வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்று முதல் முருகப்பெருமானின் அவதார நோக்கமான மஹா கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள். இந்நன்னாளில், முருகப்பெருமானை கோவில்களில் தரிசிக்கும் பொது எதற்கு விரும்ப வேண்டும் என ஓரிரு கோவில்களில் பெற்ற அருளை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த கோவில்களை சென்று தரிசிக்கும் பொழுது, அவரிடம் அந்த விருப்பங்களை தெரிவியுங்கள். அவர் அருள் உங்களுக்கு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
- கிரௌஞ்ச கிரி முருகரிடம் - பால் கட்டிக்கு ஆசைப்படு, அம்பாள் அருள் கிடைக்கும்.
- பழனி தண்டாயுதபாணியிடம் - அபிஷேக தீர்த்தமும், கௌபீனமும், சந்தனமும் ஆசைப்படு, நோய்நொடி அனைத்தும் விலகும்.
- ஓதிமலை முருகரிடம் எதற்கும் உத்தரவு கேளு, சரியாக வழி நடத்துவார்.
- திருச்செந்தூர் முருகரிடம் - இலை விபூதி கேள், வியாதியே ஓய்ந்துவிடும்.
- குமாரகோவிலில் முருகரை உள்வாங்கு, பின் நேரடி தரிசனம் ஆனந்தமாகும்.
- வேளிமலையில் முருகரிடம், மாலையில் த்யானம் செய், அவர் வர்மக்கட்டை கற்பிப்பார், சித்தர் வந்து ஆசீர்வதிப்பார்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.........தொடரும்!
வணக்கம் குமார கோவிலும் வேளி மலையும் ஒன்றா அல்லது வெவ்வேறு தலமா
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஐயா குமார் கோவில் மற்றும் வேள்மலை எங்கே இருக்கிறது
Deleteகுமாரகோவில் இருப்பது வெள்ளிமலை(வள்ளி மலை)யில். தக்கலையிலிருந்து நாகர்கோயில் செல்லும் பாதையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 25 படிகள் தான் ஏற வேண்டும். விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.
https://en.wikipedia.org/wiki/Kumarakovil
வேளிமலை முருகன் இருப்பது நாகர்கோயில் > தேங்காய்பட்டணம் வழி தடத்தில். இங்குதான் நம் குருநாதருக்கு முருகர் வகுப்பெடுத்தார்.
https://www.kanyakumarians.com/vellimalai-murugan-temple
நன்றிகள் ஐயா
Deleteநன்றி அருமை ஐயா
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக