அகத்தியர் அறிவுரை!
Saturday, 30 April 2022
சித்தன் அருள் - 1126 - அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் [2022-23]
Friday, 29 April 2022
சித்தன் அருள் - 1125 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!
16/4/2022 சித்ரா பவுர்ணமி / வட இந்திய ஹனுமான் ஜெயந்தி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .
வாக்குரைத்த ஸ்தலம் .ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம், மோடி தம்பாடி, வாப்பி தாலுக்கா, வல்சாட் மாவட்டம், குஜராத் மாநிலம்.
ஆதி ஈசனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலமாக இவ்வாலயங்கள் இன்னும் சிறப்புகள் சிறப்புக்கள் உண்டு இன்னும் பல வெற்றிகளை பின் மனதில் நினைத்தவாறு பின் ஏற்படும்.
ஏற்படும் என்பதற்கிணங்க இன்னும் வெற்றிகள் இவையன்றி கூற பின் இப்பொழுது கூட.... இவந்தனையும்.. வீர சிவாஜி(மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி) என்று அழைப்பர்.
எதையென்று ஆனாலும் இவந்தன் பல ஆலயங்களை வணங்கினான். வணங்கி வணங்கி வெற்றிகள் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே சென்றான்.
ஆனாலும் இவையன்றி கூற சில தீயவர்கள் இவந்தன் பின் எப்படி?? பின் வெற்றிகள் கொள்கின்றான்?? என்று எண்ணி பின் இவையன்றி கூற அவ் தீயவர்கள் சில ஆட்களை ஏற்படுத்தி மறைமுகமாக இவந்தனை தூதிட்டு ( சிவாஜியை தூதுவனாக ஆட்களை வேவு பார்க்க) இவன் என்ன செய்கின்றான்? என்று பின் பார்க்கச் சொன்னார்கள்.
இவையன்றி கூற ஆனாலும் சிவாஜி பின் எதனையுமென்று பின் அறுவடையாக உண்டு உண்டு இதனால் மறைமுகமான பலபல பின் உண்மையான பின் எழுந்தருளியுள்ள (சுயம்பு) ஒளி வடிவமான பின் இறைவன், ஆலயங்கள் ,ஜீவசமாதிகளுக்கு சென்றான்.
ஆனாலும் இவைதன் உண்டு உண்டு என்பதற்கிணங்க சென்றுகொண்டே இருந்தான் இதனால் மேன்மையான பலன்கள் இவந்தனுக்கு உண்டாயிற்று.
ஆனாலும் (எதிரிகள்) அவர்களாலும் பின் இதனை கண்டுபிடிக்க இயலவில்லை.எதையன்றி கூற ஆனாலும் பின் இவ் அரசனே பின் எதையன்றி கூற கூற கூற முடிவுகள் தரவில்லை ஆனாலும் இவந்தன் எவை பின் நின்ற
ஈசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க
யான் எப்பொழுதும் எதை வணங்கினாலும் யாருக்கும் தெரிய கூடாது என்று.
ஆனாலும் இதை தன் பின் இவைதன் உணர ஒன்றுமில்லை அர்த்தங்கள்.
அர்த்தங்கள் இதனால் மென்மேலும் இவந்தனுக்கு உயர்வுகள் கிடைத்துக் கொண்டே வந்தது.
ஆனாலும் பலப்பல சிரஞ்சீவியான பின் ஆஞ்சநேயனையும் இவந்தன் வணங்கி வணங்கி.... அதிலும் தூய சுயலிங்கமாக எழுந்தருளியுள்ள ஈசன்களும் எதையன்றி கூற பக்கத்தில்(ஆலயத்தில் இருக்கும் சுயம்பு பஞ்சமுக ஆஞ்சநேயர்) அமர்ந்து இருக்கும் வீர ஆஞ்சநேயனையும் கண்டுகொள்ள பல பல வழிகளிலும் இவந்தன் சென்றான். எதையன்றி கூற....அவ் சுய(சுயம்பு) லிங்கங்களையும் பின் பார்த்து இச் சுய நல்விதமான ஆஞ்சநேயனையும் பார்த்து வணங்கி விதவிதமான வெற்றிகளை கண்டு நவிழ்ந்து வந்தான்.
ஆனாலும் எவையென்று கூற பல மனிதர்கள் இதனையும் கூட இவந்தன் முன்னே இவையன்றி கூற ஆனாலும் இப்படித்தான் இவந்தன் வணங்கி வணங்கி முன்னேற்றங்கள் அடைகின்றான் என்று கூட பின் இவைதன் பின் பகைவர்களிடத்தில் சொல்ல....
ஆனாலும் இதை இவையென்றும் கூற ஆனாலும் பின் சிலசில சில சில உண்மைகளை அறிந்தபின் சுய லிங்கமாக எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயனையும் பின் இவையன்றி கூற.... இவ்வாறு இருந்தால்தான் இவந்தன் வெற்றி பெறுகின்றான் என்பதற்கிணங்க பல திருத்தலங்களை பகைவர்கள் அழிக்க முயன்றனர் ஆனாலும் ஒன்றை கூட அழிக்க முடியவில்லை.
அதிலும் ஒன்று இவைதன்(இவ்வாலயம்) என்பேன்.
இதனையும் எவை என்று கூற அவந்தன் வணங்கி வணங்கி வெற்றிகளை குவித்தான் என்பது நிச்சயமான உண்மை.
அறிந்து அறியாமல் எதையென்றும் கூறாத அளவிற்கு வெற்றிகள் இவ் ஆஞ்சநேயனை வணங்க வணங்க வெற்றிகள் குவியும்.
இதனால் பகைவர்களும் கண்டுகொண்டு பின் இவந்தனை(சிவாஜி) அடக்கவும் முடியவில்லை ... பணியவைக்கவும் முடியவில்லை!!!
இவந்தனை இறக்கவும் முடியவைக்கவில்லை.
ஆனால் இவன் வணங்கும் சிலசில சுயலிங்கங்களை அழித்தாலே இவந்தன் வெற்றிகள் பறிபோய்விடும் என்பதற்கிணங்க பல பல வழிகளிலும் பல சுய லிங்கங்களையும் அழித்து அழித்து வந்தார்கள்.
ஆனாலும் அழித்துவர அழித்துவர அவைதனை அழிக்க முடியவில்லை.. இதனையும் என்பதற்கு எவையென்று கூற திரும்பவும் திரும்பவும் சக்திகளை கொடுத்துக்கொண்டே இருந்தான்.
சிவாஜி வீர சிவாஜி தற்போது நிலைமையிலும்.
ஆனாலும் அவ்வாறு இன்றி கூற ஆனாலும் ஒரு புண்ணியம் செய்வித்தான் எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுது அவ்வரசன் (சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான் அப்படி மட்டுமில்லாமல் பல ஜீவராசிகளுக்கும் உதவி செய்தான் உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ் ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன.
இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான் அவன்.
எதனையுமின்றி குறிப்பிடாத அளவிற்குக்கூட வித்தியாசங்கள் அதனால்தான் வெற்றிகொள்வதற்கு இன்னும் சிறப்பான ஸ்தலங்கள் உள்ளது என்பேன்.
என்பது உண்மையப்பா!!!
உண்மை என்பதை தீர உணர்ந்து அப்பனே பல பல அரசர்களும் இதனை உணர்ந்து இங்கே வந்து வலம் வந்து நல் விதமாக வணங்கி வந்து பின் எதையன்றி கூற அனைத்து வெற்றிகளும் பெற்று அனைத்தும் செய்து முடித்தனர் அப்பனே.
பல வெற்றிகளை கொண்டனர்.
இன்னும்கூட அப்பனே இவ்வாலயத்தைப் பற்றி மறைமுகமாக தெரிந்திருக்கும் பல மனிதர்களுக்கு.
அவர்கள் மறைமுகமாகவே வந்து நல் விதமாகவே இவந்தனை வணங்கி வெற்றிக் கொள்கிறார்கள்.
பண மதிப்பும் தேவையான அளவும் இவந்தன் கொடுப்பான் என்பேன்... அதி விரைவாகவே.....
இவந்தனை நெருங்க நெருங்க பல பரிசுத்தமான சுய வடிவமாகவே இவந்தன் எதையென்று கூற நடுஇரவில் இவந்தன் பின் வெளியே வந்து நிச்சயம் உறங்குவான்!!! சுற்றுவான் சுற்றித் திரிவான் என்பது கூட மெய்யே.
மெய் என்பதை உணர்ந்து எதையென்று கூற ஆனாலும் இங்கு அமர்ந்து பின் 1008 முறை" ஸ்ரீ ராம ஜெயம் " செப்பிட்டே கொண்டிருந்தால்... யார் இவன்?? என்று கூட கூறி எழுந்தருளி அவந்தனுக்கு ஆசியளிப்பான். சில கஷ்டங்களையும் போக்குவான்.. மறைமுகமாக வருமானத்தை கொடுப்பான் தீய எண்ணங்களை எழவிடாது தீய எண்ணங்கள் இருந்தாலும் அதனை அடியோடு அழித்து விடுவான் பல வெற்றிகளை தருவான் பல பல வழிகளிலும் பணத்தை பெற்றவர்கள் இன்னும் இவந்தனை மறக்காமல் இங்கு வந்து செல்கின்றனர் அப்பனே இது தான் பெருமை.
பெருமைக்குரியது இன்னும் பல பல திருத்தலங்கள் பற்றியும் உள்ளது அப்பனே இவையன்றி கூற...
வெற்றி!!! வெற்றி!!! என்கின்றார்களே அவ் வெற்றிகளை கொடுப்பவன் இவந்தன்... உண்மை இவையன்றி கூற பின் மணமாகாதவருக்கும் இங்கு வந்தால் மணமாகிவிடும் எளிதில் கூட.
எதையன்றி கூற இங்கு வந்து வணங்குபவர்களுக்கு பண மதிப்பு அதிகரிக்கும் என்பது உண்மை நோய் நொடிகள் எதையன்றி கூற...இவையென்று கூற அதில்(சுயம்புமண்கல்பாறையாக உள்ள அனுமன் திருமேனி) இருக்கும் சிறிதளவு மண்ணை பின் எடுத்துக்கொண்டு அனுதினமும் பின் நெற்றியில் திலகம் இட்டு வந்தாலே போதுமானது அனைத்து குறைகளும் நீங்கும் படிப்படியாகவே என்பது மெய்.
இதையென்று கூற இன்னும் ஓர் சிறப்பான தலத்தையும் சொல்கின்றேன் அப்பனே.
மீண்டும் வந்து வாக்குகள் உரைப்பதுண்டு...
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்...
குருநாதர் அகத்திய பெருமானிடம் அடியவர்கள் கேள்விகளுக்கு அளித்த பதில் வாக்கு
குருவே. கை கூப்பி தொழுது வணங்குகிறோம்
ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள், முடியாதவர்கள் எப்படி ஆஞ்சநேயரை வணங்குவது???
அப்பனே நல் முறையாக சனிதோறும் இல்லத்தில் ஆஞ்சநேயனுக்கு நல் தீபமேற்றி... ஸ்ரீராம ஜெயத்தை ஜபித்து வந்தாலே அவனருள் பெறலாம். சனியவனும் விலகிச் செல்வான் அப்பனே...
குருவே நமஸ்காரங்கள்
ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???
அப்பனே சொல்கின்றேன் அப்பனே மாதம் ஒருமுறை வரும் உத்திர நாளன்று( உத்திர நட்சத்திர நாள்) அவந்தன் ஆலயத்திற்குச் சென்று பின் தியானங்கள் ஸ்ரீராமஜெயம் ஜெபம் செய்து வந்தாலே அவந்தன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறலாம் அப்பனே! வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!!
ஞாயிறு அன்று ராகுகாலத்தில் அவந்தனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய, செய்ய சில வினைகள் விலகும் என்பேன். அவந்தன் அருள்கள் கிட்டும் என்பேன் அப்பனே!!
ஆலயம் பற்றிய விவரங்கள்
சிறு கிராமத்தில் அமைந்துள்ள ஆலயம். போக்குவரத்து வசதிகள் குறைவு கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாப்பி எனும் நகரத்தில் இருந்து பேருந்து மூலம் தேகாம்,மற்றும் தாத்ரா& நாகர் ஹவேலி ஊர்களுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்ல முடியும். ஆலயத்திற்கு என்று பிரத்தியோக பூஜாரிகள் இல்லை கிராமத்து மக்களில் ஒருவரே தினசரி காலை சிறிது நேரம் மாலை சிறிது நேரம் ஆரத்தி சமயத்தில் திறந்து விளக்கு ஏற்றி தீபாராதனை செய்து விட்டு செல்வார்.
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டமும் நிறைந்திருக்கும். ஆலயம் கிராமத்தில் அமைந்திருப்பதால் தங்குவதற்கும் வசதி வாய்ப்புகள் குறைவு. அருகிலுள்ள வாப்பி அல்லது சில்வாசா நகரத்தில் தங்கி அங்கிருந்து வந்து தரிசனம் செய்ய முடியும்.
ஆஞ்சநேயர் சுயம்பு லிங்கத் திருமேனி என்பதால் திரவிய அபிஷேகங்கள் இல்லை. நல்லெண்ணெய் அபிஷேகம் செந்தூரப்பொடி சாற்றுதல், கிராம்பு மாலை வெற்றிலை மாலை எருக்கம்பூ மாலை துளசி மாலை சாற்றி வழிபாடுகள் நடக்கின்றது.சுயம்பு திருமேனியில் அனுமனின் ஐந்து முகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுயம்பு அனுமன் சன்னதியை தவிர கணபதி தியான ஆஞ்சநேயர் சீதா லட்சுமணன் உடன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமி நாராயணன் இவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் மந்திர்.
மோடி தம்பாடி. கிராமம்.
வாப்பி தாலுகா.
வல்சாட் மாவட்டம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!