​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 September 2022

சித்தன் அருள் - 1177 - வஜ்ராசனம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்" வலைப்பூவை வாசித்து வரும் யாரோ ஒரு அடியவரின் வேண்டுதலுக்கு/பிரார்த்தனைக்கு செவி சாய்த்து, குருநாதரின் உத்தரவால், இந்த தொகுப்பை சமர்ப்பிக்கிறேன். இதை அவர் அருளியதாக எடுத்துக்கொண்டு, தினமும் செய்து, நலம் பெற வேண்டுகிறேன்.

வஜ்ராசனம் என்கிற யோக முறை முழு உடலையும் அதன் இயல்பு நிலைக்கு திரும்ப அழைத்து செல்லும். எந்த விதமான நோய்களுக்கும் சிறந்த வர்ம சிகிர்ச்சை போல உடலுக்குள் புகுந்து குறைகளை நிவர்த்தி செய்யும். 

​வஜ்ராசனத்தை தினமும் இரண்டு முறையாவது பயிற்சி செய்து வந்தால் உடல் பலப்பட்டு உறுதியாகும். பலவிதமான உள் உறுப்புகள் செயல்படாமல், சுரப்பிகள் சுரக்காமல் போவதினால், உடல், நோய்களுக்கு காரணமாகி வலுவிழந்து வேதனையை அடையும். உடலை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வர வஜ்ராசனம்  மிகவும் எளிய யோகாசனம் ஆகும்.

மிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும். அவற்றில் ஒன்றாக வஜ்ராசனத்தைக் கருதலாம்.

இதன் இன்னொரு சிறப்பு இந்த ஆசனத்தை  எந்த நேரமும் செய்யக் கூடியதாக இருப்பது. அதாவது சாப்பிட்ட பின்னரும் கூடச் செய்யக் கூடிய ஆசனம் இதுவாகும். சாப்பிட்ட பின் 10 நிமிடம் வஜ்ராசன முறையில் அமர்ந்திருந்தாலே உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிவிடும்.

பொதுவாக இறை பிரார்த்தனைகள், தியானத்தின் போது வஜ்ராசன நிலையில் அமர்ந்து இருந்து செய்வதை  கவனித்திருப்பீர்கள். இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற பலத்தை இது உடலுக்கு கொடுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பெயர் வந்திருக்கிறது. 

வஜ்ராசனம் செய்யும் போது கைகள் இரண்டையும் இரு தொடைகளின் மேல் சின் முத்திரையில் வைத்திருக்கலாம். அல்லது சாதாரணமாக வைக்கலாம்.

செய்ய ஆரம்பிப்பவர்கள் முதலில் 5 நிமிடங்களுக்கு இதே நிலையில் இருக்கலாம். கால்களில் வலியை உணர்ந்தால் கலைத்து விட்டு, பின்னர் ஆசனத்தை மீண்டும் தொடரவும்.

அதிக முதுகுவலி, மூட்டுவலி, முட்டி தேய்மானம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். அல்லது தகுந்த வழிகாட்டலுடன் மிக மெதுவாக செய்து பார்க்கலாம்.

செய்வதற்கும் பார்ப்பதற்கும் மிக எளிதாக இருக்கும் வஜ்ராசனம், உடலுக்கு அதி அற்புத பலன்களை தரும்.

மனம் ஒரு நிலை அடையும்.

கவனச் சிதறல் குறைந்து, தியானத்தின் போது ஆழ்ந்த நிலை செல்வதற்கு உதவுகிறது.

மனம் புலன்வழி போகாமல்  காட்டுப்படுவதை ஐந்து நிமிட வஜ்ராசனப் பயிற்சியின் போது உணர முடியும். மாணவர்களுக்கு நல்லதோர் ஆசனம்.

வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

தொப்பையும் கரைந்து விடும். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் உடல் எடை குறையும்.

சர்க்கரை வியாதி உருவாக காரணமாக இருக்கிற இன்சுலின் சுரத்தலை சரி செய்கிறது. (இதனுடன் "சீமை சாமந்தி" பூவை உலர்த்தி, தினமும் 5 முறை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் Type - II டயபடிக்ஸ் (வயதாகும் போது வரும் இன்சுலின் குறைபாடு) விலகிவிடும்).

வஜ்ராசனத்தில் அமர்ந்தவர்களுக்கு, அந்த ஆசனத்தில் இருக்கும்வரை இரத்த ஓட்டம் முட்டி பகுதிக்கு கீழே செல்லாது. இதனால் வெரிகோஸ் நரம்புகள் தளர்வாகின்றன.

இரத்த ஓட்டம் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும். அதனை மேல் நோக்கிச் செலுத்துவதற்கு  நமது உடலில் வெரிகோஸ் வெயின் செயற்படுகிறது. நாள் முழுவதும் நின்று கொண்டிருப்பவர்களுக்கு, வெரிகோஸ் வெயின் தீவிரமாகச் செயல்படுவதால், பாதிப்புகள் உண்டாகும். எனவே இந்த ஆசனம் வெரிக்கோஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலனை அளிக்கிறது.

இரத்த ஓட்டம் அதிக அளவு வயிற்றுப் பகுதியை நோக்கிச் செல்வதால் செரிமான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. மதிய உணவிற்குப் பிறகு 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தால், சாப்பிட்ட உணவு அனைத்தும் ஜீரணமாகிவிடுவதை உணரலாம்.

கர்ப்பப்பைக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால், நீர்க்கட்டி, அழுக்குகள், மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும். பெண்களுக்கு சிறந்த ஆசனம் இது.

கால், இடுப்பு, தொடைப் பகுதிகள் வலுவடைகின்றன. இந்நிலையில் அமர்ந்து பிராணாயாமம் செய்யும் போது, தலைப்பகுதிகளுக்கு சீரான இரத்த ஓட்டம் விரைவாக தடையின்றி கிடைக்கிறது.

மனஅழுத்தம் நீங்க சிறந்த ஆசனம் இது.

சரியான முறையில் பழகி , நீங்களும் செய்து பலன் பெறுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நம... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் எம்பெருமானே ஞானக்கடலே...

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா.அகஸ்தியர் கூறிய அனைத்து ராசிகளுக்கான பரிகாரங்களை ஐயன் அனுமதியுடன் தயவுசெய்து குறிப்பிடவும்.நன்றி

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    நன்றிகள் ஐயா வழி கொடுத்துட்டீங்க நன்றிகள் ஐயனே அம்மையே

    ReplyDelete