​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 August 2023

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்!









வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

30/7/2023 அன்று ஆடி மாத ஞாயிறு பிரதோஷம் குருநாதரின் உத்தரவுப்படி திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா காளஹஸ்தி காளத்தி நாதனை தரிசனம் செய்துவிட்டு  அன்று மாலையில் அடியவர்களுடன் காளஹஸ்தியிலிருந்து திரும்பி வரும் வழியில் மாலை நேரம் பிரதோஷ நேரம் நம் குருநாதர் அகத்திய பெருமான் சூட்சுமமாக அருகில் இருக்கும் ஈசன் ஆலயத்திற்கு செல்ல உத்தரவிட!!!!!!!

குருநாதர் காரணம் இல்லாமல் இப்படி சூட்சுமமான முறையில் உத்தரவிட மாட்டார் அருகில் ஏதோ ஒரு சிவனாலயம் இருக்கின்றது அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணி உடன் வந்த அடியவர்களிடம் கூற அவர்களும் இறங்கி அருகில் ஏதாவது ஈசன் ஆலயம் உள்ளதா என்று தெலுங்கில் கேட்க!!!!

இந்த சாலையில் இருந்து இடது புறமாக இரண்டு கிலோமீட்டர் சென்றால் அங்கு ஒரு சிறிய ஈசன் ஆலயம் உள்ளது என்று கூறினார்கள்.

உடனடியாக நாம் அனைவரும் அங்கு செல்ல வேண்டும் என்று திரு ஜானகிராமன் ஐயா உத்தரவிட!!!!

அதாவது காலகஸ்தியிலிருந்து திருப்பதி நெடுஞ்சாலை வழியாக ரேணிகுண்டாவிற்கு அடுத்து தண்டாலம் எனும் ஊர் உள்ளது!!! அந்த ஊர் சாலை வழியாக வரும் பொழுது தான் குருநாதர் சூசகமாக உத்தரவிட்டார்.

அங்கு சென்று பார்த்தால் ஒரு சிறிய அறை!!! கோயில் போன்ற அமைப்பு எதுவும் இல்லை!!! கோபுரங்கள் இல்லை சன்னதிகள் இல்லை பிரகாரங்கள் இல்லை ஒரே ஒரு சிறிய அறை அந்த அறைக்குள் பிரம்மாண்ட ரூபத்தில் திரு காலத்தி நாதனை போன்றே நீண்டு நெடிதுயர்ந்த லிங்கத் திருமேனி!!!! கண்டு தரிசிக்க இரு கண்கள் போதாது!!!!!!!!

திருவாட்சி கூட இல்லாமல் எவ்வித அலங்காரங்களும் இல்லாமல் சிறிய துண்டு போன்று வஸ்திரம் உடுத்தி ஒரு ருத்ராட்ச மாலை அணிந்து மிக எளிமையாக காட்சியளிக்கின்றார் பீமேஸ்வரர். அருள் பொங்கும் கருணை விழி யோடு தேவியார் உடனின்று அருள் பாலிக்கின்றார். 

சோடசலிங்கத் திருமேனி!!!!!!.... 16 பட்டை வடிவ அமைப்பில் உள்ளது சோடச லிங்கத் திருமேனி என்று அழைக்கப்படும் !!

இந்த அமைப்பு தமிழ்நாட்டிலும் விழுப்புரம் தென் பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர் காகபுஜண்டர் மகரிஷியின் ஜீவ சமாதியும் காகபுஜண்டர் மகரிஷி கைகளால் பிரதிஷ்ட செய்யப்பட்ட திருமேனியை  காணலாம். 

இந்த சிறிய ஆலயத்திலும் சோடச லிங்க திருமேனி!!!!

லிங்கத்தின் அருகிலேயே தேவியும் எதிரில் நந்தியெம்பெருமானும் உள்ளார்!!!!

மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உள்ளே செல்லும் பொழுது காட்டுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது!!

அருகே தூய தமிழில் பொன் முகலி ஆறு ஆந்திராவில் சொர்ணமுகி என்று அழைக்கப்படும் ஆறு அருகே ஓடுகின்றது. கண்ணப்ப நாயனார் தன் வாயிலும் கைகளிலும் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இந்த நதியின் நீரை தான் கொண்டு சென்றார்!!!!

இந்த ஆற்றங்கரையில் தான் கரையருகே ஆலயம் அமைந்துள்ளது!!!!

திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் அடியவர்களும் இந்த ஆலயத்திற்கு சென்ற பொழுது பக்தர்கள் கூட்டம் என்று யாரும் இல்லை!!!

ஈசனின் சாந்நித்தியம் மிகுந்து காணப்பட்ட  இவ் ஆலயத்தில் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் உரைத்தார்!!!!!

வாக்குகள் பின்வருமாறு!!!!! 

30/7/2023  ஆடிமாத ஞாயிறு பிரதோஷம் அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். பீமேஷ்வரர் திருக்கோயில். தண்டாலம். ரேணிகுண்டா. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நல்விதமாக நலன்கள் உண்டு என்பேன் அப்பனே!!! 

எதையென்றும் அறிய அறிய அப்பனே முற்காலத்தில் அப்பனே அதாவது எதை என்றும் தெரியாமலே அப்பனே அதாவது அப்பனே இறைவனை வணங்கி !! வணங்கி!!! அப்பனே செல்வங்களை குவித்தனர்.

ஆனாலும் அப்பனே பல அரசர்கள் இறைவனை நம்பி நம்பி செல்வங்கள் பின் எதை என்றும் தெரிந்தும் தெரிந்தும் குவித்து விட்டால் மக்கள் நம்தனை (அரசர்கள் நம்மை) மதிக்க மாட்டார்கள் என்று எண்ணி எதை எதையோ செய்து பல பல எதை என்றும் அறியாமலே ஆலயங்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்!!!

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பொழுது கலியுகத்தின் ஆரம்பம்!

எதை என்றும் அறியாமலே ஆனாலும் எதை என்றும் தெரியாமலே இதற்கான அப்பனே ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் ஹஸ்தி கால (காலஹஸ்தி) எதை என்றும் அறிய அறிய அப்பனே எதற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே காலனாக !!!!அப்பனே பின் ஈசன் இருந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய சரி முறையாகவே அனைத்தும் காப்பான்!!!

ஆனாலும் அப்பனே எதைச் செய்ய வேண்டும்?? எதைச் செய்யக்கூடாது?? என்பவை எல்லாம் அப்பனே அப்படியே தெளிவாகவே பிரதிபலிக்கும்!!! இதனால்தான் அப்பனே சுற்றியும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பல பல உண்மைகள்!!! எதை என்றும் தெரியாமலே அப்பனே பின் நவகிரகங்களுக்கும் கூட எதை  என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே அமைத்தோம்.

ஆனாலும் அப்பனே இன்றைய நிலைமையில் அப்பனே ஆனாலும் ஒரே ஒரு எதை என்றும் அறிய அறிய காலகஸ்தி எனும்......... ராகு கேது...க்களாகவே உள்ளது!!! 

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய மற்ற கிரகங்களுக்கும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் எதை என்றும் கூற எதை என்றும் அறிய அறிய அப்பனே

ஆனாலும் இதற்கு தகுந்தார் போல் அப்பனே இதுவும் ஒன்று என்பேன் அப்பனே!!!  (பீமேஷ்வரர் திருக்கோயில்) 

இங்கு வந்து வழிபட்டு செல்பவர்கள் அப்பனே பல குறைகளை நீக்கினர் என்பேன் அப்பனே!!!

அவை மட்டுமில்லாமல் அப்பனே தொடர்ந்து முன்பெல்லாம் இங்கே வருவார்களப்பா!!!! ஏழ்மை நிலையில் இருந்தாலும் அப்பனே அதாவது எதை என்று கூட கணவன்மார்களும் பின் சண்டைகளும் கூட அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் எதையெதையோ இச் சிவன் எதை என்று அறியாமலே நடத்தி வைத்தான் என்பேன் அப்பனே.

(ஏழ்மை நிலைகளை மாற்றியும் கணவன் மனைவியிடையே வரும் சண்டைகள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார் இந்த ஆலயத்தில் உள்ள சிவன்)

ஆனாலும் இதனால்தான் அப்பனே பல செல்வாக்குள்ள மனிதர்களும் கூட அப்பனே எதை எதையோ செய்து அப்பனே எவை என்றும் அறியாமலே இப்படி செய்து கொண்டே இருந்தால் இறைவன் உதவிகள் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் எவை என்றும் அறியாமலே நம் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று.....அப்பனே அவ் ஏழு எதை என்று அறிய அறிய ஈசனையும் அதாவது லிங்கங்களையும் அனைத்தையும் கூட அப்பனே அடித்து நொறுக்கினர்.

ஆனால் உடனடியாக அவர்களுக்கு தண்டனையும் பெற்று எதை என்றும் அறியாமலே இப்பொழுது கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் காலகஸ்தியில் அப்பனே அவர்கள் பிச்சை ஏந்தியே!!!! நிற்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே மனிதனைக் கூட எவை என்றும் அறியாமல் யாங்கள் நம்புவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

எதை என்று கூற தன் சுயநலத்திற்காகவே பயன்படுத்தி அப்பனே எதையெதையோ செய்து வருகின்றான் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே பெரிய செல்வாக்கு உள்ளவர்கள் கூட பணத்தின் மதிப்பு தெரியாதவர்கள் பின் பணம் பின் அவர்களிடத்தில் இருந்தாலும் அப்பனே அவர்கள் பின் இக்கலியுகத்தில் அப்பனே இறைவனையே எதிர்ப்பார்கள் என்பேன் அப்பனே.

அதனால் தான் அப்பனே நிச்சயம் முக்கால் பங்கு உயர்ந்த இடத்திற்கு செல்பவர்களை அப்பனே யாங்களே வந்து தடுத்து நிறுத்தி அவந்தனுக்கு இறை பலத்தை எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் புகட்டுவோம்!!!! அப்படி இல்லை என்றால் அடித்து நொறுக்கிடுவோம்!!!! அவ்வளவுதான் அப்பா வாழ்க்கை!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய...ஆறு,  ஐந்து என்றெல்லாம் ( லிங்கங்கள்) அப்பனே இதே போலத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே காலாஹத்தியில்  எதை என்றும் அறிய அறிய அப்பனே எவையென்றும் புரிய புரிய. அப்படியே எவை என்றும் அறிய சமமாகவே உள்ளதப்பா!!!! 

அங்கெல்லாம் சென்று வந்து விட்டால் அப்பனே பல பலன்கள் ஏற்படும் என்பேன் அப்பனே இக்கலியுகத்தில் வாழலாம் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதையும் கூட அப்பனே எவை என்றும் அறியாமல் ஆனாலும் ஏகப்பட்ட எதை என்று கூட இன்னல்களை சந்தித்து அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒரு பொய் ஞானி எதை என்றும் அறியாமலே அப்பனே பல வகைகளிலும் கூட மக்களை மயக்கி பொய் சொல்லி பணங்களை பறித்தான்.

ஆனாலும் அப்பனே உண்மை ஞானி வந்து எதையென்றும் அறிய அறிய அதாவது அப்பனே வசிஷ்டனும் வந்து அப்பனே எதை என்றும் அறிய மக்கள் எல்லாம் பின் நோய் நொடிகள் அப்பனே பணங்கள் இழப்பு அப்பனே இங்கெல்லாம்  எவை என்றும் அறிய அறிய அப்பனே அப்படி அப்படியே பின் சாகும் நிலை மடிந்து போயினர் !!.....மடிந்து போய்க் கொண்டே இருந்தனர்!!..... பின் எவை என்று கூட!!!

அதை உருவாக்கவே  அப்பனே எதை என்றும் அறிய அறிய வசிஷ்டனின் துணையாலே அப்பனே எதை என்றும் அறிய அறிய ஈசனிடத்திருக்கும் எதை என்றும் அறிய அறிய பின் ஈசனை அழைத்து பின் எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய புரிய!!!

பின் பெருமானே !!!! ஏன்?? எதற்கு??  இவ் அவலங்கள்!! மனிதர்களுக்கெல்லாம்!!!!

இப்படி மாய்ந்து போய்க் கொண்டே செல்கின்றார்களே!!!.......

இதற்காக என்ன செய்ய வேண்டும்?? என்று!! எண்ணி!!! 

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய தியானத்தில் இருந்தான் எதை என்றும் அறிய அறிய ஈசன் தேவியும் கூட கைலாய மலையில் கூட!!!

இதனால் என்ன செய்வது என்று  தெரியாமல்!!!... எதை என்றும் அறிய அறிய வசிஷ்டனும்!!!! 

ஈசன்!!!!!! 

வசிஷ்டனே!!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய திருமலைக்குச் (திருப்பதி) செல்!!!! எதை என்றும் அறியாமலே அங்குள்ள எதை என்றும் அறிய அறிய பின் ஏற்கனவே பெருமானும் (திருவேங்கடவன்) எதை என்றும் அறியாமலே எதை என்றும் பின் அறிந்தும் அறிந்தும் அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் யான் இங்கேயே இருக்கின்றேன் நீ என்னை நினைத்து அங்கே எதை என்று அறிய அறிய பல லிங்கங்களை வை!!!!! 

பின்பு பார்த்துக் கொள்வோம் அனைத்தும் சரியாகிவிடும் உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்று கூற!!!! 

இதனால் எவையென்றும் அறிய அறிய உடனே  எவை என்றும் அறிந்து பின் வசிஷ்டனும் வந்து பின் யோசித்து அங்கிருந்தே ஏன் இதை ஈசனால் பின் வைக்கச் சொன்னார்களே என்று எண்ணி எதை என்றும் உணரும் அளவிற்கும் கூட நல்விதமாகவே வெற்றிகள் காண பின் நவகிரகங்களை கட்டுப்படுத்தினால் எதை என்றும் அறியாமலே பின் ஈசனை நினைத்து இங்கே எதுவும் செய்ய இயங்கக்கூடாது (நவகிரகங்கள்) என்பதற்காக ஈசனை நினைத்து நவ கிரகங்களுக்கும் கூட எவை என்றும் அறிய அறிய அமைத்து வைத்தனர்!!!

இதனால் அப்பனே அப்படியே நின்றிற்று!!!!!! 

ஆனாலும் நவகிரகங்கள் எல்லாம் ஈசனிடம் முறையிட்டன!!! எதை என்று அறிய அறிய

பின் பெருமானே!!!!.......ஏன்? இந்த அவலம்!!! 

ஏன் எதற்காக எவை என்றும் அறிய அறிய மக்கள் கர்மத்தில் நுழையப் போகின்றார்கள் அதாவது எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அழிவை மக்களை மக்களே எதை என்றும் அறியாமல் அதனால்தான் கஷ்டத்தை எல்லாம் யாங்கள் கொடுத்தோம் என்று!!!

ஆனாலும் ஈசனோ பின் கிரகங்களே!!! நில்லுங்கள்!!
என்று அறிந்தும் அறிந்தும் கூட!!!! இதனால் நிச்சயம் அதிகம் ஆயிற்று!!!

ஆனாலும் அது வசிஷ்டனின் பின் எல்லைகள்!!!!
வசிஷ்டனின் எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் அவனுடைய இடங்களே!!!!

அதனால் அவனிடத்தில் அவந்தன் எப்படி எதை என்றும் அறிய அவன் பார்த்துக் கொள்வான் இனி மேலும் அங்கு புண்ணியங்கள் பெருகும் என்பதற்கிணங்க எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட

பின் நல்விதமாகவே வசிஷ்டனும் இங்கு அமைத்து பல வகையிலும் கூட ஹோமங்கள் பின் இன்னும் எதையெதையோ செய்வித்து சக்திகள் ஊட்டினான் பல வகையிலும் கூட

இதனால் இன்னும் எதை என்றும் அறிய அறிய இங்குள்ள அனைவருமே உயர்ந்து நின்றார்கள் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்தார்கள் எதை என்றும் அறிய அறிய இதனால் பின் எவையென்றும் புரியாமல் வசிஷ்டனுக்கு எதை என்றும் அறிந்தும் அறிந்தும் !!!!!!

சில சில நல்லோர்களை பிறக்க வைத்தனர்!!!

அவ்  நல்லோர்கள் இங்கிருக்கும் தலத்தைப் பற்றி எல்லாம் எதை என்றும் அறிய பல பாடல்களைப் பாடி மக்களை திருத்தி திருத்தலங்களுக்கு செல்லச் சொன்னார்கள்!!

 இதனால் இவ்வுலகத்தில் எதை என்றும் அறிய அறிய இங்குள்ள அனைத்துமே மாறிற்று!!! உயர்ந்த இடத்திற்கு சென்றிற்று!!!!! மக்களும் செல்வாக்கு உடையவர்கள் ஆயினர். இறைபக்திகளாக சென்றடைந்து கொண்டிருந்த பொழுதுதான் சில சில அரசர்களும் எவை என்றும் அறியாமலே இப்படி!!!! அவ்விடம் (அந்த கோயில் மட்டும் ஏன்)  மட்டும் ஏன் சிறப்பு வாய்ந்ததாக எதை என்றும் அறியாமலே...... பின் அரசர்களுக்கு!!!.... பின் அரசன் அவந்தனுக்கு தெரிய ....பின் அனைத்து திருத்தலங்களையும் எதை என்றும் அறிய அடியோடு அழி!!...... என்று கூட!!!

ஆனாலும் பின் தண்டனைகள் உண்டு எதை என்று கூற முன்பே தண்டனை உண்டு!!!!! இப் பிறப்பிலும் கூட பிச்சை ஏந்தி நிற்கின்றார்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்......  காலாஹஸ்திரியிலே!!!!!! 

இதனால் அப்பனே இன்னும் மறைந்து கிடக்கின்றது அவையெல்லாம் வெளிவந்தால் பின் கேட்டதை நிச்சயம் கொடுக்கும் எதை என்று கூற அவ்வளவு சக்திகளாகவே யாங்கள் படைத்துள்ளோம்!! எதையென்றும் அறிந்தும் அறிந்தும் எவை என்றும் புரிந்தும் புரிந்தும்.

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட யான் வந்தும் கூட அனைத்தும் காலா அத்திரி (காளஹஸ்தி) எதை என்றும் அறிய அறிய இன்னும் கூட பல வழிகளிலும் கூட பின் ஏற்படுத்தினானே (வசிஷ்டன்) அங்கெல்லாம் பின் தங்கி தங்கி யானும் கூட எதை என்று அறிய அறிய சக்திகள் பின் எதை என்றும் அறியாமலே வரவேண்டும் என்பதற்கிணங்க பல உபதேசங்களும் செய்வித்து அப்பனே அனைத்தும் செய்தேனப்பா!!!! 

ஆனாலும் நல்விதமாகவே இக்கலியுகத்தில் தானாகவே அனைத்தும் எழுந்து வரும் என்பேன் அப்பனே நலமாகவே!!!

ஆனாலும் அப்பனே திருத்தலங்களை கூட எதை என்றும் அறிந்து அறிந்து யாங்களே அமைப்போம்!!!

எங்களுடைய அருள்கள் பெற்றவர்களும் கூட இங்கே இவ்பூமியில் அவதரித்து தான் உள்ளார்கள்!!! அவர்களை ஏற்படுத்தி பல மாற்றங்களை யாங்களே செய்வோம் என்பேன் அப்பனே!!!!

நலன்கள் ஆசிகள்!!!!! அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஈசன் நாமம் எதை என்றும் அறிய அறிய நமச்சிவாயனே என்றே கூறிக் கொண்டே இருங்கள் அப்பனே நிச்சயம் வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே நலமாகவே!!!!

இத்திருத்தலம் எதை என்றும் அறிய அறிய அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய வசிஷ்டனும் எதை என்றும் அறியாமலே பின் பல வகையிலும் கூட அப்பனே பின் மீண்டும்  செழிப்பு பெறும் என்பேன் இத்திருத்தலம்!!!!! அப்பனே!!!

மீண்டும் எதை என்றும் அறிய அறிய யாங்களும் கூட உதவிகள் செய்து நல்விதமாக மாற்றுவோம் அப்பனே!!!

அனைத்தும் ஈசன் மீண்டும் எதை என்றும் அறிய அறிய எழுச்சி பெறும்!!!

ஈசனுக்கு தெரியும் அப்பனே எப்பொழுது மறைந்திருக்க வேண்டும் எப்பொழுது வர வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!!

அப்பனே ஆனாலும் இன்றைய நிலையிலும் கூட  கஷ்டங்கள் ஆனாலும் அப்பனே அப்படியே எதை என்றும் அறியாமலே பூமியில் கிடந்தாலும் அனைவருமே செல்வாக்கு மிகுந்தவர்கள் தான் உள்ளனர் என்பேன் அப்பனே!!! மீண்டும் எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் அழிவு நிலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பனே மீண்டும் எழும் என்பேன்  அப்பனே!!!

அப்பொழுது நல்முறையாகவே அனைத்தும் மாறும் என்பேன் அப்பனே நன்று ஆசீர்வாதங்கள் அப்பனே மீண்டும் அப்பனே ஒரு முறை இங்கே உரைக்கின்றேன்வந்து வாக்குகள் அப்பனே!! 

ஆலயத்தின் பெயர் தற்பொழுது பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வருகின்றது இதுதான் உண்மையான பெயரா???  மற்றும் இந்த ஆலயத்திற்கும் பீமேஸ்வரர் என்ற பெயர் வர காரணம் என்ன???  இவை சரிதானா என்று குருநாதரிடம் கேட்டதற்கு குருநாதர் மேலும் வாக்குகள் உரைத்தார்

அப்பனே!!! அப்போதெல்லாம் இவைதன் காடுகளே என்பேன் !!!அப்பனே எதை என்றும் அறிய அறிய 

அதனால் அப்பனே பல வகையிலும் கூட வசிஷ்டன் கூட பல வகையான எதை என்று கூட ஆசிரமங்கள் அமைத்து பல சேவைகளும் செய்தனர் அப்பனே எதை என்று கூட அறியாமலே அப்பனே அதனால் எவை என்று கூட ரிஷிகளும் வந்து எதை என்றும் அறிந்தும் அறிந்தும் எதை என்று உணர்ந்து உணர்ந்தும் கூட அப்பனே பல சக்திகளை ஏற்படுத்தி அப்பனே பஞ்சபாண்டவர்கள் கூட எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இங்கு வந்து கூட தியானங்கள் மேற்கொண்டு மறைமுகமாகவே வாழ்ந்து அப்பனே புகழ்பெற்றனர் எதை என்று கூட கடைசியில் அப்பனே 

அதனால் எதை என்றும் அறிய அறிய இன்னும் பக்குவங்கள் எதை என்று அறிய அறிய மனிதருக்கே வரவில்லை அப்பனே!!!

அதனால் ஈசனே அங்கங்கே  அமைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே எதை என்றும் அறிய அறிய 

இன்னும் இன்னும் அறிய அறிய அதனால் அப்பனே இறைவனும் !!!!.............

ஒன்றும் எதை என்றும் அறிய செய்ய இயலாதப்பா!!!!! தானாகவே எதை என்று கூட தர்மம் எப்பொழுதெல்லாம் கீழ்நோக்கி செல்கின்றதோ அப்பொழுதெல்லாம் நிச்சயம் அப்பனே ஈசனே உயர்ந்து நிற்பான் என்பேன் அப்பனே!!

தர்மம் கீழ்நோக்கி செல்லும் காலமப்பா!!!!

அதனால் ஈசன் மேல் நோக்கி எழுவான் அப்பனே!!!!!!!

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய பஞ்ச பாண்டவர்களும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அவர்களுடைய பெயரிலே பின் ஒவ்வொருவரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறியாமலே ஈசனின் எப்பெயர் வைத்தாலும் கூட எதை என்று கூட இப்பொழுது சொன்னானே( பீமேஷ்வரர்) அப்பனே அதற்கு சான்றாகும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இவையே உண்மை!!!!! 

நலன்கள் !!!ஆசிகள் !!!

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!!

குருநாதர் வாக்கில் உரைத்த 

காலத்தி நாதனுக்கு இணையான சக்தியுடன் நவகிரகங்களை கட்டுப்படுத்தி அருள் பாலித்து வரும் இவ் ஆலயம் !!!! இப்பொழுது இந்த ஆலயத்திற்கு என்று நித்திய பூஜை புனஸ்காரங்கள் இல்லை!!!!!

திங்கள் கிழமை மட்டும் பூசை நடக்கின்றது அப்பொழுது பக்தர்கள் ஐந்து பேர் அல்லது ஆறு பேர் அளவில் தான் வருகின்றார்கள்.

இந்த ஆலயத்தை திரு ராகவேந்திர ரெட்டி என்பவர் அனுதினமும் காலை மாலை வேளையில் விளக்கேற்றி ஒருவேளை பூசை செய்து முடிந்தவரை நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து பூசித்து வருகின்றார்.

அவரும் குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அருகில் இருந்து சில விஷயங்களை கூறினார்.

சில விஷயங்களை அவர் வருத்தப்பட்டு கூறினார்!!!! குருநாதர் அகத்திய  பெருமான் கூறியது உண்மை இங்கே பல லிங்கங்கள் இருந்தன அவையெல்லாம் அடித்து நொறுக்கி இந்த ஆற்றில் போட்டு விட்டனர்!!! நான் சிறுவயதிலிருந்தே இங்கே தான் இருக்கின்றேன் சிவ பூஜைக்கு கூட அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் இருந்து பூக்களும் எனக்கென்று சில தென்னை மரங்கள் இருக்கின்றன தேங்காய் அங்கிருந்தும் நான் பால் டிப்போவில் வேலை செய்கின்றேன் அங்கிருந்து சிறிதளவு அபிஷேகத்திற்கு பாலும் எடுத்து வந்து ஈசனுடைய அருளால் என்னால் முடிந்தவரை ஏதோ பூஜை செய்து வருகின்றேன்.

சிவராத்திரி அன்று அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்தும் ஊர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வரும் சிவராத்திரி முடிந்த ஐந்தாவது நாள் அம்மையப்பனுக்கு திருக்கல்யாணம் அன்றும் கூட்டம் வரும் அதன் பிறகு கார்த்திகை மாதத்தில் மட்டும் பக்தர்கள் வருகின்றார்கள் மீதி நாட்களில் யாரும் வருவதில்லை என்று கூறி வருத்தப்பட்டார்!!!

திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் அடியவர்களும் அவருக்கு நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் குருநாதர் அகத்தியர் பெருமான் காரணம் இல்லாமல் இங்கே வரச் சொல்லவில்லை வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அகத்தியர் பெருமான் வந்து இங்கு தங்கி சக்திகள் ஊட்டிய ஸ்தலம் இது காலப்போக்கில் இது இந்த நிலைமையில் இருந்தாலும் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கில் உரைத்தது போல ஈசனே எழுவான் என்பதற்கு குருநாத அகத்திய பெருமான் இன்று இங்கு வந்ததே சாட்சி!!!!

ஈசன் இங்கே பிரம்மாண்டமாக எழ தீர்மானித்து விட்டார் குருநாதர் அகத்தியர் பெருமானும் அதனை வாக்குகளாக கூறிவிட்டார் அவரும் உதவி செய்வார் அவர்களுடைய அகத்தியர் பக்தர்களும் இங்கு  வருவார்கள். 
 உதவி செய்வார்கள்!!!

குருநாதர் காரணம் இல்லாமல் மீண்டும் இங்கே வந்து வாக்குகள் கூறவில்லை!!!! அவர் இங்கே வந்து வாக்குகள் கூறியிருக்கின்றார் அவர் வந்து சென்றாலே அந்த ஆலயம் பொலிவும் எழுச்சியும் பெறும். இது உறுதி!!!!

நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்!!!!! என்று குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளில் உரைத்ததையும் தெலுங்கில் அவருக்கு விவரமாக சொல்லப்பட்டது.

அவருக்கு தமிழ் தெரியாது!!!!

அவரை தொடர்பு கொண்டு ஆலயத்திற்கு உதவ நல்லுள்ளம் கொண்டு நன்கொடை செய்பவர்கள் தெலுங்கில் அவரிடம் உரையாடி மேலும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த சிறு ஆலயத்திற்கு உள்ளாகவே வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் கணபதியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயத்திற்கு என்று ஒரு குழு டிரஸ்ட் அமைத்து வங்கியின் பொதுவாக பெற்று இந்த ஆலயத்தை மீண்டும் எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது நம் குருநாதர்  அகத்தியர் பெருமானும் மீண்டும் இந்த ஆலயத்திற்கு வந்து வாக்குகள் உரைக்கின்றேன் என்று கூறி இருக்கின்றார்!!!!

ஆலயத்திற்கு நித்திய பூஜைகள் நடைபெறவும் விளக்கு எரியவும் நைவேத்தியம் செய்யவும் ஆலயத்திற்கென நன்கொடைகள் செய்ய விருப்பமுள்ளவர்கள் திரு ராகவேந்திர ரெட்டி அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடைகள் வழங்கலாம்!!!!

எழ வேண்டும் என ஈசன் தீர்மானித்து அகத்தியர் கட்டியம் கூற !!!பீமேஸ்வரர் ஆலயம் மீண்டும் எழுந்து !!!!

நாடிவரும் பக்தர்கள் அனைவருடைய கஷ்டங்களையும் போக்கி நல்வாழ்க்கை பெறுவார்கள் என்பது உறுதி!!!

தர்மத்தை நிலை நாட்ட ஈசன் எழ தீர்மானித்து நம் குருநாதர்  அகத்திய பெருமான் தனது வாக்கில் நம் அனைவருக்கும் தெரிவித்துவிட்டார்!!!!

நமது இப்பிறவியின் கர்மங்களை மடை மாற்ற வல்ல நம் குருநாதர் அகத்திய பெருமானின் வாக்கினை அனைவரும் உணர்ந்து நம்மால் முடிந்த இது போன்ற ஆலயங்களுக்கு நற்காரியங்கள் செய்து ஈசனின் அருளையும் அகத்தியரின் கருணையையும் பெறுவோம்!!!!

ராகவேந்திரா ரெட்டி. பூசை செய்து வருபவர். 

Ragavendra Reddy. 
Contact number. 9493370257.
ஆலய முகவரி.

ஸ்ரீ பீமேஷ்வர லிங்கம். திருக்கோயில். 
தண்டாலம் கிராமம். 
ரேணிகுண்டா மண்டலம் 
திருப்பதி மாவட்டம் 
ஆந்திரா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. வணக்கம் ஐயா. இங்கே குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு காணிக்கை அனுப்பலாமா?

    ReplyDelete
  2. Om Nama: Shivaya!
    Om Om Nama: Shivaya |
    Sri Sri Sri Kamakshi Sameta Bhimeswara Swayambhu Lingam Tandlam Village, Renigunta Mandal
    2010
    Nandeswara Kamakshi Mata Sametha Sri Sri Sri Bhimeswara Swamy temple for any one's Janmalagna, Namalagna and Janmrashi, Namrashi Vasatu Any Graha Dosha Remedies
    Devotees can perform Rudra Abhishekam to Sri Sri Sri Bhimeswara Swamy along with Nandiswara Kamakshi Mata.
    Contact Phone No: 9493370257,6304838201

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete