​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 30 April 2023

சித்தன் அருள் - 1330 - அகத்தியப்பெருமானின் பொதுவாக்குக்கான கேள்விகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இதற்கு முன் நம் குருநாதர் பலமுறை அகத்தியர் அடியவர்களின், பொதுவான கேள்விகளுக்கு திரு. ஜானகிராமனிடம் உள்ள ஜீவநாடி வழி, பதில் உரைத்துள்ளார். ஆன்மிகம், கோவில்கள், பெரியவர்களின் வாக்குகளுக்கு. பொதுவான பதில்களை நாம் அவரிடம் கேட்கலாம். பொதுவாக்கின் உள்ளே தனிப்பட்ட விஷயங்களை திணித்து கேட்பதற்கு வழியில்லை.

கூடிய விரைவில், அகத்தியப்பெருமானை நாடியில் சந்தித்து, சந்தேகம் தீர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு அடியேனுக்கு அமையும் என நினைக்கிறேன். ஆகவே, அகத்தியப்பெருமானிடம் பொது விஷயங்களில் கேள்வி கேட்க விரும்புகிறவர்கள் agnilingamarunachalam@gmail.com என்கிற மெயில்க்கு தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கேள்விகள் 

  1. பொது விஷயமாக இருக்கட்டும்!
  2. கேள்விகள் சுருக்கமாக தெளிவாக இருக்க வேண்டும்!  
  3. தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தெளிவாக தட்டச்சு செய்யலாம்.
  4. தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை அனுப்ப வேண்டாம்! அடியேன் விலக்கிவிடுவேன், பின்னர் அடியேனை திட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
  5. கேள்வி கேட்டவரின் பெயர். ஊர், தொடர்பு விஷயங்கள் எந்த காரணத்தாலும் சித்தன் அருள் வலைப்பதிவில் வெளியிடப்படாது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பிக்கப்படும்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1329 - மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி நடத்திய திருவிளையாடல்!









மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி நடத்திய திருவிளையாடல்

29/4/2023 இன்று சனிக்கிழமை அகத்திய அடியவர்கள் சார்பில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

வந்தவாசி சிவனடியார்கள் குழு நேற்றைய தினத்தில் சிறுமிகள் பெண்ணடியவர்கள் குழு திருவண்ணாமலை கொடுக்க இன்று சிறுவர்கள் அடியார்கள் வந்தவாசி சென்று நீர்மோர் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலில் ஆலயத்திற்கு அம்மனை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சுமார் 2000 பேர் அளவிலான பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

நீர்மோர் வழங்கி முடித்தவுடன் அடியவர்கள் குழு தேவியை மனதில் எண்ணி துதித்து விட்டு வந்தவாசி திரும்பவும் கிளம்பினர். 

திரும்பி கிட்டத்தட்ட ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் வந்தவுடன் அடியவர்கள் குழு மேற்பார்வையாளர் அவருடைய கைப்பையையும் தன்னுடைய காலணியையும் ஆலயத்தின் அருகிலேயே விட்டு வைத்தது நினைவுக்கு வர உடனடியாக வண்டியை திருப்பச் சொல்லி என்னுடைய ஹேண்ட் பேக் மற்றும் காலணி எடுக்க வேண்டும் திரும்பவும் சென்று எடுத்துக் கொண்டு வருவோம் என்று சொல்லி வண்டியை திருப்பி ஆலயத்தின் அருகே வந்த பொழுது!!!!!

நல்ல  மங்களகரமான தோற்றத்தில் நெற்றி பொட்டில் பெரிய குங்குமம்!!!! மலர் சூடி நல்ல தேஜசுடன் வந்து எல்லோருக்கும் மோர் வழங்கினாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை????

எனக்கும் மோர் வேண்டும்!!! என்று கேட்க

அந்த அடியவரும் அம்மா மோர் அனைவருக்கும் கொடுத்தாயிற்று அம்மா. மோர் தீர்ந்தும் விட்டது! நாங்கள் இப்பொழுது ஊருக்கு திரும்பி போய்க் கொண்டிருக்கின்றோம் என்று கூற

அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு மோர் வேண்டும் அந்த பாத்திரத்தில் இருக்கும்! எப்படியாவது எனக்கு ஒரு கிளாஸ் மோராவது வேண்டும் என்று கேட்க நீ மோர் தரும் வரையில் இங்கேதான் நான் அமர்ந்திருப்பேன் எப்படியாவது எனக்கு வேண்டும் என்று அம்மா கட்டாயமாக கூற

அந்த அடியவரும் வாகனத்திற்கு திரும்பி பாத்திரத்தில் எஞ்சியுள்ள மோரை சேகரித்து பார்த்தால் ஒரு டம்ளர் அளவிலான மோர் இருந்தது!!!

அனைவருக்கும் மகிழ்ச்சி ஏனென்றால் பாத்திரத்தில் இருந்த கடைசி துளி வரை எடுத்து சேகரித்த பொழுது ஒரு கிளாஸ் மோர் சேர்ந்து விட்டது.

எப்படியோ மோர் அந்த அம்மாவிற்காக கிடைத்து விட்டது என்று வாகனத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அந்த அம்மையை தேடி பார்த்தால் அந்த அம்மையை காணவில்லை!!!!

இது என்ன வியப்பாக இருக்கின்றது மோர் கேட்டுவிட்டு அடம் பிடித்து விட்டு இப்பொழுது அந்த அம்மாவை காணவில்லையே என்று திகைப்புடன் சுற்றிலும் முற்றிலும் தேடிப் பார்க்க!!!!!

விறுவிறுவென எட்டு வயது முதல் பத்து வயது வரை மதிக்கத்தக்க ஒரு சிறுமி பச்சை சட்டையும் பச்சை பாவாடையும் அணிந்து அடியவரை நோக்கி வந்து!!!!

மோரை தா!!!!!! எனக்காக தான் அந்த அம்மா மோரை கேட்டார்கள் கொடு!!!! என்று டம்ளரோடு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் அந்த சிறுமி!!!!!

அடியவருக்கோ ஒரே அதிசயம்!!!!

என்னடா இது மோரை கேட்டதோ ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி

ஆனால் எனக்காக தான் கேட்டார்கள் என்று ஒரு சிறுமி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்களே என்று எண்ணி கொண்டே சரி நம்முடைய கடமை நல்லபடியாக நம் குருநாதர் உத்தரவுப்படி செய்து விட்டோம் என்று வண்டி ஏறி வரும் பொழுது இதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அடியவருக்கும் புரிந்தது இது அன்னையின் திருவிளையாடல் என்று!!!!

மெய் சிலிர்த்து விட்டார் அடியவர்!!!!

இந்த பணியை ஆர்வத்துடன் செய்தது சிறுவர்கள் அந்த அடியவரும் சிறுவன் தான் !!!

பக்தி பாவத்தோடு குருநாதர் கூறியதை முறையாக கடைப்பிடித்து ஆலோசனைகள் பெற்று நல்லபடியாக செய்து முடித்ததற்கு கடைசியாக தேவியே வந்து மோரை உட்கொண்டு திருவிளையாடல் செய்தது மிகவும் அதிசய அற்புத அனுபவம்.

குருநாதர் கூறிய உத்தரவை கடைப்பிடித்து இந்த சேவைகளில் ஈடுபட்டு எங்கெங்கோ இருந்து நன்கொடைகள் வழங்கி உதவும் அடியவர்களுக்கும் பல்வேறு சூழ்நிலையிலும் பணிச் சூழலிலும் அடியவர்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகளை செம்மையாக நடைபெற ஆலோசனைகள் செய்தும் சரியான முறையில் வழி நடத்தும் அனைத்து அடியவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

அங்காள பரமேஸ்வரியின் திருவருளும் அப்பன் அகத்தியன் பேரருளும் நிரம்பப்பெற்று அனைவரும் வாழ்க வளமுடன்

அம்மா சரணம் அங்காள பரமேஸ்வரி சரணம் அகத்தியப்பா சரணம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்தரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 28 April 2023

சித்தன் அருள் - 1328 - அன்புடன் அகத்தியர் - ஜாங்லி மகாராஜ் ஜீவசமாதி!








11/3/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : சத்குரு ஜாங்லி மகாராஜ் ஜீவசமாதி / பாதாளேஸ்வரர் குகை கோயில். சிவாஜிநகர் புனே மகாராஷ்டிரா. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!  

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!! அப்பனே இவை இவை என்று அறிய அறிய அப்பனே அதாவது இப்பொழுது இவ் ஞானி!!! எங்கிருந்து வந்தான் என்பதையும் கூட விளக்கப் போகின்றேன் அப்பனே!!!!

இவ்வாறு உயர் ஞானிகளையும் கூட அடைந்தால்தான் அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே அனைத்து சித்துகளும் கிடைக்கும் அப்பனே பின் அங்கங்கு இருந்து தவம் செய்தாலும் எதை என்று அறிய அறிய அப்பனே முயற்சிகள் செய்ய வேண்டும் அலைந்து திரிய வேண்டும் அப்பனே... பைத்தியமாக ஆக வேண்டும் அப்பனே... ஞானி என்பவன் எதை என்று அறிய அறிய அப்பனே பின் பட்டம் கிட்டாதப்பா!!!!!!

பட்டம் என்றால் எதை என்று அறிய அறிய இன்றளவு ஆனாலும் அப்பனே அனைத்தும் மாயங்களாக போய்க் கொண்டிருக்கின்றது இதனை எப்படி என்று அறிய அறிய அப்பனே அதனால் தான் சொல்லப் போகின்றேன் அப்பனே!!

இவ் ஞானியவன் எதை என்று அறிய அறிய அப்பனே முதலில் அண்ணாமலையிலே இருந்தவன் என்பேன்!!!!

அப்பனே இதை அறிந்து அப்பனே ஆனாலும் அங்கு கூட ஈசனை நினைத்து நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான் அப்பனே அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிந்தறிந்து அப்பனே நாராயணனை கூட இவந்தனுக்கு அப்பனே..... அங்கும் இங்கும் அதாவது( திருவண்ணாமலை திருப்பதி திருமலை) தற்பொழுது பின் எவை என்று அறிய ஏழுமலையான் இடத்திலும் கூட சென்று கொண்டே இருந்தான் அப்பனே!!!

ஆனாலும் வருத்தங்கள்!! வருத்தங்கள்!! உணவில்லாமலும் கூட அப்பனே ஆடைகளும் கூட இல்லையப்பா!!!!! இதனால் சுற்றித்திரிந்து அதாவது எதை என்று அறிய மீண்டும் அண்ணாமலைக்கு வந்துவிட்டான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து இதனால் உடுக்க ஆடையும் இல்லை அப்பனே இதனால் எவை என்று அறிய அறிய அப்படியே( நிர்வாண ரூபம்) இருந்தான் அப்பனே!!!! இவ்வாறு என்பதைக் கூட சிறு குழந்தை எப்படி இருக்கின்றதோ அப்படியே இருந்துவிட்டான் அப்பனே!!!!

ஆனாலும் அனைவரும் அப்பனே இவந்தனை பைத்தியம்!! பைத்தியம்!! என்று அப்பனே அனைவரும் வந்து எதை என்று திட்டி தீர்த்தனர் அப்பனே அடித்தும் சில மனிதர்கள் இவந்தனை கொன்று விடலாம்.... இவன் இருந்தால் எதை என்று அறிய அறிய ஒரு லாபமும் இல்லை என்று நினைத்து ஆனாலும் இவந்தனை எதை என்று அறிய அறிய பின் அதாவது நடு இரவிலே வந்து எவை என்று புரியாமலே பின் எதை என்று அடித்து நொறுக்கி எங்கேயோ தெரியாமலே புதருக்குள் அதாவது போட்டு சென்று விட்டனர்!!!

ஆனாலும் அறிந்தறிந்து ஈசனும் வந்தான் முதியவன் வேடம் அணிந்து!!!

 பின் எவை என்று அறிய அறிய பின்பு ஆடைகளை அணிவித்து மீண்டும் இவந்தனுக்கு பிறப்பு கொடுத்து எதை என்று அறிந்து எங்கேயாவது சென்றுவிடு எதை என்று அறிந்து அறிந்து ஈசன் பார்த்துக் கொள்வான் என்று நிச்சயம் ஈசனே அண்ணாமலையை விட்டு!!!
( அவ் ஞானிக்கு உயிர் மீண்டும் தந்து நீ அண்ணாமலையை விட்டு எங்கேயாவது சென்று விடு உன்னை ஈசன் பார்த்துக் கொள்வான் என்று அந்த முதியோர் வேடத்தில் வந்த ஈசன் ஞானியைப் பார்த்து கூறிவிட்டார்.)

ஆனாலும் பின் வந்தான் எதை என்று அறிய அறிய இங்கு( புனே மகாராஷ்டிரா) நோக்கி அமர்ந்தான் அதாவது இங்கே வந்து விட்டான் அறிந்தறிந்து ஆனாலும் இங்கே பாஷைகள் பலவாறு!!!!!( வடமொழி மராட்டி) ஆனாலும் இவந்தனுக்கு புரியவில்லை..... எவ்வாறு என்பது எவ்வாறு நினைத்தது எதை என்று அறிய அறிய.....

ஆனாலும் அப்பனே அப்பொழுது எதை என்று அறிந்து அறிந்து இங்கு தான் இருந்தானப்பா!!!

இப்பொழுது எவை என்று அறிந்து அறிந்து அப்பனே எதை என்று புரிந்து புரிந்து ஈசன் எதை என்று அறிந்து இப்பொழுது கூட அழகாக பின் கோமாதா நிற்கின்றது!!!

 ( ஜீவசமாதிக்கு அருகிலேயே பாதாளேஸ்வரர் ஈசன் கோயில் கற்றளி கடைவரை கோயில் நந்தி)

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் இங்கே தான் அவன் எதை என்று பார்ப்போம் என்று அமர்ந்து விட்டான் எதை என்று இவந்தன் நாமத்தில்( ஜெபத்தில்) அதாவது நாராயணா!! நாராயணா!! மீண்டும் நமச்சிவாயா !!நமச்சிவாயா!! என்றெல்லாம்!!

 இப்படியே ஆனாலும் வருபவர்கள் போகின்றவர்கள் எதை என்று அறிந்து ஏன் இவந்தனுக்கு யாருமே இல்லையா??? இவந்தன் ஒரு பைத்தியக்காரனாவே இருக்கின்றான்.... எவ்வாறு என்பதையும் கூட!!......

ஆனாலும் அமைதி காத்தான் பின் வருபவர்கள் வரட்டும் போகின்றவர்கள் போகட்டும் ஆனாலும் சில மனிதர்கள் எதை என்று அறிய அறிய பின் இவந்தனும் பெரிய ஞானியாக இருக்கின்றானே!!!!!! என்று ஆசீர்வாதங்களும் கூட பெற்று சென்று விட்டனர் ஆனாலும் அறிந்து அறிந்து இதையென்று புரிந்து புரிந்து!!!!ஆனாலும் இவந்தனுக்கு நிலைமைகள் மாறுபட்டு தான் கொண்டிருந்தது ஆனாலும் இப்படியே பல நாட்களும் கழிந்தது ஆனாலும் உணவுகள் எதையென்று  அறிந்தறிந்து இப்பொழுது பார்த்தீர்கள் எதை என்று அறிந்து இங்கே சிவன் இருக்கின்றானே!!!( அடியவர்கள் குருநாதர் வாக்கிற்கு முன்பாக பாதாளேஸ்வரர் தரிசனம்) இங்குதான் இப்பொழுது கூட அவன் நாமத்தைக் கூட சிவாஜி. என்கின்றார்கள்!!!

( சத்ரபதி சிவாஜி புனே அவருடைய கோட்டை அவர் பிறந்ததும் இங்கே புனே அருகில் தான்)

 எதை என்று கூட அவந்தன் இங்கு வந்து வந்து வெற்றிகள் பல பெற்று விட்டான் ஆனாலும் எதை என்று அறிய அறிய இவ் மானிடன்(சிவாஜி) எதை என்று அறிய அறிய இவ் ஞானியையும் பார்த்தான்!!

ஆனாலும் பின் அதாவது எதை என்று அறிந்தறிந்து பின் அவந்தனுக்கு தெரியும் அனைத்தும் கூட எவை என்று அறிய அறிய ஏனென்றால் இதனை என்று கூட இப்பொழுதும் கூட அஷ்டமா சித்துக்கள் என்கின்றார்கள் அவைகள் எல்லாம் பொய்களப்பா!!!!

முதல் அஷ்டமா சித்திகளில் எதையென்று அறிய அறிய தோல்விகள்!!! எவை என்று அறிய அறிய அப்பனே முதலில் வருவது அப்பனே பின் அதாவது நெருப்பில் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நெருப்பினில் உட்கார்ந்தால் அப்பனே பின் எதை என்று கூட தன்னை ஒரு இதுவும் கூட அதாவது சிறு தீ கூட பின் தொடாது என்பேன் அப்பொழுதுதான் அப்பனே முதல் முதல் யோகத்தில் வெற்றி பெற்றுள்ளான். என்பேன் அப்பனே!!!

(அட்டமா சித்துக்களில் முதல் சித்து நெருப்பை அடக்கி ஆளுதல் நெருப்புக்குள் இருந்தாலும் தீ நம்மை சுடாது அடக்கி வைக்கும் தன்மை)

ஆனால் இன்றைய மனிதர்கள் அப்பனே அஷ்டமா சித்துக்கள் மனிதர்களுக்கு வரும் வரும் என்பதை எல்லாம் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

 நிச்சயம் வராது!!!! வராதப்பா!!!!! 

எங்கள் அருள்கள் இருந்தால் தான் வருமப்பா!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்தறிந்துஅப்பனே அதனால் அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்கள் பித்தலாட்டக்காரர்கள் அப்பனே இவை சொல்லிச் சொல்லித்தான் அப்பனே ஏமாற்றி விட்டார்கள் அப்பனே பல பல யுகத்திலும் கூட எதை என்று அறிந்தறிந்து 

ஆனாலும் இப்பொழுது கூட பின் வாய் கூசாமல் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!

"""" அஷ்டமா சித்துக்களை யாராலும் பெற முடியாது அப்பனே!!!!!

எங்கள் அருளிருந்தால் தான் பெற முடியும் அதிலும் முதல் வகுப்பு என்னவென்றால் அப்பனே நெருப்பில் உட்காருவது அப்பனே!!!!!

இல்லையப்பா!!! அப்படி இப்பொழுது யாரும் இல்லையப்பா!!!!

எதையென்று அறிந்தறிந்து அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால் கூட பல வழிகளிலும் கூட வருத்தங்கள்... ஆனாலும் அப்பனே நல்முறையாகவே மாற்றங்கள் உண்டு அப்பனே!!! 

அதனால் தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் அப்பனே இச் சிவாஜி என்பவன் இதை( அஷ்டமா சித்துக்களில் முதல் சித்தி) பெற்றிருந்தான் அப்பனே...முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் அப்பனே எதை என்று சில விஷயங்கள் தெரியும் என்பேன் அப்பனே!!!

ஞானியவன் யார் என்பது உணர்ந்து கொள்வான் அவை மட்டும் இல்லாமல் யார் உண்மையானவன் யார் பொய்யானவன் என்பதை எல்லாம் அப்பனே உணர்ந்து கொள்வார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!! 

நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதை என்று அறிய இதனால் அவன்(சிவாஜி) அறிந்து கொண்டான் இவ் ஞானியைப் பற்றி!!!!!

ஆனாலும் வந்தான் எதை என்று அறியறிய மெதுவாகவே வந்து எதை என்று அறிய அறிய... இனிப்புகளை கொடுத்தான் எவை என்று ஆனாலும் இவ் ஞானி... சரியாகவே வாங்கி உட்கொண்டான் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே சிவாஜிக்கு பல பல பிறப்புகளும் இருந்தது அப்பனே இருந்துள்ளது என்பேன் அப்பனே ஆனாலும் இதைப் பற்றி இப்பொழுது விளக்கவில்லை என்பேன். அப்பனே இன்னும் பல வழிகளில் கூட எப்படி எல்லாம் அவன் ஜெயித்தான் என்பதை கூட அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே!!! எதை என்று நம்பி !!நம்பி!!

ஆனாலும் அப்பனே பல உண்மைகள் கூட ஆனாலும் இவ் ஞானி.... நாராயணா நாராயணா நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் இங்குதான் உட்கார்ந்து அமைதியாகவே அப்ப நீ எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே இங்கும் பலத்த மழையப்பா!!!! எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே இவ்வாலயத்திலும் அதாவது நீங்கள் இப்பொழுது உட்கார்ந்திருக்கிறீர்களே (அடியவர்கள்) அப்பனே இவைகள் எல்லாம் நீர் நிலைகளால் சூழ்ந்ததப்பா!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் அவந்தனும் பின் அடியில் இருக்கின்றானப்பா!!!  இவ்வாறு எதை என்று கூற நமச்சிவாயா என்று பின் நிச்சயம் சொல்லும்போது நீர் இல்லை இங்கு என்பேன்!!! அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் போய்விட்டதப்பா!!!! 

(ஞானி தவம் மேற்கொண்டு இருந்த இடமெல்லாம் பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்து ஒட்டு மொத்த இடமும் வெள்ளக்காடு ஆயிற்று ஆனாலும் அவ் ஞானி தவத்தில் நமச்சிவாயா என்று மந்திரத்தை உச்சரித்து தவம் செய்த பொழுது சுற்றியிருந்த வெள்ளம் முழுவதும் வடிந்து விட்டது) 

ஆனாலும் அனைவருக்கும் ஆச்சரியங்கள் அப்பனே!!! எவையென்று அனைத்தும் நீரில் மூழ்கியிருக்க!!!!  இங்கு மட்டும் ஏன் என்று கூட!!!!!!  அனைத்தும்!!!

 அனைவரும் ஓடி வந்தார்கள்!! ஓடி வந்தார்கள் !!

பைத்தியன் இவன் என்று சொன்னவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து!!! 

அதனால் அப்பனே இவந்தன் எதை என்றும் அறிய ஞானி என்று ஒத்துக் கொண்டனர் அப்பனே எவை என்று கூட அனைவரும் மன்னிப்பு கேட்டனர் அப்பனே.....

இன்றிலிருந்து மகாராஜா என்று கூட அனைவரும் அழைத்தார்கள் அனைவரும் கூட அப்பனே... இதனால் மேன்மைகள்!!!! அப்பனே !!

அதனால் எதை என்று அறிய அறிய இங்கு எவை என்று கூட...... """ பஞ்சம் வருவது ஏற்கனவே ஈசனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!! 

ஆனால் இவந்தனை எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அதாவது நாடகத்தை நடத்தவே அனைத்தும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் உண்மைகள் அப்பனே இறைவன் ஒருவனுக்கு கஷ்டம் கொடுக்கின்றது எதற்காக என்றால் அப்பனே அனைத்தும் அறிவதற்காகவே!!!!

இவ்வாறு எதை என்று அறிய அறிய யார் மூலம் எதை ஏற்படுத்த வேண்டும் எதை ஏற்படுத்தக் கூடாது என்பதை எல்லாம் நிச்சயம் இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே தாங்கிக் கொண்டு தாங்கிக் கொள்ள மனோபலம் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி இருந்து விட்டால் அவந்தன் நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால்தான் அப்பனே மேற்சொன்ன வார்த்தைகள் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நன்மைகள் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் அப்பனே நீண்டு கொண்டே செல்கின்றது அப்பனே இதனால் தான் அப்பனே பல பல உண்மைகளை கூட அப்பனே எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!! 

இதனால் தான் அப்பனே எவை என்று கூட ஆனாலும் இவ் ஞானி எதை என்று அறிய அறிய பட்டினி எவை என்று கூட பஞ்சம் மிகுதியாக வந்துவிட்டது நோய்களும் பற்றிக் கொண்டது என்பேன் அப்பனே இதனால் அப்பனே இவ் ஞானி எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்கும் நல்லதை செய்தான் என்பேன் அப்பனே!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்கும் எதை என்று கூட நோய்களையும் நீக்கினான் என்பேன் அப்பனே!!! பசி எதை என்று அறிய அறிய அப்பனே வயிற்றுக்கு எவை என்று கூட அனைத்தும் ஈந்தான் என்பேன் அப்பனே!!!!!

இதனால் மனிதர்கள் இவந்தனை வைத்துக் கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே பல சாதனைகளும் புரிந்து விட்டனர் என்பேன் அப்பனே நலமாகவே எதை என்று அறிந்தறிந்து உயர்ந்த ஸ்தானத்தையும் எவை என்று கூட அடைந்து விட்டனர் என்பேன் அப்பனே

இப்பொழுது கூட இவந்தன் உடம்பு எதை என்று அறிய அறிய இல்லை...அப்பனே உயிர் மட்டும் எதை என்று அறிய அறிய அலைந்து திரிந்து அப்பனே இங்கேதான் சுற்றிக்கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

வருபவர்களுக்கு எல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

இதனால் தான் அப்பனே ஞானிகளை சந்தியுங்கள் சந்தியுங்கள் அப்பனே!!!

ஒரு ஞானியவன் எப்படி எதை என்று அறிய அறிய அப்பனே மற்றவர்களுக்கு எவை என்று கூட ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இறைவனை தேடி தேடி அலைய வேண்டும் அப்பனே!!!! பைத்தியக்காரனாக வேண்டும் என்பதே எவை என்று கூட அப்பொழுது தான் ஞானியாக முடியுமே தவிர அப்பனே எதை என்று கூட!!!!

அனைத்தும் எவை என்று கூட சொகுசாக இருந்து விட்டு அப்பனே நிச்சயம் ஞானியும் ஆக முடியாது எவை என்று கூட இப்பொழுது எல்லாம் அப்பனே எவை என்று கூட உசுப்பேத்தி வருகின்றனர் அப்பனே!!!

பின் சுவடியில் எதை என்று கூட பின் எவை எவை என்று அறிய அறிய இவந்தன் ஞானி ஆகி விடுவான் மகரிஷி ஆகி விடுவான் சித்தன் ஆகிவிடுவான் என்று கூட அப்பனே நிச்சயம் முடியாதுப்பா!!!!

கலியுகத்தில் பொய்களப்பா பொய்களப்பா பொய்களைச் சொல்லிச் சொல்லி ஏற்கனவே ஏமாற்றி விட்டார்கள் மனிதர்கள் மனிதர்களை!!!

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனை எதை என்று கூட பல மனிதர்களும் நம்புவதே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்றெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அதனால்தான் அப்பனே பல வழியில் கூட வெற்றிகள்அப்பனே சொல்லிவிட்டேன் அஷ்டமா சித்திகளில் முதல் வகுப்பு என்னவென்று கூட அப்பனே அதை ஒருவனாலும் செய்ய முடியாதப்பா பொய்களப்பா இதை நீங்கள் நிச்சயம் உணர வேண்டும் அப்பனே அனைத்தும் பொய்களப்பா!!!

எவை என்று அறிய அறிய அப்பனே என்னை வைத்துக் கொண்டே பல பொய்யும் கூறுகின்றனர் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதை வருங்காலத்தில் நிச்சயம் அவர்களுக்கு புரிய வைப்பேன்!!!

ஏற்கனவே புரிய வைத்திருக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

 ஏனப்பா???? இந்த வேலை!??

எதை என்று அறிய அறிய அப்பனே உன் வேலையை அதாவது உன் கடமையை நீ செய்தாலே அப்பனே யான் எவை என்று அறிய அறிய வருவேனப்பா!!! இது நிச்சயம்!!! இது சத்தியம்!!! அப்பனே!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே இத்திருத்தலத்திற்கு பல மகிமைகள் உண்டு என்பேன் அப்பனே!!!

ஆனாலும் கெடுத்து விட்டனர் அப்பனே வர வர!!!!

 இங்கு வந்து ஏதாவது எதை என்று கூட எவை என்று அறிய அறிய அப்பனே காதல் செய்கின்றார்கள் அப்பனே பல வழிகளில் அப்பனே பொழுதுபோக்காக வருகின்றனர் பலர் ஆனால் அவையெல்லாம் உருப்படாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

உண்மையானவர்கள் யார் எவர் என்று அறிய அறிய வருகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே!!!!

அவந்தன் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் !!! ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே மனிதனுக்கு தெரிவதில்லை!!!

 தெரிவதே இல்லையப்பா!!!

புத்திகள் இல்லையப்பா!!!

அதனால்தான் எவை என்று அறிய அறிய பல சித்தர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதர்களை திட்டியும் தீர்த்து எதை என்று அறிய நல்வழி அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய எங்கள் வழியில் வருபவர்களுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்று கூட சில கஷ்டங்களை ஏற்படுத்தி அப்பனே இறைவனை எதை என்று அறிய அறிய எப்படி எல்லாம் என்பதையும் கூட நிச்சயம் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே அனைத்தும் மனிதர்களுக்கு எது பொய் எது உண்மை என்றெல்லாம் சொல்லிவிடுகிறேன் அப்பனே அறிவியல் ரீதியாகவே !!!அப்பனே எதை என்று அறிய அறிய!!!

எங்களைத் தவிர அப்பனே யாராலும் பின் நோயையும் குணப்படுத்த முடியாது எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் சித்துக்களையும் கொடுக்க முடியாது!!!

அப்பனே எவை என்று கூட வருவார்களப்பா!!! திருடர்களப்பா!!!

சுவடிகளை வைத்துக்கொண்டு அப்பனே அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன். என்றெல்லாம் அப்பனே பொய்களப்பா!!! பொய்களப்பா!!

ஒன்றும் முடியாதப்பா!!!!

ஆனால் அவன் எதை எதை என்று அறிய அறிய சரியாகவே அப்பனே கர்மத்தை சம்பாதித்து கர்மமாக வைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் கடைசியில் அடித்தால் அப்பனே அவனும் தாங்க முடியாது!!!

யான் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் நிச்சயம் தன் வினை தன்னைச் சுடும் என்பதை எல்லாம் அப்பனே ஏற்கனவே முன்னோர்கள் உரைத்த வாக்கு அப்பனே!!!

யானே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே நிச்சயம் இவையெல்லாம் தெளிவு பெற வேண்டும் அப்பனே தெளிவு பெற்று இருந்தால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகள் பெற முடியும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் அப்பனே இவந்தன் உயர்ந்த ஞானி ஆவான்!!! எப்படி ஞானி என்பதையெல்லாம் அறிய அறிய அப்பனே யார் ஒருவன் பல மக்களுக்கு எதை என்று அறிய  தன் நிலைமையை அறியாமல் செய்கின்றானோ அவன் தான் ஞானி!!!!

ஆனாலும் அப்பனே இன்று ஞானி என்று பெயருக்கு முன்னே சூட்டிக் கொள்வது!!!

அப்பனே சித்தன் என்று பின் பெயருக்கு பின்னால் இட்டுக் கொள்வது!!!

அப்பனே ரிஷி என்று அப்பனே..... இவையெல்லாம் எவை என்று அறிய!!!!!.............. இதனால் தான் அடிப்பது!!!..............( தண்டனைகள்) என்பதெல்லாம் நிச்சயம் சித்தர்கள் அப்பனே அடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் திருந்துவதே இல்லை அப்பனே!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே இதனால் தான் மேன்மைகள் என்னுடைய ஆசிள் அப்பனே.. எவை என்று கூட இன்னும் பல திருத்தலங்கள் இருக்குதப்பா பல சூட்சுமங்கள் அங்கெல்லாம் சென்றிட்டால் தான் அப்பனே கர்மங்கள் குறையும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே

பணம் சம்பாதிப்பதற்கு அப்பனே எவை என்று கூட அங்கும் இங்கும் திரிந்தால்தான் உயர்வுகள் ஏற்படுகின்றது!!!!...... ஆனால் ஏனென்றால் அப்பனே பணம் பணம் என்று ஏன் ? எதனால் ?இங்கு முதலில் குறிப்பிடுகின்றேனே!!!!!!!!!

அப்பனே முதலில் மனிதனுக்கு எவை என்று அறிய அதன் மேல் தான் பற்று என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அதை( குறிப்பிட்டு) வைத்துக்கொண்டே வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே!!!

அதைத் தேடி அலைகின்ற உந்தனுக்கு பல ஞானிகளையும் ரிஷிகளையும் தேடி அலைய தெரியவில்லை அப்பனே!!!

எப்படி?? அலைய வேண்டும் என்பதை கூட யான் வருங்காலங்களில் சொல்கின்றேன் அப்பனே!!!அப்படி அலைந்தால் தான் அனைத்தும் நடக்கும் அவன் வாய்ச்சொல்லும்( வாக்கு) பலிக்கும்!!! மற்றவை எல்லாம் பலிக்காது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே பின் பொய் கூறி புறம் கூறித்தான் பின் எதை என்று அறியாமலே இப்பொழுது அனைவருமே பொய் கூறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் மனிதர்கள்!!

அப்பனே அதனால் மனிதனை யான் திருடன் திருடன் !!!.... என்றெல்லாம் ...........கோடி திருடனப்பா!!! உலகத்தில்  பக்தியை வைத்துக்கொண்டு அப்பனே!!!! அவனையெல்லாம் எப்படி நசுக்குவது??? என்பதையெல்லாம்!!..............

சித்தர்கள் எவை என்று அறியாமலே அப்பனே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே நிச்சயம் அனைத்து ஞானியர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய அறிய இன்னும் மக்களுக்கு இங்குள்ள எதை என்று கூட இரவில் தெரியாமலே இவன்தன் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றான்( ஞானி) அப்பனே அதனால் எவை என்று கூட பழைய காலத்தில் எதை என்று உணர்ந்து உணர்ந்து உயர் பெரிய ஸ்தானத்தில் வாழ்ந்து வந்தார்கள் அப்பனே ஞானியை பிடித்து(பின்பற்றி கடைபிடித்து) அப்பனே!!!

இன்றும் கூட அங்கங்கு தங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்(ஞானிகள் ஜீவசமாதி) அப்பனே அங்கெல்லாம் சென்று வழிபட்டால் தான் அப்பனே உன் கர்மமும் போகும் அப்பனே எதை என்று அறிய சுகமான வாழ்வும் அமையும்!!!

இருக்கும் இடத்திலேயே எந்தனுக்கு சுகமாக வாழ்வு வேண்டும் வேண்டும் என்றால் அப்பனே!!! 

இது நியாயமா??? என்ன!!!!

அப்பனே!! நிச்சயம் கொடுக்கவும் முடியாது!!!

எதை என்று அறிந்தறிந்து.......  அலைந்து திரிந்து அப்பனே எவை என்று கூட கஷ்டங்கள் பட்டால் தான் அனைத்தும் கிட்டுமே தவிர!!!.......
ஓரிடத்தில் இருந்து கொண்டு அப்பனே எதை என்று கூட அனைத்தும் தா!!!!!!!! என்றால்??!!!...... கர்மம் தான்... எவை என்று கூட நீங்கள் ஈர்த்துக் கொள்வீர்கள்!!

அப்படி தான் கர்மத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே அது தெரியும் இது தெரியும் என்று கூட!!!!!

ஆனால் தெரிந்தாலும் ஒன்றும் லாபம் இல்லையப்பா!!! எவை என்று கூட எதை என்று கூட ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!
யாருக்கும் உபயோகம் ஆகாது!!!!

ஏனென்றால் எதை என்று கூட இன்றைய நிலையில் அப்பனே அதைச் செய்தால் அதாவது இறைவனை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று பல பேர் இறைவனை வைத்துக் கொண்டு எதை என்று அறிய எதை எதையோ செய்யலாம் என்று கூட!!!

ஆனால் முடியாதப்பா!!!

கலியுகத்தில் இறைவன் எதை என்று அறிய அறிய உடனுக்குடன் தண்டனை கொடுப்பான் கொடுப்பான் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே எவை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்று கூட இவந்தன்!!! ஒரு பாடலை பாடினான் இதற்கு அர்த்தங்கள் என்ன கூறும்!!!!

இதையென்று!!
 மறந்தென்று!!
உண்டென்று!!
இல்லை என்பது
இல்லை என்பது வந்து விட்டால்!!!

வந்துவிட்டது போய்விடுமா என்ன???

போய்விட்டு வந்து விட்டால் அங்கே இருப்பது என்ன??

என்னென்னவென்று ஏறிக்கொண்டு திரிந்து கொண்டு அலைகின்றார்களே!!!

ஒரு எவையென்றும் புரியவில்லையே!!!

புரிந்து கொண்டும்  வாழ!!
வாழ கற்றுக் கொடுத்துக் கொண்டும் இன்னும் ஞானிகளா!!!

ஞானிகளையும் பின்பற்றுகின்றானா?? மனிதன்!!??
 மனிதன் 
மனிதனையே நினைப்பதுண்டு!!!

தோல்விகள்
 பயந்து ஓடியது 
என்றும் கூட வெறுப்பதுண்டா???

வெறுப்பதுண்டு!!
 எதனை என்று நினைப்பதுண்டு நினைப்பதற்கும்
 வழிகளில் எதனை நினைப்பது? என்பதை அறியவில்லையே!! மானிடனே !!

மானிடனே
இன்னும் சில வருத்தங்கள் கஷ்டங்கள் எதை என்றும் இட்டு போய் சேர்ந்து விடுவான்!!! 

போய்!!  இறைவனை சேர்வதில்லையே!!
உண்மை நிலைகளை தெரிந்து தெரிந்து அலைந்து புரிந்து கொண்டாலே உண்மை நிலைகள் வந்தடையுமே!!

வந்தடையுமே ஏனப்பா எதை என்றும் புரியாமல் வாழ்கின்றார்களே!!

பைத்தியனே மனிதனே
பைத்தியனே மனிதனே

நினைத்து நினைத்து உருகுதய்யா இறைவன் முன்
எதையென்றும் புரியாமலே இவனென்று வருகையில் 
வருவானா???  எதை என்று யூகங்கள் தருவானா???

பல மனிதர்கள் இதை என்றும் நினைக்காமலே நினைத்திருந்தும் பலிக்காது பலிக்காது பலித்திருந்தும் உருப்படாது உருப்படாது.. என்ற நிலை இருக்கின்றதே என்றும் நிலையை மறவாது!!!

என்ற பாடலைக் பாடித்தான் இவந்தன் எவை என்று கூட இப்பாடலை தான் பாடுவான்!!!

அனைவரும் ஏதோ பாடலை பாடிக் கொண்டிருக்கின்றான் பைத்தியக்காரன் என்று நினைத்து கொண்டிருந்தார்கள்!! 

ஆனால் இவ் ஞானி!!!!!! இன்னும் பல வழிகளில் கூட இங்கெல்லாம் திரிந்து பல மோட்சங்களை பல மனிதர்களுக்கு கொடுத்துள்ளான் அப்பனே இவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

நலம் என்னுடைய ஆசிகள்!!! ஆசிகள்!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே சிவாஜி நகரில் ஜே எம் ரோடு இல் அமைந்துள்ளது ஜாங்கிலி மகாராஜ் ஜீவசமாதி... பரபரப்பான நகரத்தின் நடுவே அமைதியான சூழ்நிலையில் சுற்றிலும் அடர்ந்த ஆல மரங்கள் அரச மரங்கள் நந்தவனம் இதனுடன் கூடிய மிகவும் சாந்தியையும் அமைதியையும் தரும் ஜீவ சமாதி கோயில் இது. பக்தர்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்து தியானங்கள் செய்து நல்லருள்களை பெறுகின்றார்கள். ஜாங்கிலி மகாராஜ் ஜீவசமாதிக்கு அருகே பாதாளேஸ்வரர் குடைவரை கோயில் அமைந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த குகை கோயில் மிகவும் தொன்மையானது கற்பாறைகளை குறைந்து அமைக்கப்பட்ட இந்த கோயில் எதிரே யானை தூண்கள் மற்றும் பிரம்மாண்ட நந்தி குற்றச்சல் மண்டபம் என எந்தவித கட்டுமானம் இல்லாமல் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜீவா சமாதியின் நுழைவாயில் வழியாகவும் பாதாளேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லலாம்.. ஜீவசமாதிக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருகின்றார்கள் என்றால் குகை கோயிலுக்கு கல்லூரி மாணவர் மாணவியர் மற்றும் சுற்றுலாப் பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.

முகவரி

சத்குரு ஸ்ரீ ஜங்கிலி மகாராஜ் சமாதி கோவில்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்து கோவில் 
ரெவின்யூ காலனி, சிவாஜிநகர், புனே, மகாராஷ்டிரா 411005

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 23 April 2023

சித்தன் அருள் - 1327 - அன்புடன் அகத்தியர் - அக்ஷயத்ரிதியை வாக்கு!

 



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

மனிதர்களாகிய நாம் நாம் கேட்டு உணர்ந்ததை!!! படித்ததை!!! மற்றவரிடமிருந்து தகவல்களாக கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு நாட்களும் சரி விசேஷ தினங்களிலும் சரி அதை அப்படியே பின்பற்றி வருகின்றோம் ஆனால் அவையெல்லாம் மனிதர்களால் பொய்யாக உருவாக்கப்பட்டவை!!!!

சரியான உண்மைகளை மறைத்து பொய்யாக மாற்றி வைத்து விட்டனர் என்பதை குருநாதர் அகத்தியர் பெருமான் ஒவ்வொரு வாக்கிலும்.....

மனிதர்கள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் தவறு !!!!!

உண்மை என்பது என்ன ? என்பதை வாக்குகளில் தந்து நமக்கு புத்தி உரைத்துக் கொண்டே வருகின்றார்!!

அதுபோல இன்றைய நாள் அட்சய திருதியை நாள் குறித்தும் இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் குருநாதர் வாக்குகளாக திருவாய் மலர்ந்தருளினார்!!!!

அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!

அப்பனே நலன்கள்!! நலன்கள்!!

இவையன்றி கூற அப்பனே மனிதன் இறைவன் எழுதிய விதிகளை அப்பனே தன் இஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக்கொண்டு தானும் கெடுவதோடு மற்றவரையும் கெடுத்து விடுகின்றான் அப்பனே இதனால் தரித்திரங்கள் அப்பனே!!

அப்பனே இன்றைய அட்சய இவையன்றி கூற நாளில் பொன்னும் பொருளும் வாங்கினால் அனைத்தும் கிட்டுமாம்!!!!!

பொய்களப்பா அனைத்தும் பொய்களப்பா!!! 

வீணான பேச்சுக்கள் என்பதைக்கூட  அப்பனே !!!! இவையென்று உணர்ந்து உணர்ந்து!!!! 

அப்பனே மனிதனின் எண்ணங்கள் இவ்வாறெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றது என்று சித்தர்கள் யாங்கள் அடிக்கடி வந்து வாக்குகள் செப்பினாலும் மனிதன் அதை ஏற்ப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!

இதனால் கஷ்டம் என்பதை கூட உணர உணர!!!!! 

அப்பனே!!!! அனைத்தையும் மனிதன் மாற்றி விட்டான் இன்றைய நாளில் தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியம் பெருகும் அப்பா!!!!

இயலாதவர்களுக்கு நல்மனதுடன் இன்றைய நாளில் உதவிகள் அப்பனே செய்யும் பொழுது அவர்கள் மனம் மகிழ்ந்து வாழ்த்தும் பொழுது உங்களுடைய புண்ணியங்கள் பெருகிக்கொண்டே போகும் அப்பனே!!!! கர்மங்கள் அழியும் அப்பனே!!!!! இதைத்தான் முன்னோர்கள் இவை என்று கூற.    """ அட்சய!!!!!! ... அப்பனே  எதை என்று அப்பனே முன்பே உரைத்து  விட்டனர் அப்பனே !!!!

இவ் அட்சய அதாவது இன்றைய நாளில் அப்பனே மனிதர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக தனக்குப் பொருள்கள் சேர வேண்டும் பொன் சேர வேண்டும் இவையன்றி கூற அப்பனே அனைத்தும் சேர வேண்டும் என்று தான் நினைத்து தன் சுயநலத்திற்காகவே தன் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பனே கடைசியில் கஷ்டம் தான் வந்து சேரும் அப்பனே!!! தன் சுயநலத்திற்காகவே வாங்கிய பொருட்கள் அனைத்தும் அப்பனே மற்றவருக்கு தான் போய் சேரும் என்பேன் அப்பனே எவை என்று கூற நல் முறையாக உணர உணர அப்பனே 

இவையன்றி கூற அப்பனே தன்னிடம் இல்லாததை கூட மனம் உவந்து இன்றைய நாளில் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது பன்மடங்காக புண்ணியமாக இறைவன் உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வான் அப்பனே!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் பொன்... இவையன்றி கூற சொத்துக்கள் அப்பனே பொருளோ நிரந்தரமல்ல அப்பனே புண்ணியமே நிரந்தரம்  என்பேன் அப்பனே!!!!

அப்புண்ணியங்கள் இருந்துவிட்டால் அப்பனே இறைவனே உன்னை வணங்குவான் என்பேன் அப்பனே!!!!

இன்றைய நாளில் அப்பனே நீங்கள் எவ்விதமான உதவிகளை  அப்பனே பல்வேறு ஜீவராசிகளுக்கு செய்தாலும் அது பன்மடங்காக உங்களை வந்தடையும் என்பேன் அப்பனே!!!!!

என் பக்தர்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் இவை என்று கூற வாழ்வதே கொஞ்ச நேரம்தான் அப்பனே  சிறிய சிறிது நேரம் மட்டுமே மனிதன் வாழும் நாட்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றான் அப்பனே எதற்காக என்றால் அப்பனே கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே புண்ணியத்தை சேர்க்க அப்பனே முன் வருவதே இல்லை என்பேன் அப்பனே!!!! இவ் நாட்களில் இதையெல்லாம் செய்தால் அதாவது இவற்றையெல்லாம் வாங்கினால் பன்மடங்கு பெருகுமாம்!!!!!

அவை செய்தால் இவையெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் மனிதன் சொல்வதைக் கேட்டு கர்மங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

புண்ணியத்தை சேர்க்க யாங்கள் வழிகாட்டுகின்றோம் அப்பனே அதனை அப்படியே பின்பற்றி வந்தால் நன்மை பெருகும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் புண்ணியம் செய்தால்தான் மட்டுமே அப்பனே இறைவனை அடைய முடியும் என்பேன் அப்பனே மற்றவை எல்லாம் செல்லாது என்பேன் அப்பனே!!!!

அப்பனே தங்கத்தை வாங்கி வைத்தால் பன்மடங்கு பெருகும் என்பதெல்லாம் வீணான பொய்களப்பா!!!!! மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை அப்பனே!!!! அப்படியே மாற்றிவிட்டார்கள் அப்பனே உண்மையை!!!!

இன்றைய நாளில் உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய் அப்பனே!!! அதனால்தான் புண்ணியங்கள் பன்மடங்கு பெருகுமே தவிர!!!!! மனிதன் சொல்வதைக் கேட்டு வேற எதைச் செய்தாலும் ஒன்றும் செல்லாது!!!! ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே!!!!  தனக்கு அதாவது தம்தனக்கு நன்மைகள் பெருக வேண்டும்!!! தன் குடும்பம் மட்டும் உயர வேண்டும் தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று சுயநலமாக யோசித்தாலே தரித்திரம் அப்பா!!!!!!

என் பக்தர்கள் அப்பனே அதாவது என் வழியில் வருகின்றவர்கள் இதனை நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே இன்றைய நாளில் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஏழை கன்னிப் பெண்களுக்கு உதவிகள் செய்யுங்கள் அன்னமிடுங்கள் அவர்கள் மனம் மகிழ்ந்தால் அப்பனே உங்கள் நிலை உயரும் என்பேன் அப்பனே அவர்களின் ஆசிகளைப் பெற்று கூட அப்பனே புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் அப்பொழுது அன்றைய நாட்களில் எல்லாம் அப்பனே இது போன்ற நாட்களில் அப்பனே ஏழை எளியோர்களுக்கு பொன்னும் பொருளும் வாங்கி கொடுத்து அப்பனே திருமணத்தையும் நடத்தி வைத்தனர் அப்பனே 

அப்படி உதவிகள் செய்து அப்பனே அவர்கள் புண்ணியத்தை பெருக்கிக் கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்தார்கள் அப்பா!!! ஆனால் இன்றைய நாட்களில் அப்படி இல்லை என்பேன் அப்பனே!!!

அப்பனே யான்  சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அப்பனே செய்தாலே உங்களுக்கு புண்ணியம் சேரும் கர்மங்கள் தொலையும்  என்பேன் அப்பனே உங்கள் முக்திக்கு யான் வழி காட்டுகின்றேன் அப்பனே இறைவனையும் யான் காண்பிக்கின்றேன் அப்பனே!!!! நல்லாசிகள்!!!

நல்லாசிகள்!!! மீண்டும் ஒரு திருத்தலத்தில் செப்புகின்றேன்!!!!! நல்விதமாகவே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 22 April 2023

சித்தன் அருள் - 1326 - அன்புடன் அகத்தியர் - பொதிகை வாக்கு!







7/3/2023 அன்று மாசி மக பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பொதிகை மலை அகத்தியர் கூடம். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நலன்கள் அப்பனே பெருகும் என்பேன்!!!

என்னுடைய பக்தர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே யான் எதை என்று அறிய அறிய உங்களை........

காண!!....... எதை என்று அறிய அறிய அப்பனே என்னை காண ஓடோடி வந்தீர்களப்பா!!!! அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு வந்து ஏற்கனவே யான் பார்த்திட்டேன் அப்பனே!!!! நலன்கள் ஆகவே!!!

யான் பார்த்திட்டாலே!!!!! போதுமப்பா!!!!! உங்களுக்கு ஆசிகள் இன்னும் எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே கவலைகள் கொள்ளாமல் இருங்கள்!!!!

அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் கூட யான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

மக்களின் தன்மைகளைக் கூட அப்பனே எப்படி? எப்படி ? எல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் அப்பனே ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ இயலாது என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனாலும் அப்பனே எவை எவை என்று அறிய அறிய ஆனாலும் என் மீது பாசம் கொண்டு வந்தீர்களப்பா!!!! நிச்சயம் அனைவருக்கும் யானே முன் வந்து அப்படியே நீங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே ஆசிகள் கொடுத்திட்டேன் அப்பனே அதனால் கவலைப்பட அவசியம் வராது என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே கலியுகத்தில் அழியும் வண்ணம் சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே அழியும் காலம் என்பேன் அப்பனே ஆனாலும் சித்தர்கள் யாங்கள் என் பக்தர்களை நிச்சயம் விடமாட்டோம்!!! விடமாட்டேன்!!! அப்பனே !!!!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் கூட அப்பனே வருவார்களப்பா!!!! சித்தர்களின் தன்மையை புரிந்து கொள்வதற்கு ஆள் இல்லையப்பா!!!

ஆனாலும் அப்பனே பொய்களப்பா!!!! எதை என்று அறிந்து அறிந்து அப்பனே என் பெயரைச் சொல்லியும் இறைவனுடைய பெயரைச் சொல்லியும் கலியுகத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் மிஞ்சுவார்களப்பா!!!

எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய என் மீது பாசம் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!!

யானே வந்து உங்களுக்கு செய்து விடுவேன் அப்பனே இது சத்தியம்!!!!

இங்கிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே இன்னும் யான் பக்தன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் எந்தனுக்கு மந்திரங்கள் தெரியும் அனைத்தும் விரட்டுவேன் உங்களுக்கு யோகமான வாழ்க்கையும் அளிப்பேன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிப்பேன் என்று பொய் கூறுவார்களப்பா!!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

ஏன்? எதையென்று அறிய அறிய அப்பனே பின் இறந்த உடலை உயிர்பிக்கச் சொல்!!!!!!!  அவன் தான் உண்மையான ஞானி!!!! அப்படி யாராவது இவ்வுலகத்தில் இருக்கின்றானா என்று  யோசித்துக் கொள்ளுங்கள்!!!

நிச்சயம் என்னை நம்பி வந்தோர்களுக்கு நிச்சயம் ஞான அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! கவலை ஏது?? அப்பனே!!

 நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு என்னை பின் எதை என்று அறிய அறிய சிலையாகவே பார்க்கின்றீர்கள் அப்பனே!!!

நிச்சயம் என்னை நம்பியவர்களுக்கு யான் நிச்சயம் மனித ரூபத்தில் காட்சியளிப்பேன் அப்பனே!!! லோபாமுத்திரையோடு!!!!!! 

""""""இது சத்தியம்!!!! 

அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் அப்பனே!!!!

ஆனால் பிரச்சனைகள் இல்லாமல் யாரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்!!!! ஆனாலும் அப்பனே அதாவது பிரச்சனைகளை சமாளிப்பதே அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனின் பின் விளையாட்டாகவே இருந்து விட்டது என்பேன் அப்பனே!!!

இதனால் குறைகள் இல்லை அப்பனே இன்னும் இன்னும் ஞானங்கள் உங்களுக்கு காட்டுவேன் அப்பனே!!!! ஞானங்கள் நீங்கள் பெற்றுக் கொண்டால் அப்பனே எதை என்று அறியாமலே இன்னும் அப்பனே பின் எப்படி வாழலாம் என்பதை கூட கலியுகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனின் அப்பனே வாழ முடியாத காலம் கலியுகமப்பா!!! ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே நிச்சயம் அறிந்தறிந்து யான் உங்களுக்கு யான் செய்வேன் நலன்களாகவே அப்பனே எதை என்று அறிந்தறிந்து!!!!

அதனால் அப்பனே நீங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்பேன் அப்பனே உண்மையான அன்பை காட்டுங்கள்!!! யானே வருவேன் அப்பனே ஓடோடி!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்து விட்டு கொலை எதை என்று அறிய அப்பனே பொய் பித்தலாட்டங்கள் அப்பனே பொய் பேசுதல் பொறாமை இவையெல்லாம் செய்துவிட்டு என்னிடத்தில் அருகில் வந்தாலும் ஆசிகள் இல்லையப்பா!!!!!

அப்பனே உத்தமராக வாழுங்கள்!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய தன்னைப்போல் பிறரை எண்ணுங்கள்!! போதுமானது யானே உங்களைத் தேடி வருவேன் அப்பனே!!!

இது சத்தியம்!!!! அகத்தியன் வாக்கு எப்பொழுதும் மாறாது என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே என் மீது கூட ஏன்? பக்திகள் கொண்டுள்ளீர்கள்?? அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் மீதும் எதற்கு?? பக்தி கொண்டு உள்ளீர்கள்?? அப்பனே!!!

 ஏதாவது செய்வான் என்று தான் அப்பனே!!! நீங்கள் அதாவது கஷ்டங்கள் போக்குவானா?? என்றுதான் பக்திகள் செலுத்துகின்றீர்கள்!!! அப்படியெல்லாம் அப்பனே எதை என்று அறிந்தறிந்து செய்தால் நிச்சயம் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பனே!!!

உண்மையான அன்பை காட்டுங்கள் அனைத்தும் நீயே அப்பனே எந்தனுக்கு ஏதும் தெரியாது என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அப்பனே ஈசனே வருவான் தன்னிடத்திற்கு!!!!

 அப்பனே அனைத்தும் செய்வான் அப்பனே!!! எதை என்று அறிந்தறிந்து!!!!

அப்பனே நிச்சயம் எதை என்று உண்மைகள் இன்னும் பல பல ஞானியர்கள் வருவார்களப்பா!!!! நிச்சயம் உண்மை நிலைகளை  புரிந்து புரிந்து அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே எந்தனுக்கு எவை என்று அறிய அறிய எந்தனுக்கு எவை என்று அறிய அறிய இப்படி செய்துவிட்டார்கள் என்று கூட அப்பனே நீங்கள் அனைவரும் கூட உணர்ந்ததே!!!! 

ஆனாலும் அப்பனே என்னிடத்தில் வருபவர்கள் கூட உண்மையானவர்கள் இல்லையப்பா!!!!!

யான்  உங்களுக்கு இப்பொழுதே நுழைய எதை என்று அறிய அறிய அபிஷேகங்கள் செய்ய வாய்ப்பும் யான் தருவேன்!! ஆனாலும் அப்பனே உண்மைகள் இல்லை அப்பா பொய்கள் எதை என்று அறிய அறிய ஒரு உயிரைக் கொல்லாதே!!! கொல்லாதே!!!!! என்கின்றேன்!!!! ஆனாலும் அப்பனே கொன்று விட்டு அப்பனே தின்றுவிட்டு வந்திருக்கின்றீர்கள் எதை என்று அறிய அப்படி இருந்தால் எப்படி யான் காட்சிகள் அளிப்பேன்????????????

சொல்லுங்கள் அப்பனே!!! நியாயமா????

அப்பனே ஒவ்வொருவர் மனதையும் தொட்டுச் சொல்லுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எந்தனுக்கு( பொதிகை மலை உச்சியில் இருக்கும் அகத்தியர் திருவுருவ சிலையை சுற்றி வேலிகள்) எவை என்று கூட வேலியும் அமைத்து விட்டார்கள் என்கின்றீர்களே!!!!!!

அப்பனே நீங்கள் எல்லாம் உத்தமர்களா????? மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!!! எதையென்று அறிந்தறிந்து உத்தமர்கள் வரட்டும்  அப்பனே யான் பார்த்து கொள்கின்றேன் எதை என்று அறிய  மற்றவர்கள் என் மீது குறை சொல்லாதீர்கள் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய முதலில் தன் மீது குற்றம் எதை என்று உணர்ந்து தன் மீது என்ன?  குற்றம் உள்ளது என்று கண்டுபிடித்து விட்டால் அப்பனே எவை என்று அறிய அவன் தான் ஞானி அப்பா!!!!! 

அதனால் தன் மீது குற்றங்கள் வைத்து கொண்டு பிறர் மீது நிச்சயம் குற்றம் சுமத்த செய்ய ஆகாது என்பேன் அப்பனே!!!! 

"""" எந்தனுக்கு தெரியும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உண்மை நிலையை உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் ஞானங்கள் அப்பனே சிறு வயதில் இருந்தே அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஞானங்கள் வளர யான்  நிச்சயம் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள் கொடுப்பேன் அப்பனே கவலைகள் இல்லை!!! 
உங்கள் எதை என்று அறியறிய அப்பனே இவ்வுலகத்தில் நிரந்தரம் ஏதுமில்லையப்பா!!!! 

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உண்மை நிலைகளை புரிந்து புரிந்து அப்பனே நிச்சயம் ஆனாலும் உங்கள் அனைவரையும் கூட பல இடத்தில் பார்த்து விட்டேன் அப்பனே சதுரகிரியிலும் சரி... அப்பனே எவை என்று கூட கும்பமலையிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் வெள்ளியங்கிரி அப்பனே எதை என்று கூட அண்ணாமலையிலும் கூட உங்களை பார்த்திட்டு அப்பனே அனைத்து இடங்களிலும் யான் தரிசனங்கள் கொடுத்து விட்டேன் அப்பனே.... இதை விட என்ன புண்ணியம் அப்பனே!!!!! 

அதனால் எதையென்று அறிய அறிய அன்பை பின் எதை என்று கூட """""" அப்பா!!!! என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அதை மிஞ்சிய வார்த்தை இல்லையப்பா!!!!! 

அதை மிஞ்சிய மந்திரமும் இல்லையப்பா!!!! 

யான் வருவேன் உங்கள் இல்லத்திற்கு!!!!! 

அனைவருக்கும் கூட ஆசிகள் தந்து தந்து அப்பனே.... 

அதாவது பெருமூளையில் ஆறு ஆதாரங்கள் உள்ளதப்பா!!!!! 

எதையென்று அறிந்தறிந்து அப்பனே அவ் ஆறு ஆதாரங்களை கூட அப்பனே கர்மா நிறைந்த பின் குடுவையாக உள்ளது என்பேன் அப்பனே!!! 

எதையென்று அறிய அறிய அக் குடுவை அப்பனே திறந்து விட்டால் அப்பனே கர்மா வெளியில் வந்து விடும் என்பேன் அப்பனே!!! 

அக் குடுவை எதை என்று கூட திறப்பதற்கு ஒரே ஓர் அப்பனே பின் செந்தூர்( திருச்செந்தூர்) என்பதே !!!

அப்பனே அடிக்கடி எதை என்று அறிய அறிய செந்தூரை காணுங்கள் அப்பனே!!!!!! 

"""" வெற்றி வேல்!!!!  என்று!!.......... 

எதையென்று அறிய அறிய அப்பனே கர்மாவை விலக்க!! விலக்க!!!! அப்பனே ஞானங்கள் பதியும் என்பேன் அப்பனே!!!! 

அதன் பின்பு எதையென்று அறிய அறிய அண்ணாமலைக்கு செல்லுங்கள் என்பேன் அப்பனே!!!!  இன்னும் ஞானங்கள் அப்பனே பெறுவார்கள் என்பேன் அப்பனே!!! 

நிச்சயம் உங்கள் அனைவரையும் கூட அண்ணாமலைக்கும் அழைப்பான் ஈசன்!!!! அப்பனே வெள்ளியங்கிரிக்கும் அழைப்பான் அப்பனே சதுரகிரிக்கும் அழைப்பான் என்பேன் அப்பனே நல்விதமாக அப்பனே எதை என்று அறிய அறிய!!!!! 

இதனால் இன்னும் தத்துவங்களை புரிய புரிய அப்பனே எவை என்று அறிந்தறிந்து அப்பனே நலமாகவே சொல்கின்றேன் அப்பனே ஒரு கூட்டம் அப்பனே பொய் திருட்டு........... அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் களவு!! அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் எதை என்று அறிய பொய் சொல்லுதல் அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் புகழை தேடுதல் அப்பா!!!!!!! 

அப்பனே!!!!  இவையெல்லாம் நியாயமா?????????? 

அப்பனே எதை என்று அறிய அறிய என்னை வணங்குகின்றவர்கள் அப்பனே சத்தியத்தை தர்மத்தை கடைபிடித்து வாருங்கள் அப்பனே மௌனத்தை சாதித்துக் கொள்ளுங்கள் அப்பனே கோபப்படாதீர்கள் அப்பனே அனைத்தும் யான் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே!!! 

இவை நிச்சயம் செய்யாதீர்கள் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து கலியுகத்தில் மனிதனால் வாழமுடியாதப்பா!!! வாழமுடியாதப்பா!!! 

எதையென்று அறிந்தறிந்து ஆனாலும் நிச்சயம் யான் வாழ வைப்பேன் அப்பனே!!!! 
இவ்வுலகத்தில்!!!!!

இவ்வுலகத்தை எதை என்று என் கையில் நிறுத்துவேன் அப்பனே!!!! அனைத்து அனைத்தும் எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

விஞ்ஞான முறையிலும் கூட அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே ஈசனாயினும் எதையென்று விஷ்ணு ஆயினும் அப்பனே எதையென்று பிரம்மாவாயினும் என்னிடத்தில் பல வழிகளில் வந்து கேட்டு தெளிந்து ஞானங்கள் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே உதவிகள் செய்துள்ளேன் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் மனிதர்கள் நீங்கள் அப்பனே உங்களுக்காக யான் எதை என்று அறிய அறிய உதவிகள் செய்யவே இப்புவியுலகத்தில்!!!!

வேண்டாமப்பா !!! பிறவிகள் வேண்டாமப்பா.!!! எதை என்று அறிய அறிய அப்பனே புவிதன்னில் பிறந்து விட்டாலே கஷ்டங்களப்பா!!!! 

அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து மனித குலத்திற்கு உதவிகள் செய்து இப்புவிதன்னில்... வேண்டவே வேண்டாம் பிறவிகள் என்றெல்லாம் அப்பனே மனதை மாற்றி எங்களுக்காக புண்ணியங்களுக்காக பின் வரவழைத்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

நல்விதமாக அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே யாரும் எதை என்று அறிய அறிய எக்கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே !!

யானே இருக்கின்றேன்!!!!

""""""" தன் பக்தர்களுக்காக எதை என்று அறியறிய...இவ் அகத்தியன் என்ன வேண்டுமானாலும் செய்வான் அப்பனே!!!!!!!!!!

சத்தியவானாக இருங்கள்!!! உத்தமனாக இருங்கள்!!! பொய் சொல்லாதவர்களாக இருங்கள்!!
 புகழுக்காக அலையாது இருங்கள்!!!
அப்பனே பொருள்களுக்காக அலையாது இருங்கள்!!!!
எவை என்று அறிய பணத்திற்காக அலையாது இருங்கள் அப்பனே!!!!

போதுமானது!!!!

மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே !!!
கர்மத்தை தேடி கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய யான் எவ்வளவோ முயற்சித்து முயற்சிகள் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய பின் மனிதன் கூட மனிதனை எவை என்று அறிய அறிய கர்மத்தில் சேர்க்கக் கூடாது கர்மத்தில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம்!!!!

ஆனாலும் அப்பனே என்னையே வைத்துக்கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய கர்மத்தில் நுழைந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே எதை என்று அறிந்தறிந்து

அதனால் அப்பனே ஆறு மூலாதாரங்கள் உள்ளது அப்பனே பெருமூளையில் அப்பனே அவை தன் எவை என்று உணர்ந்து குடுவை போல் உள்ளது அப்பனே அவை திறந்தால் தான் புண்ணியங்கள் எவை என்று கர்மா நீக்கி புண்ணியங்கள் அதில் சேர்ந்த பிறகு அப்பனே அனைத்தும் தெரியவரும்!!!

ஞானங்கள் தித்திக்கும் அப்பனே அதனால் முதலில் அவ் ஆறு மூலாதாரங்கள் எவை என்று அறிய அறிய திருச்செந்தூரில் உள்ளதப்பா!!!!! அதை நிச்சயம் முருகனே உங்களை அழைப்பான் என்பேன் அப்பனே!!!!

எவையென்று அறிய அறிய இங்குள்ள அனைவருக்கும் முருகனின் ஆசிகள் இருக்குதப்பா!!!!! அதனால் நிச்சயம் முருகனே செந்தூருக்கு அழைப்பான் என்பது சத்தியம் என்பேன் அப்பனே!!!!

நலமாகவே இன்னும் ஐந்து ஆதாரங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!! எவை என்று ஒன்றன்பின் ஒன்றாகவே சொல்கின்றேன் அப்பனே!!! 

ஏனென்றால் முதல் தத்துவத்தை குறிப்பிட்டேன் அப்பனே ஞானத்தை !!!! எதை என்று அறிய அறிய செந்தூரில் தான் அப்பனே முருகனால் கொடுக்க முடியும் என்பேன் அப்பனே மற்றவர்களால் எதை என்று அறிந்து அறிந்து!!!!

இதனால் அப்பனே இங்கும் அங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஆறு குடுவையில் அப்பனே ஒரு குடுவை அண்ணாமலையில் உள்ளதப்பா!!!!! அங்கு சென்றால் ஞானங்கள் தித்திக்கும்!!!!!!! அப்பனே!! 

யார் ஒருவர்  எதையென்று அறிந்து அறிந்து உண்மையானஅன்பை காட்டுகின்றார்களோ!?!!!! நிச்சயம் நீங்கள் பின் திருவண்ணாமலை செல்லத் தேவையில்லை ஈசனே அங்கு அழைத்து விடுவான் அப்பனே!!!

ஞானங்கள் பெற்று எவை என்று அறிய அறிய அப்பனே இயலாதவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள் அப்பனே போதுமானது!!!! யான் அங்கு இருப்பேன்!!!

அப்பனே தன்னை போன்று மற்றவரை நினையுங்கள் அங்கே யான் இருப்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே மந்திரங்களால் ஒன்றும் ஆகாதப்பா தந்திரங்களாலும் ஒன்றும் ஆகாதப்பா எதை என்று வணங்கி வணங்கி எவை என்று அறிய அறிய அப்பனே உண்மை பொருளை அப்பனே கர்மா ஒவ்வொருவன் தலையின் மீது கூட இருக்கின்றதப்பா!!! அதை அனுபவித்தே தீர வேண்டும் அப்பனே!!!

அப்பனே விதியில் என்ன உள்ளதோ அவை நிச்சயம் எதை எதை என்று அறிந்தறிந்து இங்கு நடந்தே தீரும் ஆனால் அப்பனே என்னால் விதியை கூட மாற்ற இயலும் என்பேன் அப்பனே!!!!

யான் மாற்றுவேன் எதை என்று அறிய அறிய அப்பனே என் பக்தர்களுக்கு நிச்சயம் பல பல வடிவங்களில் கூட அப்பனே தொல்லைகள் பிரச்சனைகள் எவை என்று அறியாமலே வந்து கொண்டு தான் இருக்கின்றது அப்பனே ஏனென்றால் கலியுகம் அப்பனே!!!!

கலியுகத்தில் உண்மையான பக்தர்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய உண்மைகள் இல்லையப்பா!!! அதனால் அப்பனே நல்முறையாக என்னுடைய ஆசிகள் யாரும் கவலைப்படவும் தேவையில்லை!!!!

அப்பனே எதை என்று அறிந்து யான் உங்களை லோபா முத்திரையோடு வந்து ஏற்கனவே பார்த்திட்டேன் அப்பனே!!!!! அனைவருக்கும் ஆசிகள்!!!

 ஏனென்றால் அன்பு தான் அப்பனே எனக்கு முக்கியம்!!!!! எதை என்று அறியறிய வேறொன்றும் தேவையில்லையப்பா!!! 

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் """அப்பா !!! என்று சொன்னால் அப்பனே யான் உன்னிடத்திலே வந்து விடுவேன் அப்பனே!!!!

நீங்களும் எதை என்று அறிய அறிய அனைத்தும் விட்டுவிட்டு என்னிடத்தில் வந்து விட்டீர்கள் அப்பனே 
ஆனாலும் கடமை என்று ஒன்று இருக்கின்றது... அதை மறந்து விடாதீர்கள் மறந்து விடாதீர்கள் அப்பனே கடமையையும் செய்யுங்கள் அப்பனே கடமையை செய்து கொண்டே வாருங்கள் என் மீது அன்பையும் செலுத்துங்கள் அப்பனே போதுமானது!!!

அப்பனே யான் இங்கு எதை என்று அறிய யானாக கேட்கவில்லை அன்பு செலுத்துங்கள் என்று தானாகவே!!!..... ஏனென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நீங்கள் என் கூடவே எதை என்று அறிந்து அறிந்து வந்தவர்கள் தானப்பா!!! இங்கு வந்து கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே..... அதனால் தொல்லைகள் இல்லையப்பா!!!!

அப்பனே அனைவருக்குமே முக்திகளப்பா!!!! எதையென்று அறிந்து அறிந்து அப்பனே குற்றங்கள் இல்லை அப்பனே இன்னும் ஏராளமான வாக்குகளிலும் கூட அப்பனே எவ்வாறு இவ் பின் பேய் உடம்பை அப்பனே எதை என்று கூற மாற்றலாம் அதாவது பேய் உடம்பில் அப்பனே பல பல வழிகளில் கூட அப்பனே தேங்கியுள்ளது கர்மா!!! அவையெல்லாம் எப்படி அகற்றலாம்? என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே ஓர் சில வருடங்களுக்கு முன்பே அப்பனே எதை என்று அறிய அறிய பின் எப்படியாவது அகத்தியனை பார்க்க வேண்டும் அதாவது இங்கிருந்து 300 மீட்டர் எதை என்று அறிய அப்பனே எதை என்று புரியாத அளவிற்கும் கூட உள்ளதப்பா அவ் ஊரில்!!! என் மீது அளவு கடந்த பக்தன் அப்பா அவந்தன் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அகத்தியனை யான் தனியாக பார்க்க வேண்டும் தனியாக பார்க்க வேண்டும் எதை என்று அறிந்து அறிந்து சொல்லிக் கொண்டே இருந்தான் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பைத்தியக்காரனாக எதையென்று அறிய அறிய அப்பனே அவந்தனுக்கும் எதையென்று அறிய அறிய உற்றார் இல்லை உறவினர் இல்லை அப்பனே!!!

ஆனாலும் எதை என்று கூட ஏறி வந்தானப்பா ஆனாலும் அவந்தனை யாரும் விடவில்லையப்பா!!!! எதையென்று அறிந்தறிந்து பின் இவன் பைத்தியக்காரனாக இருக்கின்றானே எவை என்று அறிந்தறிந்து ஆனாலும் எவை என்று பின் உண்மை நிலைகள் புரிந்து மேலே ஏறிவிட்டானப்பா!!!

ஆனாலும் எதை என்று கூற ஒருவன் எட்டி உதைத்தானப்பா!!! அவந்தன் பள்ளத்தில் விழுந்தானப்பா!!! விழுந்து மாண்டான்!!!! எதையென்று அறிந்தறிந்து அப்பனே இவை சில சில உண்மைகளை கூட யாருக்கும் புரியாதப்பா!!!

எதையென்று கூட மாண்டான் என்கின்றார்களே அப்பனே இல்லையப்பா!!!!

யான் அப்படியே பிடித்திட்டேன் அப்பனே!!!! எதையென்று அறிய அறிய அவந்தனை!!!! 

எவை என்று கூட யான் மனித வடிவிலே வந்து எவை என்று அறிந்து அறிந்து அப்பனே மீண்டும் அவனிடத்தில்( அவர் ஊரில்) சேர்த்து விட்டேன் அப்பனே இன்றளவும் அவன் சுற்றி திரிந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே அவன் நிலைமைகளை கூட யான் அறிவேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் அப்பனே அப்பா என்று சொல்லிவிட்டால் அப்பனே யானும் எதை என்று அறிந்து அறிந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து யானே வருவேனப்பா!!!! அனைத்து நலன்களும் கொடுப்பேனப்பா!!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நலன்கள் அப்பனே!!!!! இது சித்தர்கள் எதை எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு அனைத்துமே தெரியும் அப்பனே எவை என்று கூற வினையை மாற்றவும் தெரியும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

ஏற்கனவே யான் சொல்லிச் சொல்லி இருக்கின்றேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு அப்பனே கஷ்டங்கள் நிறைந்திருக்கும் முள் பாதை எவை என்று அறிய அறிய தாண்டி வந்தால் தான் அப்பனே என்னை காண முடியும் சொல்லிவிட்டேன்!!! சொல்லிவிட்டேன்!!!

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே சுகமாக எதை என்று அறிந்தறிந்து இருந்தாலும் அப்பனே உண்மை நிலைகள். புரியாதப்பா!!!! அதனால்தான் அப்பனே எவை என்று கூற சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து ஞானங்கள் பெற்று பெற்று இறைவனை எப்படி காணலாம்? என்பதை எல்லாம் யான்  சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் காண்பிப்பேன் அப்பனே!!!! வரும் காலங்களில்!!!

கவலைகள் இல்லை அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்குதப்பா எதை என்று அறிந்தறிந்து!!!

அதனால் கவலைகள் இல்லாமல் இருங்கள் அப்பனே !!!

எவை என்று அறிய அறிய யான் பல மூலிகைகளையும் சொல்லி உள்ளேன் அப்பனே வரும் காலங்களில் நோய்களப்பா ஒவ்வொருவருக்கும் எதை என்று அறிந்தறிந்து தெரியாமலே நோய்கள் வருமப்பா!!! உடம்பில் நோய்கள் புகுமப்பா!!!!

இதையென்று அறிய அறிய இதனால் பல பல மூலிகைகளையும் கூட எடுத்துக் கொண்டு அப்பனே நலமாக வாழுங்கள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் எதை என்று அறிய அறிய என் பக்தர்களுக்காக யான் வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே

நலன்கள் ஆசிகள் மற்றொரு வாக்கிலும் குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!

நலன்கள் !! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 14 April 2023

சித்தன் அருள் - 1325 - அன்புடன் அகத்தியர் - மருதமலை வாக்கு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

உங்கள் அனைவருக்கும் சித்தர்களின் மாதமான!!!! சித்தரை 1 சோபகிருது  தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!!!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் முல்லை நகரில் அமைந்துள்ள ஸ்ரீலோப முத்ரா தேவி தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயிலில் உரைத்த பொது வாக்கு!!!!!

13/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

 வாக்குரைத்த ஸ்தலம் : அகத்தியர் திருக்கோயில் மருதமலை அடிவாரம். 

அனைத்தும் அணுவே!!!! 

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே மாய உலகம் என்பேன் அப்பனே!!! உண்மை நிலை அப்பனே ஒன்றும் தெரியாமல் மனிதன் அங்கும் இங்கும் அலைவான் என்பேன் வரும் காலங்களில் அப்பனே!!!

ஏன் எதனால் என்பதையும் கூட யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!!

இறைவனிடத்தில் இவ் ஆன்மா சரணடைய காரணம் கூட பல காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனை தெளிவுபடுத்த அப்பனே ஆனாலும் மானிடர்கள் அப்பனே எதை எதையோ என்று கூட நம்பி நம்பி!!!!

ஆனாலும் அப்பனே ஆன்மா என்பது ஒன்றுமில்லையப்பா!!!!

அப்பனே அவ் அணுவானது எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பின் உடம்பிலிருந்து பிரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் இறைவன் காந்தகம்( காந்தம் MAGNET) என்று வைத்துக் கொள்ளுங்கள்!!!!அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே!!!!

இதனால் அவ் அணுவானது அப்பனே அதாவது பல  புண்ணியங்கள் செய்திருந்தாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இங்கு ஆன்மா அணு என்பவை எல்லாம் அப்பனே ஒன்றே!!!!! 

இதனை சமநிலைப்படுத்த பின் எதை எதை என்று அறிய அறிய இறைவன் காந்தகம் அப்பனே இவை ஒன்று புரிந்து ( செயல் பட்டு) அப்பனே அவ்அணுவானது வெளிவரும் என்பேன்
உடம்பிலிருந்து !!!!அப்பனே!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும்  அவ் அணு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு பல புண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே அவ் காந்தகத்தை அடைய முடியும் !!!! காந்தகமும் ஈர்க்கும்!!!

ஆனால் அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே அவ் அணுவானது நிச்சயம் அப்பனே...அவ் காந்தகத்தின் அருகிலேயே செல்ல முடியாது அப்பனே!!! புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்களை இவ்வாறு சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்பேன் அப்பனே!!!!

அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பல அறிவியல் வழிகளை கூட யான் கண்டு அப்பனே எதை என்று எவை என்று தீர்க்கமாக முடிவெடுத்து பல உண்மைகளை சொல்லி வைத்து விட்டேன் அப்பனே!!!

ஆனாலும் அதையும் கூட மாற்றி அமைத்து விட்டார்கள் அப்பனே யான் (அகத்தியர்) தான் அனைத்தும் கற்று உணர்ந்து இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தது என்பதை எல்லாம் மனிதன் பொய்யாக்கி விட்டான் அப்பனே!!!!

ஏனென்றால் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தெரியாமலே எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே மனிதனை பின் நாங்கள் பித்தலாட்டக்காரர்கள் பொய்யானவர்கள் என்பதை எல்லாம் திட்டி தீர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!! 

யாரோ எதை என்று அறிய அறிய அசைக்க முடியாத நம்பிக்கை அப்பனே யாரோ ஒருவன்  செயல்படுத்துகின்றான் இங்கு பின் ஆட்டங்கள் ஆடுகின்றனர் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய எவை என்று உணர்ந்து உணர்ந்து அங்கே!!!!! (மேலே) அப்பனே!!

அவ்வாறு அவ் காந்தகம் அப்பனே நிச்சயம் மேலிருந்து புவி தன்னை அப்பனே வந்தடையும் பொழுது நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்திருந்தீர்களானால் அப்பனே அவ் காந்தகம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் தகுந்தாற்போல் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் ஆடி அசையும் என்பேன் அப்பனே!!!!!

பின் புண்ணியங்கள் இல்லையென்றால் அப்பனே அப்பனே அப்படியே நிற்கும் என்பேன் அப்பனே இதனால் இதனையும் கூட சமநிலை ப்படுத்தி அப்பனே அணுவானது நிச்சயமாய் அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய பின் புவிக்கு வருகின்ற பொழுது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தானாகவே ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அவ் அணுவை எதையென்று உணர்ந்து உணர்ந்து!!!

இதுதானப்பா அணுவானது இங்கே ஆன்மாவாகவும் வைத்துக் கொள்ளலாம் அப்பனே காந்தகத்தை கூட இறைவனாக வைத்துக் கொள்ளலாம்!!!!! இறைவனாகவே.......

அப்பனே இவையெல்லாம் யான் நிச்சயம் விளக்கப் போகின்றேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உரைத்து உரைத்து அப்பனே இதன் தன்மையையும் இப்பொழுது உரைக்கின்றேன் அப்பனே!!!

கிரகங்கள் மாறுகின்றதாம்!!!!!! அப்பனே.....ஏன் எதை என்று கூட மாதமும் பிறக்கின்றது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!

"""""சனி!!!!!! எவை எவை என்று அறிய அறிய!!!!

அவ் கிரகமானது அப்பனே எவை என்று அறியும் பொழுது கூட அப்பனே புவி தன்னில் அதாவது அப்பனே புவியை இடிக்கின்றது என்பேன் அப்பனே......

ஏன் எதனால் என்பதையும் கூட இதனையும் கூட வலுவாகவே யான் தெரிவிப்பேன் அப்பனே என் பக்தர்களுக்கு!!!!!
இவ்வாறு இடிக்கும் பொழுது அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!! சனியவன் நீதிமான்!!!!! தர்மவான்!!!!!! அதாவது புண்ணியங்கள் மிகுந்த மிகுந்த சிலருக்கே கொடுப்பது என்பதை கூட

அதனால் அப்பனே அவ் கிரகம்அப்பனே இப்பொழுது புவி தன்னிற்கு அருகிலே தான் இருக்கின்றது!!!அப்பனே அவ்வாறு இருக்கும் பொழுது எப்படியப்பா!!!!! நல்லது நடக்கும்??????????????????

ஏனென்றால் மனிதன் பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது இதில் இறங்கி விட்டான் எதை என்று அறிய அறிய!!!!!!

ஏற்கனவே மூன்று ஆண்டுகள் முதல் அப்பனே அவன் எதை என்று அறிய அறிய தன் சொந்த இல்லத்திலே இருப்பான் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

இவை கூட்ட அப்பனே பின் இரண்டரை + இரண்டரை (2.1/2+2.1/2=5) ஐந்து ஆனால் அப்பனே பின் அவன் வீட்டில் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து தங்கும்பொழுது மட்டும் அப்பனே 6 ஆண்டுகள்!!!!!

அப்பனே இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே நிச்சயம் உலகத்திற்கே கேடு!!!!அப்பா!!!

ஆனால் அப்பனே அவ் நிலைமையை அறியாமல் பின் இங்கு செல்கின்றது கிரகம் அங்கு செல்கின்றது இவை நடக்கும் அவை நடக்கும் அனைத்தும் நடக்கும் என்பதை எல்லாம் அப்பனே வீணான பேச்சுக்கள்!!!!!

எல்லாவற்றிற்கும் கூட மேலாக அப்பனே புகழ் சேர்க்க வேண்டும் பணத்தை ஈட்ட வேண்டும் அப்பனே இவ்வாறு தான் மனிதன் குறிக்கோளாக உள்ளது அப்பனே

அவ்வாறு குறிக்கோள் உள்ளவனை நிச்சயமாய் இச்சனிக்கிரகம் நிச்சயமாய் தாக்கும் என்பேன் அப்பனே

ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அணுக்கள் பல எதை என்று உணர்ந்து உணர்ந்து உடம்பிலே உள்ளதப்பா!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் சனியவன் எவை என்று கூட அப்பனே கிரகங்களில் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!!

எதனால் என்பதை கூட அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை எதை என்று அறிய அறிய சனியின் ஆதிக்கம் எவை என்று அறிய அறிய!!!!.......

ஏன் ஈசனையும் கூட மிஞ்சி எவை என்று அறிய அறிய ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதை கூட அனைவரும் உணர்ந்ததே அப்பனே

ஆனால் சனி கிரகத்தின் அப்பனே எவை என்று கூட ஒரு துகள் (மூலக்கூறு) அப்பனே நம் உடம்பில் உள்ளதப்பா!!!!!

இதுதானப்பா எவையென்று அறிய அறிய அதனால் சனி ஆட்டுவித்தால் ஆடாதவர் எவர்???????

அப்பனே ஏனென்றால் எவரும் தப்பிக்க முடியாது என்பேன் அப்பனே.....

அத் துகள் எதை என்று அறிய அறிய அப்பனே சனி கிரகத்திற்கும் அப்பனே உன் உடம்பில் எவை என்று கூட ஒரு துகள் தங்கி உள்ளதப்பா அதனால் எவரும் தப்பிக்க இயலாது சொல்லிவிட்டேன் அப்பனே!!! சனியில் இருந்து அப்பனே!!!

அதனால் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!!! இன்னும் மூன்று வருடங்கள் தன் சொந்த வீட்டில் மன்னனாக இருந்து கொண்டு யார் யார் எதை என்று கூட பக்தியின் மூலம் பின் எவை என்று அறிய அறிய பொய் பேசுபவர்களையும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சரியாக அத் சிறிய துகள் உடம்பில் இருந்து அப்பனே எவை என்று எதிரொலிக்கும் பொழுது அது சனி கிரகத்தை போய் வந்தடையும் பொழுது அப்பனே நிச்சயமாய் கஷ்டம் தான் அப்பா!!!

இதுதான் அறிவியல் ரீதியான உண்மை!!!!!

ஆனால் அப்பனே இன்றைய காலம் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்களுக்கு எதை என்று அறிய அறிய பின் எதை என்று புரியாமலே அப்பனே சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே விளக்கங்கள் இன்னும்!!! இதை செய் அதை செய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே பின் இவ்வளவு தான் வாழ்க்கையா இப்படித்தான் சித்தர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதை எல்லாம் அப்பனே ஆனால் யான் விடப்போவதில்லை அப்பனே!!!!

நிச்சயம் பின் அறிவியலும் இறைவனும் பின் சமமாகவே யான் எடுத்துரைப்பேன் அப்பனே என் மக்களுக்கு அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

என் மக்களை யான் காப்பாற்ற வேண்டும்..... அகத்தியன் அகத்தியன் என்று உயிரைக் கூட எதை என்று அறியாமலே பின் விடுபவர்களும் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே

அதனால் நிச்சயம் அப்பனே யான் திருத்துவேன் அப்பனே கவலைகள் இல்லை!!!!

என் மக்களுக்கு அப்பனே அறிவியல் வழியாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

பல பல கண்டுபிடிப்புகளும் அப்பனே ஏற்கனவே யான் நூல்களில் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே!!!!! அதை புதிதாக படித்துக் கொண்டு திரும்பவும் எவை என்று கூட அனைத்தையும் கண்டுபிடித்து விட்டனர் அப்பனே!!!!!

ஆனால் அகத்தியன் இங்கு பொய்யாகி விட்டான் அப்பனே ஆனால் கலியுகம் அப்பனே நிச்சயம் என் மக்களை விட மாட்டேன்!!!! அப்பனே!!!!

எனக்கு மிஞ்சிய எவை என்று அறிய அறிய விஞ்ஞானம் இல்லையப்பா!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து கிரகங்கள் அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே மின்சாரம் பாய்கின்றது அப்பனே!!!!

ஆனாலும் பாய்கின்ற பொழுது அப்பனே எங்கே ஒரு எதை என்று அறிய அறிய எரிகின்றது (மின் விளக்கு  BULB) அப்பனே!!!
எரிகின்றது என்பதை கூட நீங்கள் சுலபமாகவே தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!

ஏன் எரிகின்றது????????

யாராவது யோசித்தீர்களா??? அப்பனே!!எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று ஒரு அப்பனே பின் (பொத்தான்  SWITCH BOARD) அழுத்தினால் எரியும் என்பது தான் உங்களுக்கு தெரியும்....... ஆனால் அப்பனே அதில் அலை அலைகளாக (NUTRITION PORTION RAYS) எதை என்று கூட யாருக்காவது தெரிகின்றதா என்பதை கூட அப்பனே யாரும் உணர்வதில்லை என்பேன் அப்பனே!!!!!

இப்பொழுது எதை என்று கூட மனிதனும் கூட அப்படித்தான் அப்பனே...எரி ( மனிதனும் மின் விளக்கு போல எரிந்து கொண்டு). 

எவை எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தாக்குகின்ற கிரகங்கள் அப்பனே அப்படியே தன் உடம்பில் படுகின்றபொழுது அப்பனே மனிதன் பின் எவ்வாறெல்லாம் எதை என்று அறிய அறிய பின் செயல்படுகின்றான் அப்பனே!!!! இதுதான் உண்மை!!!!

அதனால் யான் ஒரு வார்த்தை சொல்லிவிடுவேன் அப்பனே இப்பொழுது கூட மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கைகளிலும் என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் எரிவதற்கும் அப்பனே எவை என்று கூட அழுத்தினால் மட்டுமே இங்கு எரியும்!!!

இது போலத்தான் அப்பனே எவை எவை என்று அறிய அறிய பின் எரிகின்ற பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய தானாகவே பின் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே அணைத்து விட்டால் அப்பனே அமைதியாகி போய்விடும் ஆனால் இது போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களுக்கு மட்டுமே தெரியும் கிரகங்களை எப்படி அணைப்பது?? என்பதை கூட!!!! அப்பனே!!!

ஆனால் மனிதனுக்கு தெரியாதப்பா!!!!அதனால்தான் கிரகங்கள் மனிதர்களுக்கு எவை என்று படுகின்ற பொழுது அப்பனே எரிந்து கொண்டு அவந்தனுக்கு என்ன செய்வது என்று கூட தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் அப்பனே

ஆனால் அணைப்பதற்கு எங்களுக்கு மட்டுமே தெரியும் என்பேன் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய கழற்றி வைத்து விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய தானாக அனைத்தும் அப்பனே அப்படியே அமிழ்ந்து விடும் அணைந்தும் விடும்!!!!

அப்பனே இது போலத்தான் அப்பனே ஒன்றை எவை என்று கூட இப்பொழுது அப்பனே எரியூட்டப்பட்டதை நிறுத்த வேண்டும்!!!!

அதற்கு முதல் வகையானது புண்ணியங்கள்!!!! தான் அப்பனே!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய ஏன்? புண்ணியங்கள் எதனால் செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதன் தன்மையையும் கூட இங்கு அதாவது உலகத்தில் உள்ளோர் அப்பனே பின் ஒவ்வொரு கஷ்டத்திலும் கூட அப்பனே தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே

இயலாதவர் இருக்கின்றவர் அப்பனே அனைவரும் கஷ்டம் தான் படுகின்றனர் என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிகின்ற பொழுதும் கூட அறியாத அளவிற்கும் கூட அதுவும் கூட இயலாதவர்கள் இடத்தில் தான் அணுக்கள் அதிக அளவு படிந்துள்ளது பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இருக்கும்( இருப்பவர்) இடத்தில் அப்பனே பதிவதில்லை என்பேன் அப்பனே!!!!

ஏற்கனவே எதை எதை என்று அறிய அறிய சூடேறிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எப்படி அப்பா எதை எதை என்று அறிய அறிய அதனால் இயலாதவர்கள் இடத்தில்தான் அவ் அணுக்கள் பதிந்துள்ளது என்பேன்!!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் நினைக்காத அளவிற்கும் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் அதாவது!!!!

அப்பனே யான் சொன்னேன் அப்பனே பின் நீரை இடுங்கள்!!!! (வழங்குங்கள்)

(இயலாதவர்களுக்கு அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் மோர் மூலிகை குடிநீர் அன்னதானம்)

அப்பனே பின் குளிர்ந்த எவை என்று அறிய அறிய அனைத்தும் இடுங்கள் என்று கூட... இவ்வாறு எதை என்று இடும் பொழுது( வழங்கும் பொழுது) பின் இயலாதவர் அதை உட் கொண்டால் அப்பனே அவ் அணு அப்பனே எதை என்று அறிய அறிய மாற்றும் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு பின் அவந்தன் உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய அவந்தன் சந்தோசங்கள் படும் பொழுது ஒவ்வொரு அணுவாக அப்பனே பின் எதை என்று அறிய அறிய இறைவனை நோக்கிச் செல்லும் என்பேன் மேலே எதை என்று அறிய அறிய

அப்பொழுது அவ் காந்தகமானதும் கூட அப்பனே மேலே சிறிது சிறிதாக மேலே சென்று விடும் என்பேன் அப்பனே இதனால் எதை என்று கூட அணுவும் அதை பிடிக்க முயற்சி செய்யும் என்பேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து

இதனால் அப்பனே அவ் காந்தகமானது அதாவது இறைவனானது பின் மேலே செல்ல செல்ல அப்பனே இங்கு வருத்தங்கள் குறையும் அப்பா!!!!!

முட்டாள் மனிதர்களே தெளிவுகள் பெறுங்கள்!!!!

அப்பனே இவை என்று அறிய அறிய இப்படி தெரியாத மனிதனுக்கு கஷ்டம் கஷ்டம் என்பதெல்லாம் அப்பனே பின் எவை என்று கூட இதுவே பழகிப் போய்விட்டது என்பேன் அப்பனே!!!

ஆனால் அவ் கஷ்டத்திற்கு என்ன வழி என்று கூட அப்பனே மக்களிடத்தில் செல்லும் பொழுது அப்பனே அவந்தன்( போலி சாமியார் போலி சோதிடர்) ருத்ராட்சம் இன்னும் பட்டைகள்(திருநீறு) எவை என்று எதை எதையோ தீர்த்துக் கொண்டு யான் செய்கின்றேன் நலமாக உந்தனுக்கு!!!!

பணத்தை தா!!!!!!! என்று பிடுங்கிக் கொண்டு அப்பனே ஏமாற்றி விடுகின்றான் அப்பனே

அதனால் ஒன்றும் லாபம் இல்லை !!!!

பின்பு இறைவனை குறை கூறுவதாம்!!!!!!!!!!! 

அப்பனே இதில் எதை என்று கூட யான்  மனிதனை தான் குறை கூறுவேன்!!!!! மனிதனுக்குத்தான் வாழத் தெரியவில்லை என்பேன். அப்பனே

வாழத் தெரியாதவனுக்கு எவ்வளவு உண்மைகளை சொன்னாலும் புரியாதப்பா!!!

ஏனோதானோ என்று சொல்லிவிடுவான்!!!! சென்று விடுவான் அப்பனே
அகத்தியன் இவ்வளவுதான் என்று கூட!!!!!

அப்பனே அகத்தியனை பற்றி அதாவது எதை என்று அறிய அறிய என்னைப் பற்றி யாருக்கப்பா!!!! தெரியும்???????????????

அப்பனே தெரிந்து கொள்!!!!!

 ஏதோ? அகத்தியனை வணங்கினால்!!!!!!! அனைத்தும் கொடுப்பானாம்!!!!!!!!!!!!! என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! எதை என்று அறிய அறிய!!!

கொடுப்பதற்கு அப்பனே நீங்களும் கூட சிறிது கொடுத்திருந்தால் தான் அப்பனே யானும் கொடுக்க முடியும்!!!!!!

எதை என்று அறிய அறிய பின் கொடுக்க வேண்டும் என்று எதை என்று அறிய எந்தனக்கு கொடுக்கத் தேவையில்லையப்பா!!!!!!!

நீ மனிதர்களுக்கு ஈய்!!!! அப்பா!!!!  இயலாதவர்களுக்கு ஈய் !!!அப்பா!!! (கொடு) 

எதை என்று அறிய அறிய அது உந்தனுக்கே நீ செய்யும் பாக்கியமப்பா!!!!! என்றுதான் யான் கேட்கின்றேனே தவிர அதுவும் உன்னை வாழ வைக்கத்தான் நீயே எதை என்று கூட அப்பனே பின் கொடுக்கின்றாயே தவிர மற்றவரை வாழ வைக்க அல்ல!!!!!!!!அப்பனே இவ்வாறு எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து செய்!!!

பின் தெரியாவிடில் அமைதியாக இரு!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய இறைவனை மட்டும் பின் எவை என்று அறிந்து அறிந்து அப்பனே பொய் சொல்லி அப்பனே ஏமாற்றி பின் பக்தி என்பதை பொய்யாக்கி விடாதே அப்பனே!!!!!

இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!!! ஏற்கனவே!!

இதனால்தான் அப்பனே பல அவதாரங்கள் எடுத்து விட்டனர் அப்பனே( கடவுள்/ மகான்கள்) ஒவ்வொன்றாக உரைத்தும் விட்டனர் அப்பனே...... அப்பொழுதும் கூட மனிதன் திருந்தவில்லை அப்பனே!!!!!

அப்பனே இறைவனே வந்து அவதாரம் எடுத்தான் அப்பொழுது திருந்தாத ஜென்மங்கள் இக்கலியுகத்தில் திருந்தவா போகின்றது???????????

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் ஆட்சி வேறு!!!!! மனிதன் ஆட்சி வேறு!!!!!

இறைவன் ஆட்சி செய்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் ஆட்சி செய்யும் பொழுது இவ்வாறு தான் நடக்கும் என்பது விதியப்பா!!!!

இதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். அப்பனே!!!!

ஆனால் எங்களால் தடுக்க முடியும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய பின் யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் தேடிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நல்லோர்களை!!!!

ஆனால் இல்லையப்பா!!!!!

அனைவரும் ஆசை தான் படுகின்றனர் அப்பனே!!!!

ஏதாவது அகத்தியனுக்கு திருத்தலம் அமைத்து காசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கூட!!!!!

அன்பாக வடிவமைப்பது வேறப்பா!!!!! அப்பனே நீ அன்பாக வடிவமைப்பது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் இப்பொழுதும் கூட உன்னிடத்தில் வந்து யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன். அப்பனே கவலையை விடு!! உன் இஷ்டத்திற்கு நட யான் பார்த்துக் கொள்கின்றேன்!!!

(மருதமலை அடிவாரத்தில் முல்லை நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீலோப முத்ரா தேவி சமேத அகத்தியர் திருக்கோயில் அமைத்து சேவை செய்து வரும் அகத்திய  பக்தருக்கு)

அப்பனே நலமாகவே நலமாகவே அப்பனே பின் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகின்றேன் அப்பனே!!!!!!( போலிகளை)

ஒருவன் சொல்கின்றான் அகத்தியனே உந்தனுக்கு அனைத்தும் செய்தேனே என்ன பிரயோஜனம் ??என்று !!!!

எதை எதை என்று அறிய அறிய யான்(அகத்தியர்) என்ன கேட்டேனா ?????முட்டாளே!!!!!!

இன்னொருவள் சொல்கின்றாள்!!!!! உந்தனை வணங்குகின்றேனே எந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்று!!!!!!

எதை என்று நீ யோசித்துப் பார்!!! நீ என்னென்ன? செய்தாய்!!! என்று கூட!!!

எவை என்று கூட பின் தீங்குகள் விளைவிப்பது எதை என்று அறிய அறிய மற்றவர்களை!!!!!....................

ஒன்றைச் சொல்கின்றேன் இதை செவி சாய்த்து கேட்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எப்பொழுது ?? மற்றவரை குறை கூறுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எப்பொழுது பொறாமைகள் படுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எதை என்று அறிய அறிய எப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு தீயவை நினைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

இவ்வாறு அதிகரித்து அதிகரித்து செல்லுமானால் நிச்சயம் உன் உடம்பே பாழாகிவிடும்!!!!! 

நோய்கள் வந்துவிடுமடா!!!!

அணுக்கள் அதிகரிக்க அதிகரிக்க தெரிந்து கொள்ளுங்களடா!!!!!!

முட்டாள்களே பைத்தியக்காரனே எதை என்று அறிய அறிய யான் பாசத்தோடு தான் பேசுகின்றேன் எதை என்று கூட திருந்தாத ஜென்மங்களே.... எதை என்று அறிய அறிய பின் என்னால் முடியாது என்பதை கூட நீங்கள் பார்த்துக் கொண்டு எவை என்று அறிய அறிய!!!!

ஒருவன் சொல்கின்றான் நிச்சயமாய்( பரிகாரமாய் மற்றவருக்கு) திருத்தலத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றுங்கள் என்று!!!!

ஆனால் ஏற்றி விட்டான் ஏற்றிவிட்டு வந்தும் விட்டான் ஒன்றும் நடக்கவில்லை!!!!!

அகத்தியன் பொய் என்று சொல்லிவிட்டான்!!!!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது யார்??? அகத்தியனை பொய் ஆக்குவது??? என்பது மனித முட்டாளே பைத்தியக்காரனே நீதானடா!!!!!!!

எவை என்று அறிய அறிய அப்பனே அன்பால் என்னை நாடுங்கள் அப்பனே யானே அங்கு வருவேன் அப்பனே!!!!

அன்பால்தான் வந்திருக்கின்றேன் அப்பனே இங்கு எதை என்று அறிய அறிய!!!

எவை எவை என்று அறிந்து அறிந்து அதனால் அப்பனே யார் யாருக்கு வாக்குகளை செப்ப வேண்டுமோ!!!!! அவந்தன் எதை எதை என்று அறிய அறிய உண்மை நிலைகளை பின்பற்ற வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் உண்மையானவை எடுத்துரைத்து நிச்சயம் விதியைக் கூட எங்களால் மாற்ற முடியும் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் கர்மா விட்டுவிடுமா??? என்ன அப்பனே

எதை எதை என்று அறிய அறிய!!!!

அப்பனே இவை என்று அறியும் பொழுது யான் சொன்னேன் அப்பனே ஒருவன் இறக்கும் பொழுது அப்பனே ஒரு அணுவானது அப்பனே பின் அவ் காந்தகத்தைச் சென்று பின் அடைய வேண்டும்!!!!

ஆனால் அடைவதில்லை என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்ய செய்ய அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே  அவ் அணுவானது  அவ் காந்தகத்தை( இறைவனை) அடைந்து விடும் அவ்வளவுதான்!!!எவை என்று கூட மறுபிறவி கிடையாது அப்பா!!!!!

ஆனால் இவ்வாறு அடைவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

அவ் அணுவானது சுற்றி திரிந்து அப்பனே திரும்பவும் எவை என்று கூட பின் எவை என்று அறிய குழந்தை ரூபத்தில் எவை என்று உருவாக்கி அதில் நுழைந்து விடுகின்றது என்பேன் அப்பனே.......... மறுபிறப்பாம்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! தெரியாது எவை என்று அறிய அறிய தெரியாது எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தெரியாது என்றாலும் கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே!!!! எதை என்று அறிய அறிய பின் அனைவருமே தெரிந்து கொள்வதில்லை  அப்பனே!!!

பின் சொன்னால்தான் புரியும் என்பேன் அப்பனே ஆனாலும் கலியுகத்தில் உண்மை நிலைகளை சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அப்பனே!!!!

பொய் என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே!!! சுலபமாக ஏனென்றால் அப்பனே காசுகள் முக்கியமப்பா!!!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து காசுகளுக்காக எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் வந்ததில்லை அப்பனே!!!!!

ஏனென்றால் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே யாங்கள் வாக்குகள் செப்புகின்றோம்!!!!

எங்களுக்கு என்ன வேலையா???? எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒருவன் சொல்கின்றான் அப்பனே.... அவை நடக்கும் இவை நடக்கும் என்பதைக் கூட!!!!

என்னதான் நடக்கும் என்பதை யான் சொல்லிவிடுவேன்!!!!!! அப்பனே!!!!

அடுத்த மூன்று மாதங்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூட யான்  தெளிவாக சொல்லி விடுவேன்!!!!

ஆனால் சொல்லிவிட்டாலும் அப்பனே பின் அகத்தியன் வாயால் அது வரக்கூடாது என்பேன் அப்பனே!!!!!

யான் காக்க வேண்டும் மனிதர்களை!!!!!

ஆனால் மனிதன் சொல்கின்றான் அப்பனே எவை என்று கூட அதாவது துர்நாற்றம் பிடித்த வாயால்!!!!!!!!

நடக்குமா? என்ன????????

நிச்சயம் நடக்காது!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய !!!!

அப்பனே மனிதனுக்கு அறிவுகள் அதிகம் என்பேன்!!!

அதைவிட வாய் அதிகம் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அப்பனே இவையெல்லாம் சிறுதளவிற்கே அப்பனே!!! ஆனால் பின் அணுவானது அழிந்து கொண்டே வந்தால் அறிவும் இல்லை!!!! பின் வாயும் இல்லை!!!!!அமைதியாக இருப்பான் அப்பனே!!!!!  அவ் அறிவு வாய் இருக்கும் பொழுதே உண்மையை பேசுங்கள் அப்பனே!!!! உண்மை நிலைகளை எடுத்துரையுங்கள் அப்பனே அவ்வளவுதான் யாங்கள் கேட்கின்றோம் அப்பனே!!!!

உங்களுக்காகத்தான் வந்து இங்கு எதை என்று கூட இவ்வளவு நேரங்கள் எதை என்று அறிய அறிய பல மக்களுக்கும் தெளிவு படுத்துகின்றோம் அப்பனே!!! 

ஏனென்றால் நிச்சயம் அப்பனே ஒன்றைச் சொல்கின்றோம் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இப்படியே விட்டிருந்தால் அகத்தியனே இல்லை அகத்தியன் என்ன சொன்னாலும் பலிப்பதில்லை என்பதை சொல்லிவிடுவார்கள் அப்பனே!!!!!

அகத்தியன் ஒன்றை விட்டு விட்டால் அச் சொல்லிற்கு மதிப்பு நிச்சயம் பலிக்கும் என்பேன் அப்பனே!!!

அவ்வாறு பலிக்காவிடில் அவந்தன் பொய் பொய்யே!!!!!!!!! ( அகத்தியன் வந்து வாக்குரைக்கின்றார் என்று கூறுபவர்கள்)

எதை எதை என்று அறிய அறிய அகத்தியனை பற்றி என்ன தெரியும்??? எவை என்று கூட எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று!!!!

""""""" முருகனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

"""""ஈசனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""""" எதை என்று அறிந்து அறிந்து விஷ்ணுவிற்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""எதை என்று அறிந்து அறிந்து பிரம்மாவிற்கே!!! பாடம் கற்பித்தவன் யான்!!!!

மனிதர்கள் நீங்கள் எல்லாம் ஒரு சிறு தூசி என்பேன் அப்பனே!!!!!

அடித்தால் தாங்க மாட்டார்கள்!!!!

ஆனாலும் அப்பனே என்னை வைத்து பிழைப்பு நடத்துகின்றார்கள் அப்பனே நீங்கள் உண்மையில் புத்திசாலிகள் தான்!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புதிய இறைவனிடத்தில் விளையாட்டாம்!!!!!!!!!!!!!!!!

ஆனால் விளையாட்டு வினையாக போகும் என்பதை கூட அறிந்ததே நீங்கள்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உங்களிடத்திலே அனைத்தையும் சாதிக்கும் திறன் உள்ளதப்பா!!!! இதை யான் தெரிந்து தெரிந்து பல சித்தர்களும் கூட செப்பிக்கொண்டே  இருக்கின்றார்கள் அப்பனே!!!!! அதை வெளிக்கொண்டு வந்தால் அப்பனே நீ சாதித்து விடலாம் அப்பனே!!!!!!

"""""" என்னையும் பார்த்து விடலாம்!!!!! பல சித்தர்களையும் பார்த்துவிடலாம் அப்பனே!!!

அதுதான் மாயை எதை என்று அறிய அறிய உங்களை மறைத்துக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே எவை என்று கூட உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!!!

பிறக்கும்போதும் இல்லையப்பா ஏதும்!!!! எதை எதை என்று அறிய அறிய

இறக்கும் போதும் இல்லையப்பா ஏதும்!!!!! இதை ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்!!!!

நடுவில் தானப்பா வந்தது அனைத்தும் கூட அப்பனே!!!!!

எவை எவை என்று அறிய அறிய அப்பனே பிறக்கும் பொழுதும் நான்கு கால்கள் இறக்கும் போதும் நான்கு கால்கள் அப்பனே இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

தெரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே அணுவானதை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே எவை எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் வாக்குகள் செப்ப !! தான் போகின்றேன் அப்பனே!!!!

அதனால்தான் எதை என்று உணர்ந்த உணர்ந்து அப்பனே வரும் எதை எதை என்று அறிய அறிய திங்களும்( சித்தர்களின் மாதமான சித்திரை திங்கள்) பிறக்கின்றது என்பேன் அப்பனே!!!!

இதனால் சனி எவை என்று கூட தன் ஆட்சி பலத்தில் அதாவது தன் சொந்த இல்லத்திலே. ....... எவை என்று இதுபோலத்தான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே!!!!! இருக்கின்ற பொழுது ஒன்றும் அதாவது பக்திமான்களுக்கு ஒன்றும் நடக்காதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் ஏன் நடக்காது ஏமாற்றுக்காரர்கள் அதனால் தான் சனி பகவான் விட்டு விடுவானா?????? என்ன!!?!!

அப்பனே நிச்சயம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் அப்பனே நீங்கள் என்னென்ன தவறுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூட!!!

அதனால் பின் சனியவன் இங்கு வந்தால் நல்லதை செய்வான் அங்கு இருந்தால் நல்லதை செய்வான் என்றெல்லாம் அப்பனே!!!!

நீங்கள் என்ன????? நல்லதை செய்தீர்கள்?????????? அப்பனே!!!!!!!!

சிறிதளவாவது யோசித்தீர்களா?? அப்பனே!!!

நீங்கள் நல்லதை செய்திருந்தால் தான் அப்பனே சனியவனும் உங்களுக்கு கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லை என்றால் குரு பகவானும் அப்பனே வந்து விட்டு சென்று கொண்டே தான் இருப்பான் வந்து சென்று கொண்டே தான் இருப்பான் ராகு கேதுவும் வந்து சென்று கொண்டே தான் இருப்பார்கள் நீங்கள் தான் அப்பனே அப்படியே இருக்க வேண்டும்!!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய கிரகங்கள் தன் கையில் கூட இருந்து விட்டால் அப்பனே அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!!!!

தன் கையில் அப்பனே பல மனிதர்களை எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களும் ஒன்றும் செய்வதில்லையப்பா!!!!!

ஏனென்றால் அவர்கள் எதை என்று அறிய அறிய அதனைப் பற்றியும் விவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே என் வழிகளில் வந்தவர்களுக்கு அப்பனே!!!!!

முதலில் கிரகத்தை எதை என்று அறிய அறிய அப்பனே ஏற்கனவே சொல்லிட்டேன் அப்பனே நல் முறைகள் ஆகவே!!!!அதனால் அப்பனே எவை என்று உணர்ந்த( சித்திரை) திங்களும் பிறக்கின்றது அப்பனே நிச்சயம் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய வறட்சியான காலங்கள் என்பேன் எதை என்று அறிந்து அறிந்து........

 ஆனாலும் அப்பனே யாங்கள் மாற்றி அமைப்போம் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே இன்னும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் சனியவன் எவ்வாறு என்பதையும் கூட அதனால் தான் புண்ணியம் செய்தால்  அப்பனே நிச்சயம் என்ன தேவையோ அதனை கொடுப்பான்!!!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான் மிஞ்சும் என்பதை கூட பின் கண்கூடான உண்மையப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் கொடுத்தாலும் அப்பனே கஷ்டங்கள் அப்பனே கொடுத்தாலும் எதை எதை என்று அறிய அறிய சந்தோசங்கள் அப்பனே!!!!

அதனால் """""மற்றவர்களை சந்தோஷப்படுத்தி!!!!!!!!! நீங்களும் சந்தோஷம் அடைந்தால்  மட்டுமே சனியவனுக்கு வேலை!!!!

இல்லையென்றால் அப்பனே தூக்கி வீசிவிட்டு சென்று கொண்டே இருப்பான்!!!!!!! சனியவன் அப்பனே!!!!!!

ஏனென்றால்  சனியவன் நியாயாதிபதி!!!!!!!!!

எதை எதை என்று அறிய அறிய ஆறு வருடங்கள் அப்பனே நியாயாதிபதியாகவே திகழ்கின்றான் அப்பனே!!!

(தற்போது)

மூன்று வருடங்கள் முடிவுற்றது !!!!இன்னும் மூன்று வருடங்கள் அப்பனே நியாயமாக செயல்பட்டுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான்!!!!!

அப்பனே உண்மை நிலைகளை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே புரிந்து கொண்டே வாருங்கள்!!!

இன்னும் என்னென்ன விளக்கங்கள் தர வேண்டுமோ? அவையெல்லாம் தந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே !!!!

ஏற்கனவே எவை என்று அறிய அறிய மனிதரிடத்தில் போராடி போராடி ஜெயித்தது போதும் என்பது எவை என்று அறிய அறிய அப்பனே

இவ்வுலகம் எதை என்று கூட பாதி அழிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!!!............

ஆனால் ஏதோ எதை என்று அறிய அறிய வாழட்டும் என்று மனிதனை கட்டுப்படுத்தி எவை எவை என்று அறிய அறிய அப்பனே மனதையும் மாற்றி விட்டோம் மனிதன் பாவம் என்பதை கூட அப்பனே!!!!!

அதனால் மனிதன் கண்டுபிடிப்புகள் எல்லாம் அப்பனே அழிப்பதற்கே தான் சமம் என்பேன் அப்பனே!!!!!

சொல்லிவிட்டேன்!!!!

அதனால் அப்பனே எவை எவை என்று கூட அறிய அறிய எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கிருந்தே அழிவுகள் ஆரம்பம் என்பேன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பொழுது தெரிந்து கொள்ளாவிடிலும் கூட அப்பனே நிச்சயம்...யான் வாக்குகளில் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே எவை என்று கூட!!!!!

இறைவன்!!!!

இறைவனை வணங்கினானாம் ஒருவன் இறைவனை எதை எதை என்று அறிய அறிய அனுதினமும் வணங்கினானாம் ஒருவன் தீபத்தை ஏற்றினானாம் ஒருவன்...... ஆனால் எதை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய புரியா து. மனதில் உண்மையான பக்தி இல்லாமல் ஏதோ பின் இவை நடந்து விட்டால் என்று கூட!!!!!!

அப்பனே ஆனாலும் பொய்களப்பா உண்மையான பக்திகள் அன்பு இருந்தால் அப்பனே அவ் அணுவானது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமாக திருத்தலங்கள் யாங்கள் எவை என்று கூட உருவாக்கவில்லை அப்பா!!!

நிச்சயம் எவை என்று கூட ஒவ்வொரு திருத்தலங்களின் அடியிலும் கூட அப்பனே எவை என்று கூட காந்தகங்கள்!!! எவை என்று உணர உணர அப்பனே மக்களை ஈர்க்க வேண்டும் என்பதைக் கூட.........

அதனால் அப்பனே நிச்சயம் அவ் அணுவானது எதை என்று அறிய அறிய நெருங்கும் பொழுது அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இறைவனிடத்தில் அதாவது காந்தகம் ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!

அவ்வாறு ஈர்க்கும் பொழுது எதை என்று அறிய அறிய
தானாகவே கர்மங்கள் விலகி சென்றடையும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட முன்பெல்லாம் கஷ்டங்கள் படும் பொழுது திருத்தலத்தில் அமர்ந்து எவை என்று அறியாமலே உறங்குவார்கள் அப்பனே!!!!

ஆனாலும் இன்றைய நிலை அப்படியில்லையப்பா!!!!! 

ஏனென்றால் திருத்தலத்திலே மனிதன் திருடுகின்றான் அப்பனே  எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! அப்பொழுது எதை என்று கூட அதுவும் பக்தர்களே!!! திருடுகின்றார்கள்!!! அப்பனே!!!!

இதுதான் தோஷமப்பா!!!!

அப்பனே இவ்வாறு இருக்க எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனுக்கு தெரியும்.... அனைத்தும் கூட எவை என்று அறிய இன்னும் அறிய சில கேள்விகள் மனிதர்களிடத்திலே தங்கியும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

அவற்றுக்கெல்லாம் விடைகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

நீங்கள் எதை எதை என்று அறிய அறிய ஒரு சிறு துரும்பே!!!!!!!

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களோ அதை யான் அறிவேன் அப்பனே!!!

அதற்கு தகுந்தார் போல அனைவருக்கும் பதில் வரும் அப்பனே!!!!! நீங்கள் எவை எவை என்று அறிய அறிய தேடிச் செல்ல தேவையில்லை யானே உரைத்து விடுகின்றேன் அனைத்தும்!!!!!!அப்பனே திருந்துங்கள் எதை என்று அறிய அறிய சித்தர்கள் எவை என்று கூட மனித குலத்திற்காகவே பின் எவை எவை என்று அறிய அறிய வந்தோமப்பா!!! உதவிகள் செய்ய!!!!!

ஆனாலும் எங்களை எதை என்று கூட ஏற்றி (ஏய்த்து) அப்பனே பிழைத்துக் கொண்டு சித்தர்களை எவை என்று அறிய அறிய அப்பனே வேண்டாம் அப்பா!!!!!!

வீணானது!!! எதை என்று அறிய அறிய அப்பனே....ஏனப்பா?? எவை என்று அறிய அறிய அப்பனே பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே ஏமாற்றியது போதும் அப்பனே எதை என்று கூட நீ ஏமாற்றினால் அப்பனே உன் பிள்ளைகளுக்கும் வந்து சேரும் உங்கள் மனைவிகளுக்கும் வந்து சேரும்!!!!! இப்பொழுது ஏமாற்றலாம் அப்பனே!!! சிறிது காலம் தான் அப்பனே!!!!!

ஆனால் அடி விழுந்தால் அப்பனே எவராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!!!

பல யுகங்களில் யான் பார்த்து விட்டேன் அப்பனே இனி மேலும் பார்க்கத் தேவையா????????? அப்பா!!!!!

வேண்டாம்!!!! எதை என்று அறிய அறிய வேண்டாம்!!! வேண்டாம் !!!!!அப்பனே!!!!

திருந்திக்கொள்ளுங்கள் உணர்ந்து உங்கள் மனசாட்சி படி நடந்து கொண்டாலே போதுமானது அப்பனே அனைத்தும் வருமப்பா!!!!

யானே!!!!! வருவேனப்பா!!!!

எதை என்று அறிய அறிய ஏன் அப்பனே உன்னிடத்தில் வரவேண்டும்??? இங்கு ஏன் யான் ஓத வேண்டும்?? அப்பனே!!!!!( மருதமலை அடிவாரம் அகத்தியர் கோயில்)

நீ செலுத்தும் அன்பு தானப்பா!!!!!!!!! (  திருக்கோயில் அகத்திய அடியவருக்கு)

அதுவே எந்தனுக்கு போதுமானதப்பா!!!!!!!! 

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அதனால் அன்பை செலுத்துங்கள் அப்பனே!!!


 யானே வருவேன்!!!!! உன்னிடத்தில் வந்து வாக்குகள் உந்தனுக்கு அருள்வேன் அப்பனே!!! 

என்னை தேடி வர தேவையே இல்லை அப்பனே!!!!

இறைவனை தேடி அலையாதீர்கள்!!!!

 இறைவன் தான் உங்களை தேடி அலைய வேண்டும்!!!!

அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய அவ்வளவு பின் உண்மையாக இருங்கள் புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்பேன் அப்பனே!!!

புண்ணியம் என்பது வேறு ஒன்றும் இல்லை அப்பா சக்தி தான் அப்பா!!!!

அவ் சக்தியை பற்றியும் கூட விவரமாக விளக்குகின்றேன் அப்பனே!!!!

 நன்முறையாக ஆசிகள்!!! ஆசிகள்!!! லோபா முத்திரையோடு அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!