​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 23 February 2022

சித்தன் அருள் - 1091 - அன்புடன் அகத்தியர் - தர்மம் உயிர் காக்கும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே
 
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்பாரா நிகழ்வுகளையும் இது தான் விதி! என்று எழுதியிருந்தாலும் அவை அத்தனையையும் சித்தர்கள் நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துவிட முடியும்.

அதிலும் குருநாதர் அகத்தியப் பெருமான் கருணையோடு அதிவிரைவாக அதி அற்புதங்களை செய்து பல பேருடைய வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றார்.

குருநாதர் அகத்தியப் பெருமான்  மனமிறங்கி ஓடோடி வந்து கருணையோடு ஒரு உயிரை காப்பாற்றிய அந்த அற்புதத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

குருநாதர் அகத்தியர் பெருமான் தன்னுடைய வாக்கில் எனக்காக அதைச் செய்!!! இதைச் செய்!!! என்று எதையுமே கேட்டதில்லை.

தூய உள்ளத்தோடு அன்பு செலுத்தினால் மட்டுமே போதுமானது அப்பனே வேறு ஒன்றும் எமக்குத் தேவையில்லை, என்பார்.

நல் முறையாக புண்ணியங்களை தேடிக்கொள்ளுங்கள் புண்ணியமே உங்களை பாதுகாக்கும் அழகாக இதனால்தானப்பா புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்  என்று கூறிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒருவன் முறையாக தான தர்மங்கள் செய்து வந்தாலே போதும்.  அவன் இறைவனை தேடி வர அவசியமில்லை. சித்தர்கள் யாங்கள் ஆசிர்வாதங்கள் செய்வோம். இறைவனும் அவன் மனதில் குடி கொள்வான் என்று தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் எடுத்துரைத்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்.

உண்மையான பக்தியின் மூலம்!!!! செய்யும் நற்செயல்கள் மூலம்!!!!! துவண்டு விடாத நம்பிக்கையின் மூலம்!!!! செய்யும் புண்ணிய செயல்கள் மூலம்!!!!! வாழ்வில் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு விட முடியும்.

எப்படியென்றால்??? அகத்திய பெருமான் மேற்கூறிய உபதேசங்களை ஒரு மனிதன் ஒழுங்காக கடைபிடித்து வந்தாலே குருநாதர் அகத்தியர் பெருமான் சித்தர்கள் அருளாசி பெற்று விடுவார்கள். அவர்களே நேரடியாக வந்து ஆட்கொண்டு விடுவார்கள்.

குருநாதர் அகத்தியர் பெருமான் எப்பொழுதும் கருணையோடு உரைக்கும் வார்த்தை

"அகத்தியனை நம்பியோரை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரமே!!! இல்லை."

தன்னை நாடி வந்த, தன்னை நம்பி வந்த ஒரு மைந்தனை மரணத்தில் இருந்து காப்பாற்றி உயிரை மீட்டுக் கொடுத்த கருணை செயலை பார்ப்போம்.

நாடி வாசிக்கும் அகத்திய மைந்தன், திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் தமிழ்நாட்டில் உள்ள அகத்தியர் குடில்கள் நடத்தும் ஆன்மிகப் பெரியவர்கள் குருவிடம் ஜீவநாடி வாக்குகள் உபதேசங்களை கேட்பதுண்டு. 

அப்படி ஒரு அகத்தியர் குடிலில் இருந்து மிக அவசரம் குருநாதரிடம் வாக்கு கேட்க வேண்டும் நாடி படிக்க முடியுமா என்று கேட்க!!!!

திரு ஜானகிராமன் ஐயாவும் என்ன விஷயம்?? என்று கேட்க

மலேசிய நாட்டில் தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்ட அங்கேயே பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் ஒரு அகத்தியர் அடியவர் இருக்கின்றார். குருநாதரின் பால் மிக மிக அன்பு கொண்டவர் வெளிநாட்டில் இருந்தாலும் இங்கே உள்ள அகத்தியர் குடில்கள் ஆலயங்கள் போன்றவற்றிற்கு மிகுந்த ஈடுபாட்டோடு தன்னாலான உதவிகளை செய்து வருபவர். அவருக்கும் வாக்குகள் குருநாதர் ஜீவநாடியில் உரைத்திருக்கிறார். அவர் தற்போது மலேசிய நாட்டில் ஈசனுக்காக ஒரு ஆலயம் எழுப்பும் அருட் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செய்து வருகின்றார்.

அவருடைய நெருங்கிய உறவினர் ஒரு சில தினங்களுக்கு முன்பு மிகப் பெரிய விபத்து ஒன்றை சந்தித்தார். தற்போது மருத்துவமனையில் சுயநினைவின்றி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு 48 மணி நேரம் கெடு வைத்துள்ளனர்.

எதுவாகினும் சரி 48 மணி நேரம் கழித்து தான் எங்களால் எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை குரு அகத்தியரையே நம்பியிருக்கின்றோம் அவரிடம் வாக்கு கேட்டு சொல்லுங்கள் என்று கேட்க,

ஐயாவும் குருவை வணங்கி ஜீவ நாடியை வாசிக்கத் தொடங்கினார்.

"அப்பனே நல்லாசிகள் அவனுடைய விதியில் கூட இப்படித்தான் இருக்கின்றது. ஆனாலும் கவலைகள் இல்லை இதையே தான் யாங்கள் மனிதர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் .

நல் முறையாக தான தருமங்களை செய்து வந்தாலே அது தக்க சமயத்தில் உதவி செய்யும்.

தர்மம் தலைகாக்கும் என்று கூட ஞானியர்கள் உரைத்திருக்கின்றனர்.

என்னையே நம்பிக்கொண்டு பல நற்காரியங்களை செய்து கொண்டிருக்கின்றாய்.

இவ் மைந்தனின் உயிரை யான் காப்பாற்றிக் தருகின்றேன்... ஆனாலும் இவ் மைந்தன் பிழைத்து வந்து இனி கடை நாள் வரை நல் முறையாக தான தர்மங்கள் செய்து கொண்டே வர வேண்டும் இதுவே யான் பதிலுக்கு கேட்பது.

என்னையும் நாடி வந்து விட்டாய் அப்பனே யான் அங்கேயே வந்து நிச்சயமாய் காப்பாற்றி தருவேன்.

எந்தனக்கு அன்பு மட்டுமே போதும் ஆனாலும் இவ்வுலகத்தில் எத்தனையோ பேர் உதவிகள் ஏதும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு நல் விதமாக தான தர்மங்களைச் செய்து கொண்டு வரவேண்டும் என்று குருநாதர் உரைத்திட,

அந்த அகத்திய அடியவரும் கண்டிப்பாக எங்களால் முடிந்தவரை தான தருமங்களை நிச்சயம் செய்வோம் என்று உறுதி அளித்தார்.

உடனடியாக அந்த மைந்தனுடைய பெயரில் அவருடைய குடும்பத்தினர் முடிந்தவரை தான தர்மங்களை செய்யத் துவங்கினர்.

மருத்துவர்கள் விதித்த 48 மணிநேர கெடு நெருங்கிக் கொண்டே இருந்தது.

உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை உடலில் சீரற்ற மூச்சு... இனி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

சரியாக பிப்ரவரி 5 ஆம் தேதி அவருடைய காலில் சிறிது அசைவு ஏற்பட்டது பிறகு கைகளின் அசைவு ஏற்பட்டது.

ஓடோடி வந்த மருத்துவர்கள், பேச சக்தியற்று, திக்பிரமை பிடித்தவர் போல முகம் வெளிறி, இது எப்படி சாத்தியமானது??? என்றும்,

உயிர் பிழைக்க ஒரு துளி அளவு கூட வாய்ப்பில்லை ஆனால் சுய நினைவை இழந்து கோமா நிலையில் இருக்கும் இவரது உடல் ஒத்துழைக்கின்றதே என்று ஆச்சரியப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான ஆயத்தங்கள் செய்யத் துவங்கினர்.

கிட்டத்தட்ட தலையில் மட்டும் ஏழு அறுவை சிகிச்சைகள்... தொடர்ந்து கொண்டே இருந்தது.

மூச்சு சீராகவும், ரத்த அழுத்தமும் இதய துடிப்பும் சரியான முறையில் வழக்கம்போல இயங்கத் துவங்கியது.

பிப்ரவரி 17ஆம் தேதி குரு தினமான வியாழக்கிழமை மாசிமகம் அன்றைய தினத்தில் பாபநாசத்தில் தாய் லோபமுத்திரை அம்மாவின் அம்சமான தாமிரபரணி தாயின் நதிக்கரையில் கும்ப பவுர்ணமி மாசி மகம் மகா ஹோமம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே மலேசிய நாட்டில் அந்த மைந்தனும் கண்விழித்தார். 

அந்த அகத்தியர் அடியவர் குரு சொன்ன வாக்கின்படி முடிந்தவரை தானம் தர்மங்களை செய்யத்  பாபநாசத்தில் நடந்த மாசிமகத் திருவிழா அன்னதானத்தில் பெரும் பங்காற்றினார் மலேசிய நாட்டில் இருந்து கொண்டே இங்கு நடைபெற்ற விழாவிற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மருத்துவர்களும் இந்த மருத்துவமனையில் இப்படி ஒரு நிகழ்வினை கண்டதே இல்லை 

இப்படிப்பட்ட அதிபயங்கர விபத்து நடந்து அதிலிருந்து மீண்டு இது போல உயிர் பிழைத்த செயல் எங்கள் வாழ்நாள் அனுபவத்தில் பார்த்ததே இல்லை இவர் எப்படி உயிர் பிழைத்தார் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது என்று இன்றுவரை வியப்பாக கூறிக்கொண்டு வருகின்றனர்.

அவர் உயிர் பிழைத்த பின் அந்த அகத்தியர் அடியவர் மீண்டும் திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு  குரு அகத்தியரிடம் நன்றி கூறினார். 

குருவும் அப்பனே ஒவ்வொருவரும் இப்பூவுலகில் வரும்பொழுது அவரவர் செய்த கர்ம வினையின் பயன் ஆகவே வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. முடிந்தவரை பிறருடைய துன்பத்தை நீக்க நல் முறையாக உதவி செய்திட்டு, தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொள்ள வேண்டும் புண்ணியங்களைச் செய்து கொண்டே இருந்தால் இறைவனே தேடி வருவானப்பா.

இதனால்தான் அப்பா சொல்கின்றோம் புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்ய என்று எவன் ஒருவன் நல் முறையாக தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சம்பாதித்து வைக்கின்றானோ!!! அவந்தனுக்கு தக்க சமயத்தில் அந்த புண்ணியங்களே அவந்தனை காப்பாற்றும். என்று ஆசீர்வதித்து வாக்குகள் உரைத்தார்.

குருநாதர் அகத்தியரின் கருணையே கருணை.

குருநாதர் அகத்திய பெருமானுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் நொடிப்பொழுதில் செய்துவிட்டு போகின்ற விஷயம்.

யுக யுகங்களாக எத்தனை கோடி மனிதர்களை அவர் பார்த்திருப்பார் எத்தனை கோடி இதுபோன்ற  அற்புதங்களை அவர் செய்திருப்பார்!!!! எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கின்றது.!!!!!

அவருடைய திருநாமத்தை உச்சரிப்பதற்கும் அவரை வணங்குவதற்கும் சில புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் .

இன்றைய அளவில் அவருடைய திருநாமத்தை கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் நமக்கெல்லாம் பாக்கியம் கிடைத்திருக்கிறது இதற்கெல்லாம் நாம் என்றோ செய்த புண்ணியங்கள் ஆக இருக்கலாம்.

ஆனால் இவை மட்டும் போதாது நமக்கு அவருடைய அருட்கருணை அவருடைய தரிசனம் அவர் நடத்திக்காட்டும் அதியற்புத விளையாடல்கள் இவற்றிற்க்கெல்லாம் நாம் மேலும் மேலும் தகுதிகள் படைத்துக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை தான தர்மங்கள் செய்து கொண்டே இருப்போம் கருணை தெய்வத்தின் கருணையை நாமும் பெறுவோம்.

தர்மம் தலைகாக்கும்/உயிர் காக்கும் என்பதை குருநாதர் அகத்தியர் தன்னுடைய திருவிளையாடல்கள் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

அனைவரும் தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொண்டு குருநாதரின் திருவருள் பெறுவோம்!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......... தொடரும்! 

Monday, 21 February 2022

சித்தன் அருள் - 1090 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


சூதமாமுனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்.

"முனிவர்களே! ஸ்ரீவாசுதேவன், கருடனிடத்தில் நரகலோக எண்ணிக்கைகளையும் அந்த லோகத்தில், பாவஞ் செய்தர்வர்கள் அனுபவிக்கின்ற அவஸ்தைகளையும் சொல்லிவிட்டு, பூவுலகில் மரித்தவனைக் குறித்து தினந்தோறும் செய்யப்படும் ஈமச் சடங்குகளாலும்  மாசிக சிரார்த்தங்களாலும், மரித்தவனின்  ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு, யமபுரி வரை சென்று, அந்த இடத்தில் அந்தப் பிண்ட சரீரத்தைவிடுத்து,  கட்டை விரலளவுடைய ஆகிருதியுடன் ஒரு வன்னி மரத்திலிருப்பான் என்றும் பின்னர் கர்மசரீரம் பெற்ற பிறகே யமபுரிக்கு யமகிங்கரர்களால் அழைத்துச் செல்லப்படுவான் " என்றும் கூறிவிட்டு திருமால் மேலும் தொடர்ந்து கூறலானார்:

"பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன், கர்ம சரீரம் பெற்று, வன்னி மரத்தை விட்டு, யமகிங்கரர்களுடன் இருபது கதா தூர வழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.  அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.  எனவே,இறந்தவனைக் குறித்துப் பூவுலத்தில் இரும்பாலாகிய ஊன்று கோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்யவேண்டும். இத்தகைய தானங்களால் யமபுரியிலுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே,  கால தாமதப்படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்ம ராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.  யமனுடைய அரண்மனையில் தர்மத்துவஜன் என்ற ஒருவன் சதாசர்வ காலமும் யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான்.  பூமியில், இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள் , கொள்ளு, பயறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன், திருப்தியடைந்து, யமனிடத்தில் "இந்த ஜீவன் நல்லவன்; புண்ணியஞ் செய்த புனிதன்!" என்று விண்ணப்பஞ் செய்வான்.

கருடா! பாபஞ் செய்த ஜீவனுக்கோ அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும், அவனுக்கு தர்மராஜனாகிய யமனும் அவனது தூதர்களும் யாவரும் அஞ்சத்தக்கப் பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்தப்   பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு  பயந்து, பயங்கரமாக ஓலமிடுவான்.  புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்ம ராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான்.  புண்னணியஞ் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து, இறைவனின் தெய்வீக ஆட்சியை வியப்பான்.   யமதர்ம ராஜன் ஒருவனேதான் என்றாலும் பாபிக்குப் பயங்கர ரூபத்தோடும் புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபத்தோடும் தோன்றுவான்.  புண்ணியஞ் செய்த ஜீவன், யமனருகே தோன்றுவானாயின், "இந்த ஜீவன் புண்ணியஞ் செய்தவனாகையால் சூரிய மண்டல மார்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்" என்று கருதும்  யமதர்மராஜன் தான் வீற்றிருக்கும் சிம்மாசனத்திலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யமலோகத்திலுள்ள கிங்கரர்கள் அனைவரும் பாசம்,உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள்.  மரித்த ஜீவனுக்காக மாசிக சோதக கும்ப முதலியனவற்றையும் பத்தானத்தையும் செய்யவில்லை யென்றால் அத்தகைய ஜீவனை, யமகிங்கரர்கள் பாசத்தால் கட்டிப் பிணைத்து,  உலக்கையால் ஓச்சி , ஆடு மாடுகளை போல இழுத்துக் கொண்டு, காலன் எதிரே நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜன்மம் அடைவான்.  அதிகப் புண்ணியஞ் செய்திருந்தால், அந்த ஜீவன், யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று, தேவனாக மாறித் தேவருலகம் செல்வான்.  அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜன்மம் அடைவான். அந்த ஜீவன் பாபஞ் செய்தவனாயின், அவன் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான்.  உடல் நடுங்கப் பயப்படுவான். கால தூதர்கள் அவனைக் கட்டிப் பிணைத்து, யமதர்மன் முன்பு கொண்டு சென்றதும், யமதர்மராஜனின் கட்டளையை ஏற்று, நரகத்தில் விழுந்து பிறகு, கிருமி, புழு, முதலியவற்றின் ஜன்மத்தையடைவான்.  அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல, மனிடப் பிறவியைப் பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும் அவன்  எக்காரணத்திலேனும் எந்த ஜன்மத்தை அடைந்தாலும், அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.   மனிதன் வாழுங்காலத்தில், ' நான் ஐஸ்வரியத்தில் தனவந்தன், அறிவிலே பேரறிஞன்,  வலுவிலே மிகவும் பலசாலி. கலைத்துறையில் பெருங் கலைஞன். விஞ்ஞானி.  மதத் தலைவன்.  ஏகபோகச் சக்கரவர்த்தி" என்றெல்லாம் புகழப் பெறுவான்.  அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அறைஞ்சாண்  கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவனது ஜீவன் நீங்கியவுடனே அவன் உடலைக் குழியில் புதைப்பான். அது மண்ணோடு மண்ணாகும்.  கண்டம் கண்டமாகத் துண்டு செய்து எறிந்தால், நரி முதலியவை தின்று பவ்விருபமாகும். தகனஞ் செய்யின் சாம்பலாகும். மனித உடலின் தன்மை அத்தகையது.  ஆயினும் ஜீவனுக்கு மானிடப் பிறவி கிடப்பது அரிது. மானிட தேகம் பெறுவது அரிது.  அப்படியே மானிட தேகம் கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு, நீங்கிப் பிறத்தல் அரிது.  அப்படியே பிறந்தாலும் பிரம குலத்தில் ஜனிப்பது அரிது. அதனினும் அரிது பிரமகுலத்தில் ஜனித்து ஒழுக்கத்தால் பெற வேண்டிய முக்தியைப் பெறவில்லையென்றால் தவம் முதலியவற்றைச் செய்து வருத்தித் தன் கரத்தில் அடைந்து அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்த்தவனுக்கு ஒப்பாவான்!"  என்று திருமால் ஓதியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Saturday, 19 February 2022

சித்தன் அருள் - 1089 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


15/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!

வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் பீடம். கிருஷ்ணகிரி.


ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக நலமாக அப்பனே குறைகள் இல்லை என்பேன்.

ஆனாலும் அப்பனே பல வாக்குகளும் சொல்லிவிட்டேன் அப்பனே.

எவை என்று கூற அப்பனே நன்மை தீமை எவ்வாறு என்பதையும் கூட வருவது பின் மனிதனின் பிறப்பில் இருந்தே வருபவை. இதை யாராலும் தடுக்க முடியாது என்பேன்.

நன்மைகள் வரும்பொழுது பின் எவை என்று கூற அனைத்தும் எவ்வாறு என்பதைக்கூட நாம் செய்ததற்கு வருவதென்றும் ,தீமைகள் வரும் பொழுது இறைவன் இல்லை என்று கூட அப்பனே அப்படி சொல்லுதல் ஆகாது என்பேன்.

இதனால்தான் அப்பனே தீமைகள் வைத்தால்தான் துன்பங்கள் வைத்தால்தான் அப்பனே இறைவனை நெருங்க முடியும் என்பேன்.

அதனால்தான் அப்பனே சில மனிதர்களுக்கு இறைவனே துன்பத்தை வைப்பான் அதை யாராலும் தடுக்கவும் முடியாது என்பேன்.

ஆனாலும் சில துன்பங்கள் அப்பனே இவையன்றி கூற இறைவன் அனுகிரகத்தால் மாறும் என்பேன்.

ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட போலியான  அப்பனே இன்னும் வருவார்களப்பா. துறவிகள் எவ்வாறு என்பதையும் கூட.

மனிதன் சம்பாதிப்பதற்காகவே அப்பனே எவை என்று கூற அனைத்தும் செய்வான் என்பேன்.

பணம்தான் மூலாதாரம் என்று கூட சொல்வான் என்பேன்.

ஆனால் அப்பனே அவை இல்லை மூலாதாரம்.

மூலாதாரம் என்பது இறை பலமே என்பேன்.

இவ் இறை பலத்தைப் பெற்று விட்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

அதனால் முதலில் பணத்திற்கே மரியாதை அப்பனே இப்புவியுலகில்.

பணத்தைத் தேடித் தேடி சென்றாலும் அப்பனே கிட்டாது என்பேன்.

இறை பலத்தை தேடித்தேடி சென்றால் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும்.

அப்பனே நல் உள்ளங்கள் கிட்டி நல் முதன்மையான பின் வழிகளில் அப்பனே இவை என்று கூற இன்னும் மேன்மைகளைப் பெற்று அப்பனே வாழ வழி வகுப்பான் ஈசன் என்பேன்.

அதனால் அப்பனே இனிமேலும் அப்பனே பின் எவனிடம் அப்பனே எதனை கொடுக்க வேண்டும் என்பது கூட ஈசன் முடிவெடுத்து விட்டான்.

இவந்தனிடத்தில் பணம் கொடுத்தால் இவந்தன் மற்றவர்களுக்கு உதவி செய்து பல புண்ணியங்களை இவந்தனும் பெற்று மற்றவர்களை  வாழவைப்பான் என்பதற்கிணங்க யாரிடம் பொருள்கள் கொடுக்க வேண்டுமோ!!! அவனிடத்தில் மட்டுமே இனிமேலும் பொருள்கள் கொடுப்பான். மற்றவர்களிடமிருந்து எடுப்பான் என்பது மெய்யப்பா.

இவையன்றி வரும் வரும் காலங்களிலும் பார்க்கலாம் என்பேன். 

அப்பனே   இவைதன் அப்பனே யாங்கள் எதனை என்று கூட மனிதர்களைப் பற்றி சரியான முறையில் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.

இதனால் அப்பனே மனிதர்களிடத்தில் எவை எவை தீய எண்ணங்களோடு செயலாற்றுகின்றதோ!!! அவையெல்லாம் எடுப்போம். இவையன்றி கூற இதனையுமென்று கூற அவையெல்லாம் பின் அடியோடு அழிப்போம் என்பேன். 

இதுதான் எங்களுடைய முதல் முயற்சி.

அப்பனே சித்தர்கள் பெயர்களை வைத்துக் கொண்டு ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக் கொண்டே பல ஞானியர்கள் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம். 

ஏனப்பா!!! வேறு பிழைப்பே இல்லையா??? எதனை என்று கூற அப்பனே பிழைப்பதற்கும் வேறு வழிகள் இல்லையப்பா. பெயர்களையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

அப்பனே அவையெல்லாம் பொய்யப்பா!!! நம்பாதீர்கள் அப்பனே.

யான் பல நூல்களிலும் அப்பனே இதை எழுதி வைத்திருக்கிறேன் அப்பனே பல யுகங்களாக.
எவை என்று கூற கோடிகோடி திருடர்கள் வருவார்களப்பா வருவார்களப்பா என்றெல்லாம்.

அப்பனே நம்பி விடாதீர்கள் அப்பனே எந்தன் பெயரைச் சொல்லியே அகத்தியன் அகத்தியன்  யான் என்று சொல்லி ஏமாற்றுவார்கள், திரிவார்கள். 

காகபுஜண்டன் அப்பனே இவையன்றி கூற அனைத்தும் சொல்லிவிட்டான் என்பேன் அப்பனே. 

இவையன்றி கூற வாக்குகளாக முருகன் செப்புகின்றான் ஈசன் செப்புகின்றான்.

இவையன்றி கூற அவையன்றி கூற அப்பனே சொல்லிச் சொல்லி அப்பனே மனிதனை ஏமாற்றி பிழைப்பு நடத்தி அப்பனே கடைசியில் பார்த்தால் இவ் மதத்திற்கே தீங்கு விளைவிப்பான் மனிதன். இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது வேண்டாம் அப்பனே திருந்துங்கள் என்று கூட சொல்லிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

விதவிதமான ஆடைகள்!!! விதவிதமான பூ வகைகள்!!! விதவிதமாக அப்பனே எப்படி எல்லாம் மனிதன் தன்னை அலங்கரித்து கொள்ள வேண்டுமோ அப்படியெல்லாம் அலங்கரித்துக் கொள்வான் மனிதர்கள்.

அப்பனே இதனால் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பேன்.

அனைத்து திறமைகளும் தந்து பின் நல் விதமாகவே கொடுத்துத்தான் இறைவன் நல்அறிவுகளோடு தான் அனுப்புகின்றான் மனிதர்களை.

ஆனாலும் அதனை அறியாத  முட்டாள்கள் மனிதர்களே என்பேன்.

அப்பனே இதை அறிந்துவிட்டால் உள்ளூர அறிந்துவிட்டால் அனைத்தும் நீயே உந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன்.

இதனால்தான் அப்பனே முதலில் இறை பலத்தை தேடுங்கள் தேடுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இறை பலத்தைத் தேடி விட்டால் உங்களுக்கே அறிவுகள் ஏற்படும்.

அப்பனே எப்படி?? அப்பனே காவி துறவி ஆகின்றான்??

இதனால் அப்பனே இக்காலத்தில் சாமியார் என்கின்றார்களே அப்பனே இவந்தனக்கு ஏதும் நடக்காது !!!!அப்பனே காதல் தோல்விகள்.!!! அப்பனே பல பிரச்சனைகள், இவையெல்லாம் வந்து இவனை வாட்டும் பொழுது பின் நாம் இவ்வாறு மனிதர்களை ஏமாற்றிவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றுதான் காவி உடுத்து கிறான் அப்பனே.

இதனால் உண்மையான காவிகளுக்கும் எவை என்று கூற பொய்யான மனிதர்களால் பின் அப்பனே அசிங்கம் தான் ஏற்படுகின்றது. வரும் வரும் காலங்களில் இவ்வாறுதான் ஏற்படும் அப்பனே.

அப்பனே சொல்கின்றேன் அப்பனே பாரத தேசத்தில் அப்பனே இவையன்றி கூற இப்படி இழிவாகவே நடந்து கொள்கின்றார்கள் அப்பனே பின் இறைவனே என்று ஏமாற்றி திரிகின்றார்கள்.

ஒரு கொள்கையுடன் வாழத் தெரியவில்லை அப்பனே. இவ்வாறு இருந்தால்?? அப்பனே எவ்வாறு ??எவ்வாறு ??நலன்கள் செய்வான்? இறைவன்!!

அதனால்தான் யாங்களே சித்தர்கள் பல மனிதர்களை திருத்துவோம் திருந்த வில்லை என்றாலும் அடிப்போம் அப்பனே பலமுடனே. 

அப்பனே திருந்திக் கொள்ளுங்கள்.

அப்பனே ஏமாற்றுபவன் மனிதன் என்பேன் அப்பனே இதனையும் என்று கூற ஏமாற்றம் ஏமாற்றம் அப்பனே.

மனிதன் என்பதை விட மனிதன் என்று சொல்வதைவிட ஏமாற்றுக்காரன் என்று தான் சொல்வதே பொருத்தமாக உள்ளது என்பேன்.

மனிதனை இவ்வாறு என்பதை கூட நன்மைகள் உண்டு உண்டு ஆனாலும் அப்பனே எதையும் அறியாமல் தன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் அனைத்தும் யாங்களே முன்னின்று நடத்துவோம். அதுதானப்பா உண்மை.

அப்பனே நிச்சயம் என் பெயரைச் சொல்லி அப்பனே நல் விதமாகவே இன்னும் அப்பனே எவ்வாறு எவ்வாறு என்று கூட ஏமாற்றி திரிபவர்களை யான் நிச்சயம் விடமாட்டேன் இனிமேலும்.

பொறுத்துக் கொண்டது போதும். ஏனென்றால் அப்பனே இனிமேலும் இவ்வாறு விட்டுவிட்டால் அகத்தியன் பொய் சித்தர்கள் பொய் என்றே சொல்லி விடுவார்கள் அதனால் தான் அப்பனே யான் எதையன்றி கூற பல சித்தர்களும் என்னிடத்தில் கூறிவிட்டார்கள்.

அகத்தியா!!! எவை என்று கூற இப்படியெல்லாம் உன்னை வைத்து பல வழிகளிலும் பல பல வழிகளிலும் இவ்வாறு என்பதெல்லாம் பொய் சொல்லி திரிந்து கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே இவையன்றி கூற. 

இதனால் எவ்வாறு என்பதையும் கூட யானும் போனால் போகட்டும் போனால் போகட்டும் பின் என் பெயரைச் சொல்லியும் பிழைத்தால் பிழைக்கட்டும் என்றெல்லாம் ஈசனிடம் பல சித்தர்களிடம் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பின் அப்பனே கேடுகெட்ட பிறவியப்பா மனிதப் பிறவி. அப்பனே இதனையன்றி கூற எதனை என்று குறிப்பிடுவது??? அப்பனே.

பொய் சொல்லி ஏமாற்றுகின்றானே மனிதன் அப்பனே வேறொன்றும் அப்பனே அதற்கு எவ்வாறு என்பதையும் கூட வேறு எதனை என்று கூட அப்பனே அமைதியாய் அப்பனே திருத்தலத்தில் அப்பனே பின் உட்கார்ந்தால் இறைவனே உண்ண ஆகாரமும்  உடையும் அனைத்தும் தருவான் அதை விட்டுவிட்டு ஏமாற்றி தான் பிழைப்பு நடத்த வேண்டுமா???

பின் ஏமாற்றி வருகிறார்களே என்பதை யானும் சொல்லி விட்டேன் அப்பனே எதனை என்றால்.?

அப்பனே யானும் கருணை உள்ளம் கொண்டவன் தான். அனைத்து மக்களும் நல்வழிக்காகவே யான் போராடிப் போராடி அப்பனே பல யுகங்களாக பல மனிதர்களுக்கும் சொல்லி சொல்லி ஏன்??

ராமனுக்கும் வழிகாட்டினேன்.
சீதைக்கும் வழிகாட்டினேன்.

ஏன் பல பல சோழர்களுக்கும் வடக்கில் உள்ள ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்த பல பல அரசர்களுக்கும் வழி காட்டினேன்.

ஏன்,  பிரம்மாவிற்கும் வழிகாட்டினேன்.

 ஈசனுக்கும் நற்செயல்கள் எல்லாம் சொல்லி வழி காட்டினேன் எவை என்று கூற பிள்ளையோனுக்கும் வழிகாட்டினேன். முருகனுக்கும் வழிகாட்டினேன்.

ஆனால் இவையன்றி கூற அவர்களும் அகத்தியா அகத்தியா நல்லது என்று கூட ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் மனிதனோ!! முட்டாள் மனிதனோ!! ஏற்றுக் கொள்ளவில்லையப்பா.

சொன்னால் இக் காதில்   பின் வாங்கி பின் அவற்றை எல்லாம் விட்டு விடுகின்றான்.

இதனை எல்லாம் எதனை என்று கூற அதனால்தான் அப்பனே எல்லை மீறி விட்டார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே இதனையன்றி கூற இன்னும் ஓர் தடவை இவ்வாறு சென்று கொண்டிருந்தால் அகத்தியா நீ எல்லாம் பின் சித்தனா என்று கூட பின் எதனையும் என்று அறியாமலே என்னையும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பல பேர்களும். இனிமேலும் சொல்வார்கள் 

அதனால் அவ் பழிச்சொல்லுக்கு யான் ஆளாக மாட்டேன். சொல்லிவிட்டேன் அப்பனே அனைவருக்கும் அடிகள்!!! பலமாக யானும் சொல்லிவிட்டேன் எதனையும் என்று கூற சொல்லிச் சொல்லி அப்பனே பார்ப்பது அரிதல்ல.

எவை என்று கூற அப்பனே இதனையும் என்று அறியாமல் வேண்டாம் அப்பனே பொய்கள் பித்தலாட்டங்கள் அப்பனே.

யான் சித்தன், யான் மகான், யான் புலவன், யான் ரிஷி, இவையெல்லாம் அப்பனே  உண்மையானவையா???

அப்பனே இதனையும் என்று அறியாமல் வேண்டாம் அப்பனே வேண்டாம் அப்பனே பொய்கள்.

அப்பனே ஒரு ரிஷியவன் எவ்வாறு செய்வான்!! என்பது கூட தெரியுமா?? அப்பனே!!

எவ்வாறு என்பதையும் கூட ரிஷி என்று மூலாதாரத்தை அப்பனே பெயரை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் அப்பனே.

இவையன்றி கூற ஆனால் சித்தன் இவையெல்லாம் சொல்லி ஏமாற்றி திரிகின்றார்கள்.

சித்தன் என்றால் பொருள் எவ்வாறு என்று தெரியுமா???

அட்டமா சித்து பெற்றவர்கள்தான் சித்தர்கள்.

அப்பனே மிதக்க வேண்டும்!!! பறக்க வேண்டும்!!! அப்பனே இவையன்றி கூற அப்பனே

ஏதாவது இவ்வுலகத்தையும் அழித்து பின் இவையன்றி கூற சித்தர்கள் அழியும் என்றால் அழிந்துவிடும். மழையே வா!! என்றால் வந்துவிடும். போ என்றால் போய்விடும் அப்பனே இவையன்றி அப்பனே. கடல் அலைகளும் அப்பனே நில்!!என்றால் நின்றுவிடும்.

ஆனாலும் மனிதன் பித்தலாட்டகாரன் என்பேன் அப்பனே.

இனிமேலும் விடப்போவதில்லை அப்பனே.

ஓர் ஆட்சியை எவ்வாறு என்பதைக்கூட இவ்வுலகத்தில் எவ்வாறு மாற்றி அமைப்போம் என்பதைக்கூட எங்களுக்கும் தெரியும் என்பேன்.

அப்பனே நல் விதமாக மாற்றங்கள் அப்பனே உரித்தாகுக.

இல்லை அப்பனே எவை என்று கூற பல பல புராணங்கள் இதிகாசங்கள் யான் பல மனிதர்களுக்கும் அப்பனே மகாபாரத போர்களிலும் எவ்வாறு என்பதை கூட எதனையும் என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பல வார்த்தைகள் அப்பனே பல திருத்தலங்களிலும் அப்பனே  யான் இப்பொழுது கூட திரிந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே.

ஒழுங்காக மனிதன் இல்லையப்பா.

அதனால் நீ ஒழுங்காக இல்லை என்றால் அப்பனே இறைவனை குறை கூறுவதா??? அப்பனே

முதலில் நீ ஒழுங்காக நடந்து கொண்டால் அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும்.

நீயே ஒழுக்கமாக இல்லை அப்படி ?? எப்படி ??ஒழுங்காக நடக்கும்???

அப்பனே யோசித்துப்பார்!!! அப்பனே  உன் மனதை தொட்டு பார் !!!!அப்பனே

இவையன்றி கூற இன்னும் வாக்குகள் உண்டு பல சித்தர்களும் வந்து வாக்குரைப்பார்கள். ஒவ்வொருவரும் அப்பனே மனிதனை சமநிலைப்படுத்தவே.

அப்பனே முதலில் திருந்துங்கள் திருந்துங்கள்.

பொய்யப்பா!!! மனிதன். அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் அப்பனே அப்பப்பா!!!!!!!!!!!

அப்பனே வேண்டாம் அப்பனே.!! 

இவையன்றி கூற இன்னும் மாற்றங்கள் உண்டு.

ஆனாலும் கவலைகள் இல்லை அப்பனே நேர்வழிப் பாதையில் சென்று அப்பனே நல் வழியும் யாங்கள் உங்களுக்கும் நல் விதமாக கற்பிப்போம்.

அப்பனே வாழ்க்கையில் பிறந்து விட்டோம் என்றால் அப்பனே தின்றோம் அப்பனே வாழ்ந்தோம் அப்பனே உறங்கினோம் இவையெல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லையப்பா.

அப்பனே இவையன்றி கூற அனைத்து வகை உயிரினங்களும் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால் மனிதப்பிறவி அப்பனே மனிதப்பிறவி பின் பெரும் பிறவியப்பா!!

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கலாம் மனிதனால்.

ஆனால் முட்டாள் மனிதனோ!!! அப்பனே எவை எவையோ!!! என்று எண்ணி அப்பனே தன்னை தானே கெடுத்துக் கொண்டு தன்னிடம் இருக்கும் அனைவரையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே.

இவைதான் உலகமப்பா.

அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன் அதனால் அப்பனே திருந்தி வாழுங்கள்.

அப்பனே இவையன்றி கூற வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல்விதமாக அப்பனே எவ்வாறு என்பதை கூட ஞாயிறு தோறும் வரும் ராகு காலத்தில் பைரவனை(கால பைரவர்) வணங்கினால் இன்னும் பெரியதப்பா!!!!!  நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என்பேன்.

இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன். அவைமட்டும் இல்லாமல் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல் விதமாகவே அனுமானுக்கு அப்பனே வெற்றிலை மாலை சாற்றி தன் எண்ணத்தில் உள்ள குறைகள் பின் அவனுக்கு அவனிடத்தில் சொன்னால் அப்பனே அதி அற்புதம் நடக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் கூட இதுவும் ராகு காலத்தில் செய்துவிட வேண்டும் என்பேன் ஞாயிறு தோறும் . ஆனால் பல மக்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது அப்பனே.

சொல்லிவிட்டேன் சூட்சுமத்தை அப்பனே.

இன்னும் பல வழிகளிலும் ஞானத்தைப் பெற வரும் வரும் காலங்களில் சொல்லிக்கொண்டே இருப்பேன் அப்பனே.

நலன்கள் ஏற்படும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை  அப்பனே நலமாக நலமாக.

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் பலமாகவே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 17 February 2022

சித்தன் அருள் - 1088 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


சுதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களுக்குப் பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார்:

"முனிவர்களே! திருவிக்கிரமரான திருமால், கருடனை நோக்கி கூறலானார்:

"கருடா ! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களையெல்லாம் சித்திர குப்தன் என்ற யமலோகக் கணக்கன், சிரவணர்களின் மூலமாக அறிந்து யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவனது உத்திரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனைகளை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன் கிங்கரர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வப்போதே நிறைவேற்றச் செய்துவிடுவான்.  ஜீவனானவன் வாக்கால் செய்த பாப புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்த பாப புண்ணியங்களை உடலாலும், மனத்தால் செய்த பாப புண்ணியங்களை மனத்தாலும், அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரியோர்களைப் போற்றுதல், வேத சாஸ்திர புராணங்களைப் பக்தி சிரத்தையாகப் படித்தல் முதலிய புண்ணியச் செயல்களைச் செய்தவன், எங்கும் தன் வாக்குத் திறமையால் வெற்றியை அடைவான். பெரியோரை ஏசிப்பேசுதல், இகழ்ந்து பேசுதல், நீச மொழிகளை உச்சரித்தல் முதலிய பாவங்களை செய்தவர்களின் வாயிலிருந்து புழுக்களாகச் சொரியும்!  புண்ணிய நதிகளில் நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள், ஆசாரியர்கள், தெய்வீக விஷயங்களை உலகிற்கு உபதேசிப்பவர்கள், ஞானிகள் இவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்தவர்களும் இதுபோன்ற பலவகைப் புண்ணியச் செயல்களைச் செய்தவர்களும் நல்ல இணக்கமுடைய சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். பரஸ்திரீகமனஞ் செய்தவர்கள், பிறவுயிர்களை வாட்டி வதைத்தவர்கள் முதலியவற்றைச் செய்தவர்கள் கொடூரமான சரீரத்தையடைவார்கள்.

ஆதிபகவனுடைய திவ்ய மங்கள விக்கிரகத்தைத் தினசரி பூஜித்தவர்களும் தியானித்தவர்களும்,  எல்லோரும் நல்லவற்றையே செய்தவர்களும், ஊருக்கு உழைத்தவர்களும், உலக நன்மையையே எப்போதும் கருதியவர்களும் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்கும் மனத்தைப் பெற்றிருப்பார்கள். எப்போதும் பிறருக்குத் தீமை செய்வதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களும், கெடுதலான சிந்தனை செய்பவர்களும் எப்போதும் வருந்தும் மனமுடையவனாவார்கள்.  

"கருடா!  யமபுரியின் தன்மையையும் அந்த யமபுரிக்குச் செல்லும் பாதையிலுள்ள இன்ப துன்பங்களையும் உனக்குச் சொன்னேன். இறந்தவனைக் குறித்து அன்னதானம், கோதானம், திலதானம் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். அன்னதானம் செய்தால் இறந்து செல்லும் ஜீவன் மார்கத்தில் வருந்தாமற் செல்வான்.  தீபத்தானம் செய்யப்பட்டால், ஜீவன் இருள் மார்கத்தில் வழி தெரிந்து இனிதாகச் செல்வான்.  கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில்சதுர்த்தசியில் தீபத்தானம் செய்தாலும், விருக்ஷோற்சர்க்கம் செய்தாலும் ஜீவனானவன் நல்லுலகில் நற்கதியடைவான்.  பதினோரு நாட்கள் செய்யும் பிண்டங்களால் சிரசு, ரோமம் முதலியவை நன்றாக அமையும். தண்ணீர்க் குடத்தைத் தானம் செய்தால் யமகிங்கரர்கள் திருப்தியடைந்து, அந்த ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள்.  சையாதானம் செய்யின் ஜீவன் விமானத்தில் ஏறி நல்லுலகை அடைவான்.  இறந்தவனின் ஜீவன், பதினொன்றாம் நாள் முடியும் வரையில், அவன் மனைக்கு முன்னால் பசி தாகத்தோடு நிற்பானாகையால், அவனைக் குறித்துச் செய்யும் தானங்களைப் பதினோராவது நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது செய்யவேண்டும்" என்று கூறியருளினார்.

கருடன், பக்தவத்சலப் பெருமானை நோக்கி, "ஆபத்பாந்தவா! அநாதரக்ஷகா! முன்பு ஒரு சமயம், பத தானம் செய்யவேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அந்தப் பத தானம் என்பது யாது? அந்தத்  தானத்தை எவ்விதம் செய்யவேண்டும்?" என்று கேட்க, மாலே மணிவண்ணன் கூறலானார்:

"கருடா! குடை, மாரடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், ஆசனப்பலகை, அன்னம், பூஜைத் திரவியம், பூணூல், தாமிரச் சொம்பு , அரிசி ஆகியவற்றை சத்பிராமணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். குடை தானம் செய்தால், ஜீவன் யமபுரியை நோக்கிச் செல்லும் போது குளிர்ந்த நிழல் நிறைந்த மார்க்கமாகக் கிங்கரர்களால் அழைத்துச் செல்லப்படுவான். மாரடிதானம் செய்தால், குதிரைமேல் ஏறிச் செல்வான். இவ்வாறுசெய்யும் தானங்களில் யமதூதர்கள்  மகிழ்ச்சியடைந்து, ஜீவனை வருந்தச் செய்யாமல் ஆதரவோடு அழைத்துச்செல்வார்கள்" என்று கூறியருளினார்.

ஓ, நைமிசாரணிய வாசிகளே! அதன் பிறகு, பட்சிராஜனான கருடன், திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி, "கருணா நிதியே! கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வெவ்வாறு தண்டிக்கப் படுகிறார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும்" என்றுகேட்க பாம்பணைப்பரமன், கருடனை நோக்கி, 

"காசிப புத்திரனே பாவஞ் செய்தர்வர்களுக்குக் கால தேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் ஆயிரம் பதினாயிரமல்ல எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன; அவற்றில் தாமிஸ்ரம், சௌகசம், திரௌஞ்சம், மகாபைரவம், சால்மலி, ரௌரவம், குட்மலம், பூதி, மிருதகம், காலசூத்திரகம், சங்காதம், லோக துத்தம், சம்விஷம், சம்ரணம், மகாநரகம், கோகளம், சஞ்ஜீவனம்,  மகாபதம்,  ஆவித்தியம், அந்ததாமிஸ்ரம், கும்பிபாகம், அசிபத்திரவனம்  முதலிய இருபத்தெட்டு நரகங்கள் மிகக் கொடியவனவாகும்.

  • பிறன் மனைவி, குழந்தை, பொருள், இவற்றைக் கொள்ளையடிப்போர் அடையுமிடம் - தாமிஸ்ர நரகம்.
  • கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள் கவிய மூர்ச்சித்து விழும் நரகம் - அந்ததாமிஸ்ரம்.
  • அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுய நலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும் .
  • ருரு என்ற ஒரு வகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம்  -மஹா ரௌரவமாகும் .   
  • தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பிபாகம்.     
  • பெரியோரையும் பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.
  • தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிப்பத்திரமாகும். 
  • அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் கொடுமைகளும் புரிந்த அக்கிரமக்காரர்கள் அடையும் நரகம் - பன்றிமுகம். 
  • சித்திரவதை, துரோகம், கொலை, முதலியவற்றைச் செய்தகொடியோர் அடையும் நரகம் அந்தகூபம்.
  • தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து பக்தி, நியமம் முதலிய நல்லொழுக்கமில்லாமல் வாழ்ந்த பாவிகள் அடையும் நரகம்  - கிருமிபோஜனம். 
  • பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமைகளால் அபகரித்துக் கொள்ளும் பாலாத்காரப் பாவிகளடையும் நரகம் அக்கினி குண்டம்.
  • கூடத்தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக்கூடி மகிழும் மோஹ வெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம்.
  • நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றைப் பாராமல் தரங்கெட்டு, எல்லோருடனும் எவருடனும் கூடி மகிழும் மோகந்த காரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
  • அதிகார வெறியாலோ  கபடவேஷத்தாலோ, நய வஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுத்துத் தர்மத்திற்குக் கேடுபுரியும் அதர்மிகள் அடையும் நரகம்  - வைதரணி.
  • கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி, ஒழுங்கீனங்கள் புரிந்தும், தன் வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல்  மிருகங்களைப் போலத் திரியும் கயவர்கள் அடையும் நரகம் - பூயோதம்.
  • பிராணிகளைத் துன்புறுத்திக் கொலைபுரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் - பிராணரோதம்.
  • டம்பத்திற்காக பசு வதைப்புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டக்காரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
  • வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாக்கி கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் - லாலாபக்ஷம் .
  • வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவவதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
  • பொய் சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச்  செயல்புரியும் அகம்பாவிகள் அடையும் நரகம் அவீசி.
  • எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.  
  • தன்னை மட்டுமே பெரிதாக மதித்து பெரியோரையும் நல்லோரையும் அவமதித்து, இறுமாப்புடன் தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் - க்ஷாரகர்த்தமம்.
  • நரமேதயாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை,அவர்களால் வதைக்கப் பட்டவர்களே, முன்னின்று வதைக்க அவதிப்படும் நரகம் ரக்ஷோகணம் .   
  • எந்தவிதத்தீமையும் புரியாதோரைக் கொல்லுதல் நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் முதலிய பாபச் செயல்களைப் புரிந்த பாவிகள் அடையும் நரகம் சசூலரோதம்.
  • தீமையே புரிந்த துரோகிகளைடையும் நரகம் தந்தசூகம்.
  • பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரோதம்.
  • வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்,பகிர்ந்துண்ண விரும்பாத சுயநல வாதிகளும் அடையும் நரகம் பர்யாவர்த்தனகம்.   
  • செல்வச் செறுக்காலும் செல்வாக்கினாலும் கர்வங்கொண்டு, பிறரைத் துன்புறுத்துகிறவர்களும், அநீதியாய்ப்  பொருள் சம்பாதித்து அதை நல்ல அறநெறிகளில் செலவிடாமல், கள்ளத் தனமாகப் பதுக்கி வைப்பவர்களும் அடையும் நரகம் சூசீமுகம் என்பதாகும். 
இத்தகைய இருபத்தெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும்   ஏராளமானவையாக மிகக்கொடியனவாக அமைந்திருக்கும். 

"இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கப்படும் உதககும்பதானத்தை, யமதூதர்கள் பெற்றுத் திருப்தியடைவார்கள். மாசிக, வருஷாப்திகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான்.  அவற்றால் யமகிங்கரர்களும் திருப்தியடைவார்கள். 

"வைனதேயா!  ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந்தருவாயில், அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடுயமபுரியை அடைவான் என்றோமே!  அந்த ஜீவன்  யமலோகத்தை அடையும் முன்பாக அந்தப் பிண்ட சரீரத்தைத்தவிர்த்து, அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று, ஒரு வன்னிமரத்தில் சிறிது காலம்  தங்கியிருந்துஅதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தைப் பெறுவான்.  அப்போது யமகின்கிரர்கள்  அந்த ஜீவனை யமபுரிக்குஅழைத்துச் சென்று,தர்மராஜனின் கொலுமண்டபத்திற்குக் கொண்டு செல்வார்கள்" என்று திருமால் கூறியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Wednesday, 16 February 2022

சித்தன் அருள் - 1087 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!



7/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நல்லருள்கள்.

எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும் எவை என்று கூற இதனையே தான் யான் மக்களுக்கு தெரியப் படுத்திக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே துன்பம் இல்லாமல் எவரும் இவ் உலகில்  வர இயலாது எதனையும் என்று கூட அப்பனே இதனையுமென்று நன்கு அறிந்து விட்டால் அப்பனே உண்மைநிலை தெரிந்துவிடும் அப்பனே.

துன்பம் வந்தால் தான் அப்பனே பக்குவங்கள் பிறக்கும். பக்குவங்கள் பிறந்தால்தான் அனுபவங்கள் பிறக்கும் அனுபவங்கள் பிறந்தால் தான் இறைவனை காண இயலும். 

அன்பு மகன்களே இவையன்றி கூற அதனால் தான் அப்பனே வரும் போகும் அப்பனே இவையன்றி கூற

இரவும் பகலும் வரும்!! இதனால் எவை என்று கூற பின் அதனையும் அகற்ற முடியுமா???


இரவை பகலாக்க முடியுமா??

பகலை இரவாக்க முடியுமா??

துன்பத்தை இன்பமாக முடியுமா?? இன்பத்தை துன்பமாக முடியுமா??

ஆனாலும் அப்பனே எங்களால் முடியும் என்பேன்.

ஆனாலும் அப்பனே இவை என்று கூற விதியின் பாதையில் அப்பனே அதன் வழியில் சென்றால் தான் முக்தி கிடைக்கும் என்று என்பேன் அப்பனே!

அதனால்தான் அப்பனே  எத் துன்பம் வந்தாலும் அப்பனே கவலைகள் இல்லை யான் இருக்கின்றேன் அப்பனே உங்கள் தந்தையாக அனைத்தும் செய்கின்றேன். எவ்வாறு விதவிதமாக சில வினைகள் வந்தாலும் அவையெல்லாம் யான் அகற்றிக் கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே மனிதன் எவை என்று கூற மனிதனுக்கு எதை எதை என்று உணராமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் எது உண்மை?? எது பொய்?? என்பதை கூட.

ஆனாலும் உலகில் பிறந்த அனைவருக்கும் தானாகவே வந்துவிடும் மன சஞ்சலங்கள். அதனால்தான் அப்பனே மனதை அடக்க வேண்டும் என்பேன்.

இதனால்தான் அப்பனே  பரிகாரங்கள்!! அப்பனே பல பூஜைகள்!! அப்பனே பல மந்திரங்கள்!! எவற்றிற்காக தெரியுமா???

அப்பனே மனதை அடக்குவதற்காகத்தான். ஆனாலும் அப்பனே மனதை அடக்கினால் அப்பனே ஒன்றும் தேவை இல்லையப்பா.

இறைவன் குடி கொள்வான் மனதில் கூட அப்பனே எவை என்று கூற அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்று யான் முன்பே உரைத்திருக்கிறேன். இவையன்றி கூற அப்பனே மனிதன் மனதை அடக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அகத்தியன் இருக்கும் பொழுது என் தந்தை இருக்கின்றான் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர துன்பம் அவை இவை எல்லாம் அப்பனே தானாகவே வருபவை என்பேன்.

இன்பம் வரும் போதெல்லாம் மனிதர்கள் அப்பனே இப்படி சொல்வதில்லை யான் இன்பமாக இருக்கின்றேன் என்று அப்பனே.

ஆனால் துன்பம் வரும்போது மட்டும் அப்பனே துன்பம் வந்து இறைவனை நாடினால் என்ன செய்வது ??அப்பனே.

இதனைதான் தெரிந்து கொள்ள வேண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் கடை நாள் வரையிலும் அப்பனே.

இவையன்றி கூற பிறக்கும் பொழுதே அப்படியே இன்பம் துன்பம் இறைவன் படைத்து விடுகின்றான் நோயும் படைத்து விடுகின்றான் இதனால் தாம் தம் செயல்களுக்கு ஏற்றவாறு தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

ஆனால் அப்பனே புண்ணிய பாதையில் சென்று கொண்டிருந்தால் அவ் புண்ணியமே உங்களைக் பாதுகாக்கும் என்பேன் அழகாக அப்பனே . புண்ணியங்கள் செய்து நல் விதமாக பின் சித்தர்கள் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பேன்.

அதனால்தான் "புண்ணியம் செய்!!! "புண்ணியம் செய்!!! என்றெல்லாம் மனிதர்களுக்கு யாங்கள் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம். 

ஆனால் மனிதனோ மாயையில் சிக்கிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான். அவை செய்தால் இது நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்றெல்லாம் ஆனால் இவையெல்லாம் வெற்று பேச்சுக்கள் தான் அதிகம் என்பேன் மனிதர்களிடத்தில் அப்பனே.

இவையன்றி கூற எதையும் எதனையும் என்று அனைவரும் எவ்வாறு என்பதும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட உண்மையான மனிதன் என்பவன் அப்பனே எதையும் கூற மாட்டான் என்பதை என்னால் அது முடியும் இது முடியும் என்றெல்லாம் விளம்பரங்கள் எல்லாம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே.

அப்பனே எவை என்று கூற ஆனாலும் நல்வழியில் போகும்பொழுது சில பிரச்சனைகள் நிச்சயமாய்  வரும் என்பேன். அவையெல்லாம் எதிர்த்து நின்றால் இறைவன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பேன்.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே நல்வழியில் போகும் பொழுது இறைவன் அப்பனே சில சோதனைகளை செய்வான் அவன் தாங்கிக் கொள்கின்றானா?? என்று கூட.
அவ் சோதனைகளிலிருந்து மைண்டு வந்துவிட்டால் இறைவன் தரிசனம் அப்பனே உங்களை நோக்கி வரும் என்பேன் அப்பனே.

ஆனால் மனிதன் முட்டாளாகவே போய்க் கொண்டிருக்கின்றான். வரும் வரும் காலங்களில் எவை?? ஏது?? எது?? என்று கூட தெரியாமல் அப்பனே தவித்துக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையா??!!!!! வாழ்கின்றான் !!??அப்பனே.

இல்லையப்பா போலியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உண்மை நிலை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதனால்தான் அப்பனே கலியவன் (கலி புருஷன்)) செயல்கள் வரும் அதி விரைவிலேயே அப்பனே.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இனிமேலும் பாதிக்கப்படுவார்கள். எதனால்?? அவந்தனக்கு இப் பிழைப்பு என்பது தெரியாது என்பேன். உண்மையானது எது என்று தெரியாது என்பேன். அப்பனே இவ்வாறு உண்மை நிலையை அறிந்தால்தான் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே பின் கடை நாள் வரையிலும் அப்பனே தொய்வின்றி வாழலாம் என்பேன்.

ஆனால் மனிதனோ வாழ முடியாது அப்பனே. கலியவன் கெடுத்தே வருகின்றான் அப்பனே இவையன்றி கூற இதனால்தான் அப்பனே இறைவன் நன்றாக புத்திகள் படைத்திருக்கின்றான்.அப் புத்திகள் மனிதன் ஒருபோதும் அப்பனே உபயோகிக்கவில்லை அப்பனே. 

யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பலபல யுகங்களில் கூட அப்பனே.

இவ்வாறு அப்பனே புத்திகள் அப்பனே இவையன்றி  கூற அப்பனே யோசித்து கொள்ளாமல் அப்பனே மற்றவையே நாடிக் கொண்டிருந்தால் எப்படியப்பா?? இறைவன் அருள் கிடைக்கும்?? அப்பனே இல்லையப்பா போலியப்பா!!!!

மனிதர்கள் இதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

யாங்களும் பல பல யுகங்களாக வாழ்ந்திட்டும் பார்த்திட்டும் விட்டோம் மனிதனை . அப்பனே பொய்யாக வாழ்ந்து பொய்யாகவே பின்னர் இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து வருகின்றானப்பா. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா.

பல வழிகளிலும் சொல்லிவிட்டோம் அப்பனே.

உந்தனுக்கு கொடுத்த அறிவையும் மற்றவனுக்கும் கொடுத்திருக்கின்றான் ஆனாலும் அவன் உபயோகிக்கிறான் அப்பனே  ஆனாலும் மற்றவர்களுக்கும் கொடுக்கின்றான் என்பதெல்லாம் அப்பனே இறைவன் பிறக்கும்பொழுது ஆனால் சமமான அறிவுகளை கொடுத்து விடுகின்றான். அதில்தான் அப்பனே உண்டு என்பேன் சூட்சமங்கள்.

அப்பனே  உண்மை இல்லையப்பா.இவ்வுலகத்தில் அப்பனே ஆனாலும் உண்மை உள்ளவைகளாக யாங்கள் செய்வோம் பல மனிதர்களை ஏற்படுத்துவோம் அப்பனே.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே என்னையும் நாடி வந்து விட்டால் யான் கஷ்டங்கள் தான் முதலில் ஏற்படுத்துவேன். ஏனென்றால் அப்பனே கர்மா தீர வேண்டும். கர்மா தீர்ந்து கொண்டே சென்றால் அதன் மூலமே யான் பக்குவப்படுத்தி விடுவேன்.

ஆனால் அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே இருபது!! முப்பது!! நாற்பது!! ஐம்பது !!அறுபது!! வருடங்களில் கூட கஷ்டங்கள் ஒவ்வொருவருக்கும் அப்பனே பத்து!! பத்து !!என்று எண். !! ஆகவே வகுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இவையெல்லாம் சேர்ந்து  அப்பனே எங்களிடத்தில் வருபவர்களுக்கு ஒரே நேரத்தில் கொடுத்து விடுவோம்.

அதனால்தான் அப்பனே ஒரே நேரத்தில் கொடுத்தால் கஷ்டங்கள் அதையும் தாங்கி கொண்டால் அப்பனே வாழ்க்கையில் அப்பனே துன்பமே இல்லை அப்பனே.

அதனால்தான் எவை என்று கூற இதனால்தான் பத்து பத்து என்று அடுக்கடுக்காக பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான்.

பத்து வருடங்கள் உண்மையாக வாழ்ந்தால் அப்பனே அடுத்த பத்து வருடங்கள் நல் விதமாக எவை என்று கூற இன்னமும் சூட்சமங்கள் உள்ளது அப்பனே.

அவை என்று கூற இன்னமும் சொல்கிறேன் கேளுங்கள் எவை எவை என்று கூற அடுத்த அடுத்த வாக்குகளும் அப்பனே.

இவையன்றி கூற! அதனால்தான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்

இதில் கூட ஒரு வருடம்அப்பனே கூட்டி இன்னொரு வருடமும் கூட்டினால் அப்பனே பன்னிரெண்டு(10+1+1=12) இவற்றிற்கும் சான்றுகள் எவ்வாறு என்பதைக்கூட உண்டு என்பேன் இவற்றை பற்றியும் தெளிவாக அனைத்தும் அப்பனே.

எவ்வாறு என்பதையும் கூட வட்டம் எதனால் வட்டம் ஏற்பட்டுகின்றது அப்பனே வட்டத்தோடு வாழ வேண்டும் அப்பொழுதுதான் அப்பனே இறைவன் காட்சி அளிப்பான். வட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் அப்பனே மனிதனின் செயல்கள் அப்பனே எல்லை மீறிக் கொண்டு அப்பனே அழித்து விடுவான்.

அதனால்தான் முதலிலேயே வட்டம் அப்பனே வட்டத்தை நோக்கித்தான் அப்பனே சிறிது நேரம் சிந்தியுங்கள் ஓய்வாக இருக்கும்போது வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே அவ்வட்டத்தில் எவ்வாறு வாழலாம் என்பதை கூட உங்களுக்கு அறிவுகள் கொடுக்கின்றேன். அப்பனே.

ஆனாலும் அவ் வட்டத்திற்குள் மனிதன் வெளியே வந்துவிட்டால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.

அதனால்தான் முதலிலே பின் பூஜ்ஜியத்திற்கே மதிப்பு என்பேன் அப்பனே.

அதில் எவ்வாறு மனிதன் வாழலாம்?? என்று கூட தெரிந்துவிட்டால் அப்பனே மற்றவையெல்லாம் ஒன்றிலிருந்து பல கோடிகள் வரை வாழ்ந்து விடலாம் என்பேன்.

இதுதானப்பா வாழ்க்கை.

வாழ்க்கை பற்றி இன்னும் தெரியவில்லை இவ்வாறே தேய்ந்து தேய்ந்து தேய்வு நிலை ஏற்படுவதால் அப்பனே மனிதனுக்கு மூட நம்பிக்கை பிறக்கின்றது. மூடநம்பிக்கையில் வாழ்கின்றான் அப்பனே. பின் இறைவனை பின் சரணடைந்தால் அனைத்து துன்பங்களும் கரைந்துவிடும் என்று. ஆனாலும் அது பொய் அப்பனே எவை என்று கூற ஆனாலும் ஒரு நிலைக்காகவே இறைவனையும் வணங்குகின்றான். அதுவும் பொய்யப்பா.

அப்பனே இறைவனை வணங்குவதால் என்ன பயன்?? எவ்வாறு என்பதையும் எதனையும் என்று கூற மனதாலும் எதையும் நினைத்து  கூடாது வணங்கினால் அப்பனே முதன்மை ஏற்படும் என்பேன்.

நல் விதமாக அப்பனே எவை என்று கூற எதை என்று பேராற்றல் இவை இவ்வுலகத்தில் உண்டு என்பேன் அப்பனே .

அப்பனே வட்டத்தை இடவேண்டும் அவ் வட்டத்திற்குள் எவ்வாறெல்லாம் வாழலாம் என்று அப்பனே தெரிந்து கொண்டு நல் முறையாகவே எவ்வாறு என்பதையும் கூட கடைப்பிடித்தால் அப்பனே அப்பனே இவையன்றி கூற உலகத்திலுள்ள அனைத்தும் கிடைக்கும் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட இதனையும் திரும்பவும் சொல்கின்றேன் அவ் வட்டத்திற்குள் வெளியே வந்தால் அப்பனே முடிந்துவிட்டது அவரவருடைய செயல் அவரவரையே பாதிக்கும் கடைசியில் மாய்ந்து விடுவான் அப்பனே.

இவையன்றி கூற அவ் வட்டத்திற்குள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதைக்கூட யான் எடுத்துரைக்கிறேன் வரும் வரும் காலங்களில் அப்பனே குறைகள் இல்லை.

எவை என்று கூற அப்பனே நலமாக நலமாக எதனையும் என்று கூற அப்பனே உங்கள் கடமையைச் செய்யுங்கள். மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற துன்பம் யாருக்கு வராது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.  அப்பனே எவ்வாறு என்பதை கூட  இபுவியுலகில் எவ்வாறு இதனையும் யான் முன் கூட்டியே தெரிவிப்பேன் பல வாக்குகளில் அப்பனே.

இறைவனே இப்புவியுலகத்தில் வந்துவிட்டால் அப்பனே கஷ்டங்கள் தான். ஏன்?? ஈசன் கஷ்டப்படவில்லையா?? அப்பனே எவை என்று கூற ராமன் அப்பனே  கஷ்டப்பட வில்லையா?? ஏன் கிருஷ்ணன் கஷ்டப்பட வில்லையா??

அப்பனே இவையன்றி கூற எதனையும் என்று கூற அப்பனே கஷ்டப்பட்டு எவ்வாறு என்பதை கூட அப்பொழுதுதான் இறைவன் பாதையை தேர்ந்தெடுக்க முடியுமே தவிர இன்ப நிலையில் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை இன்பநிலையிலேயே இருந்து, அவ் இன்பநிலையே துன்பமாக்கினால் அப்பனே மனிதனால் ஈடு செய்ய முடியாது என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே மனிதனுக்கு சரிவு ஏற்படும் பொழுது அப்பனே எவை காக்கும் என்றால் துன்பம் மட்டுமே .அவ் துன்பத்தை மக்கள் அப்பனே அதை செய்தால் இது போகும் இதை செய்தால் அது போகும்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள்.

இது நியாயமா??? அப்பனே.

நீங்களே கூறுங்கள் ஆனாலும் அப்பனே இவையன்றி கூற துன்பத்திற்கு அப்பனே யாராலும் விடிவுகாலம் கற்க முடியாது என்பேன்.

அதனால்தான் அப்பனே சித்தர்கள் பெயரைச் சொல்லிச் சொல்லி இதைச் செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் என்றெல்லாம் சொல்லி சொல்லி கெடுத்து விட்டார்கள் அப்பனே.

இனிமேலும் உண்மையாகவே யாங்கள் வந்துவிட்டோம் இப்புவியுலகத்தில் அப்பனே எவை என்று கூற சில மாற்றங்களை ஏற்படுத்துவோம். 

ஆனாலும் எவை என்று கூற அதனால் தான் அப்பனே மனிதர்களை யாங்கள் இனி மேலும் நம்ப போவதில்லை எதற்காக?? என்றால் அப்பனே

சித்தன்!!! இவையன்றி  கூற இதனையும் என்று கூற இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் !!!! 

அப்பனே!!! கோபங்கள்!!!! அப்பனே சித்தர்களுக்கு..!!

இவையன்றி கூற ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள் ஒன்றுமே தெரியவில்லை அப்பனே ஆனால் இவையன்றி கூற  இவ் பரிகாரத்தின் மூலம் அனைத்தும் நடத்திவிடலாம் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள்.

ஏன் ??அப்பனே இவை என்று கூற இதனையுமென்று கூற ஏன்??? பறக்கலாமே!!!! ஆகாயத்தில்!!!!! ஏன்??  நீந்தலாமே கடலில் இவற்றிற்கெல்லாம் பரிகாரம் உண்டா?? சொல்லுங்கள்.

இவை என்று கூற அப்பனே புத்திகள் யூகித்துக் கொள்ளுங்கள் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே உங்களுக்கும் அறிவுகள் உண்டு என்பேன்.

தெளிவு பெறுக ....!!அப்பனே சொல்லிவிட்டேன்.

இவை என்று கூற தெளிவு பெற்றவர்களுக்கே யாங்கள் வாக்குகள் கூறமுடியும் அப்பனே. இனிமேலும் தெளிவு பெறாதவர்களுக்கு அப்பனே வாக்குகள் சொன்னாலும் ஒன்றும் பிரயோஜனமில்லையப்பா. 

அதனால்தான் எடுத்துரைக்கிறேன் இப்பொழுது உங்களுக்கு.

எவை என்று கூற பதிலடியாக இவையன்றி கூற அப்பனே இதனையும் மாற்றலாமே அப்பனே பின் பரிகாரத்தால் 
சூரியனை அப்பனே கீழே வர வைக்க முடியுமே!!!!!!!!!!!!

அப்பனே சந்திரனையும் கீழே வர வைக்க முடியுமே!!!!!!

ஆனாலும் ஏன்?? முடிவதில்லை!!! அவ் பரிகாரங்கள் பலிப்பதில்லை.??

அப்பனே தெரிந்து கொள்க!!

பரிகாரம் என்பது அப்பனே காசுக்காகவே என்பேன்.

அப்பனே இவையன்றி கூற மனிதன் பிழைப்புக்காகவே என்பேன். அவையெல்லாம் அப்பனே வீண் என்பேன் அப்பனே.

துன்பம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். பிரம்மா எழுதி வைத்திருப்பதை அப்பனே ஆனாலும் நல் முறையாக சில தான தர்மங்கள் நல் விதமாக புண்ணிய காரியங்கள் செய்து வந்தால் அப்பனே அப்பனே நல்விதமாக பக்திகளும் யாருக்கும் துன்பம் அளிக்காமல் அப்பனே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இறைவா!! இறைவா அனைத்தும் நீயே!!! நீயே!!!

உன்னையே நம்பி கொண்டிருக்கின்றேன்!! என்றிருந்தால் நிச்சயம் யாங்கள் எடுத்துரைப்போம் பிரம்மாவிடம் கூறி அப்பனே,மாற்றத்தை.

அப்பனே உண்டு இவ்வுலகில் நிச்சயம் மாற்றம் நல்லோர்களுக்கு. அப்பனே ஆனாலும் இதில் கூட வருவார்களப்பா இன்னும் திருடர்கள் தான் அப்பனே.

அப்பனே சித்தர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவார்கள் திருடர்கள் அப்பனே. இதனால்தான் அப்பனே யானும் மௌனத்தை காத்து காத்து அப்பனே இருந்தேன் 'போனால் போகட்டும் "என்று ஆனாலும் இனிமேலும் காத்திருந்தால் யான் ஏற்கனவே நல்விதமாகவே வாக்குகள் செப்பிவிட்டேன். அகத்தியனே பொய் என்று கூடச் சொல்லிவிடுவார்கள்.

அப்பனே!! சித்தர்கள் இவ்வுலகத்தை காக்க வந்தவர்கள் என்பேன்.

மனிதர்களை திருத்தி இப்படி வாழ்!! இப்படிச்செல்!! என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் இவையன்றி கூற வரும் வரும் காலங்களில் அகத்தியன் சொன்னான் !!!பின் அந்த முனிவன் சொன்னான்!! இந்த முனிவன் சொன்னான் !! இவை எல்லாம் சொன்னான் என்று அப்பனே மனிதனே!!! திருத்தி எழுதி விட்டான் அப்பனே இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது இக்கலியுத்தில் கூட அப்பனே.

இவையன்றி கூற இன்னும் உண்மை நிலையை யான் எடுத்துரைப்பேன் அப்பனே பல வாக்குகளும் உண்டு என்பேன் கவலைகள் இல்லை.

அப்பனே நல்விதமாக ஆசிகள். மறுவாக்கும் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Sunday, 13 February 2022

சித்தன் அருள் - 1086 - திருவோணம் நட்சத்திர பிரார்த்தனை- விளக்கம்!



அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை​ (நீரில் ஜபம் செய்து, பூமியில் அர்க்கியமாக விட)​ அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்​ ​​சொன்னார். அதன் படி, அதை செய்ய விரும்பும் அடியவர்களுக்காக, சித்தன் அருள் அருளில் ஒவ்வொரு மாத திருவோணம் நட்சத்திர நாட்கள் தெரிவிக்கப்படுகிறது.

அது ஏன் திருவோண நட்சத்திரத்தை தெரிவு செய்து நமக்கு உரைத்தார் என்ற கேள்வி எழுந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக எங்கு தேடியும் பதில் கிடைக்க வில்லை.

​சமீபத்தில், சித்தன் அருளுக்காக, "கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகளை" தேர்ந்தெடுக்கும் பொழுது, இந்த கேள்விக்கான பதில் கிடைத்தது.

"ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, யமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள்.  ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்ய வேண்டும். அச்சிரவணர்களை ஆராதித்தால், அந்த ஜீவன் யமபுரியை வந்து சேர்ந்த போது, அவன் செய்த பாபங்களையெல்லாம் எடுத்து யமனுக்குச் சொல்லாமல், அவன் செய்த புண்ணியங்களை சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள். ஆகையால், பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வருவது மிகவும் நன்மையை மறுமைக்குத் தரவல்லது" என்று திருமால் கூறியருளினார்.​

நான்முகன் ஒரு தர்ப்பைப்  புல்லை எடுத்தெறிந்து நீண்ட கண்களையுடையவர்களும் மிக்க மேனியழகுயுடையவர்களும், மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து, யமதர்மனைப் பார்த்து "தர்மனே!உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல் புரிவதையும் அவர்களுடனேயே இருப்பவர்களைப் போல, இப்பன்னிருவரும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதையெல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள்.  இவர்களைக் கொண்டு ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, சிஷையும் ரக்ஷையும் செய்வாயாக!". என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தார்.  காலனும் பிரமனை வணங்கி விடைபெற்று அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தையடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும் பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத்  தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயினன்.  

இந்த 12 ச்ராவணர்கள் ஒன்று சேர்ந்து "சிரவண நட்சத்திரமாக" இருப்பதால், அகத்தியப் பெருமான் நம்மை திருவோண நட்சத்திரத்தன்று பிரார்த்தனை செய்து ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வழி காட்டினார். "சிரவணம்" என்கிற வடமொழி சொல், தமிழில் "திருவோணம்" என்று கூறப்படுகிறது.

எப்படிப்பட்ட மிகச்சிறந்த வழி இது என் உணர்ந்தார்கள், குருநாதர் கூறுவது போல் செய்து, புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்! 

சித்தன் அருள் - 1085 - அன்புடன் அகத்தியர் - சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயம், காவனூர்!


6/02/2022 அருள்மிகு ஸ்ரீ சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயத்தில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 2 

நல் விதமாகவே அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் உண்டு என்பேன்

ஆனாலும் அப்பனே இதைத்தான் தெரிவித்துக் கொள்கின்றேன் அப்பனே அப்பனே கஷ்டங்கள் எவ்வாறு என்பதையும் கூட வரும் அதனை எல்லாம் தாண்டி வந்தால் தான் இறைவனையே பார்க்க முடியும் என்பேன் ஆனாலும் கஷ்டங்கள் வந்துவிட்டால் மனிதன் நினைத்துக் கொள்கிறான் ஐயோ கஷ்டம் கஷ்டம் என்பதை கூட இறைவனை நினைத்தாலே கஷ்டம்தான் என்று கூட...

ஆனால் இறைவன் நினைப்பான் மனிதன் முட்டாள் என்பேன்.

முட்டாளே!!!

யான் உன் அருகிலேயே இருக்கின்றேன் அது கூடதெரியாதா?? என்று சொல்லி பலவழிகளிலும் இருப்பான் .

ஆனாலும் மனிதன் எண்ணமோ கஷ்டங்கள் கஷ்டங்களே என்று எண்ணிக் கொண்டு இருப்பான். மனிதன் இதனால் தான் முட்டாள் என்பேன் மனிதனை கூட.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இதை பல மனிதர்களுக்கு பல மனிதர்களுக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே.

அப்பனே இன்பத்திலே இருந்தாலும் கூட அப்பனே மனிதனுக்கு வாழத் தெரியாமல் போய்விடும் அப்பனே.

இறைவன் கூட பின் காட்சியளிக்க மாட்டான் என்பேன். 

ஆனால் துன்பத்தில் இருந்தால்தான் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை புரிந்து அப்பனே எவை என்று கூற துன்பம் துன்பம் பட்டு பட்டு இறைவனை தேடி தேடி அலைகின்றான் அப்பனே.

அப்பொழுதுதான் அவந்தனக்கு உண்மைப் பொருள் என்னவென்று தெரிகின்றது.


அதனால் துன்பம் வருவது அப்பனே எங்களுக்கு மிக்க சந்தோஷமே என்பேன்.

அப்பனே உண்மைப் பொருளைத் தேடி விட்டால் அப்பனே மனிதனுக்கு பிறவிகளே இல்லையாம்.

ஏனப்பா மனிதர்களே பிறவிகள் எடுத்து எடுத்து துன்பத்தில் மிதந்து மிதந்து மீண்டும் மீண்டும் வருந்தி வருந்தி வருகின்றீர்கள் அப்பனே இவையெல்லாம் பிறப்புக்கள் இல்லை அப்பனே.

அப்பனே இறைவனைச் சரணடைந்தால் அப்பனே நற்பிறவி கிட்டி எதனையும் என்றும் சொன்னவாறு அனைத்தும் நிறைவேறும் அப்பனே.

இவ்வுலகத்தில் அப்பனே ஈசனை விட உயர்ந்த சக்திகள் இல்லை என்று கூட பல சித்தர்களும் அப்பனே உரைத்தும் விட்டார்கள் என்பேன். அதனால் அப்பனே ஈசன் ஒருவனே அப்பனே எவை என்று கூற சக்தி மிகுந்தவன். அவனால் முடியாதது இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை.

ஆனால் மனிதனோ அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் அப்பனே இவையெல்லாம் பொய் பித்தலாட்டம் அப்பனே நம்பி விடாதீர்கள் எளிதில் கூட.

ஏனென்றால் கலியுகத்தில் மனிதன் இப்படித்தான் காசுக்காக செய்வான் என்பேன்.

கோடிகோடி இன்னும் திருடர்கள் வருவார்களப்பா.

அப்பனே அதனால்தான் அப்பனே எவை என்று கூற எதனையும் என்று கூற அப்பனே உன் மனது நன்றாக இருந்தால் நீ எதையுமே செய்ய வேண்டாம் என்பேன்.

இறைவனே உன் மனதில் குடி கொள்வான் என்பேன்.

அதனால் அப்பனே மந்திரம் ஜெபிக்க தேவையில்லை இறைவனிடம் சென்று வணங்கக்கூடியது இல்லை அப்பனே பல யோகாசனங்கள் செய்வதும் இல்லை அப்பனே பல வாசிகளும் தேவை இல்லை என்பேன் அப்பனே.

ஆனால் இவையன்றி கூற அனைத்தும் எதற்காக என்றால் அப்பனே மனதை அடக்குவதற்கே!!! என்பேன்.

அதனால் மனது சுத்தமாக இருந்தால் இறைவன் அங்கு குடி கொள்வான் என்பேன்.

அப்பனே அதனால் தான் அனைத்திற்கும் காரணம் மனதே!! என்பேன்.

அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அப்பனே  இவ் தரித்திர உலகத்தில் அப்பனே ஈசன் அருளை பெற்றவர்கள் நீங்கள் புண்ணியவான்களே என்பேன் அப்பனே.

இவை அனைத்திற்கும் அப்பனே அனைத்து மனிதர்களுக்கும் சொல்கின்றேன் அப்பனே.

ஈசனை அடைவது அவ்வளவு சுலபமில்லை அப்பனே.

அப்பனே ஈசனை அடைந்தாலும் இவந்தன் அப்பனே எப்படி காண்பான் இவந்தனுக்கு கஷ்டங்கள் கொடுப்பேன் பின் இவந்தனும் அப்பனே பின் நல் முறையாக நம்தனை பிடித்து கொள்கின்றானா?? என்று கூட அப்பனே கஷ்டங்கள் மென்மேலும் கொடுப்பான் என்பேன்.

ஆனாலும் பார்வதிதேவி எவ்வாறு என்பதையும் கூட ஈசனே!!! ஈசனே!!! இவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டம் வைத்தால் எப்படி உன்னை ஏற்பார்கள்??? என்று கூட அடிக்கடி எவ்வாறு என்பதையும் கூட ஈசனிடத்திலே பார்வதிதேவியும் கூறுவாள்.

ஆனாலும் சோதனைகள் இல்லாமல் என்னை வந்தடைந்து விட்டால் அதற்கு மதிப்பு கிடையாது. அதனால் சோதனைகள் கடந்து கடந்து வந்தால் அவர்களை யானே நேரில் நல் விதமாக தரிசித்து அவர்களுக்கு பல ஆசிகள் கொடுத்து என்பால் அழைத்து விடுவேன்.

அதனால் தான் சொல்கின்றேன் என்று கூட ஈசனே பின் சொல்லி விடுவான் பார்வதி தேவியிடம்.

அதனால்தான் அப்பனே ஈசனை நெருங்க முடியாது என்பேன்.

நெருங்கி விட்டாலும் துன்பத்தில் மிதப்பீர்கள் என்பேன்.

அத் துன்பத்திற்கு பன்மடங்கு ஈசன் அனைத்தும் கொடுப்பான் என்பேன்.

அதனால் எவரும் கவலைப்பட தேவை இல்லை என்பேன். எதனையும் என்று கூற அப்பனே பிறப்பு அப்பனே எவ்வாறு என்பது தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே.

வாழ்ந்து வாழ்ந்து அப்பனே கடைசியில் தான் தெரிகின்றது இதெல்லாம் இவை இவை எல்லாம் ஒரு வாழ்க்கையா என்று கூட..

அப்பொழுதுதான் அப்பனே இவ்வாறு இறைவனை கூட நாம் நம்முடைய செயல்கள் தொட விட வில்லையே என்று வருத்தம் அடைகிறான். அப்பனே.

அப்பனே இறுதியில் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் அப்பனே... இவையன்றி கூற இறைவன் தந்த இப் பிறவியினை நல்விதமாகவே வாழவேண்டும் அப்பனே 

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதி விரைவிலே!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

Saturday, 12 February 2022

சித்தன் அருள் - 1084 - அன்புடன் அகத்தியர் - சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்!


6/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கும் உலகத்திற்கும் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா.இராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் அஞ்சல் 632507.

ஆதி சிவனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்.

அப்பனே பின் நன்மைகள் உண்டாகும் என்பேன்.

அப்பனே யான் சொன்னேன் தைத்திங்களில் இங்கு வருவேன் என்று. ஆனாலும் தை பிறந்த உடனே அப்பனே யான் வந்துவிட்டேன் அப்பனே நல்விதமாக அப்பனே அனைத்தும் யார் யார் எதனை மூலம் உருவாக்க வேண்டுமோ அவையெல்லாம் யானே உருவாக்கி தருகின்றேன் அப்பனே. கவலைகள் இல்லை வந்துவிட்டேன் அப்பனே.

நல் விதமாக மாற்றங்கள் உண்டு என்பேன். ஆனாலும் அப்பனே ஈசன் கண்ணை எவ்வாறு?? மனிதனால் கட்ட முடியும் ??என்பேன் இவையெல்லாம் தவறு என்பேன். அப்பனே.(ஆலய திருப்பணி குழுவினர் பணிகளை மேற்கொள்ள ஈசனின்  லிங்கத்தை துணிகளால் கட்டி வைத்து மூடி விட்டு பணிகளை செய்து வந்துள்ளார்கள் அது குறித்து குருநாதர் இப்படியெல்லாம் யாரும் எந்த ஆலயத்திலும் செய்யகூடாது என்று உரைத்தார்) 

அப்பனே உங்கள் கண்களை கட்டினால் அப்பனே உங்களுக்கு கோபம் வருமா? வராதா? என்று கூட!! நீங்களே சிறிது சிந்தித்துக் கொள்ளுங்கள்!!! அப்பனே .

இவையெல்லாம் மனிதனின் பேச்சுக்கள் தரித்திர பேச்சுக்கள் என்பேன் அப்பனே .

அப்பனே இவைபோன்ற தவறுகள் வரும் நாட்களில்  யாரும் பின் செய்யக் கூடாது என்பேன் அப்பனே எவை என்று கூற.

ஆனாலும் சித்தர்களும் நல் விதமாகவே வந்து வந்து சென்றுள்ளார்கள் என்பேன் அப்பனே.

யானும் இங்கு தங்கி விட்டேன் அப்பனே.

இதன் நிச்சயமாக எவ்வாறு என்பதைக்கூட காலமும் வந்துவிட்டது என்பேன் இவையன்றி கூற போதாதற்கு பின் புசுண்டமுனியும் (காக புஜண்டர்) அருளும் பரிபூரணமாக இருக்க புசுண்ட முனியும் இங்கே தங்கி நல்விதமாகவே அனைத்தும் செய்விப்பான். செய்விப்பவனும் நல் விதமாகவே கந்தனும் நல் விதமாகவே இங்கே வந்து வணங்கிட்டு சென்றுள்ளான்.ஓர் முறை. இவையன்றி கூற ஆனாலும் இங்கே எதனை என்றும் அறியாமலும் கூட இன்னும் சில பின் இறைவனுடைய சிலைகள் எவை என்று கூற இங்கு புதைந்துள்ளது என்பேன்.

ஆனாலும் இதற்கும் காரணம் ஈசனே இவையன்றி கூற எதனையும் என்று கூற எப்பொழுது நிரூபிக்கும் எதனை என்ற அளவிற்கும் கூட முடியாத அளவிற்கு கூட இவந்தன் நிச்சயமாய் பின் நல் விதமாகவே தன்னை தான் உயர்த்திக் கொள்வான் என்பேன் அதனால் நீங்கள் கருவியாக செயல்படுங்கள் இதைத்தான் பல வாக்குகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

மனிதர்கள் நினைத்தால் ஈசனை நிச்சயமாய் எவ்வாறு என்பதையும் கூட அமைக்க முடியாது திருத்தலத்தை.

ஈசனே நினைக்க வேண்டும் என்பேன்.

அதனால்தான் யான் சொன்னேன் சிறிது காலம் பொறுத்திருக்க!! என்று. அதனால் ஈசன் எப்பொழுது நினைக்கின்றானோ அப்பொழுது தான் அமையும் என்பேன்.

ஆனாலும் சொல்லி விட்டேன் தைத்திங்களில் யான் வருகின்றேன் என்று கூட.

ஆனாலும் எவை என்று கூட பின் ஈசனவனும் நினைத்து விட்டான். எவை என்று கூற என்னையும் அழைத்து விட்டான் என்பேன். தைத்திங்களில் முதல் நாளிலே யான் வந்துவிட்டேன் இங்கு.

அப்பனே எவை என்று கூற சொல்லுகின்றேன் அப்பனே இவையன்றி கூற பின் எதனையும் என்று அறியாத அளவிற்கு கூட அனுதினமும் அப்பனே பூஜைகள் அப்பனே செய்து நல் விதமாக பின் எதனையும் என்றுகூட சில சில பிரசாதத்தையும் நல்விதமாக மனிதர்களுக்கு அப்பனே பின் உங்களால் முடிந்த அளவு கொடுக்க வேண்டும் என்பேன்.

இவ்வாறு அப்பனே கொடுத்துக் கொண்டே வந்தால் நல் ஆரோக்கியங்கள் எவை என்று கூறாத அளவிற்கும் கூட ஈசன் மகிழ்ந்து பின் அதி விரைவிலேயே ஏற்படுத்திக் கொள்வான் என்பது உண்மை.

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் வரும் சில நாட்களிலே புசுண்ட முனியும் வருவான் இங்கு.

எவை என்று கூற கொங்கணனும்(கொங்கணர்)வருவான். போகனும் (போகர்) வருவான். இவையன்றி கூற இன்னும் சில சித்தர்கள் ஞானியர்கள். வருவார்கள் அப்பனே. 

அப்பனே எவை என்று கூற ஈசனின் திருவிளையாடல்கள் எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கும் கூட அன்று அன்று கூட இவையன்றி கூற இரவு நேரங்களில் அப்பனே மாசி மாதத்தில் வரும் இரவுதனில்(சிவராத்திரி) அப்பனே இவை என்று கூற புசுண்டமுனியும் இங்கு தங்கி வழிபட்டு சென்றுள்ளான் என்பேன் அப்பனே.

பின் இதனையும் என்று கூட பின் ஆனாலும் ஆலயம் சிறிது காலம் அழிந்துவிட்டது என்பேன் ஆனாலும் விடவில்லை இங்கு தங்கி விட்டு தான் சென்று இருக்கின்றான்.

ஆனாலும் இவையன்றி கூற கலியுகத்தில் பின் எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட எழுந்து நிற்கின்றது அப்பனே ஈசனே எழுந்து நின்றான் என்பேன் .அதனால் மகிழ்ச்சி என்பேன் புசுண்ட முனிக்கும்.

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயம் யாரால் உருவாக்கப்பட்டது யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?? 

அப்பனே இவை என்று கூற எதனையும் என்று கூற நினைப்பதற்கு அளவிற்கு கூட அப்பனே வருடங்கள் எதை என்று கூற அப்பனே இதனையும் என்று கூற பின் சோழர்கள் வந்தார்கள் அவற்றின் காலமே  என்பேன்.(சோழர்கள் கால கோயில்.) 

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் என்னவென்று கூறுங்கள்!!! 

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் அப்பனே சொல்கின்றேன் அப்பனே.

ஈசனின் பெயர்

இவையன்றி கூற இப்பொழுது எதை வைத்துள்ளீர்களா அப்பனே அதையே பின்பற்றி கொள்ளலாம் என்பேன். (சிவகாமேஸ்வரர் சிவகாமேஸ்வரி தாயார் ). 

அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு இட்ட பெயர் அப்பனே இவந்தனுக்கு அனைத்துப் பெயர்களும் உண்டு என்பேன் இவந்தனக்கு . அதனால் அப்பனே இப் பெயர் வைப்பதா?? அப் பெயர் வைப்பதா?? என்பதெல்லாம் மனிதனின் கணக்கு என்பேன் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற பல பல வழிகளிலும் அப்பனே ஓர் எதை என்று கூற இத்தலத்திற்கு வருபவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று கொண்டிருந்தது என்பேன் அப்பனே.

இவையன்றி கூற ஆனாலும் இங்கு வந்து வணங்கிச் செல்பவர்களுக்கு அப்பனே பல வெற்றிகளும் அப்பனே அளித்துள்ளான் ஈசன். 

அதனால் எவை என்று கூற இதை அறிந்த அப்பனே "ஆங்கிலேயன்"(பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி) சொல்கின்றார்களே இப்பொழுதும் கூட அவந்தனை. இவையன்றி கூட இவந்தன் எதனை என்று கூட பின் இங்கே வழிபாட்டுமுறைகள் பின் சாதாரணமாக இல்லை அனைத்தும் வந்து கூடி பின் வழிபட்டு வழிபாடுகள் பலவிதங்களிலும் நடந்திருக்கின்றது.

இதனை எவ்வாறு அறிவது என்று கூட தெரியாமல் ஆனாலும் அவந்தன் தளபதியாக இருந்து கண்டுபிடித்து இதனை இதனை இங்கே சென்றால் தான் மக்கள் நன்மை பெறுகிறார்கள் என்று கூட அவந்தன் யூகித்து விட்டு பின் இவையன்றி கூற மக்களை அடித்துத் துரத்தினான். நெருங்காத முடியாத அளவிற்கு கூட இங்கு.

இவைதன் அறியாமல் இதனையுமென்று கூற ஆனாலும் பின் காவலாளிகள் யாரும் இங்கு வரக்கூடாது என்று கூட தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பல ஆண்டுகளாக இங்கே காவலாளிகள் தங்கி விட்டனர் .யாரும் வழிபட வில்லை என்பேன். 

ஆனாலும் இதை எதனை என்றும் கூற இதனையும் பின்பற்றும் அளவிற்கு கூட இதனை அறிந்து அறிந்து பின் ஈசனும் தன்னை மறைத்துக் கொண்டான். சில நாட்களில் .

ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் நல் விதமாக ஈசன் மறக்கவில்லை அப்பனே.

இதையன்றி கூற ஆனாலும் மனிதர்களுக்கு செய்து கொண்டுதான் இருந்தான் என்பேன். காணக்கிடைக்காத அற்புதங்களை கூட.

ஆனாலும் இவையன்றி கூற சரி என்று கூற பின் ஈசனே மறந்துவிட்டான்.

ஆனாலும் புசுண்ட முனியும் மறக்கவில்லை. ஈசனிடத்தில் சென்று, ஈசா!! இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது??? உன்னுடையது எல்லாம் எதனையும் என்று கூற அனைத்தும் அறிந்தவன் நீயே!!! இவையெல்லாம் பின் மனிதனுக்கு சில எதனை என்றுகூட நிரூபிக்கும் அளவிற்கு கூட கஷ்டங்கள் என்றுகூட பல சிந்தனைகள் கூட புசுண்ட முனியின் பின் இவை என்று கூற பின் பார்வதி தேவியிடம் ஈசனிடத்திலும் உரையாடிக் கொண்டிருக்கையில் ஆனாலும் ,பொறுத்திரு 
புசுண்டனே!!! 

இவையன்றி கூற ஒரு காலம் வரும் அப்பொழுது யானே இதனை ஏற்படுத்திக் கொள்வேன் என்று கூட .

ஆனாலும் நன்று அதனையும் ஏற்படுத்திக் கொண்டான். இப்பொழுது மக்களை இனிமேலும் காப்பான் என்பேன்.

அதனால்தான் சொன்னேன் இவையெல்லாம் செய்யக் கூடாது என்பேன் மூடத்தனம் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே இன்னும் பல ஆலயங்களை இவ்வாறு தான் அழித்தார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் ,அவர்கள் ஓங்கி நின்றார்களா!!! என்ன??????

பேரும், புகழோடு நின்றார்களா!! என்ன ????

அழிந்தும் விட்டார்கள் அப்பனே.

ஆனாலும் கலியுகத்தில் இவைதன் நடைபெற்றிருக்கும் பொழுது சிறிது விட்டு விடுவான் ஈசன் என்பேன்.

ஆனால் நிச்சயம் அனைவரையும் அழித்து விடுவான் இருக்கும் இடம் தெரியாத வரை.

அப்பனே அவை அவை என்று கூற இதனையும் என்று கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.

அப்பனே அணையாத தீபத்தை இங்கு நிச்சயமாய் ஏற்றுதல் வேண்டும் அப்பனே. சில குறிப்பிட்ட தினங்களுக்கு.

அப்பனே இவையன்றி கூற? சர்ப்பங்களும் அப்பனே மிகுந்துள்ளது அடியில் கூட.

அப்பனே இவையன்றி கூற தேவ கன்னிகைகள் இவர்கள் தன் என்பேன். எதனையும் என்று கூற.

ஆனாலும் இதையன்றி கூற பல சிலைகளும் மறைத்து வைத்து அவர்கள்தன் பாதுகாப்பிலே இருக்கின்றது என்பேன். 

ஆலய திருப்பணி குழுவினர்

 கேள்வி 

குருவே!!  தற்சமயம் ஆலய திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது அந்த சிலைகள் கிடைக்குமா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த பிரியப்படுகிறோம்!!! 

அப்பனே எவை என்று கூற ஆனாலும் சொல்லி விடுகின்றேன் எந்தனுக்கு தெரியும் என்பேன்.

ஆனால் ஈசனே இதற்கும் சாட்சி என்பேன்.

ஈசன் நினைத்தால் உடனே வர வைக்க முடியும் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அப்பனே இவ்வாறெல்லாம் செய்தால் எப்படி ஈசன் சந்தோஷப்படுவான் ??என்பேன். 

முதலில் இதை அகற்றி விடுங்கள் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் இங்கு அமர்ந்திருக்கும் அப்பனே அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன்.

அப்பனே யானும் இதை எவ்வாறு என்பதையும் கூட ஆகிப்போனது கூறவில்லை.

ஈசன் கனவிலே வந்து செப்புவான் என்பேன் அப்பனே உங்களுக்கே தெரிந்துவிடும் என்பேன்.

அப்பொழுது நீங்களே செய்து கொள்ளுங்கள் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு. இதனையும் அறிந்து கூட சொல்லிவிட்டேன் வெற்றிகள் பல உண்டு என்பேன். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கும் வருங்காலத்தில் அப்பனே வெற்றிகளை சூடி பல துன்ப நிலைகளிலிருந்தும் அப்பனே அகற்றி நல்வழிப்படுத்துவான் ஈசன் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்திற்கு படியளந்தவன் ஈசன் என்பேன்.

இவையன்றி கூற இன்னும் பல திருத்தலங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றது என்பேன். பலப்பல யுகங்களிலும் ஆனாலும் அவ் நல் ஈசனே எவ்வாறு என்பதையும் கூட எழுந்து நிற்பான் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே இக்கலியுகத்திலும் மக்களை ஈசனே காப்பான் என்பேன்.

எங்கள் போன்ற நல் விதமாக சித்தர்களும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே.

இவையன்றி கூற மக்களை எவ்வாறு காப்பது எவ்வாறு பேணி காப்பது என்பதை கூட .

ஆனாலும் அப்பனே பல திருத்தலங்களை அப்பனே அடியோடு அழித்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 

அவையெல்லாம் யாங்கள் மேலே பின் நல்விதமாக எழுப்பச் செய்வோம் அப்பனே.

புது புது விதமான திருத்தலங்களும் அப்பனே உருவாக்குகிறார்கள்!!! என்ன லாபம்??? அப்பனே!

அவற்றால் ஆனால் மனிதனுக்கு சம்பாதிப்பதற்கே உருவாக்குகிறார்கள் என்பது கூட யான் அறிந்து கொண்டேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே ஆனாலும் போராட்டங்கள் மிகுந்து மிகுந்து அடியில் பலகோடி திருத்தலங்கள் ஒளிந்து நிற்கின்றது. அவை எழுப்பினால் தான் அப்பனே பழைய நிலைக்கு வரும் என்பேன் அப்பனே.

இவற்றைத்தான்,  யாங்கள் சித்தர்கள் செய்யப் போகின்றோம். இனிமேலும் கூட.

அப்பனே இவையன்றி கூற முருகன் கூட அப்பனே இதனை என்று கூற அவன் தகப்பன் ஈசன் பாசத்தால் இங்கு வந்து கொண்டுதான் சென்று கொண்டிருக்கின்றான் என்பேன். திருத்தணிகை மலையில் இருந்து கூட.

திருபணிக்குழுவினர் கேள்வி

குருவே திருத்தணி முருகனுக்கு சொந்தமான இடமும் இங்கே  கோயில் நிலங்கள் இங்கே உள்ளது என்று என்று கேள்வி பட்டிருக்கின்றோம். அது உண்மையா?? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே உண்டு உண்டு என்பேன். அதனால் அப்பனே முருகனும் நல் ஆசிகளுடன் அதி விரைவிலே ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே.

இங்கு நல் விதமாக அப்பனே நீரோட்டமும் நல்விதமாகவே அமையும் என்பேன் .குளத்தையும் கூட அமைக்க வேண்டும் என்பேன்.

குருவே!! திருப்பணிகுழுவில் இடம் பெற்றிருக்கும் அடியவர்களுக்கும் இவ்வாலயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா??? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே நீங்கள் கேட்காவிடிலும் யான் நிச்சயமாய் சொல்லியிருப்பேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே நீங்கள் எவ்வகையாக வந்தவர்கள் என்று கூட அப்பனே உங்களுக்குப் பின் எவை என்று ஒரு காலத்தில் பல கஷ்டங்கள் அப்பனே. வாழ்க்கையிலும் சரி அப்பனே பல பிரச்சனைகள் இருந்து விட்டது. ஆனாலும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பொழுதே. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே எவை என்று கூற இங்கு வந்து வந்து அனைத்தும் பெற்றுள்ளீர்கள் நீங்கள் என்பேன்.

அதனால் என்று கூற பல வெற்றிகளையும் அப்பனே  ஆளும் ஆளும் எவை என்று கூற பின் நல் விதமாக கிராமிய தலைவராகவும் இருந்துள்ளீர்கள் என்பேன்.

இதனால் பின் இதை இங்கு காவலர்கள் எவை என்று கூற அனைவரையும் துரத்திவிட்டனர் அதில் நீங்களும் அப்பனே.

இவையன்றி கூற நீங்களும் ஈசனே!!! ஈசனே!! என்று கூட அழுது சென்று உள்ளீர்கள் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற  அப்பொழுதுகூட எவையென்று கூற அண்ணாமலைக்கு சென்று நீங்கள் அனைவரும் முறையிட்டுள்ளீர்கள் என்பேன். எதனையுமென்று கூற. 

அப்பனே இவையெல்லாம் இப்பொழுது எதை என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட அழித்து விட்டார்களே எதனை? எங்கு செல்வது?? நாங்களெல்லாம்??

வெற்றிகளை நீதான் எங்களுக்கு பல பல வழிகளிலும் தந்தாய்.

ஆனாலும் இப்பொழுது எங்களால் உன்னையும் எங்களால் மறக்க முடியவில்லை எதை என்று கூற... அதனால் உன்னிடத்திலேயே நாங்கள் அனைவரும் சேர்ந்து பின் இதனையும் என்று அறியாமல் இங்கேயே இறந்து விடுகின்றோம் என்று கூட ... சிம்ம தீர்த்தத்தில் கூட பின் குதித்துள்ளீர்கள் நீங்கள் எதுவும் தேவையில்லை ஈசா ஈசா என்றுகூட..


அப்பனே அத் தீர்த்தத்தில் ஈசன் நல்விதமாக எழுந்து மகன்களே!!! உங்களுக்கும் கூட என்னுடைய ஆசிகள் பல சித்தர்களுடைய ஆசிகளோடு மீண்டும் கலியுகத்தில் பிறப்பெடுத்து எந்தனுக்கே சேவை செய்வீர்கள் என்று கூட உத்தரவிட்டு விட்டான். 

இதனால் அப்பனே புரிகிறதா இப்பொழுது கூட.

அப்பனே இன்றளவும் கூட நல் விதமாக இதைச் செய்திட்டு பின் கடை நாளில் ஈசன் தரிசனத்தையும் அண்ணா மலையிலேயே காணலாம் சிம்ம தீர்த்தத்திலே இப்பொழுது கூட.

அப்பனே இவையன்றி கூற ஆனால் அப்பனே ஒருமுறை நீங்கள் அண்ணாமலை சென்று அப்பனே நல் விதமாக அப்பனே தர்மத்தை ஏந்த வேண்டும் என்பேன்.

ஈசனே அப்பனே மனித ரூபத்தில் வந்து தானம் இடுவான் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் அப்பனே மேலோங்கும் என்பேன். அப்பனே குறைகள் இல்லை அப்பனே. உங்கள் அனைவருக்கும் மோட்ச பிறவி என்பேன் அப்பனே ஈசனே கொடுத்துவிடுவான் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற இனிமேலும் இத்தலம் நல் விதமாகவே அமையும் என்பேன் அப்பனே.

யானும் இங்கே தான் இருக்கின்றேன் கவலையை விடுங்கள்.

அப்பனே இவை எதனையுமென்றும் அப்பனே பல வழிகளிலும் பலப்பல பலப்பல திருத்தலங்கள் யான் தான் எழுப்ப வேண்டும் என்பது கூட மனிதனின் செயல்கள் ஆனால் மனிதனால் ஒன்றும் முடியாது அப்பனே.

ஈசனால் மட்டுமே முடியும் ஈசன் நினைத்தால்தான் உண்டு என்பேன்.

அதனால்தான் அப்பனே இவனருளாலே எதனையும் என்று கூற அனைத்தும் நடக்கும் என்பது விதியப்பா.

ஆனாலும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அப்பனே ஆனாலும் அதை உருவாக்குவோம் இதை உருவாக்குவோம் என்று கூட.

ஆனாலும் ஈசன் அருள் இல்லாமல் எதனையும் உருவாக்க முடியாது என்பதுதான் திண்ணம் அப்பனே. அதற்கும் காலங்கள் வந்தால்தான் உண்டு என்பேன் அப்பனே.

காலம் வந்துவிட்டது அப்பனே அனைத்தும் போகப் போக முடியும் என்பேன்.

திருப்பணிக் குழுவினரின் கேள்வி

குருவே இவ்வாலயத்திற்கு அம்மன் சன்னதி இல்லாமல் இருக்கின்றது நாங்கள் என்ன செய்வது??

அப்பனே இவையன்றி கூற அப்பனே நல் விதமாக யான் சொல்லிவிட்டு சென்றாலும் அப்பனே எவை என்று கூற அதனால் யான் இங்கே தான் இருக்கின்றேன் அப்பனே அதனால் ஞானியவர்கள் அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் வந்து பின் காப்பார்கள் என்பேன் அதைப்பற்றி கவலையை விடுங்கள் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஈசனே அப்பனே அடிக்கடி தன் சொப்பனத்தில் காட்டுவான் என்பேன் சில வித்தைகளை கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற அப்பனே கந்தனும் எவை என்று கூற இதனையும் என்று அறியாமல் நிச்சயமாய் அப்பனே பின் மாசி மாதத்தில் வரும் அப்பனே பின் எவை என்று கூற அன்று பின் தினத்தில் அப்பனே நீங்கள் கூட பல விசேஷங்களை செய்வீர்கள் இங்கே அன்றைய தினத்தில்(சிவராத்திரி) நிச்சயம் முருகன் இங்கு வருவான் என்பேன் அப்பனே.

அப்பனே நல் முறையாக நல் முறையாக கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாகவே சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இவற்றிலிருந்து நிச்சயமாய் மேலோங்கும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே அது விரைவிலே யாங்கள் சித்தர்கள் சேர்ந்து இதை நிச்சயமாய் அப்பனே அமைத்து விடுவோம் அதனால் நீங்கள் வெறும் கருவி யாக இருங்கள் என்று யான் சொல்லி விட்டேன் அப்பனே.

அப்பனே!! இறைவனே !!யார் ?யாரை? எப்பொழுது? தேர்ந்தெடுக்க வேண்டும்?? என்பதைக் கூட தெரிந்ததே என்பேன்.

ஆனாலும் அப்பனே சில மனிதர்கள் அப்பனே எவை என்று கூற பல திருத்தலங்களிலும் அப்பனே ஒற்றுமையாக செயல்படுவது இல்லை அதனால்தான் அப்பன் ஈசன் கோபித்துக்கொண்டு எவை என்று கூற அவர்களுக்கு தண்டனையும் பல திருத்தலங்களை உருவாக்குபவர்களையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான் அதனால் அப்பனே  எவ்வித சுயநலமின்றி அப்பனே ஈசா நீயே என்று நீயே கதி என்று அனைத்தும் ஒன்றிணைந்தால் ஈசன் அனைத்தும் நல்குவான் என்பேன்.

அவரவர் இல்லத்திலும் சுப நிகழ்ச்சிகள் நல் விதமாக நடந்தேறும் என்பேன். கஷ்டங்கள் நீங்கும் என்பேன். பணி இல்லாதவர்களுக்கு பணியும் கிடைக்கும் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு உண்டு என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை திறமைப்பட அப்பனே நல்விதமாக உண்ணாமுலை இதில் பின் உண்ணாமுலை தேவியும் அப்பனே நிச்சயமாய் பின் பங்குனி உத்திரத்தில் இங்கு நிச்சயமாய் வருவாள் என்பேன்.

அதனால்தான் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?? என்று கூட ..

அது அனைவரும் உணர்ந்ததே என்பேன்.

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே மேன்மைகள் உண்டு என்பேன்.

இத்தலம் அப்பனே இன்னும் மேன்மை பெறும் என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை எவை எவை என்று கூறிவிட்டேன் .அப்பனே இன்னும் பலபல ரூபத்திலும் அப்பனே நிச்சயமாய் அப்பனே இவையன்றி கூற பின் ஈசனே வந்து வந்து அப்பனே சென்று விடுவான் அப்பனே.

குறைகள் இல்லை மென்மேலும் உயர்வுகள் உண்டு அப்பனே கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாக யாங்களே உருவாக்குவோம் என்போம். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பேன்.

அப்பனே, நல்விதமாக இதை உருவாக்கி மீண்டும் இங்கு வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதி விரைவிலே.

திருப்பணி குழுவினரின் கேள்வி.

குருவே பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ உண்ணாமுலை தேவி இங்கு வருவார் என்று கூறினீர்கள் அன்றைய தினத்தில் ஆலயத்தில் தேவிக்கு பூச்சொரிதல் விழா நடத்தலாமா???

அப்பனே இவையன்றி கூற தாராளமாகச் செய்யலாம் அப்பனே.

குருவே !!அம்மாள் சன்னதிக்காக பூமி பூஜை செய்வதற்காக காத்திருக்கிறோம் !!உத்தரவு கிடைக்குமா??

அப்பனே இதனையும் என்று அறியாமல் அப்பனே அதனால்தான் முதலிலேயே யான் சொல்லிவிட்டேன். யான் இருக்கும் பொழுது உங்கள் மனதிலே நுழைந்து சொல்லிவிடுவேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்திற்கு சொந்தமான நிலபுலன்கள் சிறிதளவே இருக்கின்றது இவ்வளவுதான் இருக்கின்றதா?? அல்லது அதிகமாக இருக்கின்றதா?? ஏனென்றால் கோயிலை விரிவுபடுத்த நாங்கள் எண்ணி இருக்கின்றோம்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஈசன் இடமே இவையெல்லாம். அப்பனே ஆனாலும் மனிதன் வரவர ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனாலும் அதை யாங்களே நிச்சயமாய் சரி செய்வோம் என்பேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்தை மிகப்பெரிதாக ராஜகோபுரம் பிரகாரங்கள் தனித்தனி சன்னதிகள் என்று அமைக்க நாங்கள் விருப்பப் படுகின்றோம் ஒவ்வொன்றாக விதமாக நடைபெற வேண்டும்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஒவ்வொன்றாக யான் சொல்லிக்கொண்டே வருவேன் அப்பனே இதனால்தான் இதனையும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பனே அனைத்தும் ஈடேறும் என்பேன்.

யான் இங்கேயே இருக்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள்.

குருவே தங்களுக்கும் இந்த ஆலயத்தில் தனி சன்னதி அமைத்து பூஜிக்க விரும்புகின்றோம்

அப்பனே எவை என்று கூற யான் எப்பொழுதும் கேட்டதில்லை அப்பனே எந்தனுக்கு பூஜைகள் செய் என்று கூட.

ஆனாலும் அன்பு செலுத்தினாலே போதுமானது அப்பனே.

எதற்காக யான் இப்புவியுலகிலத்தில் அப்பனே வந்தேனப்பா... மனிதர்களுக்கு புத்தி இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றார்களே அவர்களை நல்வழிப் படுத்தவே நாங்கள் வந்துவிட்டோம்.

அதனால் அப்பனே நீங்கள் நன்றாக செல்லுங்கள் அப்பனே அன்பை செலுத்தினால் போதுமானது அப்பனே மற்றவைகள் எல்லாம் யாங்கள் விரும்புவதே இல்லை அப்பனே.

குருவே காகபுஜண்டர் முனி இங்கு இருக்கின்றார் என்று கூறியிருந்தீர்கள் அவரை நாங்கள் எவ்விதம் வணங்குவது??

அப்பனே இவையன்றி கூற இவைதன் கேள்விகள் எவ்வாறு இருப்பதென்றால் அப்பனே எதை என்று கூற இதனையும் இப்பொழுது யான் உரைத்து விடுகின்றேனா என்பதற்கிணங்க இதற்கு பின் மாறுபாடாக புசுண்ட முனியே  நல் விதமாக அமைத்துக் கொள்வான் என்பேன் வரும் வரும் காலங்களில் அப்பனே அவனே மனதில் நுழைந்து இங்கு அமைத்து விடலாம் என்று கூட அப்பனே உங்களுக்கே தெரியும் என்பேன்.

மீண்டும் இங்கு வந்து பலமாக வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே.

ஆலயதிருப்பணிகள் சேவைகள் குறித்த விபரங்கள் 

DHAKSHINAMURTHY K R
ACCOUNT NO:3011083927
MICR CODE:600016003
IFSC CODE: CBIN0280878
PHONE NUMBER:9042305799

ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம். காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா. இராணிப்பேட்டை மாவட்டம். காவனூர் அஞ்சல் 632507.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ............ தொடரும்!

Thursday, 10 February 2022

சித்தன் அருள் - 1083 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


சூதமாமுனிவர்,  சௌனகாதி முனிவர்களை நோக்கி கூறலானார்.

"கேளிர் முனிவர்களே! வேத வடிவினனான  பெரிய திருவடி, பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, "பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவரும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ்வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிகிறார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன்" என்று வேண்டினான்.  அதற்கு திருமால், மகிழ்ந்து கூறலானார்.

"புள்ளரசே! கேட்பாயாக! ஊழிக்காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகாவிஷ்ணுவானவர், அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புனலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது அந்த மகா விஷ்ணுவின் உந்திக்கமலத்தில் நான்முகனாகிய பிரம்மா தோன்றி, ஸ்ரீ ஹரியைக்குறித்து, நெடுங்காலம் மாதவம் புரிந்து, வேதங்களையும் படைப்புத் தொழிலையும் அறிந்து யாவரையும் யாவற்றையும் படைத்தருளினார். அவ்வாறு படைத்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள்.  எல்லோரையும்விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து, சிம்மாசனத்தில் வீற்றிருந்து, ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராயத் தொடங்கினான். அவ்வாறு அறியத்  தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. பலகாலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை.  எனவே, யமதர்மராஜன்,மனம் வருந்தி, நான்முகனைக் கண்டுவணங்கி, " சதுர்முகனே ! மஹாதேவனே ! அடியேன் ஜீவர்களின் பாப புண்ணியங்களையுணர்ந்து அவர்களைத் தண்டிக்கவும் ரக்ஷிக்கவும் வேண்டும் என்று ஜைமினி நகரத்தில் இருந்து நீண்ட நாட்கள் ஆராய்ந்தேன் .  எவ்வளவு தான் முயன்றாலும் பூவுலகில் ஜீவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.  அவற்றை இன்னதின்னதென்று அறிந்தால் அல்லவோ பாவிகளைச் சிக்ஷிக்கவும் புண்ணியசாலிகளை இரட்க்ஷிக்கவும் முடியும்? ஆகையால் அவற்றை உணர்ந்து கொள்ளவும் அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

"அதைக் கேட்டதும் நான்முகன் ஒரு தர்ப்பைப்  புல்லை எடுத்தெறிந்து நீண்ட கண்களையுடையவர்களும் மிக்க மேனியழகுயுடையவர்களும், மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து, யமதர்மனைப் பார்த்து "தர்மனே!உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல் புரிவதையும் அவர்களுடனேயே இருப்பவர்களைப் போல, இப்பன்னிருவரும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதையெல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள்.  இவர்களைக் கொண்டு ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து, சிஷையும் ரக்ஷையும் செய்வாயாக!". என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தார்.  காலனும் பிரமனை வணங்கி விடைபெற்று அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தையடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும் பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத்  தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயினன்.  

"பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, அங்குஷ்டப் பரிமாணமேயுள்ள வாயு வடிவினான ஜீவனை யமகிங்கரர்கள் , யமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அறம் பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ்செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரியிக்குச் செல்வார்கள். பொன், பொருள் முதலியவற்றைப் பெரியோர்க்கும் சான்றோர்க்கும் கொடுத்தவர்கள் விமானங்களில் ஏறிச்செல்வார்கள். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே கொடுத்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வார்கள். மோட்சத்தில் இச்சை கொண்டு, வேதசாஸ்திர புராணங்களை அறிந்து, தெய்வபக்தி செய்பவர்கள் தேவவிமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். இந்த நான்கு வகையிலும் சம்பந்தப்படாத பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள்.  அவர்கள் செல்லும் வழியில் காடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த வழியிலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் முதலியவற்றின் இலைகள் கூரிய உடைவாள் போல அமைந்திருக்கும். மணல்கள் எல்லாம் வறுத்துக் கொட்டிய பறல்களால் நிறைந்திருக்கும். அந்த மார்கத்தில் நடந்து செல்லும் போது மிகவும் வருத்தம் உண்டாகும். பூமியில் வாழுங்காலத்தில், ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாக இருந்தால், அச்சிரவணர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல் புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள்.  சிரவணரைப் பூஜிப்பவர்களுக்குப் பாவம் செய்ய அவர்கள் மனமே இடம் தராது.  பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைத்து, அன்னம் செய்து, அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும். அத்தகைய ஜீவனுக்கு அச்சிரவணர்கள் யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

"கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்தப் புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள், பாபம் நீங்கிப் புனிதராவார்கள்" என்று கூறியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!