​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 October 2022

சித்தன் அருள் - 1197 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் உரைத்த வாக்கு!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!! 

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் சுவாமிகளின் அக்டோபர்.. கன்னி திங்கள் ஆன புரட்டாசி மாதத்தில் பிறந்தவர். அவருடைய  அவதார ஜெயந்தி தினமான 5 ம் தேதி 5/10/2022 அன்று  அவருடைய 200 வது பிறந்த தினம் அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த வாக்கு.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! வாக்குகளாக!!....

நல்விதமாகவே அப்பனே வரும் காலங்களில் புண்ணியங்களே மிகச் சிறந்தவை!!! அப்பனே அப்புண்ணியங்கள் இல்லாவிடில் நிச்சயம் மனிதனால் அப்பனே வாழவும் முடியாது அப்பனே!!!

பின் நினைத்த காரியங்களும் கூட பின் தாமதமாகவே அதாவது தள்ளிக் கொண்டே போகும்!!

எதை என்பதை நிரூபிக்க அதனால் அப்பனே ராமலிங்க அடிகளான் எதை என்றும் ஆனாலும் அவனுடைய பண்புகளை அதாவது உயர்ந்த பண்புகளை யார் ஒருவர் கடைப்பிடித்து வருகின்றார்களோ!!! அவர்களுக்கு நிச்சயம் பின் எப்பொழுதும் கூட துன்பம் இல்லை அப்பனே!!!!

துன்பங்கள் ஏன்? வருகின்றது? என்பதை பார்த்தால் அப்பனே புரியும்!!!

எதற்காக? எதை என்றும் உணர்த்துவதற்காக!! அதனால் தான் அனுபவித்து அனுபவித்து ராமலிங்கன் பல ரூபங்களில் எதை என்று தெரிந்து கொண்டு அப்பனே பல மனிதர்களுக்கு ஓர் பின் விடிவெள்ளிக்காகவே இப்பொழுதும் கூட திகழ்ந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!

அப்பனே அவனுடைய(வடலூர் சத்திய ஞான சபை) இடத்தில் அனுதினமும் அவன் அன்னத்தை கைகளால் அப்பனே அளித்துக் கொண்டே தான் இருக்கின்றான் இன்னும் சூட்சும சரீரத்தின் வழியாக வந்து!!! அப்பனே!!!

ஆனாலும் நற்பண்புகள் அப்பனே மனிதனிடத்தில் குறைய ஆரம்பித்து விட்டது நற்பண்புகள் அப்பனே எப்பொழுதெல்லாம் குறைகின்றதோ?? அப்பொழுதெல்லாம் கஷ்டங்கள் மேல் நோக்கி வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

இதனால் பொய்கள் தாண்டவம் ஆடிக்கொண்டே தான் இருக்கின்றது அப்பனே!!!

நிஜத்திற்கு வாருங்கள் அப்பனே!!! சரியான முறையில் நற்பண்புகள் நம்மிடையே பின் நிச்சயம் எதை அதாவது பின் மனிதனிடத்தில் இல்லையப்பா!!!!!

அப்படி இல்லாவிடில் நிச்சயம் எப்படி  திருத்தலங்களுக்குச் சென்று நீங்கள் வணங்கினால் பின் எப்படி நல்லதாகும்???

ஆனாலும் அப்பனே இதை உணர்த்துவதற்காக திருத்தலங்களில் கூட சென்று சென்று சென்று  சென்று அப்பனே இறைவனை தரிசித்து தரிசித்து அப்பனே அங்கு உள்ள பல மனிதர்களுக்கும் கூட அப்பனே அன்னத்தை அளித்துள்ளான்! பின் ராமலிங்க அடிகளான்!!! 

இதை இவை என்று கூட உயர்ந்த லிங்கம்!!!!!
எதை எவற்றினின்று உயர்ந்த உள்ளம்!!!!
உயர்ந்த வானம்!!!
உயர்ந்த நட்சத்திரம்!!!
அப்பனே உயர்ந்த லிங்கம்!!!
அதைவிட சிறந்தவை உயர்ந்த சூரியன்!!! உயர்ந்த சந்திரன்!!! என்பேன் அவந்தனை யான். அப்பனே!!!! 

அவன் நிஜத்தில் ஒரு வள்ளலே என்பேன் அப்பனே!!!

ஆனால் அவனைப் போன்று அதாவது நிச்சயம் மனித ரூபத்தில் பிறந்து அப்பனே!!!...... தெய்வமே எதை என்று தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு அப்பனே அனைத்தும் எதை என்று அறியாமலே........

இப்பொழுது கூட அப்பனே ஏன்? இறைவன் திருத்தலத்திற்கு செல்கின்றோம்!! என்று தெரியாமல் சென்று கொண்டு இருக்கின்றான் மனிதன் அப்பனே அப்படிச் சென்று அடைந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பனே!!

ஆனால் மனதில் தீய எண்ணங்களை விட்டுவிட்டு நல் எண்ணங்களோடு அப்பனே உன்னை தேடி வருகின்றேன்!! ஏதாவது செய் என்று!!! எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட!!!

ஆனாலும் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!! மறைமுகமாகவே சொல்கின்றேன் அப்பனே!!!

சொந்த பந்தங்களை காணும் பொழுது அப்பனே சொந்த பந்தங்கள் ஏதாவது கொடுக்கின்றார்களா என்று எதிர்பார்த்துதான் நீங்கள் செல்கின்றீர்களா??? 
நிச்சயம் இல்லை அப்பனே!!!

அதுபோலத்தான் அப்பனே இறைவனை காண வேண்டும். பின் எவற்றினென்று உணர பின் ஏதும் எதிர்பார்க்காமல் அவந்தனுக்கு எதை என்று அறியாமல் அவந்தனை தரிசனம் செய்ய வேண்டுமே தவிர அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லுதல் ஆகாது என்பேன் அப்பனே!!!

நலமாகவே அப்பனே இதை எவற்றை என்று கூற வரும் காலங்களில் அப்பனே பக்திமான்களுக்கு பல பல இன்னல்கள் வரும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை அப்பனே!!!! எதை என்றும் கூட!!.... 

ஆனாலும்  பல மனிதர்கள் அப்பனே எவை எதை என்று கூட இறைவனையே பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!! இதுதான் பின் மிக்க அதுவும் சித்தர்களின் பெயரை வைத்துக் கொண்டே அப்பனே இதுதான் ஆனால் கர்மா என்ன செய்கின்றது? என்பதை கூட அதாவது அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!!

அப்பனே அனைத்தும் சொல்கின்றார்கள் ஆனால் அவனைப் பற்றி அவந்தனுக்கு தெரிந்திருக்கவில்லை அப்பனே இதுதான் குறையப்பா!!!

அவன் நிலைமையை அவன் அறிந்திருக்கவில்லையே!! அப்பனே நாளைப் பொழுதில் என்ன நடக்கும்?? என்பது கூட அறியவில்லையே அப்பனே!!!
அப்பொழுது பார்த்துக்  எண்ணி கொள்ளுங்கள்!!!

எப்படி பொய்யன்!!! என்று கூட அப்பனே!!!...

அதனால் அப்பனே மனதில் நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே பின் நிச்சயம் இவ்வள்ளல் பெருமானின் அப்பனே பண்புகளை பயன்படுத்தி உயர்ந்த லட்சியங்களை அடையுங்கள்!!! அப்பனே பிறவியின் கடலை அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!

அதாவது ராமலிங்கன் பின் எதை.. அவன் வகுத்ததை சரியாக பயன்படுத்தி சென்று இறைவனை நேரடியாக தரிசிக்கலாம் அப்பனே!!!!

இறைவன் ஒளி வடிவமாகவே நிச்சயம் காட்சியருள்வான் அப்பனே!!

அவந்தன் எதை என்று கூட பார்க்காத இடமில்லை அப்பனே!!! அவன் எங்கெங்கு? சென்றான் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!

ஆனாலும் எதை எவற்றினென்று கடைசியில் அப்பனே அவந்தனும் தர்மம் ஏந்தினான் அப்பனே!!!!

தற்பொழுது பின் நடராசன் அதாவது சிதம்பரம் என்னும் இடத்தில் அப்பனே அவந்தனுக்கே உண்ண வழிகள் இல்லையாயிற்று அப்பனே!!

இதை எப்படி என்பதை கூட அப்பனே பின் சில சூட்சமங்களை அதாவது உயர் ஞானியர்களின் பல பல வழிகளில் எதை என்று கூட அதாவது பொய்யான மனிதர்கள் கூட பல வழிகளில் கூட ஞானியர்களை கூட எவை எதை என்று கூட மறைத்து விட்டனர் அப்பனே!!

ஏனென்றால் அவன் நிலைமைகள் புரிந்து கொண்டால் மனிதன் நல்லோர்களாக மாறிக்கொண்டு எதை என்று அறியாமலே பின் வாழ்ந்து விடுவார்கள் என்று பல பொய்யான பக்தர்கள் மறைத்து விட்டனர் அப்பனே!!

ஆனாலும் இப்பொழுது கூட அது போல தான் செல்கின்றது அப்பனே!!

ஆனாலும் கலியுகத்தில் யாங்கள் நிச்சயம் விட மாட்டோம்!!! அப்பனே!! பொய்யான பக்தர்களை அப்பனே நிச்சயம் எவை எதை என்று கூட  சித்தர்களின் நாமத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றி பிழைப்புகள் நடத்துகின்றார்கள் அப்பனே!! ஆனால் அவையெல்லாம் வீணப்பா!! வீணப்பா!! நம்பி விடாதீர்கள்!! நம்பி விடாதீர்கள்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

அப்பனே கர்மா ஒருவரையும் எதை என்று விட்டு விடாது என்பேன் அப்பனே!!! எதை என்று கூட எவற்றினின்று கூட!!....

அப்பனே நீ போகும் பொழுது உன் நிழல் எதை என்று அறியாமலே பின் தொடர்ந்து பின்னாலே வரும்!!... அதுபோலத்தான் கர்மமும் கூட புண்ணியமும் கூட அப்பனே இதை எவற்றினின்று கூட!!...

ஆனாலும் இவ்வளவு அப்பனே பெரிய பக்தன் அதாவது எதை எவற்றின் என்று கூட ராமலிங்கஅடிகளான் உயர்ந்த ஸ்தானத்தில் எதையென்று எவற்றை என்று கூட பக்தியை அவந்தனுக்கு பக்தியை தவிர வேறொன்றும் தெரியாது!!!

அவந்தனுக்கே ஒரு வழியில் கஷ்டங்கள் வந்துவிட்டது இதை என்று அறியாமலே அப்பனே அதைத்தான் சிதம்பரத்தில் கூட பிச்சை ஏந்தினான் அப்பனே!!! எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி அப்பனே மறைமுகமாகவே!! மறைமுகமாகவே!! அப்பனே பல வழிகளிலும் கூட ஆனாலும் நல்லதையே செய்து கொண்டிருந்தான் திடீரென்று அவந்தனுக்கு எதை எவற்றினென்று கூட உண்ண உணவுகள் கூட கிடைக்கலாகாமல் அப்பனே ஊர் ஊராக திரிந்தான் அப்பனே!!! அங்கிருந்து பல வழியிலும் கூட...... ஆனாலும் இறைவன் இல்லையா!!! இறைவன் எங்கு இருக்கின்றான்?? என்றெல்லாம் !!!.....

ஆனாலும் நம்தனுக்கு யாரும் இல்லையே!!!! தாய் தந்தையர் இல்லையே, எதை என்று கூட யாரும் இல்லையே!!!

இறைவனையே நம்பிக் கொண்டிருந்தேனே!!! என்றெல்லாம் நிச்சயம் சுற்றி சுற்றி பின் பல ஆலயங்களுக்கு சென்று வந்தான் அப்பனே!!

ஆனாலும் ஒரு ஆலயத்தில் கூட அவந்தனுக்கு விடிவெள்ளி கிடைக்கவில்லை!!! அப்பனே ஆனாலும் நம்தனக்கு இறைவன் தான் துணை நிச்சயம் அவந்தன் வழி காட்டினால் தான் உண்டு!!!! என்று மீண்டும் மீண்டும் பல திருத்தலங்களுக்கு சென்றான்!!

அப்பனே எவை எதை எவற்றினின்று ஆனாலும் ஒன்று கூட நடக்கவில்லை மீண்டும் மீண்டும் அப்பனே சென்று பல வருடங்களாக சென்று சென்று கடைசியில் அப்பனே அதாவது மதுரை தற்பொழுது!!! பின் எதை எவற்றை என்று கூட மீனாட்சி தாய், தந்தையிடம் பின் சரணடைந்து விட்டான்.

பின் எங்கும் எங்கும் தேடினேனே!!!!........ இறைவா!!! உன் அருள் கிட்டவில்லையே!!!! ஆனால் யான் உன்னை எங்கு தான்?? கண்டெடுப்பேன்!!!!!!

இப்பிறவியும் வீணாகப் போய்விட்டதே!!!!!.... யான் எதை எப்பொழுது எவற்றை எப்பொழுது உன்னை.........

அம்மையே மீனாட்சி!!! அப்பனே ஈஸ்வரா!!!! என்றெல்லாம்!!!!

ஆனாலும் பின் படுத்து உறங்கினான் ஆனால் இப்பொழுது கூட அவன் படுத்த இடம் எதையென்று எவற்றையென்று யான்.. மதுரை மீனாட்சி தன்னிலே எவை என்று கூட ஒரு குளம்(பொற்றாமரை குளம்) இருக்கின்றதே அதன் எவை எதை என்று பின் இரண்டு அடியில் உள்ள பின் எதை எவற்றினின்று பின் இறங்கும் தளத்திலே(படிக்கட்டு) படுத்து உறங்கினான்.

நீரை மட்டும்!! நீரை மட்டும்!! பின் அருந்தி வந்தான்!!

ஆனாலும் அங்கு வந்தவர்கள் இவந்தனை பைத்தியம் என்றும் சொல்லிவிட்டார்கள்!!! இவன் பைத்தியக்காரன் என்றெல்லாம்!!!......

ஆனாலும் அவந்தன் உள்ளம் எதை என்று எதிர்நோக்கும் அளவிற்கு ஆனாலும் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக!!!!!

இவ்வளவு அலைந்தோமே!!! இவ்வளவு திரிந்தோமே!!!
பின் நம்தனக்கு எவ்வாறு!!! இறைவன் செவி சாய்க்கவில்லையே!!! என்று!!! 

ஆனாலும் இதையென்று அறிந்து ஆனாலும் எவற்றிலிருந்து புரிந்தும் என்றும் நிலைமையானது எவற்றையும் அறிந்து அறிந்து அப்பனே எதை என்று உணராத அளவிற்கும் கூட அப்பனே!!!

ஆனாலும் மீனாட்சி தாயே!! அவந்தனுக்கு!!! எதனை எவற்றை என்று உணர உணர எதை என்று எவை என்றும் கூட.... நிமித்தம் காட்டி காட்டி எதை என்று உணராத அளவிற்கும் கூட பின் நலமாகவே!! நலமாகவே!! எதை என்றும் கூட ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்த அளவிற்கு கூட.....

 மீனாட்சி தாயே !!!மீனாட்சி தாயே வந்து விட்டாள்!!! எவற்றை என்று கூட....

ஆனாலும் இவற்றின் பாதைகளை அனுபவிக்க! அனுபவிக்க! என்றெல்லாம் பின் மீனாட்சி தாயே!! ரூபத்தில் வந்து பின் அவந்தனை பின் எதை என்று அழகாகவே எதை எவற்றை என்று கூட!!....

ஆனாலும் மகனே!!! என்று ஆனாலும் சந்தோஷம்.... இப் (வள்ளலார்) பெருமானுக்கு எதை என்று!! அதாவது வள்ளல் பெருமானுக்கு!!! அவந்தனுக்கு வள்ளல் என்பதே பொருத்தமாக இருக்கின்றது!!!!

ஆனாலும் இதை எவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாமல் கூட யான் யானே!! ஒரு அனாதை என்று மனதில் சிந்தித்துக் கொண்டான்!!!

ஆனாலும் அவ் மீனாட்சி தேவியோ!!!!! பின் நீயும் அனாதை இல்லையப்பா!!!
நீ என் பிள்ளை தான் என்று கூற!!!

ஆச்சரியங்கள் !!!!  தன் மனதில் நினைத்து உள்ளோமே அதை இவ் அம்மை எப்படி கூறுகின்றாள்?! என்பதை கூட.......

ஆனாலும் வந்தவை எதை என்று அறியாத அளவிற்கும் அவந்தனுக்கு புரிந்தும் விட்டது!!!!!

இவள்தன் மீனாட்சி தாயே!!! என்று!!!!!!!

ஆனாலும் தாயே!!! வந்து விட்டாயா!!! வந்து விட்டாயா!!!!

ஏன்? எதற்கு? என்னை படைத்தாய்!!!!

எந்தனுக்கு ஏன்?? இந்த பிறவிகள்!! கொடுத்தீர்கள்!!!

ஆனாலும் இதை எவற்றினின்றும் அறியாத!!!

ஆனாலும் பிறவிகள் பின் எதற்காக? யான் எடுக்க வேண்டும்? எதை என்று கூற ஆனாலும் யாரும் இல்லையே!!! என்று!!

ஆனாலும்..... மகனே!!! யான் இருக்கின்றேன்!!!
உன் தந்தை பின் இவ் சுந்தரன்( மீனாட்சி சுந்தரேஸ்வரர்) அதாவது எதை அமைதியாக இருக்கின்றான்!!!

உந்தனுக்கு இவ்வுலகத்தில் என்னதான் வேண்டுமென்று ??கூறு!!
என்றிணங்க!!! 

ஆனாலும் நிச்சயமாய் அவ் ராமலிங்கனும் எதை எவற்றினின்றும் அறியாத அளவிற்கும் கூட... ஆனாலும் உண்டு உண்டு என்பதை கூட முதலில் பின் கேட்டான் எதை என்று கூட...

பின் அம்மையே!!!! நல்லோர்கள் வாழ வேண்டும்!!!
அவைதன் உணர!! உணர!! இவன் நல்லோர்களுக்கு முதலில் இறை பலத்தை கூட்ட வேண்டும்!!!
முதலில் இதை செய்!!!

ஆனாலும் நோய் நொடிகள் வாட்டுகின்றது!!! முதலில் அதை எடுத்திட வேண்டும்!!!

ஆனாலும் இதனையும் நிமித்தம் காட்டி காட்டி ஆனாலும் இவை தன் உணர உணர அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகத்தில் பின் எதை யாரும் பசிக்க( பசித்திருக்க) கூடாது என்று பின் எதை எவற்றை என்று கூட நிச்சயம் பின் பின் அதற்கும் பதில் அளிக்க வேண்டும்!!!
ஆனாலும் நிச்சயமாய் உயர்ந்த உள்ளத்தோடு!!!!

 ஆனாலும் பின்!!!
 மீனாட்சி தேவி!!!!! நிச்சயம் இவையெல்லாம் எப்படி சாத்தியம்?????!!!!

ஆனாலும் நல்லோர்கள் இருக்கின்றார்களா????
அதற்கு நிச்சயம் எதை என்று எவற்றை என்று ஆனாலும் பின் எதை என்று கூட மகனே!!! ஒரு பாடலை பாடு இப்பொழுது என்று கூற!!!!

வள்ளல் பெருமானும் பின் நிச்சயமாய் பாடிட்டான்!!!!

துன்பங்களா!!!
இன்பங்களா!!
எதனைக் கொண்டு வந்தீர்களா???
வந்தது உண்டா!??
போனது உண்டா??
இருப்பிடம்
எங்கு உள்ளதடா??

உள்ளதடா!! 
உன் இதயத்தில்!!
இறைவனை
ஜோதி
ரூபமாக 
கொண்டு
தியானங்கள்!!
தியானங்கள்!! 
என்றே!!!.... 
உயர்ந்து 
விடலாமடா!!

அவ் மனதை!!
உன் மனதை!!
உயர்ந்து!!
உயர்ந்து!!
செல்லச்!!
செல்ல!!
நீயும் 
உயர்வான
இடத்திற்கு
சென்று
கொண்டே
இருப்பாயாடா!!!

இருப்பாயாடா!!
நலன்கள்!
குற்றங்களை
மற்றவரை
சாடி, சாடி
வந்தாலும்
இதனையும்
என்றறிவதற்கு
காலங்கள்
சென்று கொண்டே !!
சென்று கொண்டே!!..

ஆனாலும் 
எதை பின்
களவு!
கோபம்!
பொறாமை!
போட்டிகள்!
மற்றவரை
குறை சொல்லுதல்!
இவை இதை என்று இவற்றையெல்லாம்
விட்டொழித்தாலே
பின் ஈசன்!!
பின் ஈசனே!!
பின் குடி கொள்வான்
இதயத்தில்!!
உன் இதயமே!
அதாவது
உன் மனமே! கோயிலாகும்!
கோயிலாகுமடா கோயில் ஆகுமடா!!

இதற்கும் 
பல வழிகள்
அங்கும்!
இங்கும்!
அலைந்தும்!
திரிந்தும்!
யான்
எதற்கு எடுத்து
எங்கே?!
இறைவன்
இருக்கின்றான்! 
என்று
கண்களும்
ஓய்ந்ததடா!!
கால்களும்
ஓய்ந்ததடா!!
கைகளும்
ஓய்ந்ததடா!!
தோற்றமும் 
முதிர்ந்து
ஆயிற்றே!!

ஆயிற்றே!!
என் உள்ளமும்
பின் நீங்காத
பண்புகள்
உயர்ந்த
இடத்தில்
இருப்பதால்
என் மனமே
கோயிலாயிற்று!!!

ஆயிற்று !!அதனால் 
அங்கே என் ஈசனும்
என் பார்வதியும்
வந்து அமர்ந்தார்கள்!!
இதனால்
அங்கே ஒரு 
ஒளி ரூபம்!!
அனுதினமும்
நானும் 
எதை எதற்கு? 
தெரியாமல்
என் மனதிலே
தீபத்தை
ஏற்றி வைத்தேனடா!!

அவ் மனதில்
தீபத்தை 
ஏற்றி!! ஏற்றி!!
அனைத்தும்
கேட்டுக்கொண்டே
இருந்தேனடா!!!
இருந்தேனடா!!!

இதற்கும்
 பல வழிகள்!!
 பல ஞானங்கள்!! அடைவதற்கும்
 சமமான 
எண்ணங்கள் பெற்றேனடா!!!

பெற்றேனடா!!
பல இன்பங்களை
கடந்து கடந்து துன்பங்களைக்
கடந்து கடந்து
கடைசியில்
இறைவன் 
எங்குள்ளான்?
என்பதை கூட அறிந்தேனடா!

அறிந்தேனடா!!
என் மனதில்
தூய்மையான 
மனதில் உள்ளானடா !!
உள்ளானடா!!

 அதற்கும் !
அதற்காகவும்
நீங்கள் பல 
வழிகளிலும் கூட முயற்சிகள்
எடுத்து எடுத்து பல திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து கடைசியில் பார்த்தால்
ஒளி உன்னுள்
புகுந்ததடா! புகுந்ததடா!!

ஈசா !!ஈசா !!
அம்மா !!தாயே!!
மீனாட்சி தேவியே!!
வருக !!வருக!!
என் இதயத்தில்
கடைநாள் வரையிலும்
குடிகொள்க!!!
குடிகொண்டு!!
குடிகொண்டு!!
என்னை 
வழி நடத்து!!!
வழிநடத்து!!!!

கடைநாளும் உன் பிள்ளையாக
இருக்க! இருக்க!
 இன்னும் 
ஞானங்கள் 
தோன்றட்டும்!!
தோன்றட்டும்!!

என்று அழகாகவே!! பாடி முடித்தான்! வள்ளல் பெருமான்!!!!!

ஆனாலும் எதற்கு எதை எவற்றினின்று உரையாகவே!!! ஆனால் இன்றளவும் வள்ளல் பெருமான் பின் அதாவது எதை எவற்றை என்று கூட பின் அழகாகவே அவந்தன் இடத்திலே பின் அனுதினமும் நல்லோருக்கு அதாவது தூய மனது உள்ளோருக்கு தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து தினம் அவன் கையாலே வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான்!!!

அதனால் மனிதர்களே!!!
அதாவது எதை என்று உணராத அளவிற்கும் கூட தெரியாத அளவிற்கும் கூட வருத்தங்கள் இருந்தாலும் அப்பனே!!!!

"" நல்முறையாய் என்னை நிச்சயம் காக்க வேண்டும் வள்ளல் பெருமானே!!!!
பக்தி என்பதைக் கூட எந்தனுக்கு தெரியாமல் போய்விட்டது என்று கூட நிச்சயம் அப்பனே இதையன்றி கூற அவந்தனிடத்தில் சென்று தூய மனதோடு தூய மனிதனாக அங்கே நிச்சயம்  எதையென்று அறியாமலே உணவு அருந்தினால் அவனே பரிமாறுவான்!!!!!
அப்பனே கர்மங்களையும் ஏற்றுக் கொள்வான் அப்பனே!!!! எதை என்று அறியாமலே!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அனைத்தும் எதை என்று கூட யார் இங்கு அப்பனே எதை என்று கூற எவற்றை என்று கூற அதனால் அப்பனே பின் நல் ஒழுக்கங்கள்!!! அப்பனே மற்றவர்களுக்கு உதவி செய்தல்!! அப்பனே பல உயிர்களுக்கு பின் துன்பம் விளைவிக்காத அளவிற்கு உயர்ந்த உள்ளத்தை படைத்தல்!!!

அப்பனே!! இப்படி இருந்தாலே அப்பனே வள்ளல் பெருமான் உன் இல்லத்திற்கே!!!... பின் எதை என்று எவற்றை என்று தேடி வந்து விடுவான் அப்பனே!!!

உயர்வான!! பின் உயர்வான!! இடத்திற்கே!!! பின் அழைத்துச் செல்வான் என்பேன் அப்பனே!!!

இவையெல்லாம் விட்டுவிட்டு அப்பனே எந்தனக்கு அவை வேண்டும் !!இவை வேண்டும்!! என்று திருத்தலங்களுக்கு சென்றாலும் அப்பனே நிச்சயம் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!! இறைவனும் ஒன்றும் கொடுக்க மாட்டான் அப்பனே!!!

எங்களைப் போன்ற ஞானியர்கள் எதை என்று அறியாமலே ஆசிகள் இருந்தால் தான் அப்பனே!!! உடனடியாக இறைவனும் சற்று மரியாதையாகவே எதை என்று கூட அப்பனே!!!!

 """""""""சித்தன் வாக்கு சிவன் வாக்கு!!!!!!!!!!!! என்பதை கூட..

அனைவரும் தெரிந்ததே!! இதை....

பல யுகங்களாக வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

எங்கள் அருளிருந்தால் அப்பனே ஈசன் கூட....

அகத்தியன் மைந்தனா?! இவன்!!!!!

அகத்தியன் பக்தனா?!! இவன்!!!

போகனின் பக்தனா?!இவன்!!

என்று கூட பின் ஈசனே அழைப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பான் அப்பனே!!!

ஆனால் ஒருவரும் அப்படி இல்லையப்பா!!!!!

அநியாயங்கள்! அக்கிரமங்கள்! பொய் சொல்லுதல்! கோபப்படுதல்! அப்பனே யார் !?ஒருவன் கோபப்படுகின்றானோ!?
அவனிடத்தில் நிச்சயம் அப்பனே உயர்ந்த பண்புகள் இருக்காது என்பேன் அப்பனே!!!

நான்!!! நான் !!!என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அப்பனே அவன் நாவுக்கே!!(நாக்கு) எதையென்று யான் சொல்வது??
அப்பனே நாவுக்கே வினை சேர்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

இதைத்தான் முன்னோர்கள் எதனை நம்பி!! எதனை நம்பி !!ஆனாலும் அப்பனே இவை எதை என்று இன்னும் இன்னும் இதை பயன்படுத்த பயன்படுத்த அளவிற்கும் கூட அப்பனே இவ்வுலகத்தில் நடைமுறைகள்! நடைமுறைகள்! உண்டு! உண்டு! என்பதை எல்லாம் அறியாத அளவிற்கும் கூட.. 

ஆனாலும் அப்பனே மென்மேலும் முயற்சிகள் எவை எவற்றினின்று செய்வது? ஆனால் உள்ளமாகவே அப்பனே பின் எதை எவற்றை என்று கூட ஆனாலும் அப்பனே பின் எதை என்று அவற்றின் தன்மைகளும் அறிந்து அறிந்து மீண்டும் ஆனால் அமைதியாக கிடந்திடவில்லை அவ்வள்ளல்!!!!

ஆனாலும் பின் மீனாட்சி தேவியும் பார்த்திட்டு...

நிச்சயமாய் மகனே!!! என்னிடத்தில் இருந்து கொண்டு நிச்சயம் இங்கே உந்தனுக்கு அனைத்தும் கிட்டும்!!! என்று கூற... 

ஆனால் அவ்வள்ளல் அதனால்தான் வள்ளல் பெருமான் என்று அவனை யான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றேன்!!!

ஆனாலும் தேவியே!!! அம்மையே நீ சொல்லி விட்டாய்!!!

ஆனாலும் இன்னும் ஏழ்மைகள் !!அதாவது ஒன்றும் இல்லாமல் எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள்!! அவர்களை எல்லாம் யான் காக்க வேண்டும்!!!!
ஏதாவது ரூபத்தில்!! அதாவது நீ எந்தனுக்கு ஒரு ஒளியை கொடு !!!என்று உணர!!!

நிச்சயம் பின் இராமலிங்கனே.... கொடுக்கின்றேன்!!!

ஆனாலும் நீ மனிதனை திருத்த முடியாது!!!

ஆனாலும் எதற்கு என்று கூட ஆனாலும் இவை தன் உணர!! உணர  !!அவ்வள்ளல் பெருமானும் எதை என்று அறிய.......

பின் தாயே!!!

யான் எவரிடத்தில் கேட்பேன்???

எந்தனுக்கோ யாருமில்லை!!!

இவ் அனாதைக்கும் கூட நீ சொல்லிவிட்டாய்!!! என்று கூற!!...

மீனாட்சி தேவியே!!  கண்கலங்கி விட்டாள்!!!!

நீ அனாதை இல்லையப்பா!!!

நிச்சயம் உந்தனுக்கு ஒரு ஒளி தருகின்றேன்....அவ் ஒளியிலே அனைத்து தெய்வங்களையும் நீ பார்ப்பாய்!!! மனிதர்களையும் பார்ப்பாய்!! யாரெல்லாம் எதையென்று அறியாமல் கஷ்டங்கள் படுகின்றார்களோ!! அவர்கள் இல்லத்தில் பின் நீ தேடி சென்று தேடிச் சென்று நலன்களை செய்வாய்!! என்று கூட மீனாட்சி தேவி உத்தரவிட்டாள்!!!! 

அதனால்  அவ் ஒளியை பயன்படுத்தி கொண்டு இவ்வுலகத்தை ஆராய்ந்தான்!!!! வள்ளல்!!

ஆனாலும் பின் ஒவ்வொருவரையும் கூட ஆனால் பின் பார்த்தால் முக்கால் பங்கு கஷ்டங்கள் தான் நிறைந்து இருக்கின்றது என்பதை கூட தெளிவாக.........

ஆனால் எப்படி போக்குவது??? எதனை எப்படி எதனையென்று அறிய ஆனாலும் இதற்கு என்ன காரணங்கள் ??? என்று பின் அவ் ஒளியிடம் கேட்க!!....

கேட்ட பொழுது இதற்கு கர்மா!!!!

ஆனாலும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதற்கிணங்கவே பல மனிதர்களுக்கு பல அன்ன சாலைகளையும் கூட!!!.......

பின் நடந்தே சென்றான் இவ்வுலகத்திற்குள் எதை என்று கூட அங்கெல்லாம் சென்று சென்று அன்னத்தை படைக்க வேண்டும்.. மனிதர்களே!!!

திருந்தி கொள்ளுங்கள்!!! திருந்தி கொள்ளுங்கள்!!! தேவையில்லாததை பேசாதீர்கள்!! பின் ஒழுக்கத்தோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்!! பிற உயிர்களை கொல்லாமல் இருங்கள்!!! என்றெல்லாம் கூறி!! கூறி!!!

ஆனாலும் பல மனிதர்கள் அப்பனே கேட்கவில்லை!! செவியும் சாய்க்கவில்லை!!

ஆனால் அவர்கள் கடைசியில் பார்த்தால் எப்படி கஷ்டங்களில்!!.........

ஆனால் இவந்தன் சொல்லுவதை அதாவது வள்ளல் பெருமான் சொல்லுவதை சில மனிதர்களும் கேட்டார்கள்!!!!

அதன்படியாகவே நடந்து விட்டார்கள்!!!! அப்பனே அவர்கள் உயர்ந்த இடத்திலும் கூட நிற்கின்றார்கள் அப்பனே இப்பொழுதும் கூட!!!...... அவர்கள் பிறப்பு அப்பனே விசித்திரமாகவே உள்ளது !!இப்பொழுது கூட அன்னதானத்திற்கு அவர்கள் வழிகள் செய்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!! அங்கு!!( வடலூர் சத்ய ஞான சபை அன்னச்சாலை)
 அவந்தனுடைய இடத்தில் கூட அப்பனே!!! 

அப்பனே திரைகள்!! எதை என்று அறியாமல் அப்பனே மாயத் திரையை கிழித்து எறியுங்கள் அப்பனே சொல்லி விட்டேன்!!! அப்பனே!!!

அவ் மாயையில் கூட சிக்கிக்கொண்டே இருந்தால் லாபம் இல்லையப்பா!!! ஒன்றுமில்லையப்பா!!!!

அப்பனே பின் மனிதன் என்பவன் மாயை !! மாயையால் என்னதான் ?செய்ய முடியும்????

அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே எவை என்று கூட இதனால் மனிதன் என்பது அழியக்கூடியவன்!! அழியக்கூடியவனுக்கு அப்பனே என்னென்ன தேவை???

அப்பனே ஒவ்வொரு நொடியிலும் நீ அழிவின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றாய்!! அப்பனே அது மட்டும்!! அது மட்டும்!! அப்பனே நீ புரிந்து கொள்ள வேண்டும்!!! அதை நீ புரிந்து கொண்டால் அப்பனே நீ உயர்ந்த மனிதன் ஆகிக்கொண்டு விடுவாய் அப்பனே. பின் இறைவனே உன் பக்கத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

அதனால் பின் நாட்கள் செல்ல!! செல்ல!! அப்பனே!! எங்கு நீ??!.....ஓடிக்கொண்டிருக்கின்றாய்??? மரணத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்கின்றாய் !! அப்பனே!!!

ஓட்டங்கள் !! சாதாரணமா??? அப்பனே!! 

எதை என்று கூட அவ் ஓட்டத்தில் கூட பொய்! பொறாமை! பின் எதை என்று அறியாமல் போட்டிகள்! இதனுடனே நீ செல்கின்றாய் அப்பனே!!!

ஆனால் அப்பனே இவையோடு ஓட்டமாகவே சென்று கொண்டிருந்தால் அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லையப்பா!!!

பின் அவையே உன்னை கொண்டுணர்ந்த பொழுதிலும் பின் புண்ணியங்கள் இல்லையப்பா!!!

ஆனால் ஓடும்பொழுதே!!.... அதாவது பின் சாகும் நேரத்தை !! எதை என்று அறியாமலே சாகும் நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!!

கடைசியில் நீ சாகும் பொழுதும் அப்புண்ணியங்கள் உன்னிடமே வந்து!!... அப்பனே இறைவனையும் காட்டும்!!! மேலோகத்தையும் காட்டும் !!! பின் விண்ணுலகத்தையும் காட்டும்!! பல உலகங்களையும் காட்டும் !!! அப்பனே சௌகரியமாக இருக்கும் அப்பனே!!!! எவை என்று கூற பின் இறைவனே உன்னை அழைத்துச் செல்வான் சொர்க்கத்திற்கு!!!! எதை என்று அறியாத அளவிற்கு பல மரியாதைகள் கொடுத்து அப்பனே!!!

பின் பிறவியே!!! உன்னிடத்தில் கேட்பான் அப்பனே!!! பிறவி !! எப்பேர்பட்ட பிறவி!! வேண்டும்?? என்பதைக் கூட!!

நீயே தேர்ந்தெடுத்தும் வரலாம்!!!!

இல்லையென்றாலும் எந்தனுக்கு பிறவிகள் தேவையில்லை என்றும் கூறிவிடலாம்!!!! அப்பனே!!!

ஆனாலும் ஒவ்வொன்றிற்கும் அப்பனே இன்னும் ஏராளமான விளக்கங்கள் உண்டு உண்டு அப்பனே!!!

அதனால் நிச்சயம் அப்பனே ராமலிங்கம் அதாவது ராமலிங்கனின் முறையை( சுத்த சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!
உயர்ந்த இடத்தை அடையலாம் என்பேன் அப்பனே!!!!

ராமலிங்கனின் பொன்மொழிகளை பின்பற்றியவர்கள் நிச்சயம் தாழ்ந்து விட மாட்டார்கள்!!! தாழ்ந்து விட மாட்டார்கள்!!!

இது சத்தியம் !! சத்தியம்!! அப்பனே!!!

அப்படி தாழ்ந்து விட்டாலும் என்னை கேளுங்கள்!!! உங்களைப் பற்றி யான் சொல்கின்றேன் அப்பனே!!! நீ என்ன தவறு செய்தாய்? என்பதை கூட அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே! நீ என்ன? தவறு செய்திருக்கின்றாய்!! என்பதை கூட யான் கண்டு கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

அப்பனே!!! அகத்தியன் என்பவன்!!! யாரயென்று? அப்பனே!! உணர்ந்து கொள்வீர்கள் !!! அப்பனே வரும் காலங்களில்!!.......

அப்பனே!! சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றேன்!!! அப்பனே எதை என்று அறியாமலே சுற்றித் திரிந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!! ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!! எவ்வாறு என்பதையும் கூட அப்பனே!!!!

நிச்சயம் அப்பனே!! எதை என்று அறியாமல் எவை என்று தெரியாமல் நிச்சயம் சித்தர்களோடு விளையாடாதீர்கள்!! விளையாடாதீர்கள்!! என்றெல்லாம் சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஆனால் எதை என்று அறிய பின் வந்ததற்குப் பிறகு பின் அகத்தியனை வணங்கினேனே!!..... என்று என்மேல் குற்றம் சாட்டாதீர்கள்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

சித்தர்கள் எதை என்று கூட மனித குலத்தை காக்கவே அவதரித்தவர்கள் அப்பனே!!! ஒவ்வொருவரையும் கூட!!!

அப்பனே!! இப்பொழுதும் கூட நன்மைகள் செய்ய வேண்டும் என்று துடித்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

நன்மைகள் செய்வேன்!! அப்பனே!! சொல்லிவிட்டேன்!!!

என்னுடைய அருள்கள் பலமாக பலமாக சித்தர்கள் எல்லோரும் சேர்ந்து சித்தர் உலகத்தை ஏற்படுத்துவோம் அப்பனே!!!!

பாருங்கள்!! அப்பனே வரும் காலங்களில்!!! நிச்சயம் அப்பனே!!!

இன்பம் எதை என்று அறிய அறிய அப்பனே இன்பம் எப்பொழுதும் இன்பமாகவே இருக்காது!!!
துன்பம் எப்பொழுதும் துன்பமாகவே இருக்காது!!!
அப்பனே இதை பல வாக்குகளில் பல மனிதர்களுக்கு சொல்லி விட்டேன் அப்பனே!!!

சூரியன் எப்பொழுதும் இருக்க மாட்டான் அப்பனே!! எதை என்று எவற்றை என்று கூட அப்பனே மாறி மாறி தான் வருவான் அப்பனே!!! காலங்களும் அதுபோலத்தான் அப்பனே!!!

எதை என்று கூட சில தீய வினைகள் அப்பனே இருக்கும் பொழுது பின் இதையென்று அறிய அறிய அதனால் அப்பனே பின் நியாயங்கள் நீதிகள் எதை என்று கூற அப்பனே இல்லையப்பா மனிதர்களிடத்தில்!!! கலியுகத்தில் அப்பனே!!

யாரிடத்திலும் நீதிகள் நியாயங்கள் தர்மங்கள் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் வருகின்றதோ!? அவ்விடத்தில் யாங்கள் நிச்சயம் குடி கொள்வோம் அப்பனே!!!!

அனைத்தும் தருவோம்!!!

அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே!! எதை என்று கூட கிரகங்கள் அவ்வாறு தோஷங்கள் இவ்வாறு தோஷங்கள் என்றாலும் அப்பனே நிச்சயம் செல்லலாகாது என்பேன்! இப்பிறப்பில் அதுவும் கலியுகத்தில் அப்பனே!!!

எங்களைத் தவிர அப்பனே நிச்சயம் யாராலும் எதையும் செய்ய முடியாது என்பேன் அப்பனே!!!

மனிதனால் சொல்ல முடியும் அனைத்தும் கூட அவை நடக்கும் இவை நடக்கும் என்று கூட!!! ஆனால் எங்களால் முடிந்தால் அதையும் பின் பொய்யாக்குவோம் என்பேன் அப்பனே!!! எதை என்று அறியாத அளவிற்கு கூட!!....

அப்பனே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது!! அப்பனே !! உங்களை காக்கவே யாங்கள் வருகின்றோம் அப்பனே!!! அதனால் எதை என்று அறியாமலே நிச்சயமாய் அப்பனே எதை என்று உணராமலே அப்பனே!!!!

இயலாதவனுக்குத்தான் யாங்கள் உதவிகள் செய்வோம்!!!! அப்பனே அடித்தளத்தில் இருப்பவர்களுக்கு தான் யாங்கள் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

ஆனாலும் எதை என்று கூட மேன்மை( வசதிபடைத்தவர்) பெற்றுள்ளவர்களுக்கு யாங்கள் கண்டு கொள்வதே இல்லை அப்பனே!!!! எதை என்று அவந்தனும் எதை என்று உணராமல் உணர்ந்து செயல்பட்டு வந்தால் அப்பனே யாங்கள் திருத்துவோம்!!! வழியும் நடத்துவோம் அப்பனே!!!

அழிவு காலமப்பா!!! உண்மைகள் இல்லையப்பா!!
ஒழுக்கங்கள் இல்லையப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவையென்று உணர!! உணர!!... அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே!!!

பின் ராமலிங்க அடிகளான் எப்பேர்ப்பட்டவன்!!!!? அருளாசிகள் எப்படி? எல்லாம்!!! வழங்கி எதை என்று அறிய அறிய இன்னும் சூட்சமங்கள் விளக்கங்களோடு யான் எதை என்று உணர உணர பின் எதை என்று அறியாமலே சொல்லிக்கொண்டே இருப்பேன் அப்பனே!!!!

இன்னும் வாக்குகள் இவனைப் பற்றி அப்பனே!! வந்து கொண்டே இருக்கும் அப்பனே!!!

வள்ளல் பெருமான் ஞானியை பற்றி இன்னும் சொல்வேன் அப்பனே!!!

பின் சரித்திரத்தை எங்கிருந்து? எதிலிருந்து? என்பதை கூட!!...

அதனால் அப்பனே எதை என்று உணராமல் அப்பனே ஞானியர்கள் வழியை பின்பற்றினால் அப்பனே நீங்களும் எதை என்று அறியாது உயர்ந்த இடத்தை வகிக்கலாம்!!!

அப்பனே விரும்பியதை அடைந்து விடலாம் அப்பனே!!!! 

சொல்கின்றேன் இன்னும் வாக்குகளாக!!....... இன்னும் ஏராளமான சித்தர்களும் வந்து செப்பிக் கொண்டே இருப்பார்கள் அப்பனே!!!

நிச்சயம் விடிவெள்ளி!! எங்களால் வரும் என்பேன்!!! இவ்வுலகத்திற்கு அப்பனே!!

நலம்!! நலம் !!!மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

2 comments:

  1. அய்யா...அப்பனே...குருதேவா... ஞானக்கடலே... அகத்தீசா... நலம் நலமே தொடரும்.... நல்லோர்களுக்கு அருளாசிகள்... தொடரட்டும் எம்பெருமானே... தங்களின் அருள்வாக்கின்படி திருவண்ணாமலை கிரிவலம் வந்து வந்து வந்து தரிசனம் செய்து செய்து செய்து... பின் அடிமுடி சித்தரிடத்தில் தங்களின் ரூபத்தை - பின் அந்த பைரவனை... பின் அடியார் ரூபத்தில் நலம் விசாரித்தலை... பின்னும் ஆழத்து சிவனிடத்தில் ரமனரின் திரு ரூபத்தை... அறிந்தேன்...அறிந்து க(கொ)ண்டேன்... பின்னும் பின்னர் ஸ்தலவிருட்சத்தில்... மீன்டும் தொடர்வேன் இறைவலம்... கிரிவலம் கிரிவலம் கிரிவலம்...அன்புடன் அடியவன்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete