21/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். நாகபூஷணி திருக்கோயில். புவனேஸ்வரி சக்தி பீடம். நயினாதீவு .நாகதீவு.நாகதீபம். ஸ்ரீலங்கா .
ஆதி மூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே நலன்களாகவே உண்டு உண்டு அப்பனே ஏற்றங்கள்!!!
அப்பனே அவை மட்டுமில்லாமல் மனிதர்களுக்கு அப்பனே அதாவது உயர்வுக்கான வழிகள் பல பல உள்ளது என்பேன் அப்பனே
ஆனாலும் அவையெல்லாம் சரியாகவே மனிதன். பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே!!! இவைதன் பயன்படுத்தி விட்டால் அப்பனே எல்லையில்லா வெற்றியைக் கண்டு அப்பனே பின் பாவத்தையும் நீக்கி அப்பனே நிச்சயம் பின் சரியாகவே மோட்சத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே மோட்சத்தை பின் அடைய விடாமல் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே எவை எவை என்று எதை என்று அறிய அறிய மாயை தடுக்கின்றதப்பா!!!
அப்பனே மாயை என தெரிந்தும் அதில் வீழ்கின்றானப்பா மனிதன் அப்பனே!!!
எப்படிப்பா மோட்சம் கிட்டும்?? என்பேன் அப்பனே???
ஆனாலும் மாயை எப்படி அப்பனே அதாவது மனித உடம்பை எடுத்தாலே மாயை எதை என்று அறிய அறிய தானாகவே எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அப்பனே!!...இதற்கும் பல வகைகள் அப்பனே உண்டு உண்டு என்பேன் அப்பனே பல தத்துவங்களை கூட அப்பனே அதாவது உடம்பில் உள்ள அதாவது ஊன் உடம்பில் உள்ள பல ரகசியங்களை எடுத்துரைப்பேன் அப்பனே அடுத்தடுத்த வாக்குகளில் கூட
அவை சரியாகவே நிச்சயம் அப்பனே மாற்று (வழிமுறை) அதாவது செயல்பட தொடங்கி விட்டால் மாயை நெருங்க!!....(விடாமல் இருக்க)அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது மனிதன் மாயையை நெருங்க மாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!
இதற்கும் கூட புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே!!!
அதனால்தான் என் பக்தர்களைக் கூட அப்பனே சொல்லி சொல்லி கொடுத்து அப்பனே நிச்சயம் ஆனாலும் அப்பனே பின் சொல்லி எவை என்று கூட நன்றாக பின் சொல்லிக் கொடுத்தாலும் ஆனால் இதற்கு தகுந்தார் போல் என் பக்தர்களும் கூட அப்பனே எதை என்றும் கூட இதற்கு எதிரியாக இருந்து அப்பனே அவை பொய் இவை பொய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் உங்களை பார்த்து ஒன்றை கேட்கின்றேன்? அப்பனே !!!
பின் தீங்குகளாக உங்களுக்கு ஏதாவது சொன்னார்களா??
அப்பனே!!! நீங்கள் யோசியுங்கள் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட
அதனால் அப்பனே நன்மைகளாகத்தான் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் காசுகளுக்காக அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பணம் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது எவை என்று கூட பணத்தின் மீதே மோகம் கொண்டு அதற்காகவே அப்பனே நிச்சயம் அனைத்தும் பின் வீண் என்று பொய் என்று அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
ஏனென்றால் காசுகள் வேண்டும் எவை என்று அறிய அறிய அப்பனே
இதனால் வேண்டாமாப்பா அப்பனே!!!
நல்விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புது புது விஷயங்களை கூட மனிதனுக்கு அப்பனே பரப்புங்கள்!!! அப்பனே!!!
இதற்காகத்தான் அப்பனே காசுகளுக்காகத்தான் அப்பனே மனிதன் திரிந்துகொண்டு!!!!
நல்வழி பாதையில் பின் சென்று அப்பனே அனைத்தும் அதாவது அனைத்தும் பின் கிட்டி உயர்ந்து விடுவான் என்பதற்கிணங்க அப்பனே ஏற்கனவே பல சுவடிகள் அப்பனே தொலைந்தும் அதாவது அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பின் கடலிலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் பல சுவடிகள் அப்பனே!!!
இங்கே அதாவது கடல் அடியிலே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!! சுவடிகளை நாக தேவதைகள் அழகாக பார்த்துக் கொண்டிருக்கின்றது!!!
எவை என்று அறிய அறிய அதாவது பின் பார்த்துக் கொண்டும் அப்பனே பின் காத்துக் கொண்டும் அப்பனே இருக்கின்றது.
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய இதன் ரகசியத்தை பற்றி சொல்கின்றேன் அப்பனே!! அறிந்தும் கூட!!
இதனால் அப்பனே ஆனாலும் அப்பனே பின் இராமேஸ்வரத்தில் அப்பனே பல பல சுவடிகள் தங்கி!! இருந்தன! எதை என்று புரிய அப்பனே!!! இதனால் அப்பனே பின் ஆனாலும் இவையெல்லாம் நிச்சயம் கற்று பின் தெளிவு பெற்று மனிதன் தெளிவு பெற்று விட்டால் அப்பனே அனைத்தையும் பின் ஆட்சி செய்து விடுவான் என்பதற்கிணங்க அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் அதாவது அப்பனே பின் மதுரை தன்னில் இருந்து அப்பனே எதை என்று அறிய அறிய இராமேஸ்வரத்திற்கு வந்தவை!! எவை என்று அறிய அறிய அப்பனே.
நிச்சயம் அப்பனே பின் அதாவது தற்பொழுதும் கூட அப்பனே கடல் வழியாகவே அப்பனே எதன் மூலம் என்பதையெல்லாம் அப்பனே
ஆனால் இவைதன் அப்பனே மறைமுகமாகவே அப்பனே பக்தர்கள் பக்தர்கள் என்றெல்லாம் இருந்து அப்பனே எதை என்று அறிய அறிய!!!
ஆனாலும் இதை தன் அனைத்து சுவடிகளையும் கூட ஒரு பெண்மணி அப்பனே பின் எடுத்து வந்தாளப்பா!!! அறிந்தும் கூட!!
இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இதையெல்லாம் பின் நிச்சயம் தெரிந்து அதாவது அனைத்தும் நல்லதாகவே இருக்கின்றது பல மந்திரங்களும் கூட பல உபதேசங்களும் கூட இருக்கின்றது.இவை நிச்சயம் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்ந்து விடலாம் மனிதன் வாழ்ந்து விடுவான் அவை மட்டும் இல்லாமல் பின் மோட்சத்திற்கான வழிகளும் கூட பின் பெற்று விடுவான் என்பதற்கிணங்க நிச்சயம் அப்படியே பின் கடல் வழி அதாவது தற்பொழுது கூட பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் கட்டையால் (வாகனம் உதாரணத்திற்கு மாட்டு வண்டி போல) ஆன எதை என்று அறிய அறிய ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!! அறிந்தும் கூட!!
இதனை தன் (சுவடி கட்டுக்களை)அப்பனே பின் தரை வழியாகவே!!! கொண்டு செல்லும் பொழுது!!!
(ஒரு கும்பல் அந்த பெண்மணியை பின் தொடர்ந்து)
அப்பனே இதனால் ஒரு கும்பல் எதை என்று அறிய அறிய பின் ஓலைச்சுவடிகளை ஒருவள் கொண்டு செல்கின்றாள்!!! ஒருவள் தான் இருக்கின்றாள் அவளையும் கொன்று விடுவோம் என்று எண்ணி எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய இதனால் எதை என்றும் அறியாமல் கூட பின் நல்விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே அவள் தனக்கும் அதாவது தெரிந்ததப்பா!!!
அறிந்தும் அறிந்தும் கூட அதாவது அவள் தன் நிச்சயம் கண்டுபிடிப்புகள் பல பல!!!
(பண்டைய காலத்தில் வானவியல் ஜோதிடம் மூலிகைகள் கருவிகள் கண்டுபிடிப்புகள் உபகரணங்கள் செய்வது எப்படி என அனைத்தையும் ஓலைச்சுவடியில் தான் எழுதி வைத்திருப்பார்கள்!! அப்படி ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடி தேடி ஆலயங்கள் ஆலயங்களுக்காக சென்று படித்து பார்த்து சேகரித்து கொண்டு இந்த பெண்மணி சில கருவிகள் உபகரணங்களையும் கண்டுபிடித்து வைத்திருந்தார் அனைத்தையும் மக்களுக்கு ஆன்மீகம் கல்வி மருத்துவம் என அனைத்தையும் மக்களுக்கு போதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக செல்லும் பொழுது)
அவ் பெண்மணி பல வழிகளிலும் கூட பல பல திருத்தலங்கள் திருத்தலங்களாக சென்று சென்று சுவடிகளை சேகரித்து சேகரித்து எதை என்று அறிய வைத்து வைத்து எதை என்று அறிய அறிய பல உபகரணங்களைக் கூட எவை என்று அறிய அறிய தன்னிடத்தில் வைத்துக்கொண்டு அதாவது மதுரை தன்னில் கூட பின் மக்களுக்கு பரப்பலாம் என்றெல்லாம்
இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் பல கும்பல்கள் அவளை எதை என்று அறிய அறிய அப்பனே மற்றொரு பின் வாகனத்தை இயக்கி அறிந்தும் கூட அதனை மோத விட்டு எவை என்று அறிய அறிய அப்படியே பின் கடல் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே!!!
(அந்த பெண்மணி வந்த வாகனத்தை அந்த கும்பல் வைத்திருந்த வாகனத்தால் இடித்து மோத வைத்து)
இதையென்று அறியாமல் அப்படியே பின் அப்பனே அனைத்து சுவடிகளும் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் அதாவது தற்போது நிலைமையிலும் கூட அப்பனே எதை என்று கூட பின் அப்படியே அப்பனே பின் அதோடு அப்பனே வாகனத்தோடு அனைத்தும் அப்பனே கடலில் கொட்டின!!
இதனால் அப்பெண்மணியோ!!!! அலைக்கழித்து!!!!(கடலில் தத்தளித்து) எதை என்றும் புரியாமல் அறியாமலும் கூட எதை என்றும் அறிய அறிய!!!
இறைவன்களே!!!! என்று பின் மனதில் இறைவா இறைவா என்றெல்லாம்!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் அவள்தனும் மேலே எழுந்தாள்...
ஆனாலும் அவ் மனித கும்பல்களோ!!!??? அறிந்தும் கூட அவள்தனை பின் அவள் சாகட்டும் என்றெல்லாம் அப்பனே....
இப்படித்தான் ஆனாலும் இவர்களும் பக்தர்கள் தானப்பா!!!!
அப்பனே நிச்சயம் அப்பனே பார்த்து விட்டோம் மனிதனை அப்பனே.... !!!
பக்தன் பக்தன் என்று சொல்லி சொல்லி எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றான் என்றெல்லாம் அப்பனே
அப்பனே எதை என்று புரியாமலும் கூட இதனால் அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் எவை என்று கூட அவள் சாகட்டும் என்று..
ஆனாலும் அப்பனே பின் நாக தேவதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட சுற்றி எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் அழகாகவே அவள்தனை எவை என்று தூக்கிக் கொண்டு பின் அனைத்து சுவடிகளையும் கூட எதை என்று அறிய அறிய பின் பக்க பலமாகவே எதை என்று அறிய அறிய பின் அங்கே இருந்து எதை என்று கூட இங்கேயே (நாக தீவில்) அறிந்தும் கூட!!
இதனால் பின் அவள்தனும் உயிர் பிழைத்தாள்!!! அறிந்தும் கூட!!
இதனால் எதை என்று கூட நாக தேவதைகள் பின் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய இங்கேயே நீ இரு !!!!!நிச்சயம் என்றெல்லாம்...
.அவள் தனக்கு பல வகையிலும் கூட பின் தொந்தரவுகள் இல்லாமல் எதை என்று அறிய அறிய இங்கே பின் எவை என்று கூட இல்லத்தையும் அமைத்து இன்னும் பின் கண்டுபிடிப்புகள் பல பல!!!
(ஓலைச்சுவடிகளில் உதாரணத்திற்கு ஒரு நோய்க்கான மருந்து எப்படி எந்தெந்த மூலிகைகளை சேர்த்து மருந்தை தயாரிக்க வேண்டும் எனவும் பல விஷயங்களில் பயன்படும் கருவிகள் உதாரணத்திற்கு விவசாய கருவிகள் ஆகட்டும் சக்கரங்கள் ஆகட்டும் நட்சத்திரங்களை பார்த்து கணிப்பது ஆகட்டும் எல்லாம் சித்தர்களால் ஏற்கனவே கண்டுபிடித்து வைக்கப்பட்ட எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை பார்த்து தெரிந்து கொண்டு இந்த பெண்மணி மக்களுக்கு உதவ வேண்டும் மக்களை நல்ல வழிக்கு கொண்டு செல்ல வேண்டும் மோட்சத்திற்கான வழிகளை காட்ட வேண்டும் என்பதை எல்லாம் இந்த நாகத்தீவில் தனியாக இருந்து கொண்டு ஒவ்வொன்றாக பரிசோதனை செய்து கண்டுபிடிப்பு பல செய்தார்)
இவ்வாறு கண்டுபிடித்து பின் எவை என்று அறிய அறிய நகரலாம்!!!! (இங்கிருந்து செல்லலாம்)
என்றெல்லாம்
நிச்சயம் அதாவது மதுரை மாநகருக்கும் எவை என்று கூட பின் பல நாடுகளுக்கும் சென்று இதுதான் உண்மை என்று தெரிவிக்கலாம் என்றெல்லாம்!!!
இதனால் எவை என்று அறிய அறிய எவை என்று கூறிய புரிய இங்கே அமர்ந்து நல்விதமாக நாக தேவதைகள் எல்லாம் அதாவது பாம்பின் ரூபம் எடுத்து பின் விளையாடிக் கொண்டிருந்தார்கள் பின் அவ் பெண்மணியிடம்!!! அறிந்தும் அறிந்தும் கூட!!
இதனால் பின் அவள்தனுக்கு எப்பொழுதும் சுவடிகள் படிப்பது அறிந்தும் கூட பின் என்னென்ன விஷயங்கள்?? பின் எப்படி எல்லாம் ஆக்கலாம்? என்பதை எல்லாம் இந்த உலகத்தில் பின் எவ்வாறு இருந்தால்? மாற்றம் ஏற்படும்!! முக்திக்கான வழிகள் இன்னும் மோட்சத்திற்கான வழிகள்!!! பின் நல்லொழுக்கங்களான வழிகள்!!! என்றெல்லாம் பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அனைத்தும் பின் அப்பனே மனப்பாடங்கள்!!!!
எதை என்று அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று சில பல பல வகைகளிலும் கூட அப்பனே!!!
ஆனாலும் இதனை அறிந்தனர் அப்பனே எவை என்று புரிய புரிய ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் இன்னும் கும்பல்கள் அப்பனே சுற்றிவரும் அப்பா!!!!
(கடற்கொள்ளையர்கள் போல்)
ஆனால் பின் ஒருவன் பார்த்து விட்டான்!!!! அறிந்தும் கூட இதனால் பின் பல கும்பல்கள் இங்கே தான் இதன் பக்கத்திலே தான் இருந்தனர்!! இங்கேயே எவை என்று அறிய ஒரு பெண்மணி இருக்கின்றாள்!!! அவள் தன் ஏனோதானோ என்று அவள் மட்டும் வாழ்ந்து வருகின்றாள்!!!
(நாகத்தீவில் தனியாக)
அவள்தனுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது??? என்பது தெரியாமலும் எவை என்று அறியாமலும் முழித்தனர்!!!
சரி நாம் அங்கு சென்று பார்ப்போம் என்று அறிந்தும் கூட!!!
ஆனாலும் அறிந்தும் கூட இங்கே அவர்கள் வந்தனர் என்பேன் .
பின் ஏன் நீ இங்கு தங்கி இருக்கின்றாய்?? என்று!!!
ஆனாலும் அறிந்தும் கூட அவள்தனும் கூட பின் தங்கி இருக்கின்றேன்!!!! இவ்வுலகத்தை மாற்ற போகிறேன்!!! நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய!!! ஈசன் அருளாலும் பார்வதி தேவியின் அருளாலும் யான் மாற்றப் போகின்றேன் என்றெல்லாம்!!!
சுவடிகளையும் காண்பித்தாள்!!!
பலமாக இவர்களுக்கும் பின் இவள் மேல் பொறாமைகள்!!! எதை என்று புரிய புரிய இவையெல்லாம் நிச்சயம் அறிந்து இவள் தன் அறிந்து விட்டால் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் நாம் தன் நிச்சயம் (வாழ) முடியாது என்பதற்கிணங்க....
ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் இச்சுவடிகளை கூட பின் ஒருவன் தீ பற்ற வைத்தான்!! அறிந்தும் கூட!!
ஆனாலும் எவை என்று அறிய அறிய பின் தீ பற்றவில்லை அறிந்தும் கூட...
ஆனாலும் எப்படியோ இவையெல்லாம் பின் தாக்கி இவைகளை கூட தூரே எறிய வேண்டும் என்பதையெல்லாம்... இதனால் இன்னும் சரி அறிந்தும் கூட என்றெல்லாம்.... இன்னும் வாருங்கள் என்று ஒரு தூதுவனை அனுப்பி கும்பலிடம் சொல்லி அனைவரும் இங்கு வந்தனர்.
இப் பெண்மணி எதை என்றும் அறிய அறிய யார் என்றே தெரியாது!!! இவள் தன் பின் திருடியாகத்தான் இருக்க வேண்டும்!!! அறிந்தும் கூட ஏனென்றால் பின் சுவடிகளை எல்லாம் எங்கிருந்தோ? எவ் நாட்டில் இருந்தோ? திருடி வந்து இங்கு அறிந்தும் கூட எதை என்றும் கூட பின்... பின் அறிந்தும் உண்மைதனை கூட!!
ஆனாலும் இவள் தன் திருடி தான் என்றெல்லாம்!!! இவளை சிறையில் அடைக்கலாம் என்பதை எல்லாம் அறிந்தும் கூட!!!
இதனால் அறிந்தும் கூட அனைத்து சுவடிகளையும் கூட அப்பனே வீசினர் அனைவரும் கூட கடலில் கூட அப்பனே!! அறிந்தும் கூட!!
ஆனாலும் கத்தினாள்!!! எவை என்று அறிய அறிய பின் அப் பெண்மணியும் கூட!!!
அவளுக்கு உதவி செய்ய ஆள் இல்லை அப்பா எதை என்று அறிய அறிய அப்பனே இப்படித்தான் அப்பனே நல்லோர்கள் நல் பக்திகள் அப்பனே பின் ஓங்கியும் அப்பனே இருக்கின்றது இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே அவர்களை எல்லாம் வெளிக்கொண்டு வருவோம் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே எதை எதையோ சொல்லி அப்பனே எவை எவையோ அப்பனே அதாவது மனிதனின் அப்பனே அதாவது மனதை மாற்றலாம் என்றெல்லாம் அப்பனே
நிச்சயம் மாற்ற முடியாதப்பா!!!
அப்பனே பிரம்மன் வகுத்தது வகுத்தது தான் என்பேன் அப்பனே!!! எவை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் எவை என்று அறிய அப்பனே பல இடங்களுக்கு சென்று அப்பனே பின் அவ் வகுத்ததை கழித்து அப்பனே பின் கூட்டி அப்பனே பின் பெருக்கவும் ஆக்கலாம் என்பேன் அப்பனே
(பிரம்மன் கணக்கிட்டு வகுத்து எழுதிய விதியை பல ஆலயங்களுக்கு சென்று கர்மாக்களை கழிக்க வேண்டும் புண்ணியங்களை கூட்டிக் கொள்ள வேண்டும் புண்ணியங்களை பெருக்கி கொள்ள வேண்டும்)
அதைத்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே ஓர் இடத்தில் இருந்து அப்பனே நிச்சயம் எந்தனுக்கு வேண்டும் வேண்டும் என்றால் அப்பனே எப்படியப்பா தருவது ??அப்பனே!!!
(ஆலயங்களுக்கு செல்லாமல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வேண்டிக் கொண்டிருந்தால்)
அறிந்தும் கூட தாயவள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உணவு அப்பனே சிறு வயதில் இருக்கும் பொழுது பின் அருகில் இருந்து ஊட்டுவாள் என்பேன் அப்பனே
சிறிது தொலைவில் இருந்து இங்கே வா வா என்று அழைப்பாள் என்பேன் அப்பனே... பின் அக் குழந்தை கூட முட்டி போட்டு தவழ்ந்து எதை என்று அறிய அறிய தாயிடம் வரும் என்பேன் அப்பனே!!!
தாய் இன்னும் தூரத்திற்கு செல்வாள் அப்பனே இதை எல்லாம் அப்பனே மனிதனுக்கு ஏற்கனவே கற்பித்து கற்பித்து வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே மாயையில் விழுந்து அப்பனே பின் கற்றுக் கொள்ளாமல் அப்பனே எதை எதையோ கற்று உணர்ந்து அப்பனே எவை என்று அறிய அறிய மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு அப்பனே இதனால் அப்பனே தன் நிலைக்கு தானே காரணம் என்றெல்லாம் அப்பனே பல வாக்குகளிலும் யாங்கள் தெரிவித்து விட்டோம் அப்பனே பல பெரியோர்களும் தெரிவித்து விட்டார்கள் என்று என்பேன் அப்பனே
அப்பொழுது கூட திருந்துவதில்லை என்பேன் அப்பனே மனிதன்
அறிந்தும் கூட இதனால் எவை என்று அறிய இவைதன் பின் அனைத்து சுவடிகளையும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் பின் எவை என்று புரியப் புரிய
ஆனாலும் அவள்தனை கூட பின் இழுத்து பின் எவை என்று அறிய அறிய பின் சிறையில் இட்டனர் என்பேன் அப்பனே
இதனால் எவை என்று அறிய அறிய ஆனாலும் நாக தேவதையோ...!!!!!!
இவள்தன் எவை என்று புரிய புரிய அவ்வாறாக அதாவது அவ்வாறாகவே மானிட ரூபம் இருந்தாலே இவள்தனை கொன்று விடுவார்கள் என்று எண்ணி நிச்சயம் அறிந்தும் கூட இவள்தனை எவை என்று அறிய அறிய நாக தேவதையாகவே சென்று சிறையில் அறிந்தும் கூட
பின் இப்படி வா!!!
அறிந்தும் கூட உன்னையும் யாங்கள் பாதுகாக்கின்றோம் என்று !!!!
அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் எதை என்று புரிய புரிய அவள்தனையும் கூட பின் ஒரு பாம்பாக மாற்றி விட்டார்கள் என்பேன் அப்பனே அதாவது நாக தேவதையாக!!! என்றெல்லாம்!!
ஆனாலும் நாக தேவதையாக இன்றளவும் உயிரோடுதான் இருக்கின்றாள் இதன் அடியிலே என்பேன் அப்பனே!!
இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!
நல்லோருக்கெல்லாம் அவள்தன் உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றாள் என்பேன் அப்பனே!!! இங்கு வந்து வணங்குவதற்கு எதை என்று கூட வந்து விட்டால் பின் இவன் நல்லவன் என்று தெரிந்து விட்டால் எதை என்று கூட அவ் அம்மையே ஆசிர்வாதங்கள் ஈசனிடம் பின் கேட்டு வரங்களை அள்ளி கொடுத்து அனுப்புகின்றாள் அப்பனே!!! அனுப்பி தான் வைக்கின்றாள் வரங்களை கொடுத்து அப்பனே!!
இவ்வாறு வணங்குவோருக்கு அப்பனே!!!
ராகு கேது என்று சொல்கின்றார்களே அப்பனே!!!
ராகு கேது தோஷங்கள் எதனால் வந்தது??
ஏன் வந்தது?? என்றெல்லாம் யாருக்காவது தெரியுமா???
என்றால் அப்பனே நிச்சயம் தெரியாதப்பா!!
அப்பனே ராகு கேது ராஜ்ஜியம் அப்பனே இங்கு தான் உள்ளதப்பா!!!! எதை என்று அறிய அறிய அப்பனே!!!
ராமேஸ்வரத்திலிருந்து அப்பனே எதை என்று கூட நகுலேஸ்வரம் எதை என்று புரிய புரிய அப்பனே (திரி)கோணமலை இதனைச் சுற்றி எவை என்று அறிய அறிய அப்பனே நாகலோகம் உள்ளதப்பா!!!
அப்பனே இதனையும் கூட யாரும் கண்டறியவில்லை என்பேன் அப்பனே!!!
வரும் காலத்தில் அப்பனே மேலே யான் பின் எழுப்ப செய்வேன் என்பேன் அப்பனே..
அப்பொழுது புரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே மனிதன் வாழ்வதற்கும் அப்பனே பூமியில் பல பல பின் வெற்றிகள் அதாவது அப்பனே பல பல வழிகளை கூட யாங்களே ஏற்படுத்தி தான் உள்ளோம் என்பேன் அப்பனே
ஆனால் அவை எல்லாம் மனிதன் விரும்புவதில்லை என்பேன் அப்பனே
அதாவது அப்பனே யார் ஒருவன் சரியாகவே அப்பனே பின் இளம் வயதிலிருந்து இறைவனை நோக்கி செல்கின்றானோ அவந்தனக்கு அனைத்தும் கொடுப்பேன் என்பேன் அப்பனே
ஆனால் அப்பனே நிச்சயம் செல்வதில்லை என்பேன் அப்பனே...
பின் காதல் அப்பனே எதை என்று கூட எதன் எதன் மீதோ?? மோகம் கொண்டு அப்பனே பின்பு அப்பனே வருந்தி அப்பனே முப்பான் மேல் வருவான் அப்பா...(30 வயதிற்கு மேல்) பாதி வாழ்க்கை போய்விடும் அப்பா
எதை என்று அறிய அறிய
மீதி இருக்கும் வாழ்க்கையில் அப்பனே ஆனால் 35 பின் 40 வயதில் பின்பு தான் தெரிந்து கொள்வான் என்பேன் அப்பனே
பின் வயதாகிவிடும் என்பேன் அப்பனே இறந்து விடுவான் அப்பனே மீண்டும் வருவான் அப்பனே...அவ் ஆசைகளும் மீண்டும் வரும் என்பேன் அப்பனே...
இவ்வாறுதான் அப்பனே மனிதன் சுழற்ச்சியாக சுழற்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே
என்ன லாபம்????
அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே
ஆனாலும் இவள் தன் எதை என்று அறிய அறிய அப்பனே ராகு கேது கிரகங்கள் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே அதாவது அப்பனே சக்திகள் அப்பனே எவை என்று அறிய அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று கூட வயிற்றினில் நடு பகுதியில் அப்பனே எதை என்று கூட ராகு கேதுக்கள் தங்கி உள்ளது என்பேன் அப்பனே... அதாவது சக்திகள் பின் இருக்குமப்பா!!!
அதை தன் பின் அப்பனே ஜாதகத்தில் கூட பின் தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே பின் அவை தன் எதை என்று அறிய அறிய அப்பனே அவை தன் நீக்க வேண்டும் அவ் சக்திகளை!!!
எதை என்று கூட அவ் சக்திகளை நீக்கினால் தான் அப்பனே எதை என்று கூட யோகம் கிட்டும் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அவை தன் எவ்வாறு என்பதை கர்மத்தை அதாவது பாவத்தை அனுபவிக்கவே அப்பனே வயிற்றினுள் அப்பனே இருக்கும் அப்பா
ஆனாலும் இதைத்தன் எவ்வாறு? நீக்குவது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாதப்பா!!!
ஆனாலும் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்றெல்லாம் அப்பனே ஆனாலும் அவை தன் ஒரு சிறு துகள்களாகவே வயிற்றுக்குள் இருக்குமப்பா அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது எங்கு சென்றாலும் அப்பனே எப் பரிகாரம் செய்தாலும் அப்பனே செல்லாது என்பேன் அப்பனே
ஆனாலும் பரிகாரங்கள் செய்ய செய்ய அப்பனே எதை என்று அறிய அறிய அவை தன் பின் கீழ்நோக்கி அதாவது சக்தி மிகுந்து இருந்தது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் சக்தி இல்லாமல் பின் செல்கின்ற பொழுது அப்பனே பல கஷ்டங்கள் அப்பனே பல கஷ்டங்கள் வரும் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே அவை எடுத்து விட வேண்டும் என்பேன் அப்பனே!!!
அவை எடுக்க எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே அதாவது இங்கு சுற்றி திரிய வேண்டும் என்பேன் அப்பனே
(நாகபூசணி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும்)
இன்னும்
ராமேஸ்வரம் அப்பனே!!!
இன்னும் அப்பனே இதனடியில் அதாவது அப்பனே இங்கு எதை என்று அறிய அறிய!!!!
அப்பனே இவ்வாறு சுற்றித்திரிந்தால்தான் அப்பனே அவை ஒழியுமே தவிர.... அப்பனே அதாவது அவ் (ராகு கேது)துகள்களும் கூட அப்பனே இங்கு வரும்பொழுது அப்பனே அழிந்து போகும் என்பேன் அப்பனே!
ஏனென்றால் இவ் சக்தியும் இங்கு இருக்கும் சக்தியும் அப்பனே அடிக்கும் பொழுது அப்பனே....
(மனிதன் உடம்பில் வயிற்றில் உள்ள ராகு கேதுக்கள் துகளின் சக்தியும்..... இந்த ஆலயத்தில் இருக்கும் சக்தியும் நேருக்கு நேர் இடித்து மோதும் பொழுது மனித உடலில் இருக்கும் ராகு கேது துகள்களும் அழிந்து போகும்.... அதாவது ராகு கேது தோஷங்கள் விலகிச் செல்லும்)
ஆனாலும் அவற்றை உங்களால் கண்களால் காண முடியாதப்பா அப்பனே
அதாவது அது எங்களுக்கு தெரியுமப்பா எதை என்று அறிய அறிய அப்பனே
அதுவும் இதுவும் இடிக்கும் பொழுது அப்பனே அவை தன் அப்பனே தூள் தூளாக ஆகிவிடும் என்பேன் அப்பனே
யோகங்கள் வரும் அப்பா !!!
அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் செப்பி செப்பி எதை என்று அறிய அறிய அப்பனே... இவ் நிலைமைக்கு எதை என்று அறிய அறிய பயன்படும் என்பேன் வரும் நிலைக்கு!! அப்பனே அப்பொழுது மனிதன் திருந்தி தெரிந்து கொள்வான் அப்பனே
கலியுகத்தில் அப்பனே பின் ஆட்டங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய கெடுதலாக தான் நடக்கும் அப்பா
பின் அதாவது தீங்காக தான் நடக்க வேண்டும் என்பது விதி அப்பனே எதை என்று அறிய அறிய
ஆனாலும் யாங்கள் விடப் போவதில்லை என்பேன் அப்பனே.
மனிதனுக்கு சொல்லி சொல்லி!!!
வரும் காலங்களில் மனிதன் அலைவானப்பா!!! கஷ்டங்கள் வரும் அப்பா!!! அப்பனே எப் பரிகாரங்கள் செய்தாலும் ஒன்றும் முடியாதப்பா!!!
ஒன்றும் முடியவில்லையே என்றெல்லாம் அலைவானப்பா!!
""""""""""""""அப்பொழுது பார்ப்பானப்பா !!!! எங்கள் வாக்குகளை!!! அப்பனே அப்பொழுது தெளிவான் அப்பனே!!!!
எதை என்று உணர்ந்து!! உணர்ந்து!! அப்பனே இப்படி செய்யலாம் என்று !!அப்பனே !!!
செய்வானப்பா!! அப்பனே பிழைத்துக் கொள்வானப்பா!!
அவ்வளவுதான் விஷயம் என்பேன் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே!!
ஏன் எங்களுக்கு இதெல்லாம் வேலையா?? எங்களுக்கு வேறு வேலை இல்லையா?? எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே
ஆனால் அழித்துவிட்டார்களப்பா!!!.. பணத்திற்காக சுவடிகளை அப்பனே.
அதனால்தான் மீண்டும் எதை என்று அறிய அறிய மானுட குலத்தை காக்க மீண்டும் யாங்கள் வந்து அப்பனே பின் பல வழிகளிலும் கூட மனிதனை பக்குவப்படுத்தி அப்பனே பின் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் அப்பனே
ஆனாலும் அப்பனே மனிதன் திருந்திய பாடு இல்லை என்பேன் அப்பனே
சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே எவை என்று அறிய அறிய எதன்? பின்னே ஓடினால்?? அப்பனே எவை கிடைக்கும்?? அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே என்றெல்லாம் அப்பனே
ஆனால் மனிதன் திருந்திய பாடு இல்லை அப்பனே அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே
என்னை வணங்கினாலும் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!
ஈசனை வணங்கினாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை வணங்கினாலும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது மனிதனுக்கு..
நிற்க!! அதாவது நிற்க!! எதை என்று அறிய அறிய இல்லையே!!!!
(வரும் கஷ்டங்களை தடுத்து நிறுத்த வழிகள் என்ன என்பதை மனிதர்கள் இன்னும் அறியவில்லை.....
மனிதர்களை கஷ்டங்களில் இருந்து மீட்க வாக்குகள் மூலம் வழிகாட்டி வருகின்றார் நம் குருநாதர் அகத்தியப் பெருமான்)
ஏன் ?? எதற்கு??? (இப்படி கஷ்டங்கள்) என்றெல்லாம் அப்பனே ஒன்றாவது ஒரு முறையாவது யோசித்தானா??????? அப்பனே!!!
ஆனால் யோசிப்பதற்கு தான் அப்பனே மூளையும் பின் எவை என்று அறிய அறிய என்று அறிய அறிய கொடுத்திருக்கின்றான் இறைவன் அப்பனே
அதனைக் கூட சரியாக பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எவை என்று கூட அன்பாகவே திருத்தலத்திற்கு சென்றாலே எதை என்று கூட இறைவன் பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே.
அவனிடத்தில் இறைவனிடத்தில் பின் விட்டு விடுங்கள் என்பேன் அப்பனே நலமாகவே பின் அனைத்தும் தருவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய நாக தேவதைகள் இங்கு இன்னும் இங்கு காத்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... மக்களை பாதுகாக்கவே... அப்பனே
இன்னும் எவை என்று கூற இன்னும் அழிவுகள் அறிந்தும் கூட இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே தோஷங்கள் பல ஆயினும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ராகு கேதுக்கள் எங்கு உள்ளது என்பதை எல்லாம் அப்பனே
யான் எடுத்துரைக்கும் பொழுது தெரியுமப்பா!!!
பல வகையிலும் கூட அப்பனே இதற்கு நேரே மேலே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே கீழே லோகம் மேலே தேவ லோகம் என்பதையெல்லாம் அப்பனே இதற்கு இடையில் தான் அப்பனே எதை என்று அறிய அறிய பரந்து விரிந்து அப்பனே சரியாகவே பின் அதாவது அப்பனே எவை என்று கூட புகை போலே காட்சியளித்து அப்பனே பின் எவை என்று கூட பின் அணைத்துக்கொள்ளும் அப்பா!!!
அடியிலிருந்து மேலிருந்தும் அப்பனே வந்து கொண்டே இருக்கும் பொழுது அதன் அப்பனே அதன் வழியாக தான் செல்ல வேண்டும் நீங்கள்
பின் வழி வேறு வழி இல்லை அப்பனே
பின் அதன் வழியாக செல்லும் பொழுது அப்பனே பின் யான் சொன்னேனே வயிற்றில் உள்ள துகள்!!!....அது அழிந்து விடும்ப்பா !! அவ்வளவுதான் என்பேன் அப்பனே யோகங்கள் தான் என்பேன் அப்பனே
இப்படித்தான் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர!!!
அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே நல் எண்ணங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய எது சரியானவை எவை சரியானவை!??? எவை தவறானவை???? என்பதை எல்லாம் அப்பனே யோசித்து யோசித்து அப்பனே
எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே உலகத்தை அப்பனே மனிதனால் காக்க முடியாதப்பா!!
அப்பனே தன்னைத்தான் காத்துக் கொள்ள பின் ஏதேதோ செய்து கொண்டிருப்பான் அப்பா மனிதன்!!! இவை அவை என்று அப்பனே!!
நிச்சயம் அப்பனே காக்க முடியாதப்பா!!!
இன்னும் இன்னும் அப்பனே நாடிகள் சுவடிகள் கிடைத்தால் இதன் மூலம் வருமானம் ஈட்டிக்கொண்டு வாழ்ந்து விடலாம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றான் அப்பா
அவையெல்லாம் பாவம் அப்பா
பாவம் சேர்ந்து விட்டால் நீயும் கெடுவாய் உன்னை சார்ந்தோர்களும் கெடுவார்கள் அப்பனே
இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு பின் உந்தனுக்கு நாடிகள் கிடைக்கும் கிடைக்கும் என்று அதாவது ஜீவநாடிகள் கிடைக்கும் கிடைக்கும் என்று இரு இரு ஐந்து வருடமோ 10 வருடமோ என்று சொல்லி சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றான் அப்பா
ஆனால் அவன் மனைவியோ அவந்தனை எதை என்று அறிய அறிய திட்டி க் கொண்டிருக்கின்றாள் அப்பா
பின் அவந்தனக்கும் எவை என்று அறிய அறிய ஒரு பிள்ளை இருக்கின்றதப்பா!!
எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தனும் இதில் பின் சென்று விடலாம்!!! இதில் ஜெயித்து விடலாம் என்றெல்லாம் அப்பனே!!!
நிச்சயம் ஜெயிக்க முடியாதப்பா அப்பனே!!!
இதை தன் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய அவன்தனும் இதை ஓதுவானப்பா!!!
(அவரும் இந்த வாக்கை படிப்பார்)
அப்பனே ஓதும் பொழுது தெரியுமப்பா!!! அப்பனே
அப்பனே எவ்வாறெல்லாம் மனதை மாற்றுகின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின்
"""" தான் வாழ அப்பனே பிறரை கெடுக்காதே!!!!!!
என்றெல்லாம் அப்பனே இருக்கின்றது எவை என்று அறிய அறிய பின் அதாவது பெரியோர்கள் அப்பனே அதனைக் கூட பின் பொருட்படுத்தவில்லையே என்பேன் அப்பனே
யோசியுங்கள் அப்பனே யோசித்து வாழ்ந்தால் தான் அப்பனே வெற்றியும் பெற முடியும் என்பேன் அப்பனே நலன்களாக அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய
நாக தேவதைகளும் எவை என்று அறிய அறிய (நாக) கன்னிமார்களும் அப்பனே எதை என்று அறிய அறிய இங்கே இருக்கின்றார்கள் அப்பனே
ஆடி மாதத்தில் அழகாகவே அப்பனே மேல்நோக்கி வருவார்களப்பா
ஆனாலும் சில பேருக்கு தான் அது தெரியுமப்பா!!! புரியுமப்பா அப்பனே!!!
நல்விதமாகவே ஆசிகள் ஆசிகள் இன்னும் விளக்குகின்றேன் அப்பனே
பின் பக்குவங்கள் இவ் தேசத்திலே உள்ளது என்பேன் அப்பனே
பின் நலன்கள்!! ஆசிகள்!! ஆசிகள்!!!
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற கோயில்களுள் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முக்கியமானது. நயினாதீவு சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று. இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
அன்னையின் திருவருள் அமுதஊற்றாகப் பாயும் பதியாக விளங்குவது, நயினாதீவில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயிலாகும்.நாகலோகத்தின் நுழைவு வாயில் ஆக கருதப்படும் இக்கோயில் அமைந்துள்ள நயினாதீவு ஏறக்குறைய மூன்று மைல் நீளமும், ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட தீவாகக் காணப்படுகின்றது. இத்தீவு.
இந்த கோயிலின் அடியில் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதியில் தான் 14 லோகங்களில் ஒன்றான நாக லோகம் உள்ளது.
கடலில் நடுவே அமைந்துள்ள இந்த நாகலோக கோயிலுக்கு படகு மூலம் செல்ல முடியும்......கடல் அலைகள் கூட நாகங்கள் அலைபாய்வது போல காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.
யாழ்ப்பாணப்பட்டினத்திற்குத் தென்மேற்கே, சுமார் இருபதுமைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தைச் சூழவுள்ள சப்த தீவுகளுள் நடுநாயகமாக விளங்குவது நயினாதீவு.
நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது.
இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் வரை பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
புவனேஸ்வரி பீடமெனப் போற்றப்படும் சக்திபீடம் நயினாதீவிலுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மணித்தீவில், புவனேஸ்வரிபீடம் உண்டெனக் காளிதாசனால் கூறப்பட்டுள்ளமை, நயினாதீவிலுள்ள நாகபூசணி அம்மன் எழுந்தருளியுள்ள பீடத்தையே குறிக்கும்.
தற்காலத்தில் நயினாதீவு என்று வழங்கப்படும் இத்தீவு நயினார்தீவு, நாகநயினார்தீவு, நாகதீவு, நாகேஸ்வரம், மணிநாகதீவு, பிராமணத்தீவு, மணிபல்லவம், நாகதீபம், நாவலத்தீவு, நரித்தீவு, மணித்தீவு, உறார்லெம் எனப் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்திலுள்ள சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்து தலையுள்ள சர்ப்பச்சிலை, எங்குமே காணப்படாத புதுமையும் அற்புதமும் கொண்ட அமைப்பாகும். இச்சர்ப்பத்தின் முன்பாகவே நாகராஜேஸ்வரியின் திருவுருவம் காணப்படுகின்றது. இவ்வாறான தோற்ற அமைப்பை நோக்கும்போது, ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு மட்டுமே காணப்பட்டு, பிற்காலத்தில் அம்பாளின் திருவுருவத்தை ஸ்தாபனம் செய்து, வழிபாட்டுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறான ஐந்துதலையுடைய படமெடுக்கும் நாகத்தினை வழிபாடு பொருளாகக் கொண்ட ஆலயத்தை வேறெங்குமே காணமுடியாது.
இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம், ஆகம முறைப்படி கிழக்கு நோக்கியவாறு, சமுத்திரத்தை நோக்கிக் காணப்படுகின்றது. இவ்வாலயம் திராவிட முறைப்;படி கட்டப்பட்டு, ஆகமமுறை தழுவிய கோவிலாகக் காணப்படுகின்றது. இங்கு சுயம்பு வடிவான நாகத்தையும், அம்பாளையும் கொண்டுள்ள கர்ப்பக்கிருகம் காணப்படுகின்றது. அத்தோடு இருநிலைவிமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்தமண்டபம், தெற்குப்புற இராஜகோபுரம், கிழக்குப்புற ராஜகோபுரம், நவக்கிரகக் கோயில்கள், நால்வர்கோயில், சண்டேசுவரர்கோயில், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவாரமூர்த்திகள், யாகசாலை, மாகசாலை, வாகனசாலை, திருக்கேணி ஆகியவற்றைக் கொண்டு அற்புதக் கோயிலாக விளங்குகின்றது.
இங்கு எழுந்தருளியுள்ள மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீநாகபூசணி அம்மனின் திருவுருவம், தெற்குநோக்கித் தென்கோபுரவாயில் வழியாக வணங்கக் கூடிய முறையில், மகாமண்டபத்தில் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. இத்திருவுருவத்தின் தோற்றமும் அங்கலட்சணங்களும், மனோன்மணி அம்பாளுக்குரியதாகக் காணப்படுகின்றது. இவ்வன்னையார் நான்கு திருக்கரங்களுடன் நிகழ்கின்றார். முன்னுள்ள வலக்கரமும், இடக்கரமும் அபயவதாகக் கரங்களாகக் காணப்படுகின்றன. பின் இடக்கரத்தில், அட்சயமாலை காணப்படுகின்றது. சக்தியானவள் காரண காரியங்களுக்காகப் பல்வேறு தோற்றங்களையும் பல்வேறு நாமங்களையும் கொண்டவளாக விளங்குவதை ஞானியர அருள்மொழிகளால் அறியலாம்.
இவ்வாறான பல சிறப்புகளோடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளைத் தன்னகத்தே கொண்டது. நயினை ஸ்ரீ நாகபூசணி ஆலயம். இவ்வாலயத்தின் தலவிருட்சமாகக் காணப்படுவது, வன்னிவிருட்சமாகும்.
இவ்வாலயத்திற்குரிய புண்ணியதீர்த்தம் நயினாதீவின் மேற்குக் கடற்கரையோரத்தில் உள்ளது. இது தற்போது தீர்த்தக் கேணியாகவுள்ளது.
இது இராமேஸ்வரத்திற்கு நேரே அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தின் ஊற்று, கடலின் மத்தியில் நன்னீராகச் சுரப்பதாகக் கூறுவர். இக்கேணி தீர்த்தத் திருவிழாவின் போது, அம்பாள் தீர்த்தமாடும் இடமாகவும் அமைந்துள்ளது.
ஏனைய தீவுகளைவிட இங்கு சர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா நன்றி 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteராகு கேது - சக்திகளை உடம்பில் இருந்து நீக்கி யோகம் அடையும் சித்த ரகசியம் (பகுதி 1)
https://youtu.be/FmdgmbP_cto?feature=shared
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteராகு கேது - சக்திகளை உடம்பில் இருந்து நீக்கி யோகம் அடையும் சித்த ரகசியம் (பகுதி 2)
https://www.youtube.com/watch?v=Rxp611dCD90
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteராகு கேதுக்களை கட்டுப்படுத்தும் ரகசியம்
https://www.youtube.com/watch?v=8MauNg09jNo
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete