​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 24 August 2024

சித்தன் அருள் - 1666 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 6


அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 6

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5)

நம் குருநாதர்:-  ( அடியவருக்கு தனி வாக்குகள். அதன் பின் ஒரு பொது வாக்கு) அப்பனே பெண் சாபம் பொல்லாதப்பா. பின் நீங்கள் கேட்கலாம் ஆண்கள் சாபம் எப்படி என்று. 

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர்:-  அப்பனே  இதற்கும் காரணங்கள் உண்டு சொல்கின்றேன். அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. இப்படிச் சொன்னால்தான் அப்பனே சில மாற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. அதனால் அதாவது நிற்க வைத்து அப்பனே அனைவரிடத்திலும் தெரியும்படி சொல்கின்றேன் என்று நினைத்துவிடாதே அப்பனே. அப்பனே இவ் அகத்தியன் பின் அனைத்திற்கும் அப்பனே காரணங்களோடுதான் பேசுவான். 

( வணக்கம் அடியவர்களே, நம் பாவங்களைப் பிறரிடம் சொன்னால் பாவங்கள் மிக வேகமாக்க் கரைந்து ஓடும். அதே போல் செய்த புண்ணியங்களைச் சொன்னால் மிக மிக அதி வேகமாகச் சென்று விடும். பொதுவாக சத்சங்கத்தில் ஒருவர் பாவத்தை அனைவர் முன்னால் எடுத்துச் சொல்ல அதி வேகமாக நீங்கும் என்பதே சூட்சுமம். பல ஜென்மங்கள் எடுத்தாலும் கரைய இயலாத பாவங்கள் விரைவில் நீங்க ஓர் அருமையான வாய்ப்பு சத்சங்கத்தில் அடியவர்கள் கலந்து கொண்டு பாவங்கள் நீங்கப் பெற்று, குருநாதரிடம் புண்ணிய ஆசி பெறுவது என்று உணர்க.) 

எழுந்து நின்ற அடியவர் :- ( சரி என்ற புரிதலுடன் உணர்த்தினார் சுவடி ஓதும் மைந்தனுக்கு) 

நம் குருநாதர்:-  அப்பனே திருமணம் என்றால் அனைவரும் ஒன்று கூடுகின்றீர்களே, எதற்கு?

அடியவர்கள்:- ஆசீர்வாதங்கள் , வாழ்த்த, மனதார வாழ்த்த….

நம் குருநாதர்:-  அப்பனே சுபம் என்றால் அனைவரும் வந்து விடுவார்கள் அப்பனே. பாவம் என்றால் அனைவரும் தூர ஓடுகின்றார்கள் அப்பனே. இதுதான் அப்பனே மனித வாழ்க்கை. இதிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. சுபம் அப்பனே அதாவது மனிதன் சுகத்தோடு இருப்பதனால்தான் அப்பனே மனிதன் வருவானப்பா. அப்பனே கஷ்டங்கள் வந்துவிட்டால் யாரும் வர மாட்டார்கள் அப்பா. அப்பனே யாங்கள்தான் (சித்தர்கள்தான்) வர வேண்டும். அப்பனே இப்பொழுது புரிகின்றதா? திருமணம் வைத்தே பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அப்பனே மனிதன் அதை, இதை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே. ஆனால் பாவத்தை, பாவத்தால்தான் அழிக்க முடியும். ஆனாலும் இரக்கம் எங்களுக்கும் இருக்கின்றது அப்பனே. ஆனால் இதில் கூட மனிதன் வந்து நுழைந்து அப்பனே பின் தடுத்துவிடுகின்றான் அனைத்தும். 

அப்பனே திருத்தலத்திற்கு எதற்காகச் செல்லவேண்டும் கூறு? 

அடியவர் 1 :- இறைவனை பார்க்க…

நம் குருநாதர்:-  அப்பனே, அப்படி இல்லையப்பா. அப்பனே அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய பாசத்தோடு என்றெல்லாம் அப்பனே உணர்ந்து கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா கடவுளும் ஒன்றாக ஒரே இடத்தில் உள்ளார்கள். இது எல்லாம் அன்பை, பாசத்தைக் காட்டுவதற்காகவே. இதுபோல் நாம் அனைவரும் இருக்க வேண்டும். 

நம் குருநாதர்:-  அப்பனே ஒருவர் ஒருவர் சண்டைபோடுகின்றார்களா என்ன அங்கு? அப்பனே. இதிலாவது புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் அப்பனே. புரிந்து கொள்வதே இல்லை அப்பனே. இவை எல்லாம் புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியாளனாக வலம் வரலாம் இவ்வுலகத்தில்.

(அகத்திய மாமுனிவர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த , மறைந்துபோன ஒரு எளிய ரகசிய சூட்சுமத்தை நமது பிரச்சினைகள் நீங்க எடுத்துரைத்தார்கள்.) 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் சித்தர்கள் ஏன் திருத்தலத்தை உருவாக்கினார்கள் அப்பனே. செப்புகின்றேன் அப்பனே. ஆனாலும் எங்கெல்லாம் கிரகங்கள் கூட, நட்சத்திரங்கள் கூட அப்பனே அதிக சக்தி விழுகின்றதோ , அங்குதான் யாங்கள் திருத்தலங்கள் ஏற்படுத்தினோம் அப்பனே. அங்கு சென்று அமர்ந்து தியானங்கள் பலமுறையும் எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அப்பனே ஒரு 100 வருடங்களுக்கு முன்பே , திருத்தலத்தில் தங்குவான் என்பேன் அப்பனே. அவ் வேகம் அவன்மீது விழும்பொழுது சில தரித்திரங்கள் நீங்கும் அப்பா. ஒரு 5 நாட்களில் அப்பனே அனைத்து பிரச்சினைகளும் விடுபடும் அப்பனே. ஓடிவிடுவானப்பா. ஆனால் இன்றைய நிலையில் அதுபோல் இல்லையப்பா. 

(வணக்கம் அடியவர்களே, இந்த ஆதிகால ரகசிய சூட்சுமத்தை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி உங்கள் இன்னல்கள், துன்பங்கள் யாவும் நீங்கி வெற்றி பெறவும்.) 

அப்பனே ஒவ்வொரு கிரகங்களை எவை என்று புரியாமல் கூட, அறியாமல் கூட அப்பனே பின் பிறக்கும்பொழுதே அப்பனே ( கிரகங்களின் )  துகள்கள் ( மனித உடம்பில் ) , இதை பற்றி இன்னும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே. இன்னும் பின் வாக்குகள் இருக்க அப்பனே நிச்சயம் நீங்கள்… ( அடியவருக்கு தனி வாக்குகள்) 

அப்பனே பிறப்பதும், இறப்பதும் , வாழ்வதும் அனைத்தும் இறைவனிடத்திலே , அதாவது அப்பனே இன்றைய அளவில் கூட எப்பொழுதுமே யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. உயிர் கூட உங்களுக்கு சொந்தமானது இல்லையப்பா. அனைத்தும் நீங்கள் சொந்தம் என்று நினைக்கின்றீர்கள் அப்பனே. எப்படியப்பா? இதுதான் தன்னை அறிதலா?????? 

அப்பனே இதனால் மனிதன் இன்னும் மூட நம்பிக்கையிலே ஒளிந்திருக்கின்றான் அப்பனே. அதனால்தான் வெற்றி பெறுவதே இல்லை பக்தியில் இருந்து கொண்டு. அதைச் செய்தால் இதை நடக்கும். அவைச் சொன்னால் இவை நடக்கும் என்று. அப்பனே அதாவது அவனைப் பற்றியே தெரியாதபொழுது, அதாவது அப்பனே இவ்மந்திரத்தைக் கூறினால் அனைத்தும் கிடைக்குமாம் அப்பனே. விசித்திரமானவன்தான் மனிதன் என்பேன் அப்பனே. மனிதன் சொல்வது அப்பனே அதாவது பக்தியை நோக்கி பொய்களாக சொல்லிக்கொண்டிருப்பான் அப்பனே. பணத்தை ஈட்டுவான் என்பேன் அப்பனே. ஆனால் அவ் பணமே அவந்தனக்கு கடைசியில் திசை திருப்பி , அவன் கர்மத்தை சேர்த்துக்கொண்டு அப்பனே பல கஷ்டங்களைக் கொடுத்து அப்பனே மீண்டும் இறைவனிடத்தில் வருவானப்பா. எப்படியப்பா தர்மம் பின் நியாயம் அப்பனே? இவ்கலியுகத்தில் தர்மம், நியாயம் இவை எல்லாம் மறைந்துகொண்டே வருமப்பா. அப்பனே ஆனால் அப்பொழுது இறைவனை விட்டு விட்டால் அப்பனே இது நியாயமா? 

அப்பனே …( தனி வாக்குகள் ) 

அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டால் ஆனால் தெரிவதே இல்லை. 

( இந்த வாக்கு மிக முக்கியமான ஒன்று. உங்கள் விதி என்ன என்று அறிவது மிக அவசியம். அதற்கு புண்ணியங்கள் அவசியம். நீங்கள் செய்யும் புண்ணியங்களே உங்கள் விதியை குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் மூலம் உணர வைக்கும். அதன் பின் தோல்வி என்பதே கிடையாது. எந்நாளும் வெற்றியே. புண்ணியங்கள் அவசியம் செய்க.) 

( அடியவருக்கு மீண்டும் தனி வாக்குகள் ) 

அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றான். அதாவது பழமொழியும் உண்டு. தன் வினையும் தன்னைச் சுடும் என்று. 

அப்பனே பிறர் வினையும் தன்னைச் சுடும். இதற்கு எடுத்துக்காட்டாக நீ நிச்சயம் விளக்கம் தர வேண்டும்.

அடியவர் 1:- பணம் ஏமாற்றி…

அடியவர் 2:- பிறர் தவறு…

அடியவர் 3:- மற்றவர்கள் தவறான ஒரு செயல் செய்து அதில் வரும் பணத்தை எனக்கு கொடுத்து, அந்த பணத்தை நாம் நல்லது செய்கின்றோம். ஆனால் ( அந்த பாவ பலன்களை ) அதற்கு பலன் நம்ம அனுபவிக்குறோம். 

நம் குருநாதர்:-  அப்பனே இதுதான் செல்கள் பரிமாற்றம். இதனால்தான் செல்களை அழிப்பதற்கு முருங்கை இலைக் கூட பயன்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே. மாதத்திற்கு ஒரு முறை நிச்சயம் அப்பனே வெறும் வயிற்றில் நல்முறையாகவே கசக்கி பின் குடித்து விட்டாலே , பின் உடம்பில் உள்ள செல்கள் அதிலே அதாவது பிறர் மீது அண்டாதப்பா. 

அப்பனே ஆனால் தெரிந்தும் செய்யக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன்:- குருநாதர் சொல்லிவிட்டார் ( சூட்சுமத்தை ) ஆனால் தெரிந்து ( கர்மங்களை ) செய்யக்கூடாது. ஐயா புரியுதுங்களா? 

அடியவர்கள் :- புரியுது. 

நம் குருநாதர்:-  அப்பனே இயக்கம் ஏன்? அதாவது அப்பனே பின் வண்டி அதாவது ஓட்டுனராக நீயே இருக்கின்றாய் அப்பனே. ( வாகனத்தை ) ஓட்டி , இதனால் தானாகவே எதையாவது கண்டால் அப்பனே கால்கள் தானாகவே போய் விடுகின்றது. ஏன், எதற்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :- வண்டி ஓட்டும் பொழுது ஏதாவது குறுக்கே வந்தால் உடனே பிரேக் பிடிக்கின்றீர்கள்.உங்கள் கால்கள் தானாக போகின்றது. எதற்கு தானாக ( பிரேக் பிடிக்க ) போகின்றது என்று கேட்கின்றார். யாராவது ( பதில் ) சொல்லலாம். 

அடியவர் :- மிதித்துக் கொன்று விடக்கூடாது என்று…

நம் குருநாதர்:-  அப்பனே யோசித்துத்தான் அப்பொழுது நீ காலை அங்கே வைப்பாயா? 

அடியவர்கள்:- தானாகவே கால்கள் அங்கு போகும் ( பிரேக் பிடிக்க). 

நம் குருநாதர்:-  அப்பனே, ஏன்? இதற்குத்தான் பதிலளிக்கச் சொன்னேன். 

அடியவர்கள் :- ( அமைதி ) 

நம் குருநாதர்:-  அப்பனே இதன்மூலம் நீங்கள் உணரலாம் என்பேன் அப்பனே. பின் உயிர்தான் உங்களுக்குச் சொந்தம். உடம்புத்தான் அனைத்தும் இறைவன் கட்டுப்பாட்டில் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே இறைவன் கட்டுப்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள். இறைவன்தான் அந்த நேரங்களில் அப்படி நம்மை இயக்குகின்றார் (நாம் யோசிக்காமலேயே).

நம் குருநாதர்:-  அப்பனே அப்பொழுது கூட இறைவன் அமைதியாக விட்டுவிடுவதில்லை அப்பனே. படைத்து எவை என்று அறிய அறிய திடீரென்று அப்பனே ஏதாவது மனிதனால் பாவம் என்பதற்காக ( மனிதனில் உடலில் ) ஒரு செல்லைப் புகுத்தி விடுகின்றான் அப்பனே. அதையும் மீறிச் செய்தால்தான் அப்பனே கஷ்டங்கள். 

( அடியவர்களே, இறைவன் மனிதனைப் படைக்கும் பொழுதே இது பாவம் என்று அறிவுறுத்த ஒரு செல்லை மனிதனின் உடம்பில் வைத்துப் படைக்கின்றார். அந்த செல் மனிதனுக்கு எது பாவம் என்று உணர்த்திக்கொண்டே இருக்கும். அந்த செல் மூலம் உள் மனசாட்சியாக வழியாக வ உணர்த்துதலை மீறி மனிதன் செயல்கள் செய்யும் போது அது பாவமாக மாறுகின்றது. உதாரணம் :- உயிரைக் கொல்லக்கூடாது என்று மனம் [ அந்த இறைவன் புகுத்திய செல்கள் மூலம் ] . சொல்லும். அதையும் மீறி மாமிசம்/அசைவ உணவு உண்டால் அது பாவமாகி கடுமையான கர்மாவாக வடிவெடுத்து , பழி வாங்கும் நவ கிரகங்கள் மூலம் கஷ்டங்கள் வடிவமாக. அசைவம் தவிர்க்கவும். மனசாட்சியே இறைவன். ) 

நம் குருநாதர்:-  அப்பனே சில பேர்கள், அதாவது சில பேர்கள் இல்லை. பல பேர்கள் அப்பனே அதை உபயோகிப்பதே இல்லை அப்பனே. மீண்டும் இவ்ஆன்மா வந்து விடுகின்றது இவ்வுலகத்திற்கு அப்பனே.

அதனால்தான் அப்பனே, தன்னை உணருங்கள், தன்னை உணருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதனால்தான் புதுப்புது வார்த்தைகளைச் சொல்லி அப்பனே, மனிதனைத் திருத்தி அப்பனே நல்லொழுக்கத்தோடு அப்பனே கர்மாவும் இல்லாமல் இவ்சித்தர்கள் வாழ வழி வகை செய்வார்கள் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே யான் ஒன்றும் சொல்லமாட்டேன் அப்பனே. அங்கு செல், இங்கு செல் அப்பனே ஆனாலும் முதலில் கர்மத்தை நீக்கினால்தான் அப்பனே பின் வாழ்க்கை உண்டு என்பது அர்த்தம்.

அப்பனே விரும்பியதை எல்லாம் கொடுத்துவிட்டால் அப்பனே நீதானப்பா இறைவன். அப்பனே இது சரியா ? தவறா?  

அடியவர்கள் :- ( சிறு புரிதல் பேச்சுக்கள் )

நம் குருநாதர்:- அப்பனே துன்பம் ஒன்று வைத்தால்தான் அப்பனே இறைவனை நோக்கி வருகின்றான் அப்பனே. ஏன் அப்பனே , அனைவருக்கும் ஏதோ ஒரு துன்பமப்பா. அதனால்தான் ஓடி வந்து வாக்குகள் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்பனே. பின் அனைத்தும் கொடுத்துவிட்டால் அப்பனே நீங்கள் வருவீர்களா என்ன அப்பனே. அதனால் இறைவன் உங்களைவிடக் கணக்குப் போடுவதில் வல்லவனப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ஏன் இங்கு அனைவரும் வந்துள்ளீர்கள் ?

அடியவர்கள் :- துன்பங்கள், பிரச்சினைகள்…

நம் குருநாதர்:-  அப்பனே இவை எல்லாம் புரிந்துகொண்டால்தான் வருங்காலத்தில் வாழ முடியும். அதுவும் கலியுகத்தில் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிறு புரிதல் விளக்கம் ) 

நம் குருநாதர்:-  அப்பனே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தால் அப்பனே, இறைவனைக் கூட பார்க்க முடியாது அப்பனே. 

அப்பனே இறைவனைப் பார்த்து விட்டால் அப்பனே , தானாகவே அச்செல்லானது ஒட்டிக்கொள்ளும் என்பேன் அப்பனே. காந்தம் போல் இறைவனை நோக்கி. பின் மோட்சம்தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். இறைவனால் உடலில் புகுத்தப்பட்ட ஒரு செல் இறைவனின் தரிசனம் உணர்ந்து பார்த்தமையால் , நம் உடலில் இருந்து இறைவனிடத்தில் ஒட்டிக்கொள்ளும். உடனே மோட்சம் கிட்டும் அப்பிறவியிலேயே.) 

நம் குருநாதர்:-  அப்பனே இதனால்தான் அப்பா, அங்கு சென்றால், இங்கு சென்றால் , (அவ்செல்கள்) அப்பனே சில வகையில் மாற்றம் அடையும் என்பேன் அப்பனே. மீண்டும் வந்துவிடும் அப்பா. 

( ஒரு அடியவருக்குத் தனி வாக்குகள் ) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    NANRI AYYANE

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    ReplyDelete
  2. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 6
    https://youtu.be/4WV2wy8XMX0

    சித்தன் அருள் - 1666

    அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 6

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete