​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 February 2026

சித்தன் அருள் - 2117 - அன்புடன் அகத்தியர் - இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 3


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 3

நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 3) 

===================================
# ஒரே குலம் ஒருவனே தேவன் - உலக மதங்களின் மூலாதாரம் இலங்கை 
===================================

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றே என்று நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரே தேவன் பின் எவை என்று கூற. பின் அதாவது ஒரே குலம் ஒருவனே தேவன் என்றெல்லாம் இவ் தேசத்தில் எடுத்துக் கொண்டு வந்தால் மட்டுமே இவ் தேசம் பிழைக்கும் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே கடவுள். 

அடியவர் :- ஒரே குலம், ஒருவனே தேவன். 

==========================================
# மத நல்லிணக்கத்தின் மூலாதாரம் இலங்கை - இங்கு ஆரம்பித்தால் உலகம் அனைத்தும் எதிரொளிக்கும். 
==========================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எது என்று கூற அப்பனே ஏன் எதற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன் என்றால், இங்குதான் மூலாதாரம் நிச்சயம் இங்கு ஆரம்பித்தால் அனைத்தும் எதிரொளிக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("ஓ அப்ப இங்கதான் மூலாதாரம் — இங்க மதக்கலவரம் ஏற்பட்டுச்சுன்னா என்ன ஆகும், உலகம் ஃபுல்லாவே வரும்ல, ஃபுல்லாவே போயிடும். இங்கதான் மெயின் பாயிண்ட் இருக்குது. கதை மெயின் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க, ஆனா இங்கதான் மெயின்.)

அடியவர் :-  எல்லாம் ஒருவனே தேவன் ஒரே 

சுவடி ஓதும் மைந்தன் :- ("ஒரே குலம் ஒரே இதுன்னு போயிடணும்; அப்படி இல்லையென்றால் இங்க மதக்கலவரம் நிறைய வரப்போகுது. அடுத்த காலகட்டத்துல அது வந்துருச்சுன்னா, அடுத்து இங்கிருந்து ஸ்டார்ட் பண்ணோம்னா வேற எங்க போகும் — உலகம் ஃபுல்லாவே போயிடும். )

=======================================
# இலங்கை வாழ் அடியவர்களுக்கு - எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
=======================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதற்காக இங்கு நிச்சயம் பின் எவ்வாறெல்லாம் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்ப மனிதன் என்ன பண்றாரு — மனிதன் வந்து எவ்வாறெல்லாம் இந்த மதக்கலவரத்தை, இந்த மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலேயே இங்க கவனம் போயிருக்கு.)

அடியவர் :-  பிளான் பண்றாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிளான் பண்றாங்க இப்ப இருந்து இங்க மதக்கலவரம் ஏற்பட்டா உலகம் என்ன ஆகும் அழிஞ்சிரும் க்ளோஸ் ஆயிடும்.

========================
# ஒரு தேசத்தின் பேராசை - கற்பனைக்கும் எட்டாத அழிவு சதி.
======================== 

குருநாதர் :- நிச்சயம் இவ்வுலகம் எதை என்று கூறிய பின் தானே பின் எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் மனிதன் எவை என்று கூற ஒரு தேசம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஒரு தேசம் — இங்க இது மாதிரி மதக்கலவரம் கூடிவிட்டு சண்டை ஆச்சுன்னா, எல்லா கண்ட்ரோலும், உலகத்துடைய கண்ட்ரோலும் நம்ம கையில வந்துரும்னு ஒரு நாடு இயங்கி இருக்குது.)

குருநாதர் :- அப்பனே திருந்த வேண்டியது மனிதனே அப்பனே அறிந்தும் கூட. மனிதனுக்கு பின் புத்தி பின் பெரும் பெரும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  (திருந்த வேண்டியது யாரு? மனிதன் தான். அந்த மனிதன் திருந்திட்டான்னா இந்த மதக்கலவரம் நடக்காது, மதக்கலவரம் நடக்காது.)

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எவை பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அழித்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அடுத்து நிச்சயம் தன்னில் கூட தேசம் நீ எங்கிருந்து வந்தாய் அங்கு அழிவு ஏற்பட்டிருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (இங்க லைனா அழிவு ஏற்பட்டுச்சுன்னா நீங்க எங்கிருந்து வந்தீங்க? — சென்னையிலிருந்து. அங்கிருந்து, அங்கு அடிக்கும், இங்கிருந்து இங்க அடிச்சோம்னா அதுவும் அழியும், தமிழ்நாடும் அழியும், அழியும்.)

குருநாதர் :- நிச்சயம் அவ்வளவு பின் பெரிய பெரிய சக்தி உள்ள (வெடி) மருந்துகள் எல்லாம் மனிதன் இறக்கிடுவான் வருங்காலத்தில் இங்கு நிச்சயம் தன்னில் கூட.  இங்கு அடித்தால் நிச்சயம் கீழிருந்து அழித்தால், மேல்நோக்கிய அனைத்தும் அழிந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா புரியுதுங்களா? ஏன் இங்க அகத்தியர் இங்க இருந்து சொல்றாருன்னு — இங்கிருந்து எல்லாத்தையும் பெரிய பெரிய பீரங்கிகள் வாங்கி வாங்கி இங்க வச்சு, இங்கிருந்து அடிச்சு அழுத்து இலங்கை புடிச்சிட்டா என்ன ஆகும்; தமிழ்நாடு அடுத்து இங்கிருந்து அந்த தேசத்தையும் குறிக்கோள் பண்றாங்க ஐயா, அந்த உண்டு, ஐயா புரியுதுங்களா — டார்கெட் பண்றாங்க. இங்கிருந்து டார்கெட், இங்கிருந்து இங்க அடிச்சோம், இங்கதான் மூலாதாரமே இருக்குது; இங்க டச் ஆகுது, இங்க மதக்கலவை தூண்டிவிட்டு இங்க அடிச்சோம்னா அடுத்து எங்க போகும் — அந்த பீரங்கியோட இது தமிழ்நாடு தான், தமிழ்நாடு தான் முதல்ல எபெக்ட்.)

================================================
# இராவணேஸ்வரரிடம் உள்ள கல் - “எதை நினைத்தாலும் அப்படியே கொடுக்கும்.”
================================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் மனிதனுக்கு இவை யெல்லாம் தெரியாமல் போய்விட்டது அப்பனே. இவை தன் ஏன் பின் இப்பொழுது சொல்ல எதை என்று அறிய. அப்பனே பின் இராவணனிடத்தில் அப்பனே பின் எதை என்று கூற, இக்கல் இருக்கின்றதே, இதைத்தன் எப்படி நினைத்தாலும் அப்படியாகவே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இராவணனிடத்திலும் நிச்சயம் தன்னில் கூட இனியும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். அவன் காப்பாற்றுவான். 
சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அப்ப இந்த கல்லும் வந்து நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை கொடுக்கன்றார்; அப்ப இராவணன் வந்து இங்கேயும் இருக்கிறார், வாழ்ந்து கொண்டிருக்கிறார், இன்னும் கூட வந்து இந்த தேசத்தை காப்பாத்துவார், காப்பாத்தணும்." )
அடியவர் :- இராவணன் காப்பாத்திக் காப்பாத்திக் கொண்டிருக்கிறார் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இனிமேலும் காப்பாத்துவார். காப்பாத்துவாரு. 

======================================
# “இராவணனே தேசம் அழியாதபடி காப்பாற்று”
# கலியுக ரகசியங்கள்: புதைக்கப்பட்ட வரங்கள், பாதுகாக்கப்பட்ட வருங்காலம்”
======================================

குருநாதர் :- இதனால்தான் எதை என்று கூற பின் இராவணனின் தாய்  நிச்சயம் தன்னில் கூட, பின் இவ் ஞானியர்களுக்கு நிச்சயம் அமர்ந்து, நிச்சயம் பல வகைகளிலும்   கூட பின் இவ்வுலகம் அழிவுக்கு  சென்று விடும். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட இராவணனே!!!!! நிச்சயம் தன்னில் கூட என் பக்தி அதாவது ஈசன் மீது அவ்வளவு பக்தி. அனைத்தும் உனக்கு சொல்லித் தந்து, ஞானிகளுக்கும் பின்  சொல்லித் தந்து, நிச்சயம் என்னுடைய ஆற்றலை உனக்கு தருகின்றேன். 

இத்தேசத்தில் எது என்று கூட பின் காப்பாற்று. எப்பொழுதும் எது என்று அறிய பின் நிச்சயம் உடம்பு பெறாவிடிலும் காப்பாற்று நிச்சயம் தன்னில் கூட. 

பல வகைகளில் கூட, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் பின் தங்கம், பின் வைரம்,  வைடூரியம், இன்னும் எது என்று அறிய தானாக நிச்சயம் வரவழைப்பது என்று சொல்லி நிச்சயம் புதைத்து வைத்துவிடு. 

வருங்காலத்தில் கலியுகத்தில் எதை என்று புரிய, எதை  என்று அறிய, பல போராட்டங்கள் மனிதன் படுகின்ற பொழுது இவை மனிதனுக்கு நிச்சயம் முக்கியமானதாக அமைந்து, விற்று பிழைத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் பின் நிச்சயம் என் தாயவளே .

================================
வாக்கு சுருக்கம் :- இராவணனின் தாய், ஞானிகளுடன் அமர்ந்து, உலகம் அழிவை நோக்கிச் செல்லும் காலத்தைப் பற்றி எச்சரிக்கிறார். அவள் தனது பக்தி, ஈசனின் அருள், தன்னுடைய ஆற்றல் அனைத்தையும் இராவணனுக்கு அளித்து, இந்த தேசத்தை எது வந்தாலும் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்—even உடம்பு இல்லாவிட்டாலும் காப்பாற்ற வேண்டும் என்கிறார். தங்கம், வைரம், வைடூரியம் போன்ற அரிய பொருட்களை வருங்கால கலியுகத்தில் மனிதன் போராட்டங்களில் சிக்கும்போது அவை அவனுக்கு உதவியாக இருக்கட்டும் என்பதற்காக புதைத்து வைக்கச் சொல்கிறார். மனிதன் எதிர்கொள்ளும் துன்பங்களின் நேரத்தில் இவை அவனுக்கு முக்கியமான ஆதாரமாகி, அவன் பிழைத்துக் கொள்ள உதவட்டும் என்று தாயின் அருள் நிறைந்த ஆசீர்வாதம் வெளிப்படுகிறது.
=================================

அடியவர் :- (வியப்புடன்) அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  ("அப்ப சொல்றார்—இந்த உலகம் இப்படி எல்லாம்…கலியுகம் தொடங்கிருச்சு, இப்படித்தான் எல்லாரும் வாழ்ந்துக்கிறாங்க. அப்ப இது மாதிரி நிறைய அழியும், கஷ்டம் வரும். அதனால நீ வந்து, நான் என்னுடைய பக்தி எல்லாம், எப்படி வாழணும்னு சொல்லிட்டு, உனக்கு கொடுத்துட்டு போயிடுறேன்; நான் உனக்கு கொடுத்துறேன். அப்ப நீ என்ன பண்ணு—தங்கம், வைரம் அது எப்படின்னு சொல்லிக்கொடுக்கிறேன், அதெல்லாம் புதைச்சிட்டு போயிடு. பின்னர் காலத்துல அதை எடுத்துக்கிட்டு மனுஷனை விற்று  வாழ்ந்துட்டு  போகட்டும்)

குருநாதர் :- ஆனாலும் இப்பொழுதும் இத்தேசம் எப்பொழுதோ அழிந்திருக்கும். அதை விற்று நிச்சயம் பிழைத்துக் கொண்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இந்த தேசம் எப்போ என்ன ஆயிருக்கும்—அழிஞ்சு போயிருக்கும்; ஆனா அதை எடுத்துக்கிட்டு மனுஷன் சில சில இடங்கள்ல என்ன பண்ணான், வித்து பொழைச்சுக்கிட்டான், வித்து பொழைச்சுக்கிட்டான்.)

குருநாதர் :- ஆனாலும் எதை என்று புரிய மீன் ஒருத்தனே அனைத்தும் அனுபவிக்க நேரிட்டான். ஆனாலும் இராவணன் விடவே விடவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஆனாலும் ஒருத்தன் என்ன பண்ணாராம்—அவரே அனுபவிக்கணும், அவரே அனுபவிக்கணும்; நம்பே அனுபவிக்கணும், ஆனா இராவணன் விடல….)

===========================================
# ஒரு ரகசியம் :- இராவணேஸ்வரரிடம் , இலங்கையில் இருக்கும் இரத்தினங்கள் - உலகத்தையே காக்கும் வல்லமை கொண்டது.
============================================

குருநாதர் :- அப்பனே ஒரு ரகசியத்தை சொல்கின்றேன். இங்கு இருக்கும் இரத்தினங்கள் இவ்வுலகத்திற்கே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பின் எவை என்று அறிய போய் , எவை என்று அறிய எதை என்று புரிந்தும் கூட நிச்சயம் பின் உலகத்தையே காக்கும் 

அடியவர் :- (வியப்புடன்)  ஓ… அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  (இங்க இருக்கிற இரத்தினங்கள் உலகத்தை காக்கக்கூடியது; அதை எடுத்தாவே என்ன ஆகும்—உலகத்தையே சாப்பாடு போடலாம். விலை மதிப்பில்லாதது, விலை மதிப்பு.)

அடியவர் :-  விலை மதிப்பில்லாதது 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இங்க இருக்கிற இரத்தினங்களும் அவ்வளவு இருக்குதுப்பா. அது விலை மதிப்புக்கு இல்லாதது …) 

=============================================
# நீங்கள் என்ன கேட்டாலும் தரும் கல் - இராவணேஸ்வரரிடம் உள்ளது 
=============================================

குருநாதர் :- நிச்சயம் இன்னும் இராவணன் பின் கல். எதை என்று கூற இருக்கின்றது அக்கல் பின் நீங்கள் என்ன கேட்டாலும் தரும். ஆனாலும் அது எங்கு உள்ளது என்பதெல்லாம் யார் அறிவேன் அதை தன் மனிதனுக்கு சொன்னாலும் நிச்சயம் அதை தன் பெற்றுக்கொண்டு, எதை என்று அறிய என்னென்னவோ செய்துவிடுவான். அதனால்தான் இன்னும் இன்னும் சொல்லிச் சொல்லி அதையும் காட்டுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஒரு சின்ன கல், அந்த கல்லு நம்ம என்ன கேட்டாலும் தருமாம்; அதுவும் எந்த தேசத்துல இருக்குது? இங்கதான் இருக்குது. அப்ப பிழைப்பதற்கு அவங்க அம்மா கொடுத்துட்டு போயிட்டாங்க; இராவணனுடைய அம்மா. வந்து ‘இது மாதிரி எல்லாம் இருப்பா, இது மாதிரி இருக்குது, இருப்பான்’ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.)

அடியவர் :-  (அதனால அந்த கல்லை இப்ப நான் சொல்லிடுவேன்; சொன்னா மனுஷன் அதை வச்சு என்ன கேட்டாலும் , அதைத் தரும். அதனால இப்ப நான் சொல்லல ) 

======================================
# அன்பு குருநாதர் ரகசியங்கள் இன்னும் நமக்கு தெரிவிக்க - இராவணேஸ்வரரின் தாயிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும் 
=====================================

குருநாதர் :- எதை என்று புரிய ஆனாலும் இவையும் கூட சிவபக்தியான இராவணன் பின் தாயிடமே முறை கேட்டுத்தான் யான் செப்ப வேண்டும். அதனால்தான் இங்கிருந்து யான் செப்பிக் கொண்டிருக்கின்றேன். 

அடியவர் :- ஓ…. 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய அப்பனே யாரும் அடிக்கடி சந்திப்பேன், இங்கு வந்து. 

அடியவர் :- ஓ…. 

அடியவர்கள் :- ( சிலாகிப்புகள் , கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அகத்தியர் கூட 

அடியவர் :-  இராவணன் அம்மாவை பார்க்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடிக்கடி வந்து பார்ப்பாராம், அப்பொழுதே …( முன்பு )

=============================================
# அன்பு குருநாதர்,  திருகோணமலையில்  அமைத்த பல ஆராய்ச்சி கூடங்கள்
=============================================

குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே பல வடிவங்களில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல கண்டுபிடிப்புகள்  அப்பனே பின் இதன் கீழே நிச்சயம் தன்னில் கூட. ஆராய்ச்சி நிலைகள் (ஆராய்ச்சி கூடங்கள்) எல்லாம் யான் நிச்சயம் தன்னில் கூட நிறுவி இருந்தேன்  பின் உலகம் எப்படி எது என்று எல்லாம் அப்பனே அறிவின் (அறிவியல்) வழியாக. அதெல்லாம் அப்பொழுது அப்பொழுது அங்கு சென்று விடுவேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ("அப்ப என்ன பண்ணுவாரு—அறிவின் வழியா இங்க எல்லாம் கீழே நிறுவி இருந்தாராம்; யாரு? அகத்தியர். ஆராய்ச்சி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அமைச்சிருந்தாராம், கீழே எல்லாம் அமைச்சிருந்தாராம். இப்படி எல்லாம் மனிதன் வந்து உலகம் எப்படி இருக்குது, உலகம் எப்படி அழியப்போகுது, எப்படி இது பண்ணப் போகுது என்று அடிக்கடிக்கும் இங்க வந்து ஆராய்ச்சி பண்ணுவேன்  என்றார்.)

===============================================
# திருகோணமலை, இலங்கை  - “பல ஞானிகள் வாழ்ந்த பூமி இது”
===============================================

குருநாதர் :- எதை என்று புரிய எவை என்று அறிய அறிய இன்னும் பல ஞானிகள் பற்றி சொல்கின்றேன் இங்கே. நிச்சயம் இதனால் தாயவள் , இன்னும் கூட பல ஞானிகள் பற்றி தெரியாமலே இருக்கின்றது. 

பல ஞானிகள் வாழ்ந்த பூமி இது நிச்சயம் தன்னில் கூட. 

===============================================
# அனைவருக்கும் அவ் சக்திகள் கிடைக்கட்டும். உங்கள் மனம் போலே ஆகட்டும்.
===============================================

குருநாதர் :- அனைத்தும் யான் சொல்லிவிடுவேன் நிச்சயம் தன்னில் கூட.  

அனைவருக்கும் அவ் சக்திகள் கிடைக்கட்டும் நிச்சயம் தன்னில் கூட மனம் போலே ஆகட்டும். 

அதனால்தான் ஏன் எதற்கு நிச்சயம் உங்களிடத்தில் யார் அதாவது சொல்வேன் என்றால் பைத்தியக்காரனா என்ன இவ் அகத்தியன்? 

அடியவர் :-   (சிவ சிவா) இல்ல இல்ல ….

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அகத்தியர் என்ன சொல்றாரு—இதெல்லாம் யாருக்கு உங்க கையில சொல்லணும்? நான் என்ன  பைத்தியக்காரனா? ; அகத்தியர் வந்து  சொல்றார். ஏன்னா இது வந்து தொடர்ந்து பல ஞானிகள் வாழ்ந்த பூமி )

==================================
# அவ்  ஞானிகளை பற்றி தெரிந்து கொண்டாலே நிச்சயம் உங்களுக்கு சக்தி கிட்டும்.
==================================

குருநாதர் :- அனைத்து ஞானிகளும் இங்கு தேடி எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. எதற்காக வந்தார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அவ் ஞானிகளை பற்றி தெரிந்து கொண்டாலே நிச்சயம் உங்களுக்கு சக்தி. அதாவது தெரிவிக்கின்றேன். 

===================================
# நால்வர் (சமயக்குரவர்) - சைவ சமயத்தின் தூண்கள் சக்தி  -  - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்), மற்றும் மாணிக்கவாசகர் 
===================================

குருநாதர் :-  நால்வர்கள் பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டு அவர் பாடல்களை பாடிக்கொண்டே இருக்கின்றீர்கள் அல்லவா? அவர் சக்தியும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றது. 

குருநாதர் :-  இதனால் பல ஞானிகள் நிச்சயம் இருக்கின்றார்கள் அவர்களை தொழுகின்றார்கள் நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் தன்னுடைய சக்தியை கொடுக்க கிடைக்கின்றது அல்லவா? 

=========================================
# அன்பு குருநாதரின் கருணையால் - உங்கள் சக்திகள் கூடும் ரகசியங்கள் 
=========================================

குருநாதர் :-  அதேபோலத்தான் இன்னும் நிச்சயம் பின் மறைந்த பின் ஞானியர்கள் இருக்கின்றார்கள் அவர்களைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட பின் தெளிவு பெற்றால் நீங்களும் நிச்சயம் தன்னில் கூட, பின் தெளிவு பெற்று, நிச்சயம் சக்தி உள்ளவராக மாறுவீர்களாக. இன்னும் எதை என்று புரிய, அனைத்தும் புரிந்து கொண்டால்.

======================================
# நிச்சயம் மூலிகைகள்  பற்றி சொல்வேன் 
======================================

குருநாதர் :-  நிச்சயம் மூலிகைகள்  பற்றி சொல்வேன் எதை என்று கூற அறிந்தும் கூட இதனால் கவலையே வேண்டாம். 

============================
# சிவபுராணத்தை ஓதுங்கள்.
============================

குருநாதர் :-  நிச்சயம் மீண்டும் பின் பரப்புகின்றேன். நிச்சயம் பின் சிவபுராணத்தை ஓதுங்கள்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2116 - அன்புடன் அகத்தியர் - இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 2 

நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 2) 

=======================================
# மகா புண்ணியசாலி இராவணேஸ்வரரின் அன்னை அவர்கள் நடத்திய குருகுலம்: ஒரு மகத்தான ஞானப்பீடம்
========================================

குருநாதர் :- அப்பனே, அம்மையே, அறிந்தும் எதை என்று. இதனால் நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது இராவணனுடைய தாயவள், அறிந்தும். இன்னும் தந்தை என்று நிச்சயம், பின் எவ்வாறு என்பவையெல்லாம் நிச்சயம் பின்பு உரைக்கின்றேன். இப்பொழுது தாயைப் பற்றி உரைக்கின்றேன். 

குருநாதர் :-  நிச்சயம் அறிந்தும் எவ்வளவு ஆனாலும், பின் தாயவளோ நிச்சயம் தன்னில் கூட மிகுந்த சிவபக்தி. ஆனாலும் நிச்சயம் குருகுலத்தை ஒன்று நடத்தினாள் , நிச்சயம் அனைத்தும் அனைவரும் ஒன்றே என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "இப்ப இராவணேஸ்வரர் அவங்க தாயைப் பத்திதான் சொல்ல வராரு. அந்த அம்மா எப்பேர்ப்பட்ட சிவபக்தை தெரியுமா? அவங்களோட அந்தப் பெருமையைத் தான் இங்க உரைக்கப் போறாங்க. சொல்லப்போனா, ராவணனோட அம்மா இங்க ஒரு குருகுலத்தையே நடத்தினாங்க. அந்த குருகுலத்துல அவங்க சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம் என்ன தெரியுமா? 'இந்த உலகத்துல இருக்கிற எல்லாரும் ஒண்ணுதான், அனைவரும் ஒன்றே' அப்படின்ற அந்த உயர்ந்த தத்துவத்தைத்தான் அவங்க அங்க சொல்லிக் கொடுத்தாங்க." )

============================================
# "அனைவரும் ஒன்றே: ஈசனின் அருளைப் பெற அன்னை கற்பித்த அறநெறி"
============================================

குருநாதர் :-  நிச்சயம் அறிந்தும் சிறுவயதிலிருந்தே இராவணனுக்கு நிச்சயம் தன்னில் கூட, அனைவரிடத்திலும் அன்பாக பழக வேண்டும். நிச்சயம் அதனால் நிச்சயம் அனைவரும் ஒன்றே. யாருக்காவது ஒரு தீங்கு ஏற்பட்டால் ஓடோடி நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் பல வழியில் கூட நன்மைகள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஈசன் அனைத்தும் வழங்குவான் என்று, சிறுவயதிலிருந்தே அனைத்து பிள்ளைகளுக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இராவணனுக்கு அவங்க அம்மா என்ன சொல்லிக் கொடுத்தாங்க தெரியுமா? 'யாருடைய வாழ்க்கையிலயும் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது, எல்லாரும் ஒண்ணுதான்' அப்படின்னு ராவணனுக்கு ஆழமா சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, யாருக்காவது ஒரு கஷ்டம்னா, ஒரு பிரச்சனைன்னா, நீ உடனே அங்க போய் நிக்கணும். எந்த மதம், எதுவுமே பார்க்கக்கூடாது; யாருக்காவது ஒரு அழிவு வருதுன்னா, நீ பதறிப்போய் முன்னாடி நின்னு அவங்களுக்கு உதவி செஞ்சு அந்தப் பிரச்சனையைச் சரி பண்ணனும். இதுதான் அந்தத் தாய் தன் மகனுக்குக் கொடுத்த உன்னதமான போதனை. அந்தத் தர்மத்தைத்தான் ராவணேஸ்வரர் பின்பற்றி வாழ்ந்தாரு." )


குருநாதர் :-  நிச்சயம் ஆனாலும் அறிந்தும் புரிந்தும் அனைத்து எவை என்று அறிய, பின் பல, பின் குருமார்களை நிச்சயம் தன்னில் கூட உருவாக்கிய பெருமை இராவணனின் பின் தாய்க்கே சேரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ("உலகத்துல எவ்வளவோ குருமார்கள் இருக்கலாம், ஆனா அந்தப் பல குருமார்களையே உருவாக்குற அந்தப் பெரிய பொறுப்பும் பெருமையும் யாரைச் சேரும் தெரியுமா? அது நேரா ராவணனோட அம்மாவைத்தான் போய்ச் சேரும். ஏன்னா, அவங்க நடத்துன அந்த குருகுலம்தான் பல ஞானிகளையும் குருக்களையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துச்சு. குருக்களுக்கெல்லாம் குருவா இருந்து, அவங்களை உருவாக்குன அந்த மூலசக்தி அந்தத் தாய்தான்." )

=======================================
"ஞானத்தின் பிறப்பிடம்: அகிலமெங்கும் அறத்தைப் பரப்பிய இராவணேஸ்வரரின்  அன்னை நடத்திய குருகுலம்"
======================================

குருநாதர் :-  நிச்சயம் எதை புரிய, எதை என்று அறிய, இதில் கூட எவை என்று கூற இன்னும் சிறப்புக்கள். இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் இங்கு குருகுலம் பெருத்த பெருத்த எதை என்று கூற, பின் பல மக்கள் நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று கூற பல வழியில் கூட ஞான உபதேசங்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட எடுத்து பரப்பினால், பின் நிச்சயம் பின் இராவணனின் அறிந்தும் எதை என்று கூற தாயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப அந்தத் தாய் நடத்திய குருகுலத்துல எவ்வளவோ உன்னதமான விஷயங்கள் நடந்திருக்குங்க. ராவணேஸ்வரரின் அன்னை, ஊர்ல இருக்கிற ஏழை எளிய மக்கள்னு எல்லாரையும் அன்போடு ஒண்ணா திரட்டி அந்தக் குருகுலத்துக்குக் கூட்டிட்டு வருவாங்களாம். அப்படி வர்ற அந்த மக்களுக்கு, மனசுல இருக்கிற குழப்பமெல்லாம் தீரணும்னு பல உயர்வான உபதேசங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான நல்ல அறிவுரைகளையும் அள்ளி அள்ளி வழங்குவாங்களாம். ஒரு தாய்க்கே உரிய அந்தப் பேரன்போட, வர்றவங்க எல்லாருக்கும் ஞானத்தைப் போதிச்சு அவங்களை நல்வழிப்படுத்துறதுல அந்தத் தாய் ஒரு மாபெரும் வழிகாட்டியாவே திகழ்ந்திருக்காங்க.")

========================================
"மரணமிலாப் பெருவாழ்வு: அன்னை போதித்த உடலின் ரகசியமும் மினுமினுக்கும் ஆன்ம சக்தியும்"
========================================

குருநாதர் :-  ஏன், எதற்கு, நிச்சயம் எவையெல்லாம் நிச்சயம் ஆனாலும் பின் தாயவள் அறிந்தும் கூட எவையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம் வருங்காலத்தில் நிச்சயம் பின் தன்னைத்தானே வென்று, எப்பொழுதும் உடம்பு போனாலும், உயிர் போனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இவ் உடம்பை பல வழியில் கூட சக்திகள் பெற்றுவிட்டால் நிச்சயம் எப்பொழுதும் நிச்சயம் பின் அழியாது. 

குருநாதர் :-  ஆங்காங்கே தங்கி தங்கி நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் உடம்பு, அதாவது உயிர் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவ்வாற்றல் பின் சிறு நிச்சயம் மின் மினு பூச்சி போல் இருந்து நிச்சயம் அனைவரும் காக்கும் என்பதை எல்லாம் திடமாக நிச்சயம் எண்ணி கூறினாள்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப அந்தத் தாய் எப்பேர்ப்பட்ட ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்திருக்காங்க பாருங்க! பல ஞானிகள் பெரிய பெரிய ஞானத்தையும், உபதேசங்களையும் இந்தக் குருகுலத்துல கத்துக்கிட்டு இருக்காங்க. அப்ப அந்த அம்மா என்ன சொல்றாங்கன்னா, 'இந்த ஞானத்தை எல்லாம் நீங்க சரியா கத்துக்கிட்டு மனசுல ஏத்திக்கிட்டீங்கன்னா, ஒரு மனுஷன் இறந்து போனாலும், அவன் உடம்பும் உயிரும் மறைஞ்சு போனாலும், அவங்க செஞ்ச அந்தப் புண்ணியமும் ஆற்றலும் மட்டும் அழியவே அழியாது' அப்படின்னு சொல்றாங்க. அது எப்படி இருக்குமாம்? ஒரு சின்ன மின்மினிப் பூச்சி மாதிரி அந்த ஆற்றல் ஒளி வீசிக்கிட்டே ஆங்காங்கே தங்கி இருக்குமாம். அந்த ஒளி மங்காம அப்படியே இருந்து, உலகத்துல இருக்கிற மத்த எல்லாரையும் எப்பவும் ஒரு கவசம் மாதிரி பாதுகாத்துக்கிட்டே இருக்கும்னு அந்தத் தாய் ரொம்ப திடமாச் சொல்லியிருக்காங்க." )

=======================================
"மின்மினிப் பூச்சியாய் ஞானிகள்: திருத்தலங்களைக் காக்கும் அழியாத பேரொளி"
=======================================

குருநாதர் :- இதேதான் இன்னும் கூட இங்கும் கூட பல வழியில் கூட ஞானிகள், பின் அப்படித்தான் இருக்கின்றார்கள். மின் மினு பூச்சி போலே. 

குருநாதர் :-  பின் இதனால்தான் அழிவுகள் எதை என்று புரிய பின் வரவில்லை. பின் அப்படி பின் இல்லாமல் இருந்தால் எப்பொழுதும் இத்  திருத்தலத்திற்கு அழிவு ஏற்பட்டிருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அதனால்தாங்க இந்தத் திருத்தலங்களுக்கு இன்னும் அழிவே வராம இருக்கு. அந்த ஞானிகள் மட்டும் அங்க இல்லாம போயிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்? எப்பவோ இந்தத் திருத்தலமெல்லாம் அழிஞ்சு போயிருக்கும். அவங்க அங்கேயே தங்கி அந்த சக்தியைக் கொடுத்துக் காக்குறதுனாலதான், இன்னைக்கும் இது நிலைச்சு நிக்குது.")

===========================================
"ஆன்ம ஆற்றலின் கணக்கீடு: நூறு சதவீத சக்தியும் ஞானிகளின் பெருங்கருணையும்"
===========================================

குருநாதர் :-  அறிந்தும் மனிதன் பொறாமை எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனாலும் அவ் மின்மினி  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பல ஞானியர்கள் நிச்சயம் ஏதாவது நிச்சயம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். 

குருநாதர் :-  ஆனாலும் அறிந்தும் பின் எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் இங்குள்ள சக்திகள் பன்மடங்கு நிச்சயம் அதிகம் அப்பா. ஆனாலும் அவன் அதிகமாக பின் சக்தியை பெற்றால்தான் இங்கு வந்தாலும் நல்லவை ஆகும். அல்லது பின் குறைவாக அதாவது பின் நூற்றுக்கு குறைவாக நிச்சயம் தன்னில் கூட சக்திகள் பெற்றால், அவனே நிச்சயம் தாழ்ந்து விடுவான் என்பேன். இப்பொழுது பின் அதுதான் நடந்தும் கொண்டிருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அப்ப அந்தப் பல ஞானியர்களும் திருத்தலங்களுக்கு வந்து மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும், உண்மையான நன்மைகள் போய் சேரணும்னு அந்த மின்மினிப் பூச்சி மாதிரி ஆங்காங்கே தங்கி நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அங்க ஒரு பெரிய 'வைப்ரேஷன்' (அதிர்வு) இருக்குங்க. அந்தப் பெரிய சக்தி நிலையைத் தாங்குற அளவுக்கு நம்மகிட்ட ஆற்றல் இருந்தா மட்டும்தான், அங்க போய் நாம வேண்டிக்கிறது பலிக்கும், நல்லது நடக்கும். ஒருவேளை நம்மகிட்ட அந்த எனர்ஜி இல்லைன்னா என்ன ஆகும்? அந்தச் சக்தியைத் தாங்க முடியாம மனுஷங்க தாழ்ந்து போயிடுவாங்க, அதாவது வீழ்ந்துடுவாங்கன்னு குருநாதர் சொல்றாரு." )

குருநாதர் :-  ஆனாலும் பொய் பேசுபவர்கள் பொறாமைக்காரர்கள் இப்படித்தான் திரிந்து கொண்டிருக்கின்றான் இங்கு. இதனால் அவர்களுக்கு என்னதான் நடக்கப்போகின்றது என்று நிச்சயம் இப்பொழுதே அறிந்திருக்கின்றேன். ஆனாலும் சொல்லப்போவதில்லை. 

(இவ் வாக்கு உரைத்த போது ஆலய மணி அங்கு ஒலித்தது……)

அடியவர் :-  மணி அடிக்குது அய்யா.

சுவடி ஓதும் மைந்தன் :- ( “ஆனா இப்போ நிறைய பேரு பொய் சொல்லிக்கிட்டும், பொறாமை எண்ணத்தோடும், ஒரு நல்லெண்ணம் இல்லாமலும் தான் வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு என்ன ஆகும்ங்கிறத பத்தி நான் சொல்ல விரும்பல. ஏன்னா, சித்தர்கள் ஒரு வார்த்தையை நெகட்டிவ்வா சொல்லிட்டா, அது அப்படியே பலிச்சுடும்; அதனாலதான் நான் அதைச் சொல்லாம விடுறேன். அவங்களுக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியும், ஆனா அதைச் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவங்க அவங்க செஞ்ச கர்மா அவங்களை அப்படி ஆட்டி வைக்குது, அதுதான் இப்போ நடந்துட்டு இருக்கு." ) 

=====================================================
# "அன்னை இராவணேஸ்வரருக்குப் போதித்த  ரகசியங்கள்"
=====================================================

குருநாதர் :-  அப்பனே இதனால் எதை என்று கூற அம்மையே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் சிறு வயதிலிருந்து நிச்சயம் தன்னில் கூட இராவணனுக்கு பல வகையிலும் கூட பின் ஈசனை எவ்வாறு அடைதல் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாகவே இளமையாக இருத்தல் எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருந்தால், நிச்சயம் சில வழியில் கூட, பின் உடம்பு நிச்சயம் தான் தானே நிச்சயம் தன்னில் கூட, அழித்தாலும் மீண்டும் மீண்டும் பிறக்கலாம் என்றெல்லாம் அனைவருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இராவணனோட அம்மா அந்தக் குருகுலத்துல என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க பாருங்க! எப்பவுமே இளமையா இருக்கிறது எப்படின்னும், ஒருவேளை உயிர் போயிட்டாக்கூட அந்த உயிரைத் திரும்பத் திரும்ப எப்படிக் கொண்டு வர்றதுன்னும் அந்த ஞான குருகுலத்துல எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. மரணத்தை வெல்றது எப்படின்னும், உடம்பையும் உயிரையும் எப்படித் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிறதுன்னும் அந்தத் தாய் அங்க இருந்த எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப நுணுக்கமாப் போதிச்சிருக்காங்க." ) 

குருநாதர் :-  ஆனாலும் இதைத்தான் பயன்படுத்திக்கொண்டு பலபேர் ஞானிகள் ஆனார்கள். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அவர்களாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் கலியுகத்தில் உயிர் நிச்சயம் தன்னில் கூட உடம்பை பெற்று ஆனாலும் நிச்சயம் எவை என்று கூட வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் உயிரோடு நிச்சயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பின் உடம்பு இல்லை.

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் கலியுகத்துல உடம்பு இல்லாம, அந்த ஞானிகள் எல்லாம் , உயிர் மட்டும் உலா வந்திருக்கிறது.

=========================
# கல்லும் நிலநடுக்கமும்
=========================

குருநாதர் :-  நிச்சயம் எதை என்று புரிய அதாவது சரி சமமாக அக்கல்லானது நிச்சயம் தன்னில் கூட ஒரு எல்லைக்குத்தான். அவ் எல்லை விட்டு மேல் எழும்பிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் தேசம் பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு எழுந்துவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட பின் நிலநடுக்கங்கள் ஏற்படும் நிச்சயம் தன்னில் கூட, இவ்  தேசம் பின். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அந்தக் கல் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிக்கிட்டே வருதுங்க. அப்படி ஏறி அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வந்துருச்சு. அந்த எல்லையை மட்டும் அது தாண்டுச்சுன்னா என்ன ஆகுமாம்? இந்தத் தேசத்துல பெரிய நிலநடுக்கம் வந்துடும், நிலநடுக்கமே வரும்னு குருநாதர் ரொம்பத் தெளிவா எச்சரிக்கிறாரு." )

===========================================
# போட்டி, பொறாமை :-  தவிர்க்க முடியாத அழிவு.
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட பின் மக்கள் பின் சாய்வார்கள் எதை என்று புரிய யாராலும் தடுக்க முடியாது. எதற்காக இறைவன் இருக்கின்றானா என்ற சந்தேகம் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  ஏனென்றால் மனிதனின் ஆட்டங்கள் அதிகமாகின்ற பொழுது தீய பழக்கங்கள் அதிகமாகின்ற பொழுது, பொய் பொறாமை பின் இவைகள் அதிகமாகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் அறிந்தும், அதாவது பின் அழுத்தம் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது அடியிலிருந்து இன்னும் மேல மேலே எழும்ப எழும்ப, நிச்சயம் பாதிப்பு தான் அதிகம். 


சுவடி ஓதும் மைந்தன் :- (  "மக்களுக்குள்ள எப்போ இந்தப் போட்டி, பொறாமை, மனசுல அழுக்குன்னு இதெல்லாம் அதிகமாகுதோ, அப்போ அது ஒரு 'பிரஷரா' (அழுத்தமா) மாறி அந்தக் கல்லை ஈர்க்க ஆரம்பிச்சுடும். மக்கள் அப்படி இருக்குறதுனால, அந்த அழுத்தம் தாங்காம அந்தக் கல் இன்னும் மேல மேல போய்க்கிட்டு இருக்குமாம். அப்படி அந்தப் பிரஷர் அதிகமாகி கல் எல்லையைத் தாண்டிடுச்சுன்னா என்ன ஆகும்? மக்கள் எல்லாரும் அப்படியே சாய்ஞ்சு மடிஞ்சு போவாங்க, பெரிய அழிவே வரும்னு சொல்றாரு. அந்த மாதிரி ஒரு நிலை வந்துட்டா, அதை யாராலயும் தடுத்து நிறுத்தவே முடியாது." )

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் பின் எதுவும் செய்யத் தேவையில்லை. நல் எண்ணங்களோடு, பொறாமை இல்லாத ஒரு பின் அதாவது நிச்சயம் அனைவரும் சகோதரராகவே நிச்சயம் என்ற எண்ணம் எப்பொழுது வருகின்றதோ மீண்டும் எதை என்று கூற பின் அப்பொழுதுதான் பின் இவ் தேசம் காக்கப்படும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்தத் தேசம் எப்போ காக்கப்படும் தெரியுமா? எல்லாரும் மனசாரச் சந்தோஷமா, ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பி மாதிரி ஒற்றுமையோட இருந்தா மட்டும்தான் தேசம் காக்கப்படும். அந்தத் தேசம் அழியாம இருக்கணும்னா, மக்கள் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சு, அந்த ஒற்றுமையோட இருக்கணும்னு குருநாதர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு." )

குருநாதர் :-  இதுதான் நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் இராவணன் எதை என்று கூற தாயவள் நிச்சயம் அனைத்து பின் சமயர்களுக்கும் எதை என்று கூற பின் அனைவரும் தன் பிள்ளையாக என்று எண்ணியே நிச்சயம் பின் அனைத்தும் சொல்லிக் கொடுத்தாள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப இராவணனோட அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா? வர்றவங்க எந்தச் சமயத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், அவங்க எல்லாரையும் தன்னோட சொந்தப் பிள்ளையாத்தான் நினைச்சாங்க. அப்படித் தன் பிள்ளையா நினைச்சுதான், அந்தப் பெரிய ரகசியங்களை எல்லாம் அவங்களுக்கு மனசாரச் சொல்லிக் கொடுத்திருக்காங்கப்பா.")

=========================================
#  "தாய் உள்ளம் :-  இராவணேஸ்வரருக்கு அன்னை இட்ட அந்த அன்புக் கட்டளை"
========================================

குருநாதர் :-  ஆனாலும் இதில் மிகுந்த சிறப்பு என்னவென்றால் இராவணனுக்கு சொல்லிக் கொடுத்தது நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. அதாவது “இராவணனே எப்பொழுதும் நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் என் குழந்தை என்று நீ பின் காட்டிக்க கூடாது. என் தாய் என்று நிச்சயம் அதை”  எதை என்று அறிய “இங்கு வருபவர்கள் எல்லாம் என் குழந்தைகளே” என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  இதனால் பின் நீ அதாவது அறிந்தும் கூட எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட என்னை, தன் தாய் என்பதிலும் கூட பின் அழைக்கக்கூடாது நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  ஏனென்றால் இவர்களும் நிச்சயம் தன்னில் கூட பின் யாரும் இல்லாதவர்கள். நிச்சயம் அவ்வாறு நீ அழைத்தால் நிச்சயம் தன்னில் கூட, இவர்களுக்கும் நிச்சயம் பின் மனம் வருந்தும் இதனால் நீ எப்பொழுதும் என்னை தாய் என்றே அழைக்கக்கூடாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "புரியுதுங்களா, அப்ப இராவணனோட அம்மா என்ன சொல்லிட்டாங்கன்னா, 'என்னைத் தாய்னு நீ கூப்பிடக்கூடாது' அப்படின்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, அங்க வந்திருக்கிற மத்தவங்க எல்லாம் யாருமே இல்லாதவங்க; நீ மட்டும் என்னை அம்மான்னு கூப்பிட்டா அவங்க எல்லாம் வருத்தப்படுவாங்கன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க. 'நீ என் அம்மான்னு சொல்லக்கூடாது, நானும் நீ என் பிள்ளைன்னு சொல்ல மாட்டேன்; இங்க இருக்கிற எல்லாரும் என் பிள்ளைகள்தான்'னு அந்தத் தாய் சொல்றாங்க பாருங்க, அதுதான் அங்க இருக்குற பெரிய வித்தியாசம்." )

==================
# குருநாதர் கருத்து 
==================
============================================
"ஞானிகளின் தாய்: புத்தரையும் இயேசுவையும், (நபிகள்) நாயகரையும் இராவணனையும்   அரவணைக்கும் அன்னையின் பேரன்பு"
============================================

குருநாதர் :-  அப்பா ஒரு நிச்சயம் எனது கருத்து அறிந்தும் புரிந்து கூட, அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. அதாவது எவை என்று புரிய இப்படி சொன்னாலும் புரியாது புத்தனும் அறிந்தும் கூட, இயேசுவும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் அறிந்தும் புரிந்தும் கூட இராவணனும் அறிந்தும் எதை என்று அறிய (நபிகள்) நாயகனும் நிச்சயம் பின் தாயவளுக்கு மிக்க மிக்க நெருக்கங்களே பிள்ளைகளே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப என்ன சொன்னாங்க தெரியுங்களா? ஒரு கருத்தைச் சொன்னாங்க பாருங்க—எப்பவுமே ஒரு தாய்க்கு அவளோட பிள்ளைகள்னா ரொம்ப நெருக்கம் தானே, அதை அப்படியே இங்கேயும் வச்சுக்கலாம்னு சொல்றாரு. அப்ப அந்தத் தாய் இயேசு, புத்தர், நபிகள் நாயகம்னு இவங்க எல்லாரையும் எப்படிப் பார்த்தாங்க? 'இவங்க எல்லாம் என் பிள்ளைகள்தான், என் பிள்ளைகள்தான், என் பிள்ளைகள்தான்'னு அந்த அம்மா ரொம்ப உரிமையோடு சொல்றாங்க. அந்த அளவுக்கு அவங்க எல்லாரும் அந்தத் தாய்க்கு ரொம்ப நெருக்கமான பிள்ளைகளா இருந்திருக்காங்க." )

குருநாதர் :-    ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட பின் இராவணன் எதை என்று கூற ஆனாலும் இவன் யாரும் அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.


சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஆனா இதைப் புரிஞ்சுக்கணும்னா ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, இந்த அம்மா வந்து எல்லாருக்குமே தாயாத்தான் இருந்திருக்காங்க. இது வந்து அவரோட கருத்து—அதாவது அவரோட 'ஒப்பினியன்' (Opinion). எல்லாருமே இவங்களை ஏத்துக்கிட்டு இருக்காங்க. 'எல்லாருக்கும் இவங்க தாயாத்தான் இருந்திருக்காங்க'ங்கிறதுதான் அவரோட ஆணித்தரமான கருத்து. அந்தத் தாய் எல்லாருக்குமே பொதுவானவங்களா இருந்து வழிநடத்தி இருக்காங்க." ) 

=======================================
# "மறைக்கப்படும் ஞானமும் ‘தான்’ என்ற அகந்தையும்: அழிவின் தொடக்கப்புள்ளி"
=======================================

குருநாதர் :-   ஆனாலும் தற்பொழுது எதை என்று அறிய இவ்வாறெல்லாம் ஞானிகள் உண்மை நிலை நிச்சயம் தன்னில் கூட. இப்பொழுது மனிதனால் மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டு, தான் என்ற எண்ணம் அதிகமாகிவிட்டது. எப்பொழுது தான் என்ற எண்ணம் அதிகமாக பின் மக்களுக்கு எவை என்று அறிய மக்களிடையே இருக்கின்றதோ, அப்பொழுதே அழிவு என்றும் நினைத்துக் கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஆனா மனுஷனுக்கு அந்தத் 'தான்' என்ற எண்ணம் இருக்கவே கூடாதுங்க. அந்தத் 'தான்' என்ற எண்ணம் எப்ப மனுஷனை விட்டுப் போகாம இருக்கோ, எப்ப மனுஷனுக்கு அந்த எண்ணம் ரொம்ப அதிகமா வருதோ, அப்பவே அவனுக்கு அழிவு தொடங்கிடுச்சுன்னு அர்த்தம். அந்தத் 'தான்' என்ற அகந்தை அதிகமாகத் தொடங்குறப்பவே அழிவும் கூடவே தொடங்கிடுச்சுன்னு குருநாதர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு." )

========================================
# "ஒன்றே குலம்: அகந்தை அழியும் போதே, இயற்கை இறைவன் வசப்படும்!"
========================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட முன்னோர்கள் எவை எவை என்று அறிய நல்லோருக்கு நிச்சயம் அதாவது பின் எவை என்று புரிய பின் நல்லோர்கள் பலபல நிச்சயம் இவ்வாறு குருகுலம் அமைத்து அனைத்தும் ஒன்றே என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். 

குருநாதர் :-  ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் ஒழுக்கமாக நல் மனதோடு பொறாமை இல்லாத நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றே என்று நினைத்தால், இறைவன் அனைத்தும் செய்வான். 

==========================================
# "ஆணவத்தின் வீழ்ச்சி: அகந்தையை அடக்கும் இயற்கையின் ருத்ரதாண்டவம்!"
==========================================

குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் மனிதன் என்னவோ நிச்சயம் தன்னை கூட தான் என்ற அகங்காரம் வந்துவிட்டது.  இதனால் பின் அவ் அகங்காரத்திலே அழிகின்றது. அவ் அகங்காரத்திலே நிச்சயம் தன்னில் கூட பின் இயற்கையும் நிச்சயம் பின் எதை என்று கூற பின் எவை என்று மனிதனுக்கு என்னவென்று காட்டிவிடும். இயற்கை இறைவனே எதை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "மனுஷன்கிட்ட எப்போ அந்த மாதிரி கெட்ட எண்ணங்கள் எல்லாம் அதிக அதிகமாகிப் போகுதோ, அப்போ அவன் எதையுமே சரியா நினைக்க மாட்டான். எல்லாரும் சமம்னு நினைக்காம, 'நம்மதான் பெரிய ஆளு'ன்னு நினைச்சுப்பான். ஆமா, அப்படி அவன் நினைக்கிறப்போ இயற்கையே கோவப்பட்டு எல்லாத்தையும் அழிச்சிரும்; எல்லாத்தையுமே அழிச்சிடும். ஏன்னா, அந்த இயற்கைதான் எல்லாம்; அந்த நேச்சர்தான் கடவுள். கடவுள்ங்கிறவர் அந்த இயற்கையா இருந்து எல்லாத்தையும் முடிச்சு வச்சிருவாரு." )

======================================
# வரும் காலத்தில் - சமயங்களுக்குள் பல வருத்தங்களை ஏற்பாடு செய்யப் போகின்றான்.
====================================== 

குருநாதர் :-   எதை என்று அறிய அப்பனே அறிந்தும் ஏன் எதற்கு என்றால் நிச்சயம் அப்பனே எவ்வாறு என்பதை இவ் தேசத்தில் நிச்சயம் மனிதனே நிச்சயம் தன்னில் கூட பல சமயங்களுக்குள் பின் சண்டைகள் இட்டு  நிச்சயம் பல வருத்தங்களை ஏற்பாடு செய்யப் போகின்றான் வருங்காலத்தில் சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "வருங்காலத்துல இங்க மதச்சண்டைகள் வரும்பா, சமயங்களுக்குள்ள பெரிய சண்டை சச்சரவு எல்லாம் வரும்னு குருநாதர் சொல்றாரு. அந்த மதச்சண்டைகளால என்ன ஆகும்னா, நிறையப் பேர் ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுப்பாங்கப்பா. அப்படி அந்தச் சண்டையினாலேயே ஜனங்க நிறையப் பேர் அழிஞ்சு போவாங்கன்னு அவர் ரொம்ப வருத்தமா எச்சரிக்கிறாரு." ) 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2115 - அன்புடன் அகத்தியர் - இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 1

நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

==============================
# இராவணேஸ்வரர் ரகசியங்கள்
==============================

இராவணனின் ரகசியங்கள் சொல்லப் போகின்றேன்.  ஏன், எதற்கு என்றெல்லாம். 

ஏன் இராவணனின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் நிச்சயம் தன்னில் கூட?. 

பல ஞானியர்களின் ரகசியத்தை தெரிந்து கொண்டால், அவ் ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு பிறந்து இன்னும் பல வழிகளில் கூட சாதிப்பான். 

அதனால்தான் மீண்டும் பல ஞானிகளின் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றெல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டால், அவருடைய சக்தியும் கூட மனிதனுக்கு நிச்சயம் தன்னில் கூட வரும். அவ்வாறு வருவதால், நிச்சயம் வாழ்க்கையில் பன்மடங்கு உயர்வுகள் பெறலாம். 

அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்கு, நிச்சயம் தெரியாத பொருளை எல்லாம் அறிந்து எவை என்று புரிய என்ன செய்யப் போகின்றார்கள் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, தெரிந்து கொண்டே ஆகவேண்டும். 

================================
# நல் நினைவு போல,  நல் நிகழ்வுகள் வாழ்வில் நடக்கும். 
# ஞானியர்களை வாழ்க்கையை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள் 
================================

குருநாதர் :- நிச்சயம் எப்பொழுதும் ஒரு தீய செயலைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால், நிச்சயம் தன்னில் கூட தீயவைத்தான் நடக்கும். 

அதேபோலத்தான் நல்லதை நிச்சயம் தன்னில் கூட சொன்னால், பின் நல், பின் எதை என்று அறிய அறிய  பல ரகசியங்கள் சொன்னால், அவை பற்றியே சிந்தனைகள் வருகின்ற பொழுது, அவை தன்னின் ஆற்றல் மனிதனுக்கு கிடைத்து, நிச்சயம் வெற்றிகள். 

====================================
# இராவணேஸ்வரர் சம்மதத்துடனே,  இராவணேஸ்வரர்  ரகசியங்கள்.
====================================

குருநாதர் :- இதனால், நிச்சயம் தன்னில் கூட ஏன் இங்கு, எதற்காக, நிச்சயம் எவரும், எதை என்று பொறுத்தே , நிச்சயம் தன்னில் கூட ஏன், பின் அதாவது இராவணன் ரகசியத்தை நிச்சயம் தன்னில் கூட அவனுடைய பின் சம்மதத்துடனே சொன்னால்தான், நிச்சயம் தன்னில் கூட. 

அதனால்தான் நிச்சயம் இங்கு அறிந்தும், புரிந்தும், நிச்சயம் இராவணனின் யான் பல நிச்சயம் அதிசயங்களை சொல்லப் போகின்றேன். நல்விதமாக, அப்பனே, இதனால் சம்மதத்துடனே நல்விதமாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட குழந்தையை நினைத்து அழகாக ஒரு பாடலைப் பாடு. முதலில் அனைவரும் கேட்கட்டும், பின்பு உரைக்கின்றேன்.

பாடகர் :- ( பின் வரும் பாடலை பாடினார்கள் )
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? 
கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை? 
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? 
தேவாதி தேவன் எல்லாம் தேடி வரும் மருதமலை. ஆஹா, மருதமலை, மருதமலை. முருகா, மருதமலை மாமணியே முருகையா, மருதமலை மாமணியே முருகையா.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு.
# இராவணேஸ்வரர்  ரகசியங்கள் குறித்த வாக்கு ஆரம்பம்.
====================================

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் பல உண்மைகள் எதை என்று கூற. அப்பனே, இப்பொழுது எடுத்திருக்கப் போகின்றேன், அப்பனே. இன்னும், அப்பனே, உண்மைகள். அப்பனே, எதை என்று... அப்பனே, அதாவது, கல்லைப் பற்றி பேசினேன். 

அப்பனே. ஆனாலும் எதற்கு பயன்படுவது, எதற்காக என்றெல்லாம் அப்பனே சொல்லவில்லை. 

=====================================
# சுரா கல் பல இடங்களில் உள்ளது - மனிதர்களுக்கு தெரியாமல் ….
=====================================

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே, சொல்லும் காலம் அப்பனே, வந்தடைந்து கொண்டே, வந்தடைந்து கொண்டே. 

அப்பனே, இதன் மூலம் எதை என்று அறிய, அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அக்கல்லானது, அப்பனே, பல விதத்திலும் அப்பனே பின் நிச்சயம் தங்கி நிற்கின்றதப்பா. 

==========================================
# எங்கெல்லாம் உலகில் சுராக்கள் உள்ளதோ அங்கெல்லாம்  சென்று வணங்கினால் நிச்சயம் பலங்கள் ஏற்படுவது உறுதி. பக்திக்குள் நன்முறையாகவே பல வெற்றிகளை நிச்சயம் பெறலாம்.
==========================================

குருநாதர் :- அங்கெல்லாம் சென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பலங்கள் ஏற்படுவது உறுதியப்பா. இவ்வாறு பலங்கள் ஏற்பட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் பக்திக்குள், அப்பனே, நிச்சயம், அப்பனே பின் எதை, எதை என்று புரிய, அப்பனே, பக்திக்குள் நன்முறையாகவே, அப்பனே, வந்து, அப்பனே, பல வெற்றிகளை, அப்பனே, நிச்சயம் பெறலாம் என்பதை எல்லாம் அப்பனே. 

========================================
# இராவணேஸ்வரரின் தொலைநோக்கு பார்வை 
========================================

குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் அப்பனே, இவ்வதேசம், அப்பனே, நிச்சயம் வருங்காலத்தில், அதாவது, நிச்சயம் தன்னில் கூட பின் அழியும் என்பவை எல்லாம் அப்பனே பின் இராவணனுக்கு தெரிந்தது. 

இதனால், அப்பனே, நிச்சயம் அக்கல்லை எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது, இவ்வதேசத்தை பல வழியில் கூட, அப்பனே, காப்பாற்றினான் இராவணன். 

ஆனாலும், அப்பனே, இவை தன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் அழியும் என்பதையும் தெரியும். ஆனாலும் உண்மையான மனிதர்களுக்கு அக்கல்லைப் பற்றி தெளிந்து ஞானம் அடைந்து நிச்சயம் தன்னில் கூட இவ்வதேசத்தை எல்லாம் காக்கலாம் என்று. 

=======================================
# சுரா கல் ரகசியம் அறிந்து பல சமய குறவர்கள் இலங்கை வந்தடைந்தார்கள்.
=======================================

குருநாதர் :- இதனால், அப்பனே பின்... இதனால், அப்பனே, அனைவரும் பல ஞானிகள், அப்பனே, பல சமய குறவர்கள், அப்பனே, நிச்சயம், நிச்சயம் எதை என்று கூற, இதை தெரிந்து கொண்டு, அப்பனே, இவ்வதேசத்தை வந்தடைந்தார்கள் என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே, பல வழியில் கூட அவர்களும் நிச்சயம் தன்னில் கூட சேவைகள் செய்தனர் என்பேன் அப்பனே. அவர்களும் பல பல வழியில் கூட புதைத்து வைத்துள்ளனர் என்பேன் அப்பனே. நிச்சயம் அக்கல்லை நன்முறைகளாகவே அவை தன் எங்கெங்கு உள்ளது என்பவை எல்லாம் அப்பனே. 

இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, இதனை இப்பொழுது, அப்பனே, எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே. 

==========================================
# இறை ரகசியங்கள் :- யார் ஒருவன் தாய் மீது பெரிய பாசங்கள் கொண்டுள்ளானோ அவன் தன் அனைத்திலும் வெல்வான்.
==========================================

குருநாதர் :-  இராவணனுடைய, அப்பனே, தாயைப் பற்றி, அப்பனே. இராவணனின், அப்பனே, பின் தாய் மீது மிகவும் பற்றுக் கொண்டான் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய, அப்பனே.  பின் தாய் மீது அவ்வளவு பாசங்கள். 

ஏனென்றால் பின் யார் ஒருவன் தாய் மீது பெரிய பாசங்கள் நிச்சயம் பின் கொண்டுள்ளானோ அவன் தன் அனைத்திலும் வெல்வான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

==============================================
# இராவணேஸ்வரர் - தாய் பாச ரகசியங்களை அறிந்து கொண்டார்.
=============================================

=============================================
#  தாயை யார் ஒருவன் மதிக்கின்றானோ அவன் இவ்வுலகத்தில் பேசப்படுவான். 
#  நிச்சயம் அவனுக்கு பல சக்திகள் ஏற்படும். 
=============================================

குருநாதர் :-  இதனால், அப்பனே, இதை நன்கு தெரிந்து கொண்டான். அப்பனே, இராவணன் நிச்சயம் தன்னில் கூட.  தாயை யார் ஒருவன் மதிக்கின்றானோ அவன் இவ்வுலகத்தில் பேசப்படுவான். பின் நிச்சயம் பல சக்திகள் ஏற்படும். 

அத்தகுதி... அத்சக்திகளுக்கு  பிறகுதான் பல திருத்தலங்களை  பின் அடைந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அருளும் கிட்டும் என்பவை எல்லாம் நிச்சயம் தெளிந்து கொண்டான். 

இதனால் நிச்சயம் பல வழிகளில் கூட தாய்க்கு சேவை செய்து செய்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது தாய் என்ன சொல்கின்றதோ அதையே கேட்டான். நிச்சயம் தன்னில் கூட. 

=============================================
# வணக்கத்திற்கு உரிய இராவணேஸ்வரர் அவர்கள், தன் தாயை, பெண்களை  போற்றிப் போற்றி பல பாடல்களை பாடியுள்ளார்கள்.
=============================================

குருநாதர் :-  இதனால் பின் தாயை போற்றிப் போற்றி பாடினான் பல பாடல்களை. 

அதாவது பெண்களை பின் போற்றி பாடல்களை எல்லாம் பாடினான். ஆனாலும் அவை தன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தன்னில் கூட. 

அவ் சுவடிகள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இதன் நிச்சயம் தன்னில் கூட இத்திருத்தலத்திற்கு எதிரே இன்னும் கூட எவை என்று அறிய பின் அதாவது பின் நந்தியங்கள் நிச்சயம் தன்னில் கூட புதைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 

இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அச்சுரா கல்லின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று கூற பின் அதாவது அழகாக எடுத்து வந்து செய்யப்பட்டவை என்பேன். 

=========================================
# மனிதனின் எண்ணங்களை அப்படியே எதிரொலிக்கும் சுராக்கள் ரகசியங்கள்.
========================================= 

குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் அவை தன் நிச்சயம் மனிதன் மாற மாற நிச்சயம் இன்னும் பின் அழிதன்னிலே சென்று கொண்டிருந்தது. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவை தன் எப்படி மனிதன் நினைக்கின்றானோ அப்படியே எதிரொளிக்கக் கூடியவை. 

இதனால்தான் நன்கு உணர்ந்தான் இராவணன். 

நன்விதமாக மனிதன் என்ன நினைக்கின்றானோ அதற்கு தகுந்தார் போலே நிச்சயம் தன்னில் கூட. 

ஆனால் இப்பொழுதெல்லாம் நிச்சயம் மனிதன் தீயவையாகவே நினைத்துச் செல்கின்றான். அக்கல்லும் பின் தீயவையாகவே செய்கின்றது. 

ஆனாலும் அதற்கும் இவ்வதேசத்தில் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் அடியில். ஆனாலும் சிறிது மேலே தூக்கினால் நிச்சயம் தன்னில் கூட, வருவோர்கள் எல்லாம் கஷ்டத்தில் தான் மிதந்து நிச்சயம் தன்னில் கூட,  அதனால்தான் எது என்று புரிய. 

பின் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் பின் சிறிது எவை என்று எறும்பின் அளவு நிச்சயம் மேலே வருகின்றது. 

எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள் தீயவையாக நினைத்தால் தீயவையாகவே நிச்சயம் நடக்கும். நல்லவையாகவே நினைத்தால் நல்லவையாகவே நடக்கும். 

==========================================
# அக்கல்லானது மேலே வந்து விட்டால் சிறப்புக்கள் 
==========================================

குருநாதர் :-   ஆனாலும் அக்கல்லானது ஒரு நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு பகுதிக்குள் தான் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அதன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட மேலே வந்துவிட்டால் சிறப்புகள். 

இதனால்தான் அச்சிறப்புகள் பற்றி இங்கு பேச வந்தேன். 

நிச்சயம் அவை எல்லைக்குள் நிச்சயம் தாண்டப் போகின்றது என்பேன்  அப்பனே. அதனால் முன்பே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் மக்கள், அப்பனே, பல விதத்திலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிந்திக்க மாட்டார்கள், அப்பா. நிச்சயம் தன்னில் கூட. 

உண்மை நிலையை, அப்பனே, புரிந்து கொள்ள மாட்டான், அப்பா. 

===========================================
# குருநாதர் ஆதியிலிருந்து உண்மைகளை உரைக்கப் போகின்றார்.
===========================================

குருநாதர் :-   இதனால்தான், அப்பனே, முதலிலிருந்து வருகின்றோம், அப்பனே. பல அதிசயங்களை மனிதனுக்கு உரைக்கப் போகின்றேன் என்போம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. 

====================================
# சித்தர்கள் உரைக்கும் வாக்குகளை பொய்யாக்கினால் அவன் பொய்யாக மாறிவிடுவான். 
====================================

குருநாதர் :-   அப்பனே, பின் அவை தன் நிச்சயம் பின் பொய்யாக்கினால் அவன் பொய்யாக மாறிவிடுவான். 

====================================
# சித்தர்கள் உரைக்கும் வாக்குகளை உண்மையாக்கினால், அவன் தன் உண்மையாக உண்மையான ஞானி ஆவான். 
====================================


குருநாதர் :-   உண்மையாக்கினால் அவன் தன் உண்மையாக உண்மையான ஞானி ஆவான் என்பேன்  அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் நிச்சயம், அப்பனே, பின் உடம்பில் சக்திகள் வேண்டும் என்பேன்  அப்பனே. 

அவ்வாறு சக்திகள் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்ளவும் முடியாது, அறிந்து கொள்ளவும் முடியாது, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கொண்டும், அப்பனே, ஞானங்களும் பெற முடியாது அப்பா. 

இதனால், அப்பனே, கலியுகம், அப்பனே, அழியுகம் என்பவை எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே. 

============================================
# கலியுகத்தில் அழிவை தடுக்க, சித்தர்கள் உரைக்கும் உண்மைகள் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்
============================================

குருநாதர் :-  இதனால், அப்பனே, அழிவை தடுக்கவே, அப்பனே, உண்மைகள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும், அப்பனே.  

பல ஞானிகளின் உண்மைகளை தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம். 

அப்பனே, ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அப்படியே விட்டுவிட்டு நிச்சயம் சென்று விட்டால் என்ன என்றெல்லாம் நீங்களும் கேட்பீர்கள் என்பேன்  அப்பனே. 

===========================================
# ஞானிகள் பற்றி தெரிந்து கொண்டால் , அவ் ஞானிகள் ஆற்றல் உங்களுக்கும் சேரும். தேசப்பற்று வரும். மக்களை காப்பாற்றும் சக்தி  உங்களுக்கும் பிறக்கும்.
===========================================

குருநாதர் :-   அவ் ஞானிகள், அப்பனே, தேசத்திற்காக பாடுபட்டார்கள் என்பேன்  அப்பனே. அவர்கள் பற்றி எல்லாம் சொல்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ்வாற்றல், அப்பனே, உங்களுக்கும் சேரும் என்பேன்  அப்பனே. தேசப்பற்று வரும் என்பேன்  அப்பனே. 

மக்களை காப்பாற்றும் நிச்சயம் தன்னில் கூட சக்தி உங்களுக்கும் பிறக்கும் என்பேன்  அப்பனே. 

============================================
# சித்தர்களின் அறிவு நிலை - அதி மிக உயர் நிலை ஆகும். 
# மனிதர்களால் உணரவே  இயலாது.
============================================

குருநாதர் :- அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள், யாங்கள் முட்டாள்கள் இல்லை என்பேன்  அப்பனே. 

மனிதன் முட்டாளாகவே திரிகின்றான் என்பேன்  அப்பனே. 

இதனால், அப்பனே, தீயவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் தெரிந்து கொண்டு, அப்பனே, அதற்கு ஏற்றார் போலே நடந்து தேசத்தை அழித்திடுவான் என்பேன்  அப்பனே. 

ஆனால் உண்மை நிலையிலே பல ஞானியர்களை நிச்சயம், அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம் அவர்கள் சக்தியை இன்னும், அப்பனே, ஆங்காங்கு இறந்து நிச்சயம் தன்னில் கூட.  

=======================================
# பல ஞானிகளின் விஷ்ணு சக்கர சக்தியை - நாம் எப்படி அடைவது?
=======================================

குருநாதர் :- அவ் சக்திகள் நிச்சயம், அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே. அதாவது விஷ்ணுவானவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சக்கரத்தை ஏந்தி எதை என்று இருக்கின்றானே, அச்சக்கரத்தின் நிச்சயம் தன்னில் கூட, சக்திகள் இன்னும் கூட பின், அதாவது பின் உயிர் பிரிந்தாலும், உடம்பு போனாலும், நிச்சயம் தன்னில் கூட அச்சக்கரம் இன்னும் இன்னும் திரிந்து கொண்டே தான் இருக்கின்றது. அங்கே புதைந்த இடத்தில் கூட. 

இதனால் அவ்  சக்திகள் (உங்களுக்கு) வரவேண்டும் அல்லவா? 

============================================
# பரம ரகசியம் - அடியவர்கள் அவசியம் இதனை நன்கு பயன்படுத்தி கொள்க.
============================================
# பல இடங்களில் உங்களால் இயன்ற அளவு , முடிந்தவரையில் ஞானிகளை பற்றி பேசுங்கள். நேரில் எடுத்துரையுங்கள்.
============================================
# அவ் ஞானிகளின் அளவிட இயலாத  சக்திகள் உங்களுக்கு வந்து சேரும்.
============================================
# உங்களுக்கு மாற்றங்கள் உண்டாவது உறுதி. 
============================================

குருநாதர் :- அதனால்தான் அவ் ஞானிகளை நிச்சயம், அவ் ஞானிகளை பின் சக்திகளை, அதாவது நிச்சயம் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட அச்சக்கரத்திற்கும் உயிர் நிச்சயம் தன்னில் கூட அவை தன் எவ் ஞானியில் பின் உடம்பில் வாழ்ந்ததோ, நிச்சயம் தன்னில் கூட பின் அவ் ஞானி எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் யார் பின் பேசுகின்றார்களோ, நிச்சயம் அச்சக்கரத்தின் பின் சக்தி நிச்சயம் மனிதனுக்கு விழுகின்ற பொழுது பல மாற்றங்கள் ஏற்படுவது உறுதி, அப்பா. 

========================================
# வணக்கத்திற்கு உரிய இராவணேஸ்வரர் அன்னை அவர்கள் ,  சாதாரணமானவர்கள் இல்லை. 
========================================
# அவ் வணக்கத்திற்கு உரிய அன்னையின் சிவபக்தி ,  நிச்சயம் இராவணேஸ்வரர்  சிவ பக்தியை விட மிக அதிக சிவபக்தி ஆகும். 
========================================

குருநாதர் :-இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் எதற்கு இங்கு சொல்ல வந்தேன் என்றால், இராவணனும் தாயும் கூட சாதாரணமானவர்கள் இல்லை, 

நிச்சயம் சிவபக்தியில் நிச்சயம் இராவணனை விட பின் நிச்சயம் தன்னில் கூட அதிக சிவபக்தி. 

அதனால்தான் இராவணனுடைய பின், அதாவது பின் அன்னையைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்றால், யாருக்கும் தெரியாது. அப்படியே அழிந்துவிட்டது. நிச்சயம் தன்னில் கூட. 

உலகத்தில் பெரும் சிவபக்தியாக, நிச்சயம் தன்னில் கூட இருந்தால், அவள் நிச்சயம் தன்னில் கூட. 

பின் தன் மகன் நிச்சயம் உலகத்தை ஆள வேண்டும் என்று ஈசனையே நினைத்து, நினைத்து, நினைத்து, நினைத்து, நிச்சயம் பெற்றாள்  பிள்ளையைக் கூட அதைப்பற்றித்தான் இங்கு சொல்ல வந்திருக்கின்றேன். 

நிச்சயம் பின் அவளைப் பற்றி தெரிந்து கொண்டால் இன்னும் கூட, எவை என்று அறிய பின் சிறப்புகள் நிச்சயம் தன்னில் கூட இயங்கிக் கொண்டிருக்கின்றாள், நிச்சயம் தன் மகன் எவ்வாறெல்லாம் பின் வாழ்ந்தான் எது என்று புரிய, எது என்று அறிய என்றெல்லாம் நிச்சயம் பின் அத்தாயைப் பற்றி நான் இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன். 

அதனுள்ளே நிச்சயம் தன்னில் கூட பின் நன்மைக்காக நிச்சயம் ஒருமுறை பின், அதாவது சிவபுராணத்தை, அதாவது ஓதி வாருங்கள் சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (பாருங்க, நாம ஏன் ஞானிகளைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு புரியுதுங்களா? அவங்க இறைவனையே நினைச்சு தன் உடம்பை ஒரு பெரிய சக்தி நிலையமா மாத்தி வச்சிருக்காங்க. 

அவங்க உயிர் போனாலும், உடம்பு மறைஞ்சாலும், அந்த 'மூலாதாரச் சக்கரம்' அழியாம அப்படியே இருக்கும். 

நாம அவங்களை பத்தி பேசும்போதோ இல்ல நினைக்கும்போதோ, அந்தச் சக்கரத்துல இருக்கிற அபாரமான ஆற்றல் நமக்குள்ளேயும் இறங்கும். 

அந்தச் சக்தி நமக்குக் கிடைக்கும்போது, அவங்க எப்படி உண்மையான பக்தியோட இறைவனை அடைஞ்சாங்களோ, அதே மாதிரி நமக்கும் நல்ல தெளிவும், ஞானமும் பிறக்கும். அப்படி ஒரு தெளிவு கிடைச்சா, அந்த மகான்கள் எப்படித் தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தாங்களோ, அதே மாதிரி நாமளும் நாலு பேருக்கு நல்லது செய்யணும்ன்ற எண்ணம் வரும். 

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், ராவணனை விட அவங்க அம்மா பெரிய சக்தி வாய்ந்தவங்கன்றது யாருக்குமே தெரியல. அதனாலதான் அவங்களை பத்தி இங்க சொல்லப்போறோம். சிவபுராணம் படிங்க இப்போ…)


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Friday, 13 February 2026

சித்தன் அருள் - 2114 - அன்புடன் அகத்தியர் - நந்தியம்பெருமான் வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் பிப்ரவரி 1 தைப்பூசம் பௌர்ணமி தினத்தன்று நந்தியம்பெருமான் உரைத்த வாக்கு 

நாள் : 01/02/2026 (ஞாயிற்றுக்கிழமை) , தைப்பூசம் பௌர்ணமி 
இடம் : கபிலித்தை கபில வனம். மொனராகலை மாவட்டம். ஸ்ரீலங்கா. 

இலங்கையில் உலக நன்மைக்காக அகத்திய பெருமான் மற்றும் சித்தர் பெருமக்கள் தலைமையில் 5 ஆவது கூட்டுப்பிரார்த்தனை.

முருகன் நித்ய தவம் - இயற்றி கொண்டிருக்கும் சக்திவாய்ந்த கபில வனத்தில் கும்பகர்ண ஆற்றங்கரையில் இரவு கூட்டுப்பிரார்த்தனையும் யாகமும் நடந்தது. 

தைப்பூசம் பௌர்ணமி அன்று 01/02/2025 நடந்த இந்த கூட்டுப் பிரார்த்தனையில் நந்தியம்பெருமான் ஜீவநாடியில் வந்து வாக்குகள் உரைத்தார்.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு 
====================================


அகிலத்தை அழகாக ஆளக்கூடிய அன்னையே, தந்தையே, பணிகின்றேன். 

குழந்தை, வேலவனே, வேலவனே, அன்பாக அழைத்து, அனைத்து உள்ளங்களிலும் அன்பு நிறைய வா, குகனே. 

குழந்தாய், அறிந்தாய், அனைத்தும் தெளிந்தாய்.

தெளிந்து அனைவர்களுக்கு அறிவுகளை பலப்படுத்தி, பின் மேம்படுத்தி நல் அருள்களை ஈந்து இந்நாளில் பொன்னாளாக அனைவருக்கும் பின் சிறந்த, சிறந்த தத்துவ ஞானங்களை பெற்றுத் தருமாறே அழைக்கின்றேனே முருகா, பின் நந்தியனை. 

====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் பாடல் வாக்கு 
====================================

அகிலம் காக்கும் என்றென்றும் தான் உம்மையே நம்பி, நம்பியே!! 

ஆனந்தித்து வருவோர்க்கெல்லாம் அருள் தருவாயே குழந்தாய். 

என்றென்றும் பின் உலகத்தில் நீதியை நிலைநாட்ட ஓடோடி வா. 

குமரனே நின் தாள்  பணிந்து, அனைவரும் பணிந்து பணிந்து, 

என்றென்றும் உமக்கே உயிரை தஞ்சம் என்றும் வருவோர்க்கெல்லாம் அருள் ஈந்து தானே கொடுப்பாய். 

கூப்பிட்ட குரலுக்கு வருவாய் , அருள் தருவாய் 

நலன்களே ஈவாய் குகனே. 

என்றென்றும் தான், எப்பொழுதும் தான், மனிதனுக்கே பெரும் துன்பங்கள் குகனே. 

அனைத்தும் நீக்குவாய், 

அனைத்தையும் காப்பாய், 

அனைத்து ஜீவராசிகளும் இருப்பாய். 

புத்தி இல்லாத மனிதனின் நிலைமை அழிவுக்கு செல்கின்றது முருகா, 

அதனையும் நீயே மாற்றித் தருவாய் 

அனைவருமே உன்னைத் தேடி. 

எப்பொழுதும் உனை எங்கெங்கே என இத்திருநாளில் தேடி தேடி 

வருவோர்க்கெல்லாம் ஆசிகள் தருவாய் குகனே. 

என்றென்றும் தான் எல்லோருக்கும் அருள்வாயே குகனே, 

அன்புக் குழந்தையே, செல்லக் குழந்தையே, பாசக் குழந்தையே 

அனைவரும் நெஞ்சில் நிறைந்தோனே. 

அன்பின் பாதையை காட்டுபவனே 

அன்பென்று அனைத்து மனிதர்களுக்கும் மனதில் நின்று 

தன்னைத் தான் என்றும், தன்னைத் தான் என்றும் 

அனைத்து ஜீவராசிகளும் தம்மை தான் என்றே நினைக்க 

அருளிட வேண்டும் குகனே முருகா 

குழந்தை செல்லக் குழந்தை. 

ஓடோடி வருகின்றார் உன்னையே காண பாசத்துடனே 

கரும வினைகளை நீக்குவாயே 

ஆனந்தத்தில் இத் தை பூசன்று அனைவருமே உன்னை ஜெபிக்க, ஜெபிக்க 

ஆயிரம் ஆயிரம் முறையே முருகா முருகா என்றழைத்து 

அவர்களுக்கும் என்னென்ன தேவை என்று உணர்ந்தோனே 

ஆனால் நீயும் துன்பத்தை அளித்து பக்குவங்களைப் பெற்ற பின் அனைத்தும் அளிப்பவனே. 

அன்பிற்கு அன்பென்றும் 

பாசத்திற்கு பாசம் என்றும் 

கருணையால் விளங்குபவனே. 

என்றென்றும் உமை எங்கே என் குழந்தை, 

என் குழந்தை எப்போ தேடுவேனே. 

அன்பின் பண்பின்று நின்று நின்று தானே இங்கே தான் பின் விளையாடினாயே 

கண்ணாம்பூச்சி போல் சித்தர்களைப் பின்னே அழைத்து அழைத்து ஒளிந்து ஒளிந்து விளையாடினாயே 

அதுபோலே பின் மனிதர்கள் செய்யும் தவற்றினை பொறுத்து அருள்வாயே 

எங்கும் நிறைந்தவனே 

எதிலும் நிறைந்தவனே 

காக்கும் காவலனே. 

அன்பொன்று இருந்தால் போதும் என்றென்று 

அன்னையும் தந்தைக்கும் போதும் என்று 

எப்பொழுதும் உங்களைப் பின் யானே  எங்கென்று நினைத்தாலும் நீங்கள் என்றென்றும் ஓடி வருவீர்கள் என்று 

தாயிடம் தந்தையிடம் சொன்னவனே என்று ஞாபகமே இருக்கின்றதா. 

அதுபோலே மனிதனின் எண்ணங்கள் சுத்தமில்லாமல் போனாலும் 

முருகா என்று பாசத்துடனே அழைத்தாலே வருக முருகா. 


எப்பொழுதும் மனிதனுக்கு வருங்காலத்தில் எல்லாம் துன்பங்களோடு பிணைந்திருக்கின்றானே 

எப்படி வாழ வேண்டும் 

எப்படி பிழைக்க வேண்டும் என்று தெரியாமலே வாழ்கின்றானே 

இதனையும் நீக்க ஓடோடி வா குகனே 

குழந்தாய் செல்லக் குழந்தாய் 

அன்பு நிறைந்த சித்தர்கள் யாவரும் உன்னையே 

கலியுகத்தில் அழைக்கின்றோமே. 

மனிதனின் உண்மைகள் எங்கெங்கு மறைக்கப்பட்டவை 

அவர்கள் இன்னும் ஓங்கிப் புகழ் பெற வேண்டும் 

பொய்யவன் எல்லாம் நீதான் பின் பின் கட்டுப்படுத்தி அழிக்க வேண்டும் 

மனிதனின் நிலைமையை புரிந்து புரிந்து 

மனிதனையே பின் ஏமாற்றுகிறான் 

அதனையும் நீக்கி பின் நல்லோர்களையும் உயர்த்தி வைப்பாய்  குகனே 

குழந்தாய் குகனே செல்லக் குழந்தாய் 

கண்ணாம்பூச்சியை எங்களுடனே விளையாடினாயே இங்கே 

அதுபோலே இங்கு அனைவரும் தானே 

பாவத்தை சுமந்து தெரியாமல் வருகின்றார் 

அப்பாவ மூட்டையும் அவிழ்த்து தானே பின் நீரினுள்ளே  பின்இடுவாய் 

எங்கெங்கும் நிறைந்தவனே 

எதிலும் நிறைந்தவனே. 

அன்பென்ற சொல்லுக்கு அன்பென்ற சொல்லுக்கு 

முருகனே துணையே என்றென்று தானே 

கருணை மிகுந்த மனிதனைக்கெல்லாம் இன்னும் தானே 

அருள் கூர்ந்து அருள் கூர்ந்து  ஈவாய் குகனே 

எப்பொழுதும் அழிவுகள் இத்தேசத்தில் காத்து நிற்கின்றது 

முருகா நீயே அறிவாய் 

அதனையும் தானே ஓடோடி வந்து நீக்குவாய் குகனே அருள்வாய் 

என்றென்றும் நீக்கும் அதிலும் என்றென்றும் போக்கும் 

பாவத்தை ஏத்தி நினைத்து நினைத்து வருந்துகின்றானே குகனே 

மனிதனே பாவத்தை எண்ணி எண்ணி தான் வருந்துகின்றானே குகனே 

அவனுக்கு ஒன்றும் தெரியாது குகனே 

பாசப் பிணைப்போடு அனைவரும் பற்றிக்கொள் 

இன்றைய தினத்தில் இன்றைய தினத்தில் பின் அருள் கூர்ந்து உன்னையே நினைத்து 

எங்கெங்கும் மனிதன் ஓடி வருகின்றான் 

அவனையும் காத்து 

அவனோடு இருக்கும் கருமத்தை எல்லாம் தொலைத்து 

எங்கெங்கும் நிறைந்தவனே 

அற்புதத்தை நிறைந்தவனே 

அற்புதத்தை காட்டும் குகனே 

இவ்வுலகத்தில் மனிதனின் ஏற்றங்கள் என்னவென்றால் என்றும் மதத்தில் சண்டைகளே 

அவற்றுடனே பின்னி பிணைந்து வாழ்ந்து பின் பின் கண்டு உணராமல் இறந்திடுவானே 

அதனுள்ளே தான் நீயும் தான் புத்தியை தான் மனிதனுக்கு கொடுப்பாயே 

அதனில்  இருந்து மீட்டு எடுத்து அனைவருக்கும் பின் உதவுவாயே 

அனைத்து உயிர்களும் உனக்கே சொந்தமே 

அனைத்து உயிர்களும் உனக்கே சொந்தம் என்று 

மனிதன் நினைப்புக்கு வா 

மனிதன் நினைப்புக்கு அதுவும் ஊட்டி அனைத்தும் அருள்வாய் குகனே 

அழியும் நிலைக்கு உலகம் செல்கின்றது 

அதையும் காக்க ஓடி ஓடி வா அன்புக் குழந்தையே 

செல்லக் குழந்தையே 

பாசக் குழந்தையே முருகா 

உன்னை வளர்த்தேனே அன்புடனே 

எதை பின் எதை எதை கேட்டாலும் சித்தர்கள் யாங்கள் பின்வாங்கி தந்தோமே 

இப்பொழுது கலியுக வரதனாய் ஆகிவிட்டாயே 

அனைத்தும் மனிதனுக்கு தெளிவுபடுத்தி 

கர்மாத்தை அளிக்க வா வா 

குமரனே முத்துக்குமரனே அனைத்தும் முத்து 

அனைத்தும் சித்து 

அனைத்தும் எதனையும் உன்னுள்ளே அடக்குமே 

அதனையும் பயன்படுத்தி இவ் உலகத்தைக் காக்க ஓடோடி வா குகனே 

அடுத்து என்னவென்று 

அடுத்து என்னவென்று மனிதனுக்கே பின் வாழ்க்கை தெரியவில்லை 

பின் புண்ணியத்தை சிறிது தானமாக மனிதனுக்கு கொடுத்து 

அடித்த என்ன நிலைமை என்று உணர்ந்து கொள்ள 

புண்ணியத்தை தருவாய் செல்லக் குழந்தையே 

ஈசனின் குழந்தையே பின் என்றிருந்தாலும் தான் 

யாங்கள் தானே உன்னை வளர்த்தோமே 

ஈசனின் குழந்தையே என்றிருந்தாலும் 

யானே தான் உன்னை வளர்த்தேனே 

யாங்கள் எல்லாம் தானே உன்னையும் வளர்த்தேனே 

நிச்சயம் தன்னில் கண்ணாம்பூச்சியில் ஆடுகின்ற 

கண்ணாம்பூச்சி ஆடுகின்ற பொழுது 

யாங்கள் அனைவரும் தானே நிச்சயம் தன்னில் கூட 

ஒளிந்து நின்று தான் நீயே தான் பின் சந்தோஷமடைய யாங்கள் மறைந்து மறைந்து நின்றோமே 

அதுபோலே தானே 

அதுபோலே தானே 

மறைந்து மறைந்து அனைத்து பாவங்களை மனிதன் செய்த போதிலும் 

மறந்து மறந்து அருள் தருவாயே 

அருள் தருவாயே குகனே ஈஸ்வரன் பரமேஸ்வரியை அறிந்து 

தாயும் உடனுடன் தாயும் உடனுடன் பாசங்கள் நிறைந்தாலும் எங்களை ஏன் நாடி நாடி பின் வந்து வந்து தானே விளையாடினாயே  குமரோனே 

அன்பும் நிறைந்தது 

பாசம் நிறைந்தது கருணை நிறைந்தது குழந்தாய் 

வா வா குழந்தாய் 

வெற்றியைத் தருவாய் குழந்தாய் 

மனிதனின் பொறாமை 

மனிதனின் பொறாமை குணத்தை போக்கு முதலில் 

மனிதனின் காம, மனிதனின் காம எண்ணங்கள் போக்கு 

தானே என்றும் எண்ணும் அகந்தை ஒளித்து அருளிடுவாய் குகனே 

ஒருவர் ஒருவர் சண்டைகள் ஈட்டு பக்திக்குள்ளே இன்னும் பிளவுகள் ஏற்படுத்துபவனே மனிதனே 

அதையும் அறிந்து அமைதியாக இருக்கின்றாய் 

அதையும் ஒழித்திடவா முருகா 

அன்பென்ற சொல்லுக்கு முருகா 

அறிவென்ற சொல்லுக்கு முருகா 

அழகென்ற சொல்லுக்கு முருகா 

கருணை என்ற சொல்லுக்கு முருகா 

பாசம் என்ற சொல்லுக்கு முருகா 

தமிழ் என்ற சொல்லுக்கு முருகா 

ஈசன் என்ற சொல்லுக்கு முருகா 

பின் பரமேஸ்வரி என்ற சொல்லுக்கு முருகா 

சித்தர் என்ற சொல்லுக்கு முருகா 

கணபதி என்ற சொல்லுக்கு முருகா 

மணிகண்டன் என்ற சொல்லுக்கு முருகா 

அனைத்தும் நீயே அனைத்தும் நீயே 

அனைத்திலும் இருப்பவன் நீயே 

மனிதனைக் குறைகளை களைவாயே 

மனிதனைக் குறைகளை களைவாயே 

எத்தனை எத்தனை மனிதனுக்கு குறைகள் இருந்தாலும் 

அதனையும் போல் விளையாட்டாக நினைத்து 

அனைத்திலும் தன்னை வெளிப்படுத்தி 

அதையும் நீக்கி ஓடோடி வருவாய் வருவாய் 

அருள்வாய் குகனே 

இன்றைய நாளிலே 

இன்றைய நாளிலே நல் நாளில் அன்று முருகன் தன் ஆசிகள் 

முருகன் தன் ஆசிகள் கொடுக்க என்று ஓடோடி வருகின்றானே மனிதன் 

அவனுடைய பாவத்தைத் தொலைத்து 

குறைகளை அகற்றி அனைத்தும் அருள்வாயே குகனே 

எப்பொழுதும் மனிதன் உனை உணரும் அளவிற்கு புத்திகளே கொடுப்பாய் குகனே 

எப்பொழுதுமே உன்னை நினைக்க வேண்டி அன்பினின் நிச்சயம் அனைத்தும் இதயத்திலும் கொடுப்பாய் குகனே 

என்றென்றும் நிலைத்து நிற்பவனே நீயே 

மனிதனைக் குறைகளை நீக்குவாயே 

இன்றைய தினத்தில் எங்கெங்கோ இருக்கும் மனிதர்கள் தன்னை உன்னை பார்க்கவே பின் ஓடோடி வருவாரே 

உன்னை பார்க்கவே நிச்சயம் ஓடோடி பின் வருவார்களே 

எத்தனை எத்தனை துன்பங்கள் வைத்துக் கொண்டு உன்னையே தான் நாடிடுவார்களே 

அத்தனை குறைகளும் நீக்கிடு குகனே அருள் கூர்ந்து 

பின் அனைத்து குறைகளும் நீக்கிடுபவனே 

உன்னைத்தானே எப்பொழுதும் 

அன்னையும் தந்தையும் நினைக்கின்றேனே குகனே 

உன்னைத்தானே எப்பொழுதும் அன்னை தந்தை என்றுதான் நினைக்கின்றேனே குகனே 

அனைவரும் பாவத்தையும் ஒளிப்பாய் குகனே 

அருள் தந்து பின் அனைத்தையும் கொடுப்பாய் குகனே 

எப்பொழுதும் மனிதன் 

எப்பொழுதும் மனிதன் நிச்சயம் தன்னை தெரியாமல் தவறு செய்து விடுகின்றானே 

புத்தி இல்லாமல் செய்து விடுகின்றானே 

புத்தியை கொடுத்து, தடுத்து நிறுத்துவாய் குகனே 

அனைத்தும் உன்னிடத்தில் இருக்க 

அதைத்தானே மனிதனுக்கு சிறிது புண்ணியத்தை கொடுக்க ஓடோடி வா குகனே 

எங்கும் நிறைந்தவனே 

அற்புதத்தை நிகழ்த்துபவனே 

உன்னால் முடிந்தது என்னவென்று அனைத்தும் முடியும் குகனே 

வேலோடு பின் சூலாயுதத்தோடு ஓடோடி வா 

சில மனிதர்களின் 

சில மனிதர்களின் நீ பின் எதனை என்றும் தெரியாமல் வாழ்கின்றார் 

அப்பக்குவத்தை அவனுக்கும் கொடுத்து கொடுத்து 

தீயவை நீக்கி நீக்கி நல்லதை அளித்திடு குகனே 

வருவாய் மனிதர்களுக்கு அனைவருக்கும் அருள் தருவாய் 

எங்கெங்கும் இருக்கும் 

எங்கெங்கும் இருக்கும் திருத்தலங்களுக்கு உன்னையே நினைத்து நினைத்து 

இன்று நாளிலே வருகின்றார் 

பாரோ பாரோ 

பாரோ பாரோ 

அத்தனை மனிதர்களையும் உள்ளத்தில் உள்ள முதலில் தீங்குதனை கெட்ட விதயங்களை நீக்கி தானே 

நல்லருளே அருள்வாய் குகனே 

குழந்தாய் பாசக் குழந்தாய் 

இத்தேசத்தின் தான் பின் கடமைகள் உணர்ந்து மனிதன் எவனும் செய்யவில்லை 

அக்கடமை தனைத்தான் உள்ளே புகுத்து அனைத்தும் அருள்வாய் குகனே 

பணத்தின் இல்லாமல் பணத்தில் இல்லாமல் இத்தேசம் தானே அழிவு நிலைக்கு 

பணத்தின் மதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு அனைத்தும் கொடுப்பாய் 

இவ்வுலகத்தை உச்சத்தைத் தொட வைப்பாய் 

இத்தேசத்திலே தான் வருங்காலத்தில் மனிதன் பணத்திற்காக அலைவானே 

அப்பணத்தின் எதனை என்று எங்கெங்கே ஒளித்திருக்கின்றாய் உன் மூலப் பொருள்களை கொடுத்து இத்தேசத்தை வளமாக்குவாய் 

இன்னும் தானே 

====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு 
====================================

அறிந்தும் அறிந்தும் அழகாய் குழந்தாய் அறிந்தாய் அனைத்தும் இவ் தேசத்தை காக்க ஓடோடி வா குகனே 

அருள்வாய் நலமாய் ஆசிகள் அனைவருக்குமே.

===============================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு நிறைவு 
===============================================

கபில வனத்தில் தைப்பூச நன்னாளன்று நந்தியம்பெருமான் வழங்கிய தெய்வீக வாக்கு சுருக்கம்
1. சுருக்கம் (Summary)
தைப்பூசத் திருநாளன்று (பிப்ரவரி 1) இலங்கையின் கபில வனத்தில் நடைபெற்ற 5-வது கூட்டுப்பிரார்த்தனையில், நந்தியம்பெருமான், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்தி உலக மாந்தர்களுக்காக ஆலோசனைகளை வழங்கினார். மனிதகுலம் அறியாமை, கர்ம வினை மற்றும் அகந்தையினால் அழிவை நோக்கிச் செல்வதைச் சுட்டிக்காட்டிய நந்திதேவர், முருகப்பெருமானை 'கலியுக வரதனாக' வந்து மக்களைக் காக்குமாறு வேண்டுகிறார். குறிப்பாக, இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரச் சரிவு மற்றும் உலகளாவிய பேரழிவுகள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மக்களின் பாவ மூட்டைகளை அவிழ்த்து, அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியதன் அவசியத்தை இந்த வாக்கு வலியுறுத்துகின்றது.
2. நிகழ்வின் பின்னணி மற்றும் சூழல்
இந்தத் தெய்வீக வாக்குகள் கீழ்க்கண்ட சூழலில் பதிவு செய்யப்பட்டுள்ளன:
தேதி: 01/02/2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தைப்பூச நிகழ்வு
இடம்: கும்பகர்ண ஆற்றங்கரை, கபில வனம், மொனராகலை மாவட்டம், ஸ்ரீலங்கா.
தலைமை: அகத்திய மாமுனிவர் மற்றும் சித்தர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்ற 5-வது கூட்டுப்பிரார்த்தனை.
முருகப்பெருமான் நித்ய தவம் இயற்றும் சக்திவாய்ந்த இடமாக கபில வனம் அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு யாகமும் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்ற வேளையில் நந்தியம்பெருமான் ஜீவநாடி வழியாகத் தோன்றினார்.

அ. முருகப்பெருமானின் திருவுருவம் மற்றும் சித்தர்களின் தொடர்பு
நந்தியம்பெருமான் முருகப்பெருமானை 'குகன்', 'வேலவன்', 'குமரன்' மற்றும் 'செல்லக் குழந்தை' என்று அன்புடன் அழைக்கிறார். சித்தர்களுக்கும் முருகனுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது:
சித்தர்கள் முருகப்பெருமானைத் தங்களின் குழந்தையாகப் பாவித்து வளர்த்துள்ளனர்.
சித்தர்களுடன் முருகப்பெருமான் கண்ணாமூச்சி விளையாடி மகிழ்ந்ததாக நந்திதேவர் குறிப்பிடுகிறார்.
தற்போது கலியுகத்தின் தேவை கருதி, முருகனை 'கலியுக வரதனாக' எழுந்து வருமாறு சித்தர்கள் அழைக்கின்றனர்.
ஆ. மனிதகுலத்தின் தற்போதைய நிலை மற்றும் குறைபாடுகள்
மனிதர்களின் தற்போதைய மனநிலை மற்றும் செயல்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன:
அறியாமை: மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி பிழைக்க வேண்டும் என்று தெரியாமல் வாழ்கிறான்.
தீய குணங்கள்: பொறாமை, காம எண்ணங்கள், மற்றும் அகந்தை ஆகியவை மனிதர்களிடம் மலிந்துள்ளன.
மத மோதல்கள்: மதத்தின் பெயரால் சண்டையிட்டுக்கொண்டு, உண்மையை உணராமல் மனிதர்கள் மடிகின்றனர்.
கர்ம வினை: மனிதர்கள் தாங்கள் செய்யும் தவறுகளால் (பாவ மூட்டைகளை) துன்புறுகின்றனர், ஆனால் அவற்றை உணரும் புத்தி இல்லாமல் இருக்கின்றனர்.
இ. தேச மற்றும் உலகளாவிய எச்சரிக்கைகள்
இந்த வாக்குகள் ஆன்மீகத் தளத்தைத் தாண்டி, சமூக மற்றும் பொருளாதார எச்சரிக்கைகளையும் வழங்குகின்றன:
உலக அழிவு: உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அழிவுகள் தேசத்தைக் காத்து நிற்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி: இலங்கை (இத்தேசம்) பணமதிப்பு மற்றும் பணப்பற்றாக்குறையினால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். வருங்காலத்தில் மனிதன் பணத்திற்காக அலைவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்வு: முருகப்பெருமான் தனது மூலப் பொருட்களைக் கொடுத்து தேசத்தை வளமாக்க வேண்டும் என்றும், பணத்தின் மதிப்பை உச்சத்தைத் தொடச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
முக்கிய வாக்குகள் 
ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட சில ஆழமான வாக்குகள் :
"புத்தி இல்லாத மனிதனின் நிலைமை அழிவுக்கு செல்கின்றது முருகா, அதனையும் நீயே மாற்றித் தருவாய்."
"பாவத்தை சுமந்து தெரியாமல் வருகின்றார், அப்பாவ மூட்டையும் அவிழ்த்து தானே பின் நீரினுள்ளே பின்இடுவாய்."
"இத்தேசம் தானே அழிவு நிலைக்கு, பணத்தின் மதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு அனைத்தும் கொடுப்பாய்."
"அன்பென்ற சொல்லுக்கு முருகா, அறிவென்ற சொல்லுக்கு முருகா... அனைத்தும் நீயே."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 12 February 2026

சித்தன் அருள் - 2113 - அன்புடன் அகத்தியர் - கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 7


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 7 (நிறைவு பகுதி)

நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 7 (நிறைவு பகுதி)

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

=============================================
# அனைத்து புத்தகங்கள் நலமாகத்தான் எழுதி வைத்தார்கள் அன்று.
=============================================

குருநாதர் :- நல்விதமாக எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறெல்லாம் நிச்சயம் இருந்தால் பின் மனிதன் வாழ்ந்து விடுவானே என்று, பின் வரக்கூடிய நேரத்தில் எல்லாம் புத்தகங்கள் பின் எது என்று கூட எழுதி வைத்தார்கள் அன்று நலமாகத்தான். 

=============================================
# கெட்ட எண்ணத்தால் மனிதன்  மாற்றி அமைத்து விட்டான்.
=============================================

குருநாதர் :-  ஆனாலும் பின் மனிதன் நிச்சயம் கெட்ட எண்ணத்தால் மாற்றி அமைத்து விட்டான் அவ்வளவுதான். 

=========================================
# இறைவனை உண்மைகளை மாற்றி எழுதிய மூடர்கள்.
=========================================

குருநாதர் :- ஏனென்றால் இறைவனை பிடித்துக் கொண்டால் நன்றாக வாழ்ந்து விடுவான் மனிதன் என்பதெல்லாம் தெரியும். இதனால் நிச்சயம் சில மூடர்கள் இப்படி செய்துவிட்டனர், நிச்சயம் தன்னில் கூட மறைத்து வைத்தனர் உண்மைகளை கூட. இறைவன் இல்லை என்று கலியுகத்தில் சொல்ல வேண்டும் அல்லவா?

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட ஞானிகளே வந்தார்கள். ஆனால் ஞானிகளே மனிதன் பின் பொய் என்று சொன்னார்கள். இதைவிட என்ன சான்று இருக்கின்றது?

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :- ( "அம்மா, இப்போ இயேசுவை எடுத்துக்கோங்க, அவர் என்ன பண்ணாரு? நபிகள் நாயகம் என்ன பண்ணாரு? அவங்க எல்லாரையும் இந்த உலகம் எவ்வளவு தூற்றுச்சு! ஜீசஸைக் கல்லால் அடிச்சாங்க, சிலுவையைச் சுமக்க வச்சாங்க... இப்படி என்னென்னவோ கொடுமை பண்ணாங்க. ஞானிகளுக்கே இந்த நிலைமைன்னா, அவங்க கஷ்டப்பட்டு எழுதி வச்ச புத்தகங்களை மட்டும் விட்டு வைப்பாங்களா? அந்தப் புத்தகங்களை என்னென்ன பாடு படுத்தியிருப்பாங்க? அதான் இப்போ சொல்ல வராங்க, அவங்களுக்கே அந்த கதின்னா, அவங்க நூல்களுக்கு என்னென்னவோ நடந்திருக்கும்னு தான் சொல்றாங்க!" )
=====================================
# சிவராத்திரி ரகசியங்கள் - பூசையை ஆரம்பிக்கும் முன்னர்  முதலில் இராவணேஸ்வரர் போற்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
=====================================
# ஈசனை நேரடியாக வணங்குவதை விட , அடியார்களை நிச்சயம் வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம். 
=====================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் யான் சொன்னேன். நல்விதமாக சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட பின் ராவணன் நினைத்து நிச்சயம் தன்னில் கூட முதலில். ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நேரடியாக பின் வணங்குவதை விட, தன் அடியார்களை நிச்சயம் வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம். 

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசனுக்கு என்ன பிடிக்குமா?

அடியவர் :- ராவணனை வணங்கினாலே போதும்ங்கிறது.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனுக்கு ,  அவருக்கு என்ன பிடிக்குமா? ஈசன் அவரை வணங்குவது தான் பிடிக்காது. முதல்ல அவர் அடியார்கள். அதுல முதல் யாரு?

அடியவர் :- ராவணன் தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ராவணன் தான் வருவார். 

========================================
# தர்ம தேவன் சனீஸ்வரனை வென்றவர் இராவணேஸ்வரனே.
# சனி தேவனை வெல்ல வேண்டும் என்றால் ராவணேஸ்வரனே உதவி செய்வான். 
========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரனை வென்றவன் ராவணனை. இதனால் அனைவருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள். ஆனால் சனி தேவனை வெல்ல வேண்டும் என்றால் ராவணேஸ்வரனே உதவி செய்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகத்துல சனி தேவனை சனி பகவானை யார் வென்றது?

அடியவர் :- ராவணனே வென்றார்.

சுவடி ஓதும் மைந்தன் :- ராவணன் மட்டும்தான்.

====================================
# அனைத்து கிரகங்களையும் வென்றவர் - இராவணேஸ்வரர் 
====================================

குருநாதர் :- ஏன் நிச்சயம் தன்னில் கூட அனைத்து கிரகங்களும் வென்றவன் ராவணன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் சொல்லப்போனால் எல்லா கிரகங்களையும் வென்றவர் . 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அவையும் பின் நிச்சயம் எப்படி வென்றான் என்று நிச்சயம் யாம் அறிவோம். அதையும் கூட சொல்லலாமா என்று ராவணனிடத்தில் முறையிட்டே யான் சொல்வேன்.

===================================
# சிவராத்திரி அன்று கட்டாயம் இராவணேஸ்வரரை  போற்றி போற்றி  துதிக்க வேண்டும். பலமுறை துதிக்க வேண்டும். 
==================================


குருநாதர் :-  இதனால் நல் பண்புகள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ராவணனைப் பற்றி பின் எது என்று கூற , சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூற , பின் பரிபூரணமாக பின் என்னென்ன எது எது எது பின் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வாருங்கள். இன்பம் காணுங்கள் நிச்சயம் தன்னில் கூட. 

===================================
#  உண்மை நிலையை அறிந்து விட்டால் வெற்றி உங்களுக்கும் வரும். 
===================================

குருநாதர் :-  இதனால் எது என்று புரிய அதனால் தெரிந்து கொண்டு தெரிந்து கொண்டு.

குருநாதர் :-  ஆனால் மக்களே இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் தன்னில் கூட பணத்திற்காகவே நிச்சயம் தன்னில் கூட எது என்றது மனம் செம்மையாகவே நிச்சயம் தன்னில் இருக்க இதை நிச்சயம் தன்னில் கூட. ஆனால் உண்மை நிலை யாரும் அறிவதே இல்லை. உண்மை நிலையை அறிந்துவிட்டால் வெற்றி உங்களுக்கும் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்போ எல்லாருக்கும் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தணும். இந்தச் சிவராத்திரின்னா என்ன? இது எதனால நடக்குது? இதுக்கெல்லாம் யாரு காரணம்? இதோட 'ரூட் காஸ்' (Root Cause) யாருன்னு பார்த்தா... அதுவும் நம்ம இராவணேஸ்வரன் தான்! அவரால தான் இது எல்லாமே நடக்குதுங்கிற உண்மையை இப்போ எல்லாருக்கும் புரிய வைக்கணும்!")

===========================================
# சிவராத்திரி அன்று கைகளில் நிச்சயம்  (வில்வ) இலைகள் இருந்தாலே போதுமானது
# (வில்வ) இலைகள் பிரபஞ்ச சக்திகளை உங்களுக்கு  ஈர்த்து கொடுக்கும்
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரி அன்று பின் கைகளில் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று புரிய சொல்லிவிட்டேன். பின் (வில்வ) இலைகள் இருந்தாலே போதுமானது. நிச்சயம் தன்னில் கூட சக்திகள் ஈர்த்து கொடுக்கும் பிரபஞ்ச சக்தி.

அடியவர் :- வில்வ இலைகள் இருந்தாலே போதும்.

சுவடி ஓதும் மைந்தன் :- கையில வில்வ இலைகள் இருந்து இருந்தாலே போதும். 

============================================
# கைகளில் வில்வ இலைகளை வைத்துக் கொண்டு, திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும்  படித்தாலே நிச்சயம் ஞானம் பிறந்துவிடும்.
============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் உள்ள கைகளில்  நிச்சயம் தன்னில் கூட அவ் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும் படித்தாலே நிச்சயம் தன்னில் ஞானம் பிறந்துவிடும். 

=====================================
# தீராத நோய் தீர்க்கும் திருநீறு மற்றும் வில்வ சிகிச்சை முறை
=====================================

குருநாதர் :-   அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் சில பின் எது என்று அறிய அப்படியே பின் விபூதியும் நிச்சயம் தன்னில் கூட எடுத்து வந்து, இல்லத்தில் நிச்சயம் அனுதினமும் பின் அதாவது பின் இரவுதோறும் நிச்சயம் பின் உள்ளங்கையில் நிச்சயம் தன்னில் கூட சில பின் விபூதிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட, சில சில பின் அதாவது இலைகளையும் கூட, அதாவது வில்வ இலைகளையும் கூட, வைத்து பின் முழுவதுமாக பின் சிவனைப் போற்றி போற்றி பின் ராவணனை நினைத்து நிச்சயம் தன்னில் கூட, பல பின் நிச்சயம் நால்வர்களை கூட, இன்னும் பின் நாயன்மார்களையும் இன்னும் கூட பின் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும் மீண்டும் சொல்கின்றேன் படித்து பின் அத் திரு இலைகளை கையிலே வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் சிறிது சிறிதாக இல்லத்தில் நிச்சயம் வைத்து சிறிது சிறிதாக இரவினிலே உட்கொண்டு வந்தாலே பல நோய்கள் தீரும் அப்பா. தீரும் அம்மையே.

=====================================
வாக்கு சுருக்கம் :- சிவராத்திரி நன்னாளன்று பிரபஞ்சத்தின் பேராற்றலை (Cosmic Energy) ஈர்க்கும் சக்தி வில்வ இலைகளுக்கு உண்டு. அன்று ஒருவரது உள்ளங்கையில் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் அனைத்துப் பதிகங்களையும் முழுமையாகப் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவருக்கு மெய்ஞானம் பிறக்கும்.
இதே வழிமுறையை தினசரி ஒரு மருத்துவ முறையாகவும் (Spiritual Healing) மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் இரவும் உங்கள் இல்லத்தில், சிறிதளவு திருநீற்றையும் (விபூதி) ஒரு சில வில்வ இலைகளையும் உள்ளங்கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிவபெருமானைப் போற்றித் துதித்து, மகா சிவபக்தனான இராவணேஸ்வரனை மனதார நினைத்து, சமயக் குரவர் நால்வர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்க வேண்டும்.
இந்த நிலையில் திருவாசகப் பதிகங்களை முழுமையாக ஓதி முடித்த பின், அந்த உள்ளங்கையில் இருந்த விபூதியையும் வில்வ இலைகளையும் (இறை சக்தியைத் தன்னுள் ஈர்த்தவை) சிறிதளவு எடுத்து உட்கொண்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், உடலில் உள்ள தீராத நோய்கள் அனைத்தும் இறைவனின் அருளால் நிச்சயம் குணமாகும்.
=======================================


அடியவர் :- போதும். வில்வ இலை. வில்வ இலை. சிவலிங்கம். லைட் ஃபுல்லா. திருவாசகம். 

அடியவர் 2 :-  இது மூணு போதும். வேற எதுவுமே வேண்டாம். வில்வ இலை. சிவலிங்கம். திருவாசகம். நீங்க எந்த லாங்குவேஜ்ல வேணாலும் பாடுங்க. எது வேணாலும் பிடிச்சா வேணா பாடிட்டு போங்க.

அடியவர் 3 :-  சிவராத்திரி என்று திருவாசகம் பாடினாவே, விபூதி நாலு விபூதியும் கையில வச்சுக்கிட்டு இது பண்ணிக்கிட்டு விபூதி வில்வ இலை வாழ்க்கையை ரொம்ப சிம்பிளாக்கிட்டார் தாத்தா. 

==================================
# ருத்ராட்ச மகிமை மற்றும் மனிதனின் அறியாமை குறித்த விழிப்புணர்வு
==================================

==================================
# வெறும் கண் விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாது என்பதுதான்  உண்மை
==================================

குருநாதர் :-  அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் ருத்ராட்சையும் கையிலே வைத்துக்கொண்டு பின் ருத்ராட்சையை நிச்சயம் பின் பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் நீரில் கூட பின் இரவு ஊற வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதிகாலையில் நிச்சயம் தன்னில் கூட அவ்வளவு சக்திகள் நிச்சயம் உங்களுக்கும் வரும். இன்னும் ஞானங்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஏதோ சிவராத்திரியா… முழித்துக் கொள்வோம் என்றெல்லாம் இருக்கின்றான் முட்டாள் மனிதன்.

============================================
# வாக்கு சுருக்கம் :- வில்வம் மற்றும் விபூதி வழிபாட்டுடன், ருத்ராட்சத்தையும் முறையாகப் பயன்படுத்துவது அளப்பரிய பலன்களைத் தரும். ஒரு ருத்ராட்சத்தை நாள்தோறும் இரவு வேளையில் தூய்மையான நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் அந்த நீரை அருந்துவதுடன் ருத்ராட்சத்தைத் தரித்துக்கொள்வதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் மகா சக்திகள் வந்து சேரும்.

இருப்பினும், இன்றைய மனிதன் சிவராத்திரியின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல், வெறும் உறக்கத்தைத் தவிர்த்து விழித்திருப்பது மட்டுமே சிவராத்திரி என்று எண்ணி அறியாமையில் இருக்கின்றான். சிவராத்திரி என்பது வெறும் உடல் சார்ந்த விழிப்புணர்வு மட்டுமல்ல; அது ருத்ராட்சம், வில்வம் போன்ற இறைச் சாதனங்கள் மற்றும் திருவாசகப் பாராயணம் மூலம் பிரபஞ்சத்தின் பேராற்றலைத் தன்னுள் ஈர்த்து, ஞானத்தைப் பெறும் உன்னதமான வழிபாடாகும். இந்த ரகசியங்களை அறியாமல் சடங்குகளில் மட்டும் மூழ்கியிருக்கும் மனிதன், உண்மையான இறை சக்தியை அடையத் தவறுகிறான்.
============================================


==================================
# வெறும் கண் விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாது என்பதுதான்  உண்மை
==================================

சுவடி ஓதும் மைந்தன் :- ("சிவராத்திரினா முழிச்சிருக்கணும்னு தான் எல்லாருக்கும் தெரியுது. ஆனா, முழிச்சுட்டு என்ன பண்ணனும்னு தெரியலையே! இதையெல்லாம் (வில்வம், திருவாசகம், ருத்ராட்சம்) செய்யாம, வெறுமனே முழிச்சுட்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனா நம்ம ஆளுங்க என்ன பண்றாங்க? சிவராத்திரி அன்னைக்கு தூங்காம இருக்கணும்ங்கிறதுக்காக டிவில டிராமாவை போட்டுப் பாக்குறது, மத்தவங்ககிட்ட உட்கார்ந்து கதை பேசுறது, அப்புறம் நல்லாச் சாப்பிடுறதுன்னு நேரத்தை வீணாக்குறாங்க. இப்படிப் பண்றதுல என்ன புண்ணியம் இருக்கு? வெறும் கண்விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாதுங்கிறதுதான் உண்மை!")

======================================
# விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் - இராவணேஸ்வரர் 
======================================

குருநாதர் :-  தன் தாயை நிச்சயம் முதலில் பின் திருகோணமலையிலே நிச்சயம் தன்னில் கூட பின் காப்பாற்றினான். இதனால் அங்கிருந்தே நிச்சயம் எது என்று அறிய பின் விமானத்தில் வரப்பான் பின் ராவணனை விமானத்தை நிச்சயம் ராவணனையே கண்டுபிடித்தான். பின் ராவணனையே சாரும் விமானம் பின் எவையது முதலில் சென்றவன் பின் நிச்சயம் தன்னில் கூட விமானத்தில் முதல் பின் கண்டுபிடித்து சென்றவன் ராவணனே.



அடியவர் :- ("ரைட் பிரதர்ஸ் (Wright Brothers) எல்லாம் கிடையாதுப்பா! முதல்ல பிளைட்டை (Flight) கண்டுபிடிச்சது யாரு? நம்ம ராவணன் தான். அவரு பிளைட்டை எங்கிருந்து எடுப்பாரு தெரியுமா? சிவராத்திரி அன்னைக்கு திருகோணமலையில இருந்துதான் எடுப்பாரு. அவரோட முதல் 'ஸ்டார்ட்' (Start) அங்கதான் இருக்கும். திருகோணமலை தான் அவருக்கு ரொம்பப் பிடிச்சமான தளம். அதனாலதான் சொல்றேன், எல்லா மக்களும் திருகோணமலைக்குப் போகணும். இப்போ இங்க காலையில இருந்து வந்திருக்கீங்களே, நீங்க எல்லாரும் கூட அங்கதான் போகணும். ஏன்னா, அங்க போனாதான் அந்த உண்மையான சக்தியும் பலனும் உங்களுக்குக் கிடைக்கும்!")

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கிருந்தாலும் வருவான் அப்பா (இராவணன்) விமானத்தில். 


====================================
# “அ” எதனை குறிக்கும்?  “ஆ” எதனை குறிக்கும்? 
====================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட “அ” எதனை குறிக்கும்?  “ஆ” எதனை குறிக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- “அ”  எதை குறிக்கும்? ஆ எதனை குறிக்கும்? 

குருநாதர் :-  நிச்சயம் முதலில் இவை இரண்டுமே ஒன்றுதான். பின் சிறு வேறுபாடு இறைவனே  குறிக்கும். அகர முதல எழுத்தெல்லாம் முதல். 

========================
# “இ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :- அடுத்து “இ” எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இன்பத்தை எதை என்று புரிய எழுதியுள்ளான் அல்லவா நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :- “இ”  என்ன குறிக்கும்?  அ  வும் இறைவன் தான். ஆ வும் இறைவன் தான். ஈ என்ன? அடுத்து இன்பபத்தப்பட்ட இன்பம். 

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை அடுத்து “இ”ராவணேஸ்வரனை நிச்சயம் தன்னில் கூட.  ( ‘இ’ராவணேஸ்வரன்)

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் என்ன பண்ணாரு? இராவணேசன். இராவணேஸ்வரன். இ-ராவணேஸ்வரன். அதான் “ஈ” அடுத்து ?

========================
#  “ஈ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :-   நிச்சயம் எவை என்று அறிய பின்பு பின் இவன் கண்டுபிடிப்பது பின் ஈகை ஆயிற்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து இவன் சொல்லித் தந்ததுதான் ஈகை.  “ஈ” -  ஈகை என்றால் என்ன? கொடுக்கிறது. தர்மம் செய்றது. தர்மம் செய்றது. 

========================
#  “உ, ஊ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் எவை என்று புரிய “ஊது” எவை என்று நிச்சயம் தன்னில் கூட பின் மற்றவர்களுக்காக பின் அனைத்தும் பின் தியாகம் செய். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு உயிரெழுத்துக்களுடைய அர்த்தம் சொல்றாங்க. ஊதுறது எங்க இருக்கும்? 

அடியவர் :- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே. முதலில்  அ , ஆ இறைவனை பத்தி. 

அடுத்து “இ”  இராவணேஸ்வரர். 

அதுக்கப்புறம் “ஈ” ஈகை பிறருக்கு கொடுத்து உதவுதல். 

அதுக்கப்புறம் ஊது. ஓகேங்களா? ஊது. 

========================
#   “எ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட “எ” எதனை குறிக்கின்றது என்பதை நிச்சயம் நீங்கள் சொல்ல வேண்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :- “எ” எதனை குறிக்கின்றது?

அடியவர் :- எண்ணம்.

குருநாதர் :-   நிச்சயம் எவை இருந்தால் பின் இருந்தால் நிச்சயம் தன்னில் கூட ‘எ’ண்ணம் போல் வாழ்க்கை என்கிறார்களே. 

=====================================
# அகத்திய மாமுனிவர் தமிழ் எழுத்துக்களை ஏன் வடிவமைத்தார் ?
=====================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட நல்லெண்ணமாக குறிக்கின்றது. நிச்சயம் தன்னில் கூட.  இவையெல்லாம் பின் ஏன் வடித்தேன் என்பவை எல்லாம் நிச்சயம் எது என்று புரிய இன்னும் பின் தமிழ் எழுத்துக்களின் சிறப்புகள் பற்றி எல்லாம் சொல்கின்றேன். 

=====================================
# தமிழ் எழுத்துக்கள் - இலங்கை இங்கிருந்து தான் தொடங்கியது. 
=====================================

குருநாதர் :-   தமிழ் எழுத்துக்கள் இங்கிருந்து தான் தொடங்கியது. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே தமிழ் எழுத்துக்கள் எங்கிருந்து தொடங்கியது? தமிழ்நாட்டுல இல்ல. தமிழ்நாட்டுல இல்ல. சொரங்கமா இருக்கு. எட்டி எடுக்குறாரு. அப்ப அந்த தமிழ் எழுத்துக்கள் என்பவையும் இங்கிருந்து தான் ஆரம்பிக்குது.

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் உரையாடல்  :- ("இந்த உலகத்துக்கே இங்கிருந்துதான் ஆரம்பம், இதான் 'பேஸ்' (Base)! இங்க வச்சு ஒரு அடி அடிச்சா, அது உலகத்துல இருக்குற எல்லா நாட்டையும் தாக்கும்னு ஐயா ஏற்கனவே சொல்லிட்டாரு. உண்மையைச் சொல்லப்போனா ஸ்ரீலங்காதான் இந்த உலகத்துக்கே மையம். அங்க ஒரு பிரச்சனைன்னா, மொத்த உலகமே ஆட்டம் கண்டுடும். தமிழ், கூட்டுப் பிரார்த்தனைன்னு எதை எடுத்துக்கிட்டாலும் அதுக்கு ஸ்ரீலங்காதான் அடிப்படை. ஆனா, இங்க இருக்குற மக்கள் எதை வச்சு திங்க் (Think) பண்றாங்கன்னு எனக்குத் தெரியல. உண்மையான தமிழ் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு நிலைமை இருக்கு. இப்போ நாம எல்லாரும் வேலையை விட்டுட்டாவது ஸ்ரீலங்காவுக்கு 'ரீ-லொகேட்' (Relocate) ஆகிப் போகணும் போல இருக்கு. அங்க இருக்குற திருகோணமலைக்கு நாம போயே ஆகணும், ஏன்னா அங்கதான் எல்லாம் தொடங்குது!" )

========================
# “ஓ” எதனை குறிக்கும்? 
======================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது “ஓ” நிச்சயம் தன்னில் கூட, அடுத்து பின் அதாவது, அப்பொழுதுதான் இறைவனைப் பற்றி ஓதுதலே வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனைப் பற்றி ஓதுதல். இறைவனைப் பற்றி எப்ப ஓத வேண்டும்? இறைவனைப் பற்றி  எப்ப நம்ம படிக்க வேண்டும்? எல்லா எண்ணம் சரியா இருக்கணும். எல்லாமே இருக்கணும். அப்பதான் இறைவனைப் பற்றி ஓத வேண்டும். )

சுவடி ஓதும் மைந்தன் :-அப்புறம் என்ன வருது? 

========================
# “ஔ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட “ஔ”வில் பல மந்திரங்கள் எது என்று புரிய நிச்சயம் எவை என்று கூற.

========================
# “ஃ ” எதனை குறிக்கும்? 
========================

குருநாதர் :-  பின் “ஃ” அக்கும் முடிந்து விடுகின்றது. வாழ்க்கை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வாழ்க்கை முடிய வேண்டுமே தவிர நிச்சயம் தன்னில் கூட.



அடியவர் :- ( இவ் எழுத்துக்களை மீண்டும் அங்கு தொகுத்து வழங்கினார் )

இறைவனைப் பற்றி அ  ஆ அதான் ரெண்டுமே ஆண்டவனை குறிக்குது. 
இ இராவணேஸ்வரரை குறிக்குது மூணாவது 
நாலாவது ஈ ஈகை தர்மத்தை படித்து குறிக்குது. 
அதுக்கப்புறம் உ. ஊதணும். அதாவது ஊது.  அந்த முறை நம்ம பிறருக்கு செய்யறதுக்காக அப்படின்றாரு. 
அப்புறம் “எ” எண்ணங்கள். எண்ணங்களை ஏற்றமா வச்சுக்கணும். ஏ 
அதுக்கப்புறம் தான் இறைவனைப் பற்றி ஓதணும். 
“ஃ ” அக்குல வாழ்கை 


சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த இந்த தமிழ் இங்க இருந்து தொடங்குனதுன்றாரு. 

குருநாதர் :-  அப்பனே பின்புதான் அப்பனே பின் அதாவது “கா”லில் தொடங்கும். அப்பா உள் கடவுள் அப்பனே பின் கா எழுத்துக்களில் 

அடியவர் :-  அப்பா 

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து மெய்யெழுத்து. அடுத்து மெய்யெழுத்து வராரு. அப்பதான் இதெல்லாம் இருந்தாதான் கடவுள் கால தொடங்குது. கா இக்கு உள்ளு இட்டு. 

குருநாதர் :-  அப்பனே இதைப்பற்றி தெளிவை இப்பொழுது அனைத்தும் படித்துக் கொண்டு வரட்டும். அப்பனே சிறப்பாக அதைப்பற்றி மற்றொரு வாக்கில் நான் எடுத்துரைக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ("அப்போ 'கா' (க)-வுல தான் முதல்ல எல்லாம் தொடங்குது! ஏன்னா, நீங்க அந்த 'அ, ஆ, க, ங, ச' வரிசையில இருந்து வந்தாதான் கடவுளைப் பத்தித் தெரிஞ்சுக்க முடியும். 'க'டவுள் - அதுலயே 'உள்' இருக்கு, 'கட' இருக்கு. இதுக்கெல்லாம் நீங்க அந்த அடிப்படையான எழுத்துக்களை ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் (1st Standard) படிக்கிற மாதிரி முதல்ல இருந்து படிக்கணும். இதைப் பத்தி அவரு ஒரு இடத்துல சொல்லுவாரு. ஆனா அது எந்த இடம்னு நமக்குத் தெரியாது. ஏன்னா, அவரு (அகத்தியரோ அல்லது இறைவனோ) என்ன விரும்புறாரோ, அந்த இடத்துலதான் அதைச் சொல்லுவாரு. அவரு நினைச்சாதான் அந்த ரகசியம் நமக்கு வெளிப்படும்!" )

=========================
# “க” எதனை குறிக்கும்? 
=========================

குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவும் எடுத்துக்கொள்ளலாம். முதல் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் கணபதியே அனைவரும் தொழுகின்றார்கள் அல்லவா? “க” 

அப்ப கணபதி முதல்ல ஏன் சொல்றாரு? கா கணபதி 

குருநாதர் :-  நிச்சயம் இன்னும் எது என்று அறிய சொல்லப்போனால் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றது. 

==================================
# அடுத்து வருவது சிவராத்திரி. அனைவரும் சிறப்பாக கொண்டாடுங்கள்.
==================================
# எப்படி கொண்டாடுவது என்பதை யான் தெரிவித்து விட்டேன் அழகாக. 
==================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் ஒவ்வொன்றாக புரிய வைத்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இதனால் அடுத்து வருவது சிவராத்திரி. அனைவரும் சிறப்பாக கொண்டாடுங்கள். எப்படி கொண்டாடுவதும் என்பதை நான் தெரிவித்து விட்டேன் அழகாக. 

======================================
# மனிதன் வருங்காலத்தில்  சிவராத்திரியை அதிகமாக கொண்டாடப் போகின்றான். இது சத்தியம். 
=====================================

குருநாதர் :-  ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பின் வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் இராவணேஸ்வரனை நான் இழுத்துவிட்டேன். இதனால் மனிதன் சிவராத்திரியை அதிகமாக கொண்டாடப் போகின்றான். இது சத்தியம். 

அடியவர்கள் :- ( மகிழ்ச்சியின் உச்சம் , கை தட்டல்கள் )

=====================================
# வருங்காலத்தில்  சிவராத்திரியோட மகிமை உலகத்துக்கே தெரியப்போகுது
=====================================

சுவடி ஓதும் மைந்தன்:-  ( "அப்போ அவருக்குப் பிடிச்சது என்ன? அதனாலதான் நான் இந்த இடத்துல நம்ம இராவணேஸ்வரனை இழுத்துவிட்டேன். இனி வர்ற காலத்துல பாருங்க, இந்தச் சிவராத்திரிங்கிறது இப்போ இருக்குற மாதிரி இல்லாம, இன்னும் ரொம்ப ரொம்பப் பெருசா போகப்போகுது! உலகமே வியக்குற அளவுக்கு அவ்வளவு விமர்சையா இதைக் கொண்டாடப் போறாங்க. இப்போ இருக்குறதை விட இன்னும் பல மடங்கு பிரம்மாண்டமா, அங்கங்க விசேஷமா இந்த விழா களைகட்டப் போகுது. சிவராத்திரியோட மகிமை உலகத்துக்கே தெரியப்போகுது!" )

===================================
# சகா வரம் பெற்ற இராவணேஸ்வரர் 
=================================== 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவர் தடுத்தாலும் உண்டு ஏற்றங்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. பின் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் சாகா வரத்தை பின் பெற்றவன் இராவணன். நிச்சயம் தன்னில் கூட அதன் மூலம் பின் எதை என்று கூற எதனை வென்றான் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எது என்று புரிய. 

====================================
# இலங்கையை காத்தருளும் இராவணேஸ்வரர் 
====================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இத்தேசத்தையும் காத்தருளுகின்றான் அவனே.  இதனால் அவனைப் பற்றி சொல்லவே வேண்டும் இங்கு. 

=========================================
# இராவணேஸ்வரரின் மற்றொரு பெயர் - “சிங்கன்” 
=========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவ என்று அறிய அறிய பின் இவனுக்கு மற்றொரு பெயர் பின் எவ என்று கூறுவேன். சிங்கன் என்று. 

சுவடி ஓதும் மைந்தன்:-   ( இராவணேஸ்வரரின் மற்றொரு பெயர்  என்ன? சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்களேஸ்வரன். சிங்களேஸ்வரன். சிங்களே. சிங்க. சிங்கம். சிங்கனேஸ்வரன். சிங்கனேஸ்வரன். அய்யா , புரியுதுங்களா? )

=========================================
# அனைத்தும்  சிறிது சிறிதாக புரிய வைத்தால் தான் நன்மை உண்டு.
=========================================

குருநாதர் :-  எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இன்னும் ஞானங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று உங்களுக்கு சிறிது சிறிதாக புரிய வைத்தால் தான் நன்மை உண்டு. அனைத்தும் ஒரு எழுத்தில் பின் சொல்லிவிட்டால் பின் குழப்பங்களாக நீங்களே குழப்பிக் கொண்டு பின் மறு மற்றொருவர் மற்றொருவர் பேசிக் கொள்வீர்கள். என்ன என்ன என்றெல்லாம்? 

சுவடி ஓதும் மைந்தன்:-  ( "உங்களுக்கு எல்லாத்தையும் மொத்தமாச் சொன்னா புரியாது, அதனாலதான் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துச் சொன்னா மட்டும்தான் மண்டையில ஏறும். ஏன்னா, நீங்க வெளிய போகும்போது 'என்னடா இவரு இப்படிச் சொல்றாரு, அப்படிச் சொல்றாரு'ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் குசு குசுன்னு பேசிக்கிட்டு குழம்பிடுவீங்க. அந்தத் தெளிவு இல்லாம போயிடக் கூடாதுல்ல? அதனால, எந்த விஷயத்தை எப்பச் சொல்லணுமோ, அப்ப அவரு கரெக்டா வரிசையா வந்து சொல்லுவாரு. இப்போதைக்கு மெதுமெதுவாத் தான் அந்த மர்ம முடிச்சுகளை அவுத்து விடுறாரு!" )
====================================
# யான் தேர்ந்தெடுப்பது அனைவரும் கஷ்டப்பட்டு இருபவர்களையே 
====================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் யான் தேர்ந்தெடுப்பது அனைவரும் பின் எவ்வாறு கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்றவர்கள் எல்லாம், நிச்சயம் என் அருகிலேயே அமர்த்தித்தான் நிச்சயம் யான் செப்புவேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  நான் யாரை இருந்து தேர்ந்தெடுக்கிறேன்னா ரொம்ப அடிபட்டு நூடுல்ஸ் ஆனவங்க பாரு. அவங்கதான் என் பக்கத்துல உட்கார வச்சு அவங்களுக்கு சொல்லுவேன். 

அடியவர் :- நீங்க எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அதனால கஷ்டப்பட்டு இருக்கீங்க. 

=========================================
#  சிறிதளாவது ஞானங்கள் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்
=========================================

குருநாதர் :-  நிச்சயம் சிறிதளாவது ஞானங்கள் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் அதனால்தான். 

========================================
# ஞானிகளின்  வாழ்க்கை கேட்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.
========================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை பின் வணங்குவது ஒருமுறை. நிச்சயம் தன்னில் கூட அவர்களை நிச்சயம் இவ்வாறெல்லாம் ஞானிகளின் பின் வாழ்க்கை அதாவது கேட்பது பன்மடங்கு புண்ணியம் தரும். 

குருநாதர் :-  நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தேவையானது மெதுமெதுவாக கிடைக்கப்பெறும். இராவணேஸ்வரனே கொடுப்பான். 

அடியவர் :- வந்திருக்கிற எல்லாருக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும். இராவணன் தான் கொடுப்பாருன்றாரு. அதே மாதிரி கேட்டாலே புண்ணியம். 

===================================
# சீரடி சாய்பாபா பற்றி சிறப்பான வைக்கும் காத்துக் கொண்டிருக்கின்றது.
===================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின்னாலே அமர்ந்து கொண்டிருக்கின்றானே. அவனைப் பற்றி சிறப்பான வைக்கும் காத்துக் கொண்டிருக்கின்றது. நிச்சயம் சொல்வேன். அவனையும் வரவழைக்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றான். அமைதியாக இருக்கின்றான். அவ்வளவுதான். சேவைகள் செய்யட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ("நானே இவரை (சாய்பாபா ) முன்னாடி கூட்டிட்டு வருவேன். ஒரு காலத்துல மக்களுக்கு அவரு என்னவெல்லாம் பண்ணாரு? ஆனா ஒரு கட்டத்துல அமைதி ஆயிட்டாரு. இப்போ திருப்பியும் வந்து, எல்லாத்தையும் செய்யச் சொல்லி, மக்களுக்கு உண்மையைச் சொல்லி, 'இவரை வணங்குங்க, நீங்க எல்லா நன்மையும் பெறுவீங்க'ன்னு இவரைப் பத்தியே நான் சொல்லப்போறேன். இவரு சாதாரணமானவர் கிடையாது, நிறைய ஞானங்களைப் பெற்றவரு! இவரோட அந்தப் பெரிய அறிவையும், சக்தியையும் பத்தி நான் இனிமே நிறையச் சொல்லப்போறேன்!" )

===============================
# நிச்சயம் தலை நிமிரும் தர்மம்.
===============================

குருநாதர் :-  நிச்சயம் இத்தனை நிச்சயம் எவ்வாறெல்லாம் உலகத்தை காக்க ஞானிகள் நிச்சயம் பின் வந்தார்களோ அவர்களை நிச்சயம் பற்றி எடுத்துரைத்து, மீண்டும் வரவழைத்து விடுவேன். கவலையில் வேண்டாம். நிச்சயம் தலை நிமிரும் தர்மம்.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஞானிகள் எல்லாம் வந்துட்டா. தர்மம் எல்லா ஞானிகள் திருப்பியும் வந்துட்டா. எல்லாத்துக்கும் சொல்லிட்டா என்ன ஆகும்? தர்மம் தலை நிமிரும். 

================================
# கலியுகத்தில் தர்மம் தலை குனிய யாங்கள் விடப்போவதில்லை.
================================

குருநாதர் :-  கலியுகத்தில் கட்டாயம் பின் தலை குனிவே தர்மம் என்பது விதி. ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை அது 

சுவடி ஓதும் மைந்தன்:-  கலியுகத்தில் தர்மம் என்ன ஆகணும்? தலை குனியும். தலை குனியும் தான் ஆகணும். ஆனால் நாங்க விடமாட்டோம். சித்தர்கள் நாங்க விடமாட்டோம். மாற்றி அமைப்போம். 

அடியவர் :- நாங்கள் மாற்றி அமைப்போம். 

==========================================
# இன்னும் இராவணேஸ்வரரின் வாழ்க்கை குறித்து வாக்குகள் உண்டு 
==========================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது எது என்று புரிய பின் எவ என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். சித்தர்கள் ஆசிகள். நிச்சயம் பின் இராவணனை பற்றியும் இத்தேசத்தில் அழகாக எடுத்துரைத்து நிச்சயம் தன்னில் கூட இன்னும் ஞானங்களைக் காண மீண்டும் பின் வாக்குகள் செப்புவேன் நலமாக.

=============================================
# அனைவருமே சிவராத்திரி வாக்குகள் செல்லட்டும். 
=============================================

குருநாதர் :- இதனால் அனைவருமே சிவராத்திரி அன்று வாக்குகள் செல்லட்டும். 

=============================================
# சிவராத்திரி வாக்கை நிச்சயம் யானே  எடுத்துச் சென்று விடுவேன்.
=============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட யானே  எடுத்துச் சென்று விடுவேன். 

=========================================
# சிவராத்திரி அன்று இராவணனுடனே யானும் வருவேன் விமானத்தில். 
=========================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் அழகாக இதனால் அனைவருக்குமே நிச்சயம் எவை என்று கூற பின் இராவணனுடனே யானும் வருவேன். நிச்சயம் விமானத்தில். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ("இப்போ ராவணனைப் பத்திப் பேச ஆரம்பிச்ச உடனே, அவரே ரொம்ப குஷி ஆயிட்டாரு! 'அப்ப நானும் இராவணன் விமானத்துல வர்றேன்'னு அவரே சொல்லுறாரு. அகத்தியர் என்ன சொன்னாருன்னா, 'இனிமே திருகோணமலையில மகாசிவராத்திரி மகா சிறப்பா நடக்கணும்'னு சொன்னாரு. அங்க மக்கள் போகப் போக அந்த விசேஷம் இன்னும் பெருசா நடக்கும். இதை யாரு நடத்துவாரு தெரியுமா? இராவணன் அவரேதான் நடத்துவாரு! அங்கிருந்து ஆரம்பிச்சு, ஒரு செகண்ட்ல வேலையை முடிச்சுட்டு அடுத்த இடத்துக்குப் போயிட்டே இருப்பாரு. ஒரே நைட்ல (Night) இந்த உலகத்தையே தன்னோட விமானத்துல சுத்தி வந்துடுவாரு. நாம என்னவோ ரைட் சகோதரர்கள் தான் பிளைட்ட கண்டுபிடிச்சாங்கன்னு படிச்சிட்டு இருக்கோம், ஆனா பிளைட்ட  அதுக்கெல்லாம் மூலாதாரமே நம்ம ராவணேஸ்வரன் தான்!")

நலமாக  அப்பனே, நலன்களாக ஆசிகள். அப்பனே, நிச்சயம் மற்றொரு மற்றொரு வாக்குகள் கூட சிறப்பாக செப்புகின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற, எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரையோடு அனைவருக்குமே ஆசிகள். ஆசிகள், அப்பனே. 

ஆசிகள்! 

ஆசிகள்! 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் நிறைவு அடைந்தது )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!