​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 30 April 2023

சித்தன் அருள் - 1329 - மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி நடத்திய திருவிளையாடல்!









மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி நடத்திய திருவிளையாடல்

29/4/2023 இன்று சனிக்கிழமை அகத்திய அடியவர்கள் சார்பில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

வந்தவாசி சிவனடியார்கள் குழு நேற்றைய தினத்தில் சிறுமிகள் பெண்ணடியவர்கள் குழு திருவண்ணாமலை கொடுக்க இன்று சிறுவர்கள் அடியார்கள் வந்தவாசி சென்று நீர்மோர் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலில் ஆலயத்திற்கு அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சுமார் 2000 பேர் அளவிலான பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

நீர்மோர் வழங்கி முடித்தவுடன் அடியவர்கள் குழு தேவியை மனதில் எண்ணி துதித்து விட்டு வந்தவாசி திரும்பவும் கிளம்பினர். 

திரும்பி கிட்டத்தட்ட ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் வந்தவுடன் அடியவர்கள் குழு மேற்பார்வையாளர் அவருடைய கைப்பையையும் தன்னுடைய காலணியையும் ஆலயத்தின் அருகிலேயே விட்டு வைத்தது நினைவுக்கு வர உடனடியாக வண்டியை திருப்பச் சொல்லி என்னுடைய ஹேண்ட் பேக் மற்றும் காலணி எடுக்க வேண்டும் திரும்பவும் சென்று எடுத்துக் கொண்டு வருவோம் என்று சொல்லி வண்டியை திருப்பி ஆலயத்தின் அருகே வந்த பொழுது!!!!!

நல்ல  மங்களகரமான தோற்றத்தில் நெற்றி பொட்டில் பெரிய குங்குமம்!!!! மலர் சூடி நல்ல தேஜசுடன் வந்து எல்லோருக்கும் மோர் வழங்கினாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை????

எனக்கும் மோர் வேண்டும்!!! என்று கேட்க

அந்த அடியவரும் அம்மா மோர் அனைவருக்கும் கொடுத்தாயிற்று அம்மா. மோர் தீர்ந்தும் விட்டது! நாங்கள் இப்பொழுது ஊருக்கு திரும்பி போய்க் கொண்டிருக்கின்றோம் என்று கூற

அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு மோர் வேண்டும் அந்த பாத்திரத்தில் இருக்கும்! எப்படியாவது எனக்கு ஒரு கிளாஸ் மோராவது வேண்டும் என்று கேட்க நீ மோர் தரும் வரையில் இங்கேதான் நான் அமர்ந்திருப்பேன் எப்படியாவது எனக்கு வேண்டும் என்று அம்மா கட்டாயமாக கூற

அந்த அடியவரும் வாகனத்திற்கு திரும்பி பாத்திரத்தில் எஞ்சியுள்ள மோரை சேகரித்து பார்த்தால் ஒரு டம்ளர் அளவிலான மோர் இருந்தது!!!

அனைவருக்கும் மகிழ்ச்சி ஏனென்றால் பாத்திரத்தில் இருந்த கடைசி துளி வரை எடுத்து சேகரித்த பொழுது ஒரு கிளாஸ் மோர் சேர்ந்து விட்டது.

எப்படியோ மோர் அந்த அம்மாவிற்காக கிடைத்து விட்டது என்று வாகனத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அந்த அம்மையை தேடி பார்த்தால் அந்த அம்மையை காணவில்லை!!!!

இது என்ன வியப்பாக இருக்கின்றது மோர் கேட்டுவிட்டு அடம் பிடித்து விட்டு இப்பொழுது அந்த அம்மாவை காணவில்லையே என்று திகைப்புடன் சுற்றிலும் முற்றிலும் தேடிப் பார்க்க!!!!!

விறுவிறுவென எட்டு வயது முதல் பத்து வயது வரை மதிக்கத்தக்க ஒரு சிறுமி பச்சை சட்டையும் பச்சை பாவாடையும் அணிந்து அடியவரை நோக்கி வந்து!!!!

மோரை தா!!!!!! எனக்காக தான் அந்த அம்மா மோரை கேட்டார்கள் கொடு!!!! என்று டம்ளரோடு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் அந்த சிறுமி!!!!!

அடியவருக்கோ ஒரே அதிசயம்!!!!

என்னடா இது மோரை கேட்டதோ ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி

ஆனால் எனக்காக தான் கேட்டார்கள் என்று ஒரு சிறுமி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்களே என்று எண்ணி கொண்டே சரி நம்முடைய கடமை நல்லபடியாக நம் குருநாதர் உத்தரவுப்படி செய்து விட்டோம் என்று வண்டி ஏறி வரும் பொழுது இதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அடியவருக்கும் புரிந்தது இது அன்னையின் திருவிளையாடல் என்று!!!!

மெய் சிலிர்த்து விட்டார் அடியவர்!!!!

இந்த பணியை ஆர்வத்துடன் செய்தது சிறுவர்கள் அந்த அடியவரும் சிறுவன் தான் !!!

பக்தி பாவத்தோடு குருநாதர் கூறியதை முறையாக கடைப்பிடித்து ஆலோசனைகள் பெற்று நல்லபடியாக செய்து முடித்ததற்கு கடைசியாக தேவியே வந்து மோரை உட்கொண்டு திருவிளையாடல் செய்தது மிகவும் அதிசய அற்புத அனுபவம்.

குருநாதர் கூறிய உத்தரவை கடைப்பிடித்து இந்த சேவைகளில் ஈடுபட்டு எங்கெங்கோ இருந்து நன்கொடைகள் வழங்கி உதவும் அடியவர்களுக்கும் பல்வேறு சூழ்நிலையிலும் பணிச் சூழலிலும் அடியவர்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகளை செம்மையாக நடைபெற ஆலோசனைகள் செய்தும் சரியான முறையில் வழி நடத்தும் அனைத்து அடியவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

அங்காள பரமேஸ்வரியின் திருவருளும் அப்பன் அகத்தியன் பேரருளும் நிரம்பப்பெற்று அனைவரும் வாழ்க வளமுடன்

அம்மா சரணம் அங்காள பரமேஸ்வரி சரணம் அகத்தியப்பா சரணம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்தரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அகத்தியப்பெருமான் உத்தரவை நிறைவேற்றும் பொழுது, இப்படித்தான் அனுபவங்கள் கிடைக்கும். ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்,கண் மூடியிருந்தாலும், மனதை தெளிவாக திறந்து வைத்துக்கொள்ளுங்கள். நிறைய அனுபவம் கிடைக்கும். அகத்தியர் உத்தரவை நிறைவேற்றிய அனைவருக்கும், வாழ்த்துக்கள்! சீக்கிரமே அகத்தியப்பெருமான் வந்து உங்களிடம் கைநீட்டட்டும்!

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete