​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 30 September 2022

சித்தன் அருள் - 1190 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் நவராத்திரி வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நம்முடைய குருநாதர் அகத்தியர் பெருமான் இந்த நவதினங்களான நவராத்திரி நாட்களில், பெண்களை அனைவரும் போற்ற வேண்டும். இதனை உணர்த்துவதே கொலு வழிபாடு!!! என உரைத்துள்ளார்.

வரும் காலங்களில் கணவன் மனைவியரிடையே பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் இதனை தவிர்க்க இந்த நவ நாட்களில் கடைசி இரண்டு தினங்களான விஜயதசமி சரஸ்வதி பூஜை தினத்தன்று கன்னிப் பெண்களை போற்றி!!! உடுக்க உடையும் மஞ்சள் குங்குமமும் ஏழை கன்னி பெண்களுக்கு இயன்றதை கொடுக்க வேண்டும்  நல்விதமாக அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை தேவியென போற்றி அவர்களுக்கு நல்விதமாக உணவுகள் வழங்க வேண்டும் அவர்கள் மனம் மகிழும் படியான உணவுகளும் இனிப்புகளும் கொடுத்து அவர்களை தேவி என கருதி வணங்க வேண்டும் இப்படி செய்தால் தேவியவளின் பரிபூரணமான அருள் கிட்டுமப்பா!!!

இதை உணர்த்துவதே நவராத்திரி வழிபாடு இந்த நவ நாட்களும் தேவி  இல்லத்திற்கு வருவாள். நல்விதமாக இயலாத ஏழை கணவன் மனைவி தம்பதியினர்களையும் கன்னிப் பெண்களையும் தேடிச் சென்றாவது உதவிகள் செய்ய வேண்டும். முடிந்தவரை தான தர்மங்கள் செய்ய வேண்டும் !!!

அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து நல்விதமாக இனிப்பு பரிமாறி உணவளித்து முடிந்தவரை உதவிகள் செய்து அவர்கள் மனம் மகிழும் படியான செயல்களை செய்தால் தேவியவள் மகிழ்ந்து உங்களையும் ஆசீர்வதிப்பாள்!! 

அன்றைய நாட்களில் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு அன்னத்தையும் வழங்கிடல் வேண்டும் தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் !! அப்பனே !

கணவன் மனைவியே இடையே ஏற்படும் தேவையற்ற மன குழப்பங்கள் கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும் இதை என் பக்தர்கள் அனைவரும் நல் முறையாக செய்ய வேண்டும்!!!

என்று குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார் இதை அனைவரும் கடைப்பிடித்து நவராத்திரி நாயகி தேவியின் ஆசிர்வாதம் பெறுவோமாக!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

3 comments:

  1. கருணை கடலே ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமோ நம ஶ்ரீ ஓம்

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்.இந்த வாக்கு எங்கே,எப்போது, யாருக்கு உரைக்கப் பட்டது.

    ReplyDelete