அன்புடன் அகத்திய மாமுனிவரின் அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 6
நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :- 03.04.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :- வேலோடு மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில்.
குருநாதர் :- அப்பனே, அழகாகவே அறிந்தும் எதை என்று புரிய, இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஒன்று. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் பூலோகத்தில் நிச்சயம் வாழ்வது கடினம்தான், முருகா, நிச்சயம் தன்னில் கூட எனக்கு ஏது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருப்பியும் அவங்க முருகர் கிட்ட சொல்றாங்க. இந்த பூலோகத்தில் வாழ்வது என்பது கஷ்டம்.
குருநாதர் :- எதை என்று புரிய அனுபவித்து விட்டேன். பின் நிச்சயம் உலகத்தில் ஏது என்று அறிய அனைத்தும் நீ அறிவாய் முருகா. ஏனென்றால் பின் எதை என்று கூற அறிய, பின் கடைசியில் தான் ஏது என்று புரிந்து கொண்டு எனக்கு சாப விமோசனம் கொடுத்தாய். இதனால் பின் அதாவது பூலோகத்தில் வாழ்வது நிச்சயம் சாதாரணம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, பூலோகத்தில் வாழ்வது?
அடியவர் :- சாதாரணம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- சாதாரணம் இல்லை.
குருநாதர் :- நிச்சயம் எதை என்று அறிய, அதாவது தாயே நீ பறந்து செல், அதாவது எங்கெங்கு ஏது எவை என்று கூற செல்கின்றாயோ அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் நின்று, நிச்சயம் அதாவது தேவலோகத்தை நினை. இதனால் அங்கு வந்தால் பல பின் சாபங்கள் எதை என்று அறிய நிச்சயம் நீங்கும் மனிதனுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாருன்னா, சரிம்மா. நீ ஏதோ பூலோகத்திற்கு வந்துட்ட. அதனால மனிதருக்கு நிறைய இது மாதிரி சாபங்கள் இருக்கும். உனக்கு எங்கெங்கெல்லாம் நீ போறியோ அங்கெல்லாம் வந்து மனிதன் வந்தான்னா பின் சாபம் நீங்கும்.
குருநாதர் :- அறிந்தும் ஆனாலும் இத்தலத்திலே திருவிளையாடல் எதை என்று புரிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று மீண்டும் அழகாக பறந்து வந்தாள் இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா திரும்பியும் என்ன செய்றாரு? திருப்பி இங்க?
அடியவர் :- பறந்து வந்துட்டாங்க .
சுவடி ஓதும் மைந்தன் :- பறந்து வந்துட்டாங்க.
குருநாதர் :- எதை என்று அறிய இங்கிருந்து நிச்சயம் தன்னில் கூட பல முருகன் ஆலயங்கள் பறந்தாள், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.
அடியவர் :- இங்கிருந்து பல முருகன் ஆலயங்களுக்கு என்ன செய்றாங்க கண்ணகி அம்மா அம்மா? பறந்து போயிட்டு பாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- பறந்து பறந்து போயிட்டு வராரு.
குருநாதர் :- மீண்டும் எது என்று அறிய, அதாவது பின் ராமேஸ்வரம் தாண்டி நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் மதுரை தன்னில் கால் வைக்கின்றாள்.
அடியவர் :- ராமேஸ்வரம் தாண்டி என்ன செய்றாங்க? பறந்து போயிட்டு மதுரையில கால் வைக்கிறாங்க.
குருநாதர் :- எதை என்று கூட பின் ராமேஸ்வரத்திலும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறுபடை வீடுகளிலும் கூட, பஞ்ச ஸ்தலங்களில் கூட.
அடியவர் :- அங்க மட்டும் இல்ல, அறுபடை வீடு, பஞ்ச ஸ்தலங்கள் எல்லா இடங்களிலும் கால் வைக்கிறார்.
குருநாதர் :- இன்னும் பல மலை திருத்தலங்களில் கூட.
அடியவர் :- இன்னும் பல மலை திருத்தலங்களுக்கு கூட போயிட்டு வராங்க.
குருநாதர் :- ஆனாலும் பின் அலைந்து திரிந்து எதை என்று கூற மீண்டும் இங்கு வந்துவிட்டாள்.
அடியவர் :- ஆனா எல்லா இடமும் போயிட்டு கடைசியா என்ன செய்றாங்க? இந்த இடத்துக்கே வந்துட்டாங்க. ( வேலொடு மலைக்கு )
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று
முருகா !!!!!! நிச்சயம் போதும் எனக்கு
எவை என்று கூற பின் இவை, அதாவது பின் எங்கு ஏது என்று அறிய பின்,
அதாவது இவ்வமலையே எனக்கு சொர்க்கம் என்று.
அடியவர் :- ஆனா முருகன்ட்ட என்ன சொல்றாங்க? நான் எல்லா இடமும் போயிட்டு...
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா மலையும் போயிட்டு வந்தேன்.
அடியவர் :- ஆனா இங்கதான் சொர்க்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு இங்கதான்ப்பா சொர்க்கம்.
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட முருகா உன்னை பார்த்து நிச்சயம் ஒன்றை கேட்கின்றேன், அதை தருவாயா என்ன? என்று.
அடியவர் :- முருகன்ட்ட கேக்குறாங்க. முருகா !!!!!! நான் உன்கிட்ட ஒரு வரம் ஒன்னு கேக்குறேன். தர முடியுமா? அப்படின்னு கேக்குறாங்க.
குருநாதர் :- (முருகப்பெருமான்) பின் சொல் மகளே என்று நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- (ரம்பை அன்னை) பின் இதுவே சொர்க்கம் போல் தோன்றுகின்றது, இங்கே தங்கி விட்டுட்டோமா யான்? தேவலோகத்திற்கு யான் போகவில்லை என்று.
அடியவர் :- அந்த அம்மா சொல்றாங்க. இதே சொர்க்கமா தான் தெரியுது. நான் இங்கேயே தங்கிடுறேன். எனக்கு தேவலோகத்துக்கு போக விருப்பம் இல்லைங்கிறாங்க.
குருநாதர் :- (முருகப்பெருமான்) நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தாயே உன் ஆட்டம் முடிந்துவிட்டது. அதனால் இங்கு தங்கியும் பிரயோஜனம் இல்லை. தங்கினாலும் மீண்டும் வினைகள் தான் சேகரித்துக் கொள்வாய். இதனால் நிச்சயம் பின் அறிந்தும் கூட அதாவது மீண்டும் நீ தேவலோகத்திற்கு தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றார், அவ்லோகத்தில்.
அடியவர் :- உனக்கு இங்க எல்லாம் முடிந்து விட்டது. நீ இங்க பூமியில் இருந்தா உனக்கு பிரச்சனை தான் வரும். அதனால தேவலோகத்துக்கு நீ போகணும், தேவலோகத்துல எல்லாரும் உன்னை காத்துட்டு இருக்காங்க. நீ போய்தான் ஆகணும்னுட்டாரு முருகன்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய மீண்டும் மௌனமுற்று ஏது என்று கூட இதுவும் கூட நிச்சயம் தன்னில் கிடைக்காதா எனக்கு என்று. இதனால் மனம் வருந்தினாள். பூலோகத்தில் பிறந்தால் மனிதனுக்கு எண்ணியதை நிச்சயம் தன்னில் கூட கிடைக்காது என்று தெரிந்துவிட்டாள் இவ் ரம்பை.
அடியவர் :- என்ன செய்றாங்க? இப்ப சாமி நம்ப இங்கேயே இப்படியே இருந்துருவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சின்ன விஷயம் கூட இந்த பூலோகத்திலிருந்து நடக்கலையே.
அடியவர் :- ஏன் அப்படி ரொம்ப…..
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால மனுஷனுக்கு எப்படி நடக்கும்போது எப்படி கலியுகத்தில் இருக்கிற மனுஷன்?
அடியவர் :- வாழப்போறான்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாழப்போறானா என்று வந்து… அந்த அம்மா வந்து என்ன பண்றாங்க?
அடியவர் :- யோசிச்சு… கவலை அவங்களுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலை அவங்க வந்துருச்சு.
குருநாதர் :- இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய பின் தேவலோகத்தில் பிறந்து, பூலோகத்தில் பின் கஷ்டங்களை நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இவ்வாறாக நிச்சயம் பின் அதாவது பின் கஷ்டத்தை பின் படுவதற்கே, ஒரு பிறவியாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஒன்னும் இல்ல. சின்ன ஒரு தவறுதான். இங்க பூலோகத்தில் பிறந்துட்டாங்க. அப்ப, கஷ்டப்படுவதற்கு தகுதியான இடம்?
அடியவர் :- இங்கதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான். பூலோகம் தான். ஐயா புரியுதுங்களா? கஷ்டப்படுவதற்கு ஒரு இடம் எங்க?
அடியவர் :- பூலோகம் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- பூலோகம் தான். மீதி (உலகங்கள்) எல்லாம் என்ன ஆகும்?
அடியவர் :- மிக்க சந்தோஷமா தான் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மீதி எல்லாம் சந்தோஷமா தான் இருக்கும்.
===========================
# கண்ணகி எனும் தேவலோக ரம்பை அன்னை , கலியுகத்தில் பெண்களுக்காக விட்டுச்சென்ற இறை சக்திகள்.
===========================
குருநாதர் :- அப்பனே இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று அறிய. ஆனால் கண்ணகி யோசித்தாள் எதை என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் கூட. எவ்வளவு கஷ்டங்கள்? ஏது என்று அறிய இன்னும் கலியுகத்தில் மனிதன் எப்படித்தான் வாழப்போகின்றான் என்று?.
அடியவர் :- இப்பவே இப்படி கஷ்டமா இருக்கு. (இனிமேல் வரப்போகும்) கலியுகத்துல மனுஷன் எப்படி கஷ்டப்பட போறானோன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க.
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவையும் ஏது என்று கூட, கலியுகத்தில் நிச்சயம் பின் மனிதன் வாழ முடியாத காலம்தான் என்று தீர்மானித்துவிட்டாள் கண்ணகி. ஏனென்றால் பூலோகத்திற்கு வந்துவிட்டாலே பின் முடிந்தது வாழ்க்கை.
அடியவர் :- கலியுகத்துல மனுஷனுக்கு வாழவே இயலாது. அதுவும் பூலோகத்துக்கு வந்துட்டா…
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கை ?
அடியவர் :- முடிஞ்சுச்சு…
சுவடி ஓதும் மைந்தன் :- முடிஞ்சுச்சு.
அடியவர் :- அவ்வளவுதான்.
குருநாதர் :- எதை என்று கூற ஆனாலும் நிச்சயம் தன்னில் முருகா !!!!!! ஏதோ சில ஆசைகள் நிச்சயம் மனிதனுக்காக வாழ வைப்பதற்காக யான் செய்கின்றேன். அதையாவது கொடு. பின் தேவலோகத்திற்கு செல்கின்றேன் என்று.
அடியவர் :- மனிதனுக்காக நான் என்ன செய்யணும் முருகா !!!!!!. அதை செஞ்சுட்டு, நான் தேவலோகத்துக்கு போறேன். அதுக்காக எனக்கு சந்தர்ப்பம் கொடு அப்படிங்கிறாங்க.
குருநாதர் :- ஏன் எதற்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அழகாக இப்படி பாடாய் படுத்தி விட்டார்கள் மனிதர்கள் என்னை. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் பல பெண்கள் பின் அதாவது நல் உணர்வோடு, நல் அன்புகளோடு இருக்கின்றார்கள். அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? அதனால் நிச்சயம் ஏதோ எவை என்று அறிய நிச்சயம் சாபமும் தொலைந்தது. அதனால் அனைவருக்கும் ஏதோ ஒன்றை யான் செய்ய செய்து நிச்சயம் தேவலோகத்திற்கு சென்றால் எனக்கு நிம்மதி என்று.
அடியவர் :- அவங்க சொல்றாங்க. எத்தனையோ பெண்கள் இங்க இருக்காங்க. கஷ்டப்பட போறாங்க. என்னுடைய சாபம் எல்லாம் நீங்கி நான் நல்லாதானே இருக்கிறேன். அதனால நான் போறதுக்கு முன்னாடி இவங்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சுட்டு போகணும். அதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்க முருகா !!!!!! ங்கிறாங்க.
குருநாதர் :- எதை என்று கூற பின் எப்படி செய்யப் போகின்றாய்? நீ சொல்? எதை என்று அறிய என்று முருகன் கேட்டான்.
அடியவர் :- எப்படி செய்யப் போற? அப்படின்னு சொல்லி, முருகன் கேட்கிறார், இப்ப அவங்ககிட்ட.
குருநாதர் :- நிச்சயம் முருகா !!!!!! அதாவது உன் ஆற்றலை ஒரு நாள் கொடு போதும் நிச்சயம் தன்னில் கூட. யான் அழகாக அங்கங்கு நிச்சயம் பின் அதாவது அவள் ஆற்றலை நிச்சயம் விட்டு விடுகின்றேன். நிச்சயம் அங்கு பெண்கள் சென்றால் நிச்சயம் பின் வாழ்ந்து விடுவார்கள் என்று.
அடியவர் :- உன்னுடைய ஆற்றலை மட்டும் ஒரு நாளைக்கு கொடு முருகா !!!!!! நான் எங்க போயிட்டு, அதை எப்படி விடணும், அப்படின்னு தெரியும். அப்படிங்கிறாங்க.
குருநாதர் :- பின் அதாவது நிச்சயம் இப்படியும் கேட்கலாமா தாயே??? என்று அதாவது நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படியும் வந்து நீ கேட்கலாமா அம்மா ? நியாயமா?
அடியவர் :- கேக்குறாரு. இப்படியும் கேட்கலாமா அப்படின்னு.
குருநாதர் :- எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் சரியாகவே அதாவது எவை என்று புரிய பின் அதாவது தேவலோகத்திற்கு போகப் போகின்றேன். அதாவது இங்கே பின் இருக்கின்றேன் என்று கூட சொன்னாலும் கூட நீ விடமாட்டேன் என்கிறாய் நிச்சயம் தன்னில் கூட. பின் கந்தா !!!!!! என்று.
குருநாதர் :- எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அப்படியும் வேண்டாம் என்று சொல்கின்றாய். நிச்சயம் ஒரு நாள் போதும் உன் ஆற்றலை கொடுத்துவிடு என்று.
அடியவர் :- அப்பயும் அந்த அம்மா விடுற மாதிரி இல்ல. ஒரு நாள் உங்க ஆற்றல் கொடு முருகான்னு கேக்குறாங்க அவங்க.
குருநாதர் :- எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இறைவனின் கூட ஆற்றலை கொடுக்கின்றான் முருகன் !!!!!!.
குருநாதர் :- இதனால் நேரடியாக எவை என்று கூற பின் பின் கால் பதிக்கின்றாள் பழனி தன்னில் கூட.
அடியவர் :- முருகன் என்ன செய்றாரு? கொடுத்துட்டாரு, இந்தா. ஒரு நாள் என் ஆற்றலை வச்சுக்கன்னு.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பெண்களுக்கு பல பிரச்சனைகள் உடம்பில் வரும் நிச்சயம் தன்னில் கூட இக்கலியுகத்தில். எதை என்று கூற, அவ் பிரச்சனைகளை தீர, ஒன்றே பழனி தன்னிலே நிச்சயம் விடிவு இருக்கின்றது.
அடியவர் :- இங்க இந்த ஆற்றல் கிடைச்ச உடனே பழனிமலைக்கு போயிடுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா பழனிமலைக்கு போயிடுறாங்க.
அடியவர் :- அதனால பெண்களுக்கு இந்த கலியுகத்துல எந்த பிரச்சனை வந்தாலும், உடல் ரீதியா பிரச்சனை வந்தா, அவங்க பழனிக்கு போக சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பழனிக்கு போக சொல்றாங்க.
குருநாதர் :- அடுத்து செந்தூரிலும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில். பல பிரச்சனைகள் தோல் வியாதிகள் எவை என்று கூற அறிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் நீராடி எதை என்று புரிய நிச்சயம் பின் கந்தனை வழங்கினால் நிச்சயம் பல வினைகள் தீரும்.
அடியவர் :- அதே மாதிரி திருச்செந்தூரிலும் நீராடி, வழிபட்ட பெண்களுக்கு பல வினைகள் தீரும்னு சொல்றாங்க.
குருநாதர் :- எவை என்று கூற இப்படியே அறுபடை வீடுகளும் பின் நிச்சயம் தன்னில் மீனாட்சி எதை என்று அறிய இன்னும் எவை என்று அறிய காமாட்சி இன்னும் விசாலாட்சி இன்னும் பல வகையில் கூட பின் நிச்சயம் தன்னில் நின்று நின்று இதனால் நிச்சயம் தன்னில் கூட. இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் பின் அதாவது பின் பெண்கள் பின் முன்னேற துடிக்கின்றார்கள். அதாவது கலியுகத்தில் அங்கெல்லாம் சென்று வந்தால் வாழ்க்கையில் பின் புரட்டிப் போடும் உயர்வுகள் ஏற்படுத்தும்.
அடியவர் :- முன்னேற நினைக்கிற பெண்கள் வந்து, கட்டாயம் அறுபடை வீடு போக சொல்றாரு. அறுபடை வீடு, மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் இந்த கோயில்களுக்கெல்லாம், கண்ணகி அம்மா பின் சக்தி கொடுத்திருக்காங்க.
குருநாதர் :- எவை என்று புரிய இங்கும் பின் அதாவது பல நாட்கள் தங்கியிருக்கின்றாள் நிச்சயம் தன்னில் கூட ரம்பை. இதனால் இங்கேயும் கூட பல மூலிகைகள் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட. இங்கு நீராடி நிச்சயம் தன்னில் கூட, சிறிது முருகனிடம் வைத்து, அதை அனுதினம் அருந்தி வந்தால், நிச்சயம் பெண்களுக்கு பல வியாதிகள் நீங்கும்.
அடியவர் :- இந்த மண்ணையும் மிச்ச காலமா அந்த அம்மா தங்கி இருந்திருக்காங்க. அதனால இங்கேயும் வந்து…
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்து நீர் எடுத்து…. அங்க நீர் இருக்குல்ல. வந்து ஊத்து நீரு. அதை எடுத்துட்டு, இங்க முருகன் கையில வச்சிட்டு, அதை எடுத்துட்டு போய், கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு வந்தீங்கன்னா பல?
அடியவர் :- நோய்கள் தீரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நோய்கள் தீரும் என்றார்.
குருநாதர் :- அதை மட்டும் இல்லாமல் ஏது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் மாவிட்டம் (மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்) எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் பல திருத்தலங்கள் இவ் லங்கா தேசத்திலும் கூட.
அடியவர் :- இதே மாதிரி பல திருத்தலங்கள் இந்த லங்கா தேசத்துல இருக்காம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதே மாதிரி இங்க போயிருக்காங்க. காலடி வச்சிருக்காங்க வந்து.
அடியவர் :- காலடி வச்சிருக்காங்க பல இடங்கள்ல.
குருநாதர் :- ஆற்றலை வைக்க நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் ஏது என்று புரிய. இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட பின் பல பின் நிச்சயம் தன்னில் கூட பெண்களுக்கு பல வழியில் கூட பின் சோதனைக்கு வந்தால் நிச்சயம் பல திருத்தலங்கள் இருக்கின்றது.
குருநாதர் :- அங்கு சென்றாலும் நிச்சயம் தன்னில் கூட மாற்றம் ஏற்படும்.
===========================
# ராமேஸ்வரம் ரகசியங்கள்
===========================
# முதலில் தனுசுகோடி சென்று பின் , ராமேஸ்வரம் கடலில் நீராடி , இறைவனை வணங்கினால், அனைத்து சாபங்கள் பின் பறந்து ஓடும் பெண்களுக்கு.
===========================
சித்தன் அருள் - 1513 (முதலில் தனுசுகோடி சென்று வணங்க வேண்டும்)
https://siththanarul.blogspot.com/2023/11/1513-04092023-25.html
===========================
குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் முதல் முதலில் நிச்சயம் தன்னில் கூட ராமேஸ்வரத்திலிருந்து இங்கும் நிச்சயம் இங்கிருந்து ராமேஸ்வரம் காலடி வைத்ததால், பின் நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட பின் அதாவது பல சாபங்கள் நிறைந்தவர்கள், நிச்சயம் பின் ராமேஸ்வரத்தில் பின் நீராடி, நிச்சயம் பின் இறைவனை வணங்கினாலும், அனைத்தும் பின் பறந்து ஓடும் பெண்களுக்கு.
அடியவர் :- அதாவது பெண்களுக்கு வந்து இங்க மட்டும் இல்ல.. அவங்க வந்து ராமேஸ்வரம் போனாலும் கூட….
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல அப்படி இல்ல. முதல்ல ராமேஸ்வரத்துல இருந்து வேலொடு மலை இங்க வந்தாங்க. திருப்பி இங்கிருந்து ராமேஸ்வரம் தான் முதல்ல திருப்பி போய் அங்க கால் வச்சாங்க. அப்ப சரியா?
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கெல்லாம் போயிட்டு நம்ப இங்கேயும் வழிபட்டு, ராமேஸ்வரம் அங்கெல்லாம் வழிபட்டு பெண்கள். எல்லாத்தையும் பொதுவா சொல்றாரு வந்து
சுவடி ஓதும் மைந்தன் :- நிறைய இன்னும் கோயில் இருக்கு. இங்க நிறைய கோயில் இருக்குல்ல… முருகன் கோயில். இங்கெல்லாம் வந்து, அதே மாதிரி அங்கேயும், சில விசேஷ ஸ்தலங்கள் எல்லாம் இருக்குது. அங்கெல்லாம் பெண்கள் வந்து நல்லா நீராடி, போனோம்னா என்ன ஆகும்?....... கர்மங்கள் தீரும்.
===========================
# இலங்கையின் திருகோணமலையில் (கோணமலை) கன்னியா என்ற இடத்தில் ஏழு புனித வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. இது குறித்த வாக்கு.
===========================
சித்தன் அருள் - 1656 - 7 புனித வெந்நீர் ஊற்று கிணறுகள்.கன்னியா!
https://siththanarul.blogspot.com/2024/08/1656.html
===========================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் ஏழு கிணறுகள் இருக்கின்றது இங்கு. அங்கேயும் நிச்சயம் தன்னில் கூட பின் காலடி பதித்தாள் ரம்பை.
அடியவர் :- ஏழு கிணறுகள் இருக்கா இங்கே?
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா திருகோணமலையில் இருக்கும் ஏழு கிணறுகள் அது.
அடியவர் :- அது திருகோணமலை
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா திருகோணமலையில் (இருக்கும் ஏழு கிணறுகள் அது) அங்கேயும் வந்து நீராடினால் ஆண்களுக்கு வந்து பின் சாபம் இருந்தாலும் தீரும். பெண்கள் வந்து முன்னேற்ற பாதையில்?
அடியவர் :- செல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- செல்லலாம்.
குருநாதர் :- இன்னும் பல ஏது என்று அறிய இதனால் கடைசியில் ஏது என்று அறிய இங்கே வந்துவிட்டாள் நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன பண்றாங்க???
அடியவர் :- இங்கேயே வந்துட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கேயே வந்துட்டாங்க
குருநாதர் :- எவை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட யான் இதைவிட்டு அதாவது இங்கே விட்டு, எனக்கு போக மனமில்லை முருகா !!!!!!.
குருநாதர் :- யான் இங்கேயே தங்கி விடுகின்றேன். உன்னிடத்திலே என்று
அடியவர் :- இங்க எல்லாம் செஞ்சுட்டு, அந்த அம்மா முடிச்சிட்டு கடைசியா இங்கேயே வந்து சொல்லிட்டாங்க. முருகா !!!!!! எனக்கு போக விருப்பம் இல்லை .அதனால இங்கேயே இருக்கிறேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ம் …ஆமா. இது நல்லா இருக்குது இங்க. இந்த இடமே நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டு….
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒரு வருடம் உந்தனுக்கு கொடுக்கின்றேன். வாய்ப்பு கொடுக்கின்றேன் இங்கே தங்க. போதுமா? என்று.
அடியவர் :- முருகன் என்ன செஞ்சுட்டாரு? ஒரு வருஷம் இருங்க. அப்படின்னு பெர்மிஷன் கொடுத்துட்டாரு.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட அறிந்தும் கூட பின் அதாவது பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இது முருகன் திருவிளையாடலே என்று நிச்சயம் தன்னில்.
குருநாதர் :- அதாவது பின் கண்ணகி பின் நிச்சயம் சாபத்தை பின் நீக்கிக் கொண்டாள், நிச்சயம் முருகன் நீக்கிவிட்டான் என்று நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட எதை என்று கூற, கிழவன் ரூபத்தின் மூலம் பின் ரம்பையாக திகழ்கின்றாள் என்று, பின் நிச்சயம் தன்னில் கூட தேவலோகத்திலிருந்து அனைவரும் ரம்பை பின் பார்க்க வந்து விட்டார்கள்.
அடியவர் :- அவங்களுக்கெல்லாம் தேவலோகத்துக்கு தெரிஞ்சிருச்சு. ரம்பை வந்து, இப்படி இங்க வந்து, முருகனை கிழவனை சந்திச்சு, சாப விமோசனம் பெற்று, இறக்கை கிடைச்சு, இதெல்லாம் நடந்த விஷயம் எல்லாமே தேவலோகத்துக்கு தெரிய வந்து. எல்லாருமே இங்கே வந்துட்டாங்க பாக்குறதுக்கு. ரம்பையை பார்க்க.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மகிமை புகழ், கற்புக்கரசி, அன்னை கண்ணகி தேவி காவிய வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரை சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment