அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - பகுதி 7
( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
நம் குருநாதர்:- அப்பனே அவ்வெற்றிக்கும் யான்தான் பொறுப்பு. அப்பனே அதனால்தான் , புரியாதவர்களை யான் வாக்குகளே செப்புவதில்லை. அப்பனே புரிந்து கொண்டு ஏதாவது ரூபத்தில் நிச்சயம் அப்பனே மனிதனைத் திருத்துவதற்கே சித்தர்கள் யாங்கள் தயாராகி பின் அடித்து வந்து கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் அப்பனே மனிதனைத் திருத்தாவிடில் , வாயில்லா ஜீவராசிகள் கூட அழிந்துவிடும் என்பேன் அப்பனே. அப்பனே இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள். இதனால் இறைவன் பெயரைச் சொல்லியே மனிதன் ஏமாற்றுகின்றான் அப்பனே இறைவன் எங்கு பார்க்கப்போகின்றான் என்று. இதற்குச் சரியான உதாரணம் நீ கூற வேண்டும்.
அடியவர் :- பல ஆசிரமங்கள் இருக்கின்றதே..
நம் குருநாதர்:- அப்பனே ஆசிரமங்கள் எதற்கு?
அடியவர் 1 :- இறைவனைக் காண….
நம் குருநாதர்:- அப்பனே உன்னை ஏமாற்றி விட்டார்கள் அப்பனே. அப்பனே மனிதன், இறைவன் எங்கு இருக்கின்றான் என்று அப்பனே ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே. அதாவது பின் வாயில்லா ஜீவராசியைப் பலியிடுகின்றான் அப்பனே. இறைவன் பெயரைச் சொல்லியே. அப்பொழுதெல்லாம் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கின்றது. இறைவன் மீது பழி போட்டால் பின் அவ்பாவம் போய்விடும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் எவ்வளவு சுயநலக்காரன் என்று உதாரணம் செல்கின்றார் குருநாதர். ஐயா புரியுதுங்களா?
அடியவர்கள்:- புரியுது ஐயா.
நம் குருநாதர்:- அப்பனே அப்படியே வந்திட்டப்பா இது. மூட நம்பிக்கை அப்பனே. அப்பனே இன்னும் பல மூட நம்பிக்கை இருக்கின்றதப்பா. அவை எல்லாம் யாங்கள் ஒழிப்போம் அப்பனே கலியுகத்தில். அப்பனே அவ் மூட நம்பிக்கையை ஒழித்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான் அப்பனே. அப்பொழுதுதான் இறை ஆசிகள் கிடைக்கும் அப்பனே. அதுவரை கிடைக்காதப்பா.
அடியவர்கள் :- ( அமைதி )
நம் குருநாதர்:- அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் என்ற செய்ய வேண்டும்.
அடியவர் 3:- நன்றாகப் படிக்க வேண்டும்.
நம் குருநாதர்:- அப்பனே இதைப் புரிந்து கொண்டாயா?
அடியவர்கள் :- ( அமைதி )
அடியவர் :- கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றார் ( நம் குருநாதர் ).
நம் குருநாதர்:- அப்பனே இதற்குத் தீர்வுகள் இவ்வுலகத்தில் மனிதரிடத்தில் எவரிடத்திலும் இல்லையப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்கள் யாராலும் கர்மங்களை நீக்க முடியாது. எவரிடத்திலும் இல்லை என்று சொல்கின்றார் ( நம் குருநாதர் ).
நம் குருநாதர்:- அப்பனே அவை, இவை என்றெல்லாம் சொல்லலாம் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே ( மனிதன் ) வாய் கூசாமல் பேசுவானப்பா. அப்பனே வருவார்களப்பா அனைத்தும் செய்துவிட்டு, அப்பனே காதலிப்பான். அப்பனே திருமணம் செய்வான். அப்பனே குழந்தைகள் பெற்றுக்கொள்வான். அப்பனே பின் அவந்தனக்கு அனைத்தும் வெறுப்பாகிவிடும். பக்திக்குச் சென்றால் அப்பனே ஏதோ பிழைத்துக் கொள்ளலாம் என்று வருவானப்பா. இதெல்லாம் பக்தி இல்லையப்பா. பின் ( அவ் போலி சாமியார் ) சொன்னதும் நடக்காதப்பா. பின் அவனிடத்தில் சென்று பின் கர்மத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பா. இதுதான் நடக்குமப்பா இவ்கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா வேறு கேள்வி ஏதும் இருந்தால் கேளுங்கள்.
அடியவர் 4 :- உண்மையான பக்தி எது?
நம் குருநாதர்:- அப்பனே உண்மையான உடம்பு எது?
அடியவர் 4:- ஏற்கனவே ஐயா ( ஒரு வாக்கில் ) சொன்னது. உள் உடம்பு…
நம் குருநாதர்:- அப்பனே உண்மையான உடம்பு இல்லையப்பா. அப்பனே இவ்வுடம்புக்கும் சொந்தக்காரன் இறைவன் அப்பா. இதிலிருந்து என்ன புரிகின்றது?
அடியவர்கள் :- எதுவுமே நிரந்தரமில்லை, எதுவுமே செய்யக்கூடாது….
நம் குருநாதர்:- அப்பனே பக்தியை ஏன் செலுத்துகின்றாய் அப்பனே?
அடியவர் 4:- இறைவனைப் பார்க்க..
நம் குருநாதர்:- அப்பனே பக்தியைச் செலுத்தினாய். ஏன் கஷ்டங்கள் வருகின்றது?
அடியவர் 5:- சுயநலமாக இருப்பதால்..
நம் குருநாதர்:- அப்பனே சுய நலமானதும் முன் ஜென்மத்தில் பாவங்கள், இவ் ஆன்மா அதனால்தான் அப்பனே. (அவ் பாவம்) அதற்குத் தகுந்தாற்போலே அப்பனே சேமிப்புத்திறன் மூளையில் சொருகிவிடுகின்றான் இறைவன் அப்பனே. இதைப் பல உரைகளிலும் யான் எடுத்து உரைத்துவிட்டேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- Memory card. ஐயா செல்கள் எல்லாம் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள். அப்போ செல் memory card முளையில் இறைவன் சொருகி விட்டார். அந்த memory cardக்கு ஏற்றபடி நீங்கள் நடக்கின்றீர்கள் (அனுபவிக்கின்றீர்கள்). நம்ப எல்லாம் ( இறைவன் கட்டுப்பாட்டில் இயங்கும் ) ரோபோ போல.
நம் குருநாதர்:- அப்பனே எண்ணம் சீராக இருந்தாலே போதுமானதப்பா. சில தவறுகள் தெரியாமல் செய்து விடுகின்றான் மனிதன் அப்பனே. அதுவும் சேமிப்பாக வைத்துக்கொள்ளும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
நம் குருநாதர்:- அப்பனே நீங்கள் பேசுவதும் , கோபம் கொள்வதும் ( அனைத்தும் memory cardல் பதிவாகும் ) , அதனால்தான் அப்பனே பல ஞானியர்கள் அப்பனே தன்னை அறிந்து விட்டால் ஒன்றுமே பேசமாட்டார்கள் அப்பனே. அப்பனே அதாவது கஷ்டங்களுக்கு (6500) யார் சொந்தக்காரன் என்றால் மனிதன். இதை அனைவரிடத்திலும் தெரிவி.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா memory ஏறிக்கொண்டே போகக்கூடாது.
நம் குருநாதர்:- அப்பனே இதனால் பல தவறுகள் செய்து கொண்டே இருப்பான் அப்பனே. ( மூளையில் உள்ள அவ் ) செல் பின் நிரம்பிவிடும். அப்பனே இறந்து விடுவான் என்பேன் அப்பனே. மீண்டும் திடீரென்று (இறந்து போன ) அவ் ஆன்மா பின் சுற்றி அலையும் அப்பா, எங்குச் செல்வது என்று கூற ஆனால் இறைவன் கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. மற்றொரு உடம்பில் பின் நுழைந்து விடும் என்பேன் அப்பனே. அதற்குத் தகுந்தாற்போல் ஆட்டுவிக்கும் என்பேன் அப்பனே. இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அதாவது பல தவறுகள் செய்து , ஆசைகள் பல வைத்து அதனால் இறைவன் உடம்பில் வைத்த memory card நிரம்பி இறந்து போன முன்னோர்கள் ஆன்மா இறைவனைச் சுற்றிச் சுற்றி அலையும். இறைவன் அதற்கு வழி கொடுக்க மாட்டார். அப்போது அவ்ஆன்மா வம்சத்தின் அடுத்த வாரிசுகள், வம்சத்தில் வாழ்பவர்கள் உடலில் புகுந்து விடும். அப்போது அவ் ஆன்மாவின் இச்சைக்கு, ஆசைக்கு ஏற்ப வம்ச வாரிசுகள் ஆட்டுவிக்கப்படுவார்கள். அப்போது பல கர்மங்கள் அவர்களுக்கு உண்டாகும். இது அங்கங்கே நடந்து கொண்டே இருக்கின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். )
நம் குருநாதர்:- அப்பனே இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஒவ்வொரு இல்லத்திலும் கூட. அப்பனே அப்பொழுது பேய் போல், பேய் என்பது என்ன?
அடியவர் :- முழுமை அடையாத …
நம் குருநாதர்:- அப்பனே உன் மனம்தானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். இறந்து போன அவ் ஆத்மா உங்கள் உடம்பிலிருந்தால், அவ் ஆன்மா உங்கள் மனதை ஆட்டுவித்து உங்கள் மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள். உங்கள் கர்மாவை கழிக்காமல் அவ் முன்னோர்கள் ஆசைகளுக்காகவே வாழ நேரிடும்.)
நம் குருநாதர்:- அப்பனே அவ் மனதை அடக்குவதே இறைவன். அதனால்தான் அப்பனே என் பக்தர்கள் அனைவருக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பதற்கு வழி சொல்லி, உயர்ந்த வாழ்க்கை கொடுப்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள். )
அடியவர்கள் :- ( புரிதல்கள் )
நம் குருநாதர்:- அப்பனே இப்போது ( உயர்ந்த வாழ்க்கை ) கொடுத்துவிடுவேன் அப்பனே. ஆனாலும் உன் சந்ததிகள் அதே போலத்தான் பயன்படுத்தி மீண்டும் கஷ்டத்தை பின் எவை என்று அறிய அறிய..
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் அளித்தார்கள். இப்பொழுது உங்கள் கர்மங்களைக் கழிக்காமல் உயர்ந்த வாழ்க்கை கொடுத்தால், உங்கள் வருங்கால சந்ததிகள் உங்கள் கஷ்டங்களைச் சுமக்க நேரிடும். எப்படி எனில் உங்கள் கர்மாவுடன் ஆன்மாவாக நீங்கள் அலையும் பொழுது, உங்கள் முன்னோர்கள் உங்கள் உடம்பில் புகுந்து இப்போது செய்வது போல, நீங்கள் உங்கள் சந்ததிகளின் உடம்பில் புகுந்து அவர்களைக் கஷ்டங்களுக்கு உள் ஆக்குவீர்கள். இது தேவையா என்று குருநாதர் சொல்கின்றார்கள்.)
( அடியவர்கள் திதி கொடுப்பதன் அவசியத்தை இங்கு உணர வேண்டும். உங்கள் முன்னோர்களை முக்தி அடைய வைப்பது மிகவும் அவசியம். இங்கு சொல்வது போல நீங்கள் கொடுக்கும் திதி உங்கள் உடம்பில் அவர்களை இறங்க விடாது. 2023 மதுரை வாக்கில் இராமேஸ்வரம் வழிபாடு குறித்து மிக அழகாக நம் குருநாதர் எடுத்துரைத்துள்ளார்கள். முதலில் தனுஷ்கோடி சென்று அதன்பின் ஆதி ஈசன் இராமநாதசுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முன்னோர்கள் ஆதி ஈசனிடம் முக்தி அடைந்து விடுவார்கள்.
(1) சித்தன் அருள் 1513 மதுரை வாக்கு பகுதி 25.
(2) சித்தன் அருள் 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்.
(3) மேலும் சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா. இந்த பதிவில் திதி கொடுக்காதமையால் உங்களுக்கு வரும் கஷ்டங்களை மிக அழகாக விஞ்ஞான பூர்வமாக எடுத்து உரைத்து உள்ளார்கள்.
மேலும் திதி கொடுப்பதன் ரகசியங்களை அடியவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள "சித்தர்கள் ஆட்சி" என்ற YouTube தளத்தில் பின் வரும் பதிவு ( YouTube playlist ) உள்ளன. இந்த பதிவுகளையும் பார்த்து , புரிந்து உங்கள் முன்னோர்களுக்கு மறவாமல் திதி கொடுக்கவும்.
திதி அவசியம் கொடுங்கள் - உங்கள் முன்னோர்களுக்கு
https://www.youtube.com/playlist?list=PLr-rfmzhELfqJ2pcgkYdRtTR1Klec6JV3 ( YouTube playlist )
இந்த வாக்குகளைப் படித்து முழுமையாகப் புரிந்து உங்கள் முன்னோர்களுக்குத் திதி மறவாமல் கொடுக்கவும்.)
அடியவர்கள் :- ( நீடித்த அமைதி )
நம் குருநாதர்:- அப்பனே சித்தனை நம்பினோர் வீண் போவதில்லை என்பேன் அப்பனே. ஆனால் கஷ்டங்கள் வரும் அப்பா. ( அதுவும் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய கர்மங்களுக்காக மட்டுமே ). அப்பனே அனைத்தும் எங்களுக்குத் தெரியும் அப்பா. அதாவது நீ நோய்வாய் பட்டுள்ளாய் என்பதைக்கூட அப்பனே எங்களுக்குத் தெரிந்து இரவில் உன் தலைமேல் தட்டினால் அனைத்தும் போய்விடுமப்பா. பின் ஔஷதங்களே ( மருந்துகளே ) தேவை இல்லை.
அப்பனே இப்பிறவியிலும் அதாவது இச்சென்மத்திலும் கூட அப்பனே கலியுகத்திலும் கூட பலபேரை யான் காப்பாற்றியுள்ளேன் பல பல வழிகளிலும் கூட. அப்பனே இதனால் உங்களைக் காப்பாற்ற மாட்டேனா என்ன?
ஆனாலும் அப்பனே அறிவுகள் வளரவில்லையே. அதனால்தான் கவலை.
அடியவர்கள் :- ( அமைதி )
நம் குருநாதர்:- அப்பனே யோசித்தீர்களா அப்பனே? ஏன் எதற்குத் தோல்விகள்? ஏன் எதற்குக் கஷ்டங்கள்? அதை யோசித்தாலே போதுமானதப்பா. அப்பனே இறைவன் அருகில் வந்துவிட்டு அனைத்தும் மாற்றிவிடுவானப்பா.
( நீண்ட நேரம் ஏறத்தாழ 2 மணி நேரம் சுவடி தொடர்ந்து சுவடி ஓதும் மைந்தன் படித்ததால் அங்கு தேநீர் பரிமாறும் நேரம் வந்தது.)
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா முதலில் பக்குவங்களைக் குருநாதர் தருகின்றார் அனைவருக்கும். அந்த பக்குவம் கொடுக்காமல் ஒன்றுமே செய்ய இயலாது.
நம் குருநாதர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் இன்னும் பக்தன் புதுப்புதுவான வித்தையும் காட்டுவானப்பா. அப்பனே இதனால் பல பெண்களையும் கூட ( பல போலிச் சாமியார்கள் ) பக்தன் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றியும் வைத்திருக்கின்றான் அப்பனே. அவனுக்கெல்லாம் தண்டனை கொடுப்பதா? இல்லையா? நீங்களே கூறுங்கள் என்பேன் அப்பனே.
அடியவர்கள் :- (ஒருமித்த குரலில்) கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் ஐயா.
நம் குருநாதர்:- அதனால்தான் அப்பனே உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லியிருக்கின்றேன். அப்பனே பின் நம்பாமல் சென்றாலும் உன்னை ஏமாற்றிவிடுவான் என்பேன் வாழ்க்கை. அவ்வளவுதான் வாழ்க்கை. அப்பனே பின் ஏமாற்றியதாக இருந்தாலும் பின் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ( அவ் போலி சாமியார் என்ற பக்தன் தன்னிடம் உள்ள ) பாவத்தை தேடிக் கொடுத்துவிடுவான் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏமாற்றினால் பரவாயில்லை. மீண்டு வந்துவிடலாம். ஆனால் அவர்கள் பாவத்தை சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள். (அதை கழிப்பது கடினம்)
நம் குருநாதர்:- அப்பனே உண்மை ( பக்தன் ) ஞானி அப்பனே அன்பு, பொறுமை, கோபம், அதாவது அன்பு நிறைந்திருப்பான். பொறுமை நிறைந்திருக்கும். கோபங்கள் வராது. அனைவரும் ஒன்றே. அனைவரும் இறைவனின் குழந்தைகள். இறைவன் போட்ட பிச்சை என்று அனைத்திற்கும் காரணம் இறைவன். இறைவனை வேண்டிக்கொள் என்றுதான் சொல்வான் அப்பனே.
ஆனாலும் அப்பனே இன்றைய நிலைமையில், என்னால் அனைத்தும் முடியும். யான்தான் செய்கின்றேன் என்று அல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே புதுப்புது கதைகள் எல்லாம் விடுவானப்பா. அவை எல்லாம் பொய்யப்பா.
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால்தான் அப்பனே சித்தர்கள் இப்படியே விட்டு விட்டால் சித்தர்களே இல்லை என்று மனிதன் ஒத்துக்கொள்வானப்பா.
அப்பனே சித்தன் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றான் என்றால் சித்தன் கண்டு கொள்ளப் போகின்றானா என்ன என்று. ஆனால் அப்பனே இப்பொழுது அடிகள் பலமாக விழுந்திருக்கையில் , அப்பனே இன்னும் அப்பனே பின் (அடி) விழத்தான் போகின்றது அப்பொழுது புரிந்து கொள்வான் சித்தன் யார் என்று.
அப்பனே இன்னும் பொய்கள் கூறுவானப்பா. அகத்தியன் தான் யான் என்று. அப்பனே போகன்தான் யான் என்று. யான் மறு பிறவி அகத்தியன் என்று கூற அப்பனே. அப்பப்பா!!!!! அப்பா!!!!
அப்பனே அவன் காமக்கொடூரன் என்பேன் அவந்தனை.
அப்பனே ஆனாலும் இப்படித்தான் அப்பனே பொய்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் உலகத்தில்.
அப்பனே இன்னும் இன்னும் கலியுகத்தில் அதாவது பக்தியைப் பொய்யாக்குவான் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் என்னுடைய பக்தர்களுக்கு பல பல உண்மைகளைத் தெரிவித்து , அப்பனே நிச்சயம் அப்பனே அடிப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அப்போ சில பக்தர்களை நானே ஏற்படுத்தி அந்த பொய்யான பக்தர்களை எல்லாம் அழிப்பேன் என்று சொல்கின்றார்.
நம் குருநாதர்:- அப்பனே நம்தனக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை கூட அப்பனே பின் அறிந்து கொள்ளவே இல்லையே பக்தன். அப்பனே இறைவன் அங்கங்கு திரிந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே. நிச்சயம் அப்பனே யான் சொல்வேன் அப்பனே. அவனைப் பார்பதற்கும் வழிகள் சொல்வேன் அப்பனே. ஆனால் நீங்கள் பொறுதிருக்க வேண்டும். அப்பனே சொல்லிவிட்டால் அதையே ஏக்கங்கள் கொண்டு அப்பனே பின் கடமையில் கண்ணாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா நன்றி 🙏
ReplyDeleteஐயா வணக்கம். நீங்கள் பழநி அல்லது பழநி அருகிலுள்ள இடத்தில் வருகை புரிந்து நாடி படிக்க போவதை முன் கூட்டியே அறிந்து கொள்வது எப்படி என்பதை தயவுசெய்து கூறுங்கள் ஐயா. நன்றி
ReplyDeleteஅடியேன் நாடி வாசிப்பதில்லை. திரு.ஜானகிராமன் அவர்கள் நாடி வாசிக்கும் செய்தி கிடைத்தால் தெரிவிக்கிறேன்.
Delete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteசித்தன் அருள் - 1667
அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 7
https://www.youtube.com/watch?v=wSSD4J6WSSc
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete