சிவனேரி கோட்டை வாக்கு பாகம் 2
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
அப்பனே எங்கெங்கு எதையென்று அறிந்து அறிந்து யான் ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே பின் எதை என்று அறிந்து அறிந்து அதனால் இடைக்காடனே அனைத்தையும் சொல்லிவிட்டான் அப்பனே
இதிலிருந்து என்ன புரிகின்றது அப்பனே அதனால்தான் அறிந்து அறிந்து பல சித்தர்கள் மனிதர்களை திட்டியும் தீர்த்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே அனைத்தும் இடைக்காடனே சொல்லிவிட்டான் அப்பனே தேவியின் ஆசிர்வாதங்களும் அப்பனே கிடைத்தும் விட்டது இரவிலே அப்பனே!!!! எதை என்று அறிந்து அறிந்து இன்னும் வாக்குகள் செப்புகின்றேன். அப்பனே!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
குருநாதர் அகத்திய பெருமான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்களை பற்றி மோரியா கோஸ்வி கணபதி மந்திர் வாக்கில் (சித்தன் அருள் - 1240 - அன்புடன் அகத்தியர்-ஸ்ரீ மோராயா கோஸ்வி கணபதி மந்திர்)
பின் கணபதியையே நாடி நாடி... இதன் பக்கத்தில் உள்ள பல பல கணபதிகளையும் (அஷ்ட விநாயகர் எனப்படும் எட்டு விநாயகர்கள் மகாராட்டிரா புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் எட்டு விநாயகர் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது)
பின் துதித்து துதித்து... ஆனாலும் இதனைப் பற்றியும்கூட வரும் காலங்களில்
நிச்சயம் கணபதி எவ்வாறெல்லாம் நிச்சயம்!!! பின் தன் மாற்றத்தை ஏற்படுத்தினான் என்பதை கூட நிச்சயம் ஆலயங்களில் சுற்றி சுற்றி தெரிவிக்கின்றேன் அப்பனே!!!! (அஷ்ட விநாயகர் கோயில்கள் தல வரலாறு பற்றி) இதன் மூலம் அப்பனே நல்முறையாகவே மனிதன் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே வெற்றி நிச்சயம் அப்பனே!!!!
என்று வாக்குகள் தந்திருந்தார்!!!
சிவனேரி கோட்டைக்கு அருகே லேன்யாத்ரி கணபதி
குடைவரைக் கோயில் அமைந்துள்ள காரணத்தினால் அதனைப் பற்றியும் அதாவது குருநாதரிடம் கேட்க!!!!
அப்பனே அஷ்ட கணபதி தலங்களை பற்றி அந்தந்த தலங்களிலேயே யான்உரைக்கின்றேன்!!!!
இன்னும் நேரங்கள் இருக்கின்றது அப்பனே எதை என்று அறிய அறிய!!!
அப்பனே அஷ்ட
விநாயகர்களையும் ஒரு நாளிலே அப்பனே தரிசிக்க வேண்டும் அப்பனே (ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) எட்டு விநாயகர் ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும்!! அனைத்தையும் கொடுத்து விடுவான் அப்பனே!!!!
திருத்தலங்களைப் பற்றி அங்கங்கே சொல்கின்றேன் அப்பனே ஆனாலும் அப்பனே அமாவாசை நாளில் அனைத்து விநாயகர்களையும் தரிசனம் செய்வது சிறப்பை தரும் என்பேன் அப்பனே!!!
அப்பனே இவ் தேவி (சிவாயி மா) மனித ரூபத்தில் எதையென்று அறிய அறிய சிவாஜிக்கு மட்டுமே தரிசனம்கிடைத்தது!!!! அப்பனே அடிக்கடி
நிச்சயம் இங்கு வந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பனே தேவியின் தரிசனத்தை!!
யான் காட்டுகின்றேன் அப்பனே
நலன்கள் ஆசிகள்!!!!!
முகவரி மற்றும் விபரங்கள்
சிவாயி மா மந்திர் சிவனேரி கோட்டை குசூர். ஜூன்னார் புனே. 410502.
வாரத்தின் எல்லா தினங்களிலும் காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை கோட்டை மற்றும் ஆலயம் திறந்திருக்கும்.மகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் ஜுன்னாருக்கு அருகில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் இராணுவக் கோட்டை ஆகும். இது ஹிந்தவி ஸ்வராஜ்யம்/மராட்டிய பேரரசின் பேரரசரும் நிறுவனருமான சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறப்பிடமாகும்.
புனே அருகிலுள்ள நகரமான ஜுன்னார் ஒரு தாலுகா இடமாகும், மேலும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. புனேவில் இருந்து ஜுன்னார் சுமார் 90 கிமீ தொலைவில் உள்ளது . ஜுன்னார் நகரத்திலிருந்து 2-3 கிமீ தொலைவில் கோட்டை உள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment