​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 August 2023

சித்தன் அருள் - 1392 - அன்புடன் அகத்தியர் - மா வைஷ்ணோ தேவி மந்திர் கத்ரா. ஜம்மு காஷ்மீர்.






15/7/2023 அன்று பார்வதி தேவியார் அகத்தியர் காகபுஜண்டர் உரைத்த பொதுவாக்கு : வாக்குரைத்த ஸ்தலம் : மா வைஷ்ணோ தேவி மந்திர் கத்ரா. ஜம்மு காஷ்மீர். 

ஈரேழு உலகத்தையும் காத்து ரட்சிக்கக்கூடிய மனதில் உள்ள பின் ஈசனையே என் மணாளனை பணிந்து செப்புகின்றேன் தேவியே!!! 

எதனையும் என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை!! ஒன்றுமில்லை!!!

 நிச்சயம் காத்திடுவேன்!!!!!

என்னை நம்பி பல மனிதர்களும் கூட வந்து வந்து பின் ஆசிகள் பல பல கோடி!!!!

இதனால் நிச்சயம் அவரவர்களுக்கு துன்பம் கர்ம வினைகள் பல பல இருப்பினும் நிச்சயம் யானே அறிந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட போக்கிக் கொண்டிருக்கின்றேன்!!!

இதனை நிச்சயம் இன்னும் ஏராளம் அதாவது இப்புவியை காலி செய்ய வேண்டும் என்பதே என் மணவாளனின் தீர்ப்பு!!!

ஆனாலும் அதை எதிர்த்தும் கூட ஆனாலும் யானும் நிச்சயம் காத்திருங்கள் சிறிது நிச்சயம் மாறுவான் மனிதன் என்பதையெல்லாம்!!!!..........

இதனால் நிச்சயம் கர்மாக்குள் நுழைந்து மீண்டும் மீண்டும் இப்புவிதன்னில் பிறப்பு எடுக்காதீர்கள் என்பவையெல்லாம்!!!.........

அதனால் எதையோ என்று கூட யானும் அழைத்து பின்!!!.........  

 அதாவது பின் மனதில் பல அசுத்தங்களை கூட மனிதன் வைத்துக் கொண்டே அலைந்து கொண்டிருக்கின்றான்!!

அவையெல்லாம் நீக்கி!!! நீக்கி!!!... நீக்கி பின் அதற்கு தகுந்தார் போல் சித்தர்களும் கூட நீக்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!

 அதை நீக்கினால் மட்டுமே பிராயச்சித்தம்!!!! உண்டு!!!

உண்டு எனில் நிச்சயம்!!!
 மற்றவை எல்லாம் செல்லுபடியாகாது!!!

அனைத்தும் செய்யலாம் அனைத்தும் செய்யலாம் ஆனாலும் நிச்சயம் அருள்கள் இல்லாமல் செய்யவும் முடியாது!!!

அவ் அருள்கள் எதனை என்று யான் குறிப்பிடுகிறேன் என்றால் நிச்சயம் சக்திகள் புவி இதனையும் நன்கு அறிந்து கொண்டவன் இவ்வுலகத்தில் நிச்சயம் எங்கிருந்து அறிவான்!!!!
அறிவது சிறப்பா???? 

சிறப்பு என்பதில் ஐயமில்லை!!!!

ஐயம் உண்டு என்பதை உணர்த்தும்  பின் சித்தர்கள் நிச்சயம் அறிந்தும் கூட நன்மைதான் நன்மைதான் உண்டு உண்டு !!

ஆனாலும்  மனிதன் எங்கெங்கோ கர்மத்தை தேடி தேடி!!!!.....

ஆனாலும் மனிதனே பின் அதாவது சாவுக்கும் அலைகின்றான் நிச்சயம் பின் கர்மத்திற்கும் அலைகின்றான்!! நிச்சயம்!!

 ஏனோ!!.... அருள்களுக்கு அலைவதில்லையே!!!! 

ஆனால் பின் அருள்கள் வேண்டும் என்பதற்கெல்லாம் ஏன் என்றெல்லாம் அருள்கள் வேண்டும் என்றால் நிச்சயம் அருள்களால் பணம் வேண்டும் புகழ் வேண்டும் இன்னும் என்னென்னவோ வேண்டும் !!! இதனால் அருள்கள் வேண்டும் என்று பின் ஈசனை அதாவது நாடி விட்டு என்ன பிரயோஜனம்????

ஒன்றுமில்லை!!!!

ஒன்றுமில்லை என்பதை நிச்சயம் உணர்த்தும் வரும் காலங்களில் சித்தர்களே!!!

சித்தர்களே அறிந்தும் அறிந்தும் கூட நிறுத்தும் எதை என்றும் அறிய நிறுத்தி பின் சென்றால் நிச்சயம் பின் அதாவது  நிறுத்தும் இடம்தான் நிச்சயம் உங்களுக்கு கர்மா வினை.

அக் கர்மா வினை ஒருவரை ஒருவர் நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் நிச்சயமான உண்மை!!!

உண்மை பின் அறிந்து இதனால் நிச்சயம் பல சித்தர்களும் மனித குலத்தை நிச்சயம் தவழ்ந்து பல காடுகள் மேடுகள் ஏறி ஆனாலும் தவங்கள் புரிந்து புரிந்து!!!!.....

ஆனாலும் மனிதனை திருத்த முடியவில்லையே!!...

நிச்சயம் பின் இவ்வாறு திருந்தாவிடில் பின் என் மனதில் மனதில் உள்ள ஈசனே தண்டனைகள் சரியாக கொடுத்து கொடுத்து, அனுப்புவான்!!!

பார்வதி தேவியார் குருநாதர் அகத்தியர் பெருமானை பார்த்து!!!!

அகத்தியனே!!! ஏதாவது வாக்குகள் நீ !!  செப்ப விரும்புகின்றாயா ? என்ன?!!

அகத்தியப் பெருமான்:

தேவியே!! நிச்சயம் இல்லை!! 

யான் பல வகைகளிலும் செப்பி விட்டேன்!!! நிச்சயம் அறியும் அறியும் வண்ணம் கூட!!! இனிமேலும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட... வருத்தங்கள் மனிதனுக்கும் கூட இதனால் நிச்சயம் யான் காத்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷியை பார்த்து!!!!!!!

புஜண்டனே!!!! இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா நீ!!!!!!

காகபுஜண்டர் மகரிஷி:

ஆம் தாயே!!!!! சொல்லித்தான் ஆக வேண்டும்!!!!

பக்தி என்பதை தவறாகவே பயன்படுத்தி வருகின்றான் மனிதன்!!!!

இதனால் குறைகளே அவந்தனுக்கு!!!

பக்தி என்பது கத்தி என்று தெரியாமல்  போனது!!!!

அதனால்தான் பக்திக்கு நுழைந்தால் அனைத்தும் மாறிவிடும் என்பதையெல்லாம் ஆனால் பின் பக்தி!!! என்பது கத்தி !!!  என்று தெரியாமல் மனிதன் பின் பாவப்பட்டு கர்மத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதனே  அறிந்தும் அறிந்தும்!!!

தேவியே!!! உன்னிடத்திலிருந்தே சொல்கின்றேன்!!! மனிதனுக்கு!!!!

பக்திகள் !!!  பக்திகளை சரியாக பயன்படுத்துவது இல்லை..!!!   அப்படி ஏன் எதற்கு என்றால் பக்தியை கடைப்பிடிப்பவன் கத்தியின் மேலே நடக்கின்றான் என்றால் நிச்சயம் வருத்தங்கள் வராதா?? என்ன!!!

ஆனால் யான் பக்திகள் கடைபிடித்தேனே!!! வருத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றதே!!! என்பவை எல்லாம் மாயையே!!!!

புரிந்தும் புரிந்தும் அறிந்தும் அறிந்தும் இதனால் நிச்சயம்  பக்திக்கு வந்து விட்டாலே நிச்சயம் கஷ்டங்கள் பட்டுத்தான் வாழ வேண்டும் என்பதை கூட நிச்சயம் அதை அறிந்து நிச்சயம் கத்தியின் மீது நடந்தாலே அதாவது நிச்சயம் பின் சிறிது காலமே அக் கத்தியில் நடப்பான்!!!

ஆனால் பின் நடந்து முடிந்திட்டால் அவந்தன் எங்கேயோ செல்வான்!!! கர்மத்தை நீக்குவான் அனைத்தும் அறிந்து!!!

அறிந்து !!!

அறிந்தும்!! அறிந்தும்!! கூட
 
நிச்சயம் தாயே!!!

பின் மனிதனின் நிலைமைகள் நிலையில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது இதனால் சிறிது காலமே கத்தியில் நடந்தால் நிச்சயம் எவ்வாறு கஷ்டம் என்பதை கூட மனிதனுக்கு தெரியும்!!!

இதனைக் கடந்தால் நிச்சயம் வெற்றிகள் உண்டு!!! உங்களையும்( தேவியை) நிச்சயம் காணலாம் !!! ஏன்? ஈசனையும் காணலாம்!! அனைவரையுமே காணலாம்!!!

ஆனாலும் பக்தி என்ற சொல்லுக்கு இடம் இல்லாமல் நிச்சயம் பாதியிலேயே திரும்பி விடுகின்றான்!!!! அதாவது கத்தியில் நடக்கும் பொழுதே கஷ்டம் என்று பாதியிலே மீண்டும் இப்படியே வந்தவன் திரும்பி விடுகிறானென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை!!!

மீண்டும் பிறவி தான்!!!!

இதனால் பக்திக்குள் நுழையும் மனிதன் நிச்சயம் பின் எதை எதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி எண்ணி நிச்சயம் பயன்படுத்தினால் வெற்றி!!!

அப்படி பயன்படுத்தாவிடில் நிச்சயம் தோல்வி அனைவருமே!!!!

தேவியே!!!!!!! 

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் மனிதனை!!!!! அதாவது மூடன் மனிதனை!!!

ஆனாலும் பக்திக்குள் நுழைகின்றான். சிறிது காலம் நிச்சயம் இறைவன் கஷ்டங்கள் கொடுத்தாலும் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட பக்தி இவ்வளவு செய்தேனே!!!!!!!!! திருத்தலங்களுக்கு சென்றேனே!!!!! என்னென்னவோ செய்தேனே!!!! 

ஒன்றும் ஆகவில்லையே!!.... என்று கூட மீண்டும் திரும்புகின்றானோ அவன் தான் மிகப்பெரிய பாவி!!!!!

அவன் தான் பாவப்பட்டவன்!!

நிச்சயம் இவ்வாறு அறிவின்றி திரிகின்ற மனிதன்!! அறிவுள்ளவனாக இறைவன் படைத்து விட்டு அறிவில்லாதவனாக திரிகின்றானே மனிதன்!!!

தேவியே!!!! 

நிச்சயம் இவை எல்லாம் வீணே!!! வீணே!! நிச்சயம்!! 

அம்மையே !!! தேவியே!!  உனை...யான்!!! 

எதனால் மனிதனைக் கூட இங்கு தரம் தாழ்த்தி பேசவில்லையென்றால்... நீ அருகிலே இருக்கின்றாய் அதனால் தான்!!!

இல்லையென்றால் மனிதனை சாடிடுவேன் இப்பொழுதே கூட!!!......

இதனால் மனிதனுக்கு புத்திகளே இல்லை தாயே!!!

தாயே!! தேவியே!!!! நிச்சயம் உன்னை அறிந்தேன் யான்!! உன்னை அறிந்தேன்!!! பல பல பிறப்புக்களில் கூட மனிதனைப் பார்த்து விட்டேன் யான்!!!

ஆனாலும் மனிதன் திருந்திய பாடில்லை!!! ஆனாலும் நம்பி நம்பி மற்றவர்களை கூட ஏமாற்றி இறைவனையும் கூட ஏமாற்றி கடைசியில் அவனும் ஏமாந்து பிள்ளைகளையும் ஏமாற்றி அன்னை தந்தையையும் ஏமாற்றி மனைவியையும் ஏமாற்றி மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து நிச்சயம் வருகின்ற பொழுது.... ஒன்றும் தெரியாமல் பிறப்பெடுத்து!!!!! கஷ்டங்களாம். !?!?!?!?!?!? கஷ்டங்கள் !!!!!!!!!!!!

இதனால் நிச்சயம் அவ் கஷ்டத்திற்கு என்னென்னவோ செய்கின்றான் புவி தன்னில்!!! 

ஆனாலும் மீண்டு வர முடியவில்லையே!!! அம்மையே!!!!!!!!!
ஏன்?  எதற்காக? என்றெல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிச்சயம் மனித பிறவி !!அதாவது ஆவி!!! நிச்சயம் அறிந்து உணர்ந்து அதாவது ஆன்மா ஆவி உணர்ந்து கொண்டாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு!!!!

ஆனால் மனிதர் இடத்திலே வெற்றிகள் உண்டு அதனை சரியாக பயன்படுத்த தெரியவில்லை இதனால் தான் தோல்விகள் தோல்விகள் என்றெல்லாம் சித்தர்கள் யாங்கள் பல வகையிலும் கூட உரைத்துக் கொண்டே தான் வருகின்றோம்!!!! 

ஆனாலும் தேவியே!!!!  நீயே அறிவாய்!!! 

ஆனாலும் நிச்சயம் கன்னியா என்ற ஊரில்(கன்னியாகுமரி) ஒருவன் பிறந்தான் உந்தனுக்கே தெரியும் இருந்தாலும் மனிதனுக்கு ஞாபகப்படுத்த யான் சொல்கின்றேன்!!!

அங்கு பிறந்து தேவியை வணங்கிக் கொண்டே அதாவது உங்களையே வணங்கிக் கொண்டு!!!!

வணங்கிக் கொண்டு!!!! வணங்கிக் கொண்டு!!!!

ஆனாலும் நீங்களும் சோதித்தீர்கள்!!!!! ஆனாலும் என்றும் என்றும் ஒன்றும் இல்லாமல் போனது!!!

ஆனாலும் நேரடியாக அங்கே பயணித்தவன் வயது ஆகிவிட்டது இங்கே  வந்து விட்டான்!!!! ( ஜம்மு காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு) 

என்ன செய்வது??  ஆனாலும் எதை என்று அறிய அறிய நீங்களும் சோதித்து!!!!

ஆனாலும் நல் விதம் விதமாகவே இங்கு வந்து ஆனாலும் இவந்தனுக்கே உணவுகளும் இல்லாமலும் கூட!!!

ஆனாலும் நிச்சயம் தேவியே!!! உன் அன்பு !!!

ஆனாலும் பின் அதாவது நிச்சயம் அதாவது முதியவள் போல் வந்து அவந்தனையே மடியில்  அமர்த்தியவள் நீ!!!!! 

அதனால் பக்திகள் எங்கே?? எங்கே??? இப்பொழுது மனிதனுக்கு அவ் பக்திகள் இல்லை தாயே!!!!

ஆனாலும் அவந்தனை எங்கே ? பிறக்க என்பதை வைத்தாய் என்பதை யான் அறிவேன்!!! 

அவன் தான் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது தஞ்சையை ஆண்ட பின் அரசனே!!!!!! (ராஜ ராஜ சோழன்) அனைவரும் உணர்ந்ததே!! 

இதனால் நிச்சயம் ஒரு பிறவியில் இல்லை பக்திகள்!!!!

பிறவிகளில் பக்திகள் செலுத்திக் கொண்டே இருந்தால்தான் நிச்சயம் பின் அன்னையே !!!! உருவெடுத்து நிச்சயம் மடியிலும் கூட தூங்குவதற்கு இடம் கொடுப்பாள் என்பதை கூட!!

ஆனாலும் இக்கலி யுகத்தில் நிச்சயம் இறைவனையும் காணலாம்!!!

ஆனாலும் தேவியே!!!! அம்மையே!!!!!  உனை யான் கருணை உள்ளவளாம்!!! கருணை கொண்டவளே!!!!

மனிதன் எவ்வாறெல்லாம் தவறு செய்கின்றான்!!!!

நிச்சயம் அத்தவறுகளையெல்லாம் தாங்கிக் கொண்டு எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் தாங்கிக் கொண்டிருக்கின்றாயே!!!! 

உனை!!! யான்!!! அன்னையே!!!!  அன்னையே!!! என்று தான் நிச்சயம் பின் ஆனந்த கண்ணீர் விடுகின்றேன்!!!!!
உன்னை பார்த்து!!!!!

ஆனாலும் அதனை மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை!!!!

அதனால் தான் மனிதனுக்கு யாங்கள் தண்டனைகள் கொடுக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றோம்!!!

இனிமேலும் நிச்சயம் பின் தண்டனைகள் கொடுக்காவிடில் மனிதன் நிச்சயம் என்னென்னவோ!! செய்வான்!!! எதை எதையோ பின்பற்றுவான்!!! 

பின் இறைவனை வைத்தே நிச்சயம் எதை எதையோ சொல்வான்!!! பின் பொறாமை, கோபம், நிச்சயம்  பின், காமம், எதை எதை என்று அறிய அறிய இன்னும் யான் பெரியவன்!!! எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்றெல்லாம் யார் ஒருவன் சொல்கின்றானோ அவந்தன் நிச்சயம் பக்தனாக இருக்க முடியாது!!!

மற்றவர்களை கூட ஏசி பின் பேசுபவன் கூட  நிச்சயம் பக்தனாக இருக்க முடியாது!!

ஆனால் யான் பக்தன்!!! என்று பொய் கூறுவான் அனைத்தும் யான் அறிவேன்!!! என்று பொய் கூறுவான்!!!!

ஆனாலும் இவையெல்லாம் எப்படி  தாங்கிக் கொள்வது????

தாங்கிக் கொள்ள முடியாதவிடிலும் கூட நிச்சயம் தேவியே!!!!!  அம்மையே!!!!!  எதை அறிந்தும் அறிந்தும் கூட மனிதனுக்கு மூளையில் நிச்சயம்  புத்திகள் இருந்தும் அதை செயல்படுத்த தெரியவில்லை என்பதுதான் ஆணித்தரமான உண்மை!!!!

இதனால் சித்தனை கண்டால் நிச்சயம் பித்தம் தீரும்!!!

பித்தனை கண்டால் எவ்வகை தீரும்????

அதனால் நிச்சயம் ஆனாலும் பின் சித்தர்களை காண வேண்டும் இறைவனை காண வேண்டும் என்று மனிதர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!

ஆனால் ஓரிடத்திலே இருந்து கொண்டு அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் தெரியாமலே அலைந்து ஆனாலும் இன்னும் இன்னும் இதைத்தான் செப்புவேன்!!!!

தாயே!!!!!  நிச்சயம் மனிதன் உணர்வது இல்லை!!!

ஆனாலும் உணவுக்காக ஓடுகின்றான்!!! பணத்திற்காக ஓடுகின்றான்!!!! திருமணத்திற்காக ஓடுகின்றான்!! இன்னும் என்னென்னவிற்க்கோ??!!!! ஓடுகின்றான்!!!

ஆனால் இறைவனை காண ஓடி வருவதில்லை ஏன்?????????????

ஏனென்றால் மனிதனின் ஏதோ ஒரு  நம்பிக்கையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!!

ஆனாலும் அவ் நம்பிக்கை இன்னும் வளர!! வளர!!! வளர வேண்டும்!!..... ஆணித்தரமாக நம்பிக்கை வைத்து விட்டால் நிச்சயம் இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து பின் நிச்சயம் பின் அனைத்தும் செய்வான் என்பதை கூட பரிபூரணமாக அறிந்ததே!! யான்!!!!

இதனால்தான் இன்னும் இன்னும் அகத்தியன் கூட இன்னும் பல வகையிலும் கூட... இன்னும் அறிவியல் வழியாகவே எடுத்துரைப்பான் !!!

அறிவியல் வழியாகவே எடுத்துக் கொண்டு வரும்பொழுது தான் மனிதனுக்கு தெரியும்!! யார் என்ன செய்கின்றார்கள்? யார் என்ன தவறுகள் செய்கின்றோம்? என்பதையெல்லாம்!!!....

இதனால் பொய் கூறியே இறைவனை ஏமாற்றி வந்தவன் தான் மனிதன்!!

ஆனாலும் நிச்சயம் வருங்காலங்களில் செல்லாது!!!! அப்படியே மாறிவிடும்!!!! என்பவை எல்லாம் நிச்சயம் ஆணித்தரமான உண்மை!!!

இக்கலி யுகத்தில் இறைவனை நம்ப போவதில்லை என்பதை கூட யாங்கள் முன்பே பல யுகங்களாகவே அறிந்தோம்!!!

ஆனாலும் இப்பொழுது நிச்சயம் யாங்களே வந்து நிச்சயம் உணர வைப்போம் மனிதர்களுக்கு!!!!!

எப்படி உணர வைக்க வேண்டுமோ? அப்படி உணர வைப்போம் !!!!!

இன்னும் இன்னும் சொல்லப்போனால் கலியுகம் என்றாலே!! தோல்விகள்!! பயங்கள்!! நிச்சயம் நோய்கள்!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட கஷ்டங்கள் என்பதை கூட இன்னும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்!! மனிதன்.

போராட்டமாகவே இருக்கின்றது இக்கலியுகம்!!!

அதனால் இதை மாற்ற வேண்டும் என்றால் நிச்சயம்!! தாயே!!!! நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இதனால் தாயே!!!! வணங்குகின்றேன் உன்னை!!!!

மனிதனை பின் சீறிடுவேன்!!! யான்!!!!

ஆனாலும் நீங்கள் இருக்கின்ற இடத்தில் யான் அமைதி காத்தேன்!!!!

நலன்கள்!!! மற்றொரு வாக்கில் இன்னும் சீறப்போகின்றேன்!!! மனிதனைப் பற்றி பின் சொல்லப் போகின்றேன்!!!பின் எவ்வாறெல்லாம் பக்திகள் எவ்வாறெல்லாம் காண்பிக்கின்றார்கள் என்பதை கூட!!!!

நிச்சயம் பெயரைச் சொல்லியே யான் குறிப்பிடுவேன்!!!
இவன் என்னென்ன தவறு செய்தான் என்பதை கூட!!!!
பின் செய்திட்டு இறைவன் நாமத்தை உச்சரிக்கின்றான் என்பதை கூட!!!

எங்கள்!!!!........... பின் நிச்சயம் இருப்பதுண்டு!!!

ஆனாலும் மனிதர்கள் எங்கெல்லாம்!!!!..............

இதனால் அவர்கள் பெயர்களைச் சொல்லியும் யான் நிச்சயம் திட்டியே!!! தீர்ப்பேன்!!!!!

சொல்லிவிட்டேன்!!!! வரும் காலங்களில் அதைத்தான் சொல்லப் போகின்றேன்!!!

அவன் உணரட்டும் !!! இதை அவனவனுக்கு நிச்சயம் எங்கள் அருளால் எடுத்துச் செல்லப்படும்!!!!

நன்று!! ஆசிகள்!! ஆசிகள்!!!

அகத்தியபெருமான் 

அப்பனே யானும் வந்தேன் அப்பனே நலமாகவே ஆசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!! எதையென்று அறிய அறிய அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!! ஆசிகள் அப்பனே!!!! நலன்கள் நலன்கள் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய  யான் சொல்லியதை கேட்டிட்டு  பின் நடங்கள்!!!!!!

எந்தனுக்கும் வேலைகள் பல!!!! 

இப்பொழுது போதும்!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அம்மை‌ அப்பன் திருவடிகள் சரணம் 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete