வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நீண்ட நாட்களுக்குப்பின், முன்னரே அகத்தியப்பெருமானின் சித்தன் அருளில் அளித்த "அதிர்வலைகளும் தசவாயுக்களும்" என்கிற தொகுப்பில், கண்டமாலையால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் யோகா சிகிர்ச்சை முறையுடன் தொடர்ந்து நடந்து சென்று, அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டது ஞாபகம் இருக்கும். மறுபடியும், ஞாபகப்படுத்திக் கொள்ள, சித்தன் அருள் தொகுப்பு 854, 855, 857, 860, 861, 862 போன்றவைகளை ஒரு முறை வாசித்து விடுங்கள்.
அந்த நோயுற்றவரை பற்றி கடைசியாக கூற முடிந்ததை கீழே தருகிறேன்.
"அப்படிப்பட்ட ஒரு நல்ல மாற்றத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார். மூச்சின் அதிர்வலைகள், பிராணாயாமப் பயிற்சி வழி உள்ளே செலுத்தப்படும் பொழுது, அது எதிர்பார்த்த இடத்திற்கு சென்று, அந்த உடலுக்கு தேவையானபடி வேலை செய்கிறதா என்றறிய, உடலின் ஏதேனும் ஒரு திடீர் அசைவு தெரிவிக்கும். இவர் விஷயத்தில், அவர் நடந்ததை நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு, ஒரு தீர்மானத்தை எடுத்தார், யோகா ஆச்சாரியன்.
அன்றைய தினம், சற்று நேரமெடுத்து, நிதானமாக, அவரை 80வது நிலைக்கு அழைத்து வந்து, குருவை பிரார்த்தித்து, ஆதார சக்ரங்களை, உருவேற்றி, அபான வாயுவை முடிச்சு போட்டார். உள்ளுக்குள் முடிச்சு போடப்பட்ட வாயு, உதறிக்கொண்டு தலைக்கு ஏறியது. அவருக்கு ஒருவித அவஸ்தை தொடங்கி வியர்க்க தொடங்கியது.
உச்சியில் தொட்டு பார்த்து, வாயுவின் கட்டுப்பாட்டினால் சூடு ஏறி இருப்பதை கண்டு, சந்திரக்கலையை ப்ராணாயாமத்தினால் நெருடி உடலை குளிர்விக்க தொடங்கினார். சிறிது நேரத்துக்குப்பின் அவர் சமநிலைக்கு வந்தார்.
"இனி கொஞ்ச நாட்களுக்கு நிறயவே கடினமாகத்தான் இருக்கும். இயற்கை உபாதைகள் அத்தனை எளிதாக வெளியேறாது. நிறையவே சிரமம் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
ஒரு மனித உடலில், பிராணனும், அபானனும் கைகோர்த்து இருக்கும் வரை உயிருக்கு பிரச்சனை இல்லை. ஆனால், உடலைவிட்டு போய்விடுவோம், இத்தனை சிரமங்கள் எதற்கு என ஆத்மா தீர்மானிக்க, பிராணன் அதை உணர்ந்துவிட்டால், முதலில் பிராணன் செய்வது, அபானனுடன் கோர்த்த கையை விடுவித்துக் கொள்ளும். உடனேயே, அபானன் வெளியேறிவிடும், பின்னர் மற்ற வாயுக்கள் உடலை விட்டு செல்லத் தொடங்கும். இப்படிப்பட்ட நிலையில், விதி அனுமதிக்குமா என்று பார்த்துவிட்டு, முடிச்சுப்போட, ஆதார சக்கரங்களை தொட்டு எப்படி மெருகேற்றுவது என்று நன்கு தெரிந்த ஒருவரால் மட்டுமே, முடியும்.
இவர் விஷயத்தில் இறையருளால், விதி வழிவிட்டது.
முடிச்சுப் போட்டதின் வேதனையை பொறுத்துக்கொண்டே விரைவில் 90வது நிலையை தொட்டார், அவர்.
இந்த தினத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார்.
அன்றைய தினம், அனைத்து ஆதார சக்கரங்களையும் திரட்டி கூட்டி, ப்ராணனில் புகுத்தி, கும்ப நிலையை உருவாக்கினார்.
"இனிமேல், என் உதவி உங்களுக்கு தேவை இல்லை. நீங்களே, இத்தனை நாட்கள் சொல்லித்தந்த பயிற்சியை தொடருங்கள். ஏதேனும் தேவை என்றால் கூப்பிடுங்கள், வருகிறேன். அல்லது நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன். இனி உள்ள பயிற்சியை ஒரு மாதம் தொடர்ந்த பின், உங்களுக்கு, இனி மருத்துவம் பார்க்க முடியாது என்ற மருத்துவர் முன் சென்று உங்கள் உடலை பரிசோதிக்கச் சொல்லுங்கள். உங்கள், குடலும், இருதயமும் சரியாகிவிட்டது." என்று கூறி விடை பெற்றார் அடியேனின் நண்பர்.
இன்று, அந்த நோய் வாய்ப்பட்டிருந்தவர், தனியாக கார் ஒட்டி சென்று, விளையாட்டு மைதானத்தில் குறைந்தது ஐந்து சுற்று நடக்கிறார். தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார். மெலிந்து போயிருந்த உடல், நோய் குணமானபின் சற்றே நல்ல பெருத்து, ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்.
ஒரு மாதத்துக்கு மேல் தங்க மாட்டார் என்ற மருத்துவர்களின் முடிவை மாற்றி எழுதி, இறைவன் அருளால், ஆரோக்கியமாக, தன் குடும்பத்தாருடன் அமைதியாக, கடந்த 18 மாதங்களாக இயல்பாய் வாழ்ந்து வருகிறார்."
சரி! இனி காலம் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது என பார்ப்போம்.
2019ஆம் ஆண்டு கடைசியில் கொரோனா என்கிற தொற்று நோய் நம் நாட்டில் பரவத் தொடங்கியது. அதிகம் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்காத நேரம். நீண்ட காலத்திற்கு சிகிர்ச்சை பெற்று வீட்டிலேயே இருந்தவருக்கு ஓர் எண்ணம் எழ, யோகா மாஸ்டரின் அனுமதியுடன், புது தில்லியில் இருக்கும் தன் சகோதரனுடன் ஒரு மாதம் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பி போனார். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தனக்கு அந்த நோய் இருப்பதை அறிந்து வேலையை விட்டு, குடும்பத்துடன் இந்தியா திரும்பியவர், பிறகு வேலைக்கே செல்லவில்லை.
ஊருக்கு செல்ல அனுமதி அளித்த யோகா மாஸ்டர் அவரிடம், "எந்த காரணம் கொண்டும், என்ன சிகிர்ச்சை, யாரிடம், எங்கு எடுத்தீர்கள், என் தொடர்பு எண், பெயர், ஈமெயில் போன்ற எதையுமே யார் கேட்டாலும் கூறக்கூடாது" என உத்தரவிட்டார். தைரியமாக சென்று, எங்கு வேண்டுமானாலும் பரிசோதித்து கொள்ளுங்கள். தினமும் பிராணாயாம பயிற்சியை தொடர வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும், என்ன உடல் பிரச்சினை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்!" போன்ற உத்தரவுகளை கொடுத்து வழி அனுப்பி வைத்தார். கவனிக்கவும்! கண்டமாலை என்கிற 4448வது வியாதியினால் குடல், இருதயம் போன்றவை பாதிக்கப்பட்டு, யோகா-பிராணாயாம-பயிற்சியினால், மறு-உரு-திரும்பி (REVERSE ENGINEERING) இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறார்! இது இறை அருளால் நடந்த விஷயம்.
ஆனால், இதை வாசிக்கும் உங்கள் மனதில் "அந்த யோகா மாஸ்டர், ஏன் தன்னை எந்த காரணத்திற்காகவும் காட்டி கொடுக்க கூடாது" என கேட்டுக் கொண்டார்? இப்படி ஒரு சிகிர்ச்சை முறை இருந்தால், வியாதியால் அவதிப்படுபவர்களை குணப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கலாமே! என தோன்றும். நியாயமான சந்தேகம்/கேள்வி தான்.
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். யோகாவுக்கு உறுதுணையாக அதன் கூடவே சஞ்சரிக்கின்ற மருத்துவ முறைகள், ஆயுர்வேதமும், சித்தா மருத்துவமும். அலோபதி மருத்துவ முறை, இவ்விரண்டு மருத்துவ முறையையும் ஏற்றுக் கொள்ளாது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சிகள் அலோபதி முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆராய்ச்சி குழுவை MEDICAL MAFIA என்பார்கள். இவர்கள் உலகெங்கும் பரவி நின்று, உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கவனித்து, அதை அழித்துவிடுவதே தொழில். வேறு ஏதேனும் ஒரு முறையில் ஒரு வியாதி குணமாவதை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். யோகா மாஸ்டருக்கு, உயிருக்கே ஆபத்து வரலாம், என்பதே உண்மை. இப்படிப்பட்ட மாஃபியாவை எதிர்க்க தீர்மானித்த பாரதபிரதமர் கொரோனாவுக்கு பாரதத்திலே மருந்து கண்டு பிடித்து, வெளி நாட்டு தலையீட்டை அறுத்து எறிந்தார் என்பதே உண்மை.
சரி! புதுதில்லி வந்து சேர்ந்த ஆரோக்கியமான சகோதரனை கண்ட தம்பிக்கு ஆச்சர்யம். ஒரே கேள்வி மயம், என்ன செய்தாய், யார் சரி பண்ணினார்கள், என்ன மருத்துவ முறை என்று பலவிதமான கேள்விகள். தன் கண்ணையே அவரால் நம்ப முடியவில்லை. சிரித்து மழுப்பிய அவர், சகோதரன் என்பதினால், பிராணாயாம பயிற்சி என்று மட்டும் கோடிட்டு காட்டினார்.
இவர் போய் சேர்ந்த 15 நாட்களில் அரசாங்கம், அனைத்துவிதமான பயண முறைகளையும், கால வரையின்றி தடை செய்தது. கொரோனா எங்கும் பரவ தொடங்கியது. இவர் புது தில்லியில் மாட்டிக்கொண்டார், நீண்ட காலத்திற்கு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Agatheesaya Namah! 3-4 days back only, suddenly thoughts came about this person and I was wondering if he would have recovered fully by now. I was very happy to see this post!!
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Agatheeshwaraya Namaha
ReplyDelete