​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 28 April 2023

சித்தன் அருள் - 1328 - அன்புடன் அகத்தியர் - ஜாங்லி மகாராஜ் ஜீவசமாதி!








11/3/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : சத்குரு ஜாங்லி மகாராஜ் ஜீவசமாதி / பாதாளேஸ்வரர் குகை கோயில். சிவாஜிநகர் புனே மகாராஷ்டிரா. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!  

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!! அப்பனே இவை இவை என்று அறிய அறிய அப்பனே அதாவது இப்பொழுது இவ் ஞானி!!! எங்கிருந்து வந்தான் என்பதையும் கூட விளக்கப் போகின்றேன் அப்பனே!!!!

இவ்வாறு உயர் ஞானிகளையும் கூட அடைந்தால்தான் அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே அனைத்து சித்துகளும் கிடைக்கும் அப்பனே பின் அங்கங்கு இருந்து தவம் செய்தாலும் எதை என்று அறிய அறிய அப்பனே முயற்சிகள் செய்ய வேண்டும் அலைந்து திரிய வேண்டும் அப்பனே... பைத்தியமாக ஆக வேண்டும் அப்பனே... ஞானி என்பவன் எதை என்று அறிய அறிய அப்பனே பின் பட்டம் கிட்டாதப்பா!!!!!!

பட்டம் என்றால் எதை என்று அறிய அறிய இன்றளவு ஆனாலும் அப்பனே அனைத்தும் மாயங்களாக போய்க் கொண்டிருக்கின்றது இதனை எப்படி என்று அறிய அறிய அப்பனே அதனால் தான் சொல்லப் போகின்றேன் அப்பனே!!

இவ் ஞானியவன் எதை என்று அறிய அறிய அப்பனே முதலில் அண்ணாமலையிலே இருந்தவன் என்பேன்!!!!

அப்பனே இதை அறிந்து அப்பனே ஆனாலும் அங்கு கூட ஈசனை நினைத்து நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான் அப்பனே அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிந்தறிந்து அப்பனே நாராயணனை கூட இவந்தனுக்கு அப்பனே..... அங்கும் இங்கும் அதாவது( திருவண்ணாமலை திருப்பதி திருமலை) தற்பொழுது பின் எவை என்று அறிய ஏழுமலையான் இடத்திலும் கூட சென்று கொண்டே இருந்தான் அப்பனே!!!

ஆனாலும் வருத்தங்கள்!! வருத்தங்கள்!! உணவில்லாமலும் கூட அப்பனே ஆடைகளும் கூட இல்லையப்பா!!!!! இதனால் சுற்றித்திரிந்து அதாவது எதை என்று அறிய மீண்டும் அண்ணாமலைக்கு வந்துவிட்டான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து இதனால் உடுக்க ஆடையும் இல்லை அப்பனே இதனால் எவை என்று அறிய அறிய அப்படியே( நிர்வாண ரூபம்) இருந்தான் அப்பனே!!!! இவ்வாறு என்பதைக் கூட சிறு குழந்தை எப்படி இருக்கின்றதோ அப்படியே இருந்துவிட்டான் அப்பனே!!!!

ஆனாலும் அனைவரும் அப்பனே இவந்தனை பைத்தியம்!! பைத்தியம்!! என்று அப்பனே அனைவரும் வந்து எதை என்று திட்டி தீர்த்தனர் அப்பனே அடித்தும் சில மனிதர்கள் இவந்தனை கொன்று விடலாம்.... இவன் இருந்தால் எதை என்று அறிய அறிய ஒரு லாபமும் இல்லை என்று நினைத்து ஆனாலும் இவந்தனை எதை என்று அறிய அறிய பின் அதாவது நடு இரவிலே வந்து எவை என்று புரியாமலே பின் எதை என்று அடித்து நொறுக்கி எங்கேயோ தெரியாமலே புதருக்குள் அதாவது போட்டு சென்று விட்டனர்!!!

ஆனாலும் அறிந்தறிந்து ஈசனும் வந்தான் முதியவன் வேடம் அணிந்து!!!

 பின் எவை என்று அறிய அறிய பின்பு ஆடைகளை அணிவித்து மீண்டும் இவந்தனுக்கு பிறப்பு கொடுத்து எதை என்று அறிந்து எங்கேயாவது சென்றுவிடு எதை என்று அறிந்து அறிந்து ஈசன் பார்த்துக் கொள்வான் என்று நிச்சயம் ஈசனே அண்ணாமலையை விட்டு!!!
( அவ் ஞானிக்கு உயிர் மீண்டும் தந்து நீ அண்ணாமலையை விட்டு எங்கேயாவது சென்று விடு உன்னை ஈசன் பார்த்துக் கொள்வான் என்று அந்த முதியோர் வேடத்தில் வந்த ஈசன் ஞானியைப் பார்த்து கூறிவிட்டார்.)

ஆனாலும் பின் வந்தான் எதை என்று அறிய அறிய இங்கு( புனே மகாராஷ்டிரா) நோக்கி அமர்ந்தான் அதாவது இங்கே வந்து விட்டான் அறிந்தறிந்து ஆனாலும் இங்கே பாஷைகள் பலவாறு!!!!!( வடமொழி மராட்டி) ஆனாலும் இவந்தனுக்கு புரியவில்லை..... எவ்வாறு என்பது எவ்வாறு நினைத்தது எதை என்று அறிய அறிய.....

ஆனாலும் அப்பனே அப்பொழுது எதை என்று அறிந்து அறிந்து இங்கு தான் இருந்தானப்பா!!!

இப்பொழுது எவை என்று அறிந்து அறிந்து அப்பனே எதை என்று புரிந்து புரிந்து ஈசன் எதை என்று அறிந்து இப்பொழுது கூட அழகாக பின் கோமாதா நிற்கின்றது!!!

 ( ஜீவசமாதிக்கு அருகிலேயே பாதாளேஸ்வரர் ஈசன் கோயில் கற்றளி கடைவரை கோயில் நந்தி)

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் இங்கே தான் அவன் எதை என்று பார்ப்போம் என்று அமர்ந்து விட்டான் எதை என்று இவந்தன் நாமத்தில்( ஜெபத்தில்) அதாவது நாராயணா!! நாராயணா!! மீண்டும் நமச்சிவாயா !!நமச்சிவாயா!! என்றெல்லாம்!!

 இப்படியே ஆனாலும் வருபவர்கள் போகின்றவர்கள் எதை என்று அறிந்து ஏன் இவந்தனுக்கு யாருமே இல்லையா??? இவந்தன் ஒரு பைத்தியக்காரனாவே இருக்கின்றான்.... எவ்வாறு என்பதையும் கூட!!......

ஆனாலும் அமைதி காத்தான் பின் வருபவர்கள் வரட்டும் போகின்றவர்கள் போகட்டும் ஆனாலும் சில மனிதர்கள் எதை என்று அறிய அறிய பின் இவந்தனும் பெரிய ஞானியாக இருக்கின்றானே!!!!!! என்று ஆசீர்வாதங்களும் கூட பெற்று சென்று விட்டனர் ஆனாலும் அறிந்து அறிந்து இதையென்று புரிந்து புரிந்து!!!!ஆனாலும் இவந்தனுக்கு நிலைமைகள் மாறுபட்டு தான் கொண்டிருந்தது ஆனாலும் இப்படியே பல நாட்களும் கழிந்தது ஆனாலும் உணவுகள் எதையென்று  அறிந்தறிந்து இப்பொழுது பார்த்தீர்கள் எதை என்று அறிந்து இங்கே சிவன் இருக்கின்றானே!!!( அடியவர்கள் குருநாதர் வாக்கிற்கு முன்பாக பாதாளேஸ்வரர் தரிசனம்) இங்குதான் இப்பொழுது கூட அவன் நாமத்தைக் கூட சிவாஜி. என்கின்றார்கள்!!!

( சத்ரபதி சிவாஜி புனே அவருடைய கோட்டை அவர் பிறந்ததும் இங்கே புனே அருகில் தான்)

 எதை என்று கூட அவந்தன் இங்கு வந்து வந்து வெற்றிகள் பல பெற்று விட்டான் ஆனாலும் எதை என்று அறிய அறிய இவ் மானிடன்(சிவாஜி) எதை என்று அறிய அறிய இவ் ஞானியையும் பார்த்தான்!!

ஆனாலும் பின் அதாவது எதை என்று அறிந்தறிந்து பின் அவந்தனுக்கு தெரியும் அனைத்தும் கூட எவை என்று அறிய அறிய ஏனென்றால் இதனை என்று கூட இப்பொழுதும் கூட அஷ்டமா சித்துக்கள் என்கின்றார்கள் அவைகள் எல்லாம் பொய்களப்பா!!!!

முதல் அஷ்டமா சித்திகளில் எதையென்று அறிய அறிய தோல்விகள்!!! எவை என்று அறிய அறிய அப்பனே முதலில் வருவது அப்பனே பின் அதாவது நெருப்பில் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நெருப்பினில் உட்கார்ந்தால் அப்பனே பின் எதை என்று கூட தன்னை ஒரு இதுவும் கூட அதாவது சிறு தீ கூட பின் தொடாது என்பேன் அப்பொழுதுதான் அப்பனே முதல் முதல் யோகத்தில் வெற்றி பெற்றுள்ளான். என்பேன் அப்பனே!!!

(அட்டமா சித்துக்களில் முதல் சித்து நெருப்பை அடக்கி ஆளுதல் நெருப்புக்குள் இருந்தாலும் தீ நம்மை சுடாது அடக்கி வைக்கும் தன்மை)

ஆனால் இன்றைய மனிதர்கள் அப்பனே அஷ்டமா சித்துக்கள் மனிதர்களுக்கு வரும் வரும் என்பதை எல்லாம் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

 நிச்சயம் வராது!!!! வராதப்பா!!!!! 

எங்கள் அருள்கள் இருந்தால் தான் வருமப்பா!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்தறிந்துஅப்பனே அதனால் அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்கள் பித்தலாட்டக்காரர்கள் அப்பனே இவை சொல்லிச் சொல்லித்தான் அப்பனே ஏமாற்றி விட்டார்கள் அப்பனே பல பல யுகத்திலும் கூட எதை என்று அறிந்தறிந்து 

ஆனாலும் இப்பொழுது கூட பின் வாய் கூசாமல் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!

"""" அஷ்டமா சித்துக்களை யாராலும் பெற முடியாது அப்பனே!!!!!

எங்கள் அருளிருந்தால் தான் பெற முடியும் அதிலும் முதல் வகுப்பு என்னவென்றால் அப்பனே நெருப்பில் உட்காருவது அப்பனே!!!!!

இல்லையப்பா!!! அப்படி இப்பொழுது யாரும் இல்லையப்பா!!!!

எதையென்று அறிந்தறிந்து அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால் கூட பல வழிகளிலும் கூட வருத்தங்கள்... ஆனாலும் அப்பனே நல்முறையாகவே மாற்றங்கள் உண்டு அப்பனே!!! 

அதனால் தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் அப்பனே இச் சிவாஜி என்பவன் இதை( அஷ்டமா சித்துக்களில் முதல் சித்தி) பெற்றிருந்தான் அப்பனே...முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் அப்பனே எதை என்று சில விஷயங்கள் தெரியும் என்பேன் அப்பனே!!!

ஞானியவன் யார் என்பது உணர்ந்து கொள்வான் அவை மட்டும் இல்லாமல் யார் உண்மையானவன் யார் பொய்யானவன் என்பதை எல்லாம் அப்பனே உணர்ந்து கொள்வார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!! 

நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதை என்று அறிய இதனால் அவன்(சிவாஜி) அறிந்து கொண்டான் இவ் ஞானியைப் பற்றி!!!!!

ஆனாலும் வந்தான் எதை என்று அறியறிய மெதுவாகவே வந்து எதை என்று அறிய அறிய... இனிப்புகளை கொடுத்தான் எவை என்று ஆனாலும் இவ் ஞானி... சரியாகவே வாங்கி உட்கொண்டான் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே சிவாஜிக்கு பல பல பிறப்புகளும் இருந்தது அப்பனே இருந்துள்ளது என்பேன் அப்பனே ஆனாலும் இதைப் பற்றி இப்பொழுது விளக்கவில்லை என்பேன். அப்பனே இன்னும் பல வழிகளில் கூட எப்படி எல்லாம் அவன் ஜெயித்தான் என்பதை கூட அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே!!! எதை என்று நம்பி !!நம்பி!!

ஆனாலும் அப்பனே பல உண்மைகள் கூட ஆனாலும் இவ் ஞானி.... நாராயணா நாராயணா நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் இங்குதான் உட்கார்ந்து அமைதியாகவே அப்ப நீ எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே இங்கும் பலத்த மழையப்பா!!!! எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே இவ்வாலயத்திலும் அதாவது நீங்கள் இப்பொழுது உட்கார்ந்திருக்கிறீர்களே (அடியவர்கள்) அப்பனே இவைகள் எல்லாம் நீர் நிலைகளால் சூழ்ந்ததப்பா!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் அவந்தனும் பின் அடியில் இருக்கின்றானப்பா!!!  இவ்வாறு எதை என்று கூற நமச்சிவாயா என்று பின் நிச்சயம் சொல்லும்போது நீர் இல்லை இங்கு என்பேன்!!! அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் போய்விட்டதப்பா!!!! 

(ஞானி தவம் மேற்கொண்டு இருந்த இடமெல்லாம் பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்து ஒட்டு மொத்த இடமும் வெள்ளக்காடு ஆயிற்று ஆனாலும் அவ் ஞானி தவத்தில் நமச்சிவாயா என்று மந்திரத்தை உச்சரித்து தவம் செய்த பொழுது சுற்றியிருந்த வெள்ளம் முழுவதும் வடிந்து விட்டது) 

ஆனாலும் அனைவருக்கும் ஆச்சரியங்கள் அப்பனே!!! எவையென்று அனைத்தும் நீரில் மூழ்கியிருக்க!!!!  இங்கு மட்டும் ஏன் என்று கூட!!!!!!  அனைத்தும்!!!

 அனைவரும் ஓடி வந்தார்கள்!! ஓடி வந்தார்கள் !!

பைத்தியன் இவன் என்று சொன்னவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து!!! 

அதனால் அப்பனே இவந்தன் எதை என்றும் அறிய ஞானி என்று ஒத்துக் கொண்டனர் அப்பனே எவை என்று கூட அனைவரும் மன்னிப்பு கேட்டனர் அப்பனே.....

இன்றிலிருந்து மகாராஜா என்று கூட அனைவரும் அழைத்தார்கள் அனைவரும் கூட அப்பனே... இதனால் மேன்மைகள்!!!! அப்பனே !!

அதனால் எதை என்று அறிய அறிய இங்கு எவை என்று கூட...... """ பஞ்சம் வருவது ஏற்கனவே ஈசனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!! 

ஆனால் இவந்தனை எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அதாவது நாடகத்தை நடத்தவே அனைத்தும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் உண்மைகள் அப்பனே இறைவன் ஒருவனுக்கு கஷ்டம் கொடுக்கின்றது எதற்காக என்றால் அப்பனே அனைத்தும் அறிவதற்காகவே!!!!

இவ்வாறு எதை என்று அறிய அறிய யார் மூலம் எதை ஏற்படுத்த வேண்டும் எதை ஏற்படுத்தக் கூடாது என்பதை எல்லாம் நிச்சயம் இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே தாங்கிக் கொண்டு தாங்கிக் கொள்ள மனோபலம் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி இருந்து விட்டால் அவந்தன் நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால்தான் அப்பனே மேற்சொன்ன வார்த்தைகள் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நன்மைகள் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் அப்பனே நீண்டு கொண்டே செல்கின்றது அப்பனே இதனால் தான் அப்பனே பல பல உண்மைகளை கூட அப்பனே எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!! 

இதனால் தான் அப்பனே எவை என்று கூட ஆனாலும் இவ் ஞானி எதை என்று அறிய அறிய பட்டினி எவை என்று கூட பஞ்சம் மிகுதியாக வந்துவிட்டது நோய்களும் பற்றிக் கொண்டது என்பேன் அப்பனே இதனால் அப்பனே இவ் ஞானி எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்கும் நல்லதை செய்தான் என்பேன் அப்பனே!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்கும் எதை என்று கூட நோய்களையும் நீக்கினான் என்பேன் அப்பனே!!! பசி எதை என்று அறிய அறிய அப்பனே வயிற்றுக்கு எவை என்று கூட அனைத்தும் ஈந்தான் என்பேன் அப்பனே!!!!!

இதனால் மனிதர்கள் இவந்தனை வைத்துக் கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே பல சாதனைகளும் புரிந்து விட்டனர் என்பேன் அப்பனே நலமாகவே எதை என்று அறிந்தறிந்து உயர்ந்த ஸ்தானத்தையும் எவை என்று கூட அடைந்து விட்டனர் என்பேன் அப்பனே

இப்பொழுது கூட இவந்தன் உடம்பு எதை என்று அறிய அறிய இல்லை...அப்பனே உயிர் மட்டும் எதை என்று அறிய அறிய அலைந்து திரிந்து அப்பனே இங்கேதான் சுற்றிக்கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

வருபவர்களுக்கு எல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

இதனால் தான் அப்பனே ஞானிகளை சந்தியுங்கள் சந்தியுங்கள் அப்பனே!!!

ஒரு ஞானியவன் எப்படி எதை என்று அறிய அறிய அப்பனே மற்றவர்களுக்கு எவை என்று கூட ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இறைவனை தேடி தேடி அலைய வேண்டும் அப்பனே!!!! பைத்தியக்காரனாக வேண்டும் என்பதே எவை என்று கூட அப்பொழுது தான் ஞானியாக முடியுமே தவிர அப்பனே எதை என்று கூட!!!!

அனைத்தும் எவை என்று கூட சொகுசாக இருந்து விட்டு அப்பனே நிச்சயம் ஞானியும் ஆக முடியாது எவை என்று கூட இப்பொழுது எல்லாம் அப்பனே எவை என்று கூட உசுப்பேத்தி வருகின்றனர் அப்பனே!!!

பின் சுவடியில் எதை என்று கூட பின் எவை எவை என்று அறிய அறிய இவந்தன் ஞானி ஆகி விடுவான் மகரிஷி ஆகி விடுவான் சித்தன் ஆகிவிடுவான் என்று கூட அப்பனே நிச்சயம் முடியாதுப்பா!!!!

கலியுகத்தில் பொய்களப்பா பொய்களப்பா பொய்களைச் சொல்லிச் சொல்லி ஏற்கனவே ஏமாற்றி விட்டார்கள் மனிதர்கள் மனிதர்களை!!!

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனை எதை என்று கூட பல மனிதர்களும் நம்புவதே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்றெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால்தான் அப்பனே பல வழியில் கூட வெற்றிகள்அப்பனே சொல்லிவிட்டேன் அஷ்டமா சித்திகளில் முதல் வகுப்பு என்னவென்று கூட அப்பனே அதை ஒருவனாலும் செய்ய முடியாதப்பா பொய்களப்பா இதை நீங்கள் நிச்சயம் உணர வேண்டும் அப்பனே அனைத்தும் பொய்களப்பா!!!

எவை என்று அறிய அறிய அப்பனே என்னை வைத்துக் கொண்டே பல பொய்யும் கூறுகின்றனர் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதை வருங்காலத்தில் நிச்சயம் அவர்களுக்கு புரிய வைப்பேன்!!!

ஏற்கனவே புரிய வைத்திருக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

 ஏனப்பா???? இந்த வேலை!??

எதை என்று அறிய அறிய அப்பனே உன் வேலையை அதாவது உன் கடமையை நீ செய்தாலே அப்பனே யான் எவை என்று அறிய அறிய வருவேனப்பா!!! இது நிச்சயம்!!! இது சத்தியம்!!! அப்பனே!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே இத்திருத்தலத்திற்கு பல மகிமைகள் உண்டு என்பேன் அப்பனே!!!

ஆனாலும் கெடுத்து விட்டனர் அப்பனே வர வர!!!!

 இங்கு வந்து ஏதாவது எதை என்று கூட எவை என்று அறிய அறிய அப்பனே காதல் செய்கின்றார்கள் அப்பனே பல வழிகளில் அப்பனே பொழுதுபோக்காக வருகின்றனர் பலர் ஆனால் அவையெல்லாம் உருப்படாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

உண்மையானவர்கள் யார் எவர் என்று அறிய அறிய வருகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே!!!!

அவந்தன் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் !!! ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே மனிதனுக்கு தெரிவதில்லை!!!

 தெரிவதே இல்லையப்பா!!!

புத்திகள் இல்லையப்பா!!!

அதனால்தான் எவை என்று அறிய அறிய பல சித்தர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதர்களை திட்டியும் தீர்த்து எதை என்று அறிய நல்வழி அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய எங்கள் வழியில் வருபவர்களுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்று கூட சில கஷ்டங்களை ஏற்படுத்தி அப்பனே இறைவனை எதை என்று அறிய அறிய எப்படி எல்லாம் என்பதையும் கூட நிச்சயம் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே அனைத்தும் மனிதர்களுக்கு எது பொய் எது உண்மை என்றெல்லாம் சொல்லிவிடுகிறேன் அப்பனே அறிவியல் ரீதியாகவே !!!அப்பனே எதை என்று அறிய அறிய!!!

எங்களைத் தவிர அப்பனே யாராலும் பின் நோயையும் குணப்படுத்த முடியாது எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் சித்துக்களையும் கொடுக்க முடியாது!!!

அப்பனே எவை என்று கூட வருவார்களப்பா!!! திருடர்களப்பா!!!

சுவடிகளை வைத்துக்கொண்டு அப்பனே அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன். என்றெல்லாம் அப்பனே பொய்களப்பா!!! பொய்களப்பா!!

ஒன்றும் முடியாதப்பா!!!!

ஆனால் அவன் எதை எதை என்று அறிய அறிய சரியாகவே அப்பனே கர்மத்தை சம்பாதித்து கர்மமாக வைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் கடைசியில் அடித்தால் அப்பனே அவனும் தாங்க முடியாது!!!

யான் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் நிச்சயம் தன் வினை தன்னைச் சுடும் என்பதை எல்லாம் அப்பனே ஏற்கனவே முன்னோர்கள் உரைத்த வாக்கு அப்பனே!!!

யானே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே நிச்சயம் இவையெல்லாம் தெளிவு பெற வேண்டும் அப்பனே தெளிவு பெற்று இருந்தால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகள் பெற முடியும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் அப்பனே இவந்தன் உயர்ந்த ஞானி ஆவான்!!! எப்படி ஞானி என்பதையெல்லாம் அறிய அறிய அப்பனே யார் ஒருவன் பல மக்களுக்கு எதை என்று அறிய  தன் நிலைமையை அறியாமல் செய்கின்றானோ அவன் தான் ஞானி!!!!

ஆனாலும் அப்பனே இன்று ஞானி என்று பெயருக்கு முன்னே சூட்டிக் கொள்வது!!!

அப்பனே சித்தன் என்று பின் பெயருக்கு பின்னால் இட்டுக் கொள்வது!!!

அப்பனே ரிஷி என்று அப்பனே..... இவையெல்லாம் எவை என்று அறிய!!!!!.............. இதனால் தான் அடிப்பது!!!..............( தண்டனைகள்) என்பதெல்லாம் நிச்சயம் சித்தர்கள் அப்பனே அடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் திருந்துவதே இல்லை அப்பனே!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் தான் மேன்மைகள் என்னுடைய ஆசிள் அப்பனே.. எவை என்று கூட இன்னும் பல திருத்தலங்கள் இருக்குதப்பா பல சூட்சுமங்கள் அங்கெல்லாம் சென்றிட்டால் தான் அப்பனே கர்மங்கள் குறையும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே

பணம் சம்பாதிப்பதற்கு அப்பனே எவை என்று கூட அங்கும் இங்கும் திரிந்தால்தான் உயர்வுகள் ஏற்படுகின்றது!!!!...... ஆனால் ஏனென்றால் அப்பனே பணம் பணம் என்று ஏன் ? எதனால் ?இங்கு முதலில் குறிப்பிடுகின்றேனே!!!!!!!!!

அப்பனே முதலில் மனிதனுக்கு எவை என்று அறிய அதன் மேல் தான் பற்று என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அதை( குறிப்பிட்டு) வைத்துக்கொண்டே வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே!!!

அதைத் தேடி அலைகின்ற உந்தனுக்கு பல ஞானிகளையும் ரிஷிகளையும் தேடி அலைய தெரியவில்லை அப்பனே!!!

எப்படி?? அலைய வேண்டும் என்பதை கூட யான் வருங்காலங்களில் சொல்கின்றேன் அப்பனே!!!அப்படி அலைந்தால் தான் அனைத்தும் நடக்கும் அவன் வாய்ச்சொல்லும்( வாக்கு) பலிக்கும்!!! மற்றவை எல்லாம் பலிக்காது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே பின் பொய் கூறி புறம் கூறித்தான் பின் எதை என்று அறியாமலே இப்பொழுது அனைவருமே பொய் கூறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் மனிதர்கள்!!

அப்பனே அதனால் மனிதனை யான் திருடன் திருடன் !!!.... என்றெல்லாம் ...........கோடி திருடனப்பா!!! உலகத்தில்  பக்தியை வைத்துக்கொண்டு அப்பனே!!!! அவனையெல்லாம் எப்படி நசுக்குவது??? என்பதையெல்லாம்!!..............

சித்தர்கள் எவை என்று அறியாமலே அப்பனே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே நிச்சயம் அனைத்து ஞானியர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய அறிய இன்னும் மக்களுக்கு இங்குள்ள எதை என்று கூட இரவில் தெரியாமலே இவன்தன் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றான்( ஞானி) அப்பனே அதனால் எவை என்று கூட பழைய காலத்தில் எதை என்று உணர்ந்து உணர்ந்து உயர் பெரிய ஸ்தானத்தில் வாழ்ந்து வந்தார்கள் அப்பனே ஞானியை பிடித்து(பின்பற்றி கடைபிடித்து) அப்பனே!!!

இன்றும் கூட அங்கங்கு தங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்(ஞானிகள் ஜீவசமாதி) அப்பனே அங்கெல்லாம் சென்று வழிபட்டால் தான் அப்பனே உன் கர்மமும் போகும் அப்பனே எதை என்று அறிய சுகமான வாழ்வும் அமையும்!!!

இருக்கும் இடத்திலேயே எந்தனுக்கு சுகமாக வாழ்வு வேண்டும் வேண்டும் என்றால் அப்பனே!!! 

இது நியாயமா??? என்ன!!!!

அப்பனே!! நிச்சயம் கொடுக்கவும் முடியாது!!!

எதை என்று அறிந்தறிந்து.......  அலைந்து திரிந்து அப்பனே எவை என்று கூட கஷ்டங்கள் பட்டால் தான் அனைத்தும் கிட்டுமே தவிர!!!.......
ஓரிடத்தில் இருந்து கொண்டு அப்பனே எதை என்று கூட அனைத்தும் தா!!!!!!!! என்றால்??!!!...... கர்மம் தான்... எவை என்று கூட நீங்கள் ஈர்த்துக் கொள்வீர்கள்!!

அப்படி தான் கர்மத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே அது தெரியும் இது தெரியும் என்று கூட!!!!!

ஆனால் தெரிந்தாலும் ஒன்றும் லாபம் இல்லையப்பா!!! எவை என்று கூட எதை என்று கூட ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!
யாருக்கும் உபயோகம் ஆகாது!!!!

ஏனென்றால் எதை என்று கூட இன்றைய நிலையில் அப்பனே அதைச் செய்தால் அதாவது இறைவனை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று பல பேர் இறைவனை வைத்துக் கொண்டு எதை என்று அறிய எதை எதையோ செய்யலாம் என்று கூட!!!

ஆனால் முடியாதப்பா!!!

கலியுகத்தில் இறைவன் எதை என்று அறிய அறிய உடனுக்குடன் தண்டனை கொடுப்பான் கொடுப்பான் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே எவை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்று கூட இவந்தன்!!! ஒரு பாடலை பாடினான் இதற்கு அர்த்தங்கள் என்ன கூறும்!!!!

இதையென்று!!
 மறந்தென்று!!
உண்டென்று!!
இல்லை என்பது
இல்லை என்பது வந்து விட்டால்!!!

வந்துவிட்டது போய்விடுமா என்ன???

போய்விட்டு வந்து விட்டால் அங்கே இருப்பது என்ன??

என்னென்னவென்று ஏறிக்கொண்டு திரிந்து கொண்டு அலைகின்றார்களே!!!

ஒரு எவையென்றும் புரியவில்லையே!!!

புரிந்து கொண்டும்  வாழ!!
வாழ கற்றுக் கொடுத்துக் கொண்டும் இன்னும் ஞானிகளா!!!

ஞானிகளையும் பின்பற்றுகின்றானா?? மனிதன்!!??
 மனிதன் 
மனிதனையே நினைப்பதுண்டு!!!

தோல்விகள்
 பயந்து ஓடியது 
என்றும் கூட வெறுப்பதுண்டா???

வெறுப்பதுண்டு!!
 எதனை என்று நினைப்பதுண்டு நினைப்பதற்கும்
 வழிகளில் எதனை நினைப்பது? என்பதை அறியவில்லையே!! மானிடனே !!

மானிடனே
இன்னும் சில வருத்தங்கள் கஷ்டங்கள் எதை என்றும் இட்டு போய் சேர்ந்து விடுவான்!!! 

போய்!!  இறைவனை சேர்வதில்லையே!!
உண்மை நிலைகளை தெரிந்து தெரிந்து அலைந்து புரிந்து கொண்டாலே உண்மை நிலைகள் வந்தடையுமே!!

வந்தடையுமே ஏனப்பா எதை என்றும் புரியாமல் வாழ்கின்றார்களே!!

பைத்தியனே மனிதனே
பைத்தியனே மனிதனே

நினைத்து நினைத்து உருகுதய்யா இறைவன் முன்
எதையென்றும் புரியாமலே இவனென்று வருகையில் 
வருவானா???  எதை என்று யூகங்கள் தருவானா???

பல மனிதர்கள் இதை என்றும் நினைக்காமலே நினைத்திருந்தும் பலிக்காது பலிக்காது பலித்திருந்தும் உருப்படாது உருப்படாது.. என்ற நிலை இருக்கின்றதே என்றும் நிலையை மறவாது!!!

என்ற பாடலைக் பாடித்தான் இவந்தன் எவை என்று கூட இப்பாடலை தான் பாடுவான்!!!

அனைவரும் ஏதோ பாடலை பாடிக் கொண்டிருக்கின்றான் பைத்தியக்காரன் என்று நினைத்து கொண்டிருந்தார்கள்!! 

ஆனால் இவ் ஞானி!!!!!! இன்னும் பல வழிகளில் கூட இங்கெல்லாம் திரிந்து பல மோட்சங்களை பல மனிதர்களுக்கு கொடுத்துள்ளான் அப்பனே இவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

நலம் என்னுடைய ஆசிகள்!!! ஆசிகள்!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே சிவாஜி நகரில் ஜே எம் ரோடு இல் அமைந்துள்ளது ஜாங்கிலி மகாராஜ் ஜீவசமாதி... பரபரப்பான நகரத்தின் நடுவே அமைதியான சூழ்நிலையில் சுற்றிலும் அடர்ந்த ஆல மரங்கள் அரச மரங்கள் நந்தவனம் இதனுடன் கூடிய மிகவும் சாந்தியையும் அமைதியையும் தரும் ஜீவ சமாதி கோயில் இது. பக்தர்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்து தியானங்கள் செய்து நல்லருள்களை பெறுகின்றார்கள். ஜாங்கிலி மகாராஜ் ஜீவசமாதிக்கு அருகே பாதாளேஸ்வரர் குடைவரை கோயில் அமைந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த குகை கோயில் மிகவும் தொன்மையானது கற்பாறைகளை குறைந்து அமைக்கப்பட்ட இந்த கோயில் எதிரே யானை தூண்கள் மற்றும் பிரம்மாண்ட நந்தி குற்றச்சல் மண்டபம் என எந்தவித கட்டுமானம் இல்லாமல் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜீவா சமாதியின் நுழைவாயில் வழியாகவும் பாதாளேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லலாம்.. ஜீவசமாதிக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருகின்றார்கள் என்றால் குகை கோயிலுக்கு கல்லூரி மாணவர் மாணவியர் மற்றும் சுற்றுலாப் பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.

முகவரி

சத்குரு ஸ்ரீ ஜங்கிலி மகாராஜ் சமாதி கோவில்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்து கோவில் 
ரெவின்யூ காலனி, சிவாஜிநகர், புனே, மகாராஷ்டிரா 411005

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment