​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 29 April 2026

சித்தன் அருள் - 2199 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 

நாள் : 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :-  https://www.youtube.com/live/C5OQ5pL4GnY


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 
…………….
…………….
…………….
…………….
…………….
…………….


===========================
வணக்கம் அடியவர்களே, 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனையில் பின் வரும்  வாக்கு உத்தரவு ஒன்று இடைக்காடர் சித்தர் உரைத்தார்கள். அந்த வாக்கின் சுருக்கம்:-   காசி , ராமேஸ்வரம் சென்று நீர் எடுத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.கங்கை அன்னை நதியில் நீர் எடுக்கும் பொது  நாணயங்களும் கங்கை நதியில் இட வேண்டும். அதை கூட்டுப்பிரார்த்தனை அடியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  அன்பு அடியவர்கள் காசி , இராமேஸ்வரம் சென்று எடுத்து வந்த புனித நீரும், நாணயங்களும் அடியவர்களுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான வாக்கினை முதலில் இங்கு காண்போம். 
===========================


அடியவர்கள் கவனத்திற்கு :- பின் வரும் வாக்கு கூட்டுப்பிரார்தனையில் இடையில் உரைக்கப்பட்ட வாக்கு. குருநாதர் அருளால் அடியவர்கள் உடனே  செல்வ பூஜை செய்ய ஏதுவாக,  இவ் வாக்கினை மட்டும் எடுத்து ,  இங்கு முதல் வாக்காக பதிவிடுகின்றோம். 


இவ்வாக்கின் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=8h03m45s


# செல்வம் பெருகவும், தீய சக்திகளை விலக்கவும் - சித்தர்கள் அருளிய ஒரு சக்திவாய்ந்த  பூஜை.


===========================




குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் நலமாகவே. அப்பனே, அனைவருக்கும் தேவை, அப்பனே, பின் எதை என்று அறிய. அப்பனே, அதாவது சரியான அரிசி தன்னிலே, அப்பனே, அதாவது மண் சட்டியிலே, அப்பனே, பின் அடர்ந்து ஏது என்று புரிய, சரிசமமாகவே பின் பச்சரிசியை நிரப்ப.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, மண்சட்டி இருக்குல்ல சின்னது. மண்சட்டி. அதுல வந்து பச்சரிசி நிரப்பணும். ஐயா, பச்சரிசி தெரியும்ல எல்லாருக்கும்?.


குருநாதர் :- இதில் தன், பின் சமமாக 108 ஏலக்காய். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுல வந்து சமமாக 108 ஏலக்காய், கரெக்டா? ஏலக்காய் இருக்குல்ல, ஐயா?


அடியவர் :- ஏலக்காய், ஏலக்காய் 108


சுவடி ஓதும் மைந்தன் :-  108 ஏலக்காய்.


குருநாதர் :- இதனுடனே கிராம்பும் 108. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதனுடனே கிராம்பு 108. ஐயா? 


அடியவர் :- ஒரு கலயம், ஒரு பச்சரிசி.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, நல்லா எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நல்லா புரிஞ்சுக்கோங்க. மண் சட்டி. ஒரு மண்ணு, சின்னதா ஒரு இது மாதிரி இருக்குல்ல, சின்ன இதுல. அதுல வந்து.


அடியவர் :-  அரிசி. பச்சரிசி.


சுவடி ஓதும் மைந்தன் :- பச்சரிசி போட்டுக்கிட்டு 108 ஏலக்காய்.


அடியவர் 1 :- அரிசி எவ்வளவுங்க போடணும்?


சுவடி ஓதும் மைந்தன் :- அதை (சுவடியில்) கேட்கலாம் 


குருநாதர் :-  அறிந்தும், சரி, சமமாக ஒன்றில் மேலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- 1 கிலோ மேல. எவ்வளவுன்னா போடலாம். அதுக்கு  கம்மியா போடக்கூடாது. 1 கிலோ அரிசி. அதன் மேல?


அடியவர் :- 108 ஏலக்காய், 108 கிராம்பு.


குருநாதர் :-  அறிந்தும், இதன் என்று எண்ணியே, அறிந்தும், இவை ஒன்று அறிய, பின் நடுவு தன்னில் கூட இவ் நாணயத்தை.


அடியவர் :- (மண்சட்டி) நடுவுல. இது அந்த சட்டி பானை இருக்கு. மண் பானை.


சுவடி ஓதும் மைந்தன் :- மண் பானையில நடுவுல வந்து… அந்த (காசியில் இருந்து அடியவர்கள் எடுத்து வந்த) காயின்ஸ் வச்சிட்டு, ஏலக்காய் 108, கிராம்பு 108. 


குருநாதர் :-  இவை தன் சிறிது சிறிதாக நசுக்கி, பின் வசம்பையும், பின் 108. 


சுவடி ஓதும் மைந்தன் :- வசம்பையும், ஐயா, வசம்பு எப்படி இருக்கும்?


அடியவர் :- சின்ன மரக்கட்டை மாதிரி இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- மரக்கட்டை மாதிரி இருக்கும் வந்து, அதை என்ன பண்ணனும்? சின்னது 108 பீஸ் வந்து கட் பண்ணனும். சைஸ் 108 முறை கட் பண்ணனும்.


( அளவு: வசம்பை வெட்டும் போது பெரிய துண்டுகளாக வெட்டக்கூடாது. ஒரு சின்ன பின்ச் (Pinch) அளவு இருக்குமாறு மிகச் சிறியதாக வெட்ட வேண்டும். எண்ணிக்கை: வசம்பை மொத்தம் 108 சிறிய துண்டுகளாக (பீஸ்) வெட்ட வேண்டும். 108 எண்ணிக்கை என்பது இங்கு மிக முக்கியமான அளவு. )


குருநாதர் :-  அறிந்தும் ஏது என்று சமமான, அறிந்தும் இவை தன், அதாவது நவ, பின் தானியங்களும் எதை என்று அறிய, பின் சிறு சிறிதாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நவதானியங்கள் வந்து கொஞ்சம் கொஞ்சமா. நவதானியங்கள் இருக்கு, தெரியும்ல எல்லாருக்கும்?  கொஞ்சம் கொஞ்சமா எடுத்து எதுல போடணும்? அதுல சேர்க்கணும்.


(நவதானியங்கள் :- நெல் / அரிசி,  கோதுமை,  பாசிப்பயறு, துவரை, மொச்சை,  எள்,  கொள்ளு, உளுந்து,  கொண்டைக்கடலை) 


குருநாதர் :-  அறிந்தும் இவையாகும் என்று சொல்ல, அதாவது அறிந்தும் பின் அறுபடை வீடுகளையும் பின் நினைத்திடல் வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதையெல்லாம் செய்யும் பொழுது என்ன பண்ணனும்?


அடியவர் :- ஆறுபடை வீடுக்கும் வந்து நம்ம செய்யறப்போ, முருகப்பெருமானை வணங்கி, ஆறுபடை வீடும் வணங்கி, நாம இந்த செயலை செய்யணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த செயல், அந்த காசு கொடுத்தாங்க இல்ல, அதை வந்து நடுவுல வச்சு, ஐயா, புரியுதுங்களா?


அடியவர் :- ஆமா.


அடியவர்  2 :- 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னென்ன வந்து, அதெல்லாம் நினைச்சு, நினைச்சுக்கிட்டே, என்ன பண்ணனும் அய்யா?


அடியவர் :- (அறுபடை வீடு எல்லாத்தையும் நினைச்சுக்கணும் - திருப்பரங்குன்றம் , பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி , சுவாமிமலை , திருச்செந்தூர் )


குருநாதர் :-  இதை எவை என்று அறிய, சரியான நேரத்திலே , அதாவது பின் எதை என்று புரிய, பின் அதாவது எவை என்று கூட சரியான இடத்திலே நீங்கள் தேர்வு செய்யுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரியான இடத்திலே நீங்கள் தேர்வு செய்யுங்கள்னா, பூஜை ரூம்ல.  பூஜை ரூம்ல நீங்க சரியான இடத்தில் தேர்வு செய்யுங்கள் என்றார். 


குருநாதர் :-  இதைத்தன், இதன் முன்னே நன்றாகவே அறிந்தும் ஏது என்று புரிய, சரியாகவே ஒரு மண் தீபம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இது என்ன சொல்றாருன்னா.


அடியவர் :- இது மண் சட்டி வச்சு, இதுல பொருள் எல்லாம் வச்சிட்டு, அதுக்கு முன்னாடி ஒரு மண் தீபம் வைக்கணும்ன்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  மண் தீபம் வைக்கணும்ன்றாரு வந்து. மண் தீபம் இருக்குல்ல வந்து, இதை வந்து இதுக்கு முன்னாடி வந்து வைக்கணும்ன்றாரு. 


குருநாதர் :-  இதை சமமாகவே அறிந்தும், இதில் தன் நடு தன்னில் கூட சுத்தமான தேன் தன்னை பின் வைத்திடல் நன்று, சிறப்பாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதுக்கும் ஒரு தீபம். அது நடுவிலே என்ன வைக்கணும்? தேன், தேன்.


அடியவர் :- மண் பானைக்கும் தீபத்துக்கும் நடுவுல தேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நடுவுல தேன், தேன் வைக்கணும்ன்றாரு வந்து. 


அடியவர் 3 :- ( ……) 


அடியவர் :- இல்ல, அது ஒரு சின்ன மண்பானை வச்சு, மண் கலயம் வச்சு, குட்டி கலயம்.


குருநாதர் :-  அறிந்தும் இவை தன் சரியாகவே எதை என்று அறிய, தீபம் பின் கையில் ஏந்திட, பின் நன்று, பின் மற்றொரு தீபம். 


சுவடி ஓதும் மைந்தன் :- மற்றொரு தீபம் வந்து கையில ஒன்னு புடிச்சுக்கணும்மா, நீங்க வந்து.


அடியவர்  :- ஒன்னு ஏத்திட்டு, இன்னொன்னு கையில வச்சுக்கணும். ம் …உள்ளங்கையில.


சுவடி ஓதும் மைந்தன் :- கையில இப்படின்னு வச்சுக்கலாம், இல்லைன்னா உங்களுக்கு எப்படி புடிச்சீங்கன்னா ஒரு கையில் தீபம் ஏத்துக்கணும்ன்றாரு வந்து. 


குருநாதர் :-  அறிந்தும் பல வகையான பின் லக்ஷ்மி பாடல்களை பாடிட்டு வர சிறப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து என்ன பண்ணனும்? லக்ஷ்மி பாடல்கள் ஏதாவது ஒன்னு உங்களுக்கு தெரிஞ்சது வந்து, லக்ஷ்மி பாடல்கள், ஐயா.


அடியவர்  :- மகாலட்சுமி  துதி இருக்குல்ல 


சுவடி ஓதும் மைந்தன் :-   மகாலட்சுமி அஷ்டோத்திரம் நிறைய இருக்கு. ஏன்னா சித்தர்கள் என்ன பண்ணுவாங்கன்னா?  தெரியாததை இங்க சொல்லுவாங்க. தெரிஞ்சது என்ன பண்ணுவாங்க? நீங்க கத்துக்கோங்க, ஈஸியா சொல்லிடுவாங்க. தெரியாத ஒன்றுதான் வந்து சித்தர்கள் சொல்லுவாங்க. அப்ப லட்சுமியோட பாடல் பாட சொல்றாங்க. 


குருநாதர் :- அதன் முன்னே உங்களை அறிந்தும் கூட ஒரு ஆற்றல் நெருங்கிக் கொண்டே இருக்கும். அனைத்து எது என்று புரிய, அனைவரிடம் வாரம் ஒருமுறை பின் தீய ஆற்றல் வந்து சேரும். அவை விலக்கிட வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   முதல்ல எல்லார் கையிலும் ஒரு நெகட்டிவ் போர்ஸ் சேருமாம். வந்து வாரத்துக்கு ஒரு முறை வந்து, நெகட்டிவ் போர்ஸ் சேரும்.


அடியவர்  :-  தீய சக்தி.


சுவடி ஓதும் மைந்தன் :-   தீய சக்தி வந்து சேரும். நெகட்டிவ் போர்ஸ். அப்போ ஒரு வாரத்துக்கு ஒரு முறை என்ன ஆகும்? மனநிலை மாறிடும். இன்று இருக்கிறவன் நாளைக்கு என்ன பண்ணுவான்? சண்டை போடுவாங்க.


அடியவர்  :-  மனநிலை மாறிடும். கோவம்….


சுவடி ஓதும் மைந்தன் :-   மனநிலை மாறும். கோவம் வரும். அப்புறம் என்ன ஆகுது? வந்து நெகட்டிவ்? 


அடியவர்  :-  அட்டாக் ஆயிடும் ஏதோ 


சுவடி ஓதும் மைந்தன் :-   அட்டாக் ஆயிடும்.. வந்து 


குருநாதர் :-  ஏது என்று அறிய, அதாவது நட்சத்திரத்திற்குரிய  அறிந்து கூட, அதாவது சூரியன் சரியாகவே அவை எதை என்று புரிய. அப்பழத்தை பின் நசுக்கி ஏது என்று அறிய சிறிது உட்கொண்டு பின் சரியாகவே அறிந்தும் கூட, பின் அதன் தோலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, பலாப்பழம் தான். பலாப்பழம் சொல்றாரு வந்து.


அடியவர்  :- சூரியன் பழம்ன்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  சூரியனுக்கு? 


அடியவர்  :- பலாப்பழம். 


சுவடி ஓதும் மைந்தன் :- கொஞ்சம் சாப்பிட்டு அது என்ன பண்ணனுமா? 


குருநாதர் :-  எதை என்று அறிய சரியாகவே அறிந்தும் கூட இவை தன், அவ் ஆற்றல் அறிந்தும் கூட அது தன் ஈர்த்துக் கொள்ளும் வல்லமை உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பலாப்பழம் தோல் எடுத்துக்கணும்ன்றாரு வந்து 


குருநாதர் :-  இவைத்தன் சரியாகவே, 108 முறை தலையை சுற்றி அறிந்தும் இவைத்தன் எரிய வைக்க நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த ஆற்றல் 108 முறை, அந்த பலாப்பழத்தோட தோல், அது என்ன பண்ணும்?


அடியவர்  :-  108 முறை தலையை சுத்தணும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   தலையை சுற்றி எரிய வைக்கணும்ன்றாரு வந்து.


அடியவர்  :- தீயில போட்டு நல்லா எரிய வைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   எரிய வைக்கணும்ன்றாரு வந்து. எரிய வைக்க முடியாது தான், அது வந்து எனக்கு தெரிஞ்சு. எரிய வைக்க முடியுமாங்க ஐயா? 


அடியவர்  :- கொஞ்சம் கஷ்டம் அது. கொஞ்சம் கருக எரிய வைக்கணும். தோல் திக்கான தோல் இல்ல. தடிமனான தோல் அந்த அளவுக்கு நெருப்பு, கொஞ்சம் ஜாஸ்தியா வச்சு எரிக்கணும்.


குருநாதர் :-  இதை ஏன் சொன்னேன் என்றால், இதில் ஆற்றல்கள் பின் சம அளவு பின்பே அறிந்தும் கூட. அதாவது பின் சமமாகவே அறிந்தும் எது என்று கூற பின் பச்சரிசியிலான பின் அதாவது அறிந்தும் கூட பின் மாவு. மாவு போல் ஆக்கி அதை என்று கூற பின் வட்டமிட்டு அதன் நடுவிலே உட்கார. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பச்சரிசி என்ன பண்ணும்?


அடியவர்  :- மாவு போல ஆக்கிடனும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  மாவு போல ஆக்கிட்டு,  உங்களை சுத்தி  ரவுண்டு போட்டுக்கணும். அது நடுவுல உட்காரணும்ன்றாரு. ஐயா, கேக்குறது புரியுதுங்களா? நீங்க வந்து முதல்ல என்ன வைக்கணும்?


அடியவர்  :-  அதுக்கு முன்னாடி வந்து மண் கலயம் வைக்கணும். அந்த தீபம் வைக்கணும். நடுவுல தேன் வைக்கணும். தேன் வச்சு அதுக்கு முன்னாடி நீங்க அந்த பச்சரிசி மாவை பொடி பண்ணி வட்டம் வரைஞ்சு அந்த வட்டத்துக்குள்ள நீங்க உட்காரணும். உட்காருறதுக்கு முன்னாடி,  அந்த இது பண்ணிருக்கணும்.(பலாப்பழ தோல் 108 முறை தலையை சுத்தி அதை எரித்துவிடவேண்டும் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்குள்ள நெகட்டிவ் போர்ஸ் நீக்கணும் நீங்க.


அடியவர்  :- அந்த பலாப்பழ தோல் வச்சு பரிகாரம் பண்ணி, அதுக்கப்புறம் நீங்க உட்காரணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்கப்புறம் தான் இதுல உட்காரணும். இல்லைன்னா வந்து பலிக்காது.


அடியவர்  :- அய்யா அந்த வழிபாடு எந்த கிழமை, எந்த நேரத்தில்? 


குருநாதர் :-  எதை அறிந்தும் சமமாகவே ஏது என்று அறிய. அதாவது இவை தன் எப்பொழுது வேண்டுமானாலும். அதாவது பின் அமாவாசை தன்னில் கூட பின் மூன்றாவது நாள் கழித்தே ஏது என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  அமாவாசைக்கு மூன்றாவது நாள் செய்யணும் இது ஐயா. அமாவாசை முடிஞ்சதுமே? 


அடியவர்  :-  மூன்றாவது நாள், 


சுவடி ஓதும் மைந்தன் :-  மூன்றாவது நாள் செய்யணும். 


===========================
# நாணயம் வாங்கிய அடியவர்கள் கட்டாயம் இவ் பூசை செய்யவேண்டும். 
===========================


குருநாதர் :-  எதை என்று புரிய ஆனாலும் இதைத்தன் எவை என்று புரிய இதை தன் இப்போதே எடுத்துக்கொண்டு நிச்சயம் அதில் ஏது என்று புரிய. ஆனாலும் இவை தன் நிச்சயம் இட வேண்டும். பின் சட்டியில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கண்டிப்பா இப்ப ( கொடுத்த காசு , புனித தீர்த்தம் நீர் )  இதை எடுத்துட்டு போகணும்னா, சும்மா வச்சுக்கூடாது. மண் சட்டியில கண்டிப்பா வைக்கணும்ன்றாரு. மண் சட்டியில என்ன பண்ணனும்? அரிசி போட்டு, அதுலதான் இதை வைக்கணும்ன்றாரு.


அடியவர்  :-  அம்மா, காயின் வாங்குனவங்க சும்மா கொண்டு போய் வீட்ல வச்சுக்காதீங்கம்மா, பூஜை அறையில. சொன்னதை செய்யணும்ன்றாங்க.


குருநாதர் :- இதைத்தன் அதாவது கங்கை நீரிலே இதைத்தன் சரியாக விரலை, சரி எதை என்று புரிய பின் இட்டு, அதன் மேலே தடவி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கங்கை நதி நீர்  அப்புறம் கொடுப்பாங்க. கங்கா தண்ணியும், அது லைட்டா என்ன பண்ணும்? தொட்டு அந்த காயின்ஸ்ல என்ன பண்ணும்?


அடியவர்  :-   காயின் மேல தேய்க்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தேய்ச்சு, தேய்ச்சு அப்புறம் தான், அங்க வைக்கணும்ன்றாரு. 


குருநாதர் :-  அறிந்தும் கடுமையான ஏது என்று கூற பரிகாரங்கள், கடுமையான   எதை என்று போக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடுமையான நீ உழைச்சு செஞ்சாதான் கடுமையான வினைகள் போகும்ன்றாங்க.


அடியவர்  :-    கடுமையான வினைகள் போகும். கடுமையான கஷ்டம் தீரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கஷ்டம் தீரும். 


குருநாதர் :-  எதிராற்றல் வந்து வந்து மனிதனை தாக்குகின்ற பொழுது மனம் மாறும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு?


அடியவர்  :- தீய சக்திகள், எதிராற்றல், தீய சக்திகள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதிராற்றல், எதிராற்றல்.


அடியவர்  :- நெகட்டிவ் போர்ஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ் வருகின்ற பொழுது என்ன ஆகும்? வந்து மனசு தெளிவில்லாமல் போகும். 


குருநாதர் :-  ஏது என்று அறிய இதே போலே அறிந்தும் அனைத்தும் சமமாகவே அதாவது அறிவில் ரீதியாகவே எடுத்துரைக்கின்றேன். அனைத்தும் ஒரே வேகத்தில் சென்றால் இவ்வாற்றல் வராது. அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் பல கிரகங்கள் பின் எதை என்று அறியாமலே எதை என்று புரியாமல் நீங்கள் இருந்தாலும் நிச்சயம் பல  ஏது என்ற வேகத்தில் பல பல பின் மைல் வேகத்தில் சுற்றுகின்றது. இதனால் பின் அங்கிருந்து வரும் ஆற்றல், பின் புவிக்கு வந்தடைகின்ற பொழுது தீயதாகவே வருகின்றது. இதனால்தான் உலகத்தில் பிரச்சனைகள். 

அடியவர்  :-  ( ஆச்சரியத்தில் ) அப்பா  !!!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப லைட் இவ்வளவு எரிஞ்சா ஓகே. இதுக்கு மேல எரிஞ்சா என்ன ஆகும்? பார்க்க முடியாது. இல்லைன்னா வெடிஞ்சிரும். இல்லைன்னா அதே மாதிரிதான், வரவர என்ன ஆகுதாம்? கிரகங்களோட இது வந்து ஒரே அளவுல சுற்றுனா? 

அடியவர்  :-   ஒன்னும் பிரச்சனை இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னும் பிரச்சனை இல்லை. அதிகமாகும் 

அடியவர்  :-   அந்த சுழற்சி வேகம், அந்த அந்த கதிர்வீச்சு வந்து இங்க வர்றபோது தீய கதிர்வீச்சா மாறிடுதுன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- தீய கதிர்வீச்சு ஆகுது. 

குருநாதர் :-  அதைத்தன் அப்படியே பின் மனிதனின் உறுப்புகளில் கூட அறிந்தும் ஆற்றல் அதிகமாகவே. இதனால் நேரடியாக முதலில் முதுகைத்தான் தட்டும். அது அதனால்தான் ஏது என்று அறிய பின் எவை என்று கூற அவன் கர்மா, அவனை, அதாவது அவன் எதை என்று புரிய பின் பார்க்க முடியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே முதுகுல தான் வந்து தட்டும். அது வந்து அந்த இடத்துல தான். அதனாலதான் உன் கர்மா உனக்கு தெரியாது. முதுகு யாராவது பார்க்கிறாங்களா? யாராவது பார்க்க முடியுமா? அதனாலதான் உங்க கர்மா ?

அடியவர்  :-  (முதுகு) அங்க இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்கு தெரியல. 

குருநாதர் :-  தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். உங்களையும் வெல்லலாம். அறிந்தும் ஏது என்று புரிய வென்றிட்டு ஏது என்று அறிய. அதாவது இன்னும் ஆண்டுகள் இருக்கின்றது. எப்படி வாழப்போகின்றீர்கள்  நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கோங்க. வாழ கற்றுக்கோங்க. இன்னும் எத்தனை ஆண்டு இருக்குது? வாழ்றதுக்கு வந்து அதை வந்து அதை சக்சஸ் பண்ணுங்கன்றாரு. ஐயா, சொல்லுங்க. ஐயா, 

அடியவர்  :-  இன்னும் வாழ்க்கை உங்களுக்கு நிறைய இருக்கு. வரக்கூடிய நாட்கள் இருக்கு. நிறைய விஷயங்கள் சொல்றோம். இதெல்லாம் தயவு செஞ்சு செய்யுங்க. பிழைக்க கற்றுக்கொள்ளுங்கள் சொல்றாங்க. 

குருநாதர் :-  எதை என்று புரிய பின் அனைத்து ஏது என்று அறிய பின் பெண் தெய்வங்களையும் கூட அழைத்து, வசி வசி என்று, நிச்சயம் ஒவ்வொரு ஏது என்று அறிய பின் புஷ்பங்களையும் கூட நன்றாகவே எதை என்று புரிய பின் அதாவது தரையில் இடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப லக்ஷ்மியே வசி வசி. அப்ப ஐயா, சொல்லுங்க. ஐயா, 

அடியவர்  :-  லக்ஷ்மி வசி வசி. பார்வதி வசி வசி. சரிங்களா? அதுக்கப்புறம் வந்து அங்காள ஈஸ்வரி வசி வசி. எல்லா பெண் தெய்வங்களையும் அழைங்க. அழைச்சு வசி வசின்னு சொல்லி ஒரு புஷ்பம் எடுத்து தரையில இடுங்க சொல்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தரையில..

அடியவர்  :-  தீபத்தின் முன்னாடி 

குருநாதர் :-  அறிந்தும் பின் இன்னும் மேற்கொண்டு அறிந்து கூட அதற்கும் ஒரு மண் சட்டியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நல்லா இருக்கும். இன்னும் ஒரு மண் சட்டியில கீழ வச்சிட்டு நீங்க வசி வசின்னு போட்டு அந்த மண்ணு சட்டியில போடுங்கன்றாரு. வந்து 

அடியவர்  :- அப்பா!!!!!! ஒரு மண் கலயம் திருப்பி மண்பானை ஒன்னு வாங்கிட்டு அந்த மண்பானைக்குள்ள அந்த விளக்கு முன்னாடி இந்த மந்திரங்களை, அதாவது அந்த பெண் தெய்வத்தின் பெயரை எல்லாம் போட்டு அப்படியே எடுத்து உள்ள போடுங்க. உள்ள போடுங்க. வசி வசின்னு சொல்லி போடணும். 

குருநாதர் :-  இதைத்தன் புஷ்பங்களை நன்றாக பின் ஓடும் நதியிலே இட வேண்டும். பின் அனைத்து தெய்வங்களும் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நிச்சயம் முடிந்த பிறகு. 

அடியவர்  :-  சிவாய நம. இந்த பூஜை முடிச்சதுக்கு அப்புறம் அந்த மண் சட்டியில் இருக்கக்கூடிய அந்த எல்லா பூக்களையும் எடுத்துக்கொண்டு போய் ஓடுற நதி, ஆறுல கொண்டு போய் விட்டு, எல்லா தெய்வங்களும் இதை ஏற்றுக்கொள்ளுங்க. மனசார நான் பண்ண பூஜையை அப்படின்னு சொல்லிட்டு, இதை ஆற்றல் விடணும்ன்றாங்க. 

குருநாதர் :-  அறிந்தும் இன்னும் தேரையன் அதிக அளவு உரைப்பான். பின் நன்கு நீங்கள் உணர்ந்திடுங்கள். ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை சுலபமாக யாங்கள் கொடுத்திடுவோம். 

அடியவர்  :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் தேவை என்னன்னு நிறைய உரைப்பாரு. அதெல்லாம் நீங்க பயன்படுத்திகோங்க. உங்களுக்கு தேவையானதை நாங்க சுலபமா நாங்க பண்ணி தரேன்றாரு. வந்து சித்தர்கள். 

அடியவர்  :-  தேவை என்ன? எதுக்கு எல்லாம் வந்திருக்கீங்க? எல்லாத்தையும் கொடுத்துருவாங்க. 

===========================
# அன்பு குருநாதர் சுவடி மூலம் அருளிய செல்வச் செழிப்பு மற்றும் தீய சக்திகளை விலக்குவதற்கான வழிபாட்டு முறையின் விரிவான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
===========================

1. கலசம் தயார் செய்யும் முறை (பூஜைக்கு முன்):
நாணயங்களை வாங்கிய உடனே அவற்றைச் சாதாரணமாக வீட்டில் வைக்காமல், கங்கை நீரால் நாணயங்களைத் தொட்டு தடவி, ஒரு சிறிய மண் சட்டியில் வைக்க வேண்டும்.
அந்த மண் சட்டியில் 1 கிலோவிற்கு குறையாமல் பச்சரிசியை நிரப்ப வேண்டும்.
அதில் சரியாக 108 ஏலக்காய் மற்றும் 108 கிராம்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
வசம்பினை மிகச் சிறிய துண்டுகளாக (Pinch அளவு) 108 முறை வெட்டி அதனுள் போட வேண்டும்.
இதன் பிறகு, முருகப்பெருமானை வணங்கி, அவருடைய அறுபடை வீடுகளையும் (திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர்) மனதார நினைத்துக்கொண்டு, நவதானியங்களை (நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை) சிறிது சிறிதாக அந்த மண் சட்டியில் சேர்க்க வேண்டும்.

2. தீய சக்திகளை நீக்கும் முன்-பரிகாரம் (பூஜைக்கு அமரும் முன்):
கிரகங்களின் அதிவேக சுழற்சியால் ஏற்படும் தீய கதிர்வீச்சுகள் மனிதர்களின் முதுகில் பட்டு, வாரத்திற்கு ஒருமுறை கோபம் மற்றும் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த எதிர்மறை ஆற்றலை நீக்க, சூரியனுக்குரிய பலாப்பழத்தை சிறிதளவு சாப்பிட வேண்டும்.
பின்னர், பலாப்பழத்தின் தடிமனான தோலை எடுத்து, தலையைச் சுற்றி, 108 முறை சுற்ற வேண்டும்.
சுற்றிய அந்தத் தோலை, நெருப்பில் இட்டு நன்றாகக் கருகுமாறு எரிக்க வேண்டும்.
இந்தப் பரிகாரம் தீய சக்திகளை ஈர்த்து அழித்துவிடும். இதைச் செய்த பிறகே பிரதான பூஜையில் அமர வேண்டும்; 
*** இல்லையெனில் பூஜை பலிக்காது.****

3. பூஜைக்கான இட அமைப்பு:
பூஜை அறையில் சரியான இடத்தைத் தேர்வு செய்து, தயார் செய்த கலசத்தை (மண் சட்டி) வைக்க வேண்டும்.
கலசத்திற்கு முன்பாக ஒரு மண் தீபத்தை ஏற்ற வேண்டும்.
மண் சட்டிக்கும், தீபத்திற்கும் நடுவில் சுத்தமான தேனை வைக்க வேண்டும்.
பூஜை செய்வதற்கு வசதியாக, பச்சரிசியை மாவு போல் அரைத்து, உங்களைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தின் நடுவில் நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும்.


4. பிரதான பூஜை மற்றும் மந்திர உச்சாடனம்:
இந்த பிரதான பூஜையை அமாவாசை முடிந்த மூன்றாவது நாளில் செய்ய வேண்டும்.
வட்டத்திற்குள் அமர்ந்தவாறு, எதிரில் உள்ள தீபத்தைத் தவிர, உங்கள் உள்ளங்கையில் மற்றொரு தீபத்தை ஏந்திப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
மகாலட்சுமியின் பல பாடல்கள் , மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் போன்றவற்றை மனதாரப் பாட வேண்டும்.
பூக்களை அர்ச்சனை செய்வதற்காக உங்கள் அருகில் மற்றொரு காலியான மண் சட்டியைக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.
"லக்ஷ்மி வசி வசி", "பார்வதி வசி வசி", "அங்காள ஈஸ்வரி வசி வசி" என்று அனைத்து பெண் தெய்வங்களின் பெயர்களையும் கூறி "வசி வசி" என அழைத்து, ஒவ்வொரு முறையும் பூக்களை எடுத்து அந்தச் சிறிய மண் சட்டியில் போட வேண்டும்.


5. பூஜையின் நிறைவு:
பூஜை முழுமையாக முடிந்த பிறகு, அர்ச்சனை செய்த பூக்களைக் கொண்ட அந்த மண் சட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்தப் பூக்களை ஓடும் நதியில் (ஆற்றில்) விட வேண்டும்.
அப்போது, "அனைத்து தெய்வங்களும் இந்தப் பூஜையை ஏற்றுக்கொள்ளுங்கள்" என மனதார வேண்டி ஆற்றில் விட வேண்டும்.
இவ்வாறு கடுமையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடுமையான வினைகள் மற்றும் கஷ்டங்கள் தீரும் என்றும், பக்தர்களுக்குத் தேவையானவற்றை தேரையர் போன்ற சித்தர்கள் எளிதாக நிறைவேற்றித் தருவார்கள் என்றும் குருநாதர் உரைக்கிறார். 
அடியவர்கள் அவசியம் செய்து பலன் பெறுக. தர்மம் ஓங்குக. உலகெல்லாம் சித்தர்கள் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்க. 
அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் மற்றும் சித்தர்கள் அருளுடன், 

வளமுடன் வாழ்க ! 
உங்களை வெல்க !!  
வாழ்வில் உயர்க !!! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment