ஓதி மலையில் வைகாசி விசாக தினம் அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஓதிமலையில் குருநாதர் பொதுவாக்கினை உரைத்து விட்டு அங்கு இருந்த அடியவர்களுக்கும் முருக பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் குருநாதர் பொதுவாக சில விஷயங்களை கூறினார் அதன் தொகுப்பு
அப்பனே அனைவருக்குமே அதாவது இவ்வுலகத்தில் அனைவருக்குமே அச்சங்கள் உண்டு அப்பனே ஆனாலும் அப்பனே..... குறைகள் இல்லை அப்பனே
அதனால் அனைத்திற்கும் முருகன்தான் பொறுப்பு!!!
அப்பனே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!! அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இன்ப துன்பங்களை கூட சகித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! நலமாகும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!
சில சில எவை என்றும் தெரியாமலே மனிதர்களும் வருவார்கள் அப்பனே எதை என்றும் அறியாமல் புரியாமல் ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகன் விடப் போவதில்லை என்பேன் அப்பனே பொறாமைக்காரர்களும் எதை என்று அறியாமலே இவ் முருகனை எதை என்றும் அறிந்து அறிந்து!!!
ஆனாலும் அவர்களே பின்னோக்கி செல்வார்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை அப்பனே இன்னும் எதையென்று அறிய அறிய ஏராளம் வரும் காலங்களில் கூட எதை என்றும் அறிய அறிய அன்னத்தையும்( ஓதி மலையில் நித்திய அன்னதான சேவை) எதை என்று புரியாமலே அனைத்தையும் முருகனே ஏற்று நடத்துவான் என்பேன் அப்பனே!!!!
அதனால் இங்கு முருகனே முதல்வன்!!!!!
இதனால் யாரும் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே எவை என்று புரிய புரிய அவரவர் கேட்ட வரங்களை கூட முருகன் கொடுத்துக்கொண்டே வருகின்றான் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பேன் அப்பனே பல மனிதர்களும் கூட தவறாக பயன்படுத்தி தான் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று!!!
ஆனால் முருகன் தான் பெரியவன் இங்கு இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே
நலன்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே!!!
ஒரு அடியவருக்கு!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய கேட்டு பெறு!!!
(அதாவது என்ன வேண்டும் என்பதை என்னிடம் கேள் என்பதை குருநாதர் அந்த அடியவரிடம் கூற)
எனக்கு ஒன்றும் வேண்டாம் குருநாதனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து கொண்டீர்களா அப்பன்களே!!!!
எவை என்று அறிய அறிய இறைவனை வணங்கும் பொழுது இப்படித்தான் வணங்க வேண்டும்!!!
எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று அப்பனே!!!
ஆனால் இறைவன் முன்வந்து """"""இந்தா வைத்துக்கொள்!!!! என்று கொடுப்பான் அப்பனே!!!
அதைத்தான் இவன் வாயாலே யான் வரச் சொல்லி சொல்லிவிட்டேன் அப்பனே!!!!
அப்பனே எவை என்று கூட வாழ்க்கையின் தத்துவத்தை சரியாக பயன்படுத்தினாய் அப்பனே புரிந்து கொண்டாய் அப்பனே வாழ்க்கை அப்பனே எவ்வாறு என்பதை தெரிந்து கொண்டாய் அப்பனே ராகு கேதுக்களும் சரி அப்பனே அனைத்து பக்குவங்களும் தந்து விட்டார்கள் அப்பனே அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய மனிதனாக வாழ்ந்து வருகின்றாய் அப்பனே.
அனைவரும் மனிதர்கள் தான் என்று நீ சொல்லலாம் ஆனால் பல கஷ்டங்களையும் பட்டுப்பட்டு பல துன்பங்களையும் பட்டுப்பட்டு அப்பனே எவை என்று கூற அனைத்தையும் இழந்து யார் ஒருவன் இறைவனிடத்தில் வருகின்றானோ அவன் தான் மனிதன்!!!!!
அப்பனே சோதனைகள் எதை என்று அறிய அறிய அப்பனே சோதனைகள் கொடுத்து கொடுத்து அப்பனே சோதனைகளை கொடுப்பதே இறைவனுக்கு சந்தோஷமாம் ஆனால் அப்பனே பின் சோதனைகள் கொடுத்தாலும் இறைவன் எவை என்றும் அறிய அறிய பக்கத்தில் பின் எதை என்று அறிய அறிய!!!
ஆனாலும் அப்பனே அனைவருக்கும் நல் ஆசிகள் இன்றைய அளவில் எதை என்றும் அறிய அறிய முருகன் இங்கே வந்து எதை என்று அறியாமலே தாம் தான் கேட்ட எதை என்று கூட அனைவருக்குமை ஆனாலும் அப்பனே பொறுத்தாக வேண்டும் அப்பனே நிச்சயம் எவை என்றும் தாமதமாகுமே தவிர நிச்சயம் அனைத்தும் நிறைவேறும் அப்பனே
இவ் முருகனுக்கு வல்லமை உண்டு அப்பனே நிச்சயம் கேட்டுக் கொண்டு இருந்தாலே கோபங்கள் வந்து எடுத்துச் செல் என்று கூறி விடுவான் அப்பனே!!!!!
(இந்த இடத்தில் முருகன் கோபம், குறித்து அடியவர்களுக்கு சில ஐயங்கள் எழலாம்!!! ஒருமுறை சித்தர்கள் மத்தியில் குருநாதர் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது முருகனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் நன்மையே விளையும் ஆனால் முருகன் வருத்தப்பட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று ஒரு முறை முருகனின் குணத்தை வர்ணித்தார். அதை இங்கே நினைவூட்டுகின்றோம் அடிக்கடி முருகனைக் கேட்டு ஓதிமலை அப்பனே கேட்டு கேட்டு தொந்தரவு செய்தால் எடுத்துச் செல் வாங்கிக்கொள் என்று கோபத்துடன் கொடுத்து அனுப்பி விடுவார் என்று குருநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்)
அப்பனே நிச்சயம் நினைப்பது நடக்கும் என்பேன் அப்பனே !!! உயர்ந்த இடத்திற்கு செல்வான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஞானம் வேண்டுமென்றால் கஷ்டங்கள் பட வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொள்வான் அப்பனே சோதனைகள் கொடுத்து!!!
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய நற்பண்புகள் நிச்சயம் முருகன் துணை இருக்க கவலைகள் இல்லை!!!
முருக பக்தர்கள் அனைவரும் அனுதினமும் கந்தசஷ்டி ஓதி வந்தாலே போதுமானது என்பேன். அப்பனே அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்பேன் அப்பனே நல்முறையாகவே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்க அப்பனே நலமாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே.... என்று ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே சித்தர்களின் ஆசிகள் பரிபூரணமே... அப்பனே அனைவருக்குமே!!!!
நீங்கள் எண்ணும் எண்ணங்கள் சிறிது தாமதமாகுமே தவிர ஆனால் நிச்சயம் என்னுடைய அருளாலும் கந்தனுடைய அருளாலும் நிச்சயம் நிறைவேறும் நிறைவேறும் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் எக் கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!! ஆசிகள்!! ஆசிகள்!!!! அப்பனே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteMuruga Saranam. Odhimalai Andavare Saranam
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete