​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 13 August 2024

சித்தன் அருள் - 1661 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வரர் திருக்கோயில். மாதோட்டம்.மன்னார் மாவட்டம்.வடக்கு மாகாணம் ஸ்ரீலங்கா.

 










22/7/2024  அன்று சிவவாக்கியர் சித்தர் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திருக்கேதீஸ்வரம்.கௌரி சமேத திருக்கேதீஸ்வரர் திருக்கோயில். மாதோட்டம்.மன்னார் மாவட்டம்.வடக்கு மாகாணம் ஸ்ரீலங்கா.

உலகாளும் ஈஸ்வரனை பார்வதி தேவியை மனதில் நிறுத்தி ஈகின்றேன் வாக்கியனவனே!!!!!!!!

எண்ணம் சில!!

அறிந்தும் பல!!

 பல இன்னும் பல!!!! உண்மைதனை புரிந்து கொள்ள இயலா!!!!

இயலா!!!... இதை அறிந்து எதை?? இவை என்றும் கூட..சிவ சிவா!!!!

சிவ சிவா!!!! வருவது என்பது அறிந்தும் கூட!!!

உணர்ந்தும் பின்பற்றி அறியாமல் வகைகளையும் எதையென்றும் நிறுத்தி முன்நிறுத்தி வலியுறுத்தி நிறுத்திய பின்

நிற்காதது பின் கடல் போன்றே

அறிந்தும் கூட வந்தது!!

வந்தவை நின்றபின்.....

அறிந்தும் கூட இல்லையே மனிதன்!!!

மனிதன் என்பவன் அறிந்தும் உண்மைதனை இல்லாமல் எவை என்றும் புரியாமலும் 

அறிந்தும் இதை தன் பின்

இறைவா!! இதை என்றும் புரிய பின் புரிய வைத்து பின் நட்புக்கு இலக்கணமாக அறிந்தும் இதை தன் உணர முடியாமல் தவித்தானே மனிதன்!!!

தவித்தானே!!! வருங்காலங்கள் நின்ற பொழுதிலும் கூட அறிந்தும் உண்மைதனை புரியாமல் பின் புரியாமல் வழி நடந்து செல்வார்களே செல்வார்களே!!

பின் நடந்தேறும்!!... பின் நடக்காமல் ஏறும் என்பதையெல்லாம் வழிநிறுத்தி இதை அறிந்து மனதில் நிறுத்தி கொள்ளாத அளவிற்கு கூட 

வருத்தங்கள் ஏற்பட்டு எதை என்று புரியாத சித்த தன்மையும் கூட பின் கீழ்நோக்கி அறிந்தும் கூட மானிடன் எதை என்று 

இறைவா எவை என்று புரிய பின் தேவியே உன்னையே நினைத்து பின் மனமுவந்து பின் மானிடனைக் காக்க அவதரிக்க இன்னும் சித்தர்கள் அறிந்தும் இதை தன் புரியாமலும் நின்ற!!

 நின்ற பின் கோலத்தில் நிற்க பின் அனைத்தும்  செய்வாயாக!!

அறிந்தும் இதை தன் மீது ராகு கேது எதை என்று அறிய இவ்பூலோகத்தில் மனிதனை பிடித்து பிடித்து வாட்டும்.

வாட்டும் அளவிற்கு கூட வருத்தங்கள் இவை என்று அறிய அறிய திருத்தலம் திருத்தலமாக மனிதன் ஏறி ஏறி

எதற்காக? ஏறி? ஏறி?

என்று புரியாமல் அலைந்து திரிந்து பின் பொய் என்றானே!!

இறைவா!! அறிந்தும் கூட உனையே பொய் என்றானே!!!

பின் அறிந்தும் எதை என்று கூட இப்படித்தான் மனிதன் பின் செய்து கொண்டிருந்தான் 

செய்து கொண்டு காலங்களாக மாறி மாறி பின் பிழைத்து !!!

 பிழைத்து வருவதற்குள் என்ன லாபம்???

அறியவில்லையே உன்னை!!!

அறிந்தும் பின் பயன்படுத்த முடியவில்லையே!! தெரியவில்லையே!!

என்னவென்று எவை என்று புரிய பின் என்னென்ப அறிந்தும் உண்மை என்ப 

உண்மை என்ப பின் அறிந்தும் 

பின் ஏதும் இல்லை என்ப!!

ஏதும் இல்லை என்ற பின் இறைவா!!!

வணங்கியும் பிரயோஜனமும் இல்லையே மனிதன் அறிந்தும் கூட 

இதை தன் விளக்கங்கள் விளக்கங்கள் எண்ணிலடங்கா 

அடங்கா அறிந்தும் இதை என்று அறிய அறிய பாவி மனிதன் 

உண்மைதனை எடுத்துரைக்க எடுத்துரைக்க இவைதன் புரியாமல் 

புரியாமல் போனாலும் எதற்கெடுத்து புரியாமல் 

புரியாத புதிராகவே வாழ்க்கை 

வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டு மனிதன் நடக்கின்ற பொழுது ஒன்றும் நடக்காது 

இறைவன் செய்தாலும் அறிந்தும் கூட ஏது? ஏது? அறிவது ஏது? பிழைப்பது ஏது?

பின் பிழைக்க முடியாதது ஏது?

பின் பிழைத்தபின் அறிந்தும் கூட பின் பிழைக்க தெரியாதவனுக்கு பின் பிழைப்பித்து இறைவன் பின் வழிநடத்த..... பின் மாற்றங்கள் வருமா???

வருமா? என்பதையெல்லாம் பின் காலம் கடந்து வந்த பின்பே!!

வந்த பின்பே!! நின்ற பொழுது 

அறிந்தும் எதை என்று பின்பற்றி பின்பற்றி வருகின்ற பின் மனிதனுக்கு பின் புத்திகள் அறிந்தும் இதையென்றும் பயன்படுத்த

உண்மைதனை விளக்கங்கள் 

பலவகையிலும்.

பின் பலவகையிலும் அறிந்த பின் பயன்படுத்த பின் தெரியாமல் உண்மைதனை கூட  எடுத்துரைக்காமல் 

ஏது? ஏது? நின்ற பொழுது

அறிந்தும் உண்மைதனை கூட பின் அறியாமல் நின்ற இவை தன் புரியாமல் பின் 

புரியாமல் உண்மைதனை கூட

எடுத்துரைத்த போதிலும் பின் மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பின் உருவாகுமே பின் கடல் போன்று பிரச்சனைகள் வந்து கொண்டே !!

வந்து கொண்டே வந்து கொண்டே நின்ற பொழுது நின்ற பொழுது!!!

இதையன்றி அறிய அறியாத பொழுது அறியாமல் போனால் என்ன லாபம்???

இதையென்றும் குறித்து பின் செல்வாக்கு அவை இவை என்றெல்லாம் பின் பொய் பேசி அதை இதை என்று அறிய 

அறிந்த பின் அனைத்தும் இழப்பானே மனிதன் 

இழந்தபின் தவிப்பானே 

பின் இறைவா என்று ஓடுவானே....

ஓடிய பின் எதை என்று அறிய அறிய படுத்துறங்குவானே

இறைவா அனைத்தும் நீயே என்று 

ஆனால் அனைத்தும் இழந்த பிறகே இறைவன் கண்ணுக்கு தெரிவானே!!!

தெரிந்த பின் என்ன லாபம்??

அறிந்தும் கூட 

அதன் முன்னே பின் தெரிந்த இவை அறிந்தும் பின் அறியும் வண்ணம் பின் இங்கிருந்தே செயல்படுவார்கள் இறைவன் இன்னும் இன்னும் பரிசுத்தமான குருக்களும் இன்னும் ரிஷிமார்களும் பின்  சித்தர்களும் இன்னும் ஏனைய தேவர்களும் கூட இருக்கின்ற தலத்தில்.....

ஆனால் வர முடியவில்லையே ஏன்??? எதற்கு? என்றெல்லாம்!!

இறைவன் ஆசிகள் கிட்ட இன்னும் கிடைக்கவில்லையே பின்...

கிட்டிய பொழுது தான் பின் வருத்தங்கள் நீங்கும்...

பின் அறிந்தும் கூட இவை என்று புரிய இவை என்று அறிய எதை என்று கூட பாவம் நீங்கும். 

ஆனால் பாவத்தை போக்க மனிதனால் முடியவில்லையே

பின் இறைவன் அழைத்துக் கொண்டே இருக்கின்றான் பாவத்தை கழிக்க வா !! வா !! என்று!!

ஆனால் வர முடியவில்லையே!!!

அறிந்தும் கூட ஆனால் பின் செல்கின்றானே மாயத்தை நோக்கி!!

மாயத்தை நோக்கி!!!!..... அறிந்தும் பின் இறைவனிடத்தில் வந்தால்? இறைவன் எப்படி பின் காப்பான்??

உயிர் காப்பானா???? அறிந்தும் கூட....

உயிர் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கு பின் அறிந்தும் கூட பின் பிழைக்க தெரியவில்லையே!!!

பின் ஆதரவோடு அன்போடு இறைவன் தான் என்று நினைக்க பின்... தோன்றாமையில் தோன்றி எவை என்று அறியாமையில் அறிந்து... அறிந்தபின் என்ன லாபம்??

என்ன லாபம் என்று கூட உரைக்கும் பொழுது கூட என்னென்ன? லாபங்கள்!!

இவைதன் உணர்ந்து எவை என்று போதாததற்கு இன்னும் பின் வருத்தங்களே!!

பின் வருத்தங்கள் வரும் காலத்திலே அறிந்தும் கூட மனிதனுக்கு பிழைக்கத் தெரியாது புத்திகள். 

பின் பறிபோய் விடுமே பின் எப்படி இறைவா காப்பாற்ற பின் அறிந்தும் கூட காப்பாற்று பின் ஓடோடி வருகின்றார்களே பின்... அறிந்தும் உனையே தேடி தேடி 

ஆனாலும் பின் மனிதனை பின் ஓடோடி வந்து உன்னை வணங்கி பின் அறிந்தும் கூட பின் புத்திகள் தெளிவாகவில்லையே 

பின் ஆகவில்லை என்றாலும் புத்திகள் கொடுத்தாயே பரமேஸ்வரியே ஈசனே அறிந்தும் கூட 

இதை என்று அறிய முருகா கந்தா பின் கதிர்வேலா பின் குமாரா பின் வெற்றி வேலா 

வா வா அறிந்தும் கூட 

மனிதனைக் காக்க!!!

இன்னும் இன்னும் அழிவை நோக்கி உலகத்தை... அறிந்தும் எதை என்றும் உண்மைதனை கூட 

ஆனால் முருகா பின் காப்பாயாக!!!!

பின் அகத்தியனும் இன்னும் பல பல... பின் ரிஷிகளும் காக்க காக்க மனிதனை 

ஆனாலும் அறிந்தும் கூட பின் மனிதனே பின் பொய்யான ரூபத்திற்கு பின் அலைந்து திரிந்து பின் பலமாகவே வலம் வந்து கொண்டிருக்க என்ன லாபம்?? 

என்ன லாபம் அறிந்தும் கூட இங்கொன்று அங்கொன்று அங்கொன்று இங்கொன்று இருந்தால் என்ன லாபம்???

அறிந்தும் உண்மைதனை பின் விளக்கங்கள் எதை என்று அறிய அறிய முடியாமல் போனாலும்... திரிந்து அலைந்து வந்து இவை என்று புரியாமலும் அறியாமலும் 

நின்று என்று எதை என்று அறிய அறிய பொய் கூறுவான் மனிதன்..

இறைவன் அங்கு செல்லவில்லை இங்கு செல்லவில்லை அறிந்தும் கூட அங்கு இல்லை இங்கு இல்லை என்று... ஆனால் அறிவான் அனைத்தும் 

ஆனால் மாயை நிச்சயம் பின் உள் புகுந்து பின் இறைவனை காண முடியவில்லையே!!

ஓடோடி வரும் மனிதா... ஆனால் துன்பத்தை போக்க உன்னால் முடியவில்லையே 

அறிந்தும் இதனால் இறைவனே அறிந்தும் கூட இறைவா பின் அனைத்தும் செய் மனிதனுக்கு புத்திகள் கொடு ...

புத்திகள் அறிந்தும் கூட சிறு வயதில் இருந்தே அறிந்தும் கூட புத்திகள் கொடுத்தாய் 

பின் மறைமுகமாக பின் மாயை எதை என்று அறிய இவை என்று வரும் பொழுது புத்திகள் இழந்தான்...

மீண்டும் வரும்பொழுது அவ் புத்திகள் தான் வரும் இவை என்று அறிய அறிய..

புத்திகளை மறைத்து இன்னும் நீண்ட புகழும் அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று இறைவா தா தா பரமேஸ்வரி தாயே முருகா அவை என்று அறிய அறிய மோட்ச கணபதியே வா வா 

அறிந்தும் கூட கேதுவானவனே ராகுவானவனே இவையன்றி அறிந்தும் கூட.... இங்கெல்லாம் பின் வலம் வந்தால் தான்  ராகுவின் தாக்கமும் கேதுவின் தாக்கமும் குறையும் என்பார் 

ஆனால் அதைக் கூட மனிதனால் நெருங்க முடியாது இது தான் ஈசனின் செயல் 

பின் அறிந்தும் எவை என்று அறிய அறிய இறைவா பின் எப்? எப்?  பண்பு... எவை என்று நீண்டு நீண்டு பின் வந்தாலும் பின் ஆகவில்லையே!!! முடியவில்லையே என்பதையெல்லாம் பின் திரிந்து வளைந்து கூட. 

எப்பொழுது பின் தன் முயற்சிகள் பொய்யாகின்றது? எப்பொழுது பின் தன் முயற்சிகள் மெய்யாகின்றது?

என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும் கூட பின் பேசுவான் அறிந்தும் கூட...

பின் இறைவன் சொன்னான் நடக்கவில்லை என்று 

ஆனால் நீ என்ன செய்தாய் என்பது உந்தனுக்கு தெரியாமலே அறிவாய் 

எவை என்று புரியாமலும் எதை என்று அறியாமலும் அவை நடந்தால் இவை நடக்கும் இவை நடந்தால் அவை நடக்கும்... இதற்குப் பண்பு அதற்கு... அதற்கு பாவம் புண்ணியம் புண்ணியத்தின் பங்கு பின் சிறப்பு.... சிறப்பின் பாதி பாவம் புண்ணியம் பின் இதனை உணர்ந்து இல்லையே கண்டுகொள்ள ஆளில்லையே இவையென்றும் புரிய புரிய 

அர்த்தத்தைக் கூட விளக்கங்கள் விளக்கங்கள் இல்லையே அறிந்தும் கூட 

இவை என்று பயன்படாமல் போனதே மனிதனுக்கு 

என்ன லாபங்கள்???

அழிவை தேடுகின்ற மனிதா

உண்மைதனை எவை என்று புரிந்து பின் புரியாமல் வாழ்ந்து வருகின்றாயே??

என்ன லாபம்? என்ன லாபம்? 

அதை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் கூறி கூறி கடைசியில் அதுவும் வீணாகப் போய் விடுகின்றதே

எது நிரந்தரம் என்று கேள்!!

ஆனால் நிரந்தரம் இல்லாததை கேட்டுக் கொண்டு இருக்கின்றாய் மனிதா 

ஆனால் அவை என்று கூற முக்தி மோட்சம் பின் எவை என்று அறியும் வண்ணம் கூட நிச்சயமாய் பின் பங்கு வகிக்க 

பங்கு வகிக்க உண்மை நிலைகளை ஆராய்ந்தால் உண்மை தனை கேட்டால் இறைவன் பொய்யானவை எல்லாம் பின் எடுத்து வருவான்...

எடுத்து வருவான் இங்கிங்கு ஒன்று அங்கங்கு ஒன்று....அங்கங்கு மனம் சென்றால் இங்கெங்கு மனம் செல்லும் இறைவா உந்தனையே நம்பி வந்த பக்தர்கள் காக்கும்!!!

அறிந்தும் கூட பின் மனிதனுக்கு தெரியாமல் என்னென்ன என்னென்ன இவைதன் அவை தன் பின் ஓடி அலைந்து திரிந்து பூச்சிகளாலும் இன்னும் உயிர்கள் நுண்ணுயிர்களாலும் வருத்தங்கள் ஏற்பட்டு அறிந்தும் இவை என்று புரியாமலும் இவை என்றும் அறிந்தும் எதற்கு வீண் வாதத்தை ஏற்படுத்தி கொண்ட மனிதா 

வாய் பேசுவதை நிறுத்து 

அமைதிப்படுத்து சாந்தப்படு 

பின் எவை என்று பேசாதே அறிந்தும் கூட பின் ஈசனை நினை!! போதும்!!

போதும் அவை என்று உணர்ந்து பின் அர்த்தத்தை புரிந்து கொள்ள எவை என்று கூற 

ஈசா!!! பின் முருகா!!! பின் அறிந்தும் கூட தேவி!!! இவை என்று உணர்ந்து உணர்ந்து பின் ராகு கேது எவை என்று புரியாமல் சனீஸ்வரனே!!! அங்கும் இங்கும் கூட அனைவரும் பின் இங்கு தங்க 

அறிந்தும் கூட மனிதனால் இங்கு வர முடியவில்லையே!!!

ஏன்?? எதற்கு??

தன்னால் பின் பாவம் சூழ்ந்து உள்ளது!!

பாவம் சூழ்ந்து உள்ளது அறிந்தும் எதை என்று அறிய அறிய 

ஆனால் மனிதனோ அவை இவை என்று ஓடிக் கொண்டிருக்கும் பொழுது ஆனாலும் அதன் மூலமே கெடுதல் ஏற்பட்டு அங்கேயே கீழ இறங்கி....

மனிதா இதெல்லாம் ஏன் வேண்டும்???

அறிந்தும் கூட பக்தியை பின்பற்று பண்படுத்து பின் பயன்படுத்து....

பண்படுத்தி புகுத்தி கற்க இவை என்று அறிய அறிய 

நிற்க எவை என்று புரிய புரிய பின் மனதில் அழுத்தி நிற்க!!

 பக்திகளை!!!

உண்மையான மோட்சங்கள் கிடைக்கும் ஞானங்கள் கிடைக்கும் சூட்சுமரூபத்தில் இறைவனை காண்பாய் 

ஆனால் காண்பதற்கு வழிகள் இல்லையே அறிந்தும் இதை என்றும் வந்து கொண்டே இருக்கின்றார்கள் ஞானிகள் ஆனாலும் மறைந்து அண்ணாமலையிலேயே இதை என்று அறிய அறிய என்னிடத்திலே இருந்தும் கூட ராமேஸ்வரத்திலும் இவை என்று புரிய பின் அறிந்தும் கூட காசி தன்னிலே மறைந்தும் செந்தூரிலே மறைந்தும் இன்னும் வாழ்ந்து 

ஆனாலும் அவர்களும் கூட பின் எவை என்று கூட பக்தனுக்கு தெரிய முடியாமல்!!!!!???

தவிக்கின்றானே 

உண்மை பொருளை 

உண்மை பொருளை தெரிந்த பின் தெளிவுற்ற பின் அறிந்தும் இவை என்று தெளிவு இவை என்று அறிக 

பின் அறிந்த பின் தெளிவு பெறுவது எது??

எது என்பதை இவை என்று உணர்ந்து உணர்ந்து உணர்ந்து...

ஆனாலும் உணராமல் போனால் மனிதன் அறிந்தும் கூட பின் வாழ்ந்தாலும் கூட வாழாமலே வாழ்ந்து அறிந்தும் கூட பின் வாழ்ந்து பின் வாழாமலே வாழ்ந்து வருகின்றான் மனிதன் 

இவ்வளவுதான் 

இப்படி வாழ்ந்தால் இறைவன் எப்படி அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லி ஒன்றும் நடக்கவில்லையே என்று கடைசியில் அனைத்தும் பொய் என்று மூடி விட்டு 

ஆனால் பின் பரம்பரை அறிந்தும் இவை என்று கூட அனைத்தையும் அழிப்பானே மனிதன் 

மனிதருக்கு புத்தியை கொடு ஈசா!!!

அனுபவத்தில் அறிந்தும் கூட சொல்கின்றேனடா!!!

இவை என்றும் புரியாமலும் அறிந்தாலும் கூட எவ்வளவு பின் புரிந்து புரிந்து வாழ்ந்தால்தான் எங்களுடைய ஆசிகள் கிட்டி பின் மேல் நோக்கி இன்னும் அதிர்ஷ்ட வாய்ப்புகள். 

பின் புரியாமல் வாழ்ந்தால் நிச்சயம் ஆனால் இன்றளவும் கூட புரியாமல் வாழ்ந்து வாழ்ந்து என்ன லாபம்??? என்ன பயன்??? என்ன பயன் தான் பெற்றாய்??

ஆனால் பயன் பெறவில்லையே மனிதன் பின் சித்தர்களை தேடித்தேடி வருகின்றார்களே 

சித்தன் ரூபத்தை எப்படி காண்பீர்களாக!!! சித்தன் வாழ்க்கை வரலாற்றை எவராலும் கண்டு களிக்க எவை என்று கூட முடியவில்லையே!!!

இதனால் பொய்யான மனிதன் பொய்யானவற்றை பரப்பி பரப்பி பின் சித்தர்களையும் கூட பின் கோபத்திற்கு ஆளாக்கி பின் கோபத்தில் இதை என்று அறிய அறிய சித்தனும் வந்து அழிக்க... அறிந்தும் எவை என்று 

என்ன பிரயோஜனம்???

இவை என்று அறிய அறிந்த பின் தெளிந்த பின் இவையற்று அவையற்று பின் இருந்து இவை என்று அறிய 

போதாததிற்கு மரணம்... மரணம் என்பது வந்து விட்டால் நெருங்கி நெருங்கி இறைவா இறைவா என்று பின் புலம்பி தள்ளியதை யான் பார்த்தேன் பல ரூபங்களில் மனிதர்களை எதை என்று கூட பல வருடங்களில் எவை என்று அறிய அறிய 

பல திருத்தலங்கள் இங்கு பல திருத்தலங்கள் இங்கு... திருத்தலம் எதை என்று அறிய அறிய... திருத்தலம் மனிதர்களுக்காகவே மனிதன் பண்பை கூட பின் மனதை மாற்றுவதற்காகவே அறிந்தும் கூட ஈசன் இருக்கின்றான் 

ஆனால் அறிந்தும் கூட பின் நமச்சிவாயா நமச்சிவாயா !!! நமச்சிவாயா !!!

திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

திருக்கேதீச்சரம்

திருமுறைத்தலங்கள்

ஈழநாட்டுத்தலம்

திருக்கேதீச்சரம்

இலங்கை என்னும் ஈழநாட்டிலேயுள்ள இணை யில்லாத ஈஸ்வரங்களுள் திருக்கேதீஸ்வரமும் ஒன்று. முன்னோரு காலத்தில் கேது பூசித்தமையால் இது கேதீஸ்வரம் என்று பெயர் பெற்றது என்பர். "செய்ய கேது தலையற்ற அந்நாள் திருந்து பூசனை செய்து முடிப்போன்" என்பது பழம்பாடல். தொண்டர்கள் நாள்தோறும் துதிசெய அருள்செய் கேதீச்சரமதுதானே என்பது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்.

இலங்கையில் வடபாகத்தில் மாந்தை என்னும் மாதோட்ட நகரிலே உள்ளது திருக்கேதீஸ்வரம். பாலாவிக் கரையில் கௌரியம்பாள் சமேதராய் எழுந்தருளியுள்ளார் திருக்கேதீஸ்வரர். தலவிருட்சம் - வன்னிமரம்.

சிதம்பரத்தைப்போல நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தலம்.

அக்காலத்தில் திருக்கேதீஸ்வரப் பகுதி கோயில் நகரம் என வழங்கியது. அதனை இராஜஇராஜசேகரன் மகன் இராஜேந்திரன் தன் தந்தை பெயரால் அருள்மொழித்தேவன் வளநாடு என வழங்கினான்.

பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப் பல்லுல கினில் உயிர் வாழ்க்கை

கண்ட நாதனார் கடலிங்கை தொழக்காதலித் துறை கோயில்

வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சை நடமிடு மாதோட்டம்

தொண்டர் நாடொறும் துதிசெய அருள் செய் கேதீச் சரமதுதானே

(சம்பந்தர்)

அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி

வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்

பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்

தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே" (சுந்தரர்)

"-வேட்டுலகின்

மூதிச் சரமென்று முன்னோர் வணங்கு திருக்

கேதீச் சரத்திற் கிளர்கின்றோய்". (அருட்பா)

ஓம்  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments: