​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 20 August 2024

சித்தன் அருள் - 1664 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை!





24/7/2024 அன்று குருநாதர் உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : பூலோக முதல் சொர்க்கம் திருவண்ணாமலை. 

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே!!

அப்பனே நேற்றைய பொழுதிலும் கூட அப்பனே பின் நல்முறையாகவே அப்பனே ஈசனும் அப்பனே அனைவரையும் பார்த்திட்டான் என்பேன் அப்பனே... இதனால் அப்பனே சில மாற்றங்கள் வாழ்வில் உருவாகுமப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே வரும் காலம் அழியும் காலம் என்பதை கூட அப்பனே 

இதனால் அப்பனே பின் நல் அறிவு இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே...

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் எவை வந்தாலும் அனைத்தும் ஈசன் செயலே என்று பின் எண்ணிக்கொள்ள வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே 

இவ்வாறு அவ்வாறு என்றெல்லாம் பின் பேசுதலும் கூடாது என்பேன் அப்பனே 

அதை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய அறிய பின் ஏனென்றால் அப்பனே இப்படித்தான் அழிய வேண்டும் என்பதெல்லாம் விதியப்பா!!!

அதாவது கலியுகம் எதை என்று அறிய அறிய அப்பனே அநியாயம் தான் ஓங்கி நிற்க வேண்டும் என்பது விதியப்பா!!

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் அதாவது வந்து வந்து அப்பனே மனிதர்களை எல்லாம் பக்குவப்படுத்தி அப்பனே யார் மூலம் எதைச் செய்யலாம் என்பதை விரும்பி அப்பனே நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் அப்பனே 

அதுமட்டுமில்லாமல் அப்பனே இன்னும் பொங்கி வரும் அப்பா எதை என்று கூற கடலும் கூட அப்பனே 

அவை மட்டுமில்லாமல் அப்பனே தரித்திரங்கள் அப்பனே இன்னும் மனிதனுக்குள்ளே மனிதனுக்குள்ளே போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் மாண்டிடுவான்!!! அப்பனே 

இதனால் அப்பனே எதை என்று யான் சொல்ல???

பக்திக்குள் நுழைந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய பொய் பித்தலாட்டங்கள் இவையெல்லாம் நடைபெறும் என்பேன் அப்பனே 

பின் பக்தன் என்பான் அப்பனே ஆனாலும் அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே  எவை என்று புரியாமல் நிலை என்று அறியாமலும் கூட

இதனால் அப்பனே பின் கலியுகத்தில் பக்தி என்பதே தோல்வியாகும் என்பேன் அப்பனே..

அதனால் தான் அப்பனே சித்தர்கள் ஆங்காங்கு எவை என்று அறிய அறிய அப்பனே புரியும் வகையில் பின் நல்விதமாகவே ஏற்படுத்தி அப்பனே யாங்கள் நிச்சயம் இவ் ராஜ்யத்தை காப்பாற்றுவோம் அப்பனே

அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய புதுமையான நோய்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே 

ஆனாலும் யான் சொல்லிய அவுஷதங்களை எல்லாம் எடுத்துக் கொண்டாலே போதுமானதப்பா 

அப்பனே எவை என்று கூற அதுவும் புண்ணியம் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்பேன் அப்பனே 

புண்ணியம் இல்லை என்றால் அப்பனே அதையும் உண்ண முடியாதப்பா எவை என்று அறிய அறிய அப்பனே.... பாவம் விடாதப்பா..

அப்பனே கற்று உணர்ந்து கற்று உணர்ந்து செயல்பட வேண்டும் என்பேன் அப்பனே 

நல்விதமாக அப்பனே பின் அனைவரையும் பின் யான் பலமுறை பார்த்திட்டேன் என்பேன் அப்பனே... நல்லாசிகளும் தந்துவிட்டேன் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பொறுமையாக இருங்கள் அப்பனே அனைத்தும் தெளிவுபடுத்தி அப்பனே!!! உங்களுக்கு என்ன தேவையோ அதை ஆராய்ந்து ஆராய்ந்து யான் தருகின்றேன் அப்பனே நலமாகவே!!

வெற்றி வாய்ப்புகளும் உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே கலியுகத்தில் பல பிரச்சனைகள் கூட வரும் அப்பா... அப்பனே எவை என்று அறிய அறிய... 

இதே போலத்தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே பக்தர்களுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனே சோதிப்பான் என்பேன் அப்பனே... பக்குவங்களாக அனைவரும் இருக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே 

அதற்காகத்தான் அப்பனே பொதுவாகவே அப்பனே பின் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே நலமாகவே 

அப்பனே நீங்கள் ஓரளவு பக்குவப்படுத்தி எவை என்று கூற உங்களை பக்குவமும் படுத்தி விட்டேன் யானே அப்பனே...

இதனால் அப்பனே பல வகையிலும் கூட உங்களுக்கே தெரியுமப்பா... பல பல வழிகளிலும் கூட இதனால் அப்பனே எதை என்று புரிய புதிய இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே உலகம் அழியும் அப்பனே எதை என்று அறிய அறிய 

ஏனென்றால் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் பூமி நின்று அப்பனே எவை என்று கூற அதாவது அப்பனே பின் எதிர் திசையில் சுழல்கின்ற பொழுது அப்பனே மனிதனின் எண்ணங்கள் மாறும் அப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே

மனிதன் பைத்தியக்காரனாக போவான் அப்பா 

ஆனாலும் அப்பனே யாங்கள் அதை விடப்போவதில்லை என்பேன் அப்பனே!!

மனிதன் அப்பனே எதையெதையோ பின் யோசித்து.. பின்.அவ் சட்டம்!!
 இவ் சட்டம்!!!. இவை கொண்டு வந்தால் நல்லது என்றெல்லாம் அப்பனே பின் அரசு சார்பில் யோசித்துக் கொண்டிருப்பான் அப்பனே 

ஆனால் அப்பனே மனிதன் சாகும் நிலைக்கு!!!!

ஆனாலும் அப்பனே அவனே பின் எவை என்று அறிய அறிய பின் பைத்தியக்காரன்  என்றெல்லாம் அப்பனே...அவனே பைத்தியக்காரன் அவந்தனக்கே பல பிரச்சினைகள் என்று உணர மாட்டான் அப்பா...

பின் மக்களை காப்பாற்ற எவ்வாறு என்பதையெல்லாம் தெளிவுபடுத்த முடியாதப்பா இதனால் தான் அப்பனே மனிதனின் பின் முட்டாள் எவை என்று அறிய அறிய... எவை என்று கூற பின் எவை என்று அறிய அறிய அப்பனே பைத்தியக்காரன் எவை என்று அறிய அறிய பின் தாழ்வானவன் அவை எவை என்று கூற அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய 

இதனால் புரிந்து வாழுங்கள் அப்பனே...

புரிந்து வாழாமல் அப்பனே அவை மட்டும் எவை என்று அறிய அறிய புரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே 

புரிந்து பின் வாழாமல் அப்பனே இருந்தால் அப்பனே இறைவன் அருகிலே இருப்பானப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனா நீ என்று அப்பனே பின் சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பார்கள் அப்பா 

இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அனைவருக்குமே அறிவுகள் பலமாக கொடுத்திருக்கின்றார்கள் அப்பனே எவை என்று அறிய

ஆனால் அவ் அறிவை சரியாகவே பயன்படுத்துவதில்லை என்பேன். அப்பனே 

அதனால் தான் யாங்களே எவை என்று அறிய அறிய அப்பனே பின் கஷ்டங்களை ஏற்படுத்தி அப்பனே பின் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சொல்லிக் கொண்டே போனால் அப்பனே சித்தர்களையும் கூட பொய்யாக்குவார்கள் என்பேன் அப்பனே..

பொய்யான விடயத்தை ஏற்படுத்தி அப்பனே அதை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் நிச்சயம் இறைவன் அங்கு இருக்கின்றான் பின் எதை என்று புரியப் புரிய இறைவனுக்கு பல பரிகாரங்கள் செய்தால் அனைத்தும் நடந்து விடும் என்றெல்லாம் அப்பனே... பின் அகத்தியன் உரைத்தான்!! போகன் உரைத்தான் இன்னும் மூலன் உரைத்தான்!! இன்னும் முருகன் உரைத்தான்!! இன்னும் பின் கோரக்கன் உரைத்தான்!!! என்றெல்லாம் பின் எவை என்று கூற இவனே சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது அப்பன வழி தெரியாமல் அப்பனே வாழ்வதற்கு வழி தெரியாமல் இருப்பானப்பா வரும் காலத்தில் அப்பனே 

அதனால் பக்திக்குள் நுழைந்து விட்டால் ஏதோ ஒன்றை பரப்பி விட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்துவிடும் அப்பா..

ஆனாலும் அப்பனே அப்படி பிழைத்தலாகாது !!  என்பேன் அப்பனே!!

அவன் எவை என்று கூற ஆனாலும் இறைவன் அப்பொழுது கூட சிறிது கொடுப்பான் என்பேன் அப்பனே 

ஆனாலும் மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பனே... தன்னைத்தானே மாற்றிக் கொள்ள வேண்டும்... அப்படி மாற்றாவிடில் அப்பனே நிச்சயம் பின் அதாவது அப்பனே அவனும் கஷ்டத்தில் பின் போயிட்டு அப்பனே அவன் பின் எவை என்று கூற குடும்பமும் கஷ்டத்தில் போய்விட்டு அப்பனே அனைத்தையும் இழந்து விடுவான் என்பேன் அப்பனே 

இதனால் எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே... சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

மனிதன் எவை என்று அறிய அறிய அவை இவை என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே.. ஜாதகத்தையும் பார்த்து அப்பனே ராகு இங்கு இருக்கின்றது!!! கேது இங்கு இருக்கின்றது!!! இதற்கு பரிகாரங்கள் எவை என்று அறிய அறிய இவ்வளவு தேவை என்றெல்லாம் அப்பனே உளறிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே!! வாய்க்கு வந்ததெல்லாம் என்பேன் அப்பனே!!

ஆனாலும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே...

எதை என்று புரிய புரிய அப்பனே உண்மை ஞானத்தை அறியுங்கள் அப்பனே.. உண்மை ஞானத்தை அறிந்து கொண்டாலே வாழ்க்கையில் எல்லையில்லா வெற்றிகள் கிடைக்கும் அப்பா 

அப்படி பின் உண்மை ஞானத்தை அறியாவிடில் வாழ்க்கையில் படு தோல்வி ஏற்பட்டு அப்பனே எதை என்று அறிய அறிய நீயும் கெடுவாய் அப்பனை உன்னை சார்ந்தோரும் கெடுவார்கள் அப்பா 

இதனால் அப்பனே உண்மையை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே..

அப்பனே உலகத்தில் நீதி இல்லை நியாயம் இல்லை அப்பனே தர்மமும் இல்லை என்பேன் அப்பனே... இவையெல்லாம் அப்பனே தாழ்கின்ற பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அப்பனே வருவான் அப்பா 

அப்பனே அழித்து மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே 

இதனால் அப்பனே பல்வேறு எவை என்று கூற அப்பனே எதை என்று கூற பின் பக்தர்கள் அப்பனே இறைவனை எப்படி எப்படியோ வணங்குகின்றார்கள் என்பேன் அப்பனே

ஆனால் தீர்வு ஒன்றுதான் என்பேன் அப்பனே 

அப்பனே நோய்கள் காலம் அப்பா.... சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

கலியுகம் என்றால் நோய்கள் என்பது அர்த்தம் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் நோய் வந்த பிறகு ஓடோடி வருவான் இறைவனிடத்தில். பின் நோய் வந்துவிட்டதே நோய் வந்துவிட்டதே நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே சனீஸ்வரனும் பன்மடங்கு அப்பனே பின் ஆபத்துக்களை உருவாக்குவான் அப்பா 

அப்பனே இவற்றையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் எப்படி தடுத்திட வேண்டும்?? என்பதையெல்லாம் யாங்கள் சிந்தித்து அப்பனே... சிந்தித்து சிந்தித்து அப்பனே பின் யார் மூலம் எதை செய்தால்....?? என்பதையெல்லாம் அப்பனே சிந்தித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே! 

இதனால் தன் வாகனத்தில் எதை என்று கூற அதாவது சனீஸ்வரனின் வாகனத்தில் வந்து அப்பனே நிச்சயம் அப்பனே எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே... அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அனைவருமே!!!

சனீஸ்வரனுக்கு அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே... ஒரு உயிரை கொன்று பின் கொண்டால் சனீஸ்வரனுக்கு... சுத்தமாகவே பிடிக்காதப்பா!!!!

(சனீஸ்வரரை குறித்து இடைக்காடர் கூறிய வாக்குகள்!! மீண்டும் படித்து அறிந்து கொள்க 

சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!

17/3/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காளிகாம்பாள் சக்தி பீடம் பாவாகட் காளிகா தேவி கோயில்  குஜராத்

சித்தன் -அருள் -1590 - அன்புடன் அகத்தியர் - கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில்! இடைக்காடர் சித்தர் வாக்கு
தர்ம தேவதை!!! சனியவன். தர்ம தேவன்!!!! சனியவன்.  

இவ் இரண்டு பதிவுகளில் சனீஸ்வரரை குறித்து இடைக்காடர் கூறிய  வாக்கினை படித்து தெரிந்து கொள்ளலாம்)

ஆனாலும் அப்பனே சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே...

சனீஸ்வரனுக்கு பரிகாரங்களாம்!!!!?!?!?!?!?!?!?!?!?

சனீஸ்வரனுக்கு பரிகாரங்கள் அதைச் செய்!!! அங்கு செல்!!!!..... இங்கு செல்லு!!!!... பின் அங்கு சென்றால் நலமாகும்... என்பதெல்லாம் அப்பனே....

ஆனாலும் அப்பனே முதலில் அப்பனே மூலம்?? என்பது என்ன?? என்பதை மறந்து விடுகின்றான் அப்பனே 

இவ்வாறு மறந்துவிட்டு அப்பனே பின் எங்கு சென்றாலும் அப்பனே........

பின் அங்கு சென்றோம் ஆனால் பின் அதாவது அனைத்தும் உண்டு விட்டு (அசைவ உணவுகள்) அதாவது அப்பனை உயிரையும் கொன்று உண்டு விட்டு... அப்பனே பின் எதை என்று அறிய அறிய.... திருத்தலங்களுக்கு செல்வார்களப்பா!!!

ஆனால் அப்பனே வரும் வழியிலே ஆபத்துக்களப்பா 

(அசைவ உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் ஆலயத்திற்கு சென்று வரும் வழியில் விபத்துக்கள்)

இவ்வாறு தான் அப்பனே எதை என்று அறிய அறிய....

ஆனால் தன்னிடத்திலே அப்பனே பின் எவை என்று அறிய அறிய.... அனைவரிடத்திலேயுமே அப்பனே ஒரு மூலாதாரம் அப்பனே மூலாதாரத்தை இறைவன் வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அதை யாரும் செயல்படுத்துவதில்லை என்பேன் அப்பனே 

ஏன் ? செயல்படுத்த முடிவதில்லை???? என்றால் அப்பனே

எவை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று புரிய புரிய அப்பனே... எப்பொழுது அப்பனே அதாவது ஒருவன் அப்பனே மனிதனை மனிதன் நம்புகின்றானோ அப்பொழுதே  அவ் மூலாதாரம் அப்பனே செயல்படுவது இல்லை என்பேன் அப்பனே 

இறைவனை நம்புகின்றவன் இறைவனை நோக்கி படையெடுத்து செல்கின்றவன் அப்பனே இறைவன் தான் உண்மை என்று பின் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூற அப்பனே.... இறைவனே மெய் 

பின் மீதி அனைத்தும் பொய் என்று யார் பின் உணர்கின்றானோ.... அப்பனே அப்பொழுது மூலாதாரம் அப்பனே செயல்படும் என்பேன் அப்பனே 

பின் அதாவது உங்களுக்கே தெரியும் அப்பா... உங்கள் வாழ்க்கை எவ்வாறு என்பது கூட.... மூலாதாரத்தை செயல்படுத்தி விட்டால் என்பேன் அப்பனே.

அனைவருக்குமே மூலாதாரத்தை அப்பனே பின் ஈசன் பின் அழகாகவே கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே அதன் மூலம் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே 

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அவ் மூலாதாரத்தை எப்படி எவை என்றும் அறிய அறிய அப்பனே பின்..... எதன் மீதும் பின் நாட்டம் (விருப்பங்கள்) கொள்ளக் கூடாது என்பேன் அப்பனே 

ஆனாலும் நிச்சயம் அப்பனே அப்பொழுதுதான் அவ் மூலாதாரம் எழுமப்பா.... அப்பனே அடுத்து நடக்க இருப்பது என்னவென்று? தெரியவரும் அப்பா...

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆசைகள் அப்பா!!!

பின் இறைவனை காணலாம் !!! (இறைவனை காண வேண்டும் என்ற ஆசை கூட இருக்க கூடாது) எதை என்று அறிய அறிய பின் இன்னும் அங்கு எவையென்று..கூற... அங்கு... பின் பின் எவை என்று அறிய அறிய பெண் போகின்றாள்... எதை என்று அறிய அறிய இன்னும் பெண் மீது ஆசைகள் எவை என்று அப்படி இப்படி என்றெல்லாம் அப்பனே இருந்தால்....அவ் மூலாதாரம் அப்பனே அப்படியே இருக்கும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே 

(மூலாதாரம் எழும்பாது)

இதனால் அப்பனே மனிதனுக்கு புத்திகள் மாறும் அப்பனே எவை என்று கூட என்ன பேசுவது?? எதை என்றும் அறியாமல் பேசுவான்!!!

ஏனென்றால் அப்பனே பின் உலகம் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய பின் எதை என்று கூற அப்பனே கலியுகத்தில் அப்பனே இதனால் அப்பனே மனிதன் தாழ்வு நிலையில் செல்கின்ற பொழுது தான் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே பின் எவை என்று கூட அனைத்தும் கொடுப்பானப்பா!!!

ஆனாலும் கொடுப்பதற்கும் அப்பனே மனிதன் எவை என்று அறிய அறிய அப்பனே அவ்வளவு திறமைகள் பெற்றிருக்கவில்லை என்பேன். அப்பனே... இறைவன் படைத்தான் அப்பனே அத் திறமைகளை எல்லாம் பின் வீணாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே 

பின் இவ்வாறு மனிதன் செயல்படுத்திக் கொண்டிருக்கையில் என்ன லாபம்??? எதை என்று புரியப் புரிய 

இதனால் பின் எதை என்று கூறிய புரிய புரிய லாபம் என்றால் இவ்வுலகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே... சரியாக அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே 

அதாவது பின் உன் உயிர் கூட உங்களுக்கு சொந்தமில்லை என்பேன் அப்பனே 

அவை மட்டுமில்லாமல் உடம்பு கூட உங்களுக்கு சொந்தம் இல்லை என்பேன் அப்பனே ஆனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே 

அதாவது அப்பனே உடம்பை பின் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே...

இறைவன் கொடுத்த உடம்பு அப்பா ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே மாமிசத்தை அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அதுவும் கூட உண்டு அப்பனே பின் எதை என்று அறிய அறிய கர்மத்தை சம்பாதிக்காதீர்கள் என்பேன் அப்பனே 

அப்பனே பின் நோய்கள் வரும் அப்பா சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

"""""'"'எங்கெங்கு?? மாமிசம் உட்கொள்கின்றார்களோ!?!!!!! அங்கு முதலில் அழிவு ஏற்படும் அப்பா சொல்லி விட்டேன் அப்பனே எதை என்று புரிய  புரிய!!!!!!

இதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

சமீபத்தில் நாட்டில் ஒரு மூலையில் ஏற்பட்ட அழிவுகள் நினைவில் கொள்க!!! 

அப்பனே உங்களுக்கு எவை என்று அறிய அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இருக்கின்றதப்பா 

ஆனாலும் உண்மை நிலையை தெரிந்து கொண்டு வாழுங்கள் என்பேன் அப்பனே..

யான் அருகிலேயே இருக்கின்றேன்!!!! உங்களுக்கு அருகிலேயே இருக்கின்றேன் !!! இதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு அப்பனே எவை என்று புரிய புரிய ஒவ்வொருவருக்கும் கூட வாக்குகள் எப்படி செப்ப முடியும்??????

எதை என்று அறிய அப்பனே என்னுடைய அனுக்கிரகங்கள் அப்பனே பெற்றிருப்பதினால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் அனைவருமே அப்பனே இப்பொழுது வாக்குகள் எவை என்று கூட கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே மாற்றங்கள் உண்டப்பா ஏற்றங்களும் உண்டப்பா 

இதனால் அப்பனே நன்முறைகளாகவே இன்னும் இன்னும் எதை என்றும் புரிய  புரிய... அப்பனே எவை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே நிச்சயம் புரிய வைத்து எவை என்று அறிய அறிய அப்பனே... பாதி வாழ்க்கையை கூட புரிய வைத்து விட்டேன் அப்பனே 

இன்னும் கொஞ்சம் தான் இருக்கின்றது என்பேன் அப்பனே... இதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே அனைவருமே கூட அப்பனே 
(யாத்திரை சென்ற அடியவர்களுக்கு)

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

அதாவது ரகசியங்கள் இன்னும் சொல்கின்றேன் பொறுத்திருந்தால் என்பேன் அப்பனே நலமாகவே 

இதனால் வெற்றிகளும் உண்டு அப்பனே வாழ்க்கையில் எவை என்று அறிய அறிய ஏனென்றால் ஏன் சரியாக பின் மக்களுக்கு பின் வெற்றிகள் பின் கிடைக்கவில்லை பல நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பூமி அப்பனே பின் மெதுவாக சுழல எவை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே அப்படியே எதிர் திசையில் அப்பனே பின் சுழல அப்பனே பின் வந்து கொண்டே இருக்கின்றதப்பா!!!!

அதனால் தான் அப்பனே முதலில் அதை எப்படி சரிப்படுத்துவது??? என்பதை கூட சரிப்படுத்தி விட்டு அப்பனே... என் பக்தர்களுக்கு அனைத்தும் யான் தருகின்றேன் என்பேன் அப்பனே... எவை என்று புரிய புரிய 

இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் இதனால் எதிர் திசையில் அப்பனே பின் சுழலும் பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய 

"""""""""" சில மூலிகைகள் இருக்கின்றதப்பா அவை மனிதர்களுக்கு உதவும் அப்பா... !!!!

எவை என்று அறிய அறிய சில செயற்கை அப்பனே மூலிகைகளும் இருக்கின்றதப்பா... அவை மனிதனுக்கும் கூட உதவுமப்பா எதை என்று அறிய அறிய சரியாக விடும் என்பேன் அப்பனே
நோய்கள் வந்தால்...

ஆனால் எதிர் திசையில் பூமி சுழல ஆரம்பித்தால் அப்பனே அவையே அப்பனே விஷமாக கூடும் என்பேன் அப்பனே... அதனையே உட்கொண்டு மனிதன் சாவான் என்பேன் அப்பனே. 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே... என் பக்தர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 

தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே 

என் பக்தர்களுக்கு சரியாகவே அப்பனே அறிவுகள் கொடுத்திருக்கின்றேன் என்பேன் அப்பனே 

அதனால்தான் உங்களுக்கு அண்ணாமலையிலே வைத்து வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே நலமாகவே.

அதனால் தெளிவு பெறுங்கள் அப்பனே 

தெளிவு பெறவில்லை என்றால் அப்பனே நிச்சயம் எங்கு சென்றாலும் ஒன்றும் நடக்காது அப்பா 

அப்பனே வீண் என்றே அப்பனே.. எதை என்று அறிய அறிய பக்திகள் அப்பனே அதாவது என் வழியில் வருபவர்களுக்கெல்லாம் அப்பனே உண்மைகளை புகுத்தி அப்பனே ஆசீர்வாதங்கள் கொடுத்து அப்பனே நல் முறைகளாக இறைவன் அப்பனே எங்கிருக்கிறான்!? என்பதை எல்லாம் யான் காட்டுவேன் அப்பனே நலங்களாக அப்பனே

எவ்? ரூபத்தில் இறைவன் வருவான்? என்பதை எல்லாம் அப்பனே யான் காட்டுவேன் என்பேன் அப்பனே நலன்களாகவே அப்பனே

பேச வைப்பேன் உங்களிடத்திலே அப்பனே அப்பொழுது நீங்களே எவை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே நலன்களாகவே என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே ஓர் எவை என்று அறிய அறிய அப்பனே அனைவரும் குழந்தைகள் இல்லை என்பேன் அப்பனே 

அதாவது குழந்தைகளுக்கு முதலில் அப்பனே அவை இவை என்று அப்பனே கற்றுக் கொடுத்து விடுவார்கள் தாய் தந்தையர்கள் அப்பனே 

அதை தன் அப்பனே அப்படியே பிடித்துக் கொண்டு வந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பேன் அப்பனே 

பின் அவை தன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் கடை பிடிக்காவிடில் தோல்வி என்பேன் அப்பனே 

உங்களை அதே போலத்தான் என்பேன் அப்பனே பக்குவங்கள் கொடுத்து அழைத்து வந்து விட்டேன் என்பேன் அப்பனே அனைவரையுமே!!! 

இதனால் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே... அவரவருக்கும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே..

நிச்சயம் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய நீங்கள் அனைவரும் பக்தியை செலுத்துகின்றீர்களே ஏன் எதற்கு என்றெல்லாம் ஒரு நாள் யோசித்தது உண்டா?????

அப்பனே அப்படி யோசித்தால் நீ மனிதன் அப்பா!!

நீ யோசிக்காவிடில் அப்பனே எப்படி அப்பா????

அறிந்தும் கூட அப்பனே ஏன் பக்திகள் செலுத்துகின்றோம்??? ஏன் இறைவன் ஆலயத்திற்கு சென்று கொண்டே இருக்கின்றோம்??
பின் எதை என்று அறிய அறிய அப்பனே... இதையெல்லாம் சிந்தித்துக் கொள்ள வேண்டும் அப்பனே...

அவை மட்டும் இல்லாமல் நாம் என்ன தவறு செய்தோம்???

நாம் அதாவது என்ன புண்ணியம் செய்தோம்??? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே

அவ்வாறு தெரிந்து கொண்டு ஐயனே!!!!!!! தெரிந்தும் தெரியாமலும் பின் எவை என்று கூட சில தவறுகள் செய்து விட்டேன் மன்னித்திடுங்கள் என்றெல்லாம்!!....

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அவையெல்லாம் பதிவாகி கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே 

எவை என்று புரிய புரிய அப்பனே அவை அதாவது பதிவுகள் அதிகமாகிவிட்டால் அப்பனே... எவராலும் காப்பாற்ற முடியாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே 

பின் எத் திருத்தலத்திற்கு சென்றாலும் அப்பனே காப்பாற்ற முடியாதப்பா 

அதனால் அப்பதிவை அப்பனே பின் சிறிது சிறிதாக அழிப்பதற்கு புண்ணியங்கள் என்ற பின் நிச்சயம் அப்பனே புண்ணியம் என்ற கோள் எவை என்று கூற நிச்சயம் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே 

புண்ணியங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப் பதிவுகளை நீக்குகின்றன என்பேன் அப்பனே 

ஆனாலும் இப்பதிவையும் கூட சேகரித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே அப்பொழுது சரியாக வந்தால் தான் என்பேன் அப்பனே 

அதனால் எவை என்று கூற பாவ கணக்கு பின் அதிக அளவு இருந்தால்..?? புண்ணிய கணக்கே இல்லை என்றால் அப்பனே சனீஸ்வரன் வந்து அப்பனே பின் வாகனத்தின் மீது அப்பனே அடிபட்டு பின் எவை என்று கூற மேலே அழகாக ஒப்படைத்து விடுவான் என்பேன் அப்பனே! 

எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்ல வேண்டும் என்பேன் அப்பனே 

இதனால்  சனீஸ்வரன் எவை என்று அறிய அறிய அப்பனே  இட்ட கட்டளை கலியுகத்தில் இன்னும் பின் நிறைய செய்வானப்பா சொல்லிவிட்டேன் அப்பனே 

முதலில் அப்பனே பின் ஜோதிடம் கூட அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் பால் அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் செல்பவர்களும் கூட!!.....

அப்பனே இவை தன் நிச்சயம் மாமிசத்தை உண்ணாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமே தவிர...

(இறை பக்தியை கடைப்பிடிப்பவர்கள் ஜோதிடம் சார்ந்த துறையில் இருப்பவர்கள் அனைவரும் அசைவை உணவை அறவே ஒதுக்கினால் தான் வெற்றிகள்) 

அப்பனே அப்படி இல்லையென்றால் அப்பனே மீண்டும் சொல்வான் அப்பா..... அவன் உண்ணுகின்றானே அவன் எப்படி இருக்கின்றான்?? என்று!!!

ஆனால் பின் அவந்தனுக்கு பின்  என்ன வரும் ??என்பது... எங்களுக்கு மட்டும் தான் தெரியுமப்பா!!! பொறுத்திருந்து தெரியுமப்பா அப்பனே!!!

இவ்வாறாக அப்பனே மூடர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே!!!

என் பக்தர்கள் அப்பனே இருந்தாலும் அப்பனே காசுக்காக பின் அவை சாப்பிடலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே..

எவ்வாறு நியாயம் அப்பா?????

எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.....

சித்தர்களுக்கு ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே...

மனிதனாக வாழ்ந்து வந்தாலே போதுமானதப்பா.... தன் கடமையை சரியாக செய்தாலே அப்பனே யாங்கள் வருவோமப்பா!! மீட்டுக் கொள்ள அப்பனே... எதை என்றும் அறிய அறிய அப்பனே நீங்கள்... எங்களை தேடி தேடி வந்தாலும் அப்பனே உங்களிடத்தில் சரியான புத்திகள் இல்லை என்றால் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய வீணப்பா!!!!

அதனால் அப்பனே நீங்கள் தன் கடமையை சரியாகவே செய்து வந்தாலே அப்பனே யாங்கள் வருவோம் என்பேன் அப்பனே நல் முறைகளாக அப்பனே உதவிடுவோம் என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அப்படித்தான் வரவேண்டுமே தவிர!!!....

ஒரு குருவானவன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சீடனை தேடி வர வேண்டும் என்பேன் அப்பனே!!

நீங்கள் தேடி செல்லக்கூடாது என்பேன் அப்பனே 

நீங்கள் தேடிச் சென்றால் அப்பனே அது பொய் 

குருவானவன் உன்னை தேடி வந்தால்... அது மெய்யப்பா 

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் அப்பனே பின் தேடி வருவான் முருகன் தேடி வருவான் அகத்தியன் தேடி வருவான் போகன் தேடி வருவான்..... இவையெல்லாம் செய்யுங்கள் தியானத்தில் அழையுங்கள் !!! இன்னும் பல புஷ்பங்களையும் கூட வைத்து வணங்கிடுங்கள்!! பின் அகத்தியனே!!! ஓம் அகத்தியனே!!! என்றெல்லாம் பின் கூவிக்கொண்டே இருங்கள்!... என்றெல்லாம் அப்பனே மனிதன் உரைப்பானப்பா!!!

அப்பப்பா!!!!?
எப்படியப்பா ???? நியாயம் இது?????

அப்பனே நீங்களே அப்பனே புரிந்து கொண்டீர்களா???

எவை என்று கூற உங்கள் அறிவு எப்படி இருக்கின்றது?? என்பதை பாருங்கள் என்பேன். அப்பனே 

இப்படி அழைத்தால் யாங்கள் வந்துவிடுவோமா ??????  என்ன?? அப்பனே !!!!

ஏன் அப்பனே பின் அமர்ந்து சிங்கமே!!! வா! வா! என்று அழையுங்கள்!!!!!

சிங்கம் வருகின்றதா என்று பார்ப்போம்!!!!!!!!!!

யானையே !!!  வா !!  வா!! என்று அழையுங்கள் பார்ப்போம்!!

யானை வருகின்றதா? என்று பார்ப்போம்!!!

அப்பனே அப்படியே அவை வந்துவிட்டாலும் அவை என்ன செய்து விடும் என்பதை கூட சிந்தித்துள்ளீர்களா?? என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே..... ஒரு மனிதரையே வரவழைத்து பார்ப்போம்!!!! எதை என்று கூற......

முடியாதப்பா!!!!

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே பின் அதாவது கலியுகத்தில் அப்பனே இப்படியே பின் வைத்து விட்டு இருந்தால் அப்பனே சித்தர்களே பொய்கள் என்று மனிதர்கள் சொல்லிவிடுவார்கள் என்பேன் அப்பனே 

நாங்கள் மனித குலத்தை காக்கவே அப்பனே போராடி போராடி அப்பனே எவை என்று அறிய அறிய.....

ஆனாலும் எங்களை வைத்து காசுகளை சம்பாதித்து அப்பனே எங்கள் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.... மனிதர்கள் 

எப்படியப்பா நியாயம்??? அப்பனே!!!

எதை என்று புரிய புரிய அப்பனே அதாவது ஒருவன் சொல்கிறான் அப்பா 

என் நண்பன் அகத்தியன் என்று சொல்கின்றானப்பா!!!!

அப்பனே பின் இவையெல்லாம் அப்பனே அவந்தனக்கு அறிவுகள் கெட்டுவிட்டதப்பா!!!

அவன் என்ன செய்தான் தெரியுமா ??? அப்பனே!!!

ஒரு பெண்ணை காதலித்து அப்பனே மறு பெண்ணை இன்னும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே திருமணம் செய்து கொண்டு அப்பனே அவந்தனுக்கு எதை என்று அறிய அறிய... அவன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பா 

யான் அகத்தியனிடத்தில் பேசுவேன்... உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூறு!!!

அகத்தியன் இடத்தில் பேசி யான் வாங்கி தருவேன் அனைத்தும் என்று !!

அப்பப்பா!! பொய்களப்பா அனைத்துமே!!!

இதே போலத்தான் மனிதன் நடிப்பானப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் அப்பனே ஜாதகங்கள் கூட அப்பனே சக்திகள் இழக்க நேரிடும் என்பேன் அப்பனே!!

ஏனென்றால் அப்பனே கிரகங்கள் அப்பனே சரியாக செயல்படாது என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு என்றால் அப்பனே புவி அப்பனே நிச்சயம் தன் வேகத்தை குறைக்கும் பொழுது அப்பனே எல்லா கிரகங்களும் எவை என்று அறிய அறிய அப்பனே ஈசனை நோக்கியே அப்பனே தவங்கள் செய்யும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

அப்பொழுது தீர்வு அதாவது முடிவு ஈசனிடத்திலே என்பேன் அப்பனே!!!

சொல்லிவிட்டேன் அப்பனே பல வாக்குகளிலும் கூட அப்பனே இதன் முன்னே வாக்குகளிலும் கூட செப்பி விட்டேன்...

மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே 

ஒரு உயிரைக் கொன்று அப்பனே அதாவது தலையை வெட்டினால் காலை வெட்டினால் அப்பனே நிச்சயம் அப்பனே.... மனிதனை ஏவி விடுவான் என்பேன் அப்பனே ஈசனே என்பேன் அப்பனே!!! வெட்டுவான் என்பதை சொல்லிவிட்டேன் அப்பனே

ஈசன் கட்டளை

(மிருகங்களை வெட்டுபவர்களுக்கு அவர்களை வெட்டுவதற்கு ஈசனே மற்றொரு மனிதனை ஏற்பாடு செய்து அந்த மிருகங்கள் எவ்வாறு வெட்டுப்படுகின்றதோ அதேபோல் அதை வெட்டுபவர்களுக்கும் வெட்டு விழும்.... அந்த உயிர்கள் எவ்வாறு துடி துடித்து சாகின்றதோ அதேபோல் அதை வெட்டுபவர்களும் துடிதுடித்து சாவார்கள்)

இதனால் தன் தன் நிலைக்கு ஏற்ப தான் அப்பனே வாழ்க்கை அமையும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

நீதி இல்லை நியாயம் இல்லை அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு செல்லாதப்பா.... இக்கலி யுகத்தில் அப்பனே 

இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

இதனால்... ஒவ்வொருவரையும் கூட உருவாக்கி அப்பனே எவை என்று கூட யாங்கள் உருவாக்கி அப்பனே மனிதன் அப்பனே பின் நல்ல இடத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பதெல்லாம் அப்பனே பின் அவா!!!! (ஆவல்)

ஆனாலும் எதை என்று கூற அப்பனே எவை என்று கூற இல்லையப்பா!!!  அவா!!! (ஆவல் )என்பதை கூட அப்பனே இங்கு பின் யான் இங்கு சொல்லவில்லை என்பேன். அப்பனே 

ஈசனுடைய கட்டளை என்பதற்கிணங்க... எவை என்று அறிய அறிய சொல்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே... அதனையும் கூட மதிப்பதில்லையே!!!!!

அப்பனே ஏன் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே பின் நீங்கள் சரியாக கடமையைச் செய்து வந்தாலே உங்களுக்கு யாங்களே தரிசனம் கொடுத்து உங்களை உயர்த்தி விடுவோம் அப்பனே 

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் பக்தி எவை என்று அறிய அறிய உண்மையானதாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அப்படி இல்லை என்றால் பைத்தியமாக தான் திரிய வேண்டும்... இக்கலியுகத்தில் சொல்லிவிட்டேன்!!!

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே...

யான் சொல்லியதை சரியாகவே கவனித்து அப்பனே சரியாகவே செய்திட்டாலே போதுமானதப்பா... பின் நற்பண்புகள் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே யாங்களே தருவோம் அப்பனே

நீங்கள் எதையுமே கேட்கத் தேவையில்லை என்பேன் அப்பனே..

அப்பனே ஒரு குழந்தை பின் அறிந்து அறிந்து அப்பனே பின் அதாவது ஒரு வயது ஒன்றரை வயது இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய பின் தாயானவள் நிச்சயம் அக்குழந்தையை பார்த்து எதை என்று அறிய அறிய என்ன தேவை??? என்று உணர்ந்து கொள்வாள் என்பேன் அப்பனே!!!

அதேபோலத்தான் அப்பனே பின் நீங்கள் எவை என்று அறிய அறிய இப்பொழுதெல்லாம் குழந்தைகளாக தான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே 

அதனால் உங்களுக்கு தேவை என்ன??? என்பதை கூட யான் உணர்ந்துவிட்டேன் அப்பனே 

அதனால் அதை நிச்சயம் யான் கொடுப்பேன் அப்பனே 

இதனால் நீங்கள் கேட்க தேவையே இல்லை என்பேன் அப்பனே 

அப்படி நீங்கள் கேட்டாலும் அதை யான் கொடுத்தாலும் அப்பனே!!!!!!

நிச்சயம் அப்பனே உங்களிடத்தில் பின் அதாவது அதை வளர்ப்பதற்கான தகுதிகள் இல்லை அப்பா

அதனால் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் 

அதாவது தகுதிகளை பலமாக வளர்த்திக் கொள்ள வேண்டும் வளர்த்திக் கொள்ள வேண்டும்!!!

ஆனாலும் அத் தகுதிகளையும் யானே கொடுக்கின்றேன் அப்பனே 

இப்பொழுதெல்லாம் உங்களுக்கு கடமை ஒன்று இருக்கின்றதப்பா!!!

அக் கடமையை சரியாக செய்து வந்தாலே அனைத்தும் யாங்களே கொடுப்போம் அப்பனே...

அது மட்டும் இல்லாமல் பல தரிசனங்கள் ஆங்காங்கு யான் கொடுத்தும் விட்டேன் அப்பனே லோபா முத்திரையோடு உங்களுக்கு!!!

(இடையிடையே குருநாதர் குறிப்பிட்டு சொல்வது யாத்திரை சென்ற அடியவர்களுக்கு) 

இன்னும் என்ன எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய நேற்றைய பொழுதிலும் கூட!!!!! அப்பனே பின் ஆசிர்வாதங்கள்.. யார்? என்று கூட இப்பொழுது யான் உரைக்கப் போவதில்லை!!! உங்களுக்கு !!!
(அடியவர்களுக்கு குருநாதர் சில விஷயங்களை செய்ய சொல்லி அடியவர்கள் அதன்படி கேட்டு செய்த செயல் குறித்து!!)

எதை என்று அறிய அறிய அப்பனே பின் உரைத்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய சூட்சுமமாகவே வைத்திருக்கின்றேன் அப்பனே அடுத்த வாக்கில் யான் செப்புவேன் பலமாகவே!! பலமாகவே!!

எதை என்று புரிய புரிய அப்பனே இப்படித்தான் உலகம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!! இப்படித்தான் இருக்கும் என்பதை கூட மனதில் நினைத்து சென்று கொண்டே இருக்க வேண்டும் எதை என்றும் அறிய அறிய அப்பனே... எவை என்று கூட யாங்கள் தடுப்பதற்கு அநியாயங்கள் தடுப்பதற்கு அக்கிரமங்கள் தடுப்பதற்கு யாங்கள் நிச்சயம் அப்பனே இனிமேலும் அப்பனே எவை என்று அறிய அறிய ஏற்படுத்துவோம். 

அப்பனே முதலில் நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது!!!!

சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... பின் அவுஷதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவுஷதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று !!!

(குருநாதர் பரிந்துரைத்த 32 மூலிகைகளாலான மருந்துகள் மற்றும் குருநாதர் கூறிய இயற்கை உணவு வாழ்வியல் முறைகள் குறித்த முழு விபரங்களுக்கும் குருநாதர் கூறியுள்ள மருந்துகளை பெறுவதற்கும் தொடர்பு கொள்க!! திரு.        தனக்குமார் ஐயா ஈரோடு +91 9566825599) 

ஆனாலும் ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கிறானப்பா 
அதை எல்லாம் எடுக்காதீர்கள் என்று !!!
(அந்த மருந்துகளை சாப்பிட வேண்டாம் என்று)

பின் அகத்தியன் எவை என்று அறிய அறிய அப்பனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடுமா?? என்று அப்பனே 

ஆனால் பின் வந்தால் தான் புரியுமப்பா!!!

ஆட்டம் !?!?!?!?!?!? எதை என்று அறிய அறிய!!!


(ஒரு நபர் அகத்தியர் சொல்வதை எல்லாம் எடுத்துக் கொண்டால் நோய் குணமாகிவிடுமா??? அதெல்லாம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்!!! அவருக்கு நோய்கள் வந்தால் தான் புரியும்)

அதனால் பின் எவை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே அதாவது பழமொழியும் உண்டு அப்பனே 

கண் கெட்ட பின் அப்பனே என்ன லாபம் என்று தெரியுமா???

(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்)

பின் இதை நீங்கள் அனைவருமே உணர்ந்தது தான் என்பேன் அப்பனே!!!


அதேபோலத்தான் அப்பனே இறைவனை தேடினாலும் சில கஷ்டங்கள் இறைவன் கொடுப்பான் அப்பா... அதை எல்லாம் தாங்கிக் கொண்டு அப்பனே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் இறைவன் தன் மடியில் மடிமீது அமர்த்தி அழகு பார்ப்பானப்பா !!!

இன்னும் அப்பனே வாக்குகள் பரப்புவேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே முதலில் யான் சொல்லியதை கூட அப்பனே அப்படியே பின் தெரிந்து கொண்டு அப்பனே பின் கடைபிடியுங்கள் என்பேன் அப்பனே!!!


அவை மட்டும் இல்லாமல் அப்பனே பலமாகவே அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள் உண்டு வாழ்க்கையில் என்பேன் அப்பனே நலமாகவே ஆசிகள் !!ஆசிகள்!! இன்னும் விளக்குகின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. இறைவா, அகத்தியா நன்றி! உங்களுக்கு பிடித்தது போல வாழ்வோம்.

    ReplyDelete
  2. நன்றி இறைவா, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Hi Sir, Vannakkam. I am staying in bangalore. Please let me know how to join Bangalore group. Thank you.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.நானும் பெங்களூரில் வசிக்கின்றேன். பெங்களூர் குழுமத்தில் சேர்வதற்கான விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா? நன்றி !!!

      Delete
    2. பெங்களூரு குழுமத்தை பற்றிய தகவல் எதுவும் என்னிடம் இல்லை.

      Delete
  4. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1664 - திருவண்ணாமலை!

    (1) எங்கெங்கு மாமிசம் உட்கொள்கின்றார்களோ அங்கு முதலில் அழிவு ஏற்படும்.
    https://www.youtube.com/watch?v=V0SHj55YUw8

    (2)மூலாதார சக்கரத்தை எப்படி இயக்குவது?
    https://www.youtube.com/watch?v=u57ynJYIxkU

    (3) அகத்திய மாமுனிவர் பக்தர்களுக்கு ஒரு முக்கிய வாக்கு
    https://www.youtube.com/watch?v=gjbaHZt-UTg


    ஓம் அன்னை ஷ்ரி லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete