​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 8 April 2023

சித்தன் அருள் - 1320 - அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு!

 

உண்மையான ஆன்மீகவாதியை எப்படி தெரிந்து கொள்வது என்ற புரிதல் தரும் வாக்கு. (நல்லோர்கள் ஏமாறாமல் பிழைத்துக்கொள்க)

அப்பனே மனிதனுக்கு திறமைகள் இருந்தாலும், ஆனால் அத்திறமைக்கு காரணம் இறைவனே என்று நினைப்பது இல்லை, மனிதன். அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே! இறை பலத்தைக்கூட இறைவன் இல்லை என்ற நிலமைக்கு மனிதன் வந்து விட்டு இறைவனை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கூட இனிமேலும் யோசிப்பான். சோம்பேறி மனிதன். சோம்பேறியாக திரிந்து கொண்டு எதன் மூலம் பணம் ஈட்டலாம் வாழலாம் என்று உணரந்தால், இறைவனை பற்றிக் கொண்டால் நிச்சயம் உயர்ந்தவனாகி விடலாம் என்று கூட நினைத்து, யான் நிச்சயம் பெரியவன் எந்தனுக்கே அனைத்தும் தெரியும் யான் அனைத்தும் கற்றுத் தருகின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி நடிப்பார்கள் அப்பனே! அப்படிப்படவர்களை நிச்சயம் எப்போதும் நம்பிவிடாதீர்கள். 

அப்பனே! ஓர் உண்மையானவன் எதையும் பேச மாட்டான் அப்பனே! அமைதியாக இருப்பான். எல்லாம் இறைவன் செயல் என்று கூறுவான். அப்படிப்பட்ட மனிதன்தான் உண்மையான மனிதன் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!

மற்றவை எல்லாம் யான் அனைத்தும் எந்தனுக்கு தெரியும். அனைத்துமே தெரியும். ஈசனுடன் பேசுகின்றேன். இவை எல்லாம் பின் கற்ப்பனையா இதையன்றி கூற அகத்தியனிடம் பேசுகின்றேன். என் கண்ணின் நேரில் நின்றான் ( அகத்தியன் ). எதையன்று கூற இன்னும் பல பல விசயங்கள் அனைத்தும் யான் கற்று உணரந்தவன் என்று கூறுபவன் முதல் திருடன். இதை எல்லாம் யான் உங்களுக்கு சொல்லி விட்டேன். திரும்பவும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள் அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment