​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 18 October 2022

சித்தன் அருள் - 1200 - அந்தநாள் >> இந்த வருடம் 2022 - கோடகநல்லூர்!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நமக்கு தெரிவித்த மிகச்சிறந்த/முக்கியமான முகூர்த்த நேரங்களில் ஒன்றான "கோடகநல்லூர் நீளா பூமி சமேத ஸ்ரீ ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு" அபிஷேக ஆராதனைகள் செய்து அருள் பெறும் நாள் வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.

அதை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் வினவியபோது, "பெருமாள் இப்பொழுதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்."  என உரைத்தார். இது நம் குருநாதருக்கு மிகப்பெருமையான விஷயம், ஏன் என்றால் அன்று கோடகநல்லூரில் இருந்து பெருமாளுக்கான சேவைகளை செய்யப்போவதே அவர்தான்.

ப்ரஹன்மாதவ பெருமாளின் அருளாலும், நம் குருநாதரின் அருளாலும், அன்றைய அபிஷேக பூஜைக்கான விஷயங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் கோடகநல்லூர் வந்திருந்து அகத்தியப்பெருமான் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்ளும்படி "சித்தன் அருள்" சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
  1. அபிஷேக பூஜை காலை 9.30/10 மணிக்கு தொடங்கும். அகத்தியர் அடியவர்கள் முன்னரே வந்து, தாமிரபரணியில் நீராடி பூஜையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
  2. எல்லா வருடமும் போல் உழவாரப்பணிக்கான வாய்ப்பு கிடைத்தால், அகத்தியரின் அடியவர்கள், இயன்றவரை ஏற்று செய்து, அகத்தியர்/பெருமாள் அருள் பெற்றுக் கொள்ளவும்.
  3. அந்த புண்ணிய தினம் ஞாயிற்று கிழமையில் வருவதால், அனைவருக்கும், வந்து பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், முன்னரே அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இப்பொழுதே தெரிவிக்கப்படுகிறது.
அகத்தியப்பெருமானின் கூற்றின் படி அந்த முகூர்த்த நாள் என்பது

  • எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
  • தாமிரபரணியின் பெருமையை (இந்த நதி தீர்த்தத்தில் அன்று நீராடினால், அவர்களின் 1/3 பாபத்தை தாமிரபரணி தாய் அழித்து சுத்தம் செய்துவிடுவாள்) அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
  • அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிரபரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம்.
  • கருடாழ்வார், விஸ்வரூபம் எடுத்த நாள்.
  • அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
  • சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
  • 06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
  • பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
  • அன்றுகோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், முடிந்தவரை முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.
  • நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.

பெருமாள் இப்பொழுதே தயாராகிறார் என்கிற வாக்கு மிக சிறப்பான குருநாதர் செய்தி, என்பதிலிருந்து அனைவருக்கும் அருள் கிடைக்க வழி வகுக்கிறார் என்பது உண்மை. ஆகவே, அனைவரும் வந்திருந்து அவர் அருள் பெற்று செல்க, என சிரம் தாழ்ந்து வேண்டிக்கொள்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

6 comments:

  1. அகத்தீசாய நம🙇‍♂️🙏 நன்றி ஐயா

    ReplyDelete
  2. எம்பெருமானே... அகத்தீசா... குருநாதா... ஞானக்கடலே.... நாராயணா அன்று அவ்வளவு தொலைவு வர இயலாது என கருதுகிறேன்?!?!?! நாராயணா... இப்பொழுதே தயாராகி எமது குருவோடு -அன்று- அந்தநாள் இந்தவருடம் அகத்தியர் இல்லம்(மும்) வந்து சேரந்து அருளாசி அருள்வீராக... நாராயணா!!!!! குருவே!!!.... அன்புடன் அடியவன்....

    ReplyDelete
  3. சென்னை இருந்து வருபவர்கள் தங்குவதற்கு இடம் வசதி பற்றி தெரியப்படுத்தவும் சென்னை to கோடகநல்லூர் train or bus route தெரியப்படுத்தவும்.🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலிருந்து வருபவர்கள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு லாட்ஜ்/tourist ஹோம் இல் அறை முன்னரே பதிவு செய்து தங்கலாம். கோடகநல்லூரில் தாங்கும் வசதிகள் குறைவு. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வாகனம் வாடகைக்கு அமர்த்தி 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோடகநல்லூரை அடையலாம்.

      Delete
  4. சேலத்தில் இருந்து யாரேனும் சென்றால் என்னையும் தங்களுடன் இனைத்து கொள்ள வேண்டுகிறேன், மணிகண்டன் 9677440767. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete