​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 October 2022

சித்தன் அருள் - 1202 - பொதிகை மலை அகத்தியர் சாம்பவார் வடகரை, தென்காசி!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவார் வடகரை என்கிற கிராமத்தில், நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அது, பொதிகைமலைமேல் இருக்கும் சிலையை போலவே அமைந்துள்ளது. சில தகவல்கள்.

பொதிகை மலை அகத்தியர்

பொதிகை மலை அகத்தியரை தரிசிக்க முடியாத அன்பர்கள் வசதிக்காக பொதிகைமலை பிடிமண் எடுத்து ஸ்தாபிக்கப்பட்ட அகத்தியர் சிலை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.    இங்குள்ள 1200 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் ஈசன் அருளாலும், மகா குரு பொதிகைமலை அகத்தியர் ஆசியாலும் இது சாத்தியமானது. 
      
இங்குள்ள அகத்தியர் சிலை பொதிகை மலையில் உள்ள அகத்தியர் சிலையையொத்த உருவமைப்பை பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்!
     
மேலும் பொதிகைமலை உச்சியில் அகத்தியர் சிலையின் கீழிருந்து பிடிமண் என்ற திருமண் எடுத்து சாம்பவர் வடகரையில் ஸ்தாபித்திருப்பது சிறப்பம்சமாகும்!
     
பொதிகைமலை தரிசன டிக்கட் கிடைக்காதவர்கள், மலைஏற முடியாத அன்பர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சென்று வழிபட ஏதுவாக இந்த அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது!
        
பொதிகைமலை அகத்தியரே இந்த கோவிலில் தங்கி இருந்து சிவபூஜை செய்துவந்ததாக இந்த கோவிலின் வரலாறு கூறுவதால் பொதிகை மலை அகத்தியர் சிலை வைக்க மிகச்சிறந்த இடமாக இந்த இடம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!
     
தற்போது இந்த அகத்தீஸ்வரர் கோவிலில் நாள்தோறும் மதியம் அன்னதானம் கோவில் நிர்வாகத்தினரால் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது!
     
இங்கு அகத்தியர் வழிபாடு நடத்திய சிவலிங்கம் மற்றும், சாம்பவ மூர்த்தி வழிபாடு நடத்திய குகை சிவலிங்கம் ஆகிய இரண்டு அழகான சிவலிங்கங்கள் உள்ளது சிறப்பம்சமாகும்!
      
இதில் குகைக்குள் அமைந்துள்ள சிவலிங்கம் மீது இயற்கையாக நீர் சொட்டுவதை நாம் காணலாம்!
     
அதே போல ஆண்டில் பெரும்பாலான நாட்களில் இங்கு அமைந்துள்ள அகத்தியர் அருவியிலும் நீராடலாம்! இந்த குகை சிவலிங்கம் முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்!
     
இவ்வளவு சிறப்புகள் மிக்க கோவிலில் தற்போது பொதிகைமலை அகத்தியரின் திருமேனியும் சேர்ந்து அருள்பாவிப்பது இறைவனின் அருளேயாகும்!
   
எனவே பொதிகைமலை போக முடியாத அன்பர்கள் தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அகத்தீஸ்வரர் கோவில் சென்று பொதிகை மலை அகத்தியரை தரிசிக்கலாம், தியானிக்கலாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

4 comments:

  1. அகத்தீசா... எம்பெருமானே... அகத்தீசா... நலம் நலமே தொடரும்...

    ReplyDelete
  2. Thagaval pagirnthamaiku mikka nandri ayya. Enudaya neenda naal kanavu, aasai, yekkam podhigai malai sendru agathiya perumanai tharisika vendum enbadhu. Aanal pen enbathal sella mudiyatha soolnilai. Ippodhu adharku theervu arulivittar agathiya peruman. OM AGATHEESAYA NAMAH.

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Google Map location of the Temple
    https://goo.gl/maps/U5v8qzTY91juD7x67

    ReplyDelete