22/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: முன்னேச்சுவரம். அருள்மிகு வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயம். சிலாபம்.குருநாகல். புத்தளம் மாவட்டம். வட மேற்கு மாகாணம். ஸ்ரீ லங்கா.
ஆதிமூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்களப்பா!!!
அப்பனே பல பல மாற்றங்கள் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே.....
ஆனாலும் எவ்வாறு?? தடுப்பது என்பதையெல்லாம் அப்பனே சித்தர்கள் யாங்கள் பின் யோசித்து நல் முறையாகவே மாற்றுவோம் அப்பனே
அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே அனைவருமே பின் எம் குழந்தைகளே என்று அப்பனே
இதனால் அப்பனே ஒருவனை விட்டு அப்பனே ஒருவனை எவை என்று எவ்வாறு காப்பாற்றுவது?????
ஆனாலும் அப்பனே பாவங்கள் அதிக அளவு தான் அப்பனே கலியுகத்தில் மனிதனுக்கு இருக்கின்றது என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே பின் எப்படியோ ஒரு வகையில் புண்ணியத்தை சேர்த்து அப்பனே பின் வாழ வைக்கலாம் என்பதை எல்லாம் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே
ஆனாலும் மனிதன் திருந்துவதாக இல்லை என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே புது புது நோய்களை எல்லாம் அப்பனே ஈசன் உருவாக்குவான் அப்பனே
ஏன் எதற்கு என்றால் அப்பனே மனிதன் அப்பனே நல்வித அதாவது நல்விதமாக ஆகுவதற்கே அப்பனே அனைத்தும் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே நல்விதமாகவே இப்படியே சென்று கொண்டு இருந்தால் அப்பனே உலகம் அப்பனே எதை என்று கூட நல்லோர்கள் வாழவும் முடியாது என்பேன். அப்பனே...
அதாவது பல ஜீவராசிகள் கூட வாழவும் முடியாது என்பேன். அப்பனே!!!!
(மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் இந்த உலகத்தில் பறவை இனங்கள் கால்நடை இனங்கள் மரங்கள் தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கு போராட்டமாக உள்ளது)
இதனால் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
ஒரு உயிரை பின் கொன்று அப்பனே அதன் மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் அப்பனே
ஏன் எதற்கு அப்பனே பின் மாமிசத்தை அப்பனே பின் உண்டால் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் முன்னேறவும் முடியாதப்பா
அப்பனே முன்னேற்றம் போல் இருக்கும் என்பேன் அப்பனே ஆனால் அனைத்தையும் அழித்துவிடும் என்பேன் அப்பனே
ஆனாலும் சிலர் கேள்வி கேட்பார்களப்பா!!!
பின் அதாவது அவன் உண்ணுகின்றானே!!...... அவன் நன்றாகத்தான் இருக்கின்றான் என்று சொல்வான் அப்பனே... நன்றாகத்தான் இருக்கின்றான் என்று ஆனாலும் அப்பனே அவனுடைய விதி பின் எங்களை அதாவது யாங்கள் தான் ஆராய்ந்து அப்பனே எவை என்று கூட நகைப்போம்...
இப்படி பேசுபவர்கள் எல்லாம் அப்பனே முட்டாள்கள் என்பேன் அப்பனே
அறிந்தும் கூட பைத்தியக்காரன் என்பேன் அப்பனே..
பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே நீதி தர்மத்தை காப்பாற்றுங்கள் என்பேன் அப்பனே.... இவையெல்லாம் காப்பாற்றினால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே நீடுழி வாழ முடியுமப்பா!!!
இல்லையென்றால் அப்பனே நிச்சயம் வாழ முடியாதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே எவை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் அப்பனே பின்
'''' அதாவது அப்பனே மனிதனுடைய மூளையில் கூட !!! அப்பனே '''''. சில சில கதிர்கள்!!!!!!!
அப்பனே எவை என்றும் ஒளி ரூபமாகவே பின் எவை என்று கூற அவையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது சூரியனிடம் இருந்து.....
சூரியன் இன்னும் அப்பனே அதிக வெப்பம் எதை என்று அறிய அறிய அதிகரிக்கும் பொழுது அப்பனே அங்கிருந்து அப்பனே இக்கதிர்களை எதை என்று அறிய அறிய தாக்குகின்ற பொழுது!!!......
(அதாவது சூரிய வெப்பத்தால் சூரிய கதிர்கள் மனிதர்களின் மூளையை தாக்கும் மனிதர்கள் மூளையில் இருக்கும் ஒளி ரூபமாக கதிர்களை தாக்கும்)
இதனால் மூளை செயல்பாடு குறைந்து மந்தமாகிவிடும்)
அப்பனே பின் மூளையும் கூட அப்பனே மங்கிவிடும் என்பேன் அப்பனே!!!
இதனால் என்ன செய்வது??? எப்படி பேசுவது ? என்றெல்லாம் அப்பனே யோசிக்கத் தெரியாமல் பைத்தியமாகி அப்பனே மனிதன் மனிதரிடையே பின் சண்டைகள் இடுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய தான் தன் அதாவது இஷ்டப்படியே எவை என்று அறிய அறிய தன் மனம் போன போக்கில் போயிட்டு எவை என்று புரிய புரிய இதனால் பைத்தியக்காரனாகி அப்பனே பின் திரிந்து கொண்டிருப்பான் அப்பனே
எப்படி வாழ்வது எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே இதனால் தான் அப்பனே பின் இறைவனை எவை என்று அறிய அறிய தொழுங்கள் எவை என்று அறிய அறிய எவை என்று கூட அப்பனே பல பல பின் புத்தகங்களில் கூட அப்பனே பின் சுவடிகளிலும் கூட பின் எழுதி வைத்தோம் அப்பனே!!
அதாவது தேவாரம் இன்னும் எவை என்று அறிய அறிய நாலாயிர திவ்ய பிரபந்தம் இன்னும் அப்பனே ஏனைய நூல்கள் இன்னும் அப்பனே 18 கீழ் கணக்கு எவை என்று கூட அப்பனே வாழ்க்கை வரலாறுகள் சித்தர்களின் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அப்பனே அப்பனே பின் எவ்வாறெல்லாம் என்பேன் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே ஏனைய பின் ஏடுகளிலும் கூட அப்பனே யாங்கள் அப்பனே பத்திரமாகவே பின் காத்து!!!! (பாதுகாப்பாக உள்ளது)
ஆனாலும் அப்பனே அவைகளும் இருக்கின்றது என்பேன் அப்பனே...
இப்பொழுது அதை அப்பனே பின் மனிதனுக்கு கொடுத்தால் அப்பனே... அதையும் காசாக்குவான் என்பேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே சுவடிகள் பல இருக்கின்றது என்பேன் அப்பனே
ஆனாலும் அதில் தன் எழுத்துக்களை யாங்களே மறைத்து விடுவோம் என்பேன் அப்பனே!!
ஏனென்றால் அப்பனே ஏன் சுவடிகளை வைத்துள்ளோம் எதை என்று கூற அதாவது ஏன் எழுதி வைத்துள்ளோம் என்பதை எல்லாம் அப்பனே நீங்கள் பின் ஆராய முடியாதப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அதிலே எழுதி வைத்திருந்தால் அப்பனே பின் உயிரோட்டம் இருக்கும் என்பேன் அப்பனே...அவை தன் கூட அப்பனே யாங்கள் எங்கள் அருளால் உயிரோட்டம் அப்பனே... எவை என்று கூற இட்டுத்தான் சென்றிருப்போம் அப்பனே!!!
இக்காலத்தில் இருந்து இக்காலம் வரை நிச்சயம் யாருக்கும் பின் எழுத்துக்கள் தெரியக்கூடாது என்பவை எல்லாம் அப்பனே யாங்களே... எதை என்று அறிய அறிய அப்பனே!!!
(சித்தர்கள் எழுதி வைத்திருக்கும் ஓலைச்சுவடிகள் சாதாரண மனிதர்கள் கண்களுக்கு அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பது தெரியாது அது உயிரோட்டமாகவே இருக்கும் ஓலைச்சுவடி ஏடுகளுக்கு ஒரு பாதிப்பும் வராது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை தன் அப்படியே இருக்கும் .
குறிப்பிட்ட கால இடைவெளி வரை மறைந்திருப்பதோ எழுத்துக்கள் தெரிவதோ எல்லாம் சித்தர்கள் தீர்மானம்.
குறிப்பிட்ட காலம் முதல் அடுத்து 100 200 அல்லது 1000 வருடங்களுக்குப் பிறகு கூட இந்த ஓலைச்சுவடி எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதெல்லாம் சித்தர்களுடைய தீர்மானம். சாதாரணமாக மனிதர்கள் ஓலைச்சுவடியில் என்ன எழுதி இருக்கின்றது என்ன ரகசியங்கள் இருக்கின்றது என்பதை யாராலும் அறிய ஆராய முடியாது)
இதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே யோகங்கள் என்பேன் அப்பனே அப்பொழுதெல்லாம் அப்பனே ஏன் எதற்கெல்லாம் என்றெல்லாம் அப்பனே பின் அதாவது பெரிய பெரிய அரசர்கள் கூட பின் அப்பனே இப் பனை ஓலை எவை என்று அறிய.....பனை மரத்தின் அருகே தான் அப்பனே ஆனாலும் அப்பனே பனை மரத்தின் அடியில் தான் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இவை என்று புரியாமல் இருந்தாலும் அப்பனே நிச்சயமாய் அப்பனே பின் தங்க நகைகள் அதாவது அப்பனே வைரங்கள் என்றெல்லாம் அப்பனே பதித்து வைத்து அப்பனே...
ஏன் எதற்கு அங்கே ஒரு எவை என்று புரிய புரிய அப்பனே பின் பன மரத்தையும் வளர்த்து அப்பனே அதில் இருக்கும் அப்பனே ஓலையை எவை என்று கூட எடுத்து அப்பனே எழுதுவார்கள் என்பேன் அப்பனே!!!!
இதற்கு ஒரு சக்தி உண்டு என்பேன் அப்பனே
(அக்காலத்தில் அரசர்கள் தாங்கள் சொந்தமாக பனை மரங்களை வளர்த்தி பனைமர அடியில் தங்கம் வைரம் இவற்றை புதைத்து வைத்து அந்த மரத்தில் கிடைக்கும் ஓலைகளின் மூலம் குறிப்புகள் எழுதுவார்கள் அந்த மரங்களின் ஓலைகளுக்கு மட்டும் பிரத்யோகமாக சக்திகள் இருக்கும்)
ஆனாலும் அப்பனே அதை யாரும் புரிந்து கொள்வதில்லை என்பேன் அப்பனே
இதைத் தன் அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே நீ எப்படி அப்பா எவ என்று அறிய அறிய எதை என்று புரிய அப்பனே பின் எப்படி அதாவது எதையும் பேச மாட்டாய் என்பேன் அப்பனே!!!
ஏன் சுவடிகளை வைத்து எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய பின் சுவடிகளில் எழுதி வைத்தோம் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் ஆராய்ந்தால் அப்பனே
ஏன்? அப்பனே பலகைகளிலும் கூட அப்பனே கற்களிலும் கூட
அப்பனே எழுதக்கூடாது??? என்று சிந்தித்தீர்களா??? அப்பனே!!!
ஆனாலும் கற்களிலும் (கல்வெட்டுகள் போன்று) கூட எழுதி வைத்திருக்கின்றோம் அப்பனே... எவை என்று அறிய அறிய ஆனாலும் திருமலையில் (திருப்பதி) பல எதையென்று கூற.... இவ்வுலகம் எப்படி அழியும்? அப்பனே எப்படி என்பதை கூட ஒரு தூணில் உள்ளதப்பா!!!
அப்பனே அதை யாரும் பின் ஓதவும் முடியாது அப்பா அப்பனே
அதை எதை என்று அறிய அறிய அத்தூணில் என்ன உள்ளது என்பதையெல்லாம் அப்பனே உரைப்பேன் அப்பனே பெருமானின் அனுமதியை கேட்டே அப்பனே !!
(இந்த உலகத்திற்கு எப்போது அழிவு எப்படி எல்லாம் அழிவு என்பதை எல்லாம் கல்வெட்டு போன்று எழுதி அது திருப்பதி திருமலையில் ஆலயத்தில் ஒரு தூணில் உள்ளது அந்த தூணில் என்னென்ன விஷயங்கள் உள்ளது என்பதை எல்லாம் வரும் காலத்தில் நம் குருநாதர் அகத்திய பெருமான் ஏழுமலையான் பெருமானிடம் கேட்டு வாக்குகளில் செப்புவார்)
எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே இறைவன் அப்பனே கொடுப்பதற்கு தயாராகவே அப்பனே இருக்கின்றான்
ஆனாலும் அப்பனே அதை மனிதன் அப்பனே பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பேன் அப்பனே.. எவை என்று புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே தன் அதாவது அப்பனே உன் எவை என்று புரியும் அளவிற்கு தான் அப்பனே உந்தனுக்கு எவ்வளவு பின் திறமைகள் இருக்கின்றது என்பதற்கிணங்க அப்பனே யாங்களும் கூட அப்பனே கொடுப்போம் அப்பனே
பின் திறமை இல்லாதவர்களிடம் கூட எதைக் கொடுத்தாலும் வீணாக்க!!!!..... அப்பனே அதாவது வீணாக்கி விடுவான் அப்பனே!!! கொடுத்தும் பயன் இல்லை என்பேன் அப்பனே
இதை தான் அப்பனே இதனால்தான் அப்பனே எதையும் எவை என்று கூற இறைவன் என்ன எழுதி ??எவை என்று அறிய அறிய அப்பனே சரியாகவே அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே அதுவும் கூட அப்பனே பின் அழியும் தன்மை அப்பனே பின் அறிந்தும் கூட
இதனால் அப்பனே பிறப்பெடுத்து இவ் ஆன்மா அப்பனே முற்றிலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய இதனால் பிறவி நிலைக்கு செல்லாதீர்கள் பிறவி நிலைக்கு செல்லாதீர்கள் என்றெல்லாம் அப்பனே யாங்கள் பின் உங்களிடத்தில் கூறிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே
முதலில் அப்பனே என் பக்தர்கள் அப்பனே முதலில் என்ன எவை என்று அறிய அறிய... இப் புவி தன்னில் வாழ்வதற்கு அப்பனே முதலில் பின் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே
தெரியாமல் அப்பனே எவை சொன்னாலும் எவ் மந்திரங்கள் சொன்னாலும் அப்பனே எதை என்று கூற பின் எங்கு சென்றாலும் அப்பனே ஒன்று நடக்காது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஆனாலும் அப்பனே அகத்தியனிடம் அன்பாக வந்து விட்டீர்கள் அப்பனே... ஆனாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய
முதலில் அப்பனே நீதி நேர்மை நியாயத்தோடு அப்பனே தர்மத்தை கடைபிடியுங்கள் என்பேன் அப்பனே
மாமிசத்தை உண்ணாதீர்கள் என்பேன் அப்பனே
அப்பனே எவன் ஒருவன் மாமிசத்தை உண்ணுகின்றானோ அப்பனே பின் எங்களை வணங்கியும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!! பிரயோஜனமில்லை!!!
அப்பனே இதனால் மண்ணை தின்பது போல் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பின் எவ்வாறு எதை என்று அறிய அகத்தியன்!!!
எவை என்று அறிய அறியப்பின் மூலன் (திருமூலர்) இன்னும் அப்பனே பின் கந்தன் பல பல வகைகளும் கூட அப்பனே எடுத்துரைக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இதை விட்டு விடுகின்றார்கள் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று அப்பனே!!!
ஆனால் இதுதானப்பா கர்மா அப்பனே!!!
ஆனால் காசுகள் வந்துவிட்டால் போதும் என்று எண்ணுகின்றான் மனிதன் அப்பனே அதாவது புத்திகெட்ட மனிதனப்பா....
ஆனால் மனிதனை பாவம் என்றே...யாங்கள் எண்ணுகின்றோம் அப்பனே
இதனால் அப்பனே யார் ஒருவன் பின் நல்வழிப்படுத்தி அப்பனே மக்களை எதை என்று அறிய அறிய அப்பனே பின் நல்வழியில் அப்பனே இவை பின் தர்மத்தை கடைப்பிடித்து பின் இவ்வாறாக தான் செல்ல வேண்டும் பின் இவ்வாறு சென்றால் தான் இறைவன் தரிசனமும் கிட்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுக்கின்றானே..... அவன் தான் அப்பா உண்மையான பக்தன்!!!
அதை விட்டுவிட்டு அப்பனே எதை எதையோ கற்றாலும் பிரயோஜனம் இல்லை அப்பனே
அப்பனே இன்னும் யோகங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய பின் இறைவன் கொடுப்பதற்கு மனிதர்களுக்கு அப்பனே.. தயாராக!!!
ஆனாலும் அப்பனே மனிதர்கள் அதை பெறுவதற்கு!!!.......?????
இதனால் அப்பனே மாமிசத்தை உண்டால் எதைக் கற்றுக் கொண்டாலும் அப்பனே வீணப்பா!!!
அப்பனே மாமிசத்தை உண்பவர் பின் தலைகீழாக மாறும் என்பேன் அப்பனே பல பல பின் எவை என்று அறிய அறிய அப்பனே பல பல நபர்களும் பின் எங்கெங்கே எவை என்று அறிய அப்பனே..... பார்த்தீர்களா அப்பனே பின் பல வகையில் கூட அப்பனே மாமிசத்தை உண்டு தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே...
ஆனாலும் அப்பனே அவை தன் அப்பனே... அவர்கள் முன்னேறவும் முடியாது அப்பனே அவர்களைச் சார்ந்தோரும் முன்னேற முடியாது.... அப்பனே இவ் நாட்டையும் முன்னேற்ற பாதையில் அப்பனே செலுத்திட முடியாதப்பா!!
அப்பனே பின் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே முதலில் அதை நீக்கினாலே போதுமானதப்பா
அப்பனே தானாகவே அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே... அனைத்து உறுப்புகளும் செயல்பட்டு அப்பனே பின் புத்திகள் வரும் அப்பா....
அப்பனே இதனால் அப்பனே எப்படி பேசுவது என்பதெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய கூர்ந்து ஆராய்ந்து அப்பனே பேசிட்டு பின் வார்த்தையினாலே ஜெயித்து விடலாம் என்பேன் அப்பனே
எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதாவது நீ எவை என்று ஒரு உயிரைக் கொல்கின்றாய் அல்லவா... அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதன் மூலமாகவே அப்பனே உந்தனுக்கும் அதே போல தான் கதி!!!
திடீரென்று எதை என்று அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே வருகின்றது அப்பனே.....
அனைவரும் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்
சட்டம் இயற்றுகின்றார்கள் இவ்வுலகத்தில் அப்பனே
ஆனால் ஈசனும் சட்டம் இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே
ஏன்? எதற்கு? எதை பின் எவை என்று உண்ணுகின்றானோ அவந்தன் எதை என்று கூட எப்படி?? எதை என்று அறிய அறிய எப்படி வெட்டுகின்றானோ அதேபோலத்தான் அப்பனே வரும் காலங்களில் அப்பன மனிதனும் கூட அப்படித்தான் என்பேன் அப்பனே...
(வாயில்லா ஜீவராசிகளை எப்படி வெட்டுகின்றார்களோ அவர்களுக்கு அதேபோலத்தான் அவர்களும் வெட்டுப்பட்டு அனுபவிக்க வேண்டும் என்பது ஈசனுடைய சட்டம்)
இதுவும் ஈசனுடைய சட்டம்தான் என்பேன் அப்பனே !!!
பின் எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே மனிதர்களுக்கு மட்டும் தான் சட்டம்!!!
எவை என்று அறிய அறிய ஈசனும் இனிமேல் அப்பனே சட்டத்தை போடுவானப்பா அப்பனே.....
அவ் சட்டத்தை மிஞ்சினால் அவ்வளவுதான் என்பேன் அப்பனே !!
ஆபத்துக்கள் மிக மிக அதிகம் அப்பா...
அப்பனே ஏனென்றால் அப்பனே கட்டுப்பாடுகள் ஈசன்!!!!
(நேரடியாக ஈசனின் கட்டுப்பாட்டில் சட்டங்கள் இதனால் அதன் விதிகள் கடுமையாக இருக்கும்)
அப்பனே ஏனென்றால் எவை என்று கூற ஒருவனை நியமித்தாலும் அப்பனே பின் அதாவது இவ் நாட்டை எதை என்று அறிய அறிய ஆள அரசன் ஆக்கினாலும் அப்பனே அவன் பேச்சை யாரும் மதிக்கப் போவதில்லை என்பேன் அப்பனே
அதனால் ஈசனே அப்பனே கட்டளை பின் சட்டங்கள் இடுவான் என்பேன் அப்பனே
இவ்வாறு தான் அப்பனே முதலில்.... இனிமேல் சொல்கின்றேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே எவை என்றும் அறிய அறிய
யார் ஒருவன் மற்ற உயிரை கொன்று அப்பனே சாப்பிடுகின்றானோ... அவந்தனை அப்பனே அப்படியே மனிதன் கொல்வான் அப்பா!!!
அப்பனே இதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எப்படி கத்தி!!!. பின் கத்தி கதறி எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அப்பனே (ஜீவராசிகளை வெட்டி வீழ்த்துவது)
பின் ஜீவராசிகள் விழுகின்றதோ!!!!!... அதேபோலத்தான் அப்பனே பின் கைகளும் உடையுமப்பா!! கால்களும் உடையும் அப்பா
அதை உண்ணுபவர்களுக்கும் அப்பனே பின் புத்திகளும் தேயுமப்பா... அதை மட்டுமில்லாமல் அப்பனே பின் எவை என்று கூற பற்களும் இருக்காதப்பா அவை மட்டும் இல்லாமல் கண்களும் மங்கிப் போகும் அப்பா மங்கிப்போகும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
இது ஈசனின் முதல் சட்டம் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய
இதனால் அப்பனே பின் பரிபூரணமாக எதை என்று கூற அப்பனே பின் அமைதியாக பின் இறைவனை வணங்குங்கள் என்பேன் அப்பனே
இறைவனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே
திருந்துங்கள் திருந்துங்கள் அப்பனே
பின் திருந்தாவிடில் அப்பனே!!!
பின் எச்சரிக்கை!!!!!.... கடைசியாகவே!!!...... விடுவிக்கின்றேன்!!!
(Last warning கடைசி எச்சரிக்கை)
எதை என்று கூட இங்கிருந்தே எச்சரிக்கையை விடுகின்றேன் அப்பனே!!!!!!
எதை என்று கூட அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக் கொண்டு மனிதனை மனிதன் ஏமாற்றி பின் பிழைக்காதீர்கள் என்பேன் அப்பனே
ஏமாற்றி பிழைத்து அப்பனே ஒன்றும் லாபமும் இல்லை என்பேன். அப்பனே
நீ ஒருவனை ஏமாற்றினால் மற்றொருவன் பின் உன்னை ஏமாற்ற இறைவனே ஏற்பாடு செய்வான் அப்பனே
இதுதான் உலகம் அப்பா
அப்பனே எதை என்று அறிய அறிய பின்..நீ நல்லது செய்தால் அப்பனே பின் உந்தனுக்கு நல்லது செய்வதற்காகவே ஒருவனை படைத்து அப்பனே இறைவன் அவன் மூலம் உன்னை உயர்த்துவான் என்பேன் அப்பனே
இதுதான் உலகம் அப்பா
வேண்டாம் அப்பா எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பழைய பழைய திருத்தலங்களை எல்லாம் அழித்து கொண்டு இருக்கும் நிலையில் அப்பனே ஈசனே பின் எவை என்று கூற கட்டளை இட்டிருக்கின்றான் அப்பா!!!
ஈசனின் கட்டளை
ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் அவர்களே வந்து அப்பனே யார்? யார்? மூலம்? எதை செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் அப்பனே செய்வித்து அப்பனே தன்னைத்தானே ஈசன் உயர்த்திக் கொள்வான் அப்பா அவை தான் எவை என்று அறிய அறிய
ஆனால் மனிதனால் முடியாதப்பா
மனிதன் அவை இவை என்று செய்வான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அங்கும் இங்கும் அப்பனே அமைப்பான் அப்பனே
(மனிதர்கள் புதிது புதிதாக உருவாக்கும் கோயில்கள்)
காசுகளுக்காகவே அப்பனே சோம்பேறிகளாக இருப்பதற்கே எவை என்று கூற திரிவானப்பா !!!
எதை என்று அறிய அறிய ஈசனின் ஆலயத்தை அமைத்துவிட்டு அப்பனே இதன் மூலம் பின் வருமானம் சம்பாதித்து கொள்ளலாம் என்று அப்பனே
இதனால் சோம்பேறியாக வாழ்ந்து அப்பனே எதையும் செய்யாமல் விட்டுவிடுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே பின் பாவம் தான் மிஞ்சும் அப்பனே
ஏன்? எதற்கு? வந்தோம்??? என்று அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே
அப்படி தெரியாமல் அப்பனே பின் வாழ்ந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே
இன்னும் பிறவி எடுத்து அப்பனே மீண்டும் இப்படித்தான் வாழ போகின்றாய் என்பேன் அப்பனே
இது ஒரு பிறவியா??? அப்பனே இதெல்லாம் ஒரு பிறவியே இல்லை!!!
அப்படிப்பட்டவனுக்கு இறைவன் ஒன்றுமே தரமாட்டான் அப்பா... அமைதியாகவே வைத்து விடுவான் அப்பா பின் எதை என்று அறிய அறிய இறைவனை எவ்வளவு வணங்கினாலும்... அப்பனே (திருநீறு )பட்டையை தீற்றிக்கொண்டு அப்பனே ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு வணங்கினாலும் அப்பனே ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பதெல்லாம் அப்பனே
அப்பனே வரும் காலங்கள் அப்பனே மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று புரிய புரிய அப்பனே.... சில விஷ (poison gas) வாயுக்களையும் கூட அப்பனே பின் மேலிருந்தே விடுவானப்பா
(முதலாம் உலகப் போரில் ஜெர்மன் நேச நாடுகள் மீது போர் தொடுத்த பொழுது மேகம் போன்று விஷ வாயுக்களை உருவாக்கிநச்சு காற்று மேகம். பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் வெளிப்பட்ட குளோரின் வாயு. அழுத்தி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து அது எதிரணியை நோக்கிச் செலுத்தப்பட்டது.. இந்த விஷ வாயு தாக்குதலால் பல லட்சக்கணக்கான மனிதர்கள் உயிரிழந்தனர்... எதிர்காலத்தில் இது போன்று மனிதன் விஷவாயு தாக்குதலை ஏற்படுத்துவான் என்று குருநாதர் கூறியுள்ளார்)
அப்பனே ஆனாலும் அது யாருக்கும் தெரியாதப்பா... எவை என்று அறிய அறிய அப்பனே பின் அவை தன் கூட ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே
அதையும் யாங்கள் பின் தடுத்து விடுவோம் அப்பனே
மனிதன் இவ்வுலகத்தை அழிக்க பார்த்தான் அப்பனே அதையும் தடுத்து விட்டோம் அப்பனே எதை என்று கூற இன்னும் பெரிய பெரிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய அணுகுண்டு அணுகுண்டு என்கின்றார்களே!!! (nuclear weapon) எவை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய அப்பனே... அவை இதன் கூட அப்பனே தானாகவே வெடிக்குமப்பா...
பின் எதை என்று கூற கண்டுபிடித்தான்... ஆனால் அதை தன் அப்பனே எவை என்று கூற எதை என்று புரிய புரிய அப்பனே அது வெடிக்காமல் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் தெரியாதப்பா
பின் எவை என்று அறிய அறிய அதனால் யாங்களும் அதை கட்டுப்படுத்துவோம் என்பேன் அப்பனே..
இதனால் அப்பனே மனிதன் செய்யும் செயல்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எல்லையை மீறி அதாவது எல்லைக்கு மீறிய செயலாகவே உள்ளது என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய
(ஒரு சிறிய விளக்கம் !!
உலகில் தற்போது ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்த நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா அணு ஆயுதங்களைப் பற்றி எந்த நாடும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அணு ஆயுத நாடுகளின் ராணுவத்திடம் 9,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது
இந்த ஆயுதங்களில் சுமார் 1,800 அதிக உஷார் நிலையில் உள்ளன. அதாவது, அவற்றை குறுகிய நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று SIPRI கூறுகிறது.
இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன.
நம் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கில் கூறுவது என்னவென்றால்.... இந்த அணு ஆயுதங்களில் வரும் காலங்களில் ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இந்த அணுகுண்டு மனித தவறுகள் காரணமாக அல்லது தொழில் நுட்ப குறைபாடு காரணமாக தானாகவே வெடிக்கும் அப்படி வெடித்தால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதையும்... நாங்கள் கட்டுப்படுத்துவோம்.
கண்டுபிடிக்க தெரிந்த மனிதனுக்கு அதை வெடிக்காமல் கட்டுபடுத்த தெரியவில்லை மனிதனுடைய செயல்கள் அத்து மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்)
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய ஏதோ செய்து விடுகின்றான் அப்பனே பின் அவை தான் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே
எதை என்று அறிய இதனால் மனிதனின் உள்ள அதாவது மனிதனிடம் உள்ள திறமைகள் அப்பனே பின் எவை என்று அறிய அறிய... திறமைகள் அனைத்தும் பின் கெட்டுப் போவதற்காகவே உள்ளது என்பேன் அப்பனே
வாழ்வதற்காக இல்லையே அப்பனே வாழ்வதற்கு இல்லையே அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே இதனால்... இனிமேலும் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே வாழ்வதற்காக அப்பனே சில மனிதர்களை உருவாக்கி அப்பனே அவர்கள் மூலம் நிச்சயம் நிச்சயம் அப்பனே எவர் எவர் கெடுக்கின்றார்களோ.... அவர்களை எல்லாம் யாங்கள் அடிப்போம்.... சொல்லிவிட்டோம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே
ஏன் இறைவன் எங்கெல்லாம் அப்பனே இவையெல்லாம் அப்பனே அப்படி அப்படியே கோடுகள் இட்டால் அப்பனே எவை என்று கூற பூமத்திய ரேகைகள் அப்பனே எவை என்று அறிய வரும் எவை என்று புரிய புரிய ஒளிக்கதிர்கள் அப்பனே பின் எங்கெங்கு விழுகின்றது என்றெல்லாம் பின் அட்சம் போட்டு (அட்சரேகை) எதை என்று அறிய அறிய அப்பனே காட்டுவேன் என்பேன் அப்பனே வரும் காலத்தில் அப்பனே
இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் அப்பனே அங்கங்கு திருத்தலங்கள் ஏன்?? எதற்காக? அமைக்கப்பட்டது??? என்பேன் அப்பனே
அதாவது ஒருவன் கேட்கின்றான் அப்பா... பின் எவை என்று கூற பக்கத்தில் பின் பக்கத்தில் இருக்கும் திருத்தலத்திற்கே என்னால் போக முடியவில்லை.. என்று அப்பனே!!!
என்பது ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே ஆனால் அப்பனே அவன் புத்தியுள்ளவன் அப்பா... ஏனென்றால் பக்கத்தில் இருக்கும் பெண்ணே... அவனை திருமணம் செய்யவில்லை.... அப்பனே அவன் எங்கேயோ ஒரு பெண்ணை தூரத்தில் திருமணம் செய்துவிட்டு அழைத்துக் கொண்டு வந்தான் அப்பா...
(குருநாதர் நாம் மேன்மை பெற குறிப்பிடும் ஆலயங்களுக்கு செல்ல சலிப்பு பட்டுக்கொண்டு என்னால் தூரத்தில் உள்ள கோயிலுக்கு எல்லாம் செல்ல முடியாது என்று புலம்பிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு குருநாதர் இந்த பொதுவாக்கில் கூறிய பதிலடி)
அப்பனே எதை என்று அறிய அறிய இதுதான் அப்பனே கலியுகத்தில் மனிதனுடைய அறிவு என்பேன் அப்பனே!!!
எப்பேர்பட்ட அறிவு??????????? என்பது!!!!!...... புரிந்துகொள்ளுங்கள் அப்பனே!!!
அதனால்தான் அப்பனே என் பக்தர்கள் பூஜ்ஜியத்தில் இருக்கக் கூடாது பூஜ்ஜியத்தில் இருக்கக் கூடாது என்பதை எல்லாம் அப்பனே பின் யான் கணித்து அப்பனே பின் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே
நிச்சயம் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால் அப்பனே நீங்கள் பின் அதாவது உங்களை நீங்களே வெல்லலாம் என்பேன் அப்பனே
உங்களை வென்றிட்டு அப்பனே பின் அனைத்தும் செய்யலாம் என்பேன். அப்பனே
அதனால் அப்பனே பிரம்மா பின் வாழ்க்கையை உங்களிடத்திலே கொடுத்து விட்டான் என்பேன் அப்பனே
ஆனால் சரியாக நீங்கள் உபயோகிக்கவில்லை என்பேன். அப்பனே
அவ் உபயோகிக்காதது தான் ஆனாலும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே விதி ஒன்று பிரம்மா ஏதாவது எதை என்று அறிய அறிய அதாவது எழுதி எதை என்று அறிய அறிய இதன் தத்துவத்தை கூட விளக்குகின்றேன் அப்பனே
ஆனாலும் அப்பனே நீங்கள் என்ன தவறு செய்கின்றீர்களோ?? அதற்கு தகுந்தார் போல் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே மாறும் என்பேன் அப்பனே... எதை என்று அறிய அறிய தானாகவே எழுதிக் கொண்டே வரும் என்பேன் அப்பனே
ஆனாலும் அவையும் அழியாதப்பா
நீ என்ன செய்கின்றாயோ?? அதற்கு தண்டனைகள் அப்பனே அதையும் கூட அப்படியே பின் காலங்களில் வரும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே தத்துவங்கள் மனிதனுடைய தத்துவங்கள் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே
பின் கால்கள் ஏன் நடக்கின்றது???
அப்பனே யாராவது?? எவை என்று யாராவது?? அப்பனே பின் புரிந்து எவை என்று கூட தெரிந்து கொண்டீர்களா
அப்பனே கைகள் ஏன் அசைகின்றது???
பின் எவை என்று கூறிய புரிய கண்கள் ஏன் அப்பனே ஏன் அசைகின்றது...
ஏன் சுவாசிக்க பின் ஏன் சுவாசத்தின் போது???
பற்கள் பின் ஏன் பேசுகின்ற பொழுது எதனால்?? என்பதை யாராவது யாருக்காவது பின் தெரிகின்றதா??? அப்பனே
(மனிதர்கள் உடல் உறுப்புக்கள் அசையும் இயங்கும் அனைத்து ஆற்றல்கள் எங்கிருந்து எப்படி எதனால் என்பதை குருநாதர் வரும் காலங்களில் வாக்குகளை நமக்கு உபதேசம் செய்வார்)
அத்தனை ஆற்றல்களையும் யான் வருங்காலத்தில் சொல்வேன் அப்பனே
இத்திருத்தலத்தை பற்றி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பல பல முன்னோர்களில் ஞானியர்களையும் உருவாக்கியது என்பேன்!!!
இங்குள்ள ஈசன் என்பேன் அப்பனே பரிபூரணமாக இவ் அம்பாளும் கூட பல ஞானிகளுக்கும் அருள்கள் கொடுத்து அப்பனே அப்பொழுதெல்லாம் பின் முன்னொரு காலத்தில் இங்கெல்லாம் வந்து தவங்கள் செய்து செய்து அப்பனே பின் எதை என்று கூட கர்மத்தை போக்கிக் கொண்டு அப்பனே உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பேன்...அப்பனே....
ஆனாலும் காலப்போக்கில் அப்பனே... அவர்கள் பிள்ளைகள் பின் வணங்காமல் வணங்குவதே இல்லை அவ்வாறு வணங்காமல் இருந்ததனால் தான் அப்பனே அழிவு நிலைக்கு பின் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே
இத் திருத்தலத்தில்அப்பனே பல அதிசயங்கள் உள்ளது என்பேன் அப்பனே... வரும் காலத்தில் உரைப்பேன் அப்பனே... நல் முறைகளாக ஆசிகள் அப்பனே
பின் எதை என்று அறிய அறிய பலவகையிலும் இன்னும் அப்பனே எவை என்று கூற இன்னல்கள் மழை வெள்ளம் எவை என்று அறிய அறிய இன்னும் ரத்த மழை... இன்னும் எவை என்று புரியப் புரிய அப்பனே கடல் அப்பனே அப்படியே பின் ஊருக்குள் வந்துவிடுவது (சுனாமி).. அப்பனே இன்னும் செல்கள் எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே புதிய புதிய நோய்கள் உருவாகி கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே மனிதர்களை அழிக்க!!
பின் திருந்துங்கள் என்பேன் அப்பனே!!!
பல பல திருத்தலங்களில் எவை என்று கூற சக்திகள் இருக்கின்றது என்பேன் அப்பனே... அங்கு சென்றால் அப்பனே அவ் அவ் சக்திகள் உங்கள் உள்ளுக்குள் புகுந்து அதாவது உடம்புக்குள் செல்லும் பொழுது அப்பனே பின் உங்களை பின் இரும்பு போல் ஆக்கிவிடும் என்பேன் அப்பனே
ஆசிகள்!!! ஆசிகள் இன்னும் விளக்குகின்றேன் என் பக்தர்களுக்கு !!!
ஆசிகள் ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!
முன்னேசுவரம் அல்லது முன்னேச்சரம் (Munneswaram) இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும்.[சான்று தேவை] மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகீசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில், வடமேல் மாகாணத்தில் - புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது முன்னேஸ்வரம். காலத்தால் முந்தையவர் எனும் பெருமையை உடைய ஈசன் கோயில் கொண்டிருப்பதால், `முன்னை ஈஸ்வரம்’ எனும் திருப்பெயர் கொண்டதாம் இந்தத் தலம். அதேபோல், இங்குள்ள ஈஸ்வரனுக்கு `முன்னை நாத சுவாமி’ என்பது திருநாமம். அம்பிகைக்கு வடிவாம்பிகை என்பது திருநாமம்.
ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய ஈசனின் சந்நிதியைத் தரிசிக்கலாம். சந்நிதியில் ஈசன் சதுர வடிவ ஆவுடையாருடன் அருள்கிறார். இவரைத் தரிசிக்க மதபேதம் இன்றி மக்கள் வந்து செல்கின்றனர். ஈசனுக்குப் பழங்களும் பொருள்களும் வாங்கி வந்து சமர்ப்பிக்கின்றனர்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி அகத்தியர் ஐயா, நன்றி அக்னிலிங்கம் ஐயா.. ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete🙏
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்
ReplyDeleteஆதி ஈசனின் முதல் சட்டம்!! மாமிசம் , அசைவம் உண்பவர்களுக்கு அகத்திய மாமுனிவரின் கடைசி எச்சரிக்கை!!!!!
https://youtu.be/zieUM_v9yUg
அகத்திய மாமுனிவர் அடியவர்கள் அனைவரும் இந்த YouTube தளத்தில் உங்களை இனைத்துக்கொள்ளுங்கள். அனைத்து அடியவர்களுக்கும் தெரிவித்து இந்த YouTube தளத்தில் இனைய வையுங்கள். உலகெங்கிலும் இந்த வாக்குகள் சென்று அடைய வேண்டும். உங்கள் உதவி மிக அவசியம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete