​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 16 December 2024

சித்தன் அருள் - 1753 - அகத்தியர் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், இனி வரப்போகும் காலத்தை பற்றி குருவிடம் கேட்ட பொழுது, இவ்வாறு கூறினார்.

"ஆண், பெண், குழந்தைகள், வித்தியாசமின்றி அனைவரும் ஒரு சிறு ருத்திராக்ஷத்தை கழுத்தில் அணிவது, வரப்போகும் காலத்தின் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த கவசமாக மாறும்" என்றார்.

குறிப்பிட்ட நட்பு வட்டத்துக்கு மட்டும் தெரிவித்து முடித்தபின், அனைவருக்கும் தெரிவித்து விடலாம் என்ற எண்ணம் உதிக்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அனைவரையும் அகத்தியர் அருள் காக்கட்டும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

27 comments:

  1. மிக்க நன்றி ஐயா 🙏
    ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇‍♀️

    ReplyDelete
  2. நன்றி அன்பரே, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  5. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  6. ஓம் குருவே சரணம்

    ReplyDelete
  7. Is this for only children or adults also can wear? Please advice.

    ReplyDelete
    Replies
    1. ஆண் பெண் குழந்தைகள் வித்தியாசமின்றி அனைவரும்........

      Delete
    2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

      Delete
  8. அய்யா வணக்கம்..பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணியலாமா?

    ReplyDelete
    Replies
    1. கழுத்தில் கட்டிய எதற்கும் தோஷம் கிடையாது. உதாரணமாக: தாலி. ஆகவே ருத்திராக்ஷம் அணியலாம்.

      Delete
    2. நன்றி அய்யா !!!

      Delete
    3. நன்றி அய்யா !!!

      Delete
  9. ஓம் சிவாய நம
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
    Replies
    1. Could you please tell us the place where we can get original rudhraksham. Thank You so much.

      Delete
    2. https://omnamashivaayaa.blogspot.com/2012/05/blog-post.html?m=1

      9442441111 please share your name and address through SMS to this mobile number. Mr.Rajendran is offering free rudrakshah to devotees. i received from him almost 10 years back.

      Om Agaththeeswaraya Namaha.

      Delete
  10. Om Sree lopa mudra sametha Sree Agastheesaya namah Sir I have one doubt If I were Rudraksham we have to be pure, But I am a family man ..... so Sir I want to know whether we have to remove rudraksham during night while i am sleeping with my wife... I don't know how to ask sorry for my question if it hurts you.. Thank You

    ReplyDelete
    Replies
    1. There is no restrictions to wear rudraksham. Let it be in your neck for 24 hours. Please avoid non-veg foods as you are wearing rudraksham.

      Delete
  11. ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத ஶ்ரீ அகத்தீசாய நமஹ:
    ஐயா, எத்தனை முக ருத்ராட்சம் மற்றும் எந்த எண்ணிக்கையில் அணியவேண்டும்

    ReplyDelete
  12. திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
    https://www.threads.net/@siva_secret1805/post/DDrocPSzPMu

    ReplyDelete

  13. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


    ===================
    Youtube:-
    மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் - உலகம் அறியாத ரகசியம்
    https://www.youtube.com/watch?v=ztausP0vTPI
    ===================

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1263 - திருப்பதி வைகுண்ட ஏகாதசி வாக்கு!

    6/01/2023 மார்கழி திங்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் வெள்ளிகிழமை பௌர்ணமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.


    வணக்கம் அடியவர்களே , வாக்கின் உள் செல்லும் முன்னர் வாக்கு சுருக்கத்தை ஒரு வரை பட வடிவில் இங்கு அளித்துள்ளோம். இவ் படத்தை நன்கு புரிந்து வாக்கின் உள் செல்ல நன்று.

    மார்கழி மாதம் வளிமண்டலத்தில் ஒரு படலம் சிறிய சிறிய ஓட்டைகளாகவே மாறும்.

    வைகுண்டம் என்பதற்கு பொருள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு என்கின்றார்கள், வளிமண்டலம் தான்.
    அது வளிமண்டலத்தில் இறைவனால் உண்டாக்கப்படும் ஒரு ஓட்டைதான். அதாவது புண்ணிய உலகம் அங்கு இருந்து அருள் ஒளி திருக்கதிர்கள் திருப்பதி வந்து அடைகின்றது.

    முதலில் அவ் ஒளி பெருமாள் மீது பட்டு அப்படியே (பெருமாளை தரிசனம் செய்யும் பொழுது) மனிதர்கள் மீது எதிரொளிக்கும். அடியவர்கள் பார்வைக்கு ஒரு விளக்க கட்சியாக இங்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மார்கழி மாதம் அவ் ஒளியானது
    (1) முதலில் திருப்பதியில் விழும். அப்போது அவ் ஒளி அருள்கள் கொடுக்கும் ஒளி. நோய்கள் நம்மை அண்டாது.
    (2) அடுத்த ஒளியானது இப்பொழுது ஒளியானது ஆதி நடராச பெருமான் சிதம்பரம் , பின் அங்கு விழும். அப்போது தரிசனம் செய்தால் உடனடியாக கர்மத்தை நீக்கும். உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து விடலாம்.
    (3) அடுத்து வருவது பழனி தன்னில் விழும் அவ் ஒளியானது.
    அங்கு தரிசிப்பவர்களுக்கு அவ் ஒளியானது மார்கழி மாதத்தில் , தை மாதத்தில் கூட நிச்சயமாய் அதிகளவு படும். அப்பொழுது பிரதிபலிக்கும் பொழுது நிச்சயம் பெருவாழ்வு கிட்டும்.
    (4) அடுத்த ஒளியானது, அடுத்து அண்ணாமலையிலே அங்கே ஒளிவிழும்.
    அங்கு செல்பவர்களுக்கு மேலான எண்ணங்களை ஈசன் நிச்சயமாய் கொடுப்பார்.
    (5) அடுத்து காசி தன்னில் விழும். அங்கு எதிரொலிக்கும் பொழுது அனைவரும் கூட புத்துணர்ச்சி பெறலாம்

    நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் நம் அனைவரையும் "நலமாகவே நலமாகவே ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள் அப்பனே" - என்று கலியுகத்தில் முதலில் உண்மையை உணர்த்தி நமக்கு அருள் வழி காட்டியுள்ளார்கள். அடியவர்கள் நாம் அனைவரும் குருநாதர் கட்டிய வழியில் சென்று அவ் இறை ஒளியை நம்முள் சேமித்து புண்ணியம் செய்வோமாக.

    ================================



    ===========================

    Youtube link
    https://youtu.be/5adiVnEF2c0?feature=shared

    சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)
    https://siththanarul.blogspot.com/2022/09/1188.html

    அப்பனே பின் மார்கழி வரும்!!!

    அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே

    ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!

    பின் மார்கழி திங்களில் அதிகாலையிலே விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சிவபுராணத்தையும் ஓதி வந்தால் அவ் ஒளியானது நிச்சயம் தன்மீது பட்டு பட்டு எழும் என்பேன் அப்பனே சக்திகள்!!! சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

    ஆனால் அப்பனே பின் எதை இவை அறிந்து இவை அறிந்து இதை தன் மீண்டும் அப்பனே தை மாதம் இவை என்று அறிய பின் சிறிது சிறிதாக பின் ஒளிந்து விடும் அப்பனே!!!!


    இதனால் எதை என்று அறிய அதனால் அப்பனே இம்மாதத்தில் இருந்து பல புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளலாம் தை மாதம் வரை!!! இதுதான் அப்பனே புண்ணிய காலம் என்பேன் அப்பனே!!!!

    ===========================


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete