வணக்கம் அகத்தியர் அடியவர்களே
இந்த உலகத்தில் அனைத்திற்கும் காரணம் இறைவன் !!!அவனின்றி அணுவும் அசைவதில்லை!!!
இறைவனுடைய படைப்பில் அண்ட சராசரங்களும் பிரம்மாண்டங்களும் கோடானகோடி நட்சத்திரங்களும் கோள்களும் அந்த கோள்களில் வாழும் பல்வேறு விதமான கோடி கோடி உயிரினங்களும் இறைவனின் படைப்பில் அடக்கம்...
ஈரெழு 14 உலகங்களையும் படைத்து காத்து அழித்து அருள் புரியும் இறைவன் தன்மீது உண்மையான பக்தியையும் காட்டி தான் வகுத்த விதிகளையும் முறையாக பின்பற்றி ஒருவன் நடந்து வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதை இந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்!!!
இறையருளும் குரு அருளும் முறையாகப் பின்பற்றி நடந்த ஒரு குடும்பத்திற்கு ஒளிவிளக்கு ஏற்றி அண்ணாமலையார் அகத்தியரும் நடத்திய திருவிளையாடல்களை பார்ப்போம்!!!!
இந்த சம்பவம் ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது!!!!!
அடிமுடி காண முடியாத அண்ணாமலையில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வருகின்றது!!! கணவன் மனைவி இரு மகன்கள் என அளவான குடும்பம் அன்பான குடும்பம்!!!
சொந்த இருப்பிடம் இல்லை!!! ஒரு சரியான வேலைவாய்ப்பு இல்லை ஆனால் அண்ணாமலையார் மீதும் அகத்தியர் மீதும் அளவு கடந்த பக்தி!!!! கணவரோ சமையல் பணி செய்பவர் அவருக்கென்று நிரந்தர வேலை ஒன்றும் இல்லை!!
அண்ணாமலையின் மீது முலைப்பால் தீர்த்தம் குகை நமசிவாயர் ஜீவசமாதி கோயில் அருகே ஒரு குடிசை வீட்டில் தான் அவர்கள் வசித்து வந்தனர்!! இப்பொழுதும் அங்குதான் வசித்து வருகின்றார்கள்!!
அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலை இரு மகன்கள் பள்ளி படிப்பு. தினசரி தேவைகள் என மிக கஷ்டமான சூழ்நிலை கஷ்டம் என்பதை எழுத்தில் எழுதி விடலாம் ஆனால் அதை அனுபவித்தால் தான் தெரிய வரும்!!! ஒரு காலகட்டத்தில் திருவண்ணாமலையை விட்டு எங்கேயாவது பிழைப்பிற்கு சென்று விடலாமா என்று யோசித்தாலும் அண்ணாமலையான் அந்த அண்ணாமலையை விட்டு அவர்களை அகல விடவில்லை!!!
அந்தப் பெண்மணி ஈசனை தன் தந்தையாகவே எண்ணி வாழ்ந்து வருபவர் !!!
அப்பனே அண்ணாமலையானே !!! நீ எத்தனை கஷ்டங்கள் தந்தாலும் உன்னையே நான் பிடித்துக்கொண்டு வாழுவேன் !!எத்தனை சோதனைகள் தந்தாலும் சரி நீ தான் எனக்குத் தந்தை என்று அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு அண்ணாமலையானே!!! அண்ணாமலையானே!!! என்று வணங்கி வருபவர்.
அனுதினமும் அண்ணாமலையார் முலைப்பால் தீர்த்தம் குகை நமசிவாயர் ஜீவசமாதி என தரிசனம் செய்து வரும் பொழுது ஒரு நாள் குகை நமசிவாய ஜீவ சமாதியில் அகத்தியரின் சிலை ஒன்று உள்ளது!!! அகத்தியரை பார்த்து அந்தப் பெண்மணி வணங்கிய பொழுது ஒரு பரவசம் ஏற்பட்டது!!! அன்று முதல் அகத்தியரையும் அண்ணாமலையாரையும் தன் தாய் தந்தையர் என கருதியே வணங்கி வந்தார் இடைவிடாத கஷ்ட காலம் ஏற்பட்ட போதும் அதுவும் கொரோனா காலகட்டத்தில் அவர்கள் பட்ட சிரமம் சொல்ல முடியாத ஒன்று!! சொல்லப்போனால் அவர்கள் வாழும் குடிசை வீடு தென்னங்கீற்று கூறைகளால் ஆனது.. மலையில் வசிக்கும் அனுமன் ரூபங்கள் ஜீவராசிகள் அடிக்கடி வந்து மேலேறி குதித்து குதித்து விளையாண்டு கூரைகளில் சேதத்தை ஏற்படுத்தி விடும்!! மழைக்காலங்களில் நீர் உள்ளே புகுந்து விடும் சரியாக மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கிடையாது!!! இத்தனை கஷ்டத்திலும் அண்ணாமலையாரையும் அகத்தியரையும் அவர்கள் மறந்துவிடவில்லை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்!!!!
அண்ணாமலையானே !!!அகத்தியரப்பா!!! இந்த உலகத்தில் எத்தனையோ கஷ்டங்களை பார்த்து விட்டேன் உங்களையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் எனக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று நான் கேட்கவில்லை!! இந்த கஷ்டமான கடினமான சூழ்நிலையை எதிர்த்துப் போராட எனக்கு ஒரு வலிமையை தாருங்கள் என்று தான் வணங்கிக் கொண்டு வந்தார் அந்த பெண்மணி!!!
அண்ணாமலையாரும் அகத்தியரும் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தத் தொடங்கினர் !!!
ஆம் அண்ணாமலையார் திருக்கோயிலில் தற்காலிக ஒப்பந்த பணியாளர் பணிக்கு ஒரு வாய்ப்பு இந்த பெண்மணியை தேடி வந்தது!!! இந்தப் பெண்மணியும் அப்பனே அண்ணாமலையானே உங்களையே வணங்கி வந்தேன் இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் எனக்கு பணிபுரிய ஒரு வாய்ப்பை எனக்கு நல்கி விட்டீர்கள் நன்றி என கண்ணீர் மல்கி கைகூப்பி தொழுது அந்த பணியை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்!!
அவருடைய கணவருக்கும் சரிவர வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் வீட்டில் தான் இருந்தார் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு இருந்தார் நல்ல சமையல் கலை நிபுணர்!! அவருக்கும் அண்ணாமலையாரும் அகத்தியரும் மற்றொரு விளையாட்டை நடத்தினர்.
அன்னதான சேவையை செய்ய விருப்பப்படும் அடியவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வரும் சாதுக்களுக்கு பக்தர்கள் அன்னதான பணியை இவரிடம் வழங்கத் தொடங்கினார்கள்!!!
குறிப்பாக வெளியூரில், வெளி மாநிலத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் திருவண்ணாமலையில் இத்தனை சாதுக்களுக்கு இந்த தேதியில் அன்னதானம் செய்ய வேண்டும் இந்த வகையான அன்னத்தை பரிமாற வேண்டும்!!! கூடவே குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்று இவரிடம் சொல்லிவிட்டால் போதும் அடியவர்கள் விருப்பப்படி தயிர் சாதம் தக்காளி சாதம் சாம்பார் சாதம் கூடவே ஒரு குடிநீர் பாட்டில் வைத்து எல்லா சாதுக்களுக்கும் கொண்டு கொடுத்து சேவையை செய்யத் தொடங்கினார் இப்பொழுது வரை செய்து கொண்டே இருக்கின்றார்!!!!
தம்பதியினர் இருவரும் மிக அன்பானவர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு யார் வந்தாலும் சரி அவர்களை அன்போடு அழைத்துச் சென்று ஆலயத்தில் தேவையான உதவிகள் செய்வது கிரிவலம் செய்ய உதவுவது அன்னதானம் செய்ய உதவுவது என முழு நேரமும் இறைப்பணியில் தான் இருந்து கொண்டே வருகிறார்கள் தற்போது வரை!!!!
அண்ணாமலையார் கோயிலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் நம் குருநாதர் அகத்தியர் தன்னுடைய வாக்கில் உரை முதல் தரமான புண்ணியம் என்னவென்றால் மற்றவர்களுக்கு உதவுவது மற்றவர்களுக்கு வழிகாட்டி தருவது இதை இருவருமே திறன்பட செய்து வருகிறார்கள்!!!!
இப்படியே ஒரு வருடம் கடக்கின்றது!!!
தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்று இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தற்காலிக அரசாங்க ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் என்பது மாத சம்பளக்காரர்களுக்கு கிடைப்பது போல கிடைப்பதில்லை!!! சிறிது தாமதமாகி தான் கிடைக்கும்!!!! ஊதியம் தாமதமாகும் பொழுதெல்லாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் இந்த குடும்பம்!!!!
ஆனாலும் முகத்தில் புன் சிரிப்போடு உண்மையான அன்போடு பக்தர்கள் யாராவது வந்தால் அண்ணா அக்கா அம்மா அப்பா என உறவு முறை கொண்டாடி தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வரும் பக்தர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து ஏன் கிரிவலம் முன்பின் செய்யாதவர்கள் யாராவது வந்தாலும் கூட அவர்களுக்காக தன்னுடைய கணவரை அனுப்பி வைப்பார் இல்லை என்றால் தனது தாயை அனுப்பி வைப்பார் கிரிவலம் சென்று வருவதற்கு உதவியாக!!!!
அந்தளவுக்கு நல் மனம் படைத்த பெண்மணி இவர் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் முகத்தில் சிறிதளவும் காட்டிக் கொள்ள மாட்டார் அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு அண்ணாமலையான் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் தந்தாலும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எனக்கு அண்ணாமலையாலும் அகத்தியனும் தான் துணை!!!
தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை எந்த தகப்பனாவது பார்த்து கொண்டு சும்மா இருப்பானா!!! நான் படும் கஷ்டம் என்னுடைய பூர்வ வினையாக இருக்கலாம் ஆனால் என்னை அவர் மடியிலேயே அமர்த்தி அவருடைய இடத்திலேயே பணிபுரிய வாய்ப்பு கொடுத்து என்னை வழி நடத்துகின்றார் இனியும் எத்தனை சோதனைகள் அவர்கள் கொடுத்தாலும் நான் போராட தயார் என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார்!!!!
குருநாதர அகத்தியர் தன்னுடைய அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்தார்!!!!
அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அகத்தியர் பக்தர்கள் மூலம் அந்தப் பெண்மணிக்கு அகத்தியர் மைந்தன் சுவடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை பற்றி தெரிய வந்தது!!! அந்த அகத்தியர் அடியவரும் ஜானகிராமன் ஐயாவிடம் இந்த பெண்மணியை அறிமுகம் செய்து வைத்தார்!!!
அந்த தம்பதியினர் இருவருக்கும் நம் குருநாதர் அகத்திய பெருமானின் ஜீவநாடி சுவடி வாக்கு கேட்க விருப்பம் !!
ஏனென்றால் பல்வேறு விதமான கஷ்டங்கள் இதிலிருந்து நாங்கள் எப்படி மீள்வது என்பதை குருநாதர் அகத்தியரிடம் வாக்கு கேட்க விருப்பப்பட்டனர்!!!
திரு ஜானகிராமன் ஐயாவிடம் நல்ல முறையில் பழகி இருந்ததால் திருவண்ணாமலையிலிருந்து திரு ஜானகிராமன் ஐயா அவர்களின் இல்லம் தேடி ஒரு நாள் இருசக்கர வாகனத்திலேயே வந்து விட்டார்கள்!!!
அன்றைய நாள் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை பூசையில் வைத்து விட !!!! அன்று ஜீவ நாடி வாக்கு படிக்க முடியாமல் போனது!!!
அவர்களும் சிறிது மனக்கலக்கம் அடைந்து விட்டார்கள் குருவே கடும் கஷ்டத்திலும் போராட்டமான வாழ்க்கை சூழ்நிலையிலும் உங்களை கண்டு உங்கள் ஜீவநாடி உபதேசம் கேட்க நாங்கள் வந்தோம் ஆனால் அதுவும் இன்று எங்களுக்கு கிடைக்கவில்லை!!!!
இருந்தாலும் நாங்கள் கொண்ட நம்பிக்கையை விடவில்லை!!
இதெல்லாம் உங்கள் விளையாட்டு அப்பன் அண்ணாமலையான் விளையாட்டு சரி ,சரி, நம்பியோரை கைவிடாத கரங்கள் உங்களுடையது இன்று இல்லையெனில் என்றாவது நீங்கள் எனக்கு தருவீர்கள் என்று கூறி வணங்கி விட்டு அவர்களும் திருவண்ணாமலை சிறிது மன கஷ்டத்தோடு திரும்பினர்!!!!
அடுத்த வாரம் நடந்தது தான் அதிசயம் !!!
நம் குருநாதர் அகத்திப் பெருமான் அடுத்த வாரத்தில் சுவடி வாசிக்கும் மைந்தனை.....!!!
அன்பு மகனே!!!!.... மகனே ராமா!!!! நீ உடனடியாக ""அண்ணாமலைக்கு செல்க!!! அவ் புனித மலையிலே மூன்று நாள் தங்கி வருக!!!!
என்று கட்டளையிட்டார்!!!! ஒரு சூட்சுமமாகவே!!!!
திரு ஜானகிராமன் ஐயாவும் திருவண்ணாமலை கிளம்பி வந்தவுடன் உடனடியாக இந்த தம்பதியினரை தொடர்பு கொண்டார் அவர்களும் அன்போடு வாருங்கள் ஐயா நாங்களும் மலையின் மீது தான் குடி இருக்கின்றோம் நீங்கள் வந்து எங்கள் அருகிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று அன்போடு அழைத்தனர்!!!!
இங்குதான் அண்ணாமலையாரின் அகத்தியரின் லீலைகள்!!!! இவர்கள் அனைவருக்குமே புரிந்தது!!!!
திரு ஜானகிராமன் ஐயாவும் மலை மீது அந்த மூன்று நாட்களும் தங்கி குகை நமசிவாய ஜீவ சமாதி முலைப்பால் தீர்த்தத்தில் நீராடுவது!!! ரமணர் தவம் செய்த குகையில் தியானம் செய்வது என அந்த மூன்று நாட்களும் அந்த அன்பான குடும்பத்தின் உதவியுடன் அவர்கள் அருகிலேயே அனைத்தையும் செய்ய வைத்தார் குருநாதர் அகத்தியர் பெருமான்!!!
வீடு தேடி பயணம் செய்து வந்த பொழுது குருநாதர் வாக்குகள் தராமல் இவர்கள் காட்டிய பக்திக்கும் சேவைக்கும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி குருநாதர் அகத்தியரும் ஓலைச்சுவடியும் வந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று!!!
ஆம் அவர்கள் வசித்து வந்த ஓலை குடிசையிலே ஜீவனாடி பெட்டகம் வைக்கப்பட்டு அவர்களால் வணங்கப்பட்டது!!!!
அது சாதாரண ஓலை குடிசை இல்லை ஈசன் விருப்பத்துடன் வந்து உறங்கிச் செல்லும் இடம் அது!!!!
அந்த மூன்று நாட்களும் ஓலைச்சுவடிக்கு பூசை செய்யும் பாக்கியமும் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு உணவு அளிக்கும் பாக்கியமும் அந்த குடும்பத்திற்கு குருநாதர் அகத்தியர் நல்கினார்!!!!
அவர்கள் குடும்பத்திற்கு தந்த குருநாதர் அகத்திய பெருமான் வாக்கினை இப்பொழுது பார்ப்போம்!!!!
ஆதி சிவனின் பொற் பாதத்தை வணங்கி உரைக்கின்றேன் அகத்தியன்!!!!
அம்மையே !!! நல் அருள்கள் ஈசன் அருளால் அப்பனே நல்ல அருள்களாகவே இருந்து இருந்து பின் நல் முறையாய் அப்பனே ஈசனும் ஆசீர்வதித்து ஆசீர்வதித்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் உங்களை இதனால் அப்பனே குறைகள் இல்லை!!!!
குறைகள் இல்லை அப்பனே இதை எதற்கும் எவ்வாறு வாழ்வது என்பதை கூட அப்பனே முன் ஜென்மம் அதை எடுத்துரைக்கின்றேன்!!!
அப்பனே நல்முறையாக நல் முறையாக முறையாக அப்பனே இங்கே நல்முறையாக பிறந்து வளர்ந்து பின் ஈசனுக்கு அடிமையாகி நல் முறையாய் அவந்தனக்கு நல் முறையாய் பூசைகள் பல பலவற்றையும் செய்து கொண்டிருந்தீர்கள் நீங்கள்
நல்முறையாக அதனால் ஈசனின் மனமிரங்கி பின் எவ்வாறு என்பதையும் உங்களை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மிக செல்வந்தராக உங்களை உயர்த்தி விட்டான் உயர்த்தி விட்டான்!!!
பின் நல்முறையாக பல பல உதவிகளும் செய்து வந்தீர்கள் நீங்கள்.... ஆனாலும் மனமாற்றத்தின் வாயிலாக பின் எதை என்று கூட தெரியாமலே பின் செல்வம் வந்துவிட்டதே என்று இறைவனை மறந்து விட்டீர்கள் நீங்கள்!!! சிறிது காலம்!!
ஆனால் அலைந்து திரிந்து சிறிது கஷ்ட காலம் வந்துவிட்டது! கஷ்ட காலம் வந்துவிட்டது ஆனால் இறைவனும் நல்முறையாக உங்களுக்கு உதவிகள் செய்ய முன் வரவில்லை முன் வரவே இல்லை என்பேன்!!
நீங்கள் சில சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நல்முறையாக இறைவனை மறந்து விட்டீர்கள்!!
ஆனாலும் பின் பின் எவை என்று கூறும் அளவிற்கு பல சிவ ஸ்தலங்களை அடைந்தீர்கள் நீங்கள் பின் நல்முறையாக பல ஆலயங்களுக்கு சென்று சென்று ஈசா!! ஈசா !! என்றெல்லாம் அழைத்து நீதான் துணை என்றெல்லாம் நல் முறையாக அவந்தனை பாடி பாடி துதித்து பின் நல் முறையாக பல ஆலயங்களை சுற்றி வந்தீர்கள் ஆனாலும் எங்கும் கிடைக்கவில்லை
ஆனாலும் பின்னர் வாழ்ந்தது போதும் என்று உணர்ந்து இம்மலையின் மீது ஏறி நல்முறையாக எதனை என்றும் கூறி விடாமல் ஈசனே எங்களுக்கு நல்முறையாக நீங்கள் காட்சி தரவில்லை அதனால் இம்மலையிலிருந்தே யாங்கள் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோம் என்று அவனிடத்தில் முறையிட உடனே அங்கு நல்முறையாக காட்சியளித்தான் ஈசன்!!!
காட்சியளித்து நல்முறையாக நல் முறையாக எதை என்று கூறும் அளவிற்கு இங்கேதான் என்பேன்!!!
நல்முறையாக நல் முறையாக எதுவென்று தெரியாமல் பின் நீங்களும் மனம் வியந்து போனீர்கள் இறைவா என்று!!!
நல்மனதாய் அன்போடு அவனும் அரவணைத்து விட்டான்!!! எவை வேண்டும் என்று வரங்களாக கேட்க
நீங்கள் பின் நல்முறையாக நீங்கள் கேளுங்கள் என்று ஈசனும் கட்டளையிட்டான்!!!
நல்முறையாக பிறவிகள் வேண்டாம் பிறவிகள் ஏன்? பிறவிகளே வேண்டாம் பின் நல் முறையாக உங்களுடைய காலடியிலே நல் முறையாக எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உணர உணர!!!
இருப்பினும் சில பாவதாபங்கள் செய்து விட்டீர்கள் அதனால் பின் நல் முறையாக ஆனாலும் என்னுடைய அருள் எப்பொழுதும் இருக்கும் அடுத்த பிறவியை எடுங்கள் எடுத்து நல் முறையாய் இங்கேயே சேவை செய்து வந்தால் கர்மம் அழியும்!!!
யானும் உங்களை அடிக்கடி பார்ப்பேன் என்பது நிச்சயமாய் யான் எங்கு காட்சி அளித்தேனே இங்கேயே உங்களை தங்க வைத்து நல்முறையாக என்னுடைய ஆசிகளோடு பின் நல் முறையாக என்னிடத்திலே என்னுடைய தரிசனமும் இப்பொழுது இக்கலியுகத்திலும் கிடைக்கும்.....
பின் நல்முறையாக ஈசனுடைய தரிசனமும் இங்கே கிடைக்கும் என்பது விதி!!!!
அதனால்தான் அம்மையே பின் இதுவே கடைப்பிறப்பாகும்!!!!
நல்முறையாக வரங்களைக் கேட்க நல்முறையாய் பின் ஈசனே என்று கூறி இப்பொழுது பின். பின் அடுத்த பிறவி எடுப்போமே யாங்கள்!!...
எதை எவ்வாறு என்பதையும் கூட எங்களுக்கு தெரியாது என்று அழுது புலம்பினீர்கள்
ஆனாலும் ஈசன் சொன்னான் பின் எவை என்றும் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் நல் முறையாக உங்களை யான் அழைப்பேன்!!!!
நல்முறையாக நல் முறையாக எவை என்றும் பின் பின் என்னுடைய ஆசிகள் கிடைக்கப்பெற்று நல் முறையாய் ரமணனவனும் இங்கே நல்முறையாக தியானம் செய்துவிட்டு போவான்!!!
நல்முறையாக நல் முறையாக குகை நமச்சிவாயனும் நல்முறையாக அங்கே எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருப்பான் இதனால் இவர்களின் கட்டுப்பாட்டிலே நீங்கள் இருக்கின்றீர்கள்!!
நல் முறையாக அம்மையே இப் பிறப்பிலும் நல்முறையாகவே இங்கேயே ஈசனை காண்பீர்கள் நீங்கள் என்பேன்!!!!
நல்முறையாக முன் ஜென்மமதிலே நீங்களும் நல் முறையாக பின் தம்பதியரே ஆவீர்கள்!!!
நல்முறையாக அப்பனே வாக்குகள் சொல்வதற்கு ஏதுமில்லை என்பேன்!!!
அப்பனே ஈசனே இருக்க பின் அவனே பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!!!!
நல்முறையாக நல் முறையாக தன் தன் பிள்ளைகளையும் நல் முறையாக ஈசன் பார்த்துக் கொள்வான் என்பேன்!!!!
அம்மையே குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை பின் நல்முறையாக ஈசனே நல்முறையாக ஓரிடத்தை அமைத்து உங்களை பாசத்தோடு நல் முறையாக பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்!!!! அம்மையே!!!
அம்மையே ஒன்றை உரைக்கின்றேன் அம்மையே பொருள் நல் முறையாய் பல செல்வங்கள் தேவையில்லை ஈசனுக்கு பிடித்தது ஏழ்மையே என்பேன்!!!! அதனால்தான்!!
அதனால்தான் அம்மையே எவை என்றும் எதனை என்றும் ஆனால் நல்முறையாக விரும்பி விரும்பி நல்முறையாக உந்தன் இல்லத்திலும் ஒருநாள் உறங்கிக் கொண்டுதான் சென்றுகொண்டிருக்கின்றான்!!!!
அம்மையே நல்முறையாக எதை வேண்டுமோ அதை நிச்சயமாய் ஈசன் தெரிந்து செய்வான் என்பேன்!!!!
குறைகள் இல்லை!!!!
நல்முறையாக அம்மையே தங்கம் பின் நல் முறையாக இங்கே பல வழிகளிலும் புதைந்திருக்கின்றது என்பேன்!!! அதனையும் பற்பல வழிகளிலும் உருவாக்குவதற்கு இங்கும் பல திருடர்கள் வருவார்கள் என்பேன் இங்கு!!!
ஆனாலும் விடமாட்டான் என்பேன் ஈசன்!!!!
அம்மையே இவ்வாறு இருக்க நீங்கள் வெறும் நல்முறையாக பின் பின் எதையென்று பணம் இல்லோர் இல்லை என்பேன் !!பின் தங்கத்தின் மீது தவழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!!!
இவ்வாறு நல் மனதாய் அனைத்தும் கொடுத்து அனைத்தும் செய்வான் என்பேன்!!!
பொறுத்திருக !!! யானும் உதவிகள் பல செய்வேன் உங்களுக்கு!!!!!
அப்பனே நல்முறையாய் இப்பிறவியே மோட்ச கதியாகும் அப்பனே மீண்டும் பிறப்புக்கள் இல்லை!!!
அதனால்தான் ஏதும் பலிக்காது என்பேன் ஈசனிடத்திலே அனைத்தையும் ஒப்படைத்து விட்டீர்கள்.
நல் முறையாய் நல் நேரம் தீய நேரம் மற்றும் ஜாதகம் காலம் எதுவும் உங்களுக்கு பலிக்காது என்பேன்!!!!
நல் முறையாய் அப்பனே இவை என்றும் அதிவிரைவில் நல்முறையாகவே ஈசன் மனம் மகிழ்ந்து கொடுப்பான் என்பேன்!!!
பொறுத்திருக!!!
மீண்டும் மீண்டும் வாக்குகள் பலமாக யான் சொல்கின்றேன் அடுத்த வாக்கிலும் கூட!!!!!...
என்று வாக்குகள் உரைத்திருந்தார்!!!! இந்த வாக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு உரைத்த வாக்கு!!!!
ஜீவநாடி ஓரிடத்திற்கு செல்வது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல அங்கு உண்மையான பக்தியும் சேவை மனப்பான்மையும் புண்ணியங்களும் இருந்திருந்தால் மட்டுமே குருநாதர் ஓலைச்சுவடி பெட்டகத்தை கொண்டு செல்ல உத்தரவிடுவார்!!!!
குருநாதர் அகத்திய பெருமான் காலடி வைத்து தன்னுடைய சுவடியை அவர்களை கொண்டு பூசிக்க வைத்து வந்தபின் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த மாற்றம் அளவிட முடியாத ஒன்று!!!!
எந்த அண்ணாமலையை விட்டு அவர்கள் பிழைப்பு தேடி வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்த அவர்களுக்கு அண்ணாமலையாரும் அகத்தியரும் நிரந்தரமாக நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசிர்வாதத்தால் காட்டி விட்டார்கள்!!!!
ஆம் அந்த பெண்மணிக்கு தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்ற நிலையை மாற்றி நிரந்தர பணியாளராக அண்ணாமலையார் திருக்கோயிலிலே பணிபுரியும் அரசாங்க வேலையை தந்து அவர்கள் வாழ்க்கை பாதையையே மாற்றி தந்து விட்டார்கள் அண்ணாமலையாரும் அகத்தியரும்!!!
தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்ற நிலைமையில் இருந்தாலும் அனுதினமும் அண்ணாமலையாரையும் உண்ணாமலை அம்மனையும் அகத்தியரும் நினைத்துக் கொண்டுதான் அவர் கோயிலுக்குள்ளே நுழைவார் முதலில் அவர்களை தரிசனம் செய்து விட்டு தான் தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று பணியை தொடங்குவார்!!!
எத்தனை எத்தனை அறியாத பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக ஆலய வரலாறு சன்னதிகள் விளக்கங்கள் என எடுத்துக் கூறி தீபங்கள் ஏற்றுவது தரிசனம் செய்விப்பது என ஆலயத்தை சுற்றி காட்டுவது என தன்னுடைய பணிநேரம் கழிந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் உதவியோடு அனைவருக்கும் எல்லா சேவையும் செய்து தருவார்கள் இப்பொழுது வரையிலும் அதை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!
அண்ணாமலையார் கோயிலுக்கு திரு ஜானகிராமன் ஐயா அடிக்கடி செல்ல குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவிடுவது வழக்கம்!!! அவர் ஒவ்வொரு முறையும் உத்தரவிடும் பொழுது இவர்களை திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் தொடர்பு கொண்டு அந்தப் பெண்மணி ஒத்துழைப்போடு ஒவ்வொரு முறையும் ஜீவனாடிப் பெட்டகம் அண்ணாமலையார் மடியிலும் உண்ணாமலை தாய் மடியிலும் வைக்கப்பட்டு பூசை நடைபெறும்!!! அதுமட்டுமல்ல திரு ஜானகிராமன் ஐயா ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்யும் பொழுதும் இவருடைய கணவருடைய ஒத்துழைப்பு மிக அற்புதமாக செய்து தருவார் தற்பொழுது ஒரு சிறிய ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வைத்து கொண்டு அடியவர்கள் அன்னதானத்திற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்க வேண்டும் என்பதை கூறிவிட்டால் போதும் அதை தன் கையாலேயே சமைத்து ஆட்டோவில் வைத்து கிரிவலப் பாதையில் ஜானகிராமன் ஐயாவை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு சாதுக்களுக்கும் நேரடியாக சென்று உணவை வழங்குவார்கள்!!!! இன்றளவும் அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது இனியும் அது நடக்கத்தான் போகின்றது அண்ணாமலையார் திருவருளாலும் அகத்தியரின் கருணையாலும்!!!!
நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு உண்ணாமலை தாயார் ஒரு பெண்மணி ரூபத்தில் வந்து ஓலைச்சுவடி பெட்டகத்தை உண்ணாமலை சன்னதியில் வைத்து வணங்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார் அல்லவா அந்த நிகழ்வின்போது போது அந்த பெண்மணியின் கணவரான அந்த அடியவருக்கும் உண்ணாமலை தாயாரின் மனித ரூப தரிசனமும் அவர்களுடைய உபதேசமும் கிடைத்தது அவரும் திரு ஜானகிராமன் ஐயா உடன் தான் இருந்தார்!!!!
இடைவிடாத பக்தி தன்னால் முடிந்தவரை சேவை தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுவது எத்தனை சோதனைகள் வந்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவா நீயே கதி !!! என்று இருந்த ஒரு குடும்பத்திற்கு இன்று வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றி வைத்து விட்டார்கள் அகத்தியரும் அண்ணாமலையாரும்!!!
இன்று அந்த குடும்பமே மனமகிழ்ச்சியோடு மிகவும் பூரிப்படைந்து கண்ணீர் மல்கி கைகூப்பி வணங்கி வருகின்றது!!!
தன் வீட்டில் கஷ்டம் என்றாலும் சாதுக்களுக்கு உணவளிக்கும் பணியை அன்போடு செய்தும் தன் மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அடியவர்களுக்கு நல் மனதோடு சேவையை செய்து வந்த இந்த குடும்பத்திற்கு இன்று நல்வாழ்வு வந்தது!!!!
குருநாதர் தன்னுடைய வாக்கில் ஒன்றை குறிப்பிட்டு கூறியிருந்தார்!!!
"" எதை வேண்டுமோ அதை நிச்சயமாய் ஈசன் தெரிந்து செய்வான்!!!!! குறைகள் இல்லை!!!!!
ஈசரும் அகத்தியரும் செய்து விட்டார்கள்!!!! உண்மையான பக்திக்கும் சேவை மனப்பான்மைக்கும் மனமிரங்கி வழிகாட்டி விட்டார்கள்!!!!
இடைவிடாத பக்தியும் நல்மனதாய் சேவை செய்யும் மனப்பான்மையும் இருந்தால் இறையருளும் குரு அருளும் தானாக தேடி வரும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது!!! அந்தக் குடும்பத்தினரை மனதார வாழ்த்தி அண்ணாமலையாரையும் அகத்தியரையும் போற்றி வணங்கி நன்றி சொல்லி நாமும் அவ்வழியே நடப்போம்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்........தொடரும்!