​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 10 September 2022

சித்தன் அருள் - 1181 - அன்புடன் அகத்தியர் - சப்தரிஷி கோவில்கள்!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

2/6/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் வன்னிவேடு புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில்  உரைத்திருந்த வாக்கில் சப்த திருத்தலங்களையும் நிச்சயம் தரிசிக்க வேண்டும் என்று உரைத்திருந்தார்... 

அந்த வாக்கு தொகுப்பு 1164 ல் பதிவிடப்பட்டுள்ளது.

சப்த ரிஷிகள் அமைத்த திருத்தலங்களை மேலும் அறிய முற்ப்பட்டபோது சில தகவல்கள் பிரமிக்க வைத்தன.

சப்த ரிஷிகள் உருவாக்கிய திருத்தலங்கள், வானில் உள்ள சப்தரிஷி மண்டல நட்சத்திர பாதை வடிவிலேயே இத்திருத்தலங்களும் அமைந்துள்ளது, மிக ஆச்சரியம்.

அடியவர்களே உணர்ந்து கொள்ளுங்கள். குருநாதரின் வாக்கில்........ 

நிச்சயமாக உண்மையான பக்தர்களை இங்கு யான் அழைப்பேன்!!!! எதை என்று கூட இன்னும் இன்னும் இன்னும் எதையென்று கூட கூற கூற இன்னும் வழிகள் உண்டு!!!!

ஆனாலும் இதையன்றி கூற ஒரே நேரத்தில் பின் பக்கத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களையும் ஓர் நாள் அதாவது பௌர்ணமி தினத்திலும் கூட!!!! சிவராத்திரி தினத்திலும் கூட !!! பின் அமாவாசை தினத்தில் கூட!!! அனைத்தும் தரிசித்தால், சப்த திருத்தலங்களையும் தரிசித்தால் அவந்தனுக்கு இன்னும் மேன்மைகள் உண்டு உண்டு!!!!

குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த சப்த திருத்தலங்கள்

அத்திரி, பரத்வாஜர், கௌதமர்,  காஸ்யப முனி, வால்மீகி, வசிஷ்டர், அகஸ்தியர் ஆகியோர் சப்தரிஷிகள். தமிழ்நாட்டில் வேலூர்,  ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற ஊர்களை சுற்றி சிவலிங்கத்தை நிறுவி சிவபெருமானை வழிபட்டனர். இந்த 7 கோயில்களும் சேர்ந்து ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேப்பூர் - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் - பாலகுஜாம்பாள் - ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி

மேல்விஷாரம் - ஸ்ரீ வால்மீகேஸ்வரர் - வடிவுடையம்மை - ஸ்ரீ வால்மீகி மகரிஷி

காரை - ஸ்ரீ கௌதமேஸ்வர் - கிருபாம்பிகை - ஸ்ரீ கௌதம மகரிஷி.

அவரா கரை - ஸ்ரீ காஷ்யப மகரிஷி.

வன்னிவேடு – ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் – புவனேஸ்வரி – ஸ்ரீ அகஸ்திய மகரிஷி

குடிமல்லூர் - ஸ்ரீ அத்திரீஸ்வரர் - திரிபுரசுந்தரி - ஸ்ரீ அத்திரி மகரிஷி ;  கோவில் - பூமிநாதேஸ்வரர்.

புதுப்பாடி – ஸ்ரீ பரத்வாஜேஸ்வரர் – தர்மசம்வர்த்தினி – ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி

இந்த கோவில்கள் மிகவும் பழமையான கோவில்கள்.

இந்த ஏழு கோவில்களிலும் சிவபெருமான் இங்கு வழிபட்ட ரிஷியின் பெயரால் அறியப்படுகிறார்.

மஹா சிவராத்திரியில் இந்த கோயில்கள் அனைத்தையும் பார்வையிடுவது கைலாயம் தரிசனம் செய்து வணங்குவதற்கு சமம் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.

தடைபட்ட திருமணமும் நடக்கும்.

நிச்சயமாக உண்மை எதை என்று இன்னும் பல வினைகள் நீங்கும்!!!

ஆனாலும் ஒரு முறை சுற்றி வந்து எந்தனுக்கு ஏதும் நடக்கவில்லையே?? என்று சொல்லக் கூடாது என்று வாக்குகள் உரைத்திருந்தார். 

நட்சத்திர மண்டலத்தில் உள்ள சப்தரிஷிகள் நட்சத்திர பாதை போலவே உள்ள சப்தரிஷிகள் உருவாக்கி உள்ள திருத்தலங்களையும் குருநாதரின் வழிகாட்டுதல் படி தரிசித்து அனைவரும்  இறையருளும் சப்தரிஷிகளின் திருவருளும் பெறுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......... தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. https://maps.app.goo.gl/fGjqv5zbsfkb6wvi7

    For route reference purpose sir.
    Thank you

    ReplyDelete