​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 September 2022

சித்தன் அருள் - 1180 - பாலராமபுரத்தில் அகத்தியப்பெருமானுக்கு பிரபை சமர்ப்பணம்!

சித்தன் அருள் வாசகர்கள்/அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் ஆவணித் திருவோணா நாள் வாழ்த்துக்கள். அனைவரும் க்ஷேமமாக வாழ வேண்டும்!



​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியர் ராஜ்ஜியம்" என்றழைக்கப்படுகிற (அவரே நாடியில் வந்து உரைத்தார்) பாலராமபுரத்தில் குருநாதருக்கும், குருமாதாவிற்கும், ஆவணி திருவோணா நாளான வியாழக்கிழமை (08/09/2022) இன்று, ஒரு சில அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து "பிரபை" சமர்ப்பித்தனர். இதுவரை அகத்தியப்பெருமானின் சன்னதி புகைப்படத்தில் அவருக்கு பின்னால் பிரபை இருக்காது.

ஏன் இப்படி? என்று நாடியில் கேட்க, "வர வேண்டிய சமயத்தில் வரும். அமைதியாக செல்லவும்" என்று உத்தரவு வர, சரி "அவர் விருப்பம் போல் அமையட்டும் என்று" விலகி நின்று விட்டோம்.

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர் "கல் பட்டை, ஆபரணங்கள் போன்றவையை" அவரின் உத்தரவின் பேரில் சமர்ப்பித்துவிட்டு செல்ல, குருவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, "ஆகட்டும் பிரபை!" என ஒரு அகத்தியர் அடியவருக்கு உத்தரவு கொடுக்க, என்ன? ஏது? என விசாரித்து செல்வதற்குள், கோவிலில் "அந்த ப்ராஜெக்ட் நிறைவு பெற்றது! பங்கு பெறுவது முடியாது. வேறு ஏதாவது இருந்தால் பிறகு பார்க்கலாம்" என்று கூறி திருப்பி விட்டார்கள். பிரபை ப்ரொஜெக்ட்டில் பங்குபெற வாய்ப்பு பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் என நினைத்துக்கொண்டேன். ஆம்! பிரபை என்பது பிரணவம். அதையே இறைவனுக்கு/சித்தர்களுக்கு கொடுக்க மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். (அடியேனும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகத்தியா! அகத்தீசா, லோபா முத்திரா சமேத அகத்தீசா! எனவெல்லாம் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்! நாலு தடவை குளித்து மூன்று முறை பூசை ஒன்றும்......... ஹ்ம் போறாது போல!).  

"சரி! சமர்ப்பணம் செய்வதை பார்க்கிற பாக்கியமாவது கிடைக்கட்டும்! முன்னரே தெரிவியுங்கள்" என பூசாரியிடம் தெரிவித்து செல்ல, இரண்டு நாட்களுக்கு முன் இன்று சமர்ப்பணம் என தெரிவித்தார்.

இன்று காலை, அபிஷேக அலங்காரத்துக்குப்பின், பிரபையை அவர் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் வைத்து, ஐந்துமுக விளக்கேற்றி (அதில் வடக்குமுக விளக்கேற்றுகிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது) விளக்கின் பாதத்தில் பூ போட்டு (ப்ரபைக்கு முன்னரே பூசை போட்டுவிட்டார்கள்) அகத்தியர் அடியவர்களால் சமர்ப்பிக்க பட்டது. பூசாரி வேறொருவர் துணையுடன் அதை பாகங்களாக தூக்கி சென்று, சன்னதியில் பொருத்திட தீபாராதனை நடந்தது.

ஆஹா! அற்புத காட்சி! பிரபையுடன் குருநாதரை பார்ப்பது அழகுதான். சித்தனுடன் பிரணவம் சேர்ந்திட, அவரே இறைவனாக வெளிப்பட்டார்.

திருவோண நாளான இன்று அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாய்க்கு நன்றியை தெரிவித்தோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம... நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஓம்சிவசிவஓம் ஓம் அகத்தியர் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete