்பதில்லை!!!!! ஏனென்றால் இறைவனுக்கும் இறைவனுக்கும் நீ சேவை செய்து கொண்டிருந்தாய் அனைத்தும் கூட!!! 

அதனால் மதிப்பு உன்மேல் இருந்தது!!!

ஆனாலும் அதை கூட நீ கெடுத்துக்கிட்டாய் என்று கூற !!!

ஆனாலும் அவ் புலவனுக்கும் பின் உந்தனுக்கும் அகங்காரம் அதிகரித்துவிட்டது ஏதோ இல்லாதவள் என்று கூறி உன்னை இங்கு அழைத்து வந்து விட்டேன் இதனால் நீயும் பின் மூன்று வேலைகள் நன்றாக சமைத்து எந்தனுக்கும் கொடுத்து நீயும் உட்கொண்டு வந்திருந்தாய்!!!

ஆனாலும் அது கூட வீணாகிவிட்டது!!!!

எங்கு பிழைப்பாய்???? உந்தனுக்கு எதை என்றும் அறிய அறிய யார் தெரியும்????

சென்று மீண்டும் இங்குதான் வரப் போகின்றாய் உணவுகள் இல்லாமல் என்று!!!!

ஆனாலும் தேவி சென்று விட்டது !!!!

ஆனாலும் புரிந்து கொண்டீர்களா ??!!!!!!!

எதை என்றும் அறிய அறிய இறைவன் தம்மிடத்தில் இருந்து அனைத்தையும் கொடுத்துவிட்டால் நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள்!!!

அதனால் தான் அத் சோம்பேறியான நேரத்தில் துன்பத்தைக் கொடுக்கின்றான் இறைவன்!!!

அதில் கூட சோதனைகள் எதை என்று கூற பல பல பின் எவையென்று கூட போராட்டங்கள் அவைதன்  உணர்ந்து பின் அப்பொழுதுதான் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் பின் திருத்தலங்களுக்கு செல்கின்றான்!!! இறைவனை தேடி தேடி அலைகின்றான்!!!மனிதன் பின் எதை என்று அறிய அறிய!!!! 

அனைத்தும் கொடுத்திருந்தால் இப்படியே சோம்பேறித்தனமாகத்தான்  திரிய வேண்டும் என்று நிச்சயம் எதை என்று அறிய அறிய இறைவனுக்கே தெரியும்!!!!

இதனால் அவ் புலவனும் கூட அமர்ந்து எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டது அறிந்தும் அறிந்தும்!!! இன்னும் ஒரு வாரம் கழிந்தும் விட்டது!!!! யாரும் இவந்தனுக்கு எதை என்றும் அறிய அறிய!!! 

மீண்டும் தானாகவே சமைத்து உண்டான்!!! 

எதை என்றும் அறிய அறிய பட்டினி எவை என்று கூட பல நாட்கள் கிடந்தான்!!!!

ஆனால் தெரிந்தது அருமை கூட !!!!

எவையென்றும் அறிய அறிய ஏற்கனவே இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலே ஒரு பெண்மணி!! அம்மை!!! எதை என்று அறியறிய அனைத்தும் செய்திருந்தாள்!!! 

ஆனால் விட்டு விட்டோமே என்று ஏங்கினான்!!!

அப்பனே இது போலத்தான் எதை என்றும் அறிய அறிய உயர்ந்த பக்திகள் எதை என்றும் அறிய அறிய செலுத்துபவர்கள் எவை என்று கூட 

 அனைத்தும் கொடுத்தால் பின் இறைவனையே மறந்து விடுகின்றார்கள்.

அனைத்தும் எந்தனுக்கே தெரியும் என்று!!!

மீண்டும் எவை என்று அறிய அறிய அதனால் தான் பின் இவ்வாறே  சென்று கொண்டே இருந்தால் சோம்பேறி ஆகிவிடும் என்று எண்ணி இறைவனும் கூட  எதை என்றும் அறிய அறிய மீண்டும் சோதனையில் உள்ளாக்குகின்றான் அப்பனே!!!!

இதுதானப்பா!!!! வாழ்க்கையின் வட்டம் அப்பனே தெரிந்து கொண்டால் நன்று!!!!

அதனால் அப்பனே துன்பத்திலும் இன்பத்திலும் எவன் ஒருவன் சரிசமமாக இறைவனை அப்பனே நோக்கி நோக்கி அன்பு கருணை பாசத்தோடு வணங்குகின்றானோ இறைவன் நிச்சயம் அப்பனே தருவானப்பா!!! எதை என்றும் அறிய அறிய அனைத்தும் கூட!!!!

இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!

நலமாகவே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நலன்கள் இன்னும் இன்னும் கோடிகள் எதை என்றும் அறிய அறிய!!!!

மீண்டும் அவந்தன் அப்படியே வந்தான் எதை என்று அறிய அறிய பின் திருத்தலத்திற்கு திருத்தலத்திற்கு சென்று மீண்டும் எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்வோம் என்று!!!

ஆனாலும் எவரும் விடவில்லை அவந்தனை!!!

எதை என்றும் அறிய அறிய இத்தனை நாட்கள் எங்கே சென்றிருந்தாய்??????

அதனுள்ளே எதை என்று அறிய அறிய இறைவனுக்கும் இறைவிக்கும் சேவை செய்பவர்கள்!!!! உந்தனை எதிர்பார்த்து ஒரு பத்து நாட்கள் பொறுத்து பார்த்தோம்!!!! பின் நீயும் வரவில்லை அதனால் மற்றவர்களை நியமித்து விட்டோம்!!!! என்று எண்ணி நீ செல்!!!! என்று கூற!!

ஆனாலும் அவந்தன் மனது  வலித்தது !! கலங்கியது!!!

எதை என்று அறிய அறிய அப்படியே  எதை என்றும் அறிய அறிய அப்படியே இருந்திருந்தால் நிச்சயம் பின் அனைத்தும் நன்றாகவே நடந்திருக்குமே!!!!

நம்தன் நடுவில் இறைவனை விட்டு விட்டோமே!!!!!!!!!!........... என்று எண்ணி!!!!

இது போலத்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரியப் புரிய இறைவனை சில நேரம் தொழுகின்றனர் ஆனாலும் அப்பனே ஏதோ ஒரு சில மாற்றங்கள் வந்துவிட்டால் அப்பனே இறைவன் இல்லை என்று சொல்லி விடுகின்றார்கள் அப்பனே!!!

இதனால் மீண்டும் இறைவனிடத்தில் வரும்பொழுது அப்பனே இப்படித்தானப்பா இறைவனும் கூட யோசிப்பான்!!!!!!

இவந்தன் இப்பொழுதே மறந்து விட்டான் இனிமேலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆசிகள் கொடுத்தாலும்  வீண் என்று!!! 

அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எத் துன்பம் வந்தாலும் அப்பனே எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய இறைவனை பிடித்துக் கொள்ள வேண்டும் அப்பனே!!!!!!

அதாவது அப்பனே நல்விதமாக நதி ஓடும் எதை என்றும் அறிய அறிய எத் தடங்கல் வந்தாலும் அப்பனே அதை உடைத்திட்டு போகும் என்பேன் அப்பனே!!! நதி எதை என்றும் அறிய அறிய!!!

அதேபோலத்தான் அப்பனே எத் தடங்கல் வந்தாயினும் அப்பனே எதை என்றும் அறிய அறிய யார் எதைச் சொன்னாலும் அப்பனே """""இறைவன் பற்று!!!!!! பற்றாக இருந்தால் அப்பனே கடைசியில் இறைவனிடத்தில் சேர்ந்து அப்பனே.... இறைவனே தன் பிள்ளையாக எண்ணி அனைத்தும் கொடுப்பான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் அப்படி இல்லையப்பா!!!!!

அதனால்தான் பக்தி என்னவென்பது கூட தெரியாமல் போய்விடுகின்றது அப்பனே!!!!!

பக்தி என்றால் அனைத்தையும் கொடுத்து விடுவோமாம்.!?!?!?!?!?!?!??!?!? எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அப்பனே  இவ் புலவன் அலைந்து திரிந்தான் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!!

இதனால் அப்பனே ஒன்றும் கிடைக்கவில்லை!!!!
எதை என்றும் அறிய அறிய மீண்டும் இல்லத்திற்கு சென்றான்!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இது போலவே ஆனாலும் இல்லத்தில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது கடைசியில்!!!! அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் எவை என்றும் புரிய புரிய இதனால் நன்குணர்ந்து எதை என்றும் அறியாமலே அனைத்தும் பின் அதாவது அப்பொழுது தான் புரிந்தது!!!!!.......

இறைவனே கதி என்று இருந்தோம்!!!! அனைத்தும் கிட்டியது!!!!

இப்பொழுது யாருமே இல்லையே!!!!! இல்லையே!!!

அனாதையாகி விட்டோமே என்று மீண்டும் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அம்பாள் ஸ்தலத்திற்கு( உக்ர தாரா தேவி கோயில்) அதாவது இங்கே வந்து அமர்ந்திட்டான்!!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் தேவியும் வந்திட்டாள்!!!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கின்றதா????? என்று!!!!!

அம்மா!!!!!!!!!! நீதானா அது!!!

எதை என்றும் அறிய அறிய நீ இருக்கும் பொழுது   எதை என்று கூட  எத்துன்பமும் பின் எந்தனுக்கு வந்ததில்லை!!!!!!

ஆனால் நீ எங்கேயோ சென்றுவிட்டாய்!!!!

எதை என்றும் அறிய அறிய என்று கூட அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்படியே சென்று எதை என்று கூட இத் தேவி பின் கதவிற்குள் நுழைந்து அப்பனே.... எதை என்று கூட!!!

அப்படியே பின் பரிபூரணமாக தாமரை இதழ்களில் காட்சியளித்தாள்!!!!!

(உக்ரதாரா தேவியின் கோயிலில் தேவியின் பஞ்சலோக காளி மாதா ரூபமாக சிலை உள்ளது!! உள்ளே கருவறையில் சிறிய தடாகம் போலே நீர் சுரந்து சிறிய குளம் போல காட்சியளிக்கின்றது அதன் நடுவில் அன்னை அவள் அமர்வதற்கு ஆசனம் தொட்டில் போலே போடப்பட்டு இருக்கின்றது அந்த கருவறைக்குள் காலையில் மட்டும் சென்று வணங்குவதற்கும் அந்த நீரை பருகுவதற்கும் அனுமதி உண்டு!! உக்கிரதாரா தேவி சக்தி பீடம் 52 சக்தி பீடங்களில் தேவியின் தொப்புள் பகுதி விழுந்த இடம்!!!!)

அந்த இடத்தில் தான் தாமரை பூவில் கிழான் புலவருக்கு தேவி காட்சி அளித்தார்)

(மேலும் ஒரு தகவல் அசாமில் இருக்கும் தேவியின் சக்தி பீடங்கள் அனைத்திலும் கருவறையின் உள்ளே நீரூற்று சுரந்து கொண்டே இருக்கின்றது.)

அப்பொழுதுதான் இவன் உணர்ந்தான்!!!!

இத்தனை நாட்கள் நம் தனக்கு உதவியாக இருந்தவள் இத் தேவியா??? என்று அழுது புலம்பினான்!!!

எதை என்று அறிய அறிய எவை என்று கூட """""""மகன்களே!!!!!!!! எவை என்றும் புரியாமலும் கூட

அப்பனே எவை என்றும் தெரியாமலும் கூட இப்படித்தான் மனிதன் வாழ்ந்து வருகின்றான்!!!

பின் துன்ப நேரத்திலும் கூட எதை என்றும் அறிய அறிய பக்கத்தில் இறைவன் இருந்தாலும் எதை என்று கூட கண்டு கொள்வதே!!!!!!!!!!!!!!!!!!!........... இல்லை !!!!!!!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

இறைவன் சக்தி அப்பனே எதை என்று கூட இவ்வுலகத்திற்கு மேலானது!!! எதை என்று அறிய அறிய அப்பனே புரியும் தன்மையும் புரியாத தன்மையும் எதையென்றும் அறியாமலும் கூட அப்பனே மிக சக்தி வாய்ந்தது என்பேன் அப்பனே!!!

அவ் சக்தியை எவன் ஒருவன் சரியாக உணர்கின்றானோ அவன் மௌனம் அடைந்து விடுவான் அப்பனே!!!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் மௌனத்தின் வழியாகவே சாதித்து விடுவான் அப்பனே எதை என்று கூட!!!!

ஆனாலும் இன்றைய நிலையில் அப்பனே  அனைத்தும் எவை என்று கூட சக்தி இல்லாமல் எந்தனுக்கு அவை தெரியும் இவை தெரியும் என்றெல்லாம் அப்பனே விளம்பரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றான்!! அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய!!!

இறைவனை !! விளம்பரப் படுத்த வேண்டுமா??????????????????? என்ன !!!!!!!!!!!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய யான் எதை என்று கூற எவை என்று புரியப் புரிய அதனால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய பின் அவ் சக்திகள் இருந்தால் பின் அனைவருக்கும்
உடம்பில் எதை என்று அறிய அறிய ஒரு சக்தி இருக்குமப்பா!!! அவ் சக்தி தான் எதை என்று அறிய அறிய ஈர்க்கக்கூடிய ஆற்றல் அப்பனே பிரபஞ்சத்தின் அப்பனே!!!!

பிரபஞ்சத்திலிருந்து அவை ஈர்க்கும் பொழுது தான் அப்பனே ஒருவன் உயர்ந்தவன் ஆகின்றான் அப்பனே!!!!

ஆனாலும் அவ் சக்திகள் இல்லை என்றால் அப்பனே நீங்கள்தான் எதை என்று அறிய அறிய அப்பனே விளம்பரப்படுத்த வேண்டும் அப்பனே!!!!

அது வீணப்பா!!!! கர்மா தான் சேர்த்துக் கொள்ள முடியுமே தவிர அப்பனே ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும் அவ் புலவன் அழுது புலம்பினான்!!!!

எதை என்றும் எவை என்றும் கூற எவ்வாறு என்பதனால் கூட இதனால் எவை என்றும் புரியாமலே பின் உள்ளே சென்றான்!!!! (கருவறைக்கு உள்ளே)

கெட்டியாக பிடித்துக் கொண்டான் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அம்மையே!!!!! எதை என்று கூட இத்தனை நாட்கள் என்னுடனே இருந்து எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் செய்தாயே என்னருகே இருந்து கொண்டு !!!!

இதை யான் உணர்ந்து கொள்ளவில்லையே!!!!!!!! இந்த பைத்தியக்காரன்!!!!!
என்று உணர்ந்து உணர்ந்து எதை என்று கூட!!!!!

மீண்டும் தேவி வந்தாள்!!! அப்பனே!!! தெரியும் உந்தன் நிலைமை கூட!!!!

எதையென்றும் அறிய  இப்பிறவி வீணாகப் போய்விட்டது !!!
உந்தனுக்கு என்ன வேண்டும்? என்று எண்ணி கூற!!! 

நிச்சயம் தாயே!!!!! பின் எதை என்று கூட பின் கலியுகம் இருக்கும் வரையில் யான் உந்தனுக்கு தெரியாமலே வந்து சேவைகள் செய்திட வேண்டும் என்பதுதான் அவை மட்டும் இல்லாமல் வரும் மனிதர்களுக்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரியப் புரிய நல்விதமாக நீ எந்தனுக்கு கூட உணவுகள் அளித்தாயே அதேபோலத்தான் வரும் மனிதர்களுக்கெல்லாம் யான் என்னென்ன குறைகள் இருக்கின்றனவோ அவைதனை நிச்சயம் யான் தீர்க்க வேண்டும் என்று எண்ணி!!!!!..........

அப்பனே இப்பொழுதும் கூட அவந்தன் மறைமுகமாக அப்பனே பின் திருத்தலங்கள் திருத்தலங்களாக அப்பனே பூஜை செய்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!!

இதனால் எதை என்று கூட இங்கு வருபவர்களுக்கெல்லாம் மனக்குறைகள் நீக்கிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் பின் இறைவனை வணங்குவது எதை என்று கூட மனதில் என்ன இருப்பது என்பதை கூட பின் என்ன நினைப்பும் எதை என்றும் அறிய அறிய இவந்தனே போக்கிவிட்டு அனைத்தும் தருவானப்பா!!!

அதனால்அப்பனே அதனால்தான் அப்பனே இத் தேசத்திற்கு ஒரு விசேஷம் உண்டு(அஸ்ஸாம் !! தேவியின் அதிக சக்தி பீடங்கள் நிறைந்த தேசம் )என்பேன் அப்பனே நலமாகவே அப்பனே தேவிகளை வணங்கினால் பின் எதை என்று அறிய அறிய யான் சொன்னேனே அப்புலவன் கூட அப்பனே உடம்பில்லாமல் அலைந்து திரிந்து அனைவருக்கும் எதை என்று கூட  தேவியின் கிருபையை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!

இப்பொழுது கூட இங்கே தான் இருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே(வாக்குரைப்பதை) எதை என்று கூட அகத்தியன் என்று சொல்கின்றான் என்று அப்பனே நலமாகவே!!!

அதனால் அப்பனே இறைவனை மறந்து விடாதீர்கள் அப்பனே!!!!

எத் துன்பம் வந்தாலும் அப்பனே பின் பின்னோக்கி சென்று விடாதீர்கள் அப்பனே!!!

எத்துன்பம் வந்தாலும் முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர!!!! பின்னோக்கி சென்றால் அப்பனே பின்னே தான் செல்ல வேண்டும் அப்பனே!!! இறைவன் கூட கண்டுகொள்ள!!!.......

எதை என்று கூட ஆனால் கடைசியில் சாகும் நேரத்தில் மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அப்பொழுதுதான் வருவான் என்பேன் அப்பனே!!!

அது ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

மீண்டும் வந்தால் எதை என்று கூட மறுபிறவியாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே இறைவனை எப்படி வணங்குவது எப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய பக்தி காட்டினால் அப்பனே உயர்ந்து விடலாம் என்றெல்லாம் நிச்சயம் மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே துன்பம் துன்பம் என்பவை எல்லாம் அப்பனே!!!

இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே இறைவனை எப்படி பிடித்து கொள்வது எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இத்தலத்திற்கு பல பல விசேஷங்கள் உண்டு என்பேன் அப்பனே நல்விதமாகவே அப்பனே.

ஏன் எதற்காக அப்பனே சக்தி பீடங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒருவன் அனைத்து பீடங்களுக்கும் சென்று வந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் அப்பனே தீய சக்திகளின் விளையாட்டும் உள்ளதப்பா!!!

பின் எதை என்றும் அறிய அறிய எவ் எதை என்றும் அறியாமலும் கூட எவ் தீயசக்திகளாலும் அண்ட முடியாதப்பா!!!!

அதனால் அப்பனே எவை என்று கூட பின் சக்தி பீடங்களுக்கு எவை என்றும் அறிய அறிய போய்க்கொண்டே எதை என்று கூட பின் தேவியை தரிசித்துக் கொண்டிருந்தால் அப்பனே அத் தேவியே ஒரு வளையத்தை போட்டு விடும் அப்பனே!!!!!

எதை என்று கூட யாரும் அசைக்க முடியாதப்பா!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் ஏராளமான வாக்குகளும் இங்கு செப்புகின்றேன் அப்பனே நலமாகவே!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய பைத்தியம் அப்பனே அதாவது பைத்தியக்காரர்கள் அப்பனே மனக்குழப்பங்கள் அப்பனே போராட்டங்கள் அப்பனே எதை எதையோ என்று நினைத்து அப்பனே சில தீய சக்திகளால் பின் மனம் உடைந்து போதல் இவை எல்லாம் அப்பனே எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே இங்கே தங்கி அப்பனே நலமாகவே பின் அதாவது தேவியின் பின் தரிசனத்தை கண்டுகொண்டே வந்தால் அப்பனே சிறிது சிறிதாக மாறுமப்பா!!!!!

அதனால்தான் அப்பனே அலைந்து திரிந்து இறைவனை ஓடோடி காண வேண்டும் என்று எண்ணி அப்பனே அங்கங்கு திருத்தலங்கள் அப்பனே அதனால் அனைத்தும் ஒன்றாகவே ஒரே இடத்திலே வைத்திருந்தால் அப்பனே இறைவனை கண்டுகொள்ள மாட்டான் அப்பனே!!!

யான் வணங்கி விட்டேன் என்று அவன் சென்று விடுவான் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய தேடுகின்றீர்கள் அப்பனே பொருள்களை சேர்க்க இன்னும் என்னென்னவோ சேர்க்க சேர்க்க அப்பனே ஓடுகின்றீர்கள் அப்பனே!!!

இறைவன் எதை என்று அறிய அறிய அருளை பெற அப்பனே ஓடி வருவதில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யானும் ஆனாலும் அப்பனே சில சில வழிகளில் கூட அப்பனே யான் இங்கு இருக்கின்றேனே என்னால் வர முடியவில்லையே என்பவருக்கெல்லாம் யான் வாக்குகளாக இன்னும் செப்புகின்றேன் அப்பனே!! எப்படி செய்ய வேண்டும் என்று கூட அப்பனே!!!!

நல்விதமாக பிரம்மாவிடத்திலும் எடுத்துக் கூறி எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்முறையாக கூறுகின்றேன் அப்பனே எதை என்று கூட!!!

முக்தி பெறலாம் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறியும் அளவிற்கு கூட அப்பனே இன்னும் சித்தர்கள் உரைப்பார்கள் அப்பனே முதலில் அப்பனே ஒவ்வொரு படியாகவே ஏற வேண்டும் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் உயர்ந்துவிடலாம் பின் உயரத்திற்கு சென்று விடலாம் என்று கூட நினைக்கின்றார்கள் அப்பனே!!!

ஆனால் முடியாதப்பா!!! பக்திக்கு மட்டும் அப்படி முடியாதப்பா!!!!

படிப்படியாக ஏற வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது அனைவருமே முதல் படி இரண்டாவது படிகளிலே உள்ளீர்கள்  அப்பனே!!!!ஏன்? எதற்காக மேலே சென்று விட வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் அப்பனே எது என்று கூட கோபுரத்தின் உச்சிக்கு அதனால் அப்பனே எதை என்று கூட தெரிந்து தெரிந்து பக்திகளை செலுத்தி செலுத்தி அப்பனே நன்றாக ஒவ்வொரு படியாக சென்றால் அப்பனே பின் கோபுரத்தின் உச்சியில் இருந்து அனைத்தும் சாதிக்கலாம் இறைவன் எதை என்று கூட உன் கையைப் பிடித்து அப்பனே இறைவனே அருளை கொடுத்து அப்பனே எதை என்று அறிய அறிய தரிசனத்தையும் காண்பிப்பான் அப்பனே!!!

எதை என்று கூட அதற்காகத்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே நிச்சயம் தரிசனத்தை காட்டுவோம் தரிசனத்தை காட்டுவோம் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே அதை செய்தால் அவை இவை அதை செய்தால் இவை நடக்கும் இதை செய்தால் அவை நடக்கும் எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இறைவன் அன்பு இல்லாமல் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!! அப்பனே!! 

சொல்லிவிட்டேன் அப்பனே!

இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே எவை என்று கூட ஏன் பிறந்தீர்கள் என்பதை கூட நீங்கள் முதலில் உணர வேண்டும் அப்பனே அப் பிறப்பின் ரகசியத்தை உணராவிடில் நீ எதைச் செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!

நல்விதமாக அப்பனே சொல்கின்றேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே ஏன் எதற்காக வந்து உள்ளீர்கள் என்பதை எல்லாம் எதை என்று கூட புண்ணிய பாதையில் அழைத்துச் சென்று அவர்களுக்கெல்லாம் சொல்கின்றேன் அப்பனே அனைவருமே பிழைத்துக் கொள்ளலாம் அப்பனே அனைவரும் சாதித்துக் கொள்ளலாம் அப்பனே!!!

நலன்கள்!!! ஆசிகளப்பா!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

உக்ரதாரா கோயில் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள லோடாக்சில் (லடாசில்) பகுதியில் உள்ள கவுகாத்தி நகரின் மையத்தில் ஜோர் புகுரி தொட்டிகளின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாரா (தேவி) கோயிலாகும் . அஸ்ஸாமின் குவாஹாட்டியின் கிழக்குப் பகுதியில் உள்ள உசான் பஜாரில் உள்ள உக்ரதாரா கோயில் ஒரு முக்கியமான சக்தி ஆலயமாகும்உக்ர தாராவின் கர்ப்பக்கிரகத்தில் அவளது உருவமோ சிலையோ இல்லை. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய குழி தேவியாக கருதப்படுகிறது. உக்ர தாரா கோவில் சிறியதாகவும் பார்க்க அழகாகவும் இருக்கிறது. உக்ர தாரா கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிவாலயமும் இரண்டு கோயில்களுக்குப் பின்னால் ஒரு குளமும் உள்ளது.

கோயிலில் 3 பகுதிகள் உள்ளன - முன்னால் ஒரு பரந்த மண்டபம் அல்லது மண்டபம், நடுவில் இரண்டு தேவி சிலைகள் மற்றும் சதி தேவியின் தொப்புள் கல்லாகக் கருதப்படும் பாறை வைக்கப்பட்டுள்ள நீர் நிரப்பப்பட்ட எண்கோண "குண்ட்" கொண்ட கருவறை.

இந்த "குண்ட்" பிரம்மபுத்திரா நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் நீர்மட்டம் பிரம்மபுத்திராவின் நீர்மட்டத்துடன் சேர்ந்து குறைந்து உயர்கிறது என்றும் கூறப்படுகிறது. கருவறையின் மேல் ஒரு நீளமான குவிமாடம் வடிவ கோபுரம் அல்லது சிகரம் உள்ளது. மொத்தத்தில் நிலாச்சல பாணியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குப் பின்னால் "ஜோர் புகுரி" (இரட்டைக் குளங்கள்) என்று அழைக்கப்படும் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

விமானம் மூலம்: லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் 19.1 கி.மீ.

ரயில் மூலம்: கவுகாத்தி ரயில் நிலையம் 0.8 கி.மீ.

சாலை வழியாக: அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் குவஹாத்தி பேருந்து நிலையம்.

சாலை வழியாக:  அஸ்ஸாமின் உக்ர தாரா கோயிலுக்கு பயணிக்க நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் உள்ளன. NH-31, NH-37 மற்றும் NH-40 ஆகியவை இந்த கோவில் வழியாக செல்கின்றன. எனவே அஸ்ஸாமின் உக்ர தாரா கோவிலுக்கு சாலை வழியாக பயணிப்பது எளிது.

ரயில் மூலம்:  அஸ்ஸாமின் தலைநகரான கவுகாத்தி தான் அருகிலுள்ள ரயில் நிலையம் . எனவே இது அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்து முக்கிய மாநிலங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் ரயிலில் எளிதாக வரலாம்.

விமானம் மூலம்: உக்ரா தாரா கோயிலின் அருகிலுள்ள விமான நிலையம் குவஹாத்தி ஆகும், இது அனைத்து முக்கிய மாநிலங்களுடனும் ஏர்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தினசரி பல விமானங்கள் கிடைக்கின்றன. 

ஸ்ரீ ஸ்ரீ உக்ரதாரா தேவாலயம் 5QQ3+P8V, Lamb Rd, Uzan Bazar, Guwahati, Assam 781001, India இல் அமைந்துள்ளது .

கோவில் நேரம்: காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை

இடம்: உசான் பஜார், குவஹாத்தி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 27 September 2023

சித்தன் அருள் - 1439 - அகத்தியப்பெருமானுடன் ஒரு சில அனுபவங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் அடியேனுக்கு தருகிற வேலைகளில் மிக முக்கியமானது, அவரின் "சித்தன் அருள்" வலைப்பூவை நிர்வகித்து உங்களிடம் அவர் அருளை கொண்டு சேர்ப்பது. அதை அடியேன் அவருக்கு செய்கிற நித்திய பூஜையாக செய்து வருகிறேன். இதுவரை சொன்னது வெகு சொற்பம். அதுவும் அவர் அருளால்.

அடியேன் பார்த்து வந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சற்றே வேகமாக நிறைய விஷயங்களை தட்டச்சு செய்து சித்தன் அருளில் பதிவிட எண்ணிய பொழுது ஒரு சில நாட்களில், கண் பார்வை மிக மிக குறைந்து போய் எழுத்துக்கள் எதுவும் தெரியாமலே போய்விட்டது. கண்ணுக்கு என்னவாயிற்று என்று ஒரு மருத்துவரை அணுகி பரிசோதித்ததில் இரு கண்ணிலும் புரை ஏற்பட்டு பார்வை மறைத்திருப்பது தெரிய வந்தது. மருத்துவரோ அறுவை சிகிர்சைதான் செய்ய வேண்டும் என்றார்.

கண் பார்வை ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். அதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், அவனின் நம்பிக்கை, தைரியம், சுயசார்பு இவை மிகவும் பாதிக்கப்படும். அனைத்திற்கும் பிறரை சார்ந்திருக்கிற நிலைமை வந்துவிடும். பிறர் உதவியை நாடும் பொழுது, என்னதான் உறவுகளாக இருந்தாலும், ஒரு அளவுக்குமேல் அவர்களுக்கும் வெறுப்பு வந்துவிடும்.

அறுவை சிகிர்ச்சை செய்து கொள்ளலாமா? வேண்டாமா? எந்த மருத்துவர் சிறப்பானவர், எவ்வளவு செலவழித்து சிகிர்ச்சை எடுத்துக் கொண்டாலும், பலனளிக்க வேண்டும், போன்ற எண்ணம் எல்லாம் அடியேனை சூழ்ந்தது. அந்த நேரத்தில், என் நண்பரின் தகப்பனாருக்கு, இதே கண் அறுவை சிகிர்ச்சை செய்ய, அது எந்த பலனையும் கொடுக்காமல் போனது. இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வது என யோசித்து, அகத்தியப்பெருமானிடம் கேட்டுவிடுவோம் என்று திரு.ஜானகிராமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அவரை அழைத்த போது, எங்கோ வட இந்தியாவில் பயணித்துக் கொண்டிருந்தார். விஷயத்தை கூறி, அடுத்து எங்கேனும் அமர்ந்து நாடி வாசிக்கும் பொழுது,

அடியேன் அறுவை சிகிர்ச்சை எடுத்துக்கொள்ளலாமா? என்று அவர் வாக்கை வாங்கித்தரும்படி வேண்டிக்கொண்டேன்.

அன்று மாலையே அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு கிடைத்தது.

"அறுவை சிகிர்ச்சை செய்து கொள்! எல்லாம் அதற்குப்பின் நலமாகும். உனக்கு சிகிர்ச்சை செய்யும் மருத்துவன், மிகுந்த கைப்புண்ணியம் உள்ளவன். அவன் சொல்கிறபடி நடந்துகொள். அறுவை சிகிர்ச்சையின் பொழுது, அங்கு யாம் இருப்போம். எல்லாம் நலமாகும்!" என்றார்.

அகத்தியப்பெருமானே யாம் இருப்போம் என்று கூறியபின் எதை பற்றியும் அடியேன் சிந்தித்து குழப்பமடைவதில்லை. ஏன் என்றால் அப்படிப்பட்ட அனுபவங்கள் அவர் பல நேரங்களில் அடியேனுக்கு தந்துள்ளார். 

அந்த மருத்துவரோ, அடியேனின் பெற்றோர்களுக்கு மிக சிறப்பாக அறுவை சிகிர்சை செய்து பார்வையை திருப்பி கொடுத்தவர். அறுவை சிகிர்ச்சை அன்று காலை 7 மணிக்கு முதலில் வரச்சொன்னவர், மறுபடி கூப்பிட்டு "9 மணிக்கு வாருங்கள், இரு வயதானவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு முடித்து விடுகிறேன்" என்று மாற்றினார். சரி! என 9 மணிக்கு சென்ற பொழுது, "உங்களுக்கு கடைசியில் பண்ணுகிறேன். மேலும் இரு வயதானவர்கள் வந்திருக்கிறார்கள்" என மாற்றி வைத்தார்.

நீங்க எத்தனை தடவை மாற்றினாலும், அறுவை சிகிர்சை செய்யப்போவது அகத்தியப்பெருமான், அவர் நினைத்த நேரத்துக்கு தான் நடக்கும், என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

மற்றவர்களுக்கெல்லாம் 20-30 நிமிடங்களில் அறுவை சிகிர்ச்சை செய்தவர், அடியேனுக்கு ஒரு மணிநேரம் எடுத்து பல முறை கண் உள்ளுக்குள் சுத்தம் செய்து, சிகிர்சை செய்தார். மறுநாளே அவர் வீட்டுக்கு சென்று, கட்டவிழ்த்து வாசிக்க சொன்ன பொழுது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தது. அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொன்னேன்.

அந்த மருத்துவருக்கு அறுவை சிகிர்ச்சை அன்று என்ன நடந்தது என்று புரியவில்லை. ஆறாவது அறுவை சிகிர்ச்சை செய்த பின்னும், மிக தெளிவாக, அசதி இன்றி தெம்பாக இருந்தார் என கூறினார். நன்றி கூறி, அமைதியாக கேட்டுக் கொண்டேன்.

இத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும், வேறொரு விஷயத்துக்காக அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து பேசவேண்டி வந்தது. அகத்தியப்பெருமான் கூறிய பதில் அடியேனுக்கு, மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

கண் பார்வை பாதிக்கப்பட்டதும், திடீர் என ஒரு எண்ணம் உதித்தது. அடியேனுக்கு இயலாமல் போன பொழுது, சித்தன் அருள் வலைப்பூவை பற்றி யோசிக்கவே இல்லையே. அதை அகத்திய பெருமான் கைகாட்டுகிற வேறு யாரிடமாவது ஒப்படைக்கவோ, அல்லது அவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது பற்றியோ யோசிக்கவே இல்லையே, இதை இப்படி விடக்கூடாது. இது இவ்வுலகுக்கு பிரயோசனப்பட வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும். அப்படிப்பட்டவர் குருநாதர் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும். ஆகவே அவரிடம் கேட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்.

உண்மையாகவே, அடியேனின் நண்பர்களிடம் கூறுவது என்னவென்றால், யாரேனும் ஒருவர் வந்து, "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ தான் என் வாழ்க்கையை செம்மையாக வாழ உதவியது. நான் அகத்தியப்பெருமானுக்கு மிக மிக கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினால், அடியேனுக்கு குருநாதர் தந்த வேலையை சிறப்பாக செய்துள்ளேன் என்ற திருப்தியில் ஓய்வு பெற்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் இன்று வரை ஒருவர் கூட அப்படி உரைக்கவில்லை.

அகத்தியப்பெருமானிடம் நாடியில் இந்த கேள்வியை கொண்டு சென்று கேட்ட பொழுது அவர் தந்த பதில் அதிர்ச்சிகரமாக இருந்தது.

"இல்லையப்பா! வேண்டாம்! என் பார்வையில் ஒருவர் கூட சரியில்லை. இங்கு உரைப்பதை வாசிக்கும் ஒருவரும் எளிய விஷயங்களைக்கூட தன் வாழ்க்கையில் நடை முறைப் படுத்துவதில்லை. அனைவருக்கும், செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், பதவி வேண்டும், தலைமைத்துவம் வேண்டும், நாடி வேண்டும், சமூகத்தில் உயர்ந்த நிலைமை வேண்டும், தான் செய்வது சரியா தவறா என்று கூட கவனிக்க மனதில்லாதவர்கள். அடுத்தவர் செய்கிற நல்ல விஷயங்களில் பொறாமை கொள்கிறார்கள். தான் நினைப்பதை அடைய, வாமாச்சாரத்தில் சென்று விழுகிறார்கள். அனைவர் மனதிலும் இவைதான் நிற்கிறதே தவிர, ஒரு குவளை பாலுக்குள், ஒரு துளி விஷமே கெடுதல் என்று யாரும் நினைப்பதில்லை. மேலும் கூறினால் மனவருத்தம்தான் மனிதனுக்கு மிஞ்சும். யாமும்/சித்தர்களும் இன்றும் நம்பிக்கையை கைவிடாமல் மனிதனுக்காக இறைவனிடம் வாதம் புரிகிறோம்.

உன் பார்வையை திருப்பி தந்துவிட்டேன். தொடர்ந்து செய்! பின்னர் வரும் காலத்தில் பார்க்கலாம்! ஆசிகள்! " என முடித்துக் கொண்டார்.

இத்தனை வருடம் அகத்தியப்பெருமானின் அடியவராக இருந்து அவர் வாக்குகளை வலைப்பூ வழி அனைவருக்கும் தந்தும் "ஒருவர் கூட அவர் வைத்த பரிட்ச்சையில் தேர்வடையவில்லையா?" என்ற வருத்தத்துடன் இந்த அனுபவ தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 25 September 2023

சித்தன் அருள் - 1438 - அகத்தியப்பெருமானுடன் ஒரு சில அனுபவங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானிடம் நாம் நடந்து கொள்கிற விதம் தான் அவரை நம் அருகாமையில் வரவழைக்கும் என்பது அடியேனுடைய அனுபவம். அவரை, குருவாக, ஆசிரியனாக, தந்தையாக, தாயாக, இறைவனாக, நம்முள் ஒருவராக எப்படி வேண்டுமானாலும் உணரலாம், நடத்தலாம். சித்தர்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு அவர் அருகாமையை நமக்கு அளிப்பார். நாம் அவரிடம் எளியவனாக நடந்து, அவர் சொல்கிற விஷயங்களின் உண்மை தத்துவத்தை உணர்ந்து செயல்பட்டாலே போதும். ஆனால் நாம் அவரை புரிந்து கொள்கிற விதத்தில் நிறைய தவறு இருக்கிறது. எப்படி?

உதாரணமாக! சமீபத்தில், அவரே மனம் கனிந்து தன் சேய்களுக்கு ஒரு உத்தரவிட்டார். "உண்மையான அன்புடன் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க, இல்லம் தேடி இந்த நாடி வரும்! யாமும் வந்து வாக்குரைப்போம்!" என்று. சரி! எத்தனை பேர் இன்றும் இந்த பிரார்த்தனையை சமர்பிக்கிறீர்கள்? எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?

சாதாரணமாக "அய்யனே! தாங்கள் ஜீவ நாடியுடன் எங்கள் இல்லத்தில் எழுந்தருளி நல் வாக்கு அருள வேண்டும்!" என வேண்டிக் கொண்டிருப்பீர்கள்.

இந்த பிரார்த்தனையில் ஒரு தவறு உள்ளது! அதை கண்டுபிடித்து, திருத்தி, உணர்ந்து பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும்! "நான்" "எனது" என்ற வார்த்தைகளை குருநாதரிடம் தவிர்க்க வேண்டும். இது "உங்கள் இல்லம்" என்கிற வார்த்தையும், அந்த உணர்வும் அவரிடம் சமர்ப்பிக்க மிக எளிதில் அவர் நம் அருகில் வந்து விடுவார் என்பதே உண்மை.

இனி ஓர் அனுபவம். எங்கேனும் வெளியே செல்ல கிளம்பும் பொழுது, பூசை அறை கதவை மூடும் பொழுது, வலது கையால் கதவை தொட்டு, "அய்யனே! இது உங்கள் இடம். இங்கு வந்து அமர்ந்து கொண்டு பிற இடங்களுக்கு சென்று வாருங்கள். எந்த கெட்ட கர்மாவும் உள் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே, அடியேனுடைய விதியினால், ஏதேனும் கெட்ட கர்மா பாதிக்க உள் நுழைந்தாலும், அதை நல்ல கர்மாவாக மாற்றி, லோகத்துக்கு உடனே பிரயோசனப்படும்படி விரட்டி விடுங்கள்" என பிரார்த்தனையை எப்போதும் அவரிடம் சமர்ப்பிக்க, பல அதிசயங்கள் நம் கண் முன் நிகழ்வதை காணலாம்.

சமீபத்தில் ஒரு நாள் அகத்தியப்பெருமானிடம் கூறிவிட்டு அடியேனும், மனைவியும் வீட்டுக்கான சில பொருட்களை வாங்க வண்டியில் வெளியே சென்றோம். திருவோணம் பண்டிகையானதால் எங்கும் ஒரே கூட்டம். பொருட்கள் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி அமர காலை தூக்கி போடும் பொழுது, யாரோ அடியேனின் வலது காலை இரு கைகளால் பற்றுவது போல் ஒரு உணர்வு. யாரையோ மிதித்துவிட்டோம் என்று அதிர்ந்து திரும்பி பார்க்க யாரும் இல்லை. என்னவோ யோசனையுடன், மனைவியை வண்டியில் அமரச்செய்து, வண்டி ஓடத்துவங்க, ரோட்டில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது, அங்கு நின்றிருந்த காவலர், "சீக்கிரம் போ" என்று அறிவுறுத்தினார். வலது பக்கத்திலிருந்து வண்டிகள் வேகமாக குறுக்கே பாய்ந்தது, வேகமாக அவர்களை தவிர்க்க முயன்ற அடியேனின் வண்டி முன்னே வந்த ஒரு வண்டியில் பலமாக மோதியது. மனைவி வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் வீழ்ந்தாள். வண்டி கட்டுப்பாட்டை இழந்து அத்தனை வண்டிகளுக்கு முன் விழ, அடியேன் வண்டிக்கு மேல் வீழ்ந்தேன். விழுந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்ஜினுக்கு மேல் கால் மாட்டிக்கொண்டது. அனைவரும் ஓடி வந்து உதவும் முன், சுதாகரித்து அடியேன் எழுந்து நின்றேன். நிதானத்தை என்னுள் வருத்தினேன். மேல் முட்டுக்கு கீழே எங்கெல்லாமோ எரிந்தது. அடிபட்டுவிட்டது என்று உணர்ந்தேன். மனைவிக்கு, இடுப்பில் நல்ல வேதனை. அவளைப்பார்த்து, "மருத்துவமனையா? வீடா?" என்றேன். வீட்டிற்க்கே போகலாம் என்றாள். வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்கு வந்து இடது காலை பரிசோதித்து பார்க்க பல இடங்களில் தோல் கிழிபட்டு ரத்தம் உறைந்திருந்தது. நடந்த விஷயங்களை யாரிடமும் சொல்லவில்லை. அமைதியானேன். திடீரென வந்த மிகப்பெரிய ஆபத்து, நான்கைந்து கிழிபட்ட சதைகளுடன் சிறிதாகிப்போனது.

பூசையறையில் அகத்தியப்பெருமான் கைதூக்கி ஆசீர்வதித்தபடி நின்றிருந்தார். அவர் பாதத்தை பார்த்து, பின் முகத்தை பார்த்து கேட்டேன்.

"ஏன்?"

பின்னர் அமைதியாகிப் போனேன்! உடல், வலியை மறுதலித்து இயல்பு நிலைக்கு சென்றது.

மறுநாள், மாலை. வீட்டில் விளக்கேற்றி அகத்தியப்பெருமானை பிராத்தித்து அமர்ந்திருக்க, திரு.ஜானகிராமனிடமிருந்து அழைப்பு வந்தது!

"வணக்கம் ஜானகி! ஓம் அகத்தீசாய நமக! என்ன விஷயம்?" என்றேன்.

"ஐயா! அகத்தியப்பெருமானின் வாக்கு உங்களுக்கென உள்ளது. உங்களிடம் கூறச்சொன்னார். அதான் கூப்பிட்டேன்" என்றார்.

நான் மௌனமாக சிரித்தபடி, "சரி சொல்லுங்கள்!" என்றேன்.

"உன் கர்ம விதிப்படி, இந்த ஆடி மாதத்தில் மிகப்பெரிய கண்டம் ஒன்று இருந்தது. அதன் படி பார்க்கையில் உனக்கு இடுப்பில் அடி பட்டு, கடைசி வரை படுக்கையில் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி நடந்து, என் மைந்தனை படுக்க வைத்துவிட்டால், கடைசிவரை எம்மை திட்டி தீர்த்துவிடுவான். ஆகவே, பிரம்மனிடம் பல முறை இந்த விதியை மாற்றக் கோரியும், சண்டையிட்டும், "அவன் இடுப்புக்கு கீழே அடி வாங்கித்தான் ஆக வேண்டும், விதியை மாற்ற முடியாது" என்றுவிட்டார் பிரம்மன். ஆகவே, விதியை நடத்தி, அதே சமயத்தில் அதனால் மிகப்பெரிய பாதிப்பு வராமல், சிறிதளவு பாதிப்புடன், யாமே அந்த விபத்தை ஏற்படுத்தி, என் மைந்தனை காப்பாற்றினோம்" என்ற அகத்தியப்பெருமானின் அருள் வாக்கை தெரிவித்தார்.

இதை தெரிவித்தபின் தான், உண்மையிலேயே, அடியேனுக்கு என்ன நடந்தது என்பதை ஜானகிராமனிடம் விரிவாக தெரிவித்தேன். சற்று நேரம் பேசவே இல்லை. அமைதியாக இருந்தார்.

"அகத்தியப்பெருமானிடம், அடியேனின் நன்றியையும், நமஸ்காரத்தையும் தெரிவித்து விடுங்கள் என்று" முடித்துக் கொண்டேன். பின்னர், ஒரு வாரம் உடல் வேதனையை போராடி, யோகா மூச்சு பயிற்சியினால் சரி பண்ணி அனுபவித்து தீர்த்தேன்.

பெருமைக்காக இதை கூறவில்லை. ஆனால், உங்கள் அனைவருக்குள்ளும் அகத்தியப்பெருமானிடம், மிக மிக அன்பாக இருந்தால், உங்களிடமும் வந்திருந்து சிறப்பாக வழி நடத்துவார், உங்களாலும் அவரை கவர முடியும் என்று தெரிவிக்கவே, இந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டேன்.

அடுத்த அனுபவத்துடன் விரைவில் சந்திக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 23 September 2023

சித்தன் அருள் - 1437 - அகத்தியப்பெருமானுடன் ஒரு சில அனுபவங்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் காட்டுகிற வழியில் நடந்து செல்கையில், அடியேனின் வாழ்க்கையில் சமீபத்தில் சந்தித்த சில நிகழ்ச்சிகளை உங்கள் அனைவருக்கும் "ஓர் உயர்ந்த பாடமாக" தெரிந்து கொள்வதற்காக கீழே விவரிக்கிறேன்.

பல முறை நாடியில் அகத்தியப்பெருமானை சந்தித்து, பலவிதமான கேள்விகளை கேட்டு, அதற்கு அவர் கூறிய பதிலை உங்கள் முன் சமர்பித்திருக்கிறேன். சமீபத்தில், மதுரையில் ஒரு அடியவரின் வீட்டில் அகத்தியப்பெருமான் பொதுவாக்கு கொடுத்ததை கவனிக்கிற சாட்சி பூதமாக அமர்ந்திருந்தேன். திரு,ஜானகிராமன் அகத்தியப்பெருமானின் ஜீவநாடியை வாசித்தார். அடியவரின் வீட்டில் எங்கும் நிற்க இடமின்றி நிரம்பி வழிந்த கூட்டம். அடியேன், சற்று முன்னரே வந்ததால் ஒரு ஓரத்தில் அமைதியாக அமர்ந்து பலரும் கேட்கிற கேள்விகளையும் அதற்கான அழகான பதிலையும் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய் செல் போனில் தன் மகனை தொடர்பு கொண்டு, "உடனே வா! அகத்தியர் நாடியில் வாக்கு கொடுக்கிறார்! உனக்கும் கேட்க வேண்டும் என்று சொன்னாயே!" என்று அழைத்தார்.

அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகன், 15 நிமிடத்தில் நாடி வாசிக்கும் இடத்திற்கு வந்தார். உள்ளே வர இடமின்றி வெளியே நின்ற அவரை, அந்த தாயானவள், பலரை விலகச்சொல்லி வழி கேட்டு மகனை நாடியின் அருகில் அழைத்து சென்று அமரச் சொன்னார்.

இவர் சென்று அமர்ந்ததும், நாடியில் வேரொருவருக்கு  வாக்குரைத்துக் கொண்டிருந்த அகத்தியப்பெருமான் அதை நிறுத்திவிட்டு,  ஜானகி ராமனுக்கு நாடி வழியாக உத்தரவிட்டார்.

"தற்போது எம் முன்னே அமர்ந்த மகனை எழுந்து பின்னாடி கடைசியில் போய் நிற்கச்சொல்" என்றார். அதை ஜானகி ராமன் கூறியதும், ஒரு நிமிடம் அந்த அறையே அமைதியாயிற்று, மொத்த கூட்டமும், யார் அவன் என்று நோக்கிற்று. வேகமாக வந்து அகத்தியர் முன் அமர்ந்தவன், எழுந்து, "ஏன்க?" என்று நின்று கொண்டே கேட்டார். அவரின் தாயும் அமர்ந்திருந்த அனைவரும் ஜானகிராமன் வாசித்து கூறப் போகும் பதிலுக்காக காத்திருந்தனர். அடியேனும்!

"நீ! ஒரு உயிரை கொன்று தின்றிருக்கிறாய்!" என்றார் அகத்தியர்!

"இல்லை, இன்று நான் அசைவம் சாப்பிடவில்லை" என்றான் அவன்.

"இன்று சாப்பிட்டாய் என்று நான் கூறவில்லை. நேற்று இரவு உயிரை கொன்றதை உண்டாய்!" என்று தீர்க்கமாக அகத்தியப்பெருமான் கூறினார். மேலும் "நீ யாம் கூறியபடி சற்று விலகியே நில்!" என்றார்.

அடியேனுக்குள் கோபம் பயங்கரமாக பொங்கியது. என்ன தைரியம் இருந்தால், அசைவம் உண்டுக்கொண்டு, ஒரு மிகப்பெரிய சித்தரிடம், "என் வாழ்க்கை நல்லபடியாக அருள் புரியுங்கள்" என்று கேட்கத் தோன்றுகிறது? அகத்தியப்பெருமானை இவர்கள் போன்றவர்கள் வெறும் சோதிடனாக நினைத்து விட்டார்களா? இவனையும் இவன் குடும்பத்தையும் ஒரு சித்தர் சபிக்காமல் விட்டதே மிகப்பெரிய பாக்கியம். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.

அனைவருக்கும் வாக்கு கொடுத்த பின் கடைசியில் அகத்தியப்பெருமான் இவனிடம், "முதலில்  ஒரு உயிரை கொன்று தின்பதை நிறுத்திவிட்டு வா! பிறகு வாக்குரைக்கிறேன்" என்று மறுத்துவிட்டார்.

"சரிங்க! நிறுத்திவிடுகிறேன்!" என்று உறுதியளித்த மனிதன் அடுத்து ஒரு கேள்வியை கேட்டான் பாருங்க! நானே ஆடி போயிட்டேன்!

"எங்க வீட்டுல ரெண்டு வயசு பாப்பா இருக்குங்க! அதுக்கு உடம்பு தேறுவதற்கு டாக்டர் தினமும் ஒரு முட்டை கொடுக்க சொல்லியிருக்காங்க! அது மட்டுமாவது கொடுக்கலங்களா?" என்றான்.

இப்படிப்பட்ட மனிதனுக்கெல்லாம் வாக்குரைக்க வேண்டியுள்ளதே என்று அகத்தியப்பெருமான் நினைத்திருப்பார்!

"உயிர் கொலை புரிவது தவறு என்கிறோம்! அதெப்படியாப்பா, இது சரியாகும்? என்று யோசி" என உரைத்து வாக்கை முடித்துக் கொண்டார்.

சித்தன் அருளில் எத்தனையோ வருடங்களாக அரிய வாக்குகளை அகத்தியரின் அருளோடு உங்களுக்கெல்லாம் சமர்பித்துள்ளேன். அத்தனையும் படித்துவிட்டு, "அகத்தியருக்கு என்ன தெரியப்போகிறது!" என்று இன்னமும் பலவிதமான தவறுகளை செய்யும், அகத்தியப்பெருமானை/மற்ற சித்தர்களை இன்னமும் மறைமுகமாக திட்டிக் கொண்டிருக்கும் நன்றி கெட்ட மனிதர்கள் அனைவருக்கும் இந்த தொகுப்பு சமர்ப்பணம்! சித்தன் சாபத்துக்கு பரிகாரம் கிடையாது. வேறு வழியை பாருங்கள்! உண்மையாக இருந்தால், அகத்தியப்பெருமான் சூழ்ந்து நின்று காப்பாற்றுவார் என்பதற்கு அடுத்த அனுபவம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 22 September 2023

சித்தன் அருள் - 1436 - அன்புடன் அகத்தியர் - மதுரை பசுமலை அகத்தியர் கோவில் வாக்கு!


வாசிக்கப்பட்ட திருத்தலம்:- மதுரை பசுமலையில் அருள்பாலிக்கும் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயம். நாடி வாசிக்கப்பட்ட நாள்:- 7-செப்டம்பர்-2023

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, அம்மையே எவை என்று புரியப்புரிய நிச்சயம் யான் உங்களை வழி நடத்துவேன். எக்குறைகளும் கொள்ள அவசியம் இல்லை. 

ஆனாலும் அறிந்தும், அறிந்தும் சில சில பின் பணக்கஷ்டங்கள், இன்னும் எதை என்று கூற நோய்கள், ஆனாலும் அனைத்தும் யான் குணப்படுத்துவேன். கவலைகள் இல்லை. 

ஆனாலும் சந்தோஷமே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் சில விசயங்களைக்கூட என்னிடத்தில் நிச்சயமாய் அதாவது (கந்த) வேலனவனும் இங்கே வந்து எப்படி? ஏது? எவை? என்றும் அறிய அறிய இன்னும் உலகத்தில் எதை என்று நடக்க நடக்க அநியாயங்கள் எப்படி? எதை? என்றும் அறிந்து பின் மக்கள் எப்படி எல்லாம் பின்பற்றுகின்றார்கள்? எப்படி எல்லாம் அதாவது கர்மா நிலைக்கு செல்கின்றார்கள்? என்பதை உணர்ந்து உணர்ந்து என்னிடத்தில் கேட்டுவிட்டுத்தான் செல்கின்றான். 

அப்பொழுது உங்களையும் அறிந்தும் அறிந்தும் கூட உங்களைப்பற்றியும் கூட எதை என்றும் புரியப்புரிய ஆனாலும் பின் இங்கிருந்தே சில சில எவை என்று கூற வினைகள் கூட தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனாலும் குறைகள் இல்லை. நிச்சயமாய் அதனையும் கூட நிச்சயம் யான் மாற்றுவேன் பொருத்திருந்தால். 

இதனால் எதை என்றும் அனுபவிக்கும் திறன் எதிலிருந்து வருகின்றது எனபவை எல்லாம் சிந்திக்கத்தெரியாது. ஏன்? எதற்க்காக? என்றெல்லாம் ஆனாலும் என் அருளை பெற்றவர்கள் அனைவருமே. 

இதனால் நிச்சயம் பின் விதியில் கூட ஆனாலும் சில சில மனிதர்களுக்கும் கூட போராட்டங்கள் , இன்னும் மனக்குழப்பங்கள், இன்னும் என்னென்ன வினை என்பதைக்கூட யான் ஆராய்ந்து விட்டேன். நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவைதன் நிச்சயம் மாற்றுகின்றேன் பொறுத்திருந்தால். 

ஏன்? எதற்க்காக? எவை? என்றும் அறிய அறிய இங்கிருக்கும் அனைவருக்குமே பிரச்சினைகள்தான். அறிந்தும் அறிந்தும் கூட. யான் நோக்கிக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒவ்வொரு பிரச்சினை என்னவென்பதெ கூட. 

ஆனாலும் இத்திருத்தலத்தில் கூட எதை என்றும் அறியாமலே சில சில குளறுபடிகள் ஏற்க்கனவே ஆனாலும் அறிந்தும் அறிந்தும் அதை யான் சமநிலைப்படுத்தினேன். அறிந்தும் இதனால் நிச்சயம் பின் உயர்ந்த பக்தியை காண்பியுங்கள் போதுமானது. மற்றவை எல்லாம் தேவை இல்லாத்து. 

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் கண்கூடாகவே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் யானும் அதாவது பின் பெருமான் அதாவது அங்கிருக்கின்றானே பெருமாள் ( ஶ்ரீ நாராயணர் சன்னதி ) அங்கேயே அமர்ந்து விடுவேன். (பெருமாள் சன்னதியில் இருந்து) பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒருவர் ஒருவரைக்கூட இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதையும் கேட்டுவிடாதீர்கள். ( பக்தர்கள் மனதில் எதையும் வேண்டாமல் வணங்கவேண்டும்) நிச்சயம் உங்கள் நிலை அறிந்து யானே கொடுப்பேன். 

நிச்சயம் உங்கள் இல்லத்திற்க்கும் கூட நிச்சயம் வந்து எதை என்றும் அறிய அறிய ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்பேன். பொறுத்திருக்க வேண்டும். 

ஏன் பெரியவர்கள் எதை என்று அறிய அறிய பின் ஒரு பழமொழியும் உண்டு “பொறுத்தார் பூமி ஆள்வார்” . அதனால் யானே சில சோதனைகள் செய்வேன் செப்பிவிட்டேன். எதை என்று அறிய அறிய என்னை வணங்கினாலும் சரி. எந்தனுக்கே திருத்தலம் கட்டினாலும் சரி. நிச்சயம் சோதனைகள். சோதனைகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. 

நீங்கள் கேட்க்கலாம் ஏன் (எந்தனுக்கு) சோதனைகள்? என்று ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதனையே பல உரைகளிலும் கூட தெரிவித்து விட்டேன் யான். ஏனென்றால் அதாவது நிச்சயம் ஒரு தாய் , ஒரு தந்தை தன்பிள்ளையை அதாவது தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று என்னென்ன செய்வாள்? என்னென்ன செய்வான்? எதை என்று அறிய அறிய தவறு செய்தால் அடிப்பான். இதே போலத்தான் ஆசிரியன் கூட. 

அறிந்தும் அறிந்தும் கூட தன் பிள்ளை அதாவது பின் தன் மாணவன் எதை என்றும் அறிய அறிய ஏதாவது தவறு செய்திட்டால் நிச்சயம் சொல்லிப்பார்ப்பான். ஆனால் திருந்தவில்லை என்றால் அடிதான். 

எவை என்று அறிய அறிய அது போலத்தான் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அறிந்து அறிந்து உங்களை பக்குவங்கள்படுத்தவே சில கஷ்டங்கள். 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதை கட்டியவர்க்கும் கூட சில சோதனைகள். ஆனாலும் அனைத்தும் கொடுத்திருக்கின்றேன். மறந்து விட்டார்கள் நன்றி கெட்ட மனிதர்கள். அறிந்தும் அறிந்தும் கூட உங்களுக்கே தெரியும் அவ்நன்றி கெட்ட மனிதர்களுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய யான் எப்படி புத்தி எவை என்றும் அறிய அறிய ஒன்றை சொல்கின்றேன் கொடுத்தால் அகத்தியன் கொடுக்கவில்லை என்றால் எதை என்றும் அறிய அறிய இப்படித்தான் வணங்கி் வணங்கி எதை என்றும் அறிய அறிய என்னை சிலபேர் மறந்தே எதை என்று அறிய அறிய போய்விட்டனர். ஏன் எதற்க்காக? தெரிகின்றதா? உங்களுக்கு.

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் புரிய புரிய அதனால் யானே நிறுத்தி வைத்திருக்கின்றேன் சில பேருக்கு. கொடுக்கலாமா? வேண்டாமா ஏன் எப்படி சொல்கின்றார்கள்  ? என்று பாரப்போம். அறிந்தும் அறிந்தும் கூட அகத்தியன் இருக்கின்றானா என்று. சில சோதனைகள் கூட ஆனால் அதில் தோல்வி அடைந்து விடுகின்றார்கள். எப்படியம்மா யான் கொடுக்க முடியும் கூறு? 

அம்மையே எதை என்றும் அறிய அறிய ஆனால் அனைவருக்குமே எவை என்று அறிய அறிய யான் கொடுக்கின்றேன் என் பிள்ளைகளாக நினைத்து அம்மையே. என்னிடத்தில் வந்து விட்டீர்கள். ஆனாலும் அம்மையே சோதனை செய்தால்தான் அம்மையே பக்குவங்கள் பிறக்கும் அம்மையே. 

இவ்வுலகம் அதாவது கலியுகம் அம்மையே கலியுகத்தில் கெட்டதுதான் நடக்கும் என்பது விதியம்மா. எதை என்றும் புரிய புரிய அதனால் புத்திகள் மாறுபட்டு மாறுபட்டு சில வினைகள் சேகரித்து சேகரித்துக்கொண்டே மனிதன் பின் எவ்வழி எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றான். 

அதனால்தான் உங்களை நிச்சயம் யான் விடமாட்டேன். கஷ்டங்கள் கொடுப்பேனே தவிர நிச்சயம் உங்களை கைவிடமாட்டேன். என்னென்ன தேவை உன் பிள்ளைகளுக்கும், எதை என்று அறிய அறிய உங்களுக்கும் என்றெல்லாம் நிச்சயம் கொடுத்திடுவேன் கவலைகள் இல்லை. பொறுமை காத்திருங்கள். 

அம்மையே அறிந்தும் அறிந்தும் கூற நோய்கள் கூட அதனையும் குணப்படுத்துவேன். நலமாக எதை என்றும் அறிய அம்மையே , அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் என்னிடத்தில் இருந்தால் யான் சோதனை செய்வேன். எவை என்று அறிய அறிய அதற்க்கு தயாராக இருந்தால் இருங்கள். 

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூற இதனால் அப்பனே, அம்மையே யான் கொடுத்துக்கொண்டே இருந்தேன். அனைவருக்குமே!!!

ஆனால் லோபாமுத்திரையோ எப்படி எதை என்று அறிய அறிய உன்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? என்று சிறிது நிறுத்துங்கள் என்று ஆனாலும் பார்த்தால் எவனும் எதை என்று அறிய அறிய என்னிடத்தில் வரவில்லையே அப்பொழுதுதான் புரிந்தது எது? எவை? என்று அறிய அறிய. 

“”””அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் அப்பனே சித்தர்களை நம்பினோர்கள் எப்பொழுதும் கெடுவதில்லை என்பேன் அப்பனே.””””

அறிந்தும் அறிந்தும் ஆனால் கொடுப்பது எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதுவாக ஆகினும் அப்பனே நிச்சயம் யானே கொடுப்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் நொடியில் அப்பனே எவை என்று அறிய அறிய என்ன வேண்டும் என்று யான் கொடுத்துவிடுவேன். ஆனால் அப்பனே நீங்கள் அதை சரியான வழியில் பயன்படுத்துவீர்களா ????? என்பது சந்தேகமே. அதனால்தான் அப்பனே சில சில துன்பங்களை ஏற்ப்படுத்தி அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே எவை என்று அறிய அறிய என் பக்தர்கள் கேட்டார்கள் என்று கொடுத்துவிட்டேன் அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஒரு வேளை கூட என்னைக்கூட நினைக்க மாட்டார்கள் அப்பனே. எப்படியப்பா யான் கொடுப்பது சொல்லுங்கள்?????

அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று புரியப்புரிய கந்தனும் அழகாக (இங்கு) அமர்ந்திருக்கின்றான். பிள்ளையோனும் அழகாக அமரந்திருக்கின்றான். எதை என்று அறிய அறிய அதாவது ஆவணித்திங்களில் எதை என்று அறிய அறிய நிச்சயமாய் (விநாயகர்) சதுர்த்தி அன்று நிச்சயமாய் இங்கு அன்னத்தை இடுங்கள். நிச்சயம் அங்கிருந்து ஓடி வருவான் முருகன் சொல்லிவிட்டேன். 

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அனைத்தும் சமாளித்துக்கொண்டேதான் இருக்கின்றேன் யான். 

அப்பனே எது சரி எது தவறு என்றெல்லாம் அப்பனே எந்தனுக்கே தெரியும் அப்பனே. அனைத்தும் சமநிலைப்படுத்தி அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே நீங்கள் பொறுத்திருந்தால் அப்பனே. அடுத்தபடியும்  எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் கந்தனுடைய வாக்குகள் இருக்கும்பொழுது அனைவருக்குமே வாக்குகள் கிட்டும் என்பேன் அப்பனே. 

விதியின் பயனைக்கூட யான் சொல்லி இருக்கின்றேன். சொல்லியும் வைக்கின்றேன் அப்பனே நலனகளாக. எக்குறைகளும் கொள்ளவேண்டாம் அப்பனே. 

“””மீண்டும் , மீண்டும் இச்சுவடி வரும்ப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே. “””

அப்பனே இதனால் அறியாமல் அப்பனே இருந்தாலும், புரியாமல் இருந்தாலும் யான் அனைவருக்குமே புரிய வைக்கின்றேன் அப்பனே. ஏன்? எதற்க்காக? 

அப்பனே ஒர் மாற்றம் ஓர் முறை அதாவது ஐந்து மாதத்திற்க்கு முன்பே எந்தனுக்கு கோபம் வந்துவிட்டதப்பா. இப்படி எல்லாம் நடக்கின்றார்கள் என்றெல்லாம். யானே பற்ற வைத்து விட்டேன் அப்பனே. 

அப்பனே எதை என்ற அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சித்தர்கள் உங்களுக்கு கொடுப்பதற்க்கு எவை என்று அறிய அறிய தயாராக எவை என்று அறிய அறிய அப்பனே பின் அனுதினமும் பின் அருணகிரி ( சித்தர் அருணகிரிநாதர் - ஆலயசன்னதியில் மேல் முகப்பில் சித்தபெருமான் திருமூலர் உடன் வீற்று உள்ளார் என்பதை இங்கு அறிய தருகின்றோம்) எவை என்று அறிய அறிய இங்கு அமர்ந்து கொண்டுதான் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றான். அனைவரையுமே பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. 

நீங்கள் செய்யாவிடிலும் சரி. செய்தாலும் சரி. ( அகத்திய பிரம்ம ரிஷி சன்னதியில் அபிஷேகங்கள்) எவை என்று அறிய அறிய அருணகிரி  எந்தனுக்கு எவை என்று அறிய அறிய அதிகாலையிலே ( பிரம்ம மூகூர்த வேளையில் ) வந்து செய்து விடுகின்றான் அப்பனே. 

ஏனப்பா உந்தனுக்கு என்று கேட்க அப்பனே எவை என்று அறிய அறிய யான் அமைதியாகத்தானே இருக்கின்றேன். எந்தனுக்கு என்ன வேலை. உன்னை விட்டால், முருகனை விட்டால் என்றெல்லாம் வந்து (தினம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அபிஷேகம், பூசை ஆகம விதிப்படி) செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய யாருக்காக உங்களுக்காக மட்டுமே அப்பனே. அப்பனே (ஆலயம் கட்டுதல்) செய்வது அப்பனே சிறப்பு என்றால் அதை பாதுகாப்பது அதை விட சிறப்பு எனபேன் அப்பனே. (ஆலயம் கட்டிவிட்டால்) செய்து விட்டால் போதுமா? அப்பனே. (பாதுகாக்காமல் இருப்பது) தரித்திரம்தான் என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அதை நன்றாக பாதுகாக்க வேண்டும் அப்பனே. பாதுகாக்கவே தெரியவில்லை என்பேன் அப்பனே. 

எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பிள்ளையோனை அழைக்கின்றேன் அன்றைய நாளில் (விநாயகர் சதூரத்தி) அப்பனே. எவை என்றும் அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் கந்தன் எவை என்று அறிய அறிய வள்ளி தெய்வானையோடு வருவான் அப்பா. அப்பனே எவை என்று புரியப்புரிய ஏழுமலையானையும் வரவழைக்கின்றேன் அன்றைய தினத்தில் அன்னத்தை இடுங்கள். 

அப்பனே நலன்களாக நலன்களாக அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய என்னையே நம்பி வந்து விட்டீர்கள் அப்பனே சத்தியமாகச்செய்வேன் அப்பனே. 

கவலை கொள்ளாமல் இருங்கள். அப்பனே எதை என்று அறிய அறிய விதியில் கூட சில சில நபர்களுக்கு எதை என்று அறியாமல் அப்பனே எவை என்று புரியாமல் இருந்தாலும் அதாவது அப்பனே, நோய்கள் அதாவது எதை என்று அறிய அறிய போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள் இவை எல்லாம் இருக்கின்றது அப்பனே. அவை எல்லாம் யான் மாற்றித்தருகின்றேன் பொருத்திருந்தால். 

அப்பனே மனிதனாக பிறந்து விட்டாலே அப்பனே கஷ்டம்தான் அப்பனே. என்னென்ன கஷ்டங்கள் அனுபவிக்கவேண்டும் அப்பனே எப்படி எல்லாம் எவை என்றும் அறிய அறிய என்னுடத்தில் இருந்து எவை என்று அறிய அறிய அப்பனே சேவைகள் செய்வோர்களுக்கு முடிப்பேன் பிறவியை அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பிறவிக்கடலை எதை என்று அறிய அறிய முடித்துவிடுவேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதனால் அப்பனே பொருத்திருக்க வேண்டும் எத்துன்பம் வந்தாலும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே ஒரு நொடி போதும் எவை கூற என்று கொடுப்பதற்க்கு எந்தனுக்கு தெரியாதா?  உங்களுக்கு அப்பனே ஆனால் பக்குவங்கள் வேண்டும்.

அன்பு மகன்களே , அன்பு பிள்ளை எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரியப்புரிய அப்பனே ஒரு பிள்ளையை எவை என்று கூற தன் தந்தையோ , தாயோதான் தண்டிக்க முடியும். அது போலத்தான் என்னிடத்தில் வந்து விட்டால் தண்டித்துத்தான் யான் கொடுப்பேன். நலன்களாக நலன்களாக வெற்றிகள் வெற்றிகள் உண்டு. 

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கந்தனின் ஆசிர்வாதங்கள் இவ்வம்மை ( ஶ்ரீ சக்தி மாரியம்மன்) எதை என்று அறிய அறிய அழகாகவே இங்கு அமர்ந்திருக்கின்றாள்  சக்தி அவள் எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று புரியப்புரிய அனைத்தும் கொடுப்பாள். 

எவை என்று கூற பெருமானும் சில கர்மாக்களை ஈரத்துக்கொண்டே இருக்கின்றான். ( மனித கர்மங்களை) ஈர்க்கும் சக்தி அங்கு (பெருமாள் சன்னதியில்) வந்து விட்டது. எதை என்று அறிய அறிய இதனால் அனுதினமும் அவனிடத்தில் சிறிது நேரம் உட்காருங்கள். போதுமானது. கர்மத்தை ஈர்த்து வைப்பான்.  (பக்தர்கள் ஒரு அரை மணி நேரமாவது அங்கு பெருமாள் சன்னதி முன் அமர வேண்டும். )

எதை என்று அறிய அறிய பின் பெருமாளுக்கு எவை என்று அறிய அறிய மாலை இட்டிருக்கின்றீர்களோ அதனை எதை என்று அறிய அறிய வாரத்திற்க்கு ஒர் முறையாவது பன்னீரால் கழுவுங்கள். எதை என்று அறிய அறிய ( பெருமாளிடம் உள்ள சாளக்கிராம மாலை) கர்மத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றது அது. 

“””அப்பனே எவை என்று அறிய அறிய கர்மா எதை என்று அறிய அறிய அதி விரைவிலேயே நீக்கிட்டு அனைத்தும் தருகின்றேன்.””” 

அப்பனே இங்குள்ள அனைவருமே ஒரு பக்குவங்களை எதை என்று அறிய அறிய அப்பனே முருகனை பார்த்தவர்கள் தான் என்பேன். எவை என்று அறிய அறிய யான் பார்க்கவில்லை என்று சொன்னாலும் முருகன் உங்களை பார்த்துவிட்டான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒருவருக்கு ஒருவராக அடித்தடுத்து நிச்சயம் வாக்குகள் தருகின்றேன் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அனைவருக்குமே அதனால்தான் இங்குவந்து யான் சொல்லிஇருக்கின்றேன். எவை என்று அறிய அறிய இன்னும் வாக்குகள் காத்திருக்க அப்பனே எவை என்று புரிய இங்குள்ள அனைவருக்குமே என்னுடைய வாக்குகள் உண்டு இங்குள்ள அனைவருக்குமே அப்பனே சொல்கின்றேன். 

நலன்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் அப்பனே இறைவனே மறந்து விடுவீர்கள் நீங்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய சிறிது சோதனைகள் கொடுத்தே கொடுக்கின்றேன் போதுமா? சந்தோசமா உங்களுக்கு அப்பனே? சந்தோசம் இல்லை என்றால் என்னை அழையுங்கள் மீண்டும். 

( அங்கு அமர்ந்த  ஒரு அம்மை வாக்கு கேட்டு தலை ஆட்ட ) எதை என்று அறிய அறிய அம்மையே தலை ஆட்டினாயே உந்தனுக்கு பணங்கள் கொடுத்தால் இங்கு வருவாயா என்ன? 

( அந்த அம்மை வருவோம் என்று சொல்ல)

அம்மையே எதை என்று அறிய அறிய அம்மையே வாய்தான் சொல்கின்றது அம்மையே. 

அம்மையே இதுபோல் எத்தனை பேர்களுக்கு யான் கொடுத்தேன் அம்மையே வரவில்லையே ஏன் வரவில்லை கூறு? 

( அந்த அம்மை இல்லத்தில் குருநாதர் சொன்னபடி திருமணம் நடத்தி முடிந்தது என்று உரைத்தார்) 

அம்மையே எதை என்று அறிய அறிய முடித்தேன் ஆனாலும் பணங்கள் கொடுத்தால் அப்படியே போய்விடுவாய் நீ.அம்மையே மீண்டும் மீண்டும் எவை என்று கூற அனைத்தும் செய்கின்றேன். அம்மையே. 

இப்பொழுது இதைத்தான் அனைவரும் கேட்கின்றார்கள் அனைவருமே. பணம் பணம் என்று அம்மையே. ஆனால் அருள்கள் எவை என்று கூட தேவை உங்களுக்கு கர்மா நீக்கிவிட்டு அருள்களை பெற்றுத்தந்து அனைத்தும் கொடுத்து விடுகின்றேன். அனைத்து குடும்பங்களில் கூட சந்தோசங்கள் நிரம்பும் கவலைகளை விடுங்கள்.

நலன்களாக நலன்களாக எதை என்றும் அறிய அறிய இன்று அனைவருக்குமே முருகனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணம். சொல்லிவிட்டேன். 

எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் அறிந்து அறிந்து எவை என்றும் புரியாமல் கூட பின் சிறிது நேரத்திற்க்கு பிறகு மயில் எவை என்று கூற  பின் மயில் என்று சொல்கின்றார்களே அவ்வாகனத்தில் வந்து உங்கள் அனைவரையுமே பாரத்துவிட்டான். பாரத்ததும் யான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய ஆசிர்வாதங்கள். 

அதனால் சில கர்மாக்களை பின் தீர்த்து முன்னேற்றப்பாதையில் யான் அழைத்துச்செல்கின்றேன். கவலைகள் இல்லை. தைரியமாக இருங்கள். யானே இருக்கின்றேன்.

எவை என்று அறிய அறிய என்னிடத்தில் இருப்பது எவை என்று கூற பின் எவை என்று அறிய  பின் எவை என்று கூற தங்கத்தில் நிற்ப்பதற்க்கு எவை என்று அறிய அறிய சமம் என்பேன். அப்பொழுது எவை என்று அறிய அறிய பின் தங்கம் இருந்தாலும் ஆனால் எவை என்றும் அறிய அறிய உங்களுக்கு சொறிய (புரிய) எவை என்று அறிய அறிய தெரியவில்லையே. ஆனால் அதற்க்கும் என் ஆசிகள் வேண்டும். ஆசிகள் கொடுத்து விட்டேன். சிறிது பொறுங்கள். அதையும் சொறிந்துவிட்டு ( புரிந்துவிட்டு ) செல்லுங்கள் அப்பனே. நலன்கள் அம்மையே. அனைத்தும் கொடுக்கின்றேன் அனைவருக்குமே. 

நலன்கள் நலன்கள் அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் என்பேன் அப்பனே. மீண்டும் இத்தலத்திலே வந்து அனைவருக்கும் ஆசிகள் கொடுக்கின்றேன் அப்பனே. நலன்கள். ஆசிகள்.ஆசிகள் அப்பா

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!