​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 August 2024

சித்தன் அருள் - 1670 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை!



15/7/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம். 

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே!!! எம்முடைய ஆசிகள் !!அப்பனே உண்டு உண்டு கடைநாள் வரையிலும்!!!அப்பனே    இதனால் ஏற்றங்கள் தானப்பா!!! வருங்காலத்தில் அப்பனே!!

குறைகள் இல்லை. ஆனாலும் அப்பனே பக்தி என்பது என்ன என்பதையெல்லாம் மனிதனுக்கு வருங்காலத்தில் தெரியாதப்பா. 

இவ்வாறு தெரியாமலே வலம் வருவானப்பா இதனால் அப்பனே பின் தோல்விகள் ஏற்பட்டு அப்பனே மீண்டும் எதை என்று தெரியாமல் அப்பனே காலத்தை வீணாக்குவான் அப்பா

இதனால் அப்பனே பின் தன் கையே தனக்கு உதவி என்பது எல்லாம் அப்பனே பெரியோர்கள்!!...


அவை மட்டுமில்லாமல்.

தன் வாழ்க்கை தன்னிடத்திலே !!! என்று அப்பனே உரைத்தும் உரைத்தும் அப்பனே மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கிறான் அப்பனே மனிதன். 


அப்பனே ஏன் எதற்கு அப்பனே பிரம்மாவும் அப்பனே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பனே விதியை அதாவது இவந்தன் எவ்வாறு தான் பின் அறிந்தும் கூட அதனால் விதியை பின் அறிந்தும் கூட சுலபமாக அப்படியே விட்டுவிடுவான்.

அதாவது விதி செயல்படாதவாறு!!!!


அதாவது இவந்தன் எப்படித்தான் செயலாற்றுகின்றான் என்று பார்ப்போம் என்று!!!


அப்பனே அதில் நீங்கள் நிச்சயம் தேர்ச்சி பெற்று விட்டால் அப்பனே நிச்சயம் பின் பிரம்மனும் சரி இவந்தன் இன்னும் மேலே பின் அழகாகவே அறிந்தும் கூட மேலே தூக்கி விடலாம் அதாவது விதியை நல்லதாகவே எழுதிவிடலாம் பின் வருங்காலத்தில் என்று!! 


அப்பனே ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இப்படித்தானப்பா!!!


ஆனாலும் உண்மை நிலை மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!! ஆனாலும் அதில் தான் அப்பனே கர்மத்தை அனைத்தையும் மனிதன் சேர்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே 


ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே பிரம்மனும் கூட இவந்தன் நிச்சயம் பின் வீண்!!!!! இவந்தனை படைத்ததும் வீண் என்றெல்லாம் எண்ணி பின் அவனுடைய விதியை அப்பனே கஷ்டம் என்று எழுதி வைத்து விடுவான் அப்பனே!!!


அதாவது அறிந்தும் கூட அப்பனே எப்படி என்பதெல்லாம் அப்பனே பின் சிறு வயதில் இருந்தே அப்பனே பின் எழுதி! எழுதி!!


ஆனாலும் அப்பனே அதை மாற்றவும் அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மனாலும் முடியுமப்பா!!!


அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது பின் மனிதனிடத்தில் நெருங்குவானப்பா!!! அப்பனே அறிந்தும் கூட அதாவது அப்பனே பின் தலைவலியை உண்டாக்குவானப்பா!!! அப்பொழுது அப்பனே பின் மாற்றத்தை ஏற்படுத்தி செலுத்தி விட்டு அப்பனே சென்று கொண்டே இருப்பானப்பா!!!!


இதுதான் அப்பனே!!!



இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மனால் அப்பனே கெடுக்கவும் முடியும் அப்பனே கொடுக்கவும் முடியும் அப்பனே 


ஆனாலும் அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே பிரம்மனும் ஒரு காந்தகம் தான் அப்பா !! அறிந்தும் அறிந்தும்!!!


இதனைப் பற்றி ரகசியங்கள் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அனைவருக்குமே புரியும் என்பேன். அப்பனே!!


அதனால்தான் என் பக்தர்களுக்கு அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே எப்படி வாழ வேண்டும்??? எப்படி வாழ்ந்தால் பின் பரிசுத்தமான மனதை வைத்துக் கொண்டு எப்படி பின் இறைவனை பின் மனதில் வைத்து பின் எதை என்று அறிய அறிய மனதிலே வைத்துக் கொண்டு பல விஷயங்களை ஜெயிக்கலாம் என்பதை எல்லாம் நிச்சயம் பின் எடுத்துரைக்கும் பொழுது தெரியுமப்பா அப்பனே



அதனால்தான் முதல் வகுப்பிலேயே பின் தேர்ச்சி பெறவில்லை என்பேன். அப்பனே பக்தர்கள்!!!


அப்பனே அதனால்தான் முதலில் இருந்து பின் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே 

பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே உயர்வான இடத்திற்கு அப்பனே முதலிலே சென்று விட வேண்டும் என்பதெல்லாம் அப்பனே மனிதனின் அப்பனே எண்ணம் அப்பா!!!


ஆனாலும் அப்பனே இவ்வாறு பின் சென்று விட்டால் அப்பனே உடனடியாக கீழே விழுந்து விடுவான் என்பேன் அப்பனே!!!


அதனால்தான் முதல் இரண்டாம் மூன்றாம் அப்பனே நான்காம் பின் வகுப்புகளாகவே பிரித்து பிரித்து அப்பனே பின் அதன் மூலம் பக்குவங்களை கொடுத்து கொடுத்து அப்பனே எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!


அதுதான் நிரந்தரம் என்பேன் அப்பனே!!


இதனால் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அறிந்தும் அப்பனே பின் அறியாமலும் நிச்சயம் அப்பனே அறியாமல் இருந்தால் இறைவனை நிச்சயம் காண முடியாதப்பா!!


எவ் மந்திரங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவ் ஹோமங்கள் அப்பனே இன்னும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய திருத்தலங்கள் திருத்தலங்களாக ஓடி ஓடி அப்பனே...... ஆனால் எங்கு இருக்கின்றான்?? இறைவன் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிவதில்லை என்பேன் அப்பனே 


இதனால் அப்பனே பின் அவ்வாறு அறியாமல் பின் இறைவனை வணங்கினேனே!!!!! பின் அனைத்தும் வீணாக போய்விட்டதே என்று எண்ணி நிச்சயம் பின் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்திட்டு மீண்டும் பிறப்புக்கள் பிறப்புக்களாக போய்விடும் என்பேன் அப்பனே!!!



அதனால்தான் அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் இப் பிறவியே அதாவது பிறவி இல்லாத பேரானந்தத்தை அப்பனே பெற வேண்டும் மனிதன்!!! அதாவது என்னுடைய பக்தர்கள் கூட!!!


எதை என்றும் அறிய அறிய அப்பனே அவ் பிறவி இல்லாது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பிறவி இல்லாமல் ஆக்குவதற்கு தான் அப்பனே சித்தர்கள் யாங்களும் கூட அப்பனே ஓடோடி வந்து மனிதனுக்கு உதவிகள் செய்து மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து பின் கஷ்டத்தில் மிதக்காதே அப்பனே என்றெல்லாம் அப்பனே கூறிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே 


இதன் தத்துவத்தை உணர்ந்து கொண்டால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே உயர்வுகள் பெறலாம்!!!



நீரின் !!!....


நீரிலே ஊற்றி 


ஊற்றிய பின் 


பின் எடுத்து 


எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம் 


லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட 

ஓடிய நீரை எடுத்து!!!


எடுத்தானாம் ஒருவன் 


ஆனால் வரவில்லையே 


ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!


அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!


நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!


அதேபோலவே நிச்சயம் அறிந்தும் கூட பின் தெரிந்தும் கூட இறைவனை எப்படி எடுத்தால் நிச்சயம் மனதில் பின் அறிந்தும் கூட வைத்து விடலாம் என்று நிச்சயம் மனிதனுக்கு தெரியவே இல்லையப்பா!!!


அப்பனே இதன் ரகசியத்தை இன்னும் இன்னும் அப்பனே தத்துவம் அப்பனே.....


ஓர் முனை அப்பனே சென்றால் அப்பனே மீண்டும் அவ் முனையின் அறிந்தும் கூட அப்பனே வரும் அப்பா 


அப்பனே இதற்கு சான்று எதை என்று அறிய அறிய அப்பனே இவற்றில் எதை என்று புரியப் புரிய அப்பனே!!!


 இதனால் அப்படி வீசுவது எதை???


அப்பனே நீ!!!! எவ்வாறு வீசுகின்றாயோ... அவ்வாறு மீண்டும் உன்னிடத்தில் வருமப்பா !! அப்பனே எதுவானாலும் சரி அப்பனே!!!


பாவமானாலும் அப்பனே புண்ணியமானாலும் அப்பனே!!


அதாவது பாவத்தின் முனை அப்பனே நிச்சயம் மீண்டும் உடனடியாக திருப்பி அடிக்கும் அப்பா இவ்வுலகத்தில் அப்பனே 


அதாவது புண்ணியத்தின் முனை அப்பனே சிறிது தாமதமாகலாம் என்பேன் அப்பனே 


ஆனால் மீண்டும் அப்பனே திரும்பி திரும்பி அப்பனே!! அறிந்தும் கூட


இதனால் அப்பனே ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் என் பக்தர்களுக்கு அப்பனே ஆன்மாவை பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய நிச்சயம் ஆன்மாவை எங்கு காணலாம் எப்படி காணலாம் பின் எதை என்று அறிந்தும் கூட என்றெல்லாம் அப்பனே நிச்சயம் காட்டுவேன் அப்பனே 


ஆனாலும் முதலில் அப்பனே தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே அனைத்தும் கூட 


இறைவன் எங்கு இருக்கின்றான்???

அப்பனே அறிந்தும் கூட இதனால் அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே 


நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே சிறிது தாமதம் ஆகலாம் என்பேன் அப்பனே ஆனாலும் அனைத்தும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே நன்றாகவே அப்பனே 


இதை நன்கு புரிந்து கொண்டு அப்பனே பின் நிச்சயமாய் நல்முறையாகவே அப்பனே நின்றால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பனே பின் நீடூழி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து அப்பனே நிச்சயம் அவர்களையும் கூட அப்பனே பிறவிகள் இல்லாத பெருவாழ்வை அப்பனே அடையச் செய்து விடலாம் என்பேன் அப்பனே 



இதனால் அப்பனே மந்திரங்கள் தந்திரங்கள் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எவ்வளவு அப்பனே பின் உருவெடுத்தாலும் அதாவது உருவேற்றினாலும் அப்பனே ஒன்றும் நடக்காது. 


ஆனாலும் அறிந்தும் கூட ஏன் நடக்காது??? என்பதையெல்லாம் அப்பனே அறிந்தும் அறிந்தும் அப்பனே


இதனால் அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனால் அப்பனே உடம்பில் அப்பனே துகள் எதை என்று அறிய அறிய அப்பனே ஈர்க்கும் துகள் அப்பனே பின் பல வடிவங்களில் கூட பின் இருந்து கொண்டே அப்பனே 


அதற்கு அப்பனே ஆனாலும் அப்பனே அதற்கு அதாவது ஒரு எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் இயக்குவதற்கு அப்பனே ஒரு மூலம் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே 


அதனால் அச் செல் அதாவது துகளை கூட அப்பனே இயக்குவதற்கு அப்பனே ஒன்று செயல்படுகின்றது என்பேன் அப்பனே 


அதாவது அவ் துகளை அப்பனே செயல்பட செயல் பட அப்பனே அதாவது செயல்பட பின் துவக்கி விட்டால் அப்பனே அதாவது அப்பனே நன்முறைகளாகவே அனைத்தும் மாறும் அப்பா 

ஏற்றங்களும் கிட்டும் அப்பா 

அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் என்பேன் அப்பனே 

துன்பங்கள் வராது அப்பனே 

அறிந்தும் கூட 


இதனால் அத் துகளை அப்பனே எப்படி இயக்குவது?????

என்பது மனிதனுக்கு தெரியவில்லையே என்பேன் அப்பனே 


இதனால் அப்பனே சரியாகவே அனைத்தும் தெரிந்து கொண்டாலும் அப்பனே தோல்வியில் முடிவடைந்து விடுகின்றது என்பேன் அப்பனே 


அத் துகளை எப்படி இயக்கலாம் என்பதையெல்லாம் வரும் காலத்தில் யான் தெரிவிக்கின்றேன் அப்பனே 


அப்பொழுது நீங்கள் ஆன்மாவையும் நேரில் காணலாம் என்பேன் அப்பனே 


இறைவனையும் கூட அப்பனே அறிந்தும் கூட அறியலாம் என்பேன் அப்பனே 

பல வகையிலும் கூட நன்மைகள் பெறலாம் என்பேன் 

அதனால் அப்பனே அத் துகள் அப்பனே இளம் வயதிலே சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும் என்பேன் அப்பனே 

ஆனால் அப்பனே தன் எண்ணத்திற்கு ஏற்றவாறே அப்பனே மாறி மாறி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது சில எதை என்று அறிய அறிய அப்பனே சில சில தீய அதாவது பழக்கங்களாலும் அப்பனே சில சில அப்பனே உணவுகள் கூட அப்பனே பின் உட்கொண்டால் அப்பனே அவ் துகள் அப்பனே செயலிழந்து காணப்படும் அப்பா 


அப்பொழுது ஒன்றுமே தெரியாதப்பா 


காசுகள் சம்பாதிக்க வேண்டியது அப்பனே அப்பனே அதை அழிக்க கூடியது அப்பனே அறிந்தும் கூட பின் திருமணம் செய்து கொள்வது அப்பனே குழந்தைகளை பெற்றுக் கொள்வது மீண்டும் அப்பனே இப்படித்தான் அப்பனே ஆனாலும் கஷ்டங்கள் வந்துவிடுமப்பா 


ஆனாலும் அத் துகளை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே நன் முறைகளாகவே அதை இயக்குவதற்கு அப்பனே பல தத்துவங்கள் அப்பனே 


இவையெல்லாம் வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு யானே அப்பனே எடுத்துரைக்கும் பொழுது புரியும் அப்பா அகத்தியன் யார்?? என்பதை கூட!!


இதனால் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே 



அய்யனின் அப்பனே 

(ஐயப்பன்) ஆசிர்வாதங்கள் எதை என்று அறிய அறிய கலியுகத்தில் வேண்டும் அப்பா 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட......


""""அய்யன் அப்பனே பல வித்தைகள் அறிந்தவனப்பா!!!


அறிந்தும் எதை என்று அறிய அப்பனே...


ஐயப்பன் அமர்வு கோலம் ரகசியம் !!



அதாவது அப்படியே பின் தியானங்கள் அப்பனே இப்படி (சபரிமலை ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலம் யோகப்பட்ட தபஸ்ரூப கோலம் முதுகுத்தண்டு நேராக ஐயப்பன் யோகாசன ரூபமாக, யோக பட்டையுடன், கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். சின்முத்திரை என்பது ஞான நிலையை உணர்த்துவதாகும்.) 


 இப்படி  அமர்ந்தால் அப்பனே ஒன்றும் அப்பனே பின் செயல்படாமல் எதை என்று அறிய அறிய இருக்கலாம் என்பேன் அப்பனே !!!


அதாவது எதை என்று அறிய அறிய எவ் ஞாபகம் வராது என்பேன். அப்பனே!!


அதனால்தான் இக்கோலத்தில் அய்யன் அமர்ந்திருக்கின்றான் என்பேன் அப்பனே!!


ஆனாலும் அப்பனே இவ்வாறு அப்பனே அமர்ந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே என்னென்ன? எவை என்று? அறிய அப்பனே பின் தெரியும் அப்பா!!


அப்பனே எங்கு எவை என்று அறிய அறிய அதை தடுத்து நிறுத்த அப்பனே மனது சாந்தி பெறுமப்பா!!!


ஐம்புலன்களையும் கூட அடக்கலாம் என்பேன் அப்பனே!!


(கண், காது, மூக்கு, வாய், மெய் · ஐம்பொறிகள். ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம்.)


இதனால் இத் தவக்கோலத்திலே இருக்கின்றான் அப்பா அய்யன்!!


ஆனால் இவைதன் மனிதர்களால் செய்ய முடியாதப்பா 


அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் அப்பனே பின் ஒருவன் தான் என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே தெரியும் அப்பா 


ஏன் ?பின் பல பல ரூபங்களில் கூட எதற்காக?? என்றெல்லாம் அப்பனே!!


அதனால் வாழ்க்கை உன்னிடத்திலே என்று விளக்குவதற்காகவே அப்பனே மணிகண்டன் அப்பனே பின் அறிந்தும் கூட அப்படியே இருக்கின்றான் அப்பா 


ஆனாலும் யாரும் அதை உணர்வதில்லை என்று அப்பனே 


ஏன் ? இங்கு சக்திகள்!! (சபரிமலையில்) எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே அதாவது அப்பனே இங்கிருந்து சிறிது தொலைவிலே  அப்பனே பின் அதாவது நன் முறைகளாகவே அப்பனே பின் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தார்கள் என்பேன் அப்பனே... நன் முறைகளாகவே அப்பனே 

இவர்களுக்கும் கூட அதாவது அய்யன் மீது அதிக பக்திகள் அப்பனே.. அதாவது அக் கணவனும் கூட அறிந்தும் கூட பின் ஏறுவான் இறங்குவான் 

(சபரிமலை யாத்திரை) 

ஆனாலும் குழந்தைகள் இல்லையப்பா இவர்களுக்கு!!

ஆனாலும் மனம் வருந்துவாள் அப்பனே அவன் இல்லத்தவள்!!! (மனைவி) 

பின் அய்யனே எதை என்று கூட உன் பக்தனாகவே இவன் ஆகிவிட்டான்....அய்யனே அய்யனே!!! பின் சபரிநாதனே!!! என்றெல்லாம் அழைத்து உன்னையே நோக்கி கொண்டிருக்கின்றான்!!

ஆனாலும் எந்தனுக்கும் கூட உன் மீது பக்திதான்!!!

ஆனாலும் என்னை பின் அனுமதிக்க அதாவது என்னால் பின் அறிந்தும் கூட உன்னை பின் காண நிச்சயம் அறிந்தும் கூட என்னால் முடியவில்லையே!!!

ஆனாலும் பின் அறிந்தும் கூட பின் அய்யனே... குழந்தை வரத்தை தா!!!!

அக்குழந்தை ரூபமாக நீயே பின் பிறப்பாய் அதனால் உன்னை பார்த்து பார்த்து யான் நன்முறைகளாகவே அறிந்தும் கூட அதாவது.... எங்களுக்கு அது போதும் எங்கும் யான் செல்ல மாட்டேன்!! என்று அவள்தனும்!! கூட!!

இதனால் பின் அனைவருமே அதாவது கிராமத்தில் பல பல வகைகளிலும் கூட ஆனாலும் இவர்களும் நிச்சயம் பின் அய்யனுக்கு பல பல வழிகளிலும் கூட அதாவது திருவிழாவை நடத்தினார்கள். 

அனைவருக்கும் பின் உணவு அதாவது பல தானங்களையும் கூட பின் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்!!! நிச்சயம் அறிந்தும் கூட 

இதனால் அனைவரின் வீட்டிலும் கூட சொல்லி வைத்து அறிந்தும் கூட அன்றைய தினத்தில் வந்து விடுங்கள் என்று!!

ஆனாலும் இவை தன் கூட அப்பனே  எவை என்று அறிய அறிய ஆடி திங்களிலே என்பேன் அப்பனே 

இவ்வாறு பின் அவ் வூரில் எதை என்று அறிய அறிய அனைவருக்குமே சொல்லி அனுப்பினார்கள் என்பேன் அப்பனே 

இதனால் பின் இவர்கள் கூட அதாவது அன்னத்தைக் கூட எதை என்று புரியப் புரிய அப்பனே.. பல வகையிலும் கூட சமைத்து அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பல மனிதர்களுக்கு கொடுக்க எவை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே ஆனாலும் அவ் தினம் வந்தும் விட்டது என்பேன் அப்பனே ஆனாலும் இதை என்றும் புரியாமலும் கூட அப்பனே ஆனாலும்... அன்று இவர்கள் அழைத்து அப்பனே ஆனாலும் அன்றைய தினத்தில் யாருமே வரவில்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் மனம் பின் காயமுற்றது இருவருக்கும்!!

இவ்வாறு அனைவரையுமே அழைத்தோமே!!!!

பின் யாருமே வரவில்லையே என்று!!! ஆனாலும் எதை என்று அறிய அறிய என்ன செய்வது? என்று!! அறியாமல் கூட!!

ஆனாலும் மீண்டும் பின் எதை என்று அறிய அறிய பின் மீண்டும் கூப்பிடுவோம் என்று சென்றார்கள்..

ஆனால் அனைவருமே பின் அறிந்தும் கூட அய்யன்... அதாவது உங்களுக்கு என்ன தான் கொடுத்தான்????? எதை என்று புரிய எவை என்று அறிய!! பின் அதாவது குழந்தை வரமும் இல்லை!!! அதாவது யாங்கள் உங்கள் வீட்டில் பின் அதாவது உணவை உண்டால் நிச்சயம் தரித்திரம் எங்களுக்கு வந்துவிடும்!! அதாவது எங்களுக்கும் சாபங்கள் ஏற்பட்டு விடும்!! அதனால் உங்கள் அன்னதானம் தேவையில்லை!! என்பதெல்லாம் அனைத்தும் அதாவது கிராமத்தில் இருந்தவர்கள் அவமானம் படுத்தி விட்டார்கள்!! அறிந்தும் கூட!!

இதனால் பின் அதாவது மணிகண்டன்... திருவுருவம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே இல்லத்தில் எதை என்று புரிய புரிய.. திருவுருவத்திற்கு முன்பு அழுது புலம்பினர்...

அய்யனே!!!! மணிகண்டனே!!!

உன்னையே நம்பி இருந்தோம்!! ஆனாலும் இப்படி எதை என்று அறிய அறிய!!

என்ன தவறு செய்தோம்?? யாங்கள்???

உன்னை தானே !! எதை என்றும் அறிந்தும் கூட!!!!

என்ன எதை என்று புரிய புரிய...நாங்கள் இதுவரை என்ன தவறு செய்தோம்????

அனைவருக்கும் நல்லது தான் செய்து கொண்டிருக்கின்றோம்!!

ஏன் இந்த கஷ்டங்கள்?? என்று அழுது புலம்ப!!!

அப்பனே பின் இவைதன் பின் மணிகண்டனுக்கும் தெரிந்ததப்பா!!!

இதனால் எதை என்றும் புரிய புரிய... முதலில் அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் அதாவது பிச்சை ஏந்திய அதாவது பிச்சைக்காரனாகவே அப்பனே மணிகண்டன் மறு உருவம் கொண்டு வந்தான் அப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இல்லத்திற்கு முன்பு வந்து தாயே!!! என்று அழைத்தான்!!

ஆனாலும் ஓடோடி வந்தாள்!!! அறிந்தும் கூட!!

தாயே!!!! உணவு இருக்கின்றதா?? என்று!!! அறிந்தும் கூட!!

எதை என்றும் புரிய புரிய 

அப்பனே இப்படித்தான் அப்பா இப்பொழுது பக்திகள் அப்பனே உண்மைகள் இல்லை என்பேன் அப்பனே 

இதனால் உண்மையானவனுக்கு அப்பனே சில சோதனைகள் கூட அப்பனே இறைவனே ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அவையெல்லாம் கடந்து வந்தால் அப்பனே இறைவனே அப்பனே தனக்காக என்ன வேண்டுமானாலும் அப்பனே செய்வான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே... சோதனையில் பாதி நிலையில் வந்துவிட்டால் அப்பனே... எந்தனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே மனிதன் அப்பனே அதாவது மனதே மாறிவிடுகின்றது என்பேன் அப்பனே..

அதனால் நீ இப்படியா?? இனி நீ இப்படித்தான் என்றெல்லாம் இறைவன்... உன்னை திருத்தவும் முடியாது!!! நீ அப்படியே இரு என்று சொல்லிவிட்டு... சென்று கொண்டே இருப்பான் அப்பனே 


இதனால் பக்தி அப்பனே அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே 

பக்திகள் சாதாரணமில்லை பக்திகள் சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

அறிந்தும் கூட இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் நன்குணர்ந்து!!!

தாயே!!! ஏதாவது பின் கொடு!!!யான் பசியோடு இருக்கின்றேன் !! அன்னத்தை கொடுப்பாயாக என்று!!

ஆனாலும் ஓடோடி வந்து பின் நிச்சயம் கொடுக்கின்றேன்... யார் நீங்கள் என்று!!

தாயே அறிந்தும் கூட நிச்சயம் யான் இங்கு தர்மம் ஏந்தி ஏந்தி பின் அறிந்தும் கூட பல ஊர்களுக்கு சென்று நிச்சயம் தர்மம் ஏந்துவேன்!!

ஆனாலும் இன்று ஒரு நாள் நிச்சயம் யாரும் எந்தனுக்கு பின் கொடுக்கவில்லை....

அதனால் உன் இல்லத்தில் வந்து பின் ஏந்துகின்றேன் என்று!!!

சரி!!! சரி!!!!.... இல்லத்திற்குள் வாருங்கள்!! அமருங்கள் இங்கே என்று!!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் இல்லத்திற்குள் வா என்று கையைப் பிடித்து அறிந்தும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் பெண்மணி நிச்சயம் அமர்க!! என்று!!

நிச்சயம் அதாவது பின் எதை என்று புரிய புரிய கண்களில் நீரோடே!!!(கண்ணீருடன்) நிச்சயம் பகிர்ந்தாள் பின் உணவை கூட!!!!

இதனால் ஆனாலும் பின் அய்யன் பார்த்தான்!!!!

ஏனம்மா????? கண்களில் பின் கண்ணீர் என்று!!!!

நிச்சயம் யாங்கள் எதை என்று கூற என்ன தவறு?? அதாவது தவறு எதையும் செய்யவில்லை எத் தவறும் செய்யவில்லை!!!

என் கணவனும் பின் அய்யனின் பக்தன்!!

அறிந்தும் கூட யானும்!!!

இதோ !! பார்!!!!......... அய்யனுக்கு... என்னவெல்லாம் அதாவது என்னவெல்லாம் வேண்டுமென்று பின் அய்யனுக்கு இஷ்டமானதை எல்லாம்... அதாவது அய்யன் என்ன இஷ்டப்படுகின்றானோ அவையெல்லாம் (சமைத்து) வைத்திருக்கின்றேன்... நீயே பார்!!!!

ஆனால் எங்களை பின் அதாவது ஊரார் அனைவருமே சேர்ந்து எங்களை தரக்குறைவாக பேசி பின் அறிந்து!!! யாரும் உணவை உண்ணவும் வரவில்லை அறிந்தும் என்றெல்லாம்!!! பல வகையிலும் கூட பின் நீங்கள் பக்தர்கள் இல்லை பொய் பக்தர்கள் என்றெல்லாம்.. பின் ஏசிவிட்டனர்!!!

இதனால் பின் இவ்வளவு உணவு எல்லாம் சமைத்து வீணாகிவிட்டது என்றெல்லாம்..

நிச்சயம் கவலைப்படாதே தாயே!!!!

நிச்சயம் அறிந்தும் என்று அதாவது பசிக்கின்றது நிச்சயம் எந்தனுக்கு இடு என்று!!!

இதனால் நிச்சயம் அவளும் உணவை இட்டாள்!!!

இதனால் அறிந்தும் கூட அதாவது நிச்சயம் பின் சபரிநாதனும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய தன் நெற்றிக்கண்ணை திறந்து... பின் அனைத்து சுமங்கலி பெண்களையும் கூட நிச்சயம் அதாவது கணவன்மார்கள் (தம்பதி சமேத) ஆகவே எதை என்று அறிய அறிய பின் வரவழைத்தான்.

ஒவ்வொருவராக வந்து எதை என்றும் அறிய அறிய அனைவருமே உணவை உட்கொண்டார்கள். 

ஆனாலும் உணவு போதவில்லை!!! ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஆனாலும்... எதை என்று புரிய புரிய மீண்டும் உணவை சமையுங்கள் என்றெல்லாம் ஆட்களை அழைத்து... அழைத்து அன்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.... உணவை பின் பரிமாறிக் கொண்டே அறிந்தும் எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் கூட 

இதனால் நிச்சயம் பின் அனைத்தும் பின் அனைத்து உணவும் தீர்ந்தும் விட்டது எதை என்று அறிய அறிய 

ஆனாலும் பின் இரவினில் பின் எதை என்று அறிய அறிய சந்தோசங்கள் அவர்களுக்கு!!!

பின் இவ்வாறு எதை என்றும் அறிய ஆனாலும் ஒரு சந்தேகம்... யார்?? இவர்கள்???

(ஐயப்பன் நெற்றிக்கண்ணை திறந்து புதிதாக தம்பதியரை அழைத்து உணவை உண்ணச் செய்தது இந்த புதிய மனிதர்கள் யாராக இருக்கக்கூடும் என்று அந்த குடும்பத்தில் உள்ள கணவருக்கும் மனைவிக்கும் சந்தேகம் வந்தது) 

இவர்களை யாங்கள் பார்த்ததே இல்லையே என்று அவர்களுக்கு சந்தேகம் 

ஆனாலும் யாரோ வந்தார்கள் பின் எதை என்று புரிய புரிய உண்டார்கள் என்றெல்லாம் நிச்சயம்...

பின் அனைவருமே பின் அழகாகவே பின் உணவை உண்டு விட்டு சென்று நிச்சயம் ஆசீர்வாதங்கள் கொடுத்தார்கள்!!!

இதனால் அன்றைய தினமே அவள்தனும் கருவுற்றாள்!!!!

பின் அறிந்தும் கூட இதை தன் இருவரும் நிச்சயம் ஐயையோ!!! எவை என்று அறிய அறிய...

அய்யனே!!!! எதை என்றும் புரிய புரிய நிச்சயம் யாங்கள் காத்திருந்தோம்.... அதற்கான தீர்வு இப்பொழுது கொடுத்துவிட்டாய்!!!

போதும்! போதும்! என்றெல்லாம்!!!

ஆனாலும் அவர்களுக்கு ஒரு யோசனை!!! முதலில் எதை என்றும் புரிய புரிய ஒரு பிச்சை க்காரன் ரூபத்தில் வந்தானே!!! இங்கு!!!

அவன் யார் ?? என்றெல்லாம்!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட தேடினார்கள்!!! தேடினார்கள்!!

 பின் தேடமுடியவில்லையே !!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் மீண்டும் பின்!!

மணிகண்டனே!! மணிகண்டனே!!!... அறிந்தும் கூட அனைத்தும் செய்து விட்டாய் என்று எண்ணி நிச்சயம் மேலே வந்தானப்பா அவன்!!

(சபரிமலைக்கு) 

ஆனால் பிச்சை ஏந்திய ரூபத்தில் இங்கு அய்யன் தரிசனம் அப்பனே!!!!!

போதும்ப்பா!!! போதும்!!! அறிந்தும் எதை என்று புரிய புரிய!!! அப்பனே என்றெல்லாம் நிச்சயம்...இவை தன் உணர்ந்து... எவை என்று புரிய புரிய... எதை என்று அறிய அறிய 

ஆனாலும் பின் நிச்சயம் அவ் குழந்தையை  அவள்தனும் விட்டு விட்டு(இல்லத்தில் )எதை என்று அறிய அறிய ஓடோடி வந்தாள்!!!(சபரிமலைக்கு செல்ல)

ஆனாலும் அவள்தனைக் கூட பின் போகக்கூடாது (சபரிமலைக்கு போகக்கூடாது என்று) போகக்கூடாது என்று கல்களால் அடித்து எதை என்று அறிய பின் எவை என்று புதிய புரிய 

ஆனாலும் விடவில்லை!!!! ரத்தத்தோடு வந்து எதை என்று அறிய அறிய பின் அதாவது பிச்சை ஏந்திய ரூபத்தில் இங்கு காட்சி அளித்தானப்பா!!! அய்யன்!!!

இதனால் பின் கண்களில் நீரோடு இருவரையும் கூட அணைத்துக் கொண்டான் அப்பா!!!

அப்பனே அய்யன் கருணை உள்ளவன் அப்பனே அய்யன் எதை என்று புரிய  புரிய!!!

ஆனாலும் அக்குழந்தை அப்பனே.. வேதனைக்கு உள்ளானது எதை என்று புரிய புரிய!!!

ஆனாலும் அப்பனே பின் எதை என்று கூட பின் இவர்கள் தன் கையிலே எதை  என்று கூட பின் இங்கேயே அமர்ந்து விட்டார்கள் என்பேன் அப்பனே

இங்கு இப்பொழுதும் கூட அவர்கள் ஜீவ சமாதியாகி இருக்கின்றார்கள் அப்பனே 

வருவோர் போவோருக்கெல்லாம் அப்பனே உண்மையான பக்தி உள்ளவர்களுகெல்லாம் அப்பனே நிச்சயம் அளந்து அளந்து அப்பனே... பின் உயர்வான இடத்திற்கு கூட அப்பனே பின் தருகின்றார்கள் என்பேன் அப்பனே... அதாவது உயர்ந்த இடத்திற்கு கூட இவர்களே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய 

இதனால் அப்பனே அக்குழந்தையும் கூட அப்பனே தட்டு தடுமாறி எதை என்று அறிய அறிய அவ் இல்லத்திலேயே பின் வளர்ந்ததப்பா!!!

இதனால் அனைவரும் பின் இக்குழந்தையை யாரும் அதாவது அப்பனே அப்பொழுதெல்லாம் அப்பனே ஊர் ஊருக்கு ஒரு பண்பு (விதிமுறைகள்) இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இவ் அதாவது குழந்தையை யாரும் எதை என்று கூட குழந்தையை அண்ட கூடாது...இக் குழந்தையை அண்டினால் நிச்சயம் பின் யாங்கள் எதை என்று புரிய புரிய அதாவது அவர்களுக்கு பின் சிறை தண்டனை அதாவது எதை என்று அறிய அறிய என்றெல்லாம்!!

பின் அதாவது அவ் ஊரார்கள்!! எதை என்று புரிய புரிய 

இதனால் எவை என்று அறியாமலும் எதை என்று புரியாமலும் நிச்சயம் ஆனாலும் அனுதினமும் இரவினில் நிச்சயம் அய்யன் வந்து பல பல வழிகளிலும் கூட அக்குழந்தைக்கு என்ன தேவை என்று கூட அனைத்தும் செய்து!!!

இதனால் அவனே எதை என்று கூட சிறு சிறு பாலகனாக அறிந்தும் கூட!!!

ஆனாலும் யாரும் பின் அக்குழந்தையை அனாதை அனாதை என்றெல்லாம்....

ஆனாலும் எவை என்று புரிய புரிய ஆனாலும் எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று புரிய ஆனாலும் இங்கு மேல் நோக்கி வந்து விட்டான்!!! அக்குழந்தை!!

ஆனாலும் யான் அய்யனை காண வேண்டும்!!! அய்யனை காண வேண்டும் என்றெல்லாம்!!!...

ஆனாலும் யாரும் விடவில்லை நீ அனாதை!!! நீ இங்கிருந்து சென்று விடு !! என்றெல்லாம். 

ஆனாலும் ஒரு அரசன் எதை என்று அறிய அறிய அதாவது அரசனின் மகன்.. இங்கு வந்தான் அப்பா.... அவந்தன் அதாவது அந்த குழந்தை அல்லல் படுவதை பார்த்து நிச்சயம்... இவந்தன்..இவ் ஐயப்பனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் பின் அனைவருக்குமே...

இவந்தனை யாரும் அல்லல் படுத்த கூடாது!!! பின் உங்களால் இவந்தனுக்கு ஒன்றும் தொந்தரவுகள் வரக்கூடாது என்றெல்லாம்!! ஆணையிட்டான் அவ் அரசனின் மகன்!!!

இதனால் அப்பனே அய்யனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தான் அப்பனே பின் நல்விதமாகவே!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது அரசனின் மகன் அப்பனே முன் ஜென்மத்தில் அப்பனே!!!!  அவந்தனுக்கு வழிவிட்டானப்பா!!!

(ஆதரித்த அரசனின் மகன் இந்த ஜென்மத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கின்றார்)

இப்பொழுது அவன் ஒரு உயர்ந்த பதவியில் வகித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!


அப்பனே அச்சிறுவன் அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே இங்கு அதாவது அய்யனுக்கு அப்பனே பின் தொட்டு வணங்கி எதை என்று அறிய அறிய அப்பனே பின் அவந்தன் சேவைகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பா 


அப்பனே அவன் நாமத்தையும் கூட வரும் காலத்தில் விளக்கமாக கூறுகின்றேன் அப்பனே... நலங்களாக அப்பனே 


இன்னும் அப்பனே அய்யனின் லீலைகள் சொல்கின்றேன் அப்பனே நல்முறையாகவே 


அதனால் அப்பனே பக்தியில் சிறந்து விளங்க வேண்டும் என்பேன் அப்பனே எதை வந்தாலும் அப்பனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 


எவ் கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் தான் எந்தனுக்கு துணை என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே...

அப்படிப்பட்டவனுக்கு இறைவன் நேரில் அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தரிசனமும் கொடுத்து அப்பனே ஆட்கொண்டு அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே 

இன்னும் சொல்கின்றேன் அப்பனே நலன்கள் ஆசிகளப்பா!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. இறைவா நன்றி 🙏. அய்யனை காணும் பாக்கியம் கிட்ட வேண்டும். அவன் தன் ஆசியும் பெற வேண்டும் 🙏... இறைவா அகத்தியா துணையாக இரு.

    ReplyDelete
  2. By Gurunathar grace, compiled an english blog.🙏💐🙏

    https://fireprem.blogspot.com/2024/08/wisdom-chat-with-ai.html?m=1

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. உள்ளம் உருகிவிட்டது ஐய்யனே. சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏 ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்திய மகரிஷிகளே போற்றி போற்றி

    ReplyDelete