​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 26 September 2022

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)





21/9/2022 புரட்டாசி மாதம் ஏகாதசி புதன் கிழமை அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த விஞ்ஞான வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே எவ்வாறெல்லாம் இவ்வுலகத்தில் ஈசன் வந்தான் என்பதைக் கூட அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் எதை என்பதை உணர்த்துவதற்கு பின் ஆனாலும் உணர்த்துவதற்கு முன்பே மனிதனின் நிலைகள் சரியில்லை!!! சரியில்லையென்பதாலும் எதை என்று கூறக் கூற இன்னும் அப்பனே மானிட ஜென்மம் அப்பனே வீணாகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது!!!

மனங்கள் அப்பனே எதையென்றும் சரியில்லாமல் ஆனாலும் நீண்ட நாட்களாக நீண்ட நாட்களாக இவையும் செல்லாது!!!

நிச்சயம் அப்பனே யாங்கள் கூட இதை தடுத்து தடுத்து நிறுத்துவோம் என்பதை கூட நிச்சயம் வரும் காலங்களில் எதை மனதில் நினைத்தீர்களோ அதற்கு மாறாகவே செயல்படும் சக்திகள் அங்கும் இங்கும் எங்கும் அலைந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனாலும் உடலின் தன்மையை பொறுத்துக் கூட ஆனாலும் இவற்றின் தன்மையை அறிந்து அறிந்து தான் நெற்றியில் கூட அப்பனே கோடுகள்!!!

இதனையும் இம் மூன்று கோடுகளையும் நினைத்தாலும் கூட ஆனாலும் எதன் தன்மையை வருவது என்பதை சரியாக கவனத்திற்கு பின் செல்லாது!!!

ஆனாலும் நேர்மின் ஓட்டமும் எதிர்மின் ஓட்டமும். ( பாஸிட்டிவ் எனர்ஜி நெகட்டிவ் எனர்ஜி /ஒரு பேட்டரியில் உள்ள +பிளஸ் முனை -- மைனஸ் முனை போல) ஆனாலும் தக்க வைக்க கூடிய ஓட்டமும் இவ் மூன்றும் பின் நெற்றியில் தான் உள்ளது!!! இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே அனைத்தும் நீங்கும் அனைத்து திறன்களும் வரும்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை கூட வரும் காலங்களில் கூட யாரும் பயன்படுத்த!!!............

ஆனாலும் அப்பனே இதை என்று கூற சேமிக்கும் திறன் பின் அதிகம் நெற்றியில் தான் உள்ளது.

எதை சேமிக்கும் திறன் என்பதை கூட யான் எதை என்று கூட ஆனாலும் அப்பனே அவ் சேமிக்கும் திறனுக்கும் அதாவது எதை அத்திறனை!!! நிச்சயம் சேமிக்க!! சேமிக்க!! இன்னும் சக்திகள் கூடிக்கொண்டே வரும்!!!

அப்பனே எதனால் என்பதையும் கூட அப்பனே நிச்சயம் எதிர் கொள்வதற்கான சக்திகள் நம்மிடையே இருக்கின்றது!!!

அப்பனே இவ் கன்னி திங்கள்(புரட்டாசி மாதம்)

எதை என்று பின் நிர்ணயிக்கும் அளவில் கூட பாடுபட்டாலும் இதன் தன்மைகள் ஆனாலும் அப்பனே விண்ணுலகில் அப்பனே ஒரு ஒளியானது இவ்மாதத்தில் தொடங்கும்!!!

தொடங்கி ஆனாலும் அதனை எங்கெல்லாம் அதன் நிழல் ஆனாலும் அதன் சக்தி நிச்சயம் அப்பனே எங்கெல்லாம் நிச்சயம்  பின் படிந்துள்ளது என்பதை கூட பின் யான் எதையென்று நிமித்தம் காட்டி சொல்கின்றேன்.

அப்பனே முதலில் அப்பனே அவ் சக்தி அண்ணாமலையிலே உதிக்கின்றது!!!!!

அதனால்தான் அப்பனே சரியாக பல சித்தர்கள் எதை என்று கூற பல ஞானியர்கள் அப்பனே பின் அவ் ஒளியை தக்க வைக்க இவ் அண்ணாமலையை நாடி நாடி வந்துள்ளனர்.

ஆனாலும் அப்பனே இவ் அண்ணாமலையில் அதாவது எங்கு வேண்டுமானாலும் அப்பனே அதாவது  தியானத்தை அதாவது அவ் தியானத்தை அமைதியான முறையில் தியானம் செய்தால் அப்பனே நிச்சயம் அவ் திறன்கள் அதாவது எதை என்றும் எவற்றில் இருந்தும் கூட

நெற்றியில் உள்ளதே அப்பனே!!! நிச்சயம் இன்னும் சேமிப்பு சேமிப்பு திறன் இன்னும் அதிகமாகும் அப்பனே!!!!

அவ் ஒளியானது ஈர்க்கும் சக்தி நெற்றியில் தான் உள்ளது!!!! அப்பனே இவை இதை என்று ஒரு கோடாக எடுத்துக் கொள்ளலாம் அப்பனே!!!!!

இதனை நிரூபிக்கும் அளவிற்கு கூட இவ் மாதத்தில் நிச்சயமாய் எதையும் அதாவது எதைப் பற்றியும் சிந்தனையும் இல்லாமல் இருந்தால் அப்பனே தியானங்கள் செய்தால் உடனடியாக அவ் சக்தியானது நிச்சயம் அப்பனே நெற்றியில் நுழைந்து சேமிக்கும்!!திறன்!! அதுவே ஒரு கருவியாகும் அதனுள் நிச்சயம் அவ் சக்தியானது சேமிக்க சேமிக்க அப்பனே இன்னும் திறன்கள்  அதிகமாகி!! அதிகமாகி!!! அனைத்தும் வெற்றிக்கொள்ள இயலும்!!!!.
நிச்சயம் அப்பனே!!!! 

ஆனாலும் இதை சரியாக அப்பனே உணர்ந்தவர்களும் உள்ளார்கள் அப்பனே அண்ணாமலையிலே!!!

ஆனாலும் காலங்கள் காலங்களாக சில ஞானியர்களுக்கே இவ் அண்ணாமலையான் எதை என்று நிமித்தம் காட்டி அவ் சக்திகளை கூட்ட கூட்ட கூட்ட சித்தர்களும் நிச்சயம் கண்களுக்கு தென்படுவார்கள் அப்பனே!!! 

இதுதான் ரகசியம்!!!!

ஆனாலும் அப்பனே இவை எதை என்று கூட ஆனாலும் கட்டுப்படுத்த வேண்டும் மனதை கூட!!!!

எதை எவற்றினின்று கூட எதிர்பார்க்காமல் அப்பனே அமைதியாக தியானங்கள்!!!

ஆனாலும் சிறு துளியளவாவது பின் எண்ணங்கள் பின் எங்கோ சென்று விட்டால் அவ் சக்தியானது ஏதோ ஒன்று அலைகள் மூலம் தடுத்து பின் மாறுபட்டு விடும் அப்பனே !! பின்பு விளைவுகள் கூட அதிகம் என்பேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் இம் மாதம் எப்படி என்பதை கூட அதனால் தான் அப்பனே பின் யான் எதை சொன்னேனென்றால் அப்பனே பின் புண்ணிய காரியங்கள் செய்யுங்கள் என்பேன்!!!

ஆனாலும் புண்ணிய காரியங்கள் செய்யும் பொழுது கூட மனதில் ஏதும் இல்லாதவாறு ஆனாலும் எதற்கும் தகுந்தவாறு ஆனாலும் இம்மாதத்தில் கூட பல ஞானியர்கள் எதை என்று கூட சன்னியாசிகள் அமைதியாகவே இருப்பார்கள்!!!

ஆனாலும் அது ஈசனுக்கு தெரியும்!!!! மனிதனுக்கு தெரியாது!!!!

இவ் அமைதியாக இருக்கும் பொழுது எவை எதை என்று கூட அவர்களிடம்  எதை பின் பேசும் பொழுதும் கூட ஏதாவது ஒன்றை( சாதுக்களுக்கு சன்னியாசிகளுக்கு அன்னதானம் செய்தல்) தரும் பொழுது கூட அவர்களிடம் தரும்பொழுது கூட  அவர்கள் நிச்சயம் மனம் சந்தோஷமடையும் பொழுது அவ் சக்தியானது உன்னுள் இறங்கும் அப்பனே!!!!

இதுதான் சூட்சுமம் அப்பனே!!!!

ஆனால் இதனைக் கூட மனிதர்கள் எதற்காக  செய்ய சொல்கின்றோம்??
எதனை எவற்றினின்றும் கூட அப்பனே இவையெல்லாம் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!

மனிதர்களுக்காவது நல்லோர்களாவது வாழட்டுமே என்று கூட!!!

அப்பனே இதை யான் பல பல வழிகளிலும் கூட ஞானியர்களுக்கு உரைத்திருக்கின்றேன்!!!

ஆனால் கலியுகத்தில் முதன்முதலாக இப்பொழுதுதான் அதாவது இவ் அண்ணாமலையின் ஆசிர்வாதத்தோடு தான் யான் நிச்சயம் உரைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!

எதை என்றும் அறிவித்தும் அறிவித்தும் கூட!!!

அதாவது இக்கோடுகளைப் பற்றியும் சொல்லி விட்டேன் அப்பனே!!!

அக்கோடு சாதாரண கோடு இல்லை அப்பனே!!!

இதுதான் விதியும் எனலாம்!!!

ஆனாலும் இன்னும் இரண்டு கோடுகளும் எதனை என்று நிமித்தம் இட்டு அப்பனே மறைமுகமாகவே!!!

அதனால்தான் சொன்னேன் அப்பனே நிச்சயம் இதனையும் என்று அறிய அறிய பல பல புண்ணியங்களையும் செய்யச் சொன்னேன் அப்பனே!!!

ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது தானங்கள் செய்யுங்கள் என்று!!!

ஆனாலும் அப்பனே அவ் ஒளியானது விண்வெளியில் இருந்து எதை என்றும் அறியாது அப்பனே ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அப்பனே எதை என்று நிரூபிக்க!!!

ஆனாலும் ஒன்றின் பின் ஒன்றாக வருவதாக ஆனாலும் அக்கோடுகளின் தன்மை எங்கெங்கே அதிகம்????

ஆனாலும் அதிகமாக ஈர்க்கப்படுவது முதலில் கோமாதாவை தான் யான் சொல்வேன்!!!! அப்பனே!!! 

அக்கோடு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு இக்கன்னி மாதத்தில் நிச்சயம் எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட அக்கோமாதாவிற்கு தான் அதிகம் ஈர்க்கும் சக்தி உடம்பில் உள்ளது என்பேன் அப்பனே!!!!! அவ் சேமிப்பு!! 

ஆனாலும் இதையென்று அறிய அங்கே அவைகளுக்கு அன்னமிட்டால் அக் கோமாதாவின் சக்திகளும் மனமகிழ்ந்து உண்ணும் பொழுது கூட அத்திறன்கள் எதை என்று கூற சக்திகள் கோமாதாவின் வாயிலிருந்து வெளிப்படும் என்பேன்!!!! ஆனால் பரிசுத்தமாகலாம்!!! அதனால்தான் யான் சொன்னேன்!!

அப்பனே கேளுங்கள் எதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட..... ஒவ்வொரு ரகசியம் கூட அறிவியல் ரீதியாகவே உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் இப்பொழுது கூட!!!!

எதற்காக?? செய்யச் சொன்னேன் என்று கூட!! தெரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இவை மட்டுமில்லாமல் பைரவ வாகனங்களுக்கும் இவைதான்!!! அவை சந்தோசம் அடையும் பொழுது எதை எவற்றிலிருந்து கூட அவை தனக்கும் யான் எதை என்று உணராமலே பின் ஏதாவது உணவை பின் கொடுக்கச் சொன்னேன்!!!!

ஆனாலும் அவை தன் எவை என்று உணர பின் அவை தன் வாலாட்டி தின்னும் பொழுது அவ் எதை தின்னும் பொழுது கூட குறிப்பிட்ட சக்தியானது அவ் பைரவ வாகனத்தின் வாலில் இருந்து வெளிப்படுகின்றது!!! அப்பனே இதை என்று கூட!!!

ஆனாலும் அக்கோடானது வாலில் தான் சக்தியை காட்டுகின்றது என்பேன்!!!!

 இதனால் நிச்சயமாய் பின் அவ் சக்தியானது நம்மிடையே ஈர்க்கும்!!!

ஆனாலும் எதை எவற்றினின்று கூட அமைதியாக பின் இறைவனை நினைத்து கூட எதையென்று அறியாமலே!!!

அதனால் வாயில்லா. அதாவது பின் பேசும் திறன் குறைந்துள்ள ஜீவராசிகளுக்கு  ஏனென்றால் உணவளிக்கச் சொன்னேன் என்றால் நிச்சயம் ஆனாலும் இதில் மறைமுகமாகவும் சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட பின் ஆனாலும் இதன் தன்மையை அதன் ஈர்க்கும் சக்தியை அதிகம் பெற்றுள்ளது அப்பனே!!!

இதனால்தான் இதையென்று உணராத அளவிற்கு கூட பின் இவ் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அன்னத்தை இடச் சொன்னேன் அப்பனே!!!

பாருங்கள் அப்பனே ஒன்றை ஒன்று ஏனென்று அப்பனே!!!

வாயில்லா ஜீவராசிகளும் பின் பல இல்லத்தில் கூட யான் பார்த்திருக்கின்றேன்!! அப்பனே!!! வளர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!

ஆனால் அவர்கள் எல்லாம் உயர்வுகள் அடைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!

ஏன் எதனால் அப்பனே நிச்சயமாய் அவ் பின் விண்வெளியில் இருந்து சக்தி நிச்சயம் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அதிகம் அதனுள் எதை என்று குறிப்பிட்ட அளவிற்குக் கூட அதன் அருகிலே நாம் இருந்தால் அப்பனே பின் எவ்வொரு சக்தியும் அதாவது எவ்வித தீய சக்தியும் நம்தனை அண்டாது என்பேன்!!!!

அவ் நல் சக்தியானது தீய சக்தியை அழித்து விடும் என்பேன்!!!! அப்பனே!!! 

இதனைத் தான் யான் சொன்னேன் அப்பனே செய்யுங்கள்!!!!

 வாயில்லாத ஜீவராசிகளுக்கும் பல புண்ணியங்கள்  எதையென்று அறியாமல். 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் ஒளிந்து ஒளிந்து காணப்படுகின்றது அப்பனே!!!!

ஒரு கோடினைப் பற்றி சொல்லிவிட்டேன்!!!!

மற்றொன்று எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட சொல்கின்றேன் அப்பனே!!!

மற்றொரு கோட்டினை பற்றியும் கூட...

ஆனாலும் இதன் தன்மையை பின் எதிர்நோக்கும் அளவிற்கு கூட அப்பனே நம்மிடம் வரும் சக்திகள் அனைத்தும் கூட எதை எவற்றிலிருந்து கூட பின் எதனை என்றும் நிரூபிக்கும் அளவிற்கு கூட வழி விடாமல் தங்கிச் சென்று கொண்டே இருக்கின்றது!!!!

ஆனாலும் கர்மா வினையை எதை எவற்றில் இருந்தும் கூட கர்மாவை கூட பின் நேர்முனை ஆனது எதை எவற்றில் இருந்து வருவதைக் கூட எண்ணாமல் ஆனாலும் அப்பனே அவை தன் அதாவது நேர்முனையானது சேமிக்க இயலாது அப்பனே!!!!

ஆனாலும் இதனைத் தான்(கர்மா)  கலியுகத்தில் அதிகம் சேமித்து கொள்கின்றார்கள் அப்பனே!!!

இது மற்றொன்று கோடு என்பேன்!!!

மூன்று கோடுகளில் அப்பனே ஒன்றை பற்றி விவரித்துவிட்டேன்!!! 

இரண்டாவது கோட்டினை பற்றியும் சொல்கின்றேன் அப்பனே இதுதான் கர்மா!!!

அப்பனே ஆனாலும் இவ்கோட்டினை எதை என்று கூட அழிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அதை அழிக்க அழிக்க ஆனாலும் எதனை என்றும் கூட ஆனாலும் இவற்றின் தன்மைகளை பல திருத்தலங்களுக்கும் சென்று தியானம் அதாவது அமைதியாக தியானங்கள் செய்தாலே அவ் கோட்டினை அழித்துவிடலாம்!! எளிதில் கூட அப்பனே!!

ஆனாலும் விடாது என்பேன் அப்பனே!!! சக்தி அதிக அளவு என்பேன் அப்பனே!!!
அதனுடைய சக்தி!!

ஆனாலும் அவ் சக்தியானது கூடிக் கொள்ள கூடிக் கொள்ள கஷ்டங்கள் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் எப்பொழுது எதை எவற்றின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதைக் கூட யான் அறிவேன் அப்பனே!!!

ஆனாலும் அவ் சக்தி எங்கே பின் குறைவாக விழுகின்றதென்றால் அப்பனே இன்னும் ஒரு சூட்சுமத்தையும் பின் ஏழுமலையான் இருக்கின்றானே!!!( திருப்பதி திருமலை) தற்போது நிலைமையில் அப்பனே பின் ஏழுமலையான் எதை என்று கூட அவ்மலையில் தான் அவ் சக்தியானது எதையென்று எதிர்கொள்ளும் சக்தி அதிகமுடையது என்பேன் அப்பனே!!!!

அதனால் அங்கே தியானங்கள் செய்தால் எதை எவற்றினின்று கூட பின் சக்திகள் தங்காது என்பேன் அப்பனே!!!

பின்!!! வருவது அப்படியே சென்று விடும் ஆனாலும் இதையன்றி கூற

அப்பனே ஏதோ நிச்சயம் ஒருமுறை எதை என்று கூட தவம் செய்து விட்டாலே தியானம் செய்து விட்டாலே அப்பனே நிச்சயம் அது செல்லாது என்பேன்!!!

ஆனால் அதை ஒழிப்பதற்கு பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று ஏதும் அதாவது மனதில் எதுவுமே நினைக்க கூடாது என்பேன் அப்பனே.

ஏதாவது ஒன்று நினைத்து விட்டால் கூட அப்பனே எதை ஆனாலும் பின் மனிதன் உடம்பில் அப்பனே 10 செல்கள் காணப்படுகின்றது அப்பனே!!!
இவை என்று கூட

ஆனாலும் ஒரு செல்லில் அப்பனே எதை எவற்றினின்றும் கூட கர்மா இழுத்துக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனால் பொறாமை ஒரு செல் சரியாகவே இழுத்து விடும்!!

பொய் இதை என்று ஆனாலும் சரியாகவே அச் செல் பின் எதையன்றி கூட ஆனாலும் நீ சொல்வது உண்மை எதை என்று கூட புரிய புரிய  அச் செல்லானது தெரிந்து கொள்ளும்!!!(நாம் பேசுவது  பொய்யா உண்மையா என்று) அதனையும் ஈர்த்துக் கொள்ளும்!!

ஆனால் கண்கள் கெட்டதை பார்க்கக் கூடாது என்று பழமொழிகள் பெரியோர்கள்!!!

கெட்டதை பார்த்தாலும் அச்செல்லானது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே!!! ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஈர்த்துக் கொண்டு அவை தன் ஆனாலும் முக்கிய பங்கு வகிக்கின்றது அச்செல்லானது!! எதை எவற்றினின்று கூட!!! 

ஆனாலும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லுதல் கூட அப்பனே அச் செல்லானது ஈர்த்துக் கொள்ளும் அப்பனே!!!

இவையன்றி ஆனாலும் நீங்கள் அமைதியாக இருந்து விடுவீர்கள் தெரியாமலே ஆனாலும் காலங்கள் கடந்து கடந்து அதிகம் எதை எவை என்று கூட அச் செல்லானது பின் விரிவடையும்!! விரிவடையும் பொழுது தான் கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அப்பனே!!!

ஆனாலும் யாராலும் அதை தடுக்க முடியாது என்பேன் அப்பனே!!!

இவையன்றி ஆனாலும் இச் சூட்சுமத்தை அதாவது இவையென்று கூற உலகம் எதை நிமித்தம் காட்டி அப்பனே ஒளிந்துள்ளது என்பதையும் கூட ஆனாலும் அதை பெரிதாக பெரிதாக ஆனால் முதலில் உங்களுக்கு தெரியாது இவையெல்லாம் தவறு என்று!!!!

ஆனாலும் அச் செல்லானது விரிவடையும் பொழுது ஒரு பந்து போல விரிவடைந்து விடும்!!!

ஆனாலும் அப்பனே அப்படி விரிவடையும் பொழுது தான் அப்பனே துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றது.

ஆனாலும் விரிவடைய!! விரிவடைய!! ஆனாலும் அப்பனே அது விரிவடையும் பொழுது எத்திருத்தலத்திற்கு சென்றாலும் அப்பனே உந்தனுக்கு கர்மங்கள் நீங்காது நல்லதும் நடக்காது சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

ஆனாலும் அதை குறைக்க வேண்டும் அப்பனே!!!

அதனால்தான் வேண்டாம் அப்பனே போட்டி பொறாமைகள் மற்றவர்களை பற்றி எண்ணுதல்... இவையெல்லாம் வேண்டாம் என்றுதான்!!

ஆனாலும் அனைத்திற்கும் காரணம் சேமிப்பு திறன் என்று ஒன்று உள்ளது அப்பனே!! அது சேமித்துக் கொண்டே இருக்கின்றது அச் செல்கள் என்பதை கூட இதனால் தான் அப்பனே கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட அதனால் தான் வேண்டாம் என்று யான் சொன்னேன் அப்பனே!!!

இதனை புரியும் படியே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்று கூட இரண்டு கோடுகளைப் பற்றியும் ஆனாலும் கோட்டினை பற்றியும் கூட எடுத்துரைத்தேன் அப்பனே.

விதி சாதாரணமாக இல்லை அப்பனே

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட நேர் எதை என்று எவற்றினின்று கூற அப்பனே ஆனால் இவ் மாதம் பின் எதை என்று சிறிதாக பின் வளிமண்டலத்திலிருந்து ஒரு ஒளி பின் தென்படும் அப்பனே!!!!

அது அண்ணாமலையிலே உதிக்கின்றது பின் இதை என்று கூட எவை என்று கூட ஐப்பசி பின் வரும் அதாவது எதை என்று கூட சிறிதளவு விரிவடையும் என்பேன் அப்பனே!!!

அது எங்கே விழுகின்றது என்றால் அப்பனே என் நதியான காவேரி நதியின் மீதே வந்து ஊர்ந்து செல்கின்றது என்பேன் அப்பனே!!!

இதையென்று அறிய அறிய அதனால் அங்கே குளிக்கச் சொன்னேன் யான்!!!!

ஆனால் இதையன்றி அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளும் ஆனாலும் எப்படி பின் எதை என்று கூட நீராட வேண்டும் என்பதைக் கூட தெரியாமல்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட அதிகாலையிலே பின் தியானங்கள் செய்து அப்பொழுது கூட எதையும் நினைக்க கூடாது அப்பனே!!!

எவை என்று கூட இவ்வாறு அவ் மாதத்தில்(ஐப்பசி) என்னுடைய நதி அதாவது காவேரி ஆற்றில் பின் குதித்து நீராடி வந்து கொண்டிருந்தாலே (ஐப்பசி துலா ஸ்நானம்) அப்பனே நிச்சயம் எதை எவற்றினின்று கூற.. 

ஆனாலும் இன்னொரு சூட்சுமம் அதிகமாகும் அப்பனே!!!

கார்த்திகை திங்கள் இதையன்றி கூட வரும் பின்பு அவ் ஒளியானது  விரிவடைந்து விடும் அப்பனே பரிசுத்தமாக ஆனாலும் அவ் மாதத்தில் எதை என்று கூட பரிபூரணமாகவே அவ் ஒளியானது இங்கே விழும் என்பேன் அண்ணாமலையிலே அப்பனே!!!!

அண்ணாமலையில் விழும் பொழுது அவ் ஒளியானது பல மனிதர்களின் தொல்லைகள் போக்கும்!!! போக்கும் என்பேன் கர்மாக்களை அழிக்கும் என்பேன் அப்பனே!!!!

பின்  எதையென்று கூற அதனால்தான் கார்த்திகைக்கு ஒரு எதை என்று கூற சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இவ் ஒளியானது அண்ணாமலையில் பட்டு பின்  எதையென்று இங்கே எதிரொளித்து ஆறுபடை வீடுகளிலும் கூட அப்பனே படும் என்பேன்!!!!

அதனால் அங்கெல்லாம் சென்றால் அப்பனே பின் எவை என்று கூட கர்மங்கள் சிறிது சிறிதாக பின் கழிந்து விடும்!!!!

அவ் எதை என்றும் அப்பனே இவை என்று கூட அவ் அறுபடை வீடுகளிலும் கூட அப்பனே பட்டு பிம்பம் பிரதிபலித்து அப்பனே பின் சிதம்பரம் எதை எவை என்று கூட நடராசன் பின் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஒன்றின் பின் ஒன்றாகவே எதை எவற்றினின்றும் கூற அப்பனே வழிகள் வழிகள் உண்டு.

உண்டு என்பதை கூட எவற்றின் தன்மைகளை உண்டு எவற்றை என்று கூட அப்பனே(பஞ்சபூத ப்ரித்வி ஸ்தலங்கள்) காளாத்திரி(காளஹஸ்தி) இதை எவற்றின் உண்மைகளை புரிந்து புரிந்து அங்கேயும் ஒளி படும்!!! இதனை என்றும் இவற்றின் காஞ்சி(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்) இவையென்று திருவானைக்காவல் இதை என்றும் அறிவதற்கும் உண்டா!! உண்டா?? ஒளிகள் அங்கே படும்!!! படும்பொழுது கூட சில ஆன்மாக்கள் நிச்சயமாய் ஒளி விலகளை( ஒளிவிலகல் / ஓளி பிரதிபலிப்பு) எதை என்று அறியாத அளவிற்கும் கூட விட்டு எதை என்று கூட அங்கே படும் பொழுது அங்கே நின்றால் நம்முடைய கர்மாக்கள் அழிந்து ஒழிந்து போகும்( அதாவது புரட்டாசி மாதம் தொட்டு அந்த ஒளியானது பஞ்சபூத ஸ்தலங்களான சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் காளகஸ்தி திருவானைக்காவல் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் வெளியானது பிரதிபலிக்கும் இந்த கால சமயத்தில் நாம் அங்கு சென்று அந்த ஒளியை நம் மீது உள்வாங்கினால் நம்முடைய கர்மாக்கள் தொலையும்) என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து எண்ணற்ற கோடி ஜீவராசிகளும் அப்பனே ஆனாலும் வாய்ப்பு அப்பனே இதையெல்லாம் அப்பனே கர்மா தொலைந்த பிறகே ஒருவனுக்கு வாய்ப்பளிப்பான் இறைவனே அதாவது ஈசனே!!!

அப்பனே இப்பொழுது கூடச் சொல்லிவிட்டேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.

ஆனாலும் இவற்றின் தன்மைகளை அறிந்து அறிந்து அங்கெல்லாம் இவை என்று கூட புளிப்பு காரம் எவை என்று தவிர்த்திட வேண்டும்.

ஆனாலும் சாதாரண உணவையே( கஞ்சி) உட்கொள்ள உட்கொள்ள அப்பனே அதிலும் கூட அப்பனே எதையன்றி கூட சக்திகள் அங்கே புகும் என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இவற்றின் தன்மைகளையும் அறியாத அளவிற்கும் கூட 

அப்பனே பின் மார்கழி வரும்!!!

அப்பனே இதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட இன்னும் அப்பனே உச்சம் பெறும் என்பன் அப்பனே அவ் ஓளியானது!! அப்படி உச்சம் பெறும் பொழுது அப்பனே அதிகாலையிலே அவ் ஒளியானது அப்பனே வரும் என்பேன் அப்பனே

ஒவ்வொரு எதை என்று பின் ஆனாலும் இதன் தன்மையையும் ஈர்க்கும் சக்தி விஷ்ணு சகஸ்ரநாமம் எதை என்று கூட திருவாசகம் இவை இரண்டிற்கு மட்டுமே உள்ளது!!!

பின் மார்கழி திங்களில் அதிகாலையிலே விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சிவபுராணத்தையும் ஓதி வந்தால் அவ் ஒளியானது நிச்சயம் தன்மீது பட்டு பட்டு எழும் என்பேன் அப்பனே சக்திகள்!!! சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!! இவையன்றி கூட....

ஆனால் அப்பனே பின் எதை இவை அறிந்து இவை அறிந்து இதை தன் மீண்டும் அப்பனே தை மாதம் இவை என்று அறிய பின் சிறிது சிறிதாக பின் ஒளிந்து விடும் அப்பனே!!!!

இதனால் எதை என்று அறிய அதனால் அப்பனே இம்மாதத்தில் இருந்து பல புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளலாம் தை மாதம் வரை!!! இதுதான் அப்பனே புண்ணிய காலம் என்பேன் அப்பனே!!!! 

இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து ஆனாலும் இவற்றை உணராத அளவிற்கும் கூட அப்பனே ஆனாலும் ஒன்று உள்ளது பின் இன்னொரு செல்லையும் கூட தத்துவத்தையும் கூட.... 

ஆனாலும் இது மூன்றாவது கோடாக பின் படிகின்றது என்பேன் அப்பனே!!!!

நீ செய்யும் காரியங்கள் அனைத்தும் கூட அது பகிர்ந்து கொள்ளாத அளவிற்கு கூட அப்படியே நின்று விடும்!!!!

எதையென்றும் தெரியாத அளவற்கு கூட நின்றுவிட்டால் அப்பனே இதுதான் நோய்களாக வருகிறது என்பேன் அப்பனே!!!!

ஆனால் ஒவ்வொரு எதையென்று ஆனாலும் அச் செல் எதை என்று குறிப்பிடும் அளவிற்கு கூட ஒவ்வொரு வினையும் எதனால் வருகின்றது??? என்பதை பார்த்தால் அப்பனே நீ கண்களால் பார்த்தால் ஒரு செல் எதை என்று கூட பின் ஒரு நோயை எதையென்று தீர்மானித்து விடும் அப்பனே!!

கைகளால் செய்த தவறுகளுக்கு அப்பனே ஒரு நோய் உண்டாகும்!!!

அப்பனே எதையென்று எவற்றினின்று கூட மனதால் அதாவது தீயதை நினைத்தாலே பின் ஒரு செல்  எதையென்று பின் அனைத்தும் அப்பனே எவை என்று கூட பின் கேட்கும் திறனும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது மனிதன் தன்மையில் அது எங்கு ஒளிந்துள்ளது என்பதையும் கூட வரும் காலங்களில் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

இவை தன் கடைபிடிக்க கடைபிடிக்க அதனால் தான் அப்பனே புண்ணியம் செய்து கொள்ளுங்கள் புண்ணியம் செய்து கொள்ளுங்கள் அப்பனே!!!

தீயவை பேசாதீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

சேமிக்கும் திறன் நம்மிடையே உள்ளது என்பேன் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று கூட அதனால் தான் அப்பனே முன்னோர்கள் தன் நிலைக்குத் தானே காரணம் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!

விதியின் பாதையும் கூட மூன்று கோடுகள் அப்பனே!!!!

அதனால்தான் ஈசனுக்கும் எவை என்று கூட பட்டை( திருநீறு பட்டை) பின் மூன்று கோடுகள்!!!

அப்பனே இதை என்று அறிய விஷ்ணுவுக்கும் மூன்று கோடுகள்...(திருமண் சாற்று) 

அப்பனே பிரம்மாவிற்கும் மூன்று கோடுகள்...

எதையென்று அறிய அதனால் தான் அப்பனே சூட்சுமம் எங்கு ஒளிந்துள்ளது என்றால அப்பனே நெற்றியிலே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. 

ஈர்க்கும் சக்தி எதையென்றும் கூற அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வரும் வரும் வாக்குகளில் கூட தெளிவுபடுத்துகின்றேன் அப்பனே இன்னும் ஏராளமானதையும் கூட!!!

ஆனாலும் இவையென்று எதனையன்றி கூட அப்பனே இப்படி இல்லாமல் சொல்பவர்களும் எதை என்று எதுவும் மிச்சம் இல்லை இவ்வுலகத்தில்!!!

அப்பனே எந்தனுக்கு வழிகள் காட்டும்!!!! கடமையை யான்/ செய்கின்றேன்!!!! எதை என்றி கூற பின் ஏதாவது எவை என்று கூட இங்கே தீர்க்க வேண்டும் என்று கூட மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்பனே!!!

எப்படி தீர்க்க முடியும்!???? உன் கர்மத்தை?? அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை எங்கு கழித்தால் நன்றாகும் என்பதைக் கூட அப்பனே ஒவ்வொரு விதியின் பாதையை கூட பின் ஒரு ஒரு செல்லிற்கும் அப்பனே  எத்திருத்தலத்திற்கு சென்றால்...  அச் செல்லானது பின் எதை என்று கூட பின் எவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அவற்றின் சக்திகள் கூடும் என்பேன் அப்பனே!!!

சக்திகள் கூடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நீ எவை என்று உணராமலே அனைத்து திறமைகளையும் பெற்று இருப்பாய் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும் அவ் 10 செல்களும் அழிந்து கொண்டே தான் வருகின்றது!!! வரும் வரும் காலங்களில்!!! எதை என்று உணர அதனால் அப்பனே!!!!

ஒவ்வொன்றிற்கும் சமமான எதிர்வினைகளும் உண்டு உண்டு!!!!( இந்த விதியினை கண்டுபிடித்தது நியூட்டன் / நியூட்டன் மூன்றாம் விதி என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்படியே படித்துக் கொண்டு வருகின்றோம் ஆனால் இதை உலகிற்கு முதன் முதலில் சொன்னது நம் குருநாதர் ரகசிய பெருமான். )

அதனால்தான் அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே தன் வினைக்குத் தானே காரணம் என்று அழகாகவே சொல்லிவிட்டார்கள் அப்பனே !!!

எதை எவற்றை ஈர்க்கும் சக்தி எதனின் தன்மை உணர்த்தும் சக்தி அப்பனே என்று உள்ளது அப்பனே எங்கு உள்ளது என்பதை எல்லாம் அப்பனே திறன் மூலம் ஆராய்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து அப்பனே பல வழிகளிலும் கூட திருத்தலங்களை யாங்களே அமைத்தோம்!!!!!
அப்பனே!!!! 

இதையென்று உணர உணர அப்பனே காசி தன்னில் எதை இவற்றின் தன்மைகளை கூட இவ் மூன்று கோடுகள் அப்பனே நிச்சயம் ஒரே இடத்தில் பதியும்!!!!!

எதையென்று எவற்றினின்று கூட அப்பனே காசி தனில் மட்டுமே அப்பொழுது எவை என்று கூட அங்கும் ஒரு மாதத்தில் படும்!!!!

ஆனாலும் அப்பனே இவை செய்து வந்தால் அவ் மாதமானது எங்கென்று கூட யான் சொல்கின்றேன் அப்பனே!!!!

இன்னொரு எதை எவற்றின் தன்மைகளை கூட பன்னிரண்டு எதை பன்னிரண்டு காட்டும் அளவிற்கு கூட 12 ஜோதிர்லிங்கங்களில் கூட அப்பனே இவையென்று கூற ஈசனின் திருவுருவமானது மறைமுகமாகவே மறைக்கப்பட்டது அப்பனே!!!

இவ் மூன்று கோடுகளின் திறன் அங்கே தான் அதிகம் படும் என்பேன் அப்பனே!!!!

இதனால் நிச்சயம் எவை என்று கூட அப்பனே பின் அடிக்கடி அங்கு சென்று வருபவர்கள் நிச்சயம் மூன்று கோடுகள் ஆனது நேர் சமமாக இருந்தால் தான் உன் விதியும் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்!!!!

ஆனாலும் மூன்று கோடுகள் அப்பனே உன் மண்டை அதாவது உன் (கபால ஓடு) ஓட்டில் கூட அப்பனே எதை என்று கூட நிச்சயம் அவ் மூன்று கோடுகள் எதை என்று கூட அப்பனே பின் ஆற்றின் போல் வளைந்து வளைந்து செல்லும்!!!

இவ் வளைந்து வளைந்து செல்லுமானால் ஒரு பிரயோஜனமும் இல்லை உன் வாழ்க்கையும் கூட பின் எதை என்று உணராமலே வெற்றி பெறாது!!!! எதை என்று கூட பின் தோல்விகள் அப்பனே எதுவும் நல்லதும் நடக்காது!!!

ஆனாலும் அதை நேர் முறையாக்க வேண்டும்!!!

அப்பனே அதனால்தான் பட்டை என்ற பின் எதை என்று கூட ஈசனுக்கு அப்பனே நன்றாகவே இழுத்துள்ளார்கள் அப்பனே!!!!

அதுபோலே வரவேண்டும் அப்பொழுதுதான் உன் வாழ்க்கை பிரகாசிக்கும் அப்பனே!!!!

இதற்கு எப்படியெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே.

எதை எவற்றினின்று கூட""""" செந்தூர்!!!! அப்பனே கோட்டம் அதாவது திருச்செந்தூரில் அப்பனே எதை என்று கூட அப்பனே உண்மையானவர்கள் அதாவது பொய் சொல்ல  கூடாது எதை என்று அறிய அங்கு செல்பவர்கள் நிச்சயம் ஒரு செல்லானது அப்படியே தூக்கி விட்டு செல்லும். பல ஞானங்களை வழங்கும்!!!

ஆனாலும் அங்கிருந்தே பல மனிதர்கள் பொய் சொல்லி கொண்டிருந்தால் அவ் செல்லானது அழிந்து கொண்டே வரும் ஆனால் கடைசியில் பார்த்தால் கஷ்டங்கள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! என்னை நினைத்தும் கூட அப்பனே என்னென்ன செய்கின்றார்கள் என்பதை கூட அப்பனே ஆனால் விட்டுவிடுமா??? என்ன?? உன் தரித்திரம் அப்பனே!!!!

எதை எவற்றில் இருந்து கூட அதனால் தான் அப்பனே இதன் தன்மைகளைக் கூட அறிவியல் ரீதியாகவே இன்னும் உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள்!!! மாற்றம் அடையுங்கள்!!!

கலியுகத்தில் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது எவை என்று உணர!!! உணர!!!

அப்பனே இவையெல்லாம் மாற்றினால் இன்னும் ஏராளமான சித்தர்களும் அப்பனே மனிதர்களுக்கு நல்லது செய்ய காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் மனிதனின் தன்மை மீறிக்கொண்டே போகின்றது அப்பனே எவை எதை என்று கூட!!!

ஆனாலும் அப்பனே அனைத்திற்கும் காரணம் இவ் 10 செல்களே என்பேன் அப்பனே!!!

இவ் 10 செல்களைப் பற்றியும் ஒவ்வொன்றாக குறிக்கப் போகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் இவ் 10 செல்களுக்கும் கிரகங்களுக்கும் பல சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதை அறிந்து அறிந்து ஆனாலும் பத்தாவதாக மந்தன் (மாந்தி) என்றே பின் சொல்கின்றார்கள்....  எதையென்றும் உணர்ந்து உணர்ந்து ஆனால் ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு பெயர் எதை என்று கூட  யான் விளக்கம் அளிக்கின்ற பொழுது யான் இன்னும் எடுத்துரைக்கிறேன் அப்பனே!!!!

அப்பனே!! சிறிது சிறிதாக அப்பனே அப்பொழுதுதான் புரியும் என்பேன் அப்பனே!!!

இன்னும் ஏராளம் அப்பனே அண்ணாமலை உண்ணாமலை எதை என்று கூட அப்பனே கார்த்திகை திங்களில் அழகாகவே இங்கே நடனம் ஆடுவார்கள் என்பேன்... அவர்களுக்கு இல்லம் கார்த்திகை மாதத்தில் எதை எவற்றிலிருந்து கூற வந்து செல்வார்கள் என்பேன் அப்பனே.

அழகாக பின் மகிழ்வான் என்பேன் ஈசன் தீபத்தன்று!!!! கூட

அதனால்தான் இத் தீபத்தின் மகிமை!!!! அப்பனே தீபத்தை கூட எதற்காக ஏற்றுகின்றீர்கள்!???

எதை என்று கூட அப்பனே யாருக்கும் தெரிவதில்லை அப்பனே!!!

ஏதோ தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதை கூட ஆனால் இம் மலையானது முன்னொரு காலத்தில் பின் தங்கம் எதை என்று கூற வைரம் இதையன்றி கூட பன்மடங்காக!! இதனடியில்!!! பல சித்தர்களும் கூட அப்பனே!!!

அப்பனே அவ் ஒளியை(கார்த்திகை தீபத்தை ஏற்றும்) எழுப்பும் பொழுது அப்பனே எதை எவற்றினின்றும் கூட அனைத்து சித்தர்களின் ஒளி தான் அது!!!

அப்பனே எவை அதை கண்களால் காண்கின்ற பொழுது அப்பனே நம் மனதில் கூட அப்படி சில தீய வினைகள் அகன்று!!!.....

ஆனாலும் அதனைப் பார்த்திட்டு அப்பனே அதனை நம் நெஞ்சில் நிறுத்திட்டு மனதில் அதாவது எதை என்று கூட பின் ஓர் மாதம் அல்லது இரு மாதம் அல்லது ஐந்து மாதங்கள் கூட அவ் தீபத்தை பார்த்திட்டு தீபத்தை எதை என்று உணர நம் மனதிலே நிறுத்தி அண்ணாமலையில் தீபம் ஏற்றினார்களே!!!!......... அதை நினைத்து அதையே மனதில் நிறுத்தி அதையே வைத்துக்கொண்டு அத் தீபத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தால் அப்பனே பல கர்மாக்கள் கரையும் என்பேன் அப்பனே!!!!

இதனால் பல விஷயங்கள் சொல்லப் போகின்றேன் அப்பனே!!!! மனித குலத்திற்காக அப்பனே!!!

எதை என்று கூட நல்லோர்களை வாழ வைக்கப் போகின்றோம் சித்தர்கள்... ஆனால் அவ் நல்லோர்களை வாழவைக்கின்ற பொழுது அப்பனே  மற்ற தீயவர்களும் மாறுவார்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இதையென்று அறிய ஆனாலும் அப்பனே இவை இவை என்று கூட இவ் நல்லதைச் செய்ய சில தீய மனிதர்களும் வருவார்களப்பா!!! திருடர்களும் எதை என்று கூற அப்பனே!!! 

வாக்குகள் இவை என்று கூட அகத்தியனா!!!!..... என்றெல்லாம் என்னையும் திட்டியும் தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே சில மனிதர்கள் அப்பனே நம்பி விடாதீர்கள்!!!

அப்பனே எதை என்று கூட சித்தனை எதை என்று கூட பொய் என்று சொல்பவர்கள் அப்பனே நிச்சயம் தண்டணைக்குள்ளாவார்கள். அப்பனே!! சொல்லிவிட்டேன்

ஏற்கனவே பல தண்டனைகளை கொடுத்திருக்கின்றேன்!! பல மனிதர்களுக்கு கூட!!!

ஒரு பெண்ணவள்( பெண்மணி) கூட அப்பனே திட்டி தீர்த்து கொண்டு தான் இருக்கின்றாள் அப்பனே!!!

அவள்தனக்கு என்னதான் நடக்கப் போகின்றது??? என்று கூட... அவள் அறியாது!!!!( அவருக்கு தெரியாது) 

யான் தான் அறிவேன் அப்பனே!!!!

இதை எதை என்று அறிய இதனால் தண்டனைகள் உண்டு!!!!

அப்பனே சித்தர்களை எதை என்று கூட சித்தர்கள் ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கணிக்க முடியாது!!!!!

ஏன்??  என் ஈசன் அதாவது என் மனதில் உள்ள ஈசன் எதையென்று அறிய பின் ஈசனின் பின் முதல் சித்தன் எதை என்று அறிய அறிய அவந்தனுக்கு தெரியாத விஷயங்கள் அப்பனே!!!!!

இப்பொழுது கூட யான் சொல்வேன் அப்பனே எப்பொழுதும் கூட யான் சொல்வேன்!!! 

பக்திக்கும் முக்திக்கும் ஈசன் யானே!!!! என்று தைரியமாக அப்பனே!!!!!! 

இன்னும் மாற்றத்தான் போகின்றேன் அப்பனே!!!

வரும் காலங்களில் பார்க்கத்தான் போகின்றீர்கள் அப்பனே இன்னும் வாக்குகள் உண்டு!! உண்டு!!!

ஆசிகள்!!! ஆசிகள்!!! அப்பனே!! அனைவருக்கும்!!

பின்குறிப்பு வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் உரைத்தது போல வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளித்திடுதல் வேண்டும் இயலாதவர்களுக்கு தானம் தர்மங்கள் செய்திட வேண்டும்.

கன்னி திங்கள் அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவியுடன் மதுரை பசுமலையில் உள்ள அகத்தியர் ஆலயத்திற்கும் தர்மபுரி சஞ்சீவராயன் மலைக்கோயில் இந்த புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமையும் வந்து செல்வான். என்று குருநாதர் உரைத்திருந்தார். அதை மறுவூட்டல் செய்வதற்காக இந்த பதிவு!!!! நன்றி நமஸ்காரங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

9 comments:

  1. ஓம் தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. எவ்ளோ பெரிய ரகசிய த்திலும் ரகசிய மான் விஷயத்தை அருள் வாக்கு காக தருகிறாயே உனது கருவறைக்கு அளவே இல்லையா. சித்தப்பா ஐயா உனக்கு எப்படியெல்லாம் நன்றி சொல்வது லட்க்ஷதீபம் ஏற்றி நன்றி சொல்லவா ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம் செய்து நன்றி சொல்லவா ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நன்றி சொல்லவா அல்லது உனக்கு ஒரு கோயிலை கட்டி நன்றி சொல்ல வா

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் தந்த குரு அகத்திய பெருமானுக்கு எனது பரிபூர்ண நன்றிகள்

    ReplyDelete
  4. ஓம் அகத்தியர் திருப்பதம் போற்றி

    ReplyDelete
  5. அகத்திய பெருமானின் அன்பு பெரியது

    ReplyDelete
  6. அருட்பெருங்கடலே... ஞானக்கடலே... அகத்தீசா... அகத்தீசா... ஒரு முறை நமது அகத்தியர் இல்(லத்திற்கு)லம் விஜயம் செய்யுங்களேன்... தாங்கள் கூறியுள்ளதுபோல் பலருக்கு தங்களின் அருமை அருட்பெருமை இவ்வுலகில் - இவ்வூரில் தெரியவில்லை... தாங்கள்/ ஈசனுக்கு - விஷ்ணுவுக்கு - பிரம்மாவுக்கு - முருகனுக்கும் --- சமமானவர் என்று?????!!!!! தாங்கள் யாரென்பதை உணர்த்துங்கள்/ உணரவையுங்கள். அபொழுதுதான் தீய ஆத்மாவும் திருந்தும்... நல்லாத்மாக்கள் வாழமுடியும்... தங்களின் வழியில் நம்பி வரும் அடியவர்களுக்கு இந்த உதவியை செய்தால் இறைவிஷயத்தில் மற்றவர்களுக்கு பயமும் வரும் --- தெளிவும் பிறக்கும் அய்யனே... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் எம்பெருமானே அகத்தீசா... அன்புடன் அடியவன்....

    ReplyDelete
  7. அகத்தீஸ் அப்பாவின் கருனைப்பிசை கருனைப்பிசை...

    நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
    நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்,
    நின்னை உள்ள வண்ணம்,
    பேயேன் அறிவும், அறிவு தந்தாய்..
    என்ன பேரு பெற்றேன் அகத்தீஸ் அப்பா 🙇🙇🙇🙇
    குருநாதர் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்..


    லோபா அம்மா உடனமர் அகத்தீஸ் அப்பா திருவடிகள் சரணம் சரணம் சரணம்..
    அகத்தியர் அடி நாய்

    ReplyDelete
  8. இறைவா!!!!! நீயே அனைத்தும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    சித்தன் அருள் - 1191 - திருமலை திருப்பதி!

    புரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை , மார்கழி , தை மாத ரகசியங்கள்
    கர்ம வினை நீக்கும் அற்புத ரகசியங்கள் விஞ்ஞான வாக்கு

    YouTube video :--

    https://www.youtube.com/watch?v=5adiVnEF2c0

    அடியவர்கள் இந்த வாக்கை பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே இதன் ரகசியங்களை புரிந்துகொள்ள இயலும். வாருங்கள் அடியவர்களே.


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  9. இறைவா நீயே அனைத்தும்

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    புரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை , மார்கழி , தை மாத ரகசியங்கள்.
    கர்ம வினை நீக்கும் அற்புத ரகசியங்கள் விஞ்ஞான வாக்கு

    சித்தன் அருள் - 1188 - திருமலை திருப்பதி!

    அடியவர்கள் இந்த வாக்கை பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே இதன் ரகசியங்களை புரிந்துகொள்ள இயலும்.
    வாருங்கள் குருநாதர் வாக்கின் உள் செல்வோம்

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete