வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!
இந்த கன்னி திங்கள் ஆன புரட்டாசி மாதத்தில் சமீபத்தில் சிவவாக்கியர் சித்தர் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் பஞ்சவடி கோதாவரி திரிவேணி சங்கமத்தில் இங்கு நந்தியும் நானும் ஒன்றுதான் என்று ஈசன் நிகழ்த்திய கபாலேஸ்வரர் ஆலயத்திலும்!!!
ராமா!! ராமா!!! என்று உச்சரித்து இறைவனே கதி என்று வாழ்ந்த ஞானியைப் பற்றியும் சித்தேஸ்வரர் ஆலயத்தில் வாக்குகள் உரைத்திருந்தார்.
கபாலேஷ்வரர் திருத்தலத்த்தில்!!!!
""""""இது ராமனின் பூமி!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இங்கே கூட சுற்றித்திரிந்து சுற்றித்திரிந்து இவ் நதியில் பல பல பல பல சித்தர்களோடு உரையாடி கொண்டுதான்.....
ஆனாலும் வசிஷ்டனும் அதாவது எதை அத்திரியும்(வசிஷ்ட மகரிஷி அத்ரி மகரிஷி) எதையென்று மிகுந்து மிகுந்து பின் இவ் நதியில் கூட நீராடி நீராடி பல ஞான உபதேசங்களையும் கூட பல பல மனிதர்களுக்கு உரைத்து உரைத்து பல பல வழிகளிலும் கூட ஞானங்களை பெற்று திகழ்ந்தனர் மனிதர்கள்.
நிச்சயம் இங்கு நல்லோர்கள் வருவார்கள் நல்லோர்கள் தான் நிச்சயம் வருவார்கள் எதை என்று யான் நன்றாகவே கணித்து விட்டேன்!!!
அதனால் நிச்சயம் எவை எதை என்று கூட நீ நல்லதை தான் செய்ய வேண்டும் என்று!!!
ஆனாலும் ஈசனும் சத்தியம் அடித்து விட்டான்(சத்தியம் செய்து விட்டார்). ஆனாலும் இதனால்தான் ஆனாலும் இது மறைமுகமாகவே இத்திருத்தலம் இருக்கின்றது யாருக்கும் எவையென்று நிச்சயம் உணராமலே பின் எதை என்று கூட!!!!!
அதனால்தான் பின் கடமைகள் செய்திட்டு பாவக்கணக்கை முடிக்கும் பொழுது தான் இத்திருத்தலம் அனைவருக்கும் தெரியவரும்!!!!!
சொல்லிவிட்டேன் அப்போது தான் வரவும் முடியும்!!!
அதனால் ஈசனும் எதை என்று கூட கோமாதாவும் எவை என்று கூட ஒன்றே!!! என்று காண்பதற்கு மட்டுமே பின் எதை என்று கூட ஈசனே ஒருவனாக இங்கு நிற்கின்றான்(கோயிலில் தனியாக நந்தி இல்லை ஈசன் மட்டுமே அருள் பாலிக்கின்றார்) இதுதான் இத்திருத்தலத்தின் சிறப்பு!!!
இதனால் நிச்சயம் எவை என்று எதையென்றும் எங்கெங்கோ?? போய்விட்டு!!! எங்கெங்கோ? சென்றிட்டு!! எதை என்று கூட இங்கு வருபவர்களுக்கு நிச்சயம் ஈசன் தரிசனம் கொடுப்பான் என்பது கலியுகத்தின் கட்டாயம்!!!!
அதாவது அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து விட்டு கடைப்பிறப்பு யாருக்கோ நிச்சயம் ஈசன் இங்கே தரிசனம் கொடுப்பான்.
அதனால் நிச்சயம் அதாவது எவை என்று கூற பின் எதை என்றும் கூட என்றும் என்றும் பஞ்சபாண்டவர்களும் இங்கே வந்து ஈசனை வழிபட்டு வழிபட்டு பாவத்தை போக்கி கொண்டார்கள் எவற்றில் இருந்து கூட.......
என்றும்
சித்தேஷ்வரர் ஆலயத்தில்!!!
ஆனாலும் இங்கே ஒருவன்
அமர்ந்திருந்தான். (சித்தேஷ்வரர் ஆலய ஸ்தலத்தில்) அவந்தன் கூட இடையன்(ஆடு மாடு மேய்ப்பவர்) என்பேன் யான்!!!
ஆனாலும் இவ் இடையன் பின் ராமா!!! ராமா!!! என்றெல்லாம் சொல்லி சொல்லி எதனை என்றும் நித்தம்!!! நித்தம் !!! இவ் நதியில் நீராடிக்
கொண்டிருந்தான்!!!!!
ஆனாலும் இதன் தன்மையைக் கூட ஆனாலும் அவந்தனுக்கு எதை என்று அறியாது பின் இங்கே நீராடி எதை என்று எவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாது ஆனாலும் ராமா!! ராமா !!என்று நதியில் நீராடி நீராடி வந்து கொண்டிருந்தான்.
ஆனாலும் அவந்தனை பலர் பைத்தியக்காரனே!! பைத்தியக்காரனே!! என்று கூறினார்கள்.
ஆனால் அப்பொழுது கூட அவந்தன் ராமா ராமா என்று இவ் நதியில் அதிகாலையிலும் மாலை வேளையிலும் நீராடி நீராடி பின்பு ராமா ராமா என்றெல்லாம்!!!!!
ஆனால் கடைசியில் பார்த்தால் உண்ண உணவிற்கே வழியில்லை எதனை நிமித்தம் கூட ஆனாலும்..... இவ் ராஜ்ஜியம் எதனை என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட உண்மையான ஞானியரை நிச்சயம் மதிப்பதில்லை என்று யான் பல பல ஆண்டுகளாக அதாவது பல பல யுகங்களாகவே பார்த்து விட்டேன்...
அவந்தன் இங்கேயே சித்தி அடைந்து விட்டான்!!!! எதையென்று கூட இப்பொழுது கூட பின் மறைமுகமாகவே வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!
அமாவாசை திதிகளிலும்
பௌர்ணமி திதிகளிலும் இன்னும் சதுர்த்தி திதிகளிலும் இன்னும் அஷ்டமி திதிகளிலும் கூட இவந்தன் வலம் வந்து வலம் வந்து அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்து கொண்டு தான் இருக்கின்றான்!!!!
மனதில் நல்லதாக நினைத்து நல்லதையே செய்ய பல மனிதர்களுக்கு பல வழிகளிலும் கூட பின் ஞானத்தை கற்பிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயமாய் இங்கு வந்து பின் நிச்சயம் தவம் இயற்றி நல்விதமாக அவனை அதாவது இங்கே அமர்ந்தாலே போதும்.
பௌர்ணமிதனிலும் அமாவாசைதனிலும் கூட
அவந்தனுக்கு தெரிந்துவிடும்!!!!
ஆனாலும் எதை என்று கூட ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புவான் எதை என்று கூட!!!!
என்று அந்த ஞானியை பற்றியும் வாக்குகள் உரைந்திருந்தார்!!!!
இந்த வாக்குகள் நமது சித்தன் அருள் வலைத்தளத்தின் மூலம் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் போய்ச் சேர்ந்தது!!! அதில் சில அகத்தியர் அடியவர்கள் இந்த இரு ஆலயங்களுக்கும் சென்று வருவோம் மஹாளய அமாவாசை அன்று கோதாவரி நதிக்கரையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விடுவோம் என்று முடிவு செய்து ஒரு குழுவாக ஆலயத்திற்கு சென்றனர்.
நம் குருநாதர் அகத்தியர் உரைத்தது போல அன்னதானம் இனிப்புகள் வழங்குதல் போன்றவை நல்முறையாக செய்து விட்டு கோதாவரி நதியில் நீராடிவிட்டு பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு மீண்டும் நீராடி கபாலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு தியானங்கள் செய்து பின் சித்தேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றனர்.
சித்தேஸ்வரர் ஆலயம் பூட்டி இருந்தது மிகவும் அமைதியான சூழ்நிலையில் நதிக்கரையில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் குளுமையுடனும் தெய்வீக அம்சத்துடனும் ஒரு அதிர்வலைகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது.
ஆலயத்திற்கு பின்னால் ஸ்ரீ ராம் பக்த் பாபா சமாதி மந்திர்... என எழுதப்பட்டு இருந்த இடத்தில் ஒரு பைரவர் உறங்கிக் கொண்டிருந்தார்.
அடியவர்கள் சென்றவுடன் அந்த பைரவர் எழுந்து ஒரு தீட்சண்யத்துடன் அனைவரையும் பார்த்தார்.
சிவவாக்கியர் உரைத்த அந்த ராம பக்தரின் ஜீவசமாதி என்று அறிய முடிந்தது அங்கே அமர்ந்திருந்த பைரவருக்கு உணவை அளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து சிறிது நேரம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெபம் செய்தனர்.
யாத்திரை சென்று இருந்த அடியவர்கள் அனைவருக்குமே ஒரு பரவச நிலை இருந்தது.
சிவவாக்கியர் உரைத்தது போல நதியில் நீராடி முன்னோர்களுக்கான தர்ப்பணம் நல்முறையாக செய்தோம் ஈசனையும் கண்டோம் குருநாதர் அகத்தியர் உரைத்தது போல தான தர்மங்கள் கடமைகளையும் சரிவர செய்தோம் இந்த சித்தேஸ்வரர் ஆலயத்தில் என்ன ஒரு அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது!!! என்று அடியவர்கள் அனைவரும் அமர்ந்து தியானங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!!! நல்ல முறையான நேர்மறை சிந்தனைகள் அனைவருக்கும் மனதில் உதித்தது மிக்க சந்தோஷத்துடன் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு அனைவரும் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பினர்.
இந்த நிகழ்வு குறித்து குருநாதர் அகத்தியர் வாக்கு உரைத்தார் வாக்கினை பற்றி இப்பொழுது பார்ப்போம்
அப்பனே இவையன்றி கூற பல வழிகளிலும் கூட நிச்சயம் யானும் எதை என்று அறியாத அளவிற்கு கூட நேற்றைய பொழுதில் ஆசீர்வாதங்கள் தந்து விட்டேன்!!!!
நலமாகவே உங்களுக்கு எதை என்று அறிய இன்னும் ஏராளமான ஆசிகள் வந்து கொண்டே இருக்கும்...
எதை எவற்றை எவற்றினின்று கூட நேற்றைய பொழுதில் கூட அழகாகவே ராமன் அங்கே வந்து எவை என்று கூற முன்னோர்களுக்கு கூட எவை என்று அழகாகவே பின் எதை என்று அறியாமலே அன்னத்தை இட்டான்!!! என்பதைக் கூட!!!
இதனால் எதை எவை கண் இமைக்கும் நேரத்தில் ராமனும் உங்களை பார்த்திட்டு நலமாக!!!!
நீங்கள் எதை என்று அறியாமலே பின் நீராடும் பொழுது அவந்தனும் பின் அருகிலேயே நீராடிக் கொண்டுதான் இருந்தான்!!!
அழகாக பஞ்சபாண்டவர்களும் நீராடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அருளும் பலம் பலம்!!!
இதனால் எக்குறைகளும் இல்லை!!!
ஆனாலும் மனிதனின் நிலைமைகள் பின் வெறுக்கத்தக்கது என்பேன் பின்வரும் காலங்களில்.
ஏன்? எதற்காக சொல்லப்போனால் மனிதனின் நிலைமைகள் பின் எதற்காக வந்தோம்?? எதற்காக போனோம்?? என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
இயற்கை சூழ்நிலையில் கூட இதனை எடுத்துரைத்தான் எவை என்று அறியாமலே கூட சிவவாக்கியன்.
உண்டு உண்டு ஏற்றங்கள் ஆனாலும் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் பல பல வழிகளிலும் கூட யான் சொல்லி விட்டேன் மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
பின் மனிதன் பிறப்பு என்பது கடலில் நீந்துவது போலே!!! பின் நீண்ட நாள் எவ்வளவு என்பதை கூட வருத்தங்கள் என்பதை கூட நிச்சயம் தெரியும்.
ஆனால் உங்களை விட்டு யான் விலகப் போவதுமில்லை.... நல்லபடியாக எதை என்று அறிய நீந்தி கொண்டிருந்தாலும் உங்களை அப்படியே யான் சிறிது எவை என்று கூட பின் இதை என்று அறியாத அளவிற்கு கூட சிறிது மூச்சு இழுத்தாலும் பின் யான் நிச்சயம் கைகளை இழுத்திட்டு பின் கரைக்கு சேர வைத்து கொண்டுதான் இருக்கின்றேன் நலமாகவே.
இதனால் பின் இன்பம் துன்பம் வரும் போகும் அவற்றையெல்லாம் நிச்சயம் உணர வேண்டும்.
நல்படியாக கடந்து வர வேண்டும்.
என்னுடைய ஆசிகள்!!!
எவையன்றி கூற எதைக் கொடுக்க வேண்டும்!!! எதைக் கொடுக்கக் கூடாது என்பதை கூட எந்தனக்கு தெரியும்.
அதனால் நலமாக நிச்சயமாய் கவலைகள் கொள்ள வேண்டாம் நலமாகவே நலமாகவே உங்கள் முன்னோர்களும் சரியாகவே நீங்கள் செய்ததை ஏற்றுக் கொண்டார்கள் இதனால் அவர்களுக்கும் மகிழ்ச்சி !! மகிழ்ச்சி!!! நல்முறையாகவே உண்டு உண்டு இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்.
ராமனும் நேற்றைய பொழுதில் நல்விதமாகவே சீதா தேவியும் வந்து அங்கேயே எதை என்று கூட தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஆனாலும் உங்களையும் அழகாக ஆசிர்வதித்து விட்டனர்.
இன்னும் பின் ஓர் சித்தன் எதை என்று எவற்றை என்று கூட அங்கே வந்தான் ஆசிகள் தந்து விட்டான்.
ஒரு ஞானியவன் அங்கேயே தவழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதனையும் எதை என்று அறிய நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது அவந்தனும் உங்களை ஆசீர்வதித்து விட்டான்.
யான் ஆசிகள் பெற்றுத் தந்து கொண்டே இருக்கின்றேன்!!
இவ்வுலகத்தில் எதையன்றி கூட பின் காப்பது ஞானியர்களின் அருளே என்பேன்!!!!
இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்.
எதை என்று அறியாமலே ஒரு வாக்கிலும் சிவவாக்கியன்... எவையன்றி கூற பைரவன் சூட்சமமாக அவ் ஞானியானவன் பைரவன் வடிவத்திலே இருந்து உங்களுக்கு ஆசீர்வாதம் தந்து விட்டான் நலமாகவே நலமாகவே எவை என்று அறிய அறிய பின் ராமா!!!!! என்று கூட எதை என்று எவற்றில் இருந்து அறிய எதனை என்றும் அறிய """"சித்தார்த்தா!!!! என்ற அவ் ஞானியவன் எதை என்று கூட அன்னமும் உட்கொண்டான்!!!
இதனால் நலமாகவே வாழுங்கள் என்று அவன் வார்த்தைகளாகவே சொல்லி விட்டான் இதனால் எவ் குறைகளும் கொள்ள வேண்டாம்
சித்தர்கள் யாங்கள் ஒரு தீர்மானத்தில் தான் இருக்கின்றோம்!!! எங்களை நம்பி வருபவர்களுக்கு நிச்சயம் நல்வழி காட்டுவோம் ஏதாவது ரூபத்தில் சென்று உதவிகள் செய்வோம் எங்களுடைய காட்சிகளையும் காட்டித் தருவோம்!!!!
நலமாக நலமாக ஆசிகள் ஆசிகள் கடை நாள் வரையிலும் இருக்க கவலைகள் இல்லை!!!
நவராத்திரி பூஜையை நல்முறையாக செய்து வாருங்கள் என்று குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.
அடுத்து திருவண்ணாமலையில் உரைத்த விஞ்ஞான வாக்கில் குருநாதர் அகத்திய பெருமாள் நெற்றியில் உள்ள மூன்று கோடுகளைப் பற்றி எடுத்துரைத்திருந்தார் .
அந்த வாக்குகளை நல்முறையாக உணர்ந்து தொகுத்து தட்டச்சுப் பணியை பூர்த்தி செய்துவிட்டு குருநாதர அகத்தியர் பெருமானை வணங்கி விட்டு எதேச்சையாக யாக வானத்தில் பார்த்தால் ஆகாயத்தில் மூன்று கோடுகள்... மாலை நேரத்தில் மிக ஆச்சரியமாக தெரிந்தது!!! ஏதோ ஒரு சூட்சுமத்தை புலப்படுத்துவதாகவே இருந்தது!!!!
இந்த காட்சியை குறித்தும் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் தந்திருந்தார்
அப்பனே இவை என்று கூட இதை சரியாக தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!! யான் சொன்னேன் அப்பனே எவை எவை என்று கூட இதனை உணர்த்தவே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!!!!!!அப்பனே!!!!!
என்று குருநாதர் இதற்கும் வாக்குகள் தந்திருந்தார்!!!
இந்த நிகழ்வுகளில் இருந்து அடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்... குருவின் வாக்குகளை அப்படியே கேட்டு அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றி நடந்தாலே சித்தர்களின் பரிபூரண கிருபா கடாக்ஷம் கிடைக்கும்.
நம் குருநாதர் அகத்தியர் பெருமான் திருப்பதியில் உரைத்த வாக்கில் கூட... ....
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே பின் ஏன்?? இவற்றையெல்லாம் யாங்கள் சொல்ல வேண்டும்???
நல்லோர்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!
எவை என்று கூட நல்லோர்கள் அப்பனே சரியாக என்னுடைய சித்தர்கள் எங்களது வாக்குகளை பயன்படுத்துகின்றார்கள் அப்பனே!!!!
சந்தோடம்!!! சந்தோடம்!!!(சந்தோஷம் சந்தோஷம்)
அவ் நல்லோர்கள் நிச்சயம் இவ்வாறு தெளிந்து உண்மைதனை உணர்ந்து உணர்ந்து கொண்டாலே!!!!
என்று மனமுவந்து வாக்குகளை தந்தருளினார்.
குருநாதரின் அடியொற்றி அவர் நம் வாழ்விற்காக உரைக்கும் வழிமுறைகளையும் வாக்குகளையும் அப்படியே பின்பற்றி நல் முறையாக நடந்து கொள்வோம் அவர்களின் திருவருளை பெறுவோம்!!! நன்றி நமஸ்காரங்கள்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.............தொடரும்!
சித்தார்த்தா கௌதம புத்தரின் பால்ய பெயர் என நினைக்கிறேன்
ReplyDeleteஇந்த அளவிற்கு எங்களுக்கு அனுக்கிரகம் இல்லாவிடிலும் ஐயனே இயன்ற அளவு செய்தோம் எங்களுடனும் நீங்கள் இருந்து ஆசிர்வதித்து அருளுங்கள் அது போதும்
ReplyDelete