அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 5
( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 4 )
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பல விசயங்களை அறிந்து கொள்ளவில்லை என்பேன் அப்பனே. ஆனாலும் புண்ணியங்கள் சேமிப்புகளாக வைத்துக்கொண்டே வருகின்றது.
அப்பனே அதிகம் புண்ணியங்கள் செய்தாலும் இறைவன் அழைத்துக் கொள்வான் தன்னிடத்தில்.
அதிகம் பாவம் செய்தாலும் இறைவன் அழைத்துக்கொள்வான். அப்பொழுது எப்படி வாழ்வது என்று நீங்கள் சிந்தித்தீர்களா?
அடியவர்கள்:- ( அமைதி )
சுவடி ஓதும் மைந்தன்:- சில விளக்கங்கள்.
அடியவர்:- அதுதான் சொர்க்கம், நரகம் என்பதா?
அடியவர் 1:- புண்ணியம் அதிகமாகிவிட்டால் இறைவன் அழைத்துக்கொள்வார். பாவம் அதிகமாகிவிட்டால் அந்த ஆத்மாவை அழித்து…
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கண்களில் ஓரத்தில் இரு செல்கள் இருக்குமப்பா. அப்பனே பாவம் , புண்ணியம் என்பது கூட. புண்ணியப் பாதையில் சென்று கொண்டே இருந்தால் மற்றொரு செல்லானது அப்பனே கஷ்டத்தை ஆரம்பிக்கும் அப்பா. இதே போலத்தான் அப்பனே சமநிலைப் படுத்தி , ஒவ்வொன்றாக அப்பனே சமநிலைப் படுத்திக் கொண்டே வரும் என்பேன் அப்பனே. இதனால் இன்பம் , துன்பம் எவை என்று அறிய அறிய சில காலம் துன்பம் வருவது, அப்பனே இன்பமும் வருமப்பா. இது உண்மை.
சுவடி ஓதும் மைந்தன் :- சில புரிதல் விளக்கங்கள்.
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் யாராலும் மாற்ற முடியாதப்பா. எங்களைப்போன்ற சித்தர்களால் மட்டுமே.
அப்பனே நீங்கள் அனைவரும் இறைவன் கட்டுப்பாட்டில் அப்பனே. அப்பனே அதனால் யான் பெரியவன், அனைத்தும் எந்தனுக்குத் தெரியும் என்றெல்லாம் பின் வாய் பேசலாம் என்பேன் அப்பனே. இறைவனுக்குத் தெரியும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் ஏன் அப்பா திருமணங்கள் நீட்டிக்கொண்டே போகின்றது? எந்தனுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று சிலரும் ஏங்கிக்கொள்வார்கள் என்பேன் அப்பனே. ஆனால் ராகு கேதுக்களின் தன்மை அதிகமாக இருக்கும் பொழுது சுலபமாக நடக்காதப்பா. பிரச்சனைகள் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி இருபானம் நவா ( 29ஆம் வயதில் ) அப்பொழுது நடந்தால்தான் பின் தீர்க ஆயுள் என்பேன். ஆனாலும் இப்பொழுது நிலமையில் தாய் தந்தையர் அப்பனே எடுத்து ஏதோ நடத்திவிடுவோம் என்று அப்பனே ( திருமணம் 29 வயதிற்குள் செய்து விடுகின்றனர்). ஆனால் இருபான் நவயின் மேலே ( 29 வயதிற்கு மேல் ) துன்பம் பல உண்டப்பா அப்பனே. பல பேருக்கு இப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
அப்பனே திருமண பாக்கியம் வேண்டி…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, யார் எல்லாம் திருமணம் வேண்டும் என்று வந்தவர்கள் ( சுவடியின் ) முன்னே வாருங்கள்.
திருமணம் வேண்டி வந்த அடியவர்கள்:- (எழுந்து முன்னே வந்தனர்)
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- திருமணம் ஆகியும் பின் பிரச்சினைகள்…
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா , திருமணம் ஆகியும் பிரச்சினை உள்ளவங்க வாருங்கள் ( சுவடியின் முன்னே ).
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- பின் குழந்தை பாக்கியம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா குழந்தை பாக்கியம் வேண்டி வந்தவர்கள் (சுவடியின் முன்னே வரவும் )
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இங்கு ஒருவன் கேள். (எழுந்து வந்த அடியவர்களையே கேள்வி கேளுங்கள் என்று குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளினார்கள்)
அடியவர் 1:- ( கேள்வி கேட்க முற்பட்டார்.அதற்குள்…):
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஏற்கனவே உரைத்து விட்டேன். நீ அப்படியே நில்.
அடியவர் 2:- கேட்கச்சொன்னாங்க
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஏன் இதை யான் கேட்கச் சொன்னேன் அப்பனே. எந்தனுக்குத் தெரியாதா?
அடியவர் 2:- ( அமைதி )
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா இதுக்கு பதில் சொன்னால்தான் அடுத்து ( வாக்கு அகத்திய மாமுனிவர் உரைப்பார்கள்). சொல்லுங்க ஐயா.
அடியவர் 2:- ஐயா வழி காட்ட வேண்டும்.
நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே. பின் வழிகள் காட்டவில்லை என்றால் அப்பனே நீ எங்கேயோ போய் இருப்பாய் அப்பனே. ( கருணைக்கடல் இவ் அடியவருக்குத் தனி வாக்குகள் உரைத்தார்கள் ).
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- வருங்காலத்தில் பக்தி என்ற பெயரில் நுழைந்து பெண்களை ஏமாற்றுவானப்பா. ( இவ்வாக்கு இங்கு பொது வாக்காக உரைத்தது. )
அப்பனே நலமாக வாழ்க்கை உண்டு அப்பனே என் ஆசிகளாலும் அன்பினாலும்.
அப்பனே நிச்சயம் என் பேச்சைக் கேட்காதவர்கள் அப்பனே கஷ்டத்திற்கு உள் ஆவார்கள் அப்பா. அப்பனே யாங்கள் சொன்னால் ஈசனே ஏற்றுக் கொள்வானப்பா. நீ ஏனப்பா? இதனால்தான் அப்பனே, மனிதன் சொல்வதைக் கேட்டுவிட்டாய் அப்பனே.
துன்பங்கள் இருந்தால்தான் கர்மத்தை நீக்க முடியும் என்பேன் அப்பனே. (கர்மத்தை நீக்கி விட்டதால்) மெது மெதுவாக நல்லது நடக்கும் அப்பா.
இதனால் அனைவருக்குமே எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ, அப்பனே ( அவன்தனை ) இறைவனே
காப்பாற்றி விடுவான்.
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..... தொடரும்!
ReplyDeleteஇறைவா!!!!! நீயே அனைத்தும்.
சித்தன் அருள் - 1645
அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 5
https://www.youtube.com/watch?v=RPSZaLpt67c
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
IYYA PALANI OR NEAR BY PALANI VARUVEERGALA IYYA. EPPADI NAN MUNKOOTIYEA ARIVATHU IYYA.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete