​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 10 August 2024

சித்தன் அருள் - 1660 - அன்புடன் அகத்தியர் - நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில்






21/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில். நல்லூர் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணம். ஸ்ரீலங்கா.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே நலன்கள்!!!

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!!

பின் சித்தர்கள் பலர் இங்கும் தங்கி தங்கி அப்பனே பல மனிதர்களுக்கு அப்பனே பின் அருள் பின் வழங்கியும் அப்பனே ஆசிகளும் பல பல!!

அப்பனே பின் என்னென்ன தேவை ?? என்பதை எல்லாம் உணர்ந்து அப்பனே பின் சத்தியமாய் அப்பனே அவரவர் வினையையும் கூட அப்பனே கந்தன் தீர்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே நலமாகவே அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் !!! அப்பனே

வருமப்பா அப்பனே கலியுகத்தில் அழிவுகள் என்று!!

ஆனாலும் அப்பனே பின் இவையெல்லாம் நிச்சயம் அப்பனே மனிதனிடத்தில் தான் உள்ளது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே கந்தன் நிச்சயம் சில சில பின் மனமாற்றங்களையும் ஏற்படுத்தி ஏற்படுத்தி அப்பனே மனிதனுக்கு அப்பனே புத்தியும் கூட அப்பனே கொடுத்து கொண்டே வருகின்றான் அப்பனே 

ஏன் ??எதற்கு ??அப்பனே கலியுகத்தில் புத்திகள் கெடுமப்பா!!!

அதாவது மனிதனுக்கு பின் புத்திகள் கெடுமப்பா!!! 

ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் ஆனாலும் பக்தர்கள் இருக்கின்றார்கள் அப்பனே பின் ஏராளம் என்பேன் அப்பனே 

ஆனாலும் அவர்களுடன் எதை என்று அறிய அறிய பல  சம்பந்தங்கள் வைத்து அப்பனே முருகன் அப்பனே பின் பல மனிதர்களையும் கூட!!!

( பக்தர்களுக்கு முருகன் அனுகிரகம்)

எவை என்று அறிய அறிய மனதை பின் அன்பு அப்பனே ஆதரவு எவை என்று அறிய அறிய இவையெல்லாம் வருங்காலத்தில் குறையும் அப்பா அப்பனே பின் மக்கள் தன் மனம் போன போக்கிலே போயிட்டு அப்பனே பின் அழிவார்களப்பா!!!

இவையெல்லாம் கலியுகத்தின் அப்பனே எதை என்று அறிய அறிய விதி அப்பா!!!

தலைகீழாக மாறும் அப்பா 

தான தர்மங்கள் எவை என்று அறிய அறிய தங்காதப்பா!!! கலியுகத்தில் அப்பனே எவை என்று அறிய அறிய 

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய பொய் பேசுவார்கள் அப்பா எவை என்று அறிய அறிய 

இதனால்தான் அப்பனே இறைவனுக்கு கோபம். 

அதாவது அப்பனே ஈசனுக்கு கோபம் வந்து அப்பனே பின் அழிக்க!!! எவை என்று அறிய அறிய!!

ஆனாலும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பின் எவை என்று கூட மீண்டும் அப்பனே பின் கந்தனும் எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய பின் பல பல வழிகளிலும் கூட சித்தர்களும் கூட ஞானிமார்களும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் மனிதனுக்கு அப்பனே புத்திகள் ஊட்டுவான் என்பேன் அப்பனே!!!

அப்படியும் திருந்தாவிடில் அப்பனே நிச்சயம் அழிவுகள் தான் என்பேன் அப்பனே 

கலியுகத்தில் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே மனிதனுக்கு அப்பனே பெரும் பெரும் துன்பங்கள் வரும் அப்பா!!!!!

அவையெல்லாம் தீர்க்க அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின்  
""""""""""" முருகனால் !!!! மட்டுமே!!!!!!!!!

அப்பனே தீர்க்க முடியும் என்பேன் !! அப்பனே!!!

இங்கிருந்து (நல்லூர் கந்தசாமி கோயிலில் இருந்து)அப்பனே சில மைல் தொலைவிலே அப்பனே ஒரு தீர்த்தம் உள்ளதப்பா அப்பனே அதை நிச்சயம் அருந்துவதால் அப்பனே நிச்சயம் அனைவரின் நோயும் தீர்க்க முடியும் என்பேன். அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் உடம்பில் கூட அப்பனே ஒரு நோயும் கூட வராது என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே காலப்போக்கில் அப்பனே மனிதனின் செயல்கள் எல்லை மீறி விட்டது!!!

அதனால் அப்பனே முருகன் அத் தீர்த்தத்தை மறைத்துள்ளான் என்பேன் அப்பனே!!!

அதை தன் கூட அப்பனே வரும் காலத்தில் நிச்சயம் அப்பனே மனிதன் பின் எவை என்று உணர்வான் அப்பனே 

நோய்களுடன் அப்பனே பின் எவை என்று நோய்கள் வந்துவிட்டதே!! வந்து விட்டதே!! என்றெல்லாம் அலைவான் என்பேன் அப்பனே

அப்பொழுது முருகன் காண்பிப்பான் என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய ஒரு ஞானி வழியாக வந்து அதை காண்பிப்பான் என்பேன் அப்பனே!!!! நல் முறைகளாகவே!!!

அப்பனே 

முருகன் பின் வள்ளி தெய்வானையோடு அழகாக அப்பனே இங்கு அமர்ந்து அப்பனே எவை என்று அறிய அறிய ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே இன்னும் இன்னும் பெரிய அளவில் வருவார்கள் அப்பா இத் திருத்தலத்தையும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் அப்பனே எதை என்று கூட அழிக்க பின் பார்த்தவர்களை கூட அப்பனே முருகன் அவர்களையும் அழித்திட்டான் அப்பா !!!

எதை என்று அறிய அறிய அப்பனே தியானம் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய பின் அழகாகவே யாங்களும்  கூட இங்கு அழகாகவே தியானங்கள் பின் தவங்கள் எதை என்று புரிய புரிய புரியும் அளவிற்கு கூட 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் மாணிக்கவாசகப் பெருமானும் இங்கே அமர்ந்து பின் எதை  என்று அறிய அறிய இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே சில புத்திகளையும் புகுத்தி புகுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய 

இதனால் அப்பனே பின் அடிக்கடி இங்கு மாணிக்கவாசகன் வந்து அப்பனே உறங்கி செல்வான் !!! இங்கு உறங்கிச் செல்வது உறுதி!!! எதை என்று அறிய  அறிய என்பேன். அப்பனே !!!

இதனால் அப்பனே பின் நால்வரும் கூட !!!

(சமயக்குரவர் என்பவர்கள் நான்கு பேர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்)

அப்பனே துதி பாடி அப்பனே!!

இவ்வுலகம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை நோக்கி?? செல்கின்றதென்றால் அப்பனே அழிவை நோக்கி தான் செல்கின்றது என்பேன் அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் சில கதிர்கள் அப்பனே மனிதர்கள் மீது விழும் பொழுது அப்பனே அவை கூட அப்பனே நோய்களை உருவாக்கும் என்பதை யான் எடுத்துரைத்துக் கொண்டே கூறிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன்...

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய பாடல்கள் தேவாரம் இன்னும் எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் எவை என்று உணர உணர அப்பனே சிவபுராணம் திருவாசகம் எதை என்று அறிய அறிய இவைதனை ஓதிக் கொண்டே வந்தால் அப்பனே 

அதாவது அப்பனே பின் பதிகங்களை கூட அப்பனே பின் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் நல்விதமாகவே பல பல உண்மைகள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே அவற்றையெல்லாம் அப்பனே மனிதன் சிந்திக்க மாட்டானப்பா!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஏனென்றால் அப்பனே பின் தாழ்வு நிலையில்தான் அப்பனே செல்வானப்பா!!!!

இவ்வுலகத்தில் அப்படியே பின் வாழ வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் கெட்டியாக இறைவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் கெட்டியாக பிடித்தார் போல் இருக்கின்றான் என்பேன் அப்பனே ஆனால் கடைசியில் விட்டு விடுகின்றான் என்பேன் அப்பனே 

ஏன்?? எதற்கு?? என்றால் மாயையில் சிக்கிக் கொள்கின்றான் என்பேன் அப்பனே!!

பின் இவ்வாறு எதை என்று அறிய அறிய இறைவன் கூட வருந்துகின்றான் என்பேன் அப்பனே 

நாம் படைத்தது!!! இவ்வளவு எதை என்று அறிய அறிய
இப்படித்தானா???? என்று!!!

அப்பனே அழகாகவே இறைவன் அனைவருக்குமே புத்திகள் எதை என்று அறிய அறிய சிறந்த விளங்க அப்பனே முதலிலே படைத்து விடுகின்றான் அப்பனே!!

ஆனாலும் அப்பனே காலப்போக்கில் போகப் போக அப்பனே அவனுடைய பின் அதாவது மாறுதல்கள் அப்பனே என்னவென்று சொல்வது????

இதனால்தான் அப்பனே இறைவனுக்கும் கோபம் வந்து பின் அதாவது......

நாம் படைத்தோம்!!!!.... எதை என்று அறிய அறிய ஆனால் யாம் படைத்தவாறு இல்லையே??? என்று!!!

அதாவது பின் எவை என்று அறிய அறிய இறைவன் விரும்பாதவாறு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய 

இதனால் அப்பனே இறைவன் விரும்பும்படி அப்பனே வாழ வேண்டும்....

அப்படி இல்லையென்றால் நிச்சயம் இறைவனே அப்பனே தண்டித்து அப்பனே சில கஷ்டங்களையும் சில சோதனைகளையும் கொடுத்து அப்பனே மீண்டும் சாந்தப்படுத்துவான் என்பேன் அப்பனே 

அதனுள்ளே இறைவனை பிடித்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே வாழ்ந்து விடலாம் என்பேன் பின் வருங்காலங்களில் அப்பனே 

வரும் காலத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் மனிதன் அப்பனே தவறான பாதையில் தான் செல்வான் என்பேன் அப்பனே.. எவை என்று அறிய அறிய அப்பனே 

இதனால் அப்பனே இறைவன் அடிக்கத்தான் போகின்றான் பலமாக!!!

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

இதனால் அப்பனே எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே இதனால் யாங்கள் சித்தர்கள் அனைவருமே அப்பனே பல தேசங்களுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய 
அப்பனே!!!! ஆனாலும் எங்களுக்கு அனைத்தும் ஒரு தேசம்தான் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே அவரவர் பிரித்தனர் என்பேன் அப்பனே!!! அங்கெல்லாம் சென்று பல வழிகளிலும் கூட முன்னோருக்கு எல்லாம் எவை என்று கூட ஆசிகள் கொடுத்து இப்படி வாழ்ந்தால் வெற்றி பெறலாம் என்றெல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே அவையெல்லாம் சுவடிகளில் அதை எல்லாம் மறைத்து விட்டனர் அப்பனே!!

(சித்தர்கள் அனைத்து தேசங்களுக்கும் சென்று முன்னர் வாழ்ந்த மனிதர்களுக்கு எப்படி எல்லாம் வாழ வேண்டும்???? என்று உபதேசம் செய்து பல ஓலைச்சுவடிகள் மூலமும் தெரியப்படுத்தி)

(சித்தர்கள் இடையே அந்த நாடு இந்த நாடு என்ற பாகுபாடு இல்லை.... அவர்களுக்கு எல்லாம் ஒரே பூமி ஒரே நிலம் ஒரே மனிதர்கள்)

இங்கும் (நல்லூர் கந்தசாமி கோயிலில்) பல ஓலைச்சுவடிகள் எதை என்று அறிய அறிய இருந்தன என்பேன் அப்பனே!!! அவையெல்லாம் அப்பனே திருடி விட்டு சென்று விட்டனர் என்பேன் அப்பனே.. எதை என்று புரிய புரிய அப்பனே 

இதனால் எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் இங்கும் அப்பனே நால்வர்களும் வந்து அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட சிறப்பாகவே வருவார்கள் என்பேன் அப்பனே 

அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் அனைத்து நாயன்மார்களும் கூட எதை என்று அறிய அறிய ஒருநாள் அப்பனே பின் இங்கு வருவார்கள் என்பேன் அப்பனே!!! இங்கே உணவை உட்கொண்டு செல்வார்கள் என்பேன் அப்பனே!!! அனைவருக்கும் ஆசிகள் தந்து அப்பனே எவை என்று அறிய அறிய!! அப்பனே!!

இதனால் அப்பனே புதைந்துள்ளது அப்பனே இவ் தேசத்தில் (இலங்கையில்) அப்பனே பின் வைர ரத்தின கற்கள் என்பேன் அப்பனே...

ஆனாலும் அதை கொள்ளையடிப்பதற்காகவே வருவார்களப்பா ஆட்சிகள் செய்வார்களப்பா!! எதை என்று புரிய புரிய

அப்பனே ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இவையெல்லாம் விட்டவர்கள் அப்பனே இப்பொழுது  அப்பனே பின் கண்ணுக்கு தெரியாமல் அப்பனே  பின் ஒளிந்துள்ளார் என்பேன் அப்பனே !!!

எவை என்று அறிய அறிய அப்பனே இதுவும் கூட இறைவனின் தீர்ப்பே என்பேன் அப்பனே!!!

பின் இறைவனை வணங்காமல் அப்பனே அதாவது திருத்தலத்தில் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பல ரத்தினங்கள் ஒளிந்து அப்பனே காணப்பட்டது என்பேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே ஒருவன் பக்தனைப் போல் வணங்குவது போல் வந்து பின் நோட்டமிட்டு அப்பனே பின் எவ்வாறு எல்லாம் எடுத்துச் செல்லலாம் என்று எடுத்துச் சென்று விட்டான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அவந்தனும் கூட அப்பனே இத் தேசத்திற்கு வர முடியாமல் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பின் எதை என்றும் அறிய பின் கந்தன் அங்கே நிற்க வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

(திருடி சென்றவனை மீண்டும் இலங்கைக்கு வர முடியாமல் வெளி தேசத்திலேயே வைத்திருக்கின்றார் முருகன்)

எவை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய எங்கு உள்ளது??? எங்கெல்லாம் பணம் இருக்கின்றது????? என்பதெல்லாம் அப்பனே யோசித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன் திருடுவதற்கே என்பேன் அப்பனே 

ஆனால் முருகன் அடிப்பான் அப்பா!!!

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் சொல்லிவிட்டேன் அப்பனே தன் தன் நிலைக்கு தானே காரணம் என்பது போல் அப்பனே பல வாக்குகளிலும் கூட சொல்லிவிட்டேன் அப்பனே!!

இறைவனை வணங்குகின்றாயா!!!! அப்பனே பின் இறைவன் மீது நாட்டம் சென்று அப்பனே எவை என்று கூற இறைவன் தான் துணை நீயே !!தான் !! என்றெல்லாம் அப்பனே 

அன்பு!!! எதன் மீதும் செலுத்தாமல் அப்பனே இறைவன் மீது மட்டும் பின் செலுத்தி அப்பனே வந்தால் இறைவனே ஒரு நாள் நிச்சயம் கொடுப்பான் அப்பா 

தாமதமாகலாம்!!!.... ஆனால் வெற்றி நிச்சயம் என்பேன் அப்பனே!!

ஆனாலும் அப்பனே தவறான வழியில் செல்பவர்களுக்கு வெற்றிகள் அதிக அளவு வரும் அப்பா!! அப்பனே இக்கலி யுகத்தில் என்பேன் அப்பனே!!

ஆனால் ஒரு நாள் அப்பனே அனைத்தும் போய்விடும் அப்பா!!!

அப்பனே யாங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே என்ன சொல்வது??? என்பேன் அப்பனே 

அதனால் அவனவன் செய்த பாவம் அவன் தான் அனுபவிக்க வேண்டும்!!!

அவனவன் செய்த பின் புண்ணியம் அவன் தான் அனுபவிக்க வேண்டும்!!!

என்பவை எல்லாம் அப்பனே பெரியோர்கள் அப்பனே பின் ஏற்கனவே உரைத்திட்டு சென்றார்கள் என்பேன் அப்பனே..

எதையுமே ஏற்கவில்லை என்பேன். அப்பனே மனிதன்!!

எதை என்று அறிய அப்பனே முதலில் மாயையை தான் ஏற்கின்றான் அப்பனே மனிதன்!!! இக்கலியுகம் அப்படித்தான் என்பேன் அப்பனே!! எதை என்று அறிய அறிய அப்பனே!!

அப்பனே பின் தர்மத்தை கடைப்பிடிக்காது என்பேன் அப்பனே வரும் காலத்தில் என்பேன் அப்பனே இதனால் அழிவுகள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

மனிதன் மாறினால் அப்பனே இறைவனும் மாறுவான் என்பேன் அப்பனே 

பின் அதாவது மனிதன் என் நிலைக்கு !! என்று மாறினால் அப்பனே இறைவன் தன் நிலைக்கு மாறி பின் அதே போலவே அவனை அழிப்பான் என்பேன் அப்பனே

(மனிதர்கள் என் இஷ்டப்படி என்று நடந்தால்...இறைவனும் தன் இஷ்டப்படி நடந்து கொள்வார்)

அதாவது அப்பனே பின் நீருக்கு அப்பனே பின் அணை கட்டினால் நீரின் மூலமே அவனுக்கு அடி!!!

அப்பனே எதை எடுக்கின்றானோ??? எவை என்று அறிய அறிய அதன் மூலமே!!!....

( கத்தி எடுத்தவனுக்கு...கத்தியாலயே!!!...............????
(அநீதி இழைப்பவர்களுக்கு அநீதியாலே திருப்பி தண்டனை)

அதனால் எதற்காக??? துன்பத்தை எதை என்று அறிய அறிய யார் மூலம் எதன் மூலம் கொடுக்கின்றானோ அப்பனே அதனால் அவனுக்கே தண்டனை என்பது கூட அப்பனே அவந்தன் சிந்திக்க வேண்டும் என்பேன் அப்பனே

இதுதான் உலகமப்பா!!!

அப்பனே வருகின்றது அப்பனே எவை என்று அறிய அறிய புதிய புதிய அப்பனே பின் நோய்கள் எல்லாம் வரும் என்பேன் அப்பனே!!!

மனிதன் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எதை என்று அறிய அறிய அவை இருக்கும் அப்பா!!!

அவை மட்டும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய இங்கே..... ஒரு!!!!!.......

(நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் ஒரு தீர்த்தம் அதை முருகனை மறைத்து வைத்துள்ளார் அந்த நோய் தீர்க்கும் தீர்த்தத்தை  குருநாதர் குறிப்பிடுகின்றார்)

அதாவது அதனை கூட சொல்லி விட்டேன் அப்பனே 

அதனைக் கூட சொல்லிவிட்டால் அப்பனே அவ் நீரை எடுத்து கொண்டு அப்பனே பின் அதை சிறிதளவே அருந்தினால் போதும் என்பேன். அப்பனே 

நோய்கள் வராதப்பா!!!

அதனையும் கூட தவறான வழியில் பயன்படுத்தி காசுகள் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே மனிதன்!!!

அப்பனே எதன் மீது நாட்டம் எவையென்றும் அறிய அறிய !!!

இதனால் அப்பனே பரிசுத்தமாக இவ்விடம் என்பது மாணிக்கவாசகனின் இடமே என்பேன் அப்பனே!!!

இங்கே மாணிக்கவாசகன் உறங்கிச் சென்று உறங்கிச் சென்று அப்பனே பின் பரிசுத்தமான!!!

இன்றளவும் கூட வந்திட்டான் என்பேன்!!! அப்பனே நலமாக அனைவரையும் கூட ஆசீர்வாதங்கள் அப்பனே பின் கந்தனும் வள்ளி தெய்வானையுடன் வந்து ஆசீர்வாதங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் பிரம்மனும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இவை என்று புரியாமல் இருந்தாலும் அப்பனே பின் ஈசன் எதை என்று கட்டளை படியே!!!!

இங்கெல்லாம் அப்பனே ஒரு புது புது முயசிகள் எவை என்று கூட அழிப்பதற்கு!!! பின் எவை என்று அறிய அறிய  பெரிய பெரிய எவை என்று அறிய அறிய இங்கு வந்து விட்டால் எதை என்றும் அறிய அறியாமலும் கூட மக்கள் எதை என்று புரியாமல் கூட இத்திருத்தலத்தை எல்லாம் அழிக்கலாம் என்பதை எல்லாம் நிறைய என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே பெரிய பெரிய அளவில் எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய மனிதர்களுக்கு பின் இடம் கொடுத்து அப்பனே பின் இடம் கொடுத்து விட்டால் பின் அழிந்து விடும் திருத்தலங்கள் என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து !!!

(இந்த கோயிலை ஆக்கிரமித்து ராணுவ தளவாடமாக மாற்ற முயற்சிகள் நடந்தது)

ஆனாலும் கந்தன் விடவில்லை என்பேன் அப்பனே!!!

இன்னும் மக்களை காப்பதற்கே அப்பனே இன்னும் பல ரிஷிமார்களும் குருமார்களும் இங்கு வந்து அப்பனே பின் எவை என்று அறிய அறிய தடுத்து நிறுத்தி அப்பனே பக்திக்குள் எவை என்று கூற நல்விதமாகவே அப்பனே மனிதர்களை உருவாக்குவார்கள் என்பேன் அப்பனே வரும் காலத்தில் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே ஒருவனை உருவாக்கி அப்பனே இவ் தேசத்தை காப்பான் என்பேன் அப்பனே அதிவிரைவிலே!!!!........ முருகன் இதை செய்வான் அப்பா!!!

அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள் அப்பனே கோடி கோடியாய் பின் வந்து கொண்டே இருந்தாலும் அப்பனே எவை என்று அறிய அறிய கோடி கோடியாய் மனிதனுக்கு அப்பனே புத்திகள் மாறும் என்பேன் அப்பனே!!

ஆனால் எதை என்று அறிய அறிய எதன் மூலம் மாறுவது என்பதெல்லாம் அப்பனே வருங்காலத்தில் மனிதனே இவை என்று அறிய அறிய ஒன்றை செயற்கை முறையில் தயாரித்து அப்பனே எதை என்று தெரியாமல் இதை தன் பின் சோதிப்பதற்காக விடுவான் என்பேன் அப்பனே 

ஆனால் அவையே மனிதனைக் கொல்லும் என்பேன் அப்பனே!!!

அதற்கும் அப்பனே பின் (எப்படி பிழைப்பது எப்படி காப்பாற்றுவது) ஏங்குவான் என்பேன் அப்பனே எப்படி என்பதை கூட!!

அப்பொழுதும் கூட முருகன் கலியுக வரதன் முருகனே வந்து காப்பான் என்பேன் அப்பனே!!!

(வரும் காலத்தில் மனிதன் அறிவியல் ரீதியாக அணு ஆயுதங்களோ அல்லது மருத்துவ புதிய கண்டுபிடிப்புகளோ பரிசோதனை செய்து அதை பரிச்சித்து பார்க்கும் பொழுது அது பக்க விளைவுகளை ஏற்படுத்தி அதன் மூலமே மனிதர்களுக்கு மரணம் ஏற்படும்....

அதை முருகன்தான் வந்து காப்பாற்ற முடியும் இது இறைவனால் ஏற்கெனெவே எழுதப்பட்ட விதி!!!!)

ஆனால் ஏன் எங்களால் காக்க முடியாதா? என்பதற்கிணங்க எதை என்று அறிய அறிய அப்பனே இதுவும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனால் நிச்சயிக்கப்பட்டதே என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பின் யாங்கள் காப்போம் நல்விதமாகவே அப்பனே யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து அப்பனே!!!

தான் வேலையை அதாவது தன் கடமையை செய்து கொண்டு வந்தாலே அப்பனே உலகத்தில் நீடூழி வாழலாம் என்பேன் அப்பனே 

தன் கடமையிலிருந்து அப்பனே வெளிவந்தால் தான் அப்பனே கஷ்டங்கள் ஏற்படும் எவை என்றும் அறிய அறிய அப்பனே 

அதனால் எதை என்று புரிய அப்பனே கஷ்டம் இல்லாமல் இவ்வுலகத்தில் வாழ முடியாதப்பா!!! அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

அதாவது மனித உடம்பை பெற்றுவிட்டாலே அப்பனே கஷ்டம் தானப்பா !!! அப்பனே வாழ்வது என்பதெல்லாம் அப்பனே 

உடம்பு இல்லாமல் எதை என்று அறிய அறிய அப்பனே வாழ வேண்டும்!!!

அதனால் தான் அப்பனே யாங்கள் உடம்பை விரும்புவதில்லை என்பேன் அப்பனே!!!

பின் பரிசுத்தமான ஆற்றலோடு திரிந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே 

உடம்பை பெற்று விட்டால் அப்பனே யாராயினும் இறைவனே ஆயினும் அப்பனே கஷ்டங்கள் படத் தான் வேண்டும் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய 

நோய்கள் உருவாகும் காலமப்பா வரும் காலங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய 

கடல் எவை என்று அறிய அறிய  பின் அப்பனே.... அதாவது அதன் நடுவிடத்தில்!!!!(கடல் நடுவில் சுனாமி போல உருவாகும் வரும் காலத்தில்) அப்பனே வரும் காலத்தில் பின் விரிவாகவே விவரிப்பேன் என்பேன் அப்பனே!!! அதாவது கீழிருந்து அப்பனே பிழை என்று அறிய அறிய ஒரு பிம்பம் அப்பனே எரிந்து (கடல் அடியில் கண்டத்திட்டு நகர்வுகள் எரிமலை வெடிப்பு போன்று ) கொண்டே மேல் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது அப்பா!!!

எவை என்று கூற ஆனாலும் அவை வந்து விட்டால் அப்பனே பின் எவை என்று கூட கடலும் பொங்கி அப்பனே பின் ஊருக்குள் வந்து விடும் அப்பா இவை என்று கூட ஊருக்குள் வந்திட்டு அப்பனே அனைத்தையும் அழித்து விடும் அப்பா 

ஆனாலும் அவற்றை அப்பனே இன்னும் யாரும் கண்டு கொள்ளாத அளவில் அப்பனே விஞ்ஞானிகள் கூட கண்டு பிடிக்க முடியாதப்பா!!!

மனிதனோ பின் வாழ்வோம் வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா!!

ஆனால் உலகத்தில் என்னென்ன???

எவை என்று கூட பின் வேலைகள் என்னென்ன?? எவை என்று செய்கின்றது என்பதை எல்லாம் தெரியாமல் அப்பனே !!!!

(இந்த உலகத்தில் என்னென்ன சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது ஆறுகள் மலைகள் வளிமண்டலம் ஒளிமண்டலம் நீர் மண்டலம் என எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றது பஞ்சபூதங்கள் எப்படி தற்போதைய நிலைமையில் இருக்கின்றது எப்படி இவையெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் தெரியாமலே மனிதர்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்)

ஆனால் அவ் பிம்பமானது அப்பனே பின் மேல் எழும்பி வந்து விட்டால் அப்பனே பின் கடல் எதை என்று அறிய அப்பனே அப்படியே அதாவது கடல் நீர் அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!

(கடலுக்கு உள்ளே எரிமலை வெடித்து உருவாகி இருக்கும் பிம்பம் மேலே வரும் பொழுது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சுனாமி போல ஏற்பட்டு அனைத்து ஊர்களும் மனிதர்களும் அழிந்து விடுவார்கள்)

ஆனாலும் அப்பனே ஆனால் இறைவன் அப்படித்தான் இருப்பான் அப்பா!!!

அப்பனே பின் இறைவன் எப்பொழுதும் இருப்பான் அப்பா அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் எவை என்று அறிய அறிய ஆனால் மனிதன் அழிவானப்பா!!!

இவற்றையெல்லாம் தடுக்க!!!

அப்பனே ஏனென்றால் அப்பனே வருகின்றார்கள் அப்பா பக்தியோடு தான் இருக்கின்றார்கள் அப்பனே அவர்களையும் காப்பாற்ற பட வேண்டும் அல்லவா அப்பனே!!!

அப்பனே இதற்காகத்தான் அப்பனே இயங்கிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!

(புண்ணியங்கள் எங்கும் இல்லை!!! மனிதர்கள் செய்யும் அநியாயங்கள் அக்கிரமங்கள் எல்லை மீறி போவதால் இறைவன் அதாவது இயற்கையின் தலைவன் பூகம்பங்கள் கடல் கொந்தளிப்பு வெள்ளப்பெருக்கு இதன் மூலம் அழிவுகள் ஏற்படுத்த!!!!!

இதில் உண்மையான பக்தர்களும் நல்லவர்களும் இருக்கின்றார்கள் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணையோடு ஒவ்வொரு பேராபத்திலும் இருந்து காப்பாற்றிக் கொண்டே வந்து மனிதர்களுக்காக சித்தர்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் இதை அனைவரும் உணர வேண்டும் பேராபத்துக்கள் இந்த உலகை சூழ்ந்துள்ளன பூமி சுற்றும் வேகம் குறைந்து எதிர் திசையில் சுழல ஆரம்பிப்பது எங்கும் நிலச்சரிவுகள் மழை வெள்ளம் பூகம்பங்கள் புதிய புதிய நோய்கள் மேலிருந்து விழும் கதிர்வீச்சுக்கள் அதன் மூலம் மனிதர்களுக்கு பாதிப்புகள் என திரும்பிய பக்கமெல்லாம் துன்பமான சூழ்நிலைதான்... இதிலிருந்து மனிதர்கள் மீள்வதற்கு ஒரே வழி குருநாதர் அகத்தியர் பெருமான் சொல்வதை அப்படியே கடைப்பிடித்து செல்வது இது ஒன்றுதான் மனித குலம் கடைத்தேறும் வழி.. அசைவ உணவு பழக்கத்தை விட்டு விட்டு முடிந்தவரை தான தர்மங்கள் குருநாதர் வழிகாட்டும் வாழ்க்கை முறை குருநாதர் பரிந்துரைக்கும் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தாலே பாதி கஷ்டங்கள் தீர்ந்து விடும் மனிதகுலம் நல்லபடியாக வாழ சித்தர்கள் எவ்வளவு தூரம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனிதர்கள் உணர்வதே இல்லை)

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒருவன் இங்கு இருந்தான் அப்பா அதாவது எதை என்று புரிய புரிய அப்பனே

அவன் எப்பொழுதும் கூட முருகா முருகா என்று அழைத்துக் கொண்டிருந்தான் அப்பா 

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பின் அனைவரும் கூட அவனை கண்டுகொள்ளாது கண்டும் காணாது முருகனிடத்திற்குச் சென்று முருகா!! முருகா!! நீ அனைத்தும் தந்து விட வேண்டும் அனைத்தும் தந்து விட வேண்டும் என்று!!!

(நல்லூர் கந்தசாமி கோயில் வளாகத்தில் ஒரு ஞானி ஒருவர் இருந்தார் அவரை யாரும் பொருட்படுத்தாது ஆலயத்திற்கு உள்ளே சென்று முருகனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்!)

ஆனாலும் வெளியே வருவார்களப்பா பின் எவை என்று அறிய அறிய ஆனால் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டிருந்தாலே எதை என்று கூட அவந்தன் அவர்களிடம் பேசுவானப்பா !!

பின் முருகன் உங்களுக்கு அனைத்தும் தந்து விட்டான் சரியாகவே பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று!!!

ஆனாலும் அப்பனே வெளியே சென்று அப்பனே எதை என்று அறிய அறிய சிறிது கொடுப்பார்கள் ஆனால் அப்பனே பின் எதன் எதற்கோ பயன்படுத்தி மீண்டும் வந்து விடுவார்கள் அப்பா!!

ஆனாலும் பின் அனைத்தும் பின் இழந்து!!! மீண்டும் வந்து

ஆனாலும் அதாவது முருகா!! முருகா!! என்று சொல்லி கொண்டிருந்தால் அவன் சொல்வான் அப்பா!!

பைத்தியக்காரன் !!!!!!!!

முருகன் பின் அனைத்தும் கொடுத்தான் ஆனாலும் அதை அறிந்தும் கூட உபயோகிக்க படுத்த தெரியவில்லையே!!!!!

மீண்டும் கொடுப்பானா?? என்று எண்ணுகின்றாயா? மீண்டும் கேள் !!! அழுது புலம்பி என்று!!!

(ஆலயத்திற்கு வந்து முருகனிடம் வரம் வாங்கி அதன்பிறகு வாழ்க்கை வளம் பெற்று வெளியே சென்று தவறான வழியில் முருகன் கொடுத்ததை எல்லாம் பயன்படுத்தி இழந்து மீண்டும் முருகனிடத்தில் கேட்பதற்கு வந்தால் அந்த ஞானி அட பைத்தியக்காரா!!! முருகன் உனக்கு எல்லாமே கொடுத்தார் ஆனால் அனைத்தையும் அழித்துவிட்டு வந்து விட்டாயே மீண்டும் முருகனிடம் அழுது புலம்பி மன்றாடு என்று)

ஆனாலும் அப்பனே எதை என்று கூட ஆனாலும் இப்படித்தான் இங்கு நடந்து வந்தது என்பேன் அப்பனே 

ஆனாலும் அவனையும் (அந்த ஞானி யை) எட்டி உதைத்து எதை என்று அறிய அறிய அப்பனே.... பின் நல்லதை நீ சொன்னாய் இப்பொழுது தீயதை சொல்கின்றாயா என்று!!!

ஆனாலும் அப்பனே மனிதன் செய்வது தவறு அப்பனே..

மனிதனுக்கு எதை என்று அறிய அறிய தவறு செய்வது அப்பனே சாதாரணமாகிவிட்டது இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே!!!

ஆனால் உண்மையை கடைபிடியுங்கள் போதுமானது என்பேன் அப்பனே!!! எவை என்று கூட நற்பண்புகள் கூட சிறக்கும் அப்பா !! அப்பனே பின் பல புத்தகங்களை எழுதி வைத்து எதை என்று அறிய அறிய அழகாகவே அதை நிச்சயம் பின் செயல்படுத்தி வந்தாலே போதுமானதப்பா!!!

அப்பனே பின் திருவாசகத்தை ஓதி வந்தாலே போதுமானதப்பா!!! அனைத்து விஷயங்களும் அதில் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

அதன்படி செயல்பட்டாலே போதுமானது அப்பா அப்பனே பின் நீடூழி வாழலாம்!!!

ஆனாலும் அப்பனே பின் மற்ற உயிர்களை கொல்வது!!! அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதாவது மற்ற உயிர்களைக் கொன்று உண்ணுவது ஒருநாள் உன்னையே கொல்லும்!!

சொல்லிவிட்டேன் அப்பனே 

இங்கிருந்தே அப்பனே!!!

என் பக்தர்களுக்கு கூட!!! அப்பனே

அதனால் திருந்துவது நீங்களாக இருங்கள் என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு பிறந்து விட்டாலே அப்பனே பின் எதை என்று கூட அனைத்து உயிர்களும் இறைவனுக்கு சொந்தமானது என்பேன் அப்பனே.. பின் எவை என்று அறிய அறிய அதனை அதாவது அவை தன் கூட அப்பனே எவை என்று கூட சாபமிட்டு எதை என்று கூட அவ் ஆத்மா.... அதற்கு கூட அப்பனே நிச்சயம் அணு எதை என்று அறிய அறிய ஆத்மா எதை என்று புரிய புரிய அப்பனே இதெல்லாம் உண்டு என்பதெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே

எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே அவைகளைக் கூட கொன்று குவித்து எவை என்று புரிய புரிய ஆனாலும் அவ் ஆன்மாவும் இறைவனிடத்தில் செல்லும் என்பேன் அப்பனே 

இறைவா!! இறைவா!! இவ்வாறெல்லாம் எங்களை கொடுமைப் படுகின்றார்களே!!! மனிதர்கள்!! யார் இதை கேட்பதற்கு!!!! மனிதர்கள் எங்களை தின்று சந்தோஷப்படுகின்றான்!!! எவை என்று கூட யாங்கள் என்ன தவறு செய்தோம்????

என்றெல்லாம் இறைவனிடத்தில் புலம்புமப்பா!!!

அப்பொழுது இறைவன் அந்த உயிரினங்களின் ஆத்மாவை நீ இங்கே இரு!!! என் பக்கத்திலேயே இரு!!

யார் உங்களை கொன்றார்களோ அவன் நிச்சயம் இங்கு வருவான்!! அவனை நிச்சயம் தண்டித்து!! நீயே தண்டித்து விடு என்று!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் அதை உண்பவர்கள் மேலே வருவார்கள் அப்பா.... இவன்தான் எதை என்று கூட அதாவது எவை என்று கூற இவன்தான் எங்களை எங்கள் உடம்பை கொண்டு தின்றான்!! என்று அடையாளம் காட்டி விடும்பொழுது எவை என்று கூட!!!!

இது எங்கு வேண்டுமானாலும் அப்பனே எதை என்று அறிய அறிய தர்மம் !!! பின் தர்மம் என்பது ஒன்றே என்பேன் அப்பனே!!! பின் எவரெவர் எதை என்று அறிய அறிய பின் எப்படி கொன்று சாப்பிடுகிறார்களோ!!! எவை என்று கூட அவரவர் அப்படியே (எப்படி அந்த உயிர்களை கொன்றார்களோ அப்படியே அதை கொன்று தின்றவர்களுக்கு தண்டனை) வழிகளில் தண்டனைகள் வழங்கப்படும் சொல்லிவிட்டேன் அப்பனே 

எவை என்றும் அறிய இதனால்தான் அப்பனே முதலில் பின் மாமிசத்தை நீக்குங்கள் நீக்குங்கள் என்றெல்லாம் அப்பனே கூறிக் கொண்டே வருகின்றேன். 

ஆனால் நீக்குவதில்லை என்பேன் அப்பனே!!

இவ்வாறு அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய பின் திருந்துவதில்லை என்பேன் அப்பனே

அதனால் அப்பனே எப்பொழுது பின் மாமிசம் எதை என்று கூட அதிகமாக இருக்கின்றதோ அவர்கள் முன்னேறவும் மாட்டார்கள் என்பேன் அப்பனே அப்படியே இருப்பார்கள் என்பேன் அப்பனே சோம்பேறியாகவே இருந்து அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்களோடு வாழ்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய 

அப்பனே அனைவருக்குமே தண்டனைகள் உண்டு என்பதை எல்லாம் பின் தெரிவித்துக் கொள்கின்றேன் அப்பனே இவ்வுலகத்திற்கு 

நீ என்ன செய்கின்றாயோ அதற்கு தகுந்தார் போல தண்டனைகளும் உண்டு அப்பனே எவை என்று அறிய அறிய பின் நீ நல்லது செய்தால் நல்லது நடந்து அப்பனே பின் மோட்சத்தையும் கூட!!!

அப்பனே மோட்சம் எதை என்று அறிய அறிய யாங்கள் அதாவது பிறவிகள் வேண்டாம் வேண்டாம் என்று அப்பனே எதை என்று அறிய அறிய (பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு வட்டம் ) சுழற்சிகள் வேண்டாம் வேண்டாம்!!! என்று அப்பனே 

அதாவது  மனிதப் பிறவி எவ்வளவு கஷ்டங்கள் என்பது அப்பனே நீங்கள் அறிந்ததே என்பேன் அப்பனே 

பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு இவை தேவையா என்பேன் அப்பனே!!!

எப்படி எப்படி வாழ்வது எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே உண்மைதனை உணர்ந்து அப்பனே வாழ்ந்து வந்தால் அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே பின் மோட்சமும் கிடைத்து அப்பனே உங்களுக்கு பிறப்பு வேண்டுமென்றாலும் ஈசனிடத்தில் கேட்டு!!!!

ஈசா!!!  அப்பா!!! ஒரு பிறவியை கொடு!!! எவை என்று கூட உன்னை வழிபடுவதற்கு!!! என்றெல்லாம் அப்பனே பின் கேட்டு வாங்கலாம் என்பேன் அப்பனே!!!!

நீங்கள் அதுபோலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே மாற்றங்கள் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே மாற்றங்கள் பின் இறைவன் கொடுக்கத்தான் தயாராக இருக்கின்றான் என்பேன் அப்பனே 

ஆனால் மனிதன் விரும்புவதில்லை என்பேன் அப்பனே!!! தவறான பாதையில் யான் சென்று தான் அழிவோம் என்று தான் மனிதன் இருக்கின்றான் அப்பனே!!!

இறைவன் என்ன செய்வான்?? அப்பனே!! இதனால் எதை என்று அறிய அறிய இறைவன் பார்த்து பார்த்து எவை என்று அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் அழியும் நிலைக்கு வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே 

ஆனால் யாங்கள் தடுப்போம் என்பேன் அப்பனே!!!

இறைவன் பரிபூரணமாக இங்கு அமர்ந்து இருக்கின்றானப்பா வள்ளி தெய்வானையோடு!!! அப்பனே 

பல பல திருத்தலங்களுக்கு சென்று அப்பனே ஆசிர்வாதங்களை பெற்று கர்மத்தை நீக்குவீர்களாக!!!!!!!!!! மனிதர்கள் அப்பனே 

அப்படி இல்லை எவை என்று கூட பின் யான் இருக்கும் இடத்தில் இருந்தே இறைவனை காண வேண்டும் என்றால் அப்பனே அப்படித்தான் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே பின் பிறப்புக்கள் எடுத்து எடுத்து ஓட வேண்டும் அப்பனே 

எதற்கெடுத்தாலும் அப்பனே முயற்சிகள் அப்பனே பின் எவை என்று கூட கஷ்டங்கள் பின் பட வேண்டும் என்பேன் அப்பனே...

கஷ்டங்கள் பட்டால் தான் உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் இறைவன் கூட ஆசிர்வாதம் செய்வான் என்பேன் அப்பனே 

கஷ்டங்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பேன் அப்பனே

அதனால் அப்பனே நல்விதமாகவே எதை என்று அறிய அறிய பல திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே அங்கு தான் நாங்கள் எங்கு எதை என்று கூட திருக்கதிர்கள் அதாவது அப்பனே எதை என்று கூட ஒளிக்கதிர்கள் திருக்கதிர்கள் இதற்கும் எதை என்று அறிய அறிய வித்தியாசங்கள் உள்ளது என்பேன் அப்பனே எவை என்று அறிய அப்பனே 

(ஒளிக்கதிர்கள் திருக்கதிர்கள் 

ஒளிக்கதிர்கள் அதாவது புற ஊதா அகச்சிவப்பு ஒளி கதிர்கள் மனிதனுக்கு கேடு விளைவிப்பவை. இதைப்பற்றி பெங்களூர் வாக்கில் குருநாதர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். பெங்களூர் சத்சங்கம் பாகம் 10 சித்தன் அருள் 1636.

திருக்கதிர்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது இறைவனால் மேலிருந்து அனுப்பப்படும் ஆலயங்களுக்கு உள்ளே இருக்கும் திருக்கதிர்வீச்சுக்கள் இவை இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு திருக்கதிர்கள் வேண்டுமென்றால் ஆலயங்களுக்கு தான் செல்ல வேண்டும்)

இதனால் எங்கெல்லாம் பின் நல்விதமாக திருக்கதிர்கள் பின் ஒளிந்துள்ளதோ எவை என்று அறிய அறிய எவை என்று கூட எங்கு அவையெல்லாம் விழுகின்றதோ... யாங்கள் முன்பே எதை என்று அறிய அறிய அப்பனே திருத்தலங்களை அமைத்தோம்!!!

அங்கு நிச்சயம் அப்பனே வந்தால் மனிதனின் உள்ளே உள்ள சில ஒளி கதிர்களையும் கூட அப்பனே... தீயவை அதாவது பின் பாவ கதிர்கள் எதை என்று கூட பின் புண்ணிய கதிர்கள் என்றெல்லாம் மனிதனிடத்தில் இருக்கும் அப்பா!!!

ஆனாலும் அவ் பாவ கதிர்கள் மனிதர்கள் எங்கெல்லாம் சென்றால் அவை மறையும் என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் அறிந்தோம் அப்பனே

அதற்காகத்தான் அப்பனே திருத்தலங்கள் திருத்தலங்கள் பல பல வழிகளிலும் கூட யாங்கள் அமைத்தோம். 

அங்கெல்லாம் அப்பனே சென்றால் அப்பனே பின் நிச்சயம் அழியும் அப்பா பாவம்!!!

புண்ணியங்கள் பெருகும் அப்பா!!!

ஆனால் மனிதன் செல்வதில்லையே அப்பனே!!

மனிதன் பின் தவறான வழிகளில் செல்கின்றான் என்பேன் அப்பனே!!!

அதை நிறுத்துவதற்காகவே அப்பனே யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே 

உலக மாற்றம் அப்பனே எவை என்று அறிய அறிய பெரும் வீழ்ச்சி அப்பா 

எதை என்று அறிய அறிய அப்பனே அதனையும் மாற்றுகின்றோம் அப்பனே 

அன்பானவர்களே ஆசிகள்!! ஆசிகள்!!

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் பல ரகசியங்கள் அப்பனே இத்திருத்தலத்தில் உள்ளது!! மீண்டும் வந்து வாக்குகள் செப்புவேன். நலன்கள்!! ஆசிகள்!! ஆசிகள்!!

நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.

கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது. 

கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவராக   முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக வழிபடப்படுகிறது. கண்டு கதிர்காமம் கோயிலிலும் வேல்தான் மூலவராக கருவறையில் இருப்பது போல இங்கும் வேல் மூலவராக இருக்கின்றார். 

தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்  பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேலைத்தான், இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக எழுந்தருளச் செய்திருக்கிறார் முருகப் பெருமான். திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர்.மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது.வள்ளி, தெய்வானை இருபுறமும் இருக்க, வேலை சிறப்பாக அலங்கரித்து வழிபடுகின்றனர்.

கோயிலில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் திருநல்லூர் முருகன் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. முருகப்பெருமானுக்கு ஊஞ்சல் பாட்டுப் பாடி, சிறிய மஞ்சத்தில் வைத்துத் துயில்கொள்ளச் செய்கின்றனர். பள்ளியறை பூஜையைத் தரிசிக்க பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 4:30 முதல் 12 வரை; மாலை 4 முதல் 6:15 வரை.

நித்திய பூஐை நேரங்கள்
காலை 04.30 - பள்ளியறைப் பூஐை
காலை 05.00 - உஷத்கால பூஐை
பகல் 10.00 - காலை சந்தி பூஐை
நண்பகல் 12.00 - உச்சிக்கால பூஐை
மாலை 04.00 - சாயங்கால பூஐை
மாலை 05.00 - இரண்டாங்கால பூஐை
மாலை 06 .00 - அர்த்த யாம பூஐை

நல்லூர் கந்தசாமி திருக்கோயில். நல்லூர்.யாழ்ப்பாணம்.ஜாஃப்னா ஸ்ரீலங்கா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. முருகா! முருகா!! முருகா!!!

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete