​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 20 August 2023

சித்தன் அருள் - 1407 - அன்புடன் அகத்தியர் - இரும்பொறை வாக்கு!









2/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : கைலாசநாதர் திருக்கோயில் இரும்பொறை ஓதிமலை அடிவாரம். அன்னூர். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே ஆசிகள்!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பிரம்மாவின் நினைவாற்றலை பிடுங்கி சென்றான் அப்பனே பின் மலையின் மீது (ஓதி மலையில் முருகன்) 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் கீழே என்று யான் சொன்னேன் அப்பனே!!!

(ஓதிமலை வாக்கில் அப்பனே எவை என்று அறிய அறிய யான் செல்கின்ற பொழுதும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழே பார்த்தேன் திருத்தலத்தில் அப்பனே!!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் முறை அமாவாசை திதிகளிலும் கூட பௌர்ணமி திதிகளிலும் கூட அப்பனே அன்னத்தை அளிக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அங்கு!!! மூலாதாரம் அப்பனே புண்ணியத்திற்கு அன்னத்தை அளித்தலே புண்ணியம்!!!! அவ் ஆன்மாவிற்கு!!! எவை என்றும் அறிய அறிய மற்றொரு ஆன்மாவிற்கும் புண்ணியம்!!! இவை அளித்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!)

ஆனால் அப்பனே இவ்விடத்திலிருந்தே( இரும்பொறை) என்பேன்!!!!  அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய இதனால் ஈசனும் கூட எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட உதவிகள்!!!!

ஆனாலும் அப்பனே ஆனாலும் சிறிது காலம் பிரம்மன் இவ்வாறே ( நினைவாற்றலை இழந்து) இங்கிருந்தான்!!! என்பேன் அப்பனே எதை என்றும் அறிந்தறிந்து !!!

அதனால் அவந்தனுக்கு ஒன்றும் தெரியாமலே அப்பனே இருந்தான் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய பின் ஈசனும் பின் எவை என்றும் அறிய அறிய பின் என்ன தான் உந்தனுக்கு???! எதை என்றும் அறிய அறிய என்று!!!!

நிச்சயம் பின் முருகன் அனைத்தும் தன்னுடைய பிரச்சனைகளுக்கு எவை என்று அறிய அறிய பின் நிச்சயம் பின் அறிந்து உதவுவான்!!! என்பதற்காகவும் நிச்சயம் பின் முருகனை யான் வரச் சொல்கின்றேன் என்று பின் ஈசனும்!!!!

எதை என்றும் அறிந்து அறிந்து!!!!!

மீண்டும் முருகா என்று இங்கிருந்து!!!! (ஈசன் முருகனை அழைத்தார்)

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் பிரம்மாவும் எவை என்றும் ஆனாலும் நிச்சயம் முருகன் எதை என்று அழைக்கட்டும் என்று ஓதி!!!.......

ஆனாலும் நிச்சயம் பின் பல நாட்கள் இங்கேயே எதை என்றும் அறிய!!!!! எங்கும் பின் செல்லக்கூட முடியவில்லை!!!!

ஆனாலும் இதனால் எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் ஏதோ ஒரு முடிவு நிச்சயம் ஈவான் என்பது ஈசனின் அறிமுகமான கட்டாயம் நிச்சயம் செல்க!!!!! என்று கூற நிச்சயம் சிறிதளவு  யோசனைகள் கொடுத்து பிரம்மாவை பின் மேல் நோக்கி அனுப்பினான்!!!!

( இரும்பொறையில் இருந்து ஓதிமலைக்கு )

இதனால் எதை என்றும் அறிய அறிய நடந்து சென்று எதை என்று அறிய அறிய மீண்டும் பின் முருகனை பாடி பாடி துதித்து நிச்சயம் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் மீண்டும் பின் சாப விமோசனம் அதாவது எவை என்றும் அறிய அறிய சாப விமோசனம் பின் என்றும் அறிந்து கொள்ளலாம்!!!

அதனால் நிச்சயம் பின் மனித ரூபத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே வருபவருக்கெல்லாம் நிச்சயம் பாவங்கள் பற்றிக்கொள்ளும் அவர் எவராகவும் இருக்கட்டும் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இதற்கு காரணங்கள் எல்லாம் புசுண்ட முனி எடுத்துரைப்பான் அப்பனே!!!! (காக புஜண்டர்) 

( அடியவர்கள் இவ்வாக்கினை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் எப்படி என்றால் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை எப்படி நேரடியாக போய் தரிசனம் செய்யக்கூடாது மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி தரிசனம் செய்து அங்கு தியானங்கள் செய்து அதன் பிறகு தான் நெல்லையப்பர் கோயிலுக்கு போக வேண்டும் அப்படி செய்யாமல் நேரடியாக நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் தான் வரும் என்று குருநாதர் கூறியிருந்தார் இதை இங்கே அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றோம். அதேபோல  இரும்பொறை கைலாசநாதர்  தரிசனத்திற்கு முன்பு முதலில் ஓதிமலை தரிசனம் அதன் பிறகு இங்கு என்பதை குருநாதர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் நன்கு புரிந்து கொள்ளவும்)

புசுண்ட முனிக்கும் இதில் சம்பந்தங்கள் உண்டு!!!!

அதனால்தான் அப்பனே முதலில் முருகன் இடத்திற்கு செல் என்று யான் கூறிவிட்டேன் அப்பனே!!!! ( முதலில் ஓதிமலை) 

ஆனாலும் சில சில வழிகளிலும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே இங்கும் கூட!!!

அதனால் அப்பனே இரு பௌர்ணமிகள் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய மூன்று அமாவாசைகள் இங்கு நிச்சயமாய் அன்னத்தை அளிக்க வேண்டும் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் பின் அப்பனே 50 பெண்களுக்கு அப்பனே அமாவாசை திதிகளிலும் கூட நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே தானங்கள் எதை என்றும் அறிய அறிய ஏதாவது ஒன்றை அளித்து வர...( மஞ்சள் குங்குமம் வளையல் வஸ்திரம்  மஞ்சள் கயிறு) நிச்சயம் அதாவது அவை மட்டும் இல்லாமல் அப்பனே!!! 

அதிகாலையிலே நிச்சயம் பசுமாட்டினை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் அழைத்து வந்து பூஜைகள் செய்ய செய்ய அப்பனே சக்திகள் மிகும் என்பேன். அப்பனே!!!!

(அதிகாலையில் கோயிலில் கோ பூஜை செய்து வர வேண்டும். அடியவர்களுக்கு மேலும் ஒரு தகவல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் சரி திருப்பதி ஏழுமலையான் சன்னதியிலும் சரி அதிகாலையில் முதலில் கோபூஜை தான் நடக்கும்!!!
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கோயில் நடை திறந்தவுடன் கோ பூஜை நடக்கும் பசுமாட்டினை கருவறை வரை அழைத்துச் செல்வார்கள் அதன் பிறகு தான் திருக்கதவுகள் திறக்கப்படும் முதல் தரிசனம் கோமாதாவிற்கு தான்!!ஈசன் அண்ணாமலையாலும் பெருமாள் ஏழுமலையான் முதலில் அனுதினமும் காலையில் பார்ப்பது கோமாதாவை தான். அதன் பிறகு  தான் அன்றாட சேவைகள் தரிசனம் என்பது நடக்கும். இரும்பொறை ஆலயத்திலும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கோபூஜை நடத்த வேண்டும் என்பது குருநாதருடைய கட்டளை இதனால் ஆலயத்திற்கு சக்திகள் கூடும்)

இதனால் ஈசன் எதை என்றும் அறிய அறிய சக்தி நாதனாகத்தான் இங்கு இருக்கின்றான் அப்பனே!!! எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே!!!

இதை செய்து வந்தாலே போதுமானதப்பா!!!!! 

இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டு அப்பனே பின் அனைத்தும் ஈசனே செய்து முடிப்பான்!!!

யாங்களும் செய்து முடிப்போம் அப்பனே!!!! எதை என்றும் அறிய!! அறிய!!!

அதிவிரைவிலே அனைத்தும் நடக்கும் அப்பனே இங்கு!!!

இதனால் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே எவை என்றும் அறிய அறிய அதி விரைவிலே புசுண்ட முனியும் இங்கு  வந்து வாக்குகள் செப்புவான் அப்பனே!!!

இதை செய்யச் சொல் முதலில்!!!!!

ஆசிகள் !! அருள்கள்!! அப்பனே!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே இரும்பொறை கைலாதநாதர் ஆலயம் குருநாதர் வாக்குகள் தந்தபடியே அமாவாசை பௌர்ணமிகளில் அன்னதானம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

குருநாதருடைய திருவருளால் கோ பூஜையும் காலையில் நடந்து வருகின்றது ஆனால் கோயிலுக்கு என்று கோசலையும் கோயில் கோமாதாவும் இல்லை அதனால் அருகில் உள்ள பக்தர் ஒருவர் வீட்டு பசுவினை கொண்டு வந்து தினமும் கோபூஜை நடத்தப்படுகின்றது.

ஆலயத்திற்கான கோசாலையையும் கோமாதாவையும் தீவனங்களுக்கும் அடியவர்கள் உதவ முன் வரலாம். நாட்டு பசு மாடு கிடைத்தால் நன்று என தெரிவித்து இருந்தார்கள்.

ஆலயத்திற்கென பழமையான தேர் ஒன்று உள்ளது தை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும் தற்பொழுது தேர் பழுதடைந்து பராமரித்து பணிகள் செய்ய வேண்டி இருப்பதால் அதற்கும் உதவிகள் தேவைப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு கைலாச நாதர் கோயில் பூசாரி ராசா குரு 
எண்: 9865970586.

கோயில் தர்மகர்த்தா   இளங்கோவன் :எண் 8903947083.

பௌர்ணமி அமாவாசை அன்னதானங்களுக்கு பெண்களுக்கு மற்றும் கோயில் கோமாதாவிற்கு தேர் பராமரிப்பிற்கு நன்கொடை செய்யும் பக்தர்கள் இந்த இருவரையும் தொடர்பு கொண்டு கலந்து பேசி இதற்காக நன்கொடை செய்கின்றோம் என்பதை தெளிவாக குறிப்பிட்டு அதை அவர்களுக்கு முறைப்படி தெரிவித்தும் விடுங்கள்.

 Accounts numbers:
326100050301273
IFSC code : TMBL0000326
Account holder : ELANGOVAN VS
: tmb bank puliampatti.

ஆலய முகவரி மற்றும் விபரங்கள். 

கைலாசநாதர் கோவில், இரும்பரை, அன்னூர் தாலுக்கா, கோயம்புத்தூர் மாவட்டம்.

கைலாசநாதர் கோயில் ஓதிமலை அடிவாரத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய சிவன் கோயிலாகும், இது கோயம்புத்தூரில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் புளியம்பட்டிக்கு அருகில் உள்ள அழகிய முருகன் கோயிலாகும்.

இந்த பழமையான தலத்தில் ஶ்ரீ கைலாசநாதர் எனும் திருப்பெயருடன் அம்பிகை இல்லாமல் தனித்து சுயம்பு லிங்க மூர்த்தியாக அழகுற வீற்றிருக்கிறார்.

ஶ்ரீ பிரம்ம தேவனை இரும்புச் சிறையில் 1அடைத்த தலம் என்பது இத்தலச் சிறப்பாகும். 

(பிரம்மனை இரும்புச்சிறையில் அடைத்த தலமாதலால் இவ்வூர் 'இரும்பு அறை ' என்னறழைக்கப்பட்டு பின் மருவி 'இரும்பொறை' என்றாகி தற்போது, இரும்பறை என்றழைக்கப்படுகிறது) 

இரும்புச்சிறையில் அடைக்கப்பட்ட பிரம்மனை விடுவிக்க நம் ஈசன் (முருகனை சந்தித்து சமாதானம் செய்ய) இங்கு வரும்போது அம்பிகை இல்லாமல் தனியே வந்ததனால், இத்தலத்தில் அம்பிகை இல்லாமல் சிவபெருமான் தனித்தே வீற்றிருக்கிறார். 

சிவபெருமானுக்குரிய அத்தனை முக்கிய விழாக்களும், சிறப்புடன் கொண்டாடப்படும் இத்தலத்தில், உடல், மனம், பொருள் சிறப்பு பெற இத்தல இறைவனுக்கு பிரதோஷம் மற்றும் வியாழக்கிழமை காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது சிறப்பு.

முருகன் பிரம்மனை சிறை வைத்த இரும்பு அறை மறுவி இரும்பொறை என மருவிவிட்டது

செல்லும் வழி: பு.புளியம்பட்டி-மாதம்பாளையம் வழி
தகவல்கள்:
ஊர்: இரும்பொறை, இரும்பறை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete