​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 27 August 2024

சித்தன் அருள் - 1668 - அன்புடன் அகத்தியர் - காசி மீர்காட் கங்கை கரை!








25/8/2024  அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.மீர்காட்.கங்கை கரை.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே இவ்வுலகம் அப்பனே அழிவை நோக்கி சென்று கொண்டே இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே யாங்கள் உணர்த்திக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை எப்படி தடுப்பது ?? என்பதை எல்லாம் அப்பனே... ஆனாலும் அப்பனே மனிதனின் செயல்கள் இன்னும் இன்னும் அழிவுக்குத் தான் கொண்டு போய் கொண்டே இருக்கின்றான் அப்பனே 

ஆனாலும் அப்பனே சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை 

அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்...

அப்பனே தீர விசாரித்து அனைத்தையும் கூட அப்பனே நன்கு கற்று வாழ வேண்டும் அப்பனே 

அப்பொழுதுதான் அப்பனே கஷ்டங்கள் அப்பனே நிச்சயம் நீங்கும் அப்பா... பின் தெரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே பின் கஷ்டங்கள் நீங்க போவதில்லை... அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து அப்பனே வந்து வந்து என்ன லாபம்??? அப்பா!!

அதனால் இப் பிறப்பிலே அப்பனே பின் என் பக்தர்களும் கூட அப்பனே நல்முறையாகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் கடைப்பிடித்தாலே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா

அப்பனே சித்தர்கள் வழியில் வருவதற்கும் அப்பனே சில புண்ணியங்கள் அதாவது அப்பனே யாங்கள் சொல்லிய அனைத்தும் பின் செய்வதற்கும் அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே 

ஆனால் சில பேரிடம் புண்ணியங்கள் இல்லை அப்பா!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் சில கர்மத்தை அதாவது சில பாவங்களை நீக்கி அப்பனே அவர்களுக்கும் கூட புரியும் வண்ணம் அப்பனே யாங்களே புகுத்தி ஏனென்றால் அப்பனே பின் அப்பனே உன்னை நம்பி பின் அப்பனே  எவை என்று அறிய அறிய மனைவி மக்கள் இன்னும் அப்பனே பின் நம்பி அவற்றிற்கெல்லாம் அப்பனே துரோகம் நினைத்தாலும் அப்பனே நிச்சயம் அப்பனே என்ன லாபம்???

அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து அப்பனே கஷ்டங்கள் பட்டு நோய்வாய் பட்டு அப்பனே இதனால் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

அப்பனே எந்தனை வணங்கினாலும் பூஜைகள் செய்தாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யான் அதாவது கஷ்டத்தில் உள்ளோர்களை எல்லாம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

ஆனால் தெரிவதில்லையப்பா!! உண்மை நிலை தெரிவதில்லையப்பா!!

அவ் உண்மை நிலை அப்பனே பல வகையிலும் கூட அப்பனே நல்விதமாகவே சுவடிகளில் கூட  யாங்கள் அழகாக அதாவது பல பல ஞானிகள் ரிஷிகள் அப்பனே முனிவர்கள் அப்பனே இன்னும் தேவர்கள் அப்பனே அழகாகவே எழுதி வைத்தனர். 

ஆனாலும் அப்பனே இவற்றையெல்லாம் பின் கற்றுக் கொண்டால் மனிதன் பின் நல்முறையாக வாழ்ந்திட்டு பின் நல் முறையாகவே சென்றிடுவான் என்றெல்லாம் அப்பனே பின் அதாவது பின் நல்முறையாகவே அப்பனே பின் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்திடுவான் என்றெல்லாம் அப்பனே சில தீயவர்கள் சில பக்திமான்களே அப்பனே பின் நாம் தான் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே அவையெல்லாம் அழித்து விட்டனர் என்பேன் அப்பனே 

அவையெல்லாம் கலியுகத்தில் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே...

பார்ப்போம் அப்பனே எப்படி எவை என்று அறிய அறிய அப்பனே என்றெல்லாம் அப்பனே இன்னும் அப்பனே பின் அரச சபைக்கெல்லாம் அப்பனே பின் எங்கள் நூல்களை எடுத்துச் செல்வோம் அப்பனே!!!

எப்படி ? யாரை? பின் உபயோகிப்பது என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் குறிக்கோளுடன்... குறிக்கோளோடு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் நீங்கள் கேட்டாலும் பின் எவை என்று அறிய அறிய கேட்காவிடிலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே யாங்கள் உலகம் முழுக்க அப்பனே என்னுடைய சுவடியை யானே எடுத்துச் செல்வேன் அப்பனே 

இதனால் அப்பனே எப்படி மாற்றுவது??? யார் மூலம்??? எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே இப்பொழுது பக்தி என்பதை கூட அப்பனே பின் காசுகளுக்காகவே என்பேன் அப்பனே!!!

பின் போட்டி பொறாமைகளுக்காகவே...யான் பெரியவன் அவன் சிறியவன் என்னிடம் உண்டு அவனிடம் இல்லை என்றெல்லாம் அப்பனே இன்னும் வேடத்தை அணிந்து கொண்டு இன்னும் எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே உண்மையானவனாக இல்லை இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே எதை எதையோ செய்து விட்டு ஈசனை வணங்கினாலும் மீண்டும் ஈசன் அப்பனே பின் அடியோடு தண்டனைகள் கொடுப்பான் என்பேன் அப்பனே 

ஏன் !?? எதற்கு?? தெரிந்து வாழுங்கள் தெரிந்து வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் எதற்காக அப்பனே எவை என்று அறிய அறிய.... அதாவது புரட்டாதி திங்களில் அப்பனே முன்னோர்களுக்கு வழிபாடு..

அப்பனே எதை என்று கூற அடுத்தடுத்து வரும் நவராத்திரி என்றெல்லாம் அப்பனே யாருக்காவது தெரியுமா?? என்றால் அப்பனே பின் யாருக்கும் தெரியாதப்பா 

ஆனால் அப்பனே ஏதோ கொண்டாடுகின்றோம் என்றெல்லாம் அப்பனே கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

(சித்தன் அருள் 1533 மானசாதேவி ஆலய வாக்கு ஹரிதுவார் .
சித்தன் அருள் 1461

இந்த வாக்கில் நவராத்திரியை ஏன் கொண்டாடுகிறோம் 

புரட்டாசி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யும் பொழுது அவர்கள் மகிழ்ந்து தேவியை இல்லத்திற்கு அழைத்து வருவார்கள்
முன்னோர்கள் வருகை 

கொலு பொம்மைகள் குறித்து

என குருநாதர் மானசா தேவி ஆலய வாக்கில் ஏற்கனவே உபதேசம் செய்திருக்கின்றார்)

எவை என்று அறிய அறிய இதனால் முதலிலே வருவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய கேதுவானவன் என்பேன் அப்பனே 

அதாவது பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் இவ் ஆவணி திங்களிலே அப்பனே எவை என்று அறிய அறிய கேது... அதாவது இவ் கிரகமானது அப்பனே பின் பல வகையான இன்னல்களை ஏற்படுத்த எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் செல்களை உமிழும் அப்பா அதாவது பின் மேலிருந்து கீழே கொட்டும் அப்பா..

எதை என்று கூற ஆனாலும் இவை தன் பின் கண்களுக்கு தென்படாதது. 

ஆனாலும் அப்பனே எங்கு தென்படும் என்பதையெல்லாம் அப்பனே ஆராய்ந்து அறிந்தும் கூட அப்பனே யானே சொல்கின்றேன் அப்பனே 

அறிந்து விட்டேன் யான். ஆனாலும் இப்பொழுது சொன்னால் அப்பனே ஆனாலும் முதலிலே அதாவது முதல் வகுப்பில் இருந்து வந்தால் தான் அப்பனே புரியும் அப்பா தெரியுமப்பா!!!! அனைத்தும் கூட 

இதனால் அப்பனே ஆவணி திங்களிலே இதனால் அப்பனே நிச்சயம் பிள்ளையோனை (கணபதி வழிபாடு) வணங்கும் பொழுது அப்பனே அதாவது பின் பிள்ளையோனுக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே...அக் கிரகத்தை கட்டுப்படுத்தும்... ராகு கேதுக்களை கட்டுப்படுத்துவதற்கு தகுதியானவன் பின் எதை என்று அறிய அறிய...பிள்ளையோனே!!!!!

இதற்காகத்தான் அப்பனே மறைமுகமாக உண்மை எவை என்று கூட முகத்தை காண்பிக்கவில்லை பின் அதாவது பின் ஞான கங் கணபதியோனின் பின் உண்மை முகத்தைக் கூட!!!

இதனால் பின் மறைத்தே வைத்துள்ளான்.. அவன் முகத்தைக் கூட!!!

(கணபதி தன் உண்மையான ஞான முகத்தை மறைத்து யானை முகம் கொண்டுள்ளதை குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார்) 

இதனால் பின் யானை முகத்தோனே.... அப்பனே இதனால் முதலில் அப்பனே பின் இதையெல்லாம் எப்படி என்று ஞானிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய.. அவ்வையார் எதை என்று அறிய அறிய பின் இவந்தனை பாடி துதித்து வந்தாலே அறிந்தும் கூட அதாவது அப்பனே அதாவது தமிழ் எழுத்துக்கள் எதை என்று அறிந்தும் கூட அப்பனே 

அதாவது சீதக்களப செந்தா  மரைபூம்... என்று கூட அப்பனே பாடல்களை

(அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல்) 

எதை என்று அறிய அறிய பாடிக் கொண்டே விநாயகப் பெருமானை துதித்துக் கொண்டே அப்பனே இருந்தால் அப்பனே... உடம்பில் உள்ள சில சில செல்களும் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய அதிரும் அப்பா

இதனால் அவ் செல்களில் வரும்பொழுது இவையும் கூட எந்த அதிரும் பொழுது அப்பனே நிச்சயம் மேல் மீண்டும் அப்பனே பின் மேலே(கேதுவின் செல்கள்) அப்பனே அவை தன் உடம்பிற்குள் பின் செல்லாதப்பா !!

(அதாவது கேது கிரகத்திலிருந்து கொட்டும் செல்கள் மனித உடம்புக்குள் செல்லாமல் தடுப்பதற்கு விநாயகர் அகவல் படித்து விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வரும் பொழுது உடலில் உள்ள செல்கள் அதிரும்!!

கேதுவின் செல்களோடு மோதிக் கொள்ளும் பொழுது கேதுவின் செல்கள் தடுக்கப்படும் திசை மாறி சென்று விடும். இதனால் ராகு கேதுக்களின் தாக்கம் ஏற்படாது)

இவைதன் கூட ஆடும் பொழுது அப்பனே அதற்கு தகுந்தார் போல் அப்பனே இடிக்கும் அப்பா 

இதனால் அப்பனே அது நிச்சயம் திசை மாறி சென்று விடும் அப்பா..

ஆனாலும் அப்பனே இதைக் கூட தெரிவதில்லை!!!

ஏன் பின் (விநாயகர்) சதுர்த்தியை கொண்டாடுகின்றோம்? என்றெல்லாம்!!.....அப்பனே

அப்பனே இதனால் நன் முறைகளாகவே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே ஒவ்வொரு இறைவனுக்கும் எதை என்று அறிய அறிய 

இறைவன் ஒன்றே!!!

ஆனாலும் அப்பனே பின் அவதாரங்கள் அப்பனே பின் இப்படி எடுத்தால் நன்று!!

 பின் மக்களை காப்பாற்றலாம் என்றெல்லாம் அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய... இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே 

அனைத்து ஞானிகள் பற்றியும் யான் சொல்வேன் அப்பனே 

அறிந்தும் கூட பின் அதாவது பக்தர்கள் தெரிந்து கொண்டு அறிந்து கொண்டு அப்பனே பின் அவர்கள் பிள்ளைகளும் கூட மனைவிகளும் கூட பின் சிறப்பாக வாழ வேண்டும் அப்பனே 

இன்னும் அப்பனே பின் அவர்கள் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே இன்னும் இன்னும் சித்தர்களும் வாக்குரைப்பார்கள் என்பேன் அப்பனே

அப்பனே பின் அனைவரையும் கூட அதனால்தான் (விநாயகர்) அகவலை படிக்கச் சொன்னேன் அப்பனே 

அவ் அகவலை படித்தாலே போதுமானதப்பா!!

உடம்பில் உள்ள செல்கள் அப்பனே அப்படியே பின் ஆடும் பொழுது அப்பனே அவையும் வந்து அப்பனே தாக்காதப்பா!!

அப்பனே அப்படி அமைதியாக இருக்கும் பொழுது அவை வந்து தாக்கும் பொழுது (உடம்பிற்குள்) உள் நுழைந்து விடும் என்பேன் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய மீண்டும் குழப்பங்கள் அப்பனே சண்டைகள் இல்லத்தில் கூட ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுதல் அப்படி ஒருவருக்கொருவருக்கு அப்பனே புரிதல் இல்லாமை நிகழும் அப்பா 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

தெரியாமல் பின் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே 

தெரிந்து கொண்டு அப்பனே வணங்குங்கள் அப்பனே 

இவையெல்லாம் அப்பனே ஏற்கனவே யாங்கள் எழுதி வைத்தது தான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே 

ஆனாலும் பின் எங்களுடைய அப்பனே வாக்குகள் அப்பனே அறிந்தும் கூட மீண்டும் உலகத்திற்கு கொண்டு சென்று அப்பனே வரும் கலியுகத்தில் அப்பனே நிலையான வாழ்க்கையை கூட அதாவது கலியினை வென்றிட வேண்டும் அப்பனே என்பதற்கிணங்க அப்பனே பின் அனைவருமே எந்தனுக்கு பிள்ளைகள் தான் அப்பா 

இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது சதுர்த்தி 

அப்பனே இதனால் தான் அப்பா பின் விநாயகப் பெருமானே அறிந்தும் கூட இதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது இவ் மாதத்தில் முழுவதும் கூட பின் அறிந்தும் கூட பின் ஏதோ ஒன்றை பாடி விடுகின்றோம் என்று தான் அப்பனே பாடி அப்பனே ஆனாலும் அவர்கள் எல்லாம் தவங்கள் செய்து தான் அப்பனே இயற்றி உள்ளார்கள் என்பேன் அப்பனே 

(பதிகங்களும் பாசுரங்களும் சாதாரணமாக இறைவன் மீது பாடவில்லை தவங்கள் இயற்றி உணர்ந்துதான் பாடியுள்ளார்கள் ஞானியர்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் புலவர்கள் பாணர்கள் பக்திமான்கள்)

இதை பாடினாலே போதுமானதப்பா

அப்பனே சில செல்கள் அப்பனே பின் தாக்காதப்பா 

ராகு கேதுக்கள் உடைய செல்கள் அப்பனே இவ் ஆவணி திங்களிலே அப்பனே அதிகம் அப்பா அப்பனே 

எதை என்று புரிய புரிய அப்பனே பின் பத்திரமாக அப்பனே பிள்ளையோனை கூட இல்லத்திலும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய 

ஆனாலும் இப்பொழுதெல்லாம் மாற்று வழியில் உள்ளதப்பா எதை எதையோ!!!!??????

(உண்மையான விநாயகர் சதுர்த்தி தத்துவத்தினை உணராமல் செயற்கை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகள் உண்மை பக்தி நோக்கம் இல்லாமல் ஆட்டம் பாட்டம் என திசை மாறி எதையெதையோ செய்து வருகின்றார்கள்)

ஆனாலும் யாங்கள் அதனையும் கூட அப்பனே பின் யார் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் உரியதாக எடுத்துச் சென்று அப்பனே அறிந்தும் கூட இதனால்... அப்பனே பின் இவை எவை என்று அறிய அறிய இவ்வாறு பின் அனுப்பும் பொழுது(ஆத்மாக்களின் அணுக்களை திருப்பி அனுப்புதல்) எதை என்று அறிய அறிய அப்பனே 

இதனால் அப்பனே இவையெல்லாம் அறிந்தும் கூட அப்படியே அனுப்புகின்ற பொழுது அப்பனே இவை என்று அறிய அறிய ஆனாலும் அத்துகள்களுக்கும் அதாவது அச்செல்களுக்கும்...இவ் உடல் பகுதிகளுக்கும் கூட அப்பனே ஏன் எதற்கு அப்பனே எவை என்று அறிய அறிய 

ஆனாலும் அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் இறந்து எவை என்று அறிய அறிய அப்பனே இவ் செல்கள் அப்பனே எங்கு செல்கின்றது என்றால் அப்பனே பின் நேரடியாக அதாவது கேதுவின் கிரகத்திற்கே சென்று விடுகின்றது என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே சில சில பின் கடல் நீரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் அப்பா இவ் ஆவணி திங்களிலே... இதனால்தான் அப்பனே எவை என்று அறிய... கேதுவின் துகள்கள் பின் மீண்டும் அப்பனே எவை என்று கூட பின் அதாவது நீரில் அப்பனே சக்திகள் ஆனாலும் இதற்கும் பதில் அளிக்கின்றேன் அப்பனே 

அதாவது அப்பனே ஊடுருவி விடும் அப்பா ஆனாலும் இவ்வாறு தடுத்து விட்டால் அப்பனே மீண்டும் அப்பனே பின் அங்கங்கு போய்விடும் அப்பா.. பின் அச் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

பின் செல்களாக துகள்களாக இன்னும் அப்பனே அறிந்தும் கூட 

ஆனாலும் அப்பனே இதற்கு தகுந்தார் போல் எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது மஹாளய பட்சை ..

(புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷை அமாவாசை)

பின். அறிந்தும் அறிந்தும் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் இவற்றையெல்லாம் அப்பனே அதாவது முன்பே..(ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் உரைத்து விட்டார்)

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ஒன்பது நாட்கள் (நவராத்திரி) என்பதெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திருந்தேன் அப்பனே 

(அனைவரும் மானசாதேவி ஆலய வாக்கினை மீண்டும் ஒரு முறை படித்து உணர்ந்து கொள்ளவும் சித்தன் அருள் 15 33) 

இவை தன் இணங்க அப்பனே பின் (நவராத்திரியில்)ஒவ்வொரு நாளுக்கும் கூட அப்பனே முதலில் பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நல்விதமாக சூரியனுக்கும் அப்பனே பின் சந்திரனுக்கும் அப்பனே நல்ல விதமாகவே அறிந்தும் கூட அப்பனே பின் குருவினுக்கும் அப்பனே ராகுவானவனுக்கும் அப்பனே இன்னும் அப்பனே புதன் ஆனவனுக்கும் அப்பனே இன்னும் அறிந்தும் கூட சுக்கிரனுக்கும் அப்பனே கேதுவானவனுக்கும் அப்பனே பின் சனியவனுக்கும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய செவ்வாய்க்கும் இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே மறைமுகமான கிரகங்கள் கூட அப்பனே 

அப்பனே (கிரகங்கள்) 9 என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே கூட!!!!

அப்பனே இன்னும்இரண்டு அப்பனே கண்ணுக்கு அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட  ராகு கேது கண்ணுக்குத் தெரியாது என்று

ஆனாலும் அப்பனே இன்னும் இரண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பிற்பகுதி யான் உரைக்கின்றேன் அப்பனே 

இதனால் அப்பனே அவ்வவ் கிரகத்திற்கு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அதாவது சனீஸ்வரனுக்கு அப்பனே எவை என்று கூட பின் அதாவது இன்னும் சூரியனுக்கு எவை என்று அறிய அப்பனே... தானியங்கள் எல்லாம் இருக்கின்றதப்பா இவையெல்லாம் அப்பனே பின் புரட்டாதி... அதாவது அப்பனே பின் அமாவாசை முன்னே அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது இல்லத்திலே அப்பனே அதாவது பின் கடல் எதை என்று கூட பின் அங்கிருந்து உப்பை எடுத்து கொண்டு அப்பனே நல்விதமாக அப்பனே பின் இல்லத்தில் வைத்து அப்பனே பின் சூரியனுக்கு என்ன தானியங்கள் என்று அப்பனே ஒவ்வொரு நாளும் இட வேண்டும் அப்பனே மற்றொரு நாள் சந்திரனுக்கு இவ்வாறாக அப்பனே பின் நவ (கிரகங்களுக்கும்) அறிந்தும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே நல்விதமாக நவகிரகங்களுக்கு தானியங்கள்

(நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது வகை தானியங்களைத்தான் நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.

கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்

நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.

கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும்.

மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். 

குருநாதர் நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன் உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)

அப்பனே இவ்வாறாக இட்டுக் கொண்டே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும் சந்திரனை நமஸ்கரித்தும் அப்பனே ஏன் எதற்கு அப்பனே சூரியனை  அப்பனே எவை என்று கூட???

பின் சூரியனில் உள்ள எவை என்று அறிய அறிய பலமும் கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் இவ் திங்களில் (மாதத்தில்) பின் சந்திரனின் கூட!!!!!(பலம்)

இதனால் அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு அமாவாசையில் அப்பனே பின் நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!

இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!

அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...

கடலுக்கு அப்பனே பின் அறிந்தும் கூட அடியில் ஓரிடம் இருக்கின்றது என்பேன் அப்பனே அங்கு பின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே சக்திகள் வெளிக்கொண்டே வரும் அப்பா 

(நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கடலுக்கு உள்ளே ஆழத்திலிருந்து ஒரு சக்தி உருவாகி மேலே வருகின்றது என்று குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார் சித்தன் அருள் நல்லூர் கந்தசாமி சித்தன் அருள் 1660 ல்)

அப்பனே அவ் சக்தி அதிகமானால் இன்னும் வெடிக்கும் அப்பா அறிந்தும் கூட 

அதனால் சமநிலைப்படுத்த வேண்டும் அப்பனே 

அவையெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய வாக்குகள் செப்பினால் தான் உங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இவ்வாறாக இருந்து அப்பனே பின் பரிசுத்தமாக இதனால் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அனைத்து கிரகங்களுக்கும் செல்லும் அப்பா 

அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெரியாதப்பா 

இதனால்தான் அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே... அங்கொன்று சொல்கின்றான் இங்கு ஒன்று சொல்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் என்பேன் அப்பனே...

அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பொழுது தான் உங்களுக்கு தெரியும் அப்பா பல ரகசியங்கள் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வாறு பின் முன்னோர்கள் ஆன்மா பரிசுத்தம் அடையும் பொழுது தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் நவராத்திரி அறிந்தும் கூட அப்பனே பின் உணர்ந்து உணர்ந்து கூட 

இதனால் அப்பனே நிச்சயம் அதாவது தேவிகளுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு நாளும் (நவராத்திரியில் நவ தேவிகள்) என்னென்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக செப்பி உள்ளேன் என்பேன் அப்பனே!!

(சித்தன் அருள் 1461.

அம்பாளை !!!

(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)

(சித்தன் அருள் நவராத்திரி வாக்கு 1190. சித்தன் அருள் 1225 

மிக முக்கியமாக சித்தன் அருள் 14 61 இதை முக்கியமாக படிக்கவும் குருநாதர் நவராத்திரி தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாக்குகளில் கூறியுள்ளார் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும் கூகுள் வலைதளத்தில் சித்தன் அருள்  இந்த எண்களை டைப்பிங் செய்து பார்த்தால் அந்த வாக்குகள் வரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்)

இவை எல்லாம் அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே இதனால் பூசைகள் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய

இரும்பு சார்ந்த அப்பனே புத்தகங்கள் சார்ந்த அனைத்திற்கும் கூட

(சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் ஆயுத பூஜை துர்கா பூஜை அன்று இரும்பு சாதனங்கள்)

மேலிருந்து அப்பனே பின் ஒரு வரி அதாவது பின் ஒரு வரியானது (கோடானது) பின் எவை என்று கூட

அப்பனே அதாவது எதை என்று கூட பின் மின்சாரத்தின் உள்ளே அப்பனே சிறு கம்பிகள்(சிறு கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதைப் போல மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு கதிர்வீச்சு கோடுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது) அதேபோலத்தான் அப்பனே பின் அனைத்திற்கும் கூட மேலிருந்து வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

(மேலிருந்து வரும் கோடு பற்றி திருவண்ணாமலையில் சித்தன் அருள் 1188 ல் வாக்குகளில் உரைத்துள்ளார் நம் குருநாதர்)

இவை சரியாக வீழ்ந்தால்தான் அப்பனே மனிதனால் ஒழுங்காக வாழ முடியும் அப்பா 

அப்பனே இதனால்தான் எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் கூட அப்பனே முன்னோர்களின் தாக்கங்கள் கூட அப்பனே பின் தாக்க கூடாது... அதை விட்டு விலகி இருக்க வேண்டும். 

எப்படி விலகி இருக்க வேண்டும்??? எப்படி விலகி இருக்க முடியும்???

அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா 

அப்பனே விலகி இருக்கலாம் அப்பனே. 

விலகி இருந்தால் தான் அப்பனே உங்களுக்கு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே 

அப்பனே அப்படி இல்லை என்றால் ஒன்றும் கிட்டாதப்பா 

இதனால்தான் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே பின்பு நல்ல விதமாக அம்பாளை எவை என்று அறிய அறிய ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அப்பனே ஒவ்வொரு கிரகத்தின் அதிபதியான அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வணங்கி வருதல்

(சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்) ஆஞ்சநேயர்.
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்)

ஏன் எதற்கு என்று கூட அப்பனே சிறப்பு சூரியனின் அப்பனே பின் மனைவிகள் அப்பனே எதை என்று அறிய அறிய 

(சூரியனின் மனைவிகள் சாயாதேவி சந்தியா சரண்யா உஷா) 

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய 

இதனால் ஒவ்வொரு நாளும் மீண்டும் அப்பனே எவை என்று கூட சூரியனையும் சந்திரனையும் நினைத்து ஒவ்வொரு நாளும் கூட நவகிரகங்களை முறையாகவே ஒவ்வொரு நாளும் கூட அப்பனே பின் சூரியனுக்கு என்ன படைக்க வேண்டும்??? சந்திரனுக்கு என்ன படைக்க வேண்டும்??? என்றெல்லாம் அம்பாளிடம் படைத்து அப்பனே பின்பு அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நல்விதமாகவே அப்பனே அவற்றிற்கெல்லாம் படைத்தால் அப்பனே தேவை என்று கூட மகிழ்வார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய முன்னோர்கள் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே எவை என்று கூட அப்படியே அப்பனே அவர்களும் கூட அதாவது அவ் முன்னோர்களின் ஆத்மாக்கள் கூட சந்தோஷம் அடைந்து விடும் என்பேன் அப்பனே 

இவ் சந்தோசத்தை அப்பனே பின் ஆத்மாக்கள் அடைந்து விட்டு பின் இங்கேயே இருந்து விடலாம் என்று எண்ணுவார்கள் என்பேன் அப்பனே அப்பனே... இதனால் அப்பனே என்ன லாபம்??

(இவர்களை அதாவது ஆத்மாக்களை நமது வீட்டில் இருக்கும் நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களின் செல்களை மீண்டும் அனுப்புவதற்கு ஐப்பசி திங்களில் பச்சை கற்பூரம் இட்டு நதிகளில் நீராட வேண்டும்.. துலாஸ்நானம்) முன்னோர்களின் ஆத்மாக்கள் மீண்டும் மேலே செல்லும் கார்த்திகை மாதத்தில் முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து இறைவன் எனும் காந்தகத்தில் ஆத்மாக்களை முக்தி மோக்ஷம் அடைவதற்கு காந்தகத்தில் ஒட்ட வைப்பதற்கு முருகன் செயல்படுவார் மார்கழி மாதத்தில் ஆத்மாக்களுக்கு இறுதி தீர்ப்பு ஏற்படும். மேலே ஒட்ட முடியாமல் கீழே விழும் ஆத்மாக்களுக்கு மீண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து மீண்டும் மேலே அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் கூறியிருக்கின்றார் இங்கு அதை நினைவு படுத்துகின்றோம்)

இதனால்தான் அப்பனே தற்பொழுது நிலைமைகள் எல்லாம் பின் எதை என்று கூற பட்டாசு என்கின்றார்களே அவை தான் அப்பனே வெடிப்பார்கள் என்பேன். அப்பனே!!

(ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ரகசியம்) 

அதை வெடிப்பதற்கும் கூட இதற்கும் கூட (தங்கியிருக்கும் ஆத்மாக்கள்) அப்பனே மீண்டும் அதை பின் எவை என்று கூட பின் திருப்பி செல்லும் அப்பா 

அப்பனே அறியாமல் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமலும் வணங்கி விடாதீர்கள் என்பேன். அப்பனே 

எவ்வாறு என்பதையும் கூட இதனால் அப்பனே எதை என்று புரியப் புரிய இவ்வாறு எல்லாம் அப்பனே இதனால் அப்பன அதாவது பின் மாதாமாதம் அப்பனே கடலில் நீராட வேண்டும் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே உங்களிடத்தில் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் தானாகவே நீங்களே ஓடோடி விடுவீர்கள் என்பேன் அப்பனே

புண்ணியங்கள் இல்லாமல் இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உங்களால் முடியாத அப்பா 

அப்பனே பின் யாரோ சொல்கின்றார்கள் ஏன் எதற்கு நாம் தன் செய்ய வேண்டும்????? என்றெல்லாம் அப்பனே இப்படித்தான் அப்பனே என் பக்தர்களும் கூட சோம்பேறியாக இருந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே ஆசிகள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் யான் வருவேன் என்பேன் அப்பனே... சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் பின் சதுர்த்தி முடியட்டும் அப்பனே நல்விதமாக பின் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே இன்னும் சில பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே சில பல எதிர்வினைகளும் செயல்பாடுகளும் கூட பின் இல்லத்தில் அவரவர் இல்லத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே 

யான் மறைமுகமாக வந்து அவற்றையெல்லாம் யான் விலக்கத்தான் போகின்றேன்.

அப்பனே நல்விதமாக புரட்டாதி திங்களில் என்பேன் அப்பனே என் பிள்ளைகள் வீட்டிற்கு யான் தேடித்தேடி வருவேன் என்பேன் அப்பனே 

அப்பனே யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அனைவரையும் கூட 

இதனால்தான் அப்பனே புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு வாழுங்கள்... ஒவ்வொருவருக்கும் கூட எதை என்று அறிய அறிய நிச்சயம் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே இச் சுவடியையும் கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்பேன் அப்பனே 

பின் முடிந்தால் அப்பனே இதில் வந்தால் எதை என்று அறிய அறிய அப்பனே உங்களாலும் படிக்க எவை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் புண்ணியங்கள் தேவை 

எவை என்று கூட புண்ணியங்கள் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்பனே நல்விதமாகவே யானே வருவேன் என்பேன் அப்பனே பின் உங்கள் இல்லத்திற்கு கூட அப்பனே

எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லை என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அன்பை மட்டும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அனைவரின் இல்லத்திற்கும் யான் புரட்டாசி திங்களில் அனைவருக்குமே ஆசிகள் உண்டு... ஏற்றங்கள் உண்டு அப்பனே நல்விதமாக வாக்குகளும் உண்டு என்பேன் அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே 

ஏனென்றால் உலகம் அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே அதை எப்படி பின் காப்பாற்ற யாங்கள் யோசித்து அதனால்தான் அப்பனே பின் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவோம் என்பேன் அப்பனே 

சரியாகவே அப்பனே நல்முறையாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே 

பின் ஆசீர்வாதங்கள் ஆசிர்வாதங்கள் அப்பா 

சொல்லிவிட்டேன் அப்பனே இதை செய்திட்டு எவை என்று அறிய அறிய மீண்டும் வாக்குகள் செப்புவேன் அப்பனே நல்முறையாக அங்கங்கு வந்து என் பக்தர்களை பின் சீராட்டி அப்பனே நல்விதப்படுத்தி உயர்த்தி வைப்பேன் அப்பனே 

நல்லாசிகள்!! நல்லாசிகள்!!

அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல்.

விநாயகர் அகவல்
விநாயகர் அகவல் - ஔவையார் அருளியது
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன. 
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்து

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. வணக்கம் அக்னிலிங்கம் ஐயா, குருநாதர் உரைத்த நவராத்திரி நவதானியம் + உப்பு வழிபாடும், அதை அமாவாசை ஆற்றில் கரைத்தல் குறித்து தனியாக ஒரு பதிவு போடுமாற வேண்டுகிறேன் 🙏 நன்றி.

    ReplyDelete
  2. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    சித்தன் அருள் - 1668 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - காசி மீர்காட் கங்கை கரை!

    ஆவணி முழுவதும் ஏன் விநாயகர் அகவல் படிக்கவேண்டும்? -விஞ்ஞான வாக்கு
    ஆவணி மாதத்தில் ஏன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றோம்?

    https://www.youtube.com/watch?v=1GOuUF7pqRk


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  3. அப்பா அகத்தியனே அனைவரும் வீட்டுக்கும் நீங்க வர வேண்டும். வருக வருக அருள் வழி காட்டி அருள்க 🙏

    ReplyDelete
  4. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்?

    சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.

    https://www.youtube.com/watch?v=dhnjL-8qcgA

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. Ayya is it possible to post all medicine link guru agastiyar told please

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  7. இறைவா!!!!! நீயே அனைத்தும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    சித்தன் அருள் - 1191 - திருமலை திருப்பதி!

    புரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை , மார்கழி , தை மாத ரகசியங்கள்
    கர்ம வினை நீக்கும் அற்புத ரகசியங்கள் விஞ்ஞான வாக்கு

    YouTube video :--

    https://www.youtube.com/watch?v=5adiVnEF2c0

    அடியவர்கள் இந்த வாக்கை பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே இதன் ரகசியங்களை புரிந்துகொள்ள இயலும். வாருங்கள் அடியவர்களே.


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete