வாக்குரைத்த ஸ்தலம் : மகான் ஒடுகத்தூர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி./ மடம்
அல்சூர் ஏரி சமீபம்.
ஹலசூரு கங்காதர் செட்டி சாலை, பெங்களூரு.
ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே !!
மனிதர்களுக்கு வரும் காலங்களில் பல கஷ்டங்கள் பல இன்னல்கள் வரும் என்பதை நன்கு உணர்ந்தான் இவ் ஞானி. (ஒடுகத்தூர் ஸ்வாமிகள்) இதையன்றி ஆனாலும் இவ் ஞானியவன் ஒரு ஏழை குடிலில் பிறந்தவன். ஏழை குடிலில் பிறந்து ஆனாலும் அன்னத்திற்கே கஷ்டங்கள் கஷ்டங்கள் பட்டவன்.
ஆனாலும் இவனை விரட்டியடித்தார்கள் இதையென்று சிறுவயதிலே உற்றார் உறவினர்.
ஆனாலும் இவந்தனுக்கு இறைவன் மீது இறைவன் மீது ஈசன் மீது பற்றுக்கள்.
பற்றுக்கள் ஆனாலும் இவந்தன் பின்...ஞானியாகவே ஜனிக்க(பிறக்க)... ஆனாலும் இறைவனே இவந்தனுக்கு உத்தரவுகள்.
ஆனாலும் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவன். ஆனாலும் இவந்தனுக்கு உற்றார் உறவினரால் பல தொல்லைகள் நேர்ந்தது சிறுவயதிலே.
யாரும் கவனிக்க ஆள் இல்லை. ஆனாலும் இறைவனிடத்திலே நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! பரமேஸ்வரா!! கோவிந்தா!!! இவையெல்லாம் வார்த்தைகளை உச்சரித்து கொண்டே இருந்தான்.
ஆனாலும் பலமுறை ஆனாலும் பல ஊர்களுக்கு சென்றவன். இதையன்றி கூற ஆனாலும் ஈசன் இவந்தனை சோதிக்க ஆரம்பித்தான். இன்னும்... இப்படிப்பட்ட மனிதன் இருக்கின்றானே!!! இவந்தனுக்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்பதை கூட ஈசன்......
பார்வதிதேவி ஆனாலும் ஈசனிடத்தில் திரும்பவும் முறையிட்டு, இவன் உன் படைப்புகளில்!! இப்படி ஒரு படைப்பா???!!!
சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து உற்றார் உறவினர்களையும் இழந்து ஆனால் இவன் எப்படி சுற்றுகிறான் பார்!!
ஆனாலும் இவந்தனக்கு இவ் வயதிலே ஏதும் அனைத்தும் அனுபவிக்கின்ற வயதில் இவ்வளவு கஷ்டங்களா!!!
பாசங்கள் பந்தங்கள் இவந்தனக்கு இல்லையே!!! இவன் ஏங்குகின்றானே!!! இவன் சுற்றி சுற்றி வருகின்றானே!!!
ஆனாலும் உன்னையும் மறக்கவில்லையே.!!!
ஆனாலும் இவந்தனுக்கு சற்று ஏதாவது கொடுங்கள்!! என்று பார்வதி தேவி ஈசனிடம் கேட்க...
ஈசனும் நிச்சயம் கொடுப்பேன் ஆனாலும் இவந்தனுக்கு சில சோதனைகள்... இருப்பினும் அதையும் தாங்கிக்கொள்ள பார்க்கின்றானா!!! பார்த்து ஆனாலும் பார்ப்போம் இவந்தனை என்று கூட...
பூலோகத்தில் இதையன்றி கூற ஈசனும் பார்வதி தேவியும் வந்து... ஆனாலும் இவந்தனும்.... அப்பொழுது கூட பல கஷ்டங்கள்...பின் உடுக்க ஆடை இல்லை!!! உணவுகளும் இல்லை!!!
ஆனாலும் """""நமசிவாய""""" எனும் மந்திரத்தை......""""" கோவிந்தா"""" எனும் மந்திரத்தை....
ஆனால்"""""" முருகா""""" எனும் மந்திரத்தை இவன் விட்டுவிடவில்லை... எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்.
ஆனாலும் பல ஆலயங்களுக்கு சென்று சென்று அங்கே தங்கியிருந்து பின் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வாழ்ந்து வந்தான்.
ஆனால் இதனையும் உற்று நோக்கிகொண்டிருந்தனர்.. ஈசனும் பார்வதிதேவியும்.
ஆனாலும் இதை இதையன்றி மீண்டும் எவை என்று கூற வளர வளர வயதுகள் வளர வளர ஆனால் இவந்தனக்கு பக்திகள் மிகுந்து காணப்பட்டது.
பின் ஒன்றை மட்டும் சொன்னான்.....
ஈசனே!!!....... எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் வலிமை எந்தனக்கு கொடு..
ஆனாலும் ஈசன் நிச்சயமாய் இதையும் உணர்ந்து சிறுது லேசாக ,கவனமாக அதிக கஷ்டங்கள்,....
ஆனாலும் உணர்ந்தான். உடுக்க ஆடையோ!! உண்ண உணவோ!! இல்லை..... ஆங்காங்கே உறங்கினான்....
ஆனால் பல மனிதர்கள் இவனை விரட்டினார்கள்..
இவன் பைத்தியக்காரன்!!!
இவன் தரித்திரன்!!! என்றெல்லாம் சொல்லி!!...
ஆனால் இவந்தன் ஆனால் இறைவனின் குழந்தை என்று தெரியாமல் போய்விட்டது மனிதர்களுக்கு...என்ற நிலையில்... ஆனால் இவன் படாத கஷ்டங்களா!!! பட்டு விட்டார்கள்???!!!! வரும் நேரங்களில் மனிதர்கள்!!!
அவ்வளவு கஷ்டங்கள்!!!
இன்னும் சொல்லப்போனால் 15,, 20,, 25 ,,வயதுகளில் இவந்தனுக்கு ஏதும் இல்லை..... ஆடை இல்லாமலே சுற்றி தவித்தான்.
ஆனால் இவை என்று பார்வதி தேவி!!! பார்வதிதேவி கருணையுள்ள மணாளனே!!
இதை இவன் உடுக்க ஆடையாவது கொடு....என்று கூட..
ஆனாலும் பின் இவந்தன் போகும் வழியில் ஓர் ஆடையை யாராவது சிறிய ஆடையை கொடுத்தான்....
அதை பார்த்து இவ் ஞானி கேட்டான்.... இதெல்லாம் உதவுமா??? எந்தனுக்கு...ஈசா!!!!....என்று!..
ஆனாலும் சரி ஏதோ ஒன்று எந்தனுக்கு கிடைத்திருக்கின்றதே!!! என்று கூட அதையும் உடுத்திக் கொண்டான்.
அதையே ஈசன் கொடுத்ததாகவே எண்ணி..!!!
ஆனால் ஈசன் தான் கொடுத்தான் என்று கூட அறியவில்லை!!!
ஈசன் கொடுத்தான் என்று கூட ஆனால் கடைசி வரையில் அதை தன் அவன் உடம்பிலே படும்படி ....(கடைசி வரை உடுத்தியபடியே இருந்தார்)
ஆனால் இதை உணர்த்தி உணர்த்தி உடுத்த இதையே ஆடை என்று.....
ஆனாலும் ..நிச்சயம் பார்வதிதேவி... மீண்டும் கேட்டாள் ஈசனை....
இவ்வாறு கொடுத்து இருக்கின்றாயே?!!!! இவ் ஆடையை... இவந்தனுக்கு என்ன... ஆனாலும் நிச்சயமாய் யான் கொடுப்பேன் என்று கூற பெரிய ஆடையை பின் கீழே ...இதையென்று குவித்த அளவிற்கு கீழே இட்டு விட்டாள்.பின் பார்வதி தேவி.
ஆனால் அதனையும் நினைத்து எதுவும் இதற்கும் தகுதிகளா!!!
மனித உடம்பு என்பது வெறும் காற்றே!!!.... ஆனாலும் இது தேவையா எந்தனுக்கு...இறைவா!!! என்று கூட மேல்நோக்கி சொன்னான்.
சரி!! ஏதோ!!! நம்தனக்கு..... என்றுகூட அதையும் எடுத்து உடுத்திக் கொண்டான்.
இவனது ஆடைகளே இதுதான்!!!!
அப்பொழுது இதை ஆனாலும் இறைவன் பக்தியாக இருந்தும் இவ்வளவு கஷ்டங்கள்.
ஆனால் பார்த்தீர்களா!!! மனிதர்களே!!!!
மனிதர்களே இதுதான் உண்மையான பக்தி.
எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் திறமை. ஆனாலும் 20, 25, 30 வயதுகளில் வருவது கஷ்டம் என்றால் மனிதனுக்கு தாங்க முடியாத அளவிற்கு கஷ்டம். ஆனாலும் இதையன்றி கூற...
ஆனாலும் இவந்தனுக்கு ஒரு முடிவை ஈசன்..... ஆனாலும் விடவில்லை கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று.
ஆனாலும் தன் இவந்தனுக்கே ஞானம் வந்தும் விட்டது சிறிது காலத்திலே.!!!
இவ்வாறு பிறந்து விட்டோமே!!!.... மனிதர்களுக்கு ஏன் நல்லது செய்யக் கூடாது??? என்றுகூட...
திரும்பவும் ஓர் இவை பின் நல்முறையாக அண்ணாமலைக்கு சென்றான். அங்கே நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!! என்று கூட கத்திக் கொண்டே!!! கத்தி கொண்டே!!!! எதையென்று கூற.....
மனிதர்கள்...ஏன்?? இவந்தன் இவ்வாறு கத்திக் கொண்டிருக்கின்றான்... என்று கூட பல மனிதர்கள் இவந்தனை... பைத்தியக்காரனே!!! என்று கூட அழைத்தார்கள் சில நேரங்கள்.... பைத்தியக்காரா!!! பைத்தியக்காரா!!! என்று கூட மனிதர்கள்....
ஆனாலும் இவனின் ஞான நிலை... யாருக்கும் புரியவில்லை!!!!
இப்படித்தான் இன்றளவும் மனிதர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள்..
மனிதன் பொய்யான பக்திகளுக்கு பின் அனைத்தும் சுகபோகங்களும் எவையென்று கூற... ஆன்மீகத்தில் வேடங்கள் போட்டவனுக்கு மரியாதை!!! போடாதவனுக்கு மரியாதை இல்லை!!! இப்படித்தான் நடக்கின்றது.
ஆனால் இவந்தனை எவை என்று... மனிதன் பைத்தியக்காரன்..என்று.
ஆனால் உண்மையில் அப்படி சொன்னவர்களெல்லாம் கடைசியில் அவன்தான் பைத்தியக்காரனாக ஆகி கொண்டிருக்கின்றான் என்பது... இன்னும் இன்னும்.
ஆனாலும் இவந்தன் அங்கே ஞானம் பிறந்தது அண்ணாமலையிலே....
பல ஆலயங்களுக்கு சென்று ஈசனின் திருப்பணிகளை முடிப்பதற்கு சரியான நேரங்களில் இவன் மறைமுகமாகவே சென்று பல ஆலயங்களுக்கு மனிதர்கள் வரும் கலியுகத்தில் மனிதர்கள் பல கஷ்டங்கள் படுவார்கள்.
தன்னைப் போன்று யாரும் படக்கூடாது என்று எண்ணினான்.. ஆனால் இதைத்தான் மனதில் எண்ணி. ஆனால் ஈசனிடத்தில் அண்ணாமலைக்கு சென்று.....
அண்ணாமலையில் கூட இவனை விரட்டி விட்டார்கள்.
இவன் பைத்தியக்காரன் இவன் உள்ளே வரக்கூடாது எவையென்று...
ஆனாலும் நிச்சயம் நீயெல்லாம் உள்ளே வரக்கூடாது...என்று கூட அண்ணாமலையில் கூட இவந்தனுக்கு... வழிகள் விடவில்லை... தரிசனம் பார்க்க.
ஆனால் பார்வதி தேவி,ஈசனிடம் இவை கருணையுள்ள மணாளனே!!!! இப்படி எல்லாம் மனிதர்களா!!!! நல்லோர்களை விடவில்லையே உள்ளே!!! ஆனால் இவனுடைய கோலத்தை பார்த்தா!!!!??? என்று கூட....
ஆனாலும் இல்லை !!!! இவந்தன் எப்பொழுது.. நம் பிள்ளையாகவே ஏற்றுக் கொள்வோம்.....இவந்தனுக்கு அனைத்தும் செய்வோம்...
ஏன் மனிதர்கள் கலியுகத்தில் பின் வேடதாரிகள்.போல் வேடம் போட்டுக்கொண்டு தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மிகுந்து காணப்படுகின்றது... அவர்கள் எல்லாம் பொய் பித்தலாட்டக்காரர்கள் என்பதை..கூட தெரியவில்லை.
ஆனால் சொல்லி விடுகின்றேன்....!!!! இப்படி கலியுகத்தில் இப்படி செய்து கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவனிடத்தில் அவன் கர்மா சேர்த்துக்கொண்டே இருக்கின்றான் அவன் இடத்தில் மீண்டும் மீண்டும் மனிதர்களும் போய் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!!
தன் பிள்ளைகளும் இருக்கின்றன!!
இன்னும் எதை என்று கூற ஆனாலும் அவர்கள் எல்லாம் இப்பொழுது கூட சில வித்தைகளால் நன்றாக.. இருக்க முடியுமே தவிர வரும் காலங்களில் அவர்கள் கஷ்டத்தை நோக்கி செல்வார்கள்.
நிச்சயமாக சொல்கின்றேன் அப்பொழுது சித்தர்களே!!!!
உன்னைத்தான் வணங்கினோமே!!!!
உன்னைத்தான், இறைவனைத்தான் வணங்கினோமே!!!
ஏன்?? கஷ்டம் என்று சொல்லக்கூடாது!!!!
சொல்லிவிட்டேன்!!!!
பொய்யான பொய்யான பக்திகள் துறவிகள் என்றெல்லாம் இப்பொழுது கலியுகத்தில் வளர்ந்துவிட்டது வளர்ந்து கொண்டே தான் வருகின்றது அவற்றையெல்லாம் நாங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம் நிச்சயம் தடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
ஆனால் முட்டாள் மனிதன் தரித்திர மனிதன் அவர்களை பக்தி என்று சொல்லிவிட்டால் அவனை கூட நம்பி மேல் நோக்கி தூக்கி ஆனால் விடுகிறார்கள்.
ஆனால் தூக்கி விடும் மனிதர்களை யாங்கள் நிச்சயம் தண்டிப்போம் ....
அவர்கள் என் பக்தர்களே!!!! இல்லை
சொல்லிவிட்டேன்!!!!
அவர்களுக்கு நிச்சயமாய் கஷ்டங்கள் வரும்...
இதை பின் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். எதையெதையோ வணங்கி!!...
ஆனாலும் திரும்பவும் சொல்கின்றேன் சித்தர்களை பின் உசுப்பேத்தாதீர்கள்...இதை எவையன்றி கூற....
பின் சித்தனை வணங்கினோம்!!!... இறைவனை வணங்கினோம்!!... என்று மீண்டும் எங்களிடம் வந்தால் நிச்சயம் யாங்கள் வழிகள் காட்டி விடமாட்டோம்....
இப்பொழுதே புரிந்து கொள்ளுங்கள்... நீங்களும் ஞானம் பெற்றவர்கள்...எதையன்றி கூற உண்மையான துறவிக்கே மதிப்பில்லை இவ்வுலகத்தில்.... போலியான துறவிக்கு... மதிப்பு அதிகம்...
இவனை இத்துறவியை எவையென்று கூற இவ் ஞானியா (ஒடுகத்தூர் ஸ்வாமிகள்) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...
ஆனால் இவ் ஞானி பரதேசி போல் பல ஆலயங்களுக்கு சென்று சென்று ஈசன் அருளால் நிச்சயம் தான் பெற்ற இன்பம் எதையன்றி கூற... இன்பம் என்பது இங்கே துன்பத்தைத்தான் யான் சொல்வேன்...
அவ் இன்பத்தையும் எவையென்று கூற துன்பத்தையும் இன்பமாக கருதியவன் இவ் ஞானி!!!
அதனால் தான் பெற்ற இன்பம் தான் பெற்ற துன்பம்.... இதையென்று இன்பம் துன்பம்.....
ஆனால் இவந்தன் வயதில் கடைசிவரை .........ஆகும் வரை ஓர் இன்பத்தை கூட காண முடியவில்லை .
ஆனால் கடைசியில் சொன்னான் எந்தனுக்கு துன்பமே இன்பம் என்று!!!
இதுதான் உண்மையான ஞானி!!!!
சொல்லி சொல்லி கொண்டே இருக்கின்றேன்!!!.... இதையன்றி...
ஆனால் இவ் ஞானிக்கு பல திருத்தலங்களில் கூட வழிகள் விடவில்லை. பல மனிதர்கள் கூட இறைவனை தரிசிப்பதில் கூட இவனை பைத்தியகாரன் இவந்தனுக்கு என்ன தெரியும் ???என்று கூட.....
ஆனால் இறைவனுக்கு தெரியும் இவனைப் பற்றி!!!!
ஆனாலும் இதையன்றி கூற. பல ஆலயங்களில் கூட அங்கே சென்று சென்று அங்கே தியானங்கள் செய்து.... இறைவா!!! இறைவா!!!..... என் நிலைமையை யாருக்கும் தராதே!!!!..... என்று கூறி பல ஆலயங்களை இறைவன் அருளாலே கட்டி முடித்தான் இவன்.
ஆனால் பின் கடைசியில் பார்த்தால் இவனையே விரட்டி விட்டார்கள் மனிதர்கள்...
இதனால் தான் மனிதன் புத்தி மட்ட புத்தியாக சென்று கொண்டிருக்கின்றது கலியுகத்தில் இவன் அமைத்த திருத்தலங்கள் பல..பல பல!!!!
வரும் காலங்களில் அதையும் யான் உரைக்கின்றேன் ...இதையன்றி.
ஆனாலும் அப்படியே திரிந்துகொண்டு திரிந்துகொண்டு... ஆனாலும் விடவில்லை கஷ்டத்தில் கூட இறைவனுக்கு சேவைகள் செய்வது இவந்தனக்கு சாலச்சிறந்ததாகவே சென்று பல ஆலயங்களை எழுப்பினான்.
எழுந்தருளி எதையென்று ஆனால் ஈசன் அருளாலே நடந்தது.. பின் இவந்தன் சூட்சுமங்கள் இன்னும் விபரம் ஆகவே வரும் வரும் காலங்களில்....
இவந்தன் பல ஆலயங்களை எழுப்பி!!! எழுப்பி!!! நல் விதமாக அங்கே மக்கள் வந்தால் துன்பநிலையில் இருந்து விடுபட்டு கொள்ளலாம். அத் துன்பத்திலும் ஞானம் பெறலாம் என்று கூட இவன் ஆலயம் சொல்கின்றது....
இதை... ஆனாலும் ஈசன் கடைசியில் ஒன்றைச் சொல்கின்றேன்....
ஓர் மனிதன் சொல்லிவிட்டான்...எதையென்று...
இவன் திரிந்து அலைந்து இவ்வளவு நன்மைகள் செய்யும் பொழுது.....
இவன் ஒரு ஞானியே இல்லை...என்றும்... பலப்பல பலப்பல வார்த்தைகளாலும் இவனை திட்டி தீர்த்தார்கள்.
ஆனால் இவன் ஒன்றை தான் சொன்னான்!!!! இறைவனை நோக்கி!!!!
மேலே இருக்கின்றான் அவந்தன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்....
ஆனாலும் இதையும் இவையன்றி கூற.. அப்படி அப்படி....இவ் ஞானி.. சொன்னதும் பல மனிதர்கள் கூட்டமாக கூடி இவனை கல்லை எறிந்து அடித்தார்கள்.
ஆனாலும் நன்றாக இருக்க வேண்டும் மக்கள் என்றே இவந்தனக்கு.......
ஆனாலும் இப்பொழுது பார்த்தீர்களா ....மனிதனின் உண்மையான பக்திக்கு.. இவ்வுலகத்தில் இடம் இல்லையப்பா......
போலியான பக்திகளுக்கே இடம்...!!
போலியான மனிதர்களுக்கே... கொண்டாட்டம்.
பல மனிதர்களுக்கு சித்தர்கள் என்ற பெயரை சொல்லியும் எங்கள் பெயரை சொல்லியும் பின் யான் அகத்தியன்... எனக்கு அனைத்தும் தெரியும் எந்தனுக்கே இவ்வுலகத்தில் மரியாதை...
ஆனால் அனைத்தும் தெரிந்தவனுக்கு.... மரியாதை இல்லையப்பா....
இதுதான் உலகம்.!!!
இது தான் கர்மா பூமி!!!
இது தான் கலியுகம்!!
ஆனால் சித்தர்கள் யாங்கள் வந்துவிட்டோம் நிச்சயம் பின் எங்கள் பக்தர்களாக இருந்தாலும்... பொய் சொல்லிப் பிழைத்தால்... நிச்சயம் அவர்களுக்கு தண்டனைகள் உண்டு தண்டிப்போம். சொல்லிவிட்டேன்.
அதனால் ஒழுங்காக பிழைத்துக் கொள்ளுங்கள்.
பல உரைகளிலும் யாங்கள் சொல்லிவிட்டோம்....
திருந்தவில்லை என்றால் பாருங்கள்!!!!.... எதையென்று கூற...
கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம் ஆனால் மனநிலை எவ்வாறு என்பதையும் கூட... உண்மையாக இருங்கள் உண்மையாக இருங்கள் என்றெல்லாம்.
முதலில் உண்மையாக நீங்கள் இருந்தால் தான் யாங்கள் சில வாக்குகள் சொல்ல.... நல் முறையாகவே இப்படி வாழுங்கள்.... யாங்கள் நிச்சயம் விதியைக் கூட மாற்றியமைப்போம் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே வருகின்றோம்...
பிள்ளைகளே!!! திருந்துங்கள் நன்றாக.....
மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன்!!!!
பொய்களப்பா அனைத்தும் பொய்களப்பா!!!!
அவனிடத்தில் பின் இவையன்றி கூற அவன் ஞானியாக இருக்கின்றான் பொய்யானவனாக இருக்கின்றான்.
அவனைப்பற்றி.... யான் வரும் காலங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கின்றேன் என்னென்ன??? வேலைகள் செய்கின்றான்!!!! என்று கூட நிச்சயம் தெரிவிப்பேன்.
இவை போன்றே செயல்பட்டால்....
தரித்திர மனிதன் அனைத்து சுகங்களையும் கண்டு... கடைசி வயதில் இறைவனை நாடுகின்றான்... அனைத்து சுகங்களும் பொய் என்று கூட.... அவனைப் பற்றியும் தெரிவிக்கின்றேன்....
சென்று விடாதீர்கள்..... அவன் கர்மா சேர்த்துக்கொண்டிருந்தான்... அவன் மூலமும் வரும் கர்மா..... என்பதை தெரிந்து கொள்ளாத மனிதர்களே!!! திருந்துங்கள்.
உண்மையான பக்திகளை உருவாக்குவோம் இவ்வுலகத்தில் செம்மை பெற செய்வோம்.
அனைத்தும் பொய்யான பக்திகள் காட்டி காட்டி பொய் சொல்லி மனிதர்களை திசை திருப்பி விட்டார்கள்..
ஆனாலும் இவ் ஞானி உண்மையானவன். பல தலங்களில் வந்து வந்து கடைசியில் எவையென்று ஆனாலும்..
ஈசன்... எதையென்று.. ஈசா!!!! நமச்சிவாயா!!!! அப்பொழுது கூட இவனை பலபேர் கல்லை தூக்கி எறிந்தார்கள். அப்பொழுது கூட சிரித்தான் இவன்.!!!!
அனைத்திற்கும் காரணம் இறைவனே!!! என்று கூட.
கடைசியில் ஈசனே!!!!!! கண்ணீர் விட்டான்.......
இவந்தனுக்கு எவையென்று கூற.... இப்படி ஒரு பக்தனா!!!!!! என்று....
ஆனால் பார்வதி தேவி....
மணாளா!!!!! .....இதென்ன!!!
நீயும் கண்ணீர் விடுவதா!!!!!!
இவ்வுலகத்தை காக்கின்ற நீயே !!!!
ஆம் தேவி.... ஆமாம்... இவ்வளவு பெரிய பக்திகள்.
எதையென்று இவந்தனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் என்னை...ஈசன் என்னை... வெறுக்கவில்லையே.... அதனால் தான்....
இவனை இத்தனை பேர்.... அடிக்கின்றார்களே... இவந்தன் அப்பொழுது கூட...நமச்சிவாய!!!!! நமச்சிவாயா!!!!!
என்று சொல்கின்றானே!!!!!
இதனால்தான் ஆனந்தக் கண்ணீர்......என்று கூட... ஈசன்.
ஆனாலும் இவந்தனுக்கு நேரில் ஈசனே!!!! ஈசனே!!!! எதையன்றி கூற காட்சிகள் கொடுத்தான்.
எதையென்று கூற அப்பொழுது கூட ஈசன் கேட்டான் வந்திறங்கி....
அப்பனே!!!! மைந்தா!!!!
உந்தனுக்கு என்ன வரம் வேண்டும்??? கேள்!!!!..... என்று கூட.
ஆனால் அவன் சிரித்தான்.... எந்தனுக்கு என்ன வரங்கள் வேண்டும் .........பின் இவையென்று கூற.... இப்புவியில் தான் பிறந்து விட்டேன்.....
ஆனால் ......"""""நீ வந்து நின்றாயே!!!!""""" அதுவே எந்தனக்கு பெரிய வரம்!!!!!!
ஆனால் யான் எதையன்றி கூற இப்பொழுதே எதையன்றி கூற யான் பட்ட பல கஷ்டங்களை இன்பமாகத்தான் எண்ணினேன்....!!!!
பின் எந்தனுக்கு....ஏது வரம் வேண்டும் என்று கேட்க!!!!
ஈசனே!!!! நீயே!!!! என்னிடத்தில் வந்து முன்னே நின்றிருக்கின்றாய் ..... இதைவிடவா...????? எந்தனுக்கு வரம் வேண்டும்?????? என்று கூட.....
அப்போது ஈசன் கட்டி அணைத்து கொண்டான்....
உன் சேவைகள் பெருக!!!!!!
பின் நீ எங்கெல்லாம் செல்கின்றாயோ!!! அங்கெல்லாம் திருத்தலம் நல்விதமாக அமைப்பாய்.
அமைத்து அங்கெல்லாம் எவ்வாறு மனிதர்கள் வருகின்றாரோ... அவர்களுக்கெல்லாம் யான் பல ஆசிகள் தந்து ஈகுவேன் பார்வதி தேவியுடன். என்று கூறி... மறைந்தான்.
இதனால் பல வழிகளிலும் பல திருத்தலங்களை உருவாக்கினான்.
கடைசியில் இங்கு வந்து பல மனிதர்களுக்கு எவையென்று கூற ஆனாலும் இதையென்றும் அறியாத மக்கள் பல... கொல்லிகளில் (வியாதிகளில்) உயிர் கொல்லிகள் பல பல வியாதிகளில் பற்றிக் கொண்டது ஆனால் இவந்தனக்கு விஷயம் தெரிந்து விட்டது.
இவ் மனிதர்களை காக்க கடைசியில் இங்கு வந்து கருணைநேயத்துடன் வந்து எதையன்றி கூற பல மனிதர்களை காப்பாற்றினான். பல மனிதர்களுக்கு துன்பத்திலிருந்து விலக்கம் அளித்தான்.
பலபல மனிதர்களுக்கும் சேவை செய்து பல உபதேசங்களை உபசரித்தான்....
இறைவனே மெய் என்பதை உணருங்கள்!!!! மனித வடிவில் வரும் குருக்களை பின் கடைபிடிக்காதீர்கள்.... அவர்கள் பொய்யானவர்களே...என்று கூட..
மனிதனின் நினைப்பை அறிந்து இவந்தன் பெரும் சேவையை.. இவ் மானிடத்திற்கே... எதையென்று கூற செய்து... பல மனிதர்களை உருவாக்கி உள்ளான்.
ஆனால் இதையன்றி கூற கடைசியில் பின் மனிதர்களைப் பார்க்கவே இவந்தனுக்கு பிடிக்கவில்லை !!!!!....என்று கூட.
பின் அப்படியே அமர்ந்து எதையென்று கூற பின் சமாதி அடைந்து விட்டான்...
இன்னும் கூட இவன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.
உண்மையான மனிதர்கள் இங்கு வருபவர்களுக்கு ஆனால் எதையன்றி கூற...இவன் திருத்தலங்களை இவந்தனே காட்டி விடுவான்.
அங்கெல்லாம் சென்று பல கஷ்டங்களை பின் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ் ஞானி... ஒரு பெரிய ஞானி என்பேன்.
இதனால் அப்பனே!!!! இன்னும் பல பல வழிகளில் உண்டு ,உண்டு, உண்டு உண்டு ,ஆசிகள். என்பதை உணர்ந்து நல் விதமாக எதையென்று கூற.....
அதனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன்!!!
இவனை தேடி வந்தவர்களுக்கு... நல் முறையாக ஆசிகள் தந்து இவன் அமைத்த ஆலயங்களுக்கு இவனே செல்ல வைப்பான்.
இதனால் இன்னும் பல ஆசிகள்!!! ஈசன்!!! பார்வதி தேவி என்று கூட... என்று கூட.... ஆசிகள் கிட்டி... நலமுடனே வாழ வைப்பான்....இக்கலியுகத்திலும்.....
இதையென்று அறிவதற்கு பல ஆலயங்களை சுற்றி திரிந்தவன் இவன்.... எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும்
""""நாராயணா""""!!!!! எதையன்றி கூற """""முருகா """"" என்றெல்லாம்..... ஆனாலும் இதையன்றி கூற இவையன்றி கூற இங்கே...வந்து சமாதி.... இவந்தனுக்கு பின் """முருகனும் ""!!!!!! இங்கே வந்து பின் இதை..... இவ்வளவு பெரிய ஞானியா!!!!!!!...... இதையன்றி கூற கண்ணீர் மல்க, கண்ணீர் மல்க.......
இதையென்று அது ஆனந்த கண்ணீரே!!!!!
பிள்ளையோனும்..... ஆனந்த கண்ணீரே!!!
இவ்வளவு பெரிய ஞானியா!!!!??..... என்று கூறி
இவனை பாராட்டி... இவந்தனை நிச்சயம் வணங்குபவர்களுக்கு.... இவன் என்ன?? வரம் கொடுக்கின்றானோ!!!!
""அது அப்படியே நடக்கும்""!!!
என்பது கூட ....இவ் ஞானி உயிரோட்டம் ஆகவே இருக்கின்றான்!!!
மனித உடம்பு இல்லை ஆனால் உயிர் இருந்து கொண்டே இருக்கின்றது!!!!
இன்னும் கூட பல மனிதர்கள் இவனை நாடி நாடி வருகின்றனர். இவன் ஆசிகள் தந்து இவன் ஆலயத்திற்கே அவன் மனம்....எதையென்று கூற விரும்பியவாறே...மாற்றி பின் அழைத்து செல்கின்றான்.
எதை என்று கூற பல கஷ்டங்கள் தீரும். தீரும் என்பது கூட உண்மை.
உண்மை நிலைகளை அறிந்து பல வழிகளிலும் பல ஞானத்தைப் பெற்று சிறப்பாகவே!! சிறப்பாகவே!! வாழவைப்பான் இவந்தன்.
அதனால் மனித ஜென்மங்களே!!!! பல வழிகளிலும் கஷ்டங்கள் வந்தாலும்.... கஷ்டங்கள் எதை என்று கூற இறைவா!!! இறைவா!!! என்று இருந்தால்....இவ் ஞானி எப்படியோ இதையன்றி கூற நிச்சயம் பின் நல் வாக்கும்... எதையன்றி கூற பல மனிதர்கள் நிச்சயம் ...இவந்தனை இக்கலியுகத்திலும் இவனை தேடி வருவார்கள்... இவன் அமைத்த தலத்திற்கு இவனே மனம் மாற்றி பின் அழைத்துச்செல்வான்..
நல் ஆசிகள்!!!!! மீண்டும் ஒரு சித்தன் வந்து செப்புவான்..... நல்லாசிகள்!!!!!! நல்லாசிகள்!!!!!!...
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
ஸ்ரீ மகான் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம். அல்சூர் ஏரியின் தெற்குப் பகுதியில், எண். 13, கங்காதர செட்டி சாலை, அல்சூர், பெங்களூரு, கர்நாடகா 560042
போன். 080 25581256
கோயில் நேரங்கள்.
காலை :6.00 மணிமுதல் 12:00 மணி வரை.
மாலை. 4:30 முதல் இரவு 8:30 வரை. திறந்திருக்கும்.
இந்த உலகில் கடந்த பல நூற்றாண்டுகளில் பல்வேறு இடங்களிலும் மாபெரும் ஆன்மீக மகான்களும் தெய்வீகப் பிறவிகளும் தோன்றி மறைந்து உள்ளனர். அந்த வழியில் தோன்றி மறைந்த அவதாரப் புருஷர்களில் ஒருவரே ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள்
அவர் செய்து காட்டி உள்ள அற்புதங்களையும், மகிமைகளையும் நேரடியாக கண்டு களித்து அனுபவித்தவர்கள் மூலம் அவருடைய பிற்கால வரலாறு தெரிய வந்துள்ளது. அந்த மகானுடைய வரலாற்று செய்திகளை அவருடனே இருந்து, வாழ்ந்து அவர் சமாதி அடைந்தப் பின் தானும் சமாதி அடைந்த சீடர் ஒருவர் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அந்த சீடரின் சமாதியும் ஒடுக்கத்தூர் ஆலய மடத்தின் உள்ளேயே அமைந்து உள்ளது.
அவர் மனம் முழுதும் கடவுள் பக்தியிலேயே நிறைந்து இருந்தது. பல இடங்களுக்கும் சென்று கொண்டு ஆலய தரிசனம் செய்தவர் திருவண்ணாமலை காளஹஸ்தி, திருச்சி, காஞ்சீபுரம், மதுரை, சிதம்பரம் போன்ற இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தார். கடைசியாக வேலூருக்கு அருகில் இருந்த அடர்ந்த காட்டின் உள்ளே சென்று அங்கிருந்த மலைக் குன்றின் மீது அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் அமர்ந்து இருந்த இடமோ யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக அமைந்து இருந்தது. தியானத்தில் அமர்ந்திருந்தவரின் பக்கத்தில் விலங்குகள் வந்து அமர்ந்தன. ஆனால் அவை எதுவுமே அவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அந்தக் காட்டில் விறகு வெட்ட வந்தவர்கள் மற்றும் ஆட்டு இடையர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து வியந்தனர். அப்போது சேஷையா எனப்பட்ட ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் அங்கு சென்று தவத்தில் இருக்கும் முன்னர் அங்கு பல தபஸ்விக்கள் வந்து தவத்தில் இருந்து உள்ளார்கள். அதன் பின் அவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று உள்ளார்கள். அதனால் அவர்கள் சேஷையா அங்கு வந்து தவத்தில் அமர்ந்து கொண்டதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அப்படிப்பட்ட ரிஷி முனிவர்களுக்கு மாறாக ஷேசய்யா அனைவரும் தன்னைப் பார்க்கும் வகையில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தவத்தில் இருந்துள்ளார். சில நேரங்களில் மட்டும் அங்கிருந்து எழுவார். அருகில் இருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் பருகிய பின் திரும்பி வந்து தான் தவத்தில் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொள்வார். அப்படி எழுந்திருக்கும்போது ஆர்வத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் கிராமத்தினரையும், தன்னை பின்தொடர்ந்து வந்து கண்காணித்தவர்களையும் லட்க்ஷியம் செய்யாமல் அவர்களோடு எதுவுமே பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்பதை போல தண்ணீர் குடித்து விட்டு வருவார். அதே இடத்துக்கு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து விடுவார். நாட்கள் செல்லச் செல்ல அவர் தண்ணீர் அருந்தக் கூடப் போகவில்லை. ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து கிடந்தவரை சுற்றி கரையான்கள் புற்று எழுப்பின. அவர் சில நேரத்தில் சட்டையைக் கயற்றிப் போடுவது போல புற்றைத் தள்ளிவிட்டு எழுந்து சென்று தண்ணீர் பருகியபின் அதே இடத்தில் வந்து அமர்வார். சில நாட்களில் மீண்டும் பாம்புப் புற்று அவரை மூடிக்கொள்ளும். ஆனாலும் அவர் எத்தனை முறை எழுந்து சென்றாலும், அவர் தியானம் செய்து கொண்டு இருந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை.
பலமுறை கிராமவாசிகள் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் ஆற்று மணலில் புதைந்து கிடப்பதை கண்டு உள்ளார்கள். ஆற்றில் வெள்ளம் வரும்போது அவர் புதைந்து உள்ள இடத்தின் மீது தண்ணீர் பாய்ந்து அவர் அதில் முழுகிக் கிடைக்கும் இடத்தைக் காட்டும். ஒருமுறை நல்ல மழைக் காலம் வந்தபோது ஸ்வாமிகளைக் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடி அலைந்த பின் அவர் ஆற்று மண்ணில் ஒருவார காலம் புதைந்து இருப்பதைக் கண்ட கிராமத்தினர் அவரை மீட்டு வந்தார்கள். அவரை வெளியில் இழுத்து வந்தபோதும் அவர் யோக சமாதி நிலையிலேயே இருந்தாராம்.
சில காலம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஒரு நாள் அந்த இடத்தை விட்டு எழுந்து எங்கோ சென்று விட்டார். ஊர் ஊராக சுற்றி அலையத் துவங்கி பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தவர் ஒரு முறை அகரம் செல்லும் வழியில் இருந்த ஒடுக்கத்தூரில் இருந்த பாதையின் நடுவில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அந்த ஒற்றை வழிப் பாதையே இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைப் பகுதியாக இருந்தது. அப்போது அந்த பக்கமாக ஒரு வண்டி வந்து கொண்டு இருந்தது. வண்டிக்காரன் அவரை தள்ளி அமர்ந்து கொள்ளுமாறு குரல் கொடுத்தான். எத்தனை கூவியும் நகராததினால் வண்டியில் இருந்து இறங்கி அவர் அருகில் வந்து அவரை தட்டி எழுப்ப முயன்றான். ஆனாலும் மனிதர் கண் திறக்கவில்லை. வண்டி ஓட்டுபவனால் இரவை அங்கேயே கழிக்க முடியாது. வழிப்பறி திருடர்கள் அதிகம் இருந்த ஊர் அது. ஆகவே கோபத்துடன் அவரைக் கீழே தள்ளினான். வண்டியில் ஏறிக் கொண்டு அந்த வண்டியையே அவர் மீது ஏற்றி வண்டியை ஓட்டினான். அந்தோ பரிதாபம், ஒரு பாறாங்கல்லின் மீது மோதியது போல வண்டி கவிழ்ந்தது. வண்டிக்காரனும் வண்டியில் பூட்டப்பட்டு இருந்த இரண்டு மாடுகளும் மயக்கம் அடைந்து விழுந்தனர். மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த வண்டிக்காரன் முதல் நாள் நடந்ததை எண்ணிப் பார்த்தான். சாலையில் விழுந்திருந்த ஷேசய்யா இன்னமும் அந்த இடத்திலேயே அசையாமல்ந தியானத்தில் விழுந்து கிடந்தார். அதைக் கண்ட வண்டிக்காரன் தான் அவரை கீழே தள்ளி விட்டதினால் அவர் இறந்து விட்டதாகக் கருதினான். அவர் இறந்து விட்டதாக நினைத்து ஊருக்குள் ஓடிச் சென்று கிராமத்தினரை அழைத்து வந்தான். அவர்கள் அடிக்கடி சேஷையா அங்கு தியானத்தில் இருப்பதை பார்த்து உள்ளார்கள். ஆகவே ஓடி வந்த கிராமத்தினர் சேஷையா அங்கு காணப்படவில்லை என்பதைக் கண்டதும் ஷேசய்யாவைத் தேடினார்கள். தேடலுக்குப் பின்னர் அவரை காட்டுப் பகுதியில் கண்டு பிடித்து ஊருக்குள் அழைத்து வந்தனர். அவர் உடலில் சிறு கீறல் கூட காணப்படவில்லை. அவர் மாபெரும் மகானாகவே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அன்று முதல் அவரை ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் என அழைக்கத் துவங்கினார்கள்.
ஸ்வாமிகள் ஒடுக்கத்தூரில் தங்கி இருந்த போது நாகாபாய் என்ற பெண்மணி ஸ்வாமிகளின் பக்தையாக மாறி இருந்தார். அவரே ஸ்வாமிகளுக்க தேவையான அனைத்துப் பணி விடைகளையும் செய்து வந்தார். ஸ்வாமிகள் கல் என்றும் புல் என்றும் பேதம் பார்க்காமல் அனைத்தின் மீதும் சென்று அமருவார். அவருக்கு ஒன்றும் ஆகாது. தன்னை நாடி வந்த பக்தர்களுடைய பிரச்சனைகளுக்கு முடிவு கட்டியும் வியாதிகளை குணப்படுத்தியும் பல விதத்திலும் அற்புதங்களை செய்து வந்தார்.வந்தவர்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும். இப்படியாக அவரிடம் இருந்த தெய்வீகத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தவருடைய புகழ் மேலும் மேலும் பெருகியது. இத்தனை இருந்தும் அவர் யாரிடம் இருந்தும் சல்லிக் காசைக் கூட தட்ஷணையாக பெற்றுக் கொண்டது இல்லை. அவரிடம் இருந்தது இரண்டு வேஷ்டி மற்றும் இரண்டு துவலைகள் மட்டுமே. அவருடைய முகத்தில் பெரிய தாடி மட்டும் இருந்தது. அதையும் மழிப்பதற்கு அவர் எவரையும் அனுமதித்தது இல்லை. இன்னும் ஒரு அதிசயமான நிகழ்வு என்ன என்றால் அந்த தாடியும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவே இல்லை. வாழ்க்கையில் மென்மையான ஒழுக்கத்தைக் கடைபிடித்தவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்.
இப்படியாக அற்புதங்களை செய்து காட்டியவண்ணம் அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்த ஸ்வாமிகள் ஆந்திர எல்லையில் மதனப்பள்ளியில் வாழ்ந்து வந்தார். அவரை எப்படியோ கண்டு பிடித்து விட்ட திருமதி நாகாபாய் மற்றும் முனுசாமி நாயுடு, சுப்பா நாயுடு போன்றவர்கள் கஷ்டப்பட்டு அவரை பெங்களூருக்கு அழைத்து வந்து அங்கு தங்க வைத்தனர்.
பெங்களூரில் ஸ்வாமிகள் தங்கி இருந்தபோது அங்கிருந்த அருணாசலம் பிள்ளை என்பவருக்கு வந்திருந்த பெருநோய் ஸ்வாமிகளின் ஸ்பரிசத்தினால் முற்றிலும் குணமாயிற்று. முன்னதாக அருணாச்சலம் பிள்ளையின் நோயை குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்கள் கைவிட்டிருந்தார்கள். அதுபோல ஸ்வாமிகளின் பக்தையான மீனாட்ஷியம்மாள் என்பவரின் மகன் கண்பார்வை ஒரு குதிரை எட்டி உதைத்ததினால் போய்விட அனைத்து மருத்துவர்களும் இனி அவனுக்குக் கண் பார்வைக் கிடைக்காது எனக் கைவிட்டு விட அவனது பெற்றோர்கள் ஸ்வாமிகளிடம் சென்று தனது மகனுக்கு கண்பார்வையை திரும்ப வரவழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவரும் அவர்களை மறுநாள் வருமாறு கூறி அனுப்பினார். என்ன அதிசயம் மறுநாள் அந்த சிறுவன் எழுந்தது முதல் எதுவுமே நடக்காததை போல நல்ல கண்பார்வையுடன் தனது காரியங்களை தானே செய்து கொண்டு இருந்தான். இப்படியாக ஸ்வாமிகள் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவை எதுவுமே எழுதி வைக்கப்படாமல் பக்தர்களால் வாய் மொழிச் சொல்லாகவே சொல்லப்பட்டு வருகின்றது. இன்றும் அவரது மேன்மை ஆம்பூர், குடியாத்தம், வேலூர் மற்றும் ஒடுக்கத்தூர் போன்ற இடங்களில் உள்ள பக்தர்கள் மூலம் பலருக்கும் தெரிய வந்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.
ஸ்வாமிகளுடைய வாழ்க்கையில் முக்கியமாக சிலவற்றைக் கடைபிடித்தார். யாரிடம் இருந்தும், முக்கியமாக பக்தர்களிடம் இருந்து ஒரு சல்லிக் காசு கூட பெற்றது இல்லை, ஆடம்பரமான பங்களாக்களில் தங்கவில்லை, சொகுசான வாழ்க்கை வேண்டும் என நினைக்கவில்லை. அவரை சுற்றி பந்தா மற்றும் படோபகாரம் இல்லை. தன்னுடைய பக்தர்கள் மூலம் போலியான புகழைப் பரப்பிக் கொள்ளவில்லை. மாபெரும் தெய்வீகப் பிறவியாக ஸ்வாமிகள் இருந்தாலும் சுகபோகம் இல்லாத எளிமையான வாழ்க்கையில், அனைவரும் தம்மை எளிதில் சந்திக்கும் வகையில் ஆலய வளாகத்துக்குள் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருப்பார். ஸ்வாமிகளுடைய மேன்மையே அதுதான். அதனால்தானோ என்னவோ ஸ்வாமிகளுடைய சமாதி சன்னதிக்கு முன் சென்று நிற்கும்போதே நம்மை அறியாமலேயே மனஅமைதி நிலவுவதைக் காண முடியும்.
ஸ்வாமிகளை சுற்றி சில சிஷ்யர்களே எப்போதும் இருந்து வந்தார்கள். அவர்களில் ஸ்வாமிகளுடன் இளமைக் காலத்திலிருந்தே பழகி வந்திருந்த பழனிவேலு என்பவர் ஒருநாள் ஸ்வாமிகள் ஒரு புதர் அருகில் தன்னை மறந்த நிலையில் இருந்த பொழுது ஒரு புகைப்படம் எடுத்தார். அதுவே ஸ்வாமிகளின் முதலும் முடிவுமான ஒரே ஒரு புகைப்படம். அவரை வேறு எவராலும் புகைப்படம் எடுக்கவே முடியவில்லை. அவர் அதை அனுமதிக்கவும் இல்லை. இது கூட அந்த மகானின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் குணங்களில் ஒன்றாகும்.
இப்படியாக வாழ்ந்து வந்தவர் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழ் மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மகா சமாதி அடைந்தார். அவர் தங்கி இருந்த அல்சூர் ஏரிக்கரையின் அருகில் இருந்த இடத்திலேயே அவருக்கு சமாதி எழுப்பி சிவலிங்கத்தை அதன் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த இடம் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம் எனப் பெயர் பெற்றது. அங்கு ஸ்வாமிகளுக்கு அடிக்கடி காட்சி தந்து கொண்டிருந்த முருகப் பெருமானுக்கும் தண்டாயுதபாணி எனும் பெயரில் அங்கேயே ஒரு சன்னதியும், சற்று தள்ளி தனி ஆலயமும் எழுப்பி உள்ளனர். அந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன், முருகன், வினாயகர் மற்றும் சிவபெருமானின் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மேலும் அவருடைய சில சிஷ்யர்களின் சமாதிகளும் உள்ளன. அவற்றில் ஒருவர் திரு நித்யானந்தா ஸ்வாமிகள் என்பவர். அவரே மடத்திற்கான நிலத்தை தானமாக வழங்கியவர். இன்னொரு சமாதியில் உள்ளவர் திரு மௌன ஸ்வாமிகள் என்பவர் ஆவார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.............தொடரும்!