20/7/2024 அன்று போகர் பெருமான் உரைத்த ஆலய வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன்துறை வீதி.வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா.
புவனமதை ஆளும் புவனேஸ்வரியையும் ஈசனையும் மனதில் அழகாக குடி கொண்டிருக்கும் வேலனவனையும் பின் பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் போகனவன்!!!
அறிந்தும் அறியாமலும் இன்னும் என்னென்ன?????
என்னென்ன முருகனை முருகன் அடிமையாகவே யான் இருந்திட்டேனே!!! இங்கே!!!
இங்கேயே அறிந்தும் உனை எவ்வாறு யான் பாட?!!!!
பின் அருணகிரியும் அறியும் வண்ணம் பல சித்த மார்க்கங்கள் பல வழிகள் உண்டு!!!
உண்டு என்பதற்கிணங்கவே நிச்சயம் அனுதினமும் யாங்களும் உன்னை அனுதினமும் அறிந்தும் அறிந்தும் பாடிக்கொண்டே இருக்கின்றோமே!!!! பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றோமே!!!
பின் அறிந்தும் எதை என்று இன்னும் இன்னும் சக்திகள் இழுக்கின்ற பொழுது பின் யாங்கள் சக்திகளாக கூட்டி அறிந்தும் இதை என்றும் கூற பின் கூட்டி கூட்டி இன்னும் இன்னும் விளக்கங்கள் தந்து தந்து எண்ணற்ற அதிசயங்கள் பின் காணச் செய்வாய் பின் கந்தனே!!!!
பின் அனுதினமும் உனை வேண்டிட்டு நிச்சயம் இத்திருத்தலத்தை இன்னும் பின் புதுப்பித்து அறிந்தும் எதை என்று அறிய இங்கிருந்து யான் செல்லப் போவதில்லை!!! முருகா!!!
முருகா பல வழிகளிலும் கூட பல எண்ணங்கள் பல மனிதர்களை கூட பின் அறிந்தும் இக்கலி யுகத்தில் நிச்சயம் மனங்கள் மனிதனின் எண்ணங்கள் தன் தன் எண்ணத்திற்கு ஏற்பவே பின் உயர்வதும் பின் தாழ்வதும்!!!
ஆனால் முருகா!!! எங்கு இருக்கின்றாய்??? பின் மனிதன் செயலை நிச்சயமாய் மன்னித்து பேரருள் பின் அளித்து நிச்சயம் பின் அறிந்தும் அவரவர் எண்ணத்திற்கு தகுந்தார் போல் நிச்சயம் வரங்களையும் அளித்து!!!
ஆனால் அவ் வரங்களை தவறாக மனிதன் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அறிந்தும் கீழே விழுந்து மேல் நோக்கி வந்து மீண்டும் முருகா என்று!!!
அப்பொழுதுதான் புரிகின்றது உண்மையான ஞானம்!!
ஞானம் தித்திக்கும் பின் முருகா நீயே அறிந்தும் கூட அனைவருக்குமே பின் ஆசிகள் கொடுப்பாய்!!!
நல் அருள்கள் இவ் நேரத்தில் கூட!!
அறிந்தும் அறிந்தும் பின் எதை என்று அறிய அதிவிரைவிலே நிச்சயம் யாங்கள் அனைவரும் அறிந்தும் உந்தனுக்கு பின் சேவைகள் செய்ய இன்னும் அறிந்தும் ஞானிகள் இங்கே பின் இருக்க!!!!
முருகா நீயே அறிவாய்!!! பின் எத்தனை ஆண்டுகள் பின் எத்தனை அறிந்தும் அறிந்தும் இதனை என்று அறிய அறிய இயற்கை பின் எய்தினர்!!!
ஆனால் அவர்கள் எல்லோரும் பின் உந்தனக்கு பின் தொண்டுகள் செய்ய காத்துக் கொண்டிருக்க இன்னும் மக்களிடையே அவை அதாவது அவ் ஞானிகளின் ஆன்மாக்கள் சென்று முறையிட்டு இன்னும் சீரும் சிறப்புமாகவே இத்திருத்தலத்தில் இன்னும் பின் அதிசயங்கள் நடக்கும்!!!
நடக்கும் முருகா!!! அறிந்தும் பின் உண்மை பின் எடுத்துரைத்து எடுத்துரைத்து மக்களுக்கு பரப்பி யாங்கள் மனதை மாற்றவே பார்ப்போம்
பின் அறிந்தும் அப்படி இல்லையென்றாலும் நிச்சயம் முருகா நீயே துணை மக்களுக்கு!!!!
அழிவு நிலையில் செல்கின்றது இவ் பூலோகம்!!
ஆனாலும் அனைத்தும் தாங்கும் இதயம் கொண்ட!!!! இதயம் எதற்கு?? அறிந்தும் உண்மைதனை பின் எடுத்துரைக்க வேண்டுமா!?? முருகா!!
முருகா பின் இவ் அடிமைதனை கூட நிச்சயம் பின் வளர்த்திட்டு இன்னும் எதை என்று புரிந்தும் கூட பின் உனக்காகவே வாழ்ந்து பின் அருள்கின்ற ஞானிகள் இன்னும் வலம் வந்து இத்திருத்தலத்தை புதுப்பிப்பார்கள்!!! இன்னும் அறிந்தும் கூட!!
ஆனாலும் இதை அழிப்பதற்கு பல வகைகளிலும் கூட பின் மனிதன் மானிடன் பின் எதை என்று அறிய அறிய இதை என்று மானிடன் பின் அறிந்தும் பின்னர் மனிதன் ஒன்றோ??
(இலங்கையில் இனப் பிரிவினை பார்த்து அவர்களும் நாமும் ஒன்றா??? இல்லை இல்லை நாம் வேறு இனம் அவர்கள் வேறு இனம் என்று என்று நினைத்து)
என்றெல்லாம் பின் அழித்து!!!...
ஆனாலும் இவைதன் குண்டுகள் இட்டு இவை அழிக்க முற்பட்டோர் இன்னும் பின் இருக்கின்றனர்... ஆனாலும் அவர்களையும் மன்னித்து !!!!
(மனிதர்கள் அனைவரும் ஒன்றே என்று எண்ணாமல் நாம் வேறு இனம் அவர்கள் வேறு இனம் என்று எண்ணி இலங்கையில் நடந்த உள்நாட்டு போர். அந்த உள்நாட்டு போரில் இந்த ஆலயத்தையும் தகர்ப்பதற்கு குண்டுகள் எறிந்தனர்... அவர்களையும் முருகன் மன்னித்து இருக்கின்றார்)
ஆனாலும் இதனை போக்கே அறிந்தும் கூட இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு பிறக்கவில்லையே???
அவ் ஞானங்கள் பிறந்து விட்டால் நிச்சயம் வாழ்வான்!!! வாழ்வாங்கு வாழ்வான்!!! நிச்சயம் பிள்ளைகளையும் காப்பாய் முருகா!!!!
முருகா!!!!! சில ஆண்டுகளிலே இவைதனும் அழிந்துவிடும் என்பதற்கிணங்க பின் யாங்களும் இங்கு வந்து பல வழிகளிலும் ஏற்பாடுகள் செய்து முருகா!!!!!
முருகா!! அனைவரையும் காத்தருள்க!!!
காத்தருள்க!! நீ அருள்வாய்!!!
நிச்சயம் ஏனைய அறிந்தும் பின் இதற்கு முன்னே சில ஆண்டுகளில் பின் அதிக குண்டுகளை வைத்து தகர்க்க எண்ணி !!!
ஆனாலும் சித்தர்கள் யாங்கள்!! விடுவோமா ?? என்ன !!???
இன்னும் இவ் தேசத்தை நிச்சயம் அறிந்தும் அதாவது அழியப் போகின்ற தேசத்தை அழியா நிலையில் வைத்து முருகா!!! முருகா!! என்றெல்லாம் உன்னையும் பாடி துதித்து பிள்ளைகள் பின் ஏங்கி கொண்டிருக்கும் பொழுது!!! எப்படி ?? நீயும் அழிப்பாய்???
அன்பானவனே !! அறிந்தும் கருணை மிக்கவனே!!! உன்னை தனையும் புகழ்ந்து புகழ்ந்து ஈரோடு (கருணையோடு) அறிந்தும் கூட வாழ்க!! வளர்க!! பின் தொண்டுகள் பின் மனிதனின் தொண்டுகள் இங்கு சிறக்க நிச்சயம் பிறப்பு எடுப்பார்கள் இறந்தவர்கள் மீண்டும்!!!
(மரணம் அடைந்த முருக பக்தர்கள் மீண்டும் பிறப்புகள் எடுப்பார்கள்)
அறிந்தும் இங்கே பிறந்து முருகனை துதிக்க போராடிக் கொண்டிருக்கின்றார்கள்!!!
நிச்சயம் அவர்கள் கர்மத்தையும் அதாவது பாவத்தையும் அழித்து மீண்டும் பிறப்பு அது அரிது அதிசயமாய் நிச்சயம் அவர்களையும் பின் அறிந்தும் கூட பின் பெரியவர்களாகி இன்னும் தொண்டுகள் செய்வார்களாக!!!
முருகா உன் கருணையினாலே!!!
கருணையினாலே அறிந்தும் ஆனாலும் பிள்ளைகளுக்கு தெரியவில்லையே பின் வாழ்வோம் என்றெல்லாம்!!!
ஆனாலும் இதைத் தன் பின் உணர்ந்து விட்டேன் யானே!!! அழிவுநிலை என்று கூட!!!
இன்னும் இதை அழிப்பதற்கு இன்னும் அறிந்தும் அறிந்தும் வந்து கொண்டே!!......... பின் அரசு சார்புள்ளோர்களும் கூட!!
ஆனாலும் யான் அழியவிடவில்லையே யாங்கள் இங்கு இருக்கின்றோம் நிச்சயம் அறிந்தும் கூட!!!
முருகா பின் அனைவரையும் கூட மீண்டும் பிறப்பெடுக்க செய்!!!!
அவர்களுக்கும் வாழ்க்கை கொடுத்து மீண்டும் உயரிடத்தில் வைத்து பின் இவ் ராஜ்ஜியத்தை பின் அறிந்தும் கூட பின் தலையோடு தளைக்க பின் வைப்பாய் முருகா!!!
அன்பு முருகா! அறிந்தும் பின் அப்பன் எதை என்று அறிய அறிய.... பின் ஈசனும் தாயும் பின் புவனம் அதை காக்கும் புவனேஸ்வரியையும் அறிந்தும் கூட உண்மையை நிச்சயம் அருளில் ஈந்து நிச்சயம்!!!!
பல பல பின் இன்னல்கள் பல நோய்கள் வரத்தான் போகின்றது!!
அவைதன் யான் எடுக்க!! அனைத்தையும் சீர் செய்கின்றேன்!!! யான் இங்கேயே இருந்து அனைத்தையும் நடத்திக் கொடுக்கின்றேன்!!!
அறிந்தும் கூட பின் முருகா நீயே!!! இங்கு இருப்பாய்!! வருவாய்!!! அருள் தருவாய் குகனே!!!
(உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி)
அறிந்தும் கூட நிச்சயம் மனிதர்களே!!! பின் அனைவருக்கும் எவை என்று கூட முருகனே தன்னைத்தானே நிச்சயம் அறிந்தும் கூட பின் பரிசுத்தமாக இக் கும்பாபிஷேகத்தை நிச்சயம் அதிவிரைவிலே பின் நடத்தியும்!!!! பின் யாங்கள் சித்தர்கள் அனைவரும் வருவோம்!!! ஞானிகளும் வருவார்கள் !!மீண்டும் வாக்குகள் செப்புவோம்!!
பின் ஆசிகள் அருள்கள்!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! குருநாதர் இலங்கைக்கு செல்க என்று உத்தரவு கொடுத்தபின் எந்தெந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று ஜீவநாடியில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு ஆலயங்களை குறிப்பிட்டு கூறியிருந்தார்!! அதன்படி ஆலயங்களுக்கு செல்லும் பொழுது நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும்பொழுது இந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சில சூட்சும முறையில் உத்தரவு வழங்கி அங்கே சென்ற பொழுது அந்த ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது...
உற்சவ கோலத்தில் இருந்த அந்த ஆலயத்தில் முருகனை வணங்கி அந்த ஆலய நிர்வாகிகள் அனைவரும் ஜீவநாடிக்கு மரியாதை செய்து முருகன் மடியில் வைத்து பூஜை செய்து கொடுத்தனர் இலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் அகத்தியர் ஜீவ நாடி என்று சொன்னவுடன் இறைவன் இறைவி மடியில் வைத்து பூஜை செய்து கொடுத்தனர்.
அப்படி பூஜை செய்துவிட்டு சுவடியை அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா வாசிக்கும் பொழுது போகர் பெருமான் வந்து அனைவருக்கும் ஆசிகள் நல்கி வாக்குகள் தந்தருளினார்.
இந்த ஆலயம்மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோவில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிட்டை செய்யப்பட்டு கி.பி. 1795 ஆனி உத்திர நட்சத்திரத்தில் குடமுழுக்கு சிறப்புற இடம்பெற்றது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இன மோதல் உள்நாட்டுப் போர் காரணமாக நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட போரில் தாக்குதலுக்கு உள்ளானது. அதேபோல் இந்த ஆலயமும் தாக்குதலுக்கு உள்ளானது ஆனால் முருகனும் சித்தர்களும் காத்து நின்று அருள்கின்றார்கள்.
தற்போது இந்த ஆலயம் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து கொண்டு வருகின்றது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க வாழ்வு பெற்ற வல்லியின்
மாவை ஆதினப் பேரரசு
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்த சுவாமி கோவில்
அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வருடங்களின் பின் 04.04 2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெறும். 06.04.2025 திங்கட்கிழமை முதல் 09.042025 வியாழக்கிழமை பகல் 2.00 மணி வரை Hம காலம் யாக பூசைகளுடன் எண்ணெய்க்காப்பு இடம்பெறும். 11.04.2025 வெள்ளிக்கிழமை 10ம் கால விஷேட யாக பூசை நடைபெற்று யாக சாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடாகி காலை 8.07 மணிமுதல் 10.09 மணிவரை உள்ள சுபயோக சுப முகூர்த்தத்தில் சம்புரோஷன சிதவிலாச மகாகும்பாபிஷேக வைபவம் நடைபெறும் தொடர்ந்து 47 நாட்கள் மண்டலாபிஷேக வைபவம் தினமும் 4 காலத் திருவிழாக்களுடன் ஆராதனைகள் நடைபெறும்
48 நாட்கள் மண்டலாபிஷேக வைபவம் உபயங்கள் நடைபெறும் நேரம்
500 8.00 am sang
8.00 1.00 pm வரை
இரண்டாம் காலம்
மதியம் 2.00 5.00 pm
மூன்றாம் காலம்
5.00 10.00 pm நான்காம் காலம்
ஒவ்வொரு காலமும் இந்த நேரங்களில்
* 108 சங்காபிஷேகம்
* விஷேட பூசைகள்
* அர்ச்சனை ஆராதனை
ஷண்முகார்ச்சவை
* திருவிழா நடைபெற்று திருவருட் பிரசாதம் வழங்கப்படும்.
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகள்
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருப்பணி வேலைகள் தரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடியார்கள் தாங்களும் குடும்பத்தினரும் உற்றார், உறவினர், சுற்றம் சூழல், நண்பர்கள் எல்லோரிடமும் தெரிவித்து விரும்பிய படி மாவைக்கந்தன் ஆலய திருப்பணிக்கு நிதியாகவோ அல்லது பொருட்களாகவோ (கம்பி. சீமேந்து, போன்ற உதவிகளையும் சரீ தொண்டுகளையும் செய்து முருகப் பெருமானின் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வீரகளாக!
திருப்பணி நிதிகள் அனுப்பி எமக்குத் தெரிவித்தால் உடன் அதற்குரிய பற்றுச்சீட்டுகள், ஆராதனைப் பிரசாதங்கள் உடன் அனுப்பி வைக்கப்படும்.
தொலைபேசி இலக்கம்
0094(0) 212243334
0094(0) 0778302573
வங்கிக் கணக்கு இலக்கம் சுன்னாகம் கிளை
5. RATNASABAPATHY KURUKKAL
A/C NO: 0117020042437
Face book:- Maviddapuram Kandaswamytemple/Face bppk
Email:- Mavaikandan @ yahoo.com
மாவைக்கந்தன் ஆலய திருப்பணிக்குழு
H.N.B A/C No-117010007847
A/c No-0075564986
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இலங்கைக்கு வெளியே பிரசாதம் அனுப்பி வைக்க படுமா? நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete