​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 13 September 2022

சித்தன் அருள் - 1183 - அன்புடன் அகத்தியர் - திண்டுக்கல்!


சமீபத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம்:- திண்டுக்கல். 

ஆதி ஈசனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக!! நலமாக!! இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் நிகழப் போகின்றது.

நிகழப் போகின்றது என்பேன். எதனால் என்பதைக் கூட... ஆனாலும் ஒன்றை மட்டும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனாக பிறந்து விட்டாலே கர்மாக்கள்.

ஆனாலும் அதிலும் கூட இன்னும் பல மாற்றங்கள் பல மாற்றங்கள் என்பதற்கிணங்க பின் திருத்தலங்களை நோக்கி!! நோக்கி!! புறப்பட்டாலே சில வினைகள் அகலும்.

ஆனாலும் அகலும் பொழுது சில கஷ்டங்களையும் கொடுக்கும். அதனையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் விடிவெள்ளி உண்டு.

ஆனாலும் சில மனிதர்களோ? பின் திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது பல கஷ்டங்கள் வருகின்றது வருகின்றது என்று பயந்து நிற்கின்றான்.

அதனால் இன்னும் அவந்தனுக்கு கர்மங்கள் தான் அதிகம். இதனால் அவந்தனுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.

அதனால் சில மாற்றங்கள் மனிதன் நிலைமையை புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது எதனையென்று கூற கலியுகத்தில் மனிதன் நிச்சயமாக பல கஷ்டங்களில் மிதப்பான். என்பது நிச்சயமான உண்மை.

அதனையும் தடுக்க வல்லது பின் எதனை என்று கூற.... உப்பின் தன்மையை நீங்கள் அறிந்ததே....பின் யான் ஒன்றை கேட்கின்றேன்... உப்பின் எதையென்று கூற எப்பொழுது கரையும்?? என்பதைக் கூட நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள் நன்றாகவே பின் அப்படியே இருந்தால் என்ன ஆகும் என்பதை கூட நீங்கள் நிச்சயமாய் உணர்ந்திருப்பீர்கள். என்பதற்கிணங்க...

இவ் ஹோமங்கள் எவையன்றி கூற இதனையும் கூட நடத்தும் பொழுது அதில் கரையும்.

எவையன்றி கூற அதனால் இதனையும் எதற்கென்று எடுத்துக்காட்டாகவே கர்மங்கள் கரைகின்றது.

இதனால் இவையென்று கூற ஹோமங்கள் இவையென்று கூற அமரும்பொழுது அமர்ந்து அமர்ந்து செல்லும் பொழுது பல கஷ்டங்கள் பல வினைகள் அகன்று கொண்டிருக்கும் பொழுது ஆனால் நிச்சயம் கஷ்டங்கள் தான் வரும் அதனையும் நிமித்து நிமித்து உணர்ந்து கொண்டு உணர்ந்து கொண்டு சரியான முறையில் சரியான முயற்சியில் பின் இருந்தாலே போதுமானது பல கஷ்டங்கள் உன்னை அண்டாது எதனையென்று கூற.

இதனால் பல வினைகள் இங்கு எதனையுமென்று கூற  யான் அறிந்தேன். அதனையும் நிச்சயம் நீக்கி விட்டேன்.

ஆனாலும் எதையென்று கூறும் அளவிற்கு கூட  சில சில மனிதனால் சில வினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

அதனையும் யான் ஆராய்ந்து அவந்தனுக்கும் பல தொந்தரவுகளையும் யான் நிச்சயம் கொடுப்பேன்.

ஏனென்றால் நல்லதைச் செய்யும் பொழுது எதையென்று அதை கெட்டவர்கள் தடுத்தால் நிச்சயம் சித்தர்களால் தண்டனைகள் பெற்று எதையன்றி கூற... ஆனாலும் சொல்கின்றேன் எதையென்று கூற தகுதி படைத்தவரா? நீங்கள்?

எதையென்று கூறும் பொழுது கூட எவையென்றும் பின் இதையென்று அறியாத அளவிற்கும் கூட தகுதிகள் ஆனால் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் எதையென்று கூற பின் எவையென்று கூற அகத்தியன் அனைவருக்கும் சொல்லி விடுகின்றானா!! என்று கூட பல பேர்... எதையன்றி கூற நோக்குவார்கள்.. 

ஆனால் முதலில் யாம் என்ன செய்தோம்?? என்று சிந்திக்க வேண்டும்.. அப்பொழுதுதான் சித்தர்கள் நிச்சயமாய் வாக்குரைப்பார்கள்.

வாக்குரைத்தும் நல் விதமாக எடுத்துச் சொல்வார்கள்..

அப்படி எதையன்றி கூற தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் தன் குழந்தைகள்  நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அப்பனே....

நல்விதமாக தான தர்மங்கள் செய்யுங்கள் இது தான் முதன்மை பங்கு.

அப்படி செய்யாமல் வந்து கேட்டாலும் .... எதையென்று கூற யாங்கள்  ஒரு வார்த்தை சொல்லி விட்டாலும் அப்பனே அதை அனுபவிக்கக் கூடிய தகுதிகள் உங்களிடத்திலே.

அதனால் நிச்சயம் தர்மத்தைக் கடைப் பிடியுங்கள் அனைவரும். நல் விதமாகவே. தானாகவே அத் தர்மமே காக்கும்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் எவை எவை என்று கூற....தான் எவையென்று கூற வளர்த்தோம் உயிரை..ஊனுடம்பை வளர்த்தோம் என்று இருந்து விடாதீர்கள்.

நிச்சயம் கலியுகம் கலியுகத்தில் பல இன்னல்கள் மனிதர்கள் இனிமேலும் சந்திப்பார்கள் என்பதைக் கூட யான் அறிந்தேன்.

ஆனாலும் நல் விதமாகவே இறைவனை சரணடைந்து விட்டால் நிச்சயம் விடிவெள்ளி உண்டு உண்டு.

இவையன்றி கூற ஆனாலும் மனிதனின் மனிதனுக்கு இவையென்று உரைத்த போதிலும் மனிதனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனாலும் இவையன்றி கூற தீராத தர்மமும் நியாயமும் பக்தியும் இறைவன் மீது கொண்டால் நிச்சயம் இவையெல்லாம் மாறிவிடும்.

ஆனால் அவைதன் உணர்வதற்கு.... ஒன்றைச் சொல்கின்றேன்...இவையன்றி கூற பல முறை பல சித்தர்கள் உரைத்து விட்டனர் .

பணத்திற்காக ஓடி ஓடி உழைத்து பணம் சேர்க்கின்றீர்களே ஆனால் புண்ணியத்தை ஏன் உங்களால் சேர்க்க முடியவில்லை???

பின் பணத்தைச் சேர்க்கும் பொழுதே எதையன்றி கூற அறியும் பொழுது பணத்தை மட்டும் சேர்க்கும் மனிதனுக்கு புண்ணியத்தை சேர்க்க தெரியவில்லையே!!!!

எவையன்றி கூற பணம் வந்துகொண்டிருக்கும் பொழுது இறைவன் கண்ணுக்கு தெரிவதில்லை இறைவன் எவையென்று கூற..பின் இறைவனையே மறந்து விடுகின்றார்கள்.

எவையன்றி கூற இப் பணத்தை வைத்து அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்று.

ஆனால் அவை யான் தவறே என்பேன்...தவறே என்பேன். எதையென்று கூற அதனால் பணத்திற்கு ஓடி!! ஓடி!! உழைக்கின்றீர்களே!!!! இதனால் இறை பக்திக்கும் ஓடி ஓடி உழையுங்கள் நிச்சயமாக இறைவன் பாதுகாப்பான் இதுதான் உண்மை.

அப்படி இல்லை என்றாலும் எதையென்று கூற கூறாத அளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டங்கள் விதமாக.

திருமணங்கள் இதையன்றி கூற ஆகவில்லையே என்று எண்ணுகின்றாயே... மற்ற ஜீவராசிகளுக்கும் நீ என்ன செய்தாய்??? கூறு!!!கூறு!? 

இவையன்றி கூற இதனால் இறைவன் கூட அப்படித்தான் பார்ப்பான்.

இறைவனிடத்தில் சில சில மனிதர்கள் வேண்டிக்கொண்டாலும் ஆனாலும் இவந்தன் கணக்கில் என்ன இருக்கின்றது என்று???

ஆனால் ஒன்றும் இல்லையென்றால்!!! நீ சென்று வா !!!என்று கூட மனிதனை அனுப்பி விடுவான். இதுதான் உண்மை புரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே இதையன்றி கூற.... 

நன்றாக நன்றாக இனிமேலும் எவையென்று கூற அனுதினமும் பின் எழுந்திருக்கையில் பின் எதையெதையோ நினைத்து எவையென்று கூற ஊனுடம்பை வளர்க்கின்றனர். ஆனால் பிற உயிர்களை மறந்து விடுகின்றார்கள் மனிதர்கள்.

அதற்கு நல் விதமாகவே உணவை பின் நல் விதமாகவே வைத்துக் கொண்டே வந்தால் நிச்சயம் கர்மங்கள் மாறும் மாறும் அவ் உயிரும் சந்தோசம் அடையும். அப்பொழுது இறைவனும் பார்த்து சந்தோஷம் அடைவான்... இவையன்றி கூற பின் மனிதனையும் சந்தோஷப்படுத்துவான் இதுதான் உண்மை.

அப்படி இல்லாமல் எவையென்று கூற பின் தின்னோமா!!! வந்தோமா!!! இவையன்றி கூற பின் உறங்கினோமா!!! இப்படி இருந்தால் நிச்சயம் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் சொல்லிவிட்டேன்.

எவையென்று கூற யாங்கள் வழியைத்தான் காட்டுவோம்... பல. முட்களையும் புதர்களையும் இவையென்று கூற விலக்கியும் வைப்போம்... அதில் நீங்கள் சரியான வழியில் வந்தால் நிச்சயம் யாங்கள் காப்போம். இது அனைவருக்குமே பொருந்தும்.

எதையெதையென்று கூற ஆனால் உங்களிடையே குறைகள் உண்டு அக்குறைகளை முதலில் திருத்திக்கொள்ளுங்கள் போதுமானது.

மற்றவை எல்லாம் தானாகவே வந்துவிடும்.

எதையும் எதிர்பார்க்காமல் இறைவனை வணங்குவது அதுவே முதல் வகையான பக்தி.

அப் பக்தியை காட்டினாலே போதுமானது. உயர்ந்த இடத்திற்கு நீ சென்று விடுவாய் எவையன்றி கூற. 

கலியின் காலம் இறைவனுக்கும் எதையென்று கூறாத அளவிற்கும் கூட ஆனால் ஒன்றைச்சொல்கின்றேன் இவையன்றி  கூற....

இவைதனை பல முறையும் சொல்லி விட்டேன்.... இறைவனே இப்புவியுலகில் வந்துவிட்டால் கஷ்டங்கள் ஆனால் மனிதர்கள் நினைத்துக்கொள்ளுங்கள் இவையன்றி கூற இறைவனிடம் நாட்டங்கள் பக்திகள் முழுமனதாக அன்புகள் செலுத்தினால் கர்மங்கள் கரைந்து கரைந்து கொண்டே இருக்கும்.

இதையன்றி கூற எவையன்றி கூற "இறைவனை நீர் என்றும் வைத்துக் கொள்ளலாம்...இவையென்று கூற உப்பை நீரில் போட்டால் பின் என்னவென்று தெரிந்து விடும்....

இறைவன் எவையென்று கூற அதனை இறைவனை நீர் என்று வைத்துக் கொள்வோம்...

இப்பொழுது சிந்தியுங்கள்!!! நன்றாகவே தெரியும்!!!!

எவையென்று கூற இறைவன்பால் அன்பு செலுத்தினாலே கர்மங்கள் தொடர்ந்து தொடர்ந்து கரைய ஆரம்பிக்கும். நல் விதமாகவே.

அவையன்றி கூட ஆனாலும் இவையன்றி கூற பலத்த கர்மாக்கள் கரையும் பொழுது சில கஷ்டங்கள் வரும்.
 
அதனை பொறுத்துக்கொண்டு இறைவா!!! இறைவா என்று சொல்லிவிட்டால் நிச்சயம் அனைத்தும் அழிந்து விடும் ஆனால் மக்களுக்கு அதை தெரிவதே இல்லை பல திருத்தலங்களும் பல நன்கு உணர்ந்த ஞானிகளின் பாதைகளுக்கும் செல்லும் பொழுது சில கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் நல் விதமாக.....

இப்பொழுது கூட ஒரு மாணவனே எவையென்று கூற எதையென்று பின் எவை எவை என்று கூற பின் குருமார்களின் பேச்சை கேட்டாலே நன்குணர்ந்து மிக்க மிகுந்த தலம் ஆக எவையென்று கூறும் பொழுது கூட அதைக் கேட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் உயர்ந்து விடுவான். இதுபோலத்தான் கர்மா ஒவ்வொருவரையும் வாட்டுகின்றது. அக் கர்மத்திற்கான வழிகள் நிச்சயம் இறைவன் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றான்.

ஆனால் பின் பாதியிலே இறைவனை விட்டுவிட்டு செல்கின்றனர். எவ்வாறு நியாயமாகும்??

அதனால் இதையன்றி கூற இறைவனை முதலிலே பிடித்துக் கொண்டாலே போதுமானது அனைத்தும் இறைவனே செய்வான்.

எதையென்று கூற மனிதா!! ஒரு பொம்மையாகவே இருக்கின்றாய் நீ என்பேன்.

இதையன்றி கூற அதை ஆட்டிப் படைக்கும் திறன் யான் எவையென்று பொம்மையை நிச்சயமாய் இறைவனே ஆட்டி வைக்கின்றான்.

அப்பொழுது பொம்மைகளால் என்ன செய்துவிட முடியும்???

யான் இங்கு பொம்மை என்று குறிப்பிடுவது மனிதனை.

அதனால் என்னவென்று எதை என்று கூற அனைத்திற்கும் இறைவனே காரணம் என்று மனதை விட்டு விட்டால் குழப்பங்கள் வராது எதனையென்று கூற...

தான் பெற்ற செல்வத்திற்காகவே வரும் துன்பங்கள் எவை என்று கூற...

சிந்தித்தீர்களா என்பதற்கிணங்க இல்லை தோல்விகள். ஆனாலும் தோல்விகளின் பயம் எதை எதை என்று கூற அனைத்திற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறான் மனிதன்.

ஆனால் இறைவனை நாட முயற்சி செய்யவில்லை என்பதுதான் யான் சொல்வேன்.

அப்படி செய்திருந்தால் துன்பங்கள் வராது என்பேன்.

ஏதோ!!!! இறைவன் இருக்கின்றான் என்பதற்காகவே பிடித்துக் கொண்டால் நிச்சயம் சொல்லிவிட்டேன் கஷ்டங்கள் தான்.

இறைவா நீயே என்று கதி என்று இருந்து கொள்ளுங்கள்.

ஆனாலும் இனிமேலும் இறைவனின் நாட்டமே மனிதனுக்கு செல்லாது என்பேன் வரும் காலங்களில்.... கலியுகத்தில் இறைவனை திட்டுவார்கள் எவையென்று கூற சித்தர்களையும் திட்டித் தீர்ப்பார்கள் மனிதர்கள் எவை என்று கூற..

ஏனென்றால் மனிதனுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை ஆனால் மனிதா நீ என்ன செய்தாய்??? என்று கூட சிறிது சிந்தித்துப் பார்.

எவையென்று கூற அப்பொழுது புரியும்... எதனால் நடைபெறவில்லை என்று கூட.

ஆனாலும் உன்னிடத்திலே பல குறைகளை வைத்துக்கொண்டு இறைவனைச் சாடுவதும் சித்தர்களை சாடுவதும் யாங்கள் இனிமேலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனாலும் இவையன்றி கூற வஷிட்டனும் ( வஷிட்ட ரிஷி) இங்கு அமர்ந்து விட்டான். எவையென்று கூற ஆனாலும் இதனையும் கூட நன்றாகவே செய்து விட்டான் அவந்தன் கூட..  இவை எவை என்று கூட....

அதனால் நிச்சயமாய் இன்னும் பல ஞானியர் களும் வருவார்கள் இங்கே..

ஆனாலும் சில மனிதர்கள் எவை எவை என்று கூற நல்லதை செய்வதை நிறுத்த வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அதனையும் யான் முறியடித்து கொண்டே தான் இருக்கின்றேன்..

இவையென்று கூற ஆனால் பக்தியில் இருந்தே பொய் பொறாமைகள் இவையெல்லாம் மனிதனுக்கு இருக்கின்றது அதனால் பக்தியில் இருந்துகொண்டு இவையெல்லாம் செய்துகொண்டிருந்தால் இன்னும் இருமடங்காக கஷ்டங்கள் நிச்சயம் யாங்களே கொடுப்போம்.. திருந்திக் கொள்ளுங்கள் எவை என்று கூற.

உண்மையான பக்தன் எவையென்று கூற அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று உணர்ந்து அமைதியாக இருந்து விடுவான்.எவையென்று கூற.

ஆனாலும் வரும் காலங்களில் போட்டி பொறாமைகள் இவையன்றி கூற மனிதர்களுக்கு நிறைந்திருக்கும்.

யானே பார்த்து இருக்கின்றேன். பின் எவை என்று கூற என் பக்தர்களே எவை என்று கூற அகத்தியன் அகத்தியன் என்று சொல்லி யான் பெரியவன் யான் பெரியவன் என்றெல்லாம்.

ஆனாலும் அவந்தனுக்கும் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் எவை என்று கூற சிறு குழந்தையாக மனதை வைத்துக் கொண்டு இருந்தாலே யாங்கள் நிச்சயமாய் வருவோம்...எவையென்று கூற கஷ்டங்களை அள்ளி கலியவன்(கலிபுருஷன்) தந்தாலும் யாங்கள் அதை நீக்குவோம் நிச்சயம்....எவையென்று கூற. 

உண்மையான பக்தர்களுக்கு விதியைக் கூட யாங்கள் மாற்றி வைப்போம் இது நிச்சயம். எவையன்றி கூற உண்மையான பக்தர்களுக்கு பிரம்மாவிடமும் சண்டையிட்டு விதியையும் மாற்றுவோம் இது நிச்சயம் சத்தியம்.

ஆனால் உண்மையான மனிதன் இல்லையப்பா!!!

 எப்படி யாங்கள் மாற்றுவது???

எதையன்றி கூற எப்படி எப்படி எவையென்று கூற அதனால் இன்னும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.... தகுதிகளே இல்லையப்பா.... மனிதன் என்று சொல்வதுண்டு ஆனால் மனிதனே பல செய்கைகள் எதையென்று கூற அனைத்தும் அழிவிற்கு காரணமாகவே செல்கின்றது.

இதனால் மனிதன் மனிதனை உணர்ந்து உணர்ந்து கொண்டு பக்தியை பிடித்தாலே இன்னும் பல சாதனைகள் புரியலாம்.

ஆனாலும் எவை எவை என்று கூற இன்னும் போலி குருமார்கள் வழியை பின்பற்றுவார்கள் மனிதர்கள்.

உண்மையைச் சொல்லிவிட்டேன்.

உண்மையான குருமார்களும் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் சொல்லை நிச்சயம் மதிக்க மாட்டார்கள். ஏனோதானோ என்று கூட.....

ஆனாலும் இவை என்று கூற உண்மையான பக்தர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதை கூட யான் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன். அவ்வாறே செயல்பட்டுக் கொண்டிருந்தாலே  நல்லவையாகவே முடியும்.

அப்பனே திருந்துங்கள் மனிதர்கள் எவை என்று கூற... யாங்கள் சித்தர்கள் இங்கே வலம் வந்து கொண்டே  தான் இருக்கின்றோம் எவை என்று கூற...

அதனால் சொல்லி விடுகின்றேன் நீங்கள் செய்யும் பாவம் தான் உங்களை வாட்டுகின்றது அதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எவை என்று கூற...

எவை என்று கூற ஆனாலும் அதையும் யாங்கள் நீக்குவோம் எவையன்றி கூற உண்மையாகவே நேர்மையாகவே எவை என்று கூற பொய் கூறாமையாகவே இருந்தால் நிச்சயம் யாங்கள் மாற்றுவோம் எவை என்று கூற...

யானும் பார்த்திருக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் ஆனாலும் அதையும் யான் ஆராய்ந்தால் அவன் மேலும் சில பழிகள் உண்டு என்பேன்.

அப்பனே சொல்லி விடுகின்றேன் கஷ்டங்கள் தானாகவே வருவதில்லை....எதையன்றி கூற நீங்களாகவே வளர்த்திக் கொண்டுள்ளீர்கள் யோசித்துக் கொள்ளுங்கள்.... எதனால் என்பதையும் கூட....

அதனால் நிச்சயம் ஒரு வழியும் வகுப்பேன் கவலைகள் இல்லை...

என்னிடத்திலும் வந்து விட்டீர்கள் நீங்கள் அகத்தியா!!! இறைவா!!! என்றெல்லாம் ஆனால் யான் நிச்சயம் மனமிரங்கி  நல்வாழ்த்துக்களாக கூறி நல் விதமாகவே மாற்றுவேன். 

ஆனாலும் கர்மத்தின் பாதையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பேன். இவ்வுலகத்தில் அனைவரிடமும் கேட்டுப் பாருங்கள்  எவை என்று கூற உங்களுக்கு என்ன  என்றுகூட.

ஆனால் ஒரு ஒரு மனிதன் கூட நான் நன்றாக இருக்கின்றேன் என்று சொல்ல மாட்டான்.எதையென்று கூற கஷ்டம்தான் என்று சொல்லுவான்.

ஆனாலும் இவையன்றி கூற இறைவன் மீது பக்தி வையுங்கள் அன்பு செலுத்துங்கள் நிச்சயமாய் நல் விதமாகவே இறைவன் புத்தியை புகுத்தி நல் விதமாகவே மாற்றி விடுவான் எவை என்று கூற.

இவ்வுலகத்தில் இன்னும் எவை எவை என்று கூட கலியுகத்தில் வாழ்வதே கடினம் தான் மனிதர்களுக்கு ஆனாலும் எங்கள் அருளால் நிச்சயம் யாங்கள் மாற்றம் அடையச் செய்வோம் அதனால் எக் குறைகளும் எவை எவை என்று கூட ஆனாலும் பல திருத்தலங்கள் எவையன்றி கூற ஒவ்வொரு திருத்தலமும் அடியோடு அழிந்து கொண்டு அழித்தும் விட்டனர்.

அவைதன் யாங்கள் உயர வைப்போம் ஏனென்றால் அதில்தான் பல சூட்சமங்கள் பல சக்திகள் உள்ளது அவைதன் எவையென்று கூற பலப்பல வாழ்ந்த அரசர்கள் பழைய எவையென்று கூற அவையும் அடியோடு அழித்து விட்டனர்..அவை அடியோடு அழித்து விட்டனர் எவையென்று கூற மக்கள் இதனை பயன்படுத்தாமல் இருந்தால் நிச்சயம் அழிவுக்கு போய்விடுவார்கள் என்று கூட...

ஆனாலும் ஒவ்வொரு திருத்தலத்தையும் யாங்கள் சென்று சீரமைத்தாலே போதுமானது தர்மம் தலையை நோக்கி நிற்கும். நல் விதமாக உயரும்.

ஆனாலும் எவையென்று கூற அதனால் தான் முயற்சி எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது எதுவும் இல்லை.

தன் முயற்சி செய்தாலும் ஏன் தோல்விகள் வருகின்றது???

ஆனால் உண்மையான பக்தி இல்லையேயப்பா. இதைத்தான் யான் குறிப்பிடுவேன்.... உண்மையான பக்தியாக இருந்தால் நிச்சயம் விடிவெள்ளியாக யாங்கள் கண்விழித்து  பின் அதனை யாங்கள் நிறைவேற்றியே தீருவோம் எவை என்று கூற.

அதனால் பொய் எவையென்று கூற ஆனால் எதையன்றி கூற பின் திருத்தலங்கள் கட்டும் பொழுதும் கூட அதிலும் கூட போட்டி பொறாமைகள்...

எப்படி இறைவன் ஏற்பான்???

இறைவனை எவை என்று கூற பின் நிற்க வைப்பான் சில ஆலயங்கள் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கின்றது.

எவையென்று கூற ஆனால் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் தாங்களாகவே முன்வந்து எதையன்றி கூற யாரால்?? எப்படி உருவாக்க வேண்டும் என்பதை கூட நிச்சயம் உருவாக்குவோம் இதையன்றி கூற...

அப்பனே நல் விதமாக எதை எதை என்று கூற எவை என்று கூறும் பொழுது கூட இன்னும் வலிமைகள் பெற்று நல் விதமாகவே மாறச் செய்து இக்குடிலை பலப்படுத்துவோம்...எவையென்று கூற.. 

நல்லோர்களுக்கு உதவிட இன்னும் சிறப்புக்கள் உண்டு என்பேன் அதனால் மனிதர்களே தெரிந்து கொள்ளுங்கள். இறைவனை நோக்கினால் நிச்சயம் கஷ்டங்கள் வரும் சொல்லிவிட்டேன் அக்கஷ்டத்தையும் பின் பகிர்ந்துகொண்டுயான் இறைவனை அப்பொழுதும் உன்னைத்தான் வணங்குவேன் என்று வைராக்கியத்துதோடு இருந்துவிட்டால் நிச்சயம் இறைவன் மனமகிழ்ந்து பின் தன் பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டு அனைத்தும் செய்வான்.

ஆனால் மனிதன் தான் நினைத்ததை உடனே அடைய வேண்டும் என்று எண்ணுகின்றான்.

எவ்வாறு நடக்கும்??? இது சாத்தியமா ??எண்ணிக் கொள்ளுங்கள். நிச்சயம் நடக்காது தான் என்று கூறுவேன்.

தன் பிள்ளைகளை பற்றியும் தான் தன் எண்ணங்களை இவ்வாறு என்பதையும் கூட எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கூட தன் பிள்ளைகளுக்காகவே பின் எதையன்றி கூற என்னிடத்திலே பின் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அதனால் நிச்சயம் நீங்கள் செய்யும் தர்மங்கள் உங்கள் பிள்ளைகளை காக்கும் நிச்சயம் சொல்லிவிட்டேன்.

அதனால் முதலில் தர்மத்தை கடைபிடியுங்கள்!!!! இயலாதவருக்கும் உணவளியுங்கள்!!!! மற்றவை எல்லாம் இறைவனே பார்த்துக்கொள்வான்..

அவை விட்டு விட்டு ஏதும் செய்யாமல் தான் பிள்ளைகள் நலமாக வாழவேண்டும் தான் நலமாக வாழ வேண்டும் பல செல்வாக்கோடு வாழவேண்டும் என்றால் இறைவன் இவையன்றி கூற உன் அருகிலே நிச்சயம் வர மாட்டான். 

எவையன்றி கூற இவன் எதையென்று கூறும் பொழுது கூட இவன் பிழைக்கட்டும் என்று இறைவன் அருள் ஆசிகள் இல்லாமல் சென்று விடுவான்.

அப்பொழுது நீங்கள் திரும்பவும் கஷ்டங்கள் பட்டு பட்டு அனைத்தும் இழந்து விட்டு மீண்டும் இறைவனை வந்து வணங்கினால் இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்???

அதனால் மனிதனே!!! மனிதனுக்கு யான் புத்திகள் இல்லை என்றுதான் சொல்வேன்.

எவையன்றி கூற எப்படி இறைவனை நேசிப்பது எதையன்றி கூற தன் பிள்ளைகளை நேசிப்பதும் தன் இவை என்று கூற காந்தர்வத்தை(கணவன்,மனைவி) நேசிப்பதும் ஆனால் அப்படி உள்ள மனிதன் இறைவனை நேசிக்க தெரியவில்லையே!!! என்று வருத்தம்தான் தோன்றுகின்றது.

நிச்சயமாய் எவை எவை என்று கூற ஆனாலும் வரும் காலங்களில் பொய்யர்கள் அதிகமாவார்கள் அப்பனே.

எவையென்று கூற அதனால் உண்மையானதை இறைவன் அன்பை செலுத்தினால் உண்மையான இடத்திற்கு அழைத்துச் செல்வான் சொல்லிவிட்டேன் எவை எவை என்று கூட.

பெரும் குறைகளப்பா மனிதனிடத்தில் எதையென்று கூற... வரும் காலங்களில் ஏமாற்றியும் பிழைப்பு நடத்துவார்கள்... ஏமாந்து விடாதீர்கள். சொல்லிவிட்டேன்.

இவையன்றி கூற இன்னும் பல சித்தர்களும் வாக்குகள் செப்பிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்... இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம்.

ஆனால் மனிதனின் நிலை எப்படி எதிர் நோக்கி இருக்கின்றதென்றால் பணத்தை நோக்கி தான் இருக்கின்றது .யான் சொல்வேன் உண்மையிலே ஆனால் அப்படி நிச்சயம் இருந்துவிடாதீர்கள்... இறைவனை நோக்கி இருங்கள்.... பணம் தானாகவே வந்துவிடும்.

அவ் பணம் வரும்பொழுது எதையென்று கூற இயலாத மனிதர்களுக்கும் உதவிடுங்கள் எவை என்று கூற அப்பொழுது தான் இறைவன்...... 

பணம் பணம் என்று சென்று கொண்டிருந்தாலே!!! இறைவன் கூட நீ!!! ""அப்படியே சென்று விடு"" என்று சொல்லிவிடுவான்.

ஆனால் பணம் நிலை இல்லாதது பின் அதனையும்கூட அப் பணத்தின் பின்னாலே சென்றால் ஒரு நாள் அப் பணமும் இறைவனிடத்தில் வந்து சேரும் ஆனால் மனிதனோ நீ நிச்சயம் இறைவனிடத்தில் சேரப் போவதில்லை.

பணம் எதையன்றி கூற அதனால் சரியான முறையில் கண்காணித்து எவை என்று கூட எது உண்மை என்று கூட தெரிந்து கொண்டாலே உலகம் உன்னைப் போற்றும் வணங்கும்.

எவையென்று கூட தர்மத்தை கடைப் பிடித்தால் ஜீவராசிகளும் உன்னை வணங்கும்.

பொய் சொல்லாமையாக நேர்மையாக நடந்து கொண்டால் இறைவனும் உன்னை வணங்குவான்.

மனிதா!!! இது கலியுகம் சொல்லிவிட்டேன்... ஆனால் எவை என்று எதை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்கோட்டம் (மனக்கோட்டை) எதையென்று எதற்காக?? கட்டுகிறீர்கள் மனக்கோட்டம்??

ஆனால் அது நடக்காது என்பதை கூட சித்தர்களுக்கும் எவையன்றி கூற இறைவனுக்கும் தெரியும்..

ஆனால் மனிதனோ நடக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் அது பொய்.

ஆனாலும் இவையென்று அப்படியே நடந்தாலும் இறைவன் சுலபமாக எடுத்துக் கொள்வான் ஏனென்றால் எவை என்று கூற.... நடந்துவிட்டால் தான் தான் என்ற அகங்காரம் வந்துவிடும். தான் தான் பெரியவன் என்று வந்துவிடும் அதனால் இறைவன் நிச்சயம் எடுத்துக் கொள்வான் சொல்லிவிட்டேன்.

அதனால் இவையன்றி கூற எதையன்றி கூற இன்னும் பொய்யான சுவடிகள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் அவ்வாறு பரிகாரம் செய்!!! இவ்வாறு பரிகாரம் செய்!!! பொறுத்திரு !!!என்றெல்லாம்.....

ஆனாலும் நம்பிவிடாதீர்கள் எவையென்று கூற...

முதலில் தர்மத்தை நோக்குங்கள்... நல்வழியை கடைப்பிடியுங்கள் எவையன்றி கூற சித்தர்கள் யாங்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று உரைத்துக் கொண்டிருக்கிறோம்... அப்படியே வாழ்ந்து விட்டால் யாங்கள் இன்னும் பல வாக்குகளாக எவையன்றி கூற எப்படி செய்வது என்பதை கூட சொல்லி விடுகிறோம்.

அப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட்டு நலமாக நலமாகவே வாழ்ந்து விடுவீர்கள்.

எதற்காக பல மனிதர்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை??? எவையன்றி கூற இன்னும் குழந்தைகளும் பிறப்பதில்லை????

ஏனென்றால் தவறான மனிதரிடத்தில் சென்று அவன் கர்மா எதையன்றி கூற பின் பற்றி தவறான வழியில் அவந்தன் எதை எதையோ பயன்படுத்தி கொண்டு பின் இறைவன் சொன்னான் !!சித்தன் சொன்னான்!!! என்றெல்லாம் சொல்லி அவன் கர்மத்தை பின் அவரிடத்தில் செல்பவர்களுக்கும் விட்டு விடுகின்றான்.

அப்பொழுது எவ்வாறு நல்லது நடக்கும்???

யோசித்துக் கொள்ளுங்கள்.

இறைவன் இருக்கின்றான்!!!! இறைவனை கெட்டியாக பிடியுங்கள்... போதுமானது.

அதை விட்டுவிட்டு எதையன்றி கூற எவையென்றும்!!!

இதன் முன்னே பார்வதிதேவியும் உரைத்தாள்!!!!!!!! எவையென்று கூற.... எவையென்று கூற இறைவனே!! படைத்தவனை!!!! எவையன்றி கூற எதையன்றி கூற...... படைத்தவனை நம்பு என்று கூட.....

ஆனால் எதையன்றி  கூற இவையன்றி கூற  ஜில்லென்று  எதையென்று கூறும் பொழுது கூட அப்பனே!!!!
 ஒழுங்காக மனிதர்கள் இல்லையப்பா!!!!

யானும் பூலோகத்தில் நல்மனிதர்கள் இருக்கின்றார்களா??? என்று தேடித்தேடி பார்க்கின்றேன்!!

ஆனால் ஒரு சுவடியை வைத்துக் கொள்கின்றான். 

எவையென்று கூற பொய் சொல்லி எதையன்றி கூற இப்படிச்செய்!! அப்படிச்செய்!! என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி திரிந்து கொண்டு இருக்கின்றான்.

எந்தனுக்கே!!! வேதனையாகத்தான் இருக்கின்றது.

ஆனாலும் யான் எப்படி சொல்வது??

பிழைக்கட்டும் என்று விட்டு வைத்துத்தான் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் அவன் கெடுத்துக்கொண்டு மனிதர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றானே!!! அதுதான் பொறுக்க முடியவில்லை. அப்பனே!!!! திருந்துங்கள்.

எவையென்று கூற போலியான பக்திகள் அப்பனே எவையன்றி கூற இனிமேலும் யான் அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்று சொல்லுகின்ற மனிதனை நிச்சயம் நம்பிவிடக் கூடாது.
என்பேன். 

ஏனென்றால் பல காரியங்களையும் பல வித்தைகளையும் தெரிந்துகொண்டு கர்மத்தை அவனிடத்தில் வைத்துக் கொண்டு கற்றுக் கொடுப்பான்!!

ஆனால் நீங்கள் நல் விதமாக அவனிடத்தில் சென்றடைந்தால்.... சொல்லிவிட்டேன் முன்பே கர்மம் அவனிடத்தில் பாதி உனக்கு வந்தடையும் அப்பொழுது உங்களுக்கும் என்ன நடக்கும் என்றால்! நிச்சயம் அவனுடைய கர்மா பாதி உன்னிடத்தில் வந்து விடும். ஒன்றும் நடக்கப்போவதில்லை இவையன்றி கூற.

பல இதையன்றி கூற பல திருமணமாகாத பெண்களையும் ஆண்களையும் யான் பார்த்திருக்கின்றேன்... ஏனென்றால் இப்படித்தான் கர்மா அனுப்புகின்றனர்.

ஆனால் பல வித்தைகளை செய்து மக்கள் எவையென்று கூற  ஏமாறும்படி செய்து விடுகின்றனர்.....

மாந்திரீகம்...!!! இவையன்றி கூற அதனை வைத்தும் சுவடியை வைத்துக்கொண்டே பின் பாடம் கற்கின்றனர்.

அப்பனே இவையன்றி அதற்கு சென்று விட்டால் நிச்சயம் ஓர் இதையன்றி கூற பின் மனம் பைத்தியம் போல் அலைந்து விடுவாய்.. அதனால் சொல்லிவிட்டேன்.

உண்மையை நம்புங்கள் இறைவனிடத்தில் பக்தியை செலுத்துங்கள்...

இறைவனே உண்மையானவர்களை காட்டிக் கொடுப்பான்!!!

மற்றவையெல்லாம் எதையென்று கூறும் பொழுது கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை சொல்லிவிட்டேன்.

அதனால் தர்மத்தை முதலில் கடைபிடியுங்கள் போதுமானது.

இறைவன் வந்து அனைத்தும் சொல்வான் எவை எதை என்று கூற...

பல யுகத்திலும் யான் வாழ்ந்துதான் கொண்டிருக்கின்றேன்.... ஆனால் மனிதனின் செயல்கள் அப்பனே எவையென்று கூற....

ஒரு யுகத்தில் எவையன்றி கூறும் பொழுது கூட

"""இறைவனே ஆட்சி செய்தான்........ சுலபமாக ஆனாலும் பக்திகள் பெருக்கெடுத்து ஓடியது.

ஆனால் கலியுகத்தில் மனிதனின் ஆட்சி மனிதனின் எண்ணங்கள் போல் தான் இருக்கின்றது.

இதிலும்கூட இறைவனிடத்தில் நாட்டம் வைத்தால் இறைவன் நிச்சயமாய் உன்னை உயர்த்தி வைப்பான்.

இதுதான் அப்பனே...

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்..... இறைவன் எவை என்று கூறும்பொழுது நெருங்கும் பொழுது கூட இறைவனுக்கு ஒரு விளையாட்டு உண்டு.

சோதனைகளைச் செய்ய சோதனைகள் செய்து செய்து எவையன்றி கூற அப்பொழுதும் கூட மனிதன் 

""""இறைவா நீதான் என்று கண்ணீர் விட்டால்!!!!! இறைவனும் கண்ணீர் விடுவான்... மனிதனுக்காக தயாராகிக் கொண்டே இருக்கின்றான் இறைவன்!!!.

செய்வதற்கு மனிதன் மனிதனுக்கு ஆனால் மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்காக இல்லை எவை என்று கூற.....

திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்...எவையென்று கூட நீதி!!! நியாயம்!! தர்மம்!!! இவற்றை கடைபிடியுங்கள்.

இறைவனே உன்னை கை கூப்பி வணங்கிடுவான்.

அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் இது கலியுகம் எவையென்று கூற..... ஆனாலும் இதையன்றி கூற. அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றெல்லாம் வீணப்பா !!

இதையன்றி கூற இப்பொழுது புரிகின்றதா???

இவை ஹோமம் எதைக் குறிக்கின்றதென்றால் அப்பனே....இதில் இடும்பொருட்கள் அனைத்தும் கரையும். எதையென்று கூற அதனால் பங்கேற்கும் பொழுதும் எதையென்று கூற !!! மனதில் உள்ள!!!!  எதையென்று கூற  உடம்பில் உள்ள!!!!!! எவையென்று கர்மாக்கள் குறைந்து கொண்டே போகும்.

ஆனாலும் குறையும் பொழுது பெரும் குற்றம் வரும் அவற்றை எல்லாம் தாண்டி இதனையுமென்று நெருங்காத அளவிற்கும் கூட உண்மைகள் காட்டும்.

இதையன்றி கூற ஒரு அர்த்தத்தில் உண்டு.

உண்டு, என்பதற்கிணங்க!!!

ஒரு சீடன் வந்தான் எதையென்று கூற பின் குருவிடமே இருந்து விடுவோம் என்று எண்ணினான்.

ஆனாலும் இதையென்று கூட குருவையே பணிந்தான்!!! அனைத்தும் செய்வான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் குருவே இவன் எப்படித்தான்?? வாழப் போகின்றான்???? 

சில சோதனைகளை கொடுப்போம் என்று கூட!!!

ஆனால் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

ஆனால் சீடனோ எதையென்று கூற பின் குருவே வணங்கிக் கொண்டு இருப்போம் என்று கூட...

ஆனால் நடுவில் உள்ள மனிதர்கள்!!!  சீடனே இவ்வாறு குருவிற்கு!!! நீ செய்து கொண்டிருக்கின்றாயே...

என்ன லாபம்? உந்தனுக்கு???

உந்தனுக்கு கஷ்டங்கள் தான் வருகின்றது!! நீ என்ன சுகத்தை அனுபவித்தாய்??? 

ஆனால் நாங்கள் குருவையே வணங்குவதில்லை எங்களுக்கு  அனைத்துமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது... அவனை உசுப்பேற்றினார்கள்....

அவனும் எதையென்று கூற..

ஆனால் இது குருவிற்கு வசம் ஆகவே காதுக்கு எட்டியது.

ஆனாலும் சீடனோ!!! யான் இனிமேலும் உந்தனுக்கு ஏதும் செய்யமாட்டேன் எவையென்று கூற...

உன்னை வணங்கி என்ன பிரயோஜனம்??? என்று கூட..

ஆனால் எவையென்று கூற என் தோழர்களோ இவையன்றி கூற ஏதும் வணங்குவதில்லை அவர்கள் நன்றாகத் தான் இருக்கின்றார்கள் என்று கூட....

நீ குருவே இல்லை!!! என்றுகூட பின் எதையென்று கூறும் பொழுது கூட விட்டு விட்டு  சீடன் சென்று விட்டான்.

ஆனால் சில காலம் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தான்.

ஆனாலும் இவை என்று கூற நலங்களும் வந்து சேர்ந்தது.

பின் எவையென்று கூற ஊர் ஊராகச் சுற்றினான்... 

எந்தனுக்கு எவை என்று கூற இறைவன் எதை என்று கூற குருவும் இல்லை எவனும் இல்லை...

எதையென்று கூற பணம்தான் மூலாதாரம் என்று கூட...

ஆனால் கடைசியில் வந்தது சோகம் இவையன்றி கூற.

கடைசியில் பிழைகள் அடைந்துவிட்டான் ஆனாலும் இவையன்றி கூற அப்பொழுது பணம் ஒன்றும் செய்யவில்லை நண்பர்களும் ஒன்றும் செய்யவில்லை...

எதனாலும் எவையென்று கூற காப்பாற்ற முடியவில்லை அப்பொழுது எவை என்று கூற

பின் எட்டியது குருவிற்கு செய்தி. 

பின்  சென்றான் சிறைக்கு குருவானவன் எதையென்று கூற... 

அப்பனே நன்றாக இருக்கின்றாயா??? என்று கூட.

ஆனால் சீடன் அழுதான் புலம்பினான்...இவையன்றி கூற.... குருவே!!! என்னை மன்னித்துவிடு எவையென்று கூற....

யான் அப்பொழுதே உன்னை நம்பிக்கொண்டிருந்தால்

எந்தனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் ஆனால் இப்படி எதை என்று கூற தீயோர்களின் சேர்க்கையால் இப்படி நடந்து விட்டதே என்று கூற... 

ஆனாலும் குருவும் அப்பனே அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறி சென்றுவிட்டான். 

அப்பொழுது கர்மா எவ்வளவு பலமாக செயல்படுகின்றது என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் விடவில்லை குருவானவன் பின் தன்னிடத்திலிருந்து கொண்டானே என்றுகூட அவந்தனுக்காக இறைவனிடம் மன்றாடி எவையென்று கூற சண்டையிட்டு அவந்தனுக்கும் நல்வாழ்வு கொடுத்தான் ......

இதுதான்...குரு..... தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே!!!!

உண்மையான குருக்கள் இவையென்று கூற இவ்வுலகத்தில் இல்லையப்பா.... பொய்யானவர்களே அப்பனே.

இவையென்று கூற...பின் நீங்கள் நல் முறையாக அன்பு இறைவனிடத்தில் செலுத்தினால் நன்மைகள் ஆகவே இறைவன் நிச்சயமாய் உண்மை இடத்திற்கு கொண்டு செல்வான்.

அப்பனே அதைவிட்டுவிட்டு அதைச் செய் இதைச் செய் அத் திருத்தலத்திற்கு செல் என்றெல்லாம் பொய் கூறி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது.....

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் ஓர் திருத்தலத்தை பற்றி நல் விதமாக எவையென்று கூற நான் செல்ல வேண்டும் அப்பனே என்னை அழை!!! 

அத்திருத்தலத்திற்கு எந்தனுக்கு எவையென்று கூற காண வரவேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டே இருங்கள்...

இறைவன் கையைப் பிடித்து உங்களை அழைத்துச் செல்வான் இதுதான் உண்மையப்பா!!! 

எதையென்று கூற அதனால் ஓர் திருத்தலத்தை அப்பனே மனதில் சிந்தித்துக் கொள்ளுங்கள். அங்கு சென்றடைய வேண்டும் என்று கூட.

அனுதினமும் அத் திருத்தலத்தை மனதில் எண்ணி இல்லத்திலே!!!  தீபமேற்றி வாருங்கள் அப்பனே!!!! 

அத்திருத்தலத்தை பற்றியும் கூட பதிகங்கள் பாடி வாருங்கள்.

நிச்சயமாய் இறைவன் வந்து கையைப் பிடித்து இழுத்துச் செல்வான் அத் திருத்தலத்திற்கு....

இதுதான் அப்பனே!! தர்மம்

இவையன்றி கூற அதனால் மனிதன் சொல்லிவிட்டாலும் அத் திருத்தலத்திற்கு செல் இத் திருத்தலத்திற்கு செல் என்றுகூட... அப்பனே ஒன்றும் நடக்கப்போவதில்லை. சொல்லிவிட்டேன்.

இதை நிச்சயம் அனைவரும் எதிர்த்து செய்யுங்கள் அப்பனே.

நல் விதமாகவே மாறும் என்பேன் அப்பனே....

ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே!!!! 

சித்தர்கள் எவையென்று கூற கற்களும் முட்களும் புதர்களும் இருக்கின்ற பாதையை நல்வழியாகவே மாற்ற வந்திருக்கின்றோம் யாங்கள்.

அதனால் நிச்சயம் எங்களை நம்பியவரை யாங்கள் நிச்சயம் கைவிட மாட்டோம்!!!

அதனால் இது அனைவருக்கும் பொருந்தும் சொல்லிவிட்டேன்.அப்பனே!!

இவையன்றி கூட ஓர் ஓர் நாள் அப்பனே ஒரோர் ஜீவராசிக்காவது உணவளிக்க வேண்டும்... இதுதான் பண்பு என்பேன் அப்பனே.

அவ்வாறு எதனையென்று கூற ஆனாலும் இருக்கின்றார்கள் அப்பனே ஓர் உயிரைக்கொன்று உண்பவர்களும் அதையெல்லாம் விட்டுவிடுங்கள் அப்பனே!!!

எதையன்றி கூற ஆனாலும் ஓர் உயிரை கொன்று அதன் ரத்தம் !!!!!!! இவையன்றி கூற பூமியில் விழும் பொழுது நிச்சயம் உன்னுடைய ரத்தமும் விழுந்திடும்....!!!!!!!

இதுதான் அப்பனே உலக நியதி!!!!

உன்னால் ஒரு ஜீவராசியின் உதிரம் சிந்தப்பட்டால் நிச்சயம் உன் உதிரமும் சிந்தும்... அதனால் அப்பனே எவ் ஒரு ஜீவராசிக்கும்  தவறிழைக்காதீர்கள். 

அப்பனே திருந்திக்கொள்ளுங்கள்!!! 

எதற்காக எவை என்று கூற பூலோகத்திற்கு வந்து இருக்கின்றீர்கள்??

எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமலே வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே!!

அவையெல்லாம் வரும் வரும் காலங்களில் யான் சிறப்பாகவே சொல்வேன்!!!

அதைப் பயன்படுத்திக் கொண்டு நிச்சயம் தர்மத்தை கடைபிடியுங்கள். போதுமானது.

சித்தர்களே வருவோம்.

ஆனாலும் இப்பொழுதும் சொல்லிவிட்டேன் அப்பனே மனிதர்களை நம்பி விடாதீர்கள்!!!

காசுக்காகவே அனைத்தும் அப்பனே.

எவையன்றி கூற எவனொருவன் காசுகளை எதிர்பார்க்கின்றானோ?!! 

நிச்சயமாய்!!! சத்தியமாய்!!! சித்தர்கள் யாங்கள் அங்கே இருக்க மாட்டோம்...எவையென்று கூற. 

அப்பனே எதையன்றி கூற அப்பனே இவையென்று கூற அப்பனே வேண்டாம் அப்பனே... திருந்திக்கொள்ளுங்கள். 

இது கலியுகம் அப்பனே!!! 

பல போராட்டங்கள் நிறைந்த வாழ்வைதான் மனிதனுக்குத் தரும்....

அதிலும்கூட இறைவன் பாதையை சரியாக தேர்ந்தெடுத்துக்கொண்டால் அப்பனே நல்லவையாகவே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும்.

இப்பொழுது கூட சொல்கின்றேன் தான் வாழ வேண்டும் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் நல் விதமாக பணங்களை சேர்க்க வேண்டும் என்று எண்ணினால் ... நிச்சயம் தர்மத்தை கடைப்பிடியுங்கள் யாங்களே வந்து உங்களுக்கு உதவிடுவோம்.

அப்பனே மற்றவர்களுக்காக நீ என்ன செய்கின்றாய் என்பதை கூட றாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம்... அப்பனே

அப்படி செய்யும்பொழுது யாங்கள் உங்களுக்காக இறங்கிவந்து செய்வோம்.

அப்பனே இதை நிச்சயம் கடைபிடியுங்கள் அப்பனே. போதுமானது.

எவையன்றி கூற அதனால் அவை விட்டுவிட்டு.... என் இல்லத்தில் இவ்வாறு பிரச்சனைகள் இருக்கின்றது என் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே இவையன்றி கூற மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று கூட இவ்வாறு செப்பிக்கொண்டு இருந்தால் .... அப்பனை எவ்வாறு என்பதைக்கூட...

ஆனாலும் பக்தியில் நுழையச்சொல்!!! அப்பனே எவ்வாறு என்பதையும் கூட வரும் காலங்களில் சனியானவன் எவையென்று கூற மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்க தயாராகவே இருந்து கொண்டிருக்கின்றான்.

அதனால் அப்பனே சரியான முறையில் இறைவனை கடைபிடித்து நல் விதமாக அன்பை செலுத்தினாலே போதுமானது.

அப்பனை ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்...இவையன்றி கூற நடப்பதெல்லாம் நன்மைக்கே...

இதையன்றி கூற அனைத்தும் அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று சொல்லிக்கொண்டிருந்தால்....எத் துன்பமும் உங்களை நிச்சயம் அண்டாது என்பேன் அப்பனே.

அப்படி இல்லாமல் அது வேண்டும் இது வேண்டும் இவை வேண்டும் அவை வேண்டும் என்று சென்றுகொண்டிருந்தால்... துன்பங்கள் தானாகவே தேடி வரும்.

இப்பொழுது புரிகின்றதா?? அப்பனே!!

இன்னும் சில மாற்றங்கள் இப்புவியுலகத்தில் உண்டு அப்பனே.... தக்க நல் விதமாகவே இன்னும் அப்பனே பலப்பல மனிதர்களால் அப்பனே இவையன்றியும் கூற அப்பனே ஆனாலும் இனிமேலும் வாக்குகள் நிச்சயம் காத்துக்கொண்டிருக்கின்றன.

அப்பனே ஒவ்வொருவருக்கும் எவ்வாறு என்பதையும் கூட யான் சொல்லியதை சரி முறையாக பயன்படுத்திக் கொண்டு வாருங்கள்.

அப்பனே மீண்டும்  வாக்குகள் வந்து செப்புகின்றேன் அப்பனே நலம்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......... தொடரும்!

7 comments:

  1. சித்தன் அருள் பகுதி கட்டுரை பதிவிடும் போது இடையில் வார்த்தைகளை மறைப்பதின் தாத்பரியம் என்னவோ அதை அறிய முற்படுகிறேன் நல்லோருக்கு செல்லும் புரிதலில் ஏன் இந்த மாயாஜாலம் 🤷

    ReplyDelete
    Replies
    1. அகத்தியர் வாக்கில் என்ன வருகிறதோ அதை தருவது அடியேன் கடமை. உங்கள் கேள்வி அகத்திய பெருமானிடம் என்றால், அடியேன் ஒன்றும் சொல்வதிற்கில்லை.

      Delete
  2. Hi Sir,
    Is it possible to know which temple or place Guru Agathiyar gave this reading . Sorry if this is not appropriate question...
    Uma

    ReplyDelete
    Replies
    1. I will Ask Sri.Janaki Raman and tell you.

      Delete
    2. It happened in a secluded place in Dindugal. Agathiyar don't want to reveal it, it seems.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete