வணக்கம் அகத்தியர் அடியவர்களே
நம்முடைய சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1032 அகத்தியர் தரிசனம் பதிவில் குருவின் திருவருள் திருவிளையாடல் கண்டோம்.
மதுரையைச் சேர்ந்த அகத்தியர் அடியவர் ஒருவர் தன்னலம் பாராது யாரும் நெருங்கி சேவை செய்ய தயங்கும் தொழு நோயாளிகளை நன்கு பராமரித்து உணவு வழங்கி தேவையானவற்றை அனைத்தும் நண்பர்கள் உதவியுடன் ஒரு குழுவாக முன் நின்று நடத்தி வந்து கொண்டிருக்கிறார் அவருக்கு நம்முடைய கருணாமூர்த்தி அகத்திய பெருமான் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்து திருவிளையாடல் புரிந்து ஆசீர்வாதம் செய்து சென்றார்.
அந்த அகத்திய அடியவருக்கு பின் வாக்குகளாக வந்தது யான் தானப்பா நீ செய்து வரும் புண்ணிய செயல்களைக் கண்டு மகிழ்ந்தோம். உந்தனுக்கு எம் தரிசனத்தை தர விரும்பினோம் அதன்படியே வந்தோம் ஆசிர்வாதம் தந்தோம் அடுத்த முறை அன்னை லோபமுத்ரா தேவியோடு வந்து யாம் தரிசனம் தருவோம் என்று உரைத்து இருந்தார்.
அதன்படியே அன்னை லோபமுத்ரா தேவியுடன் கருணைக்கடல் அகத்தியப் பெருமான் வந்து திருவிளையாடல் புரிந்த நிகழ்வினை பார்ப்போம்.
அன்னை லோபமுத்ரா சமேத அகத்தியப் பெருமான் தரிசனம்.
அடியவர் ஒரு சிறு கடையை தன் சகோதரர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றார்.
கடையில் பெரும்பாலும் சகோதரர்கள் தான் மாறி மாறி இருப்பார்கள்.
ஒரு நாள் அந்த அகத்திய அடியவர் கடையில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு வயதான பெரியவர் தன் மகளுடன் இவரது கடைக்கு வந்திருக்கின்றார்.
ஐயா வணக்கமுங்க என்னுடைய பெயர் தாமோதரன் இவள் என்னுடைய மகள் பெயர் காயத்ரி எனக்கு இரண்டு மகள்கள். இவள் மூத்த மகள்.
என்னுடைய இளைய மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. நான் சமையல் பணி செய்யும் அந்தணன். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு சென்று சமையல் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தேன்.
தற்போது வயதான காரணத்தினால் வேலை எதுவும் இல்லை. வயதும் ஆகி விட்டதால் முன்பு போல என்னால் பணி செய்ய இயலவில்லை.
எனக்கு கண் பார்வையும் மங்கலாகி விட்டது, காதும் சரியாக கேட்காது.
என் மகளுக்கு திருமணம் கூடி விட்டதால் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் செலவிற்கு என்னிடம் பணம் இல்லை அதனால் எல்லோரிடமும் உதவி கேட்டு வந்தேன்.
நான் இதுபோன்று யாசகம் பெறுவது கூட மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாது.
அப்படித் தெரிந்து விட்டால் எனக்கு தலை குனிவு ஏற்படும். என்ன செய்வது ?பெண்ணை கரையேற்றி விட வேண்டுமே.
நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் தாலி செய்வதற்கு கூட தங்கம் இல்லை உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பெரியவர் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
உடன்வந்த மங்கையும் ஒன்றும் பேசாது தன் வயதான தந்தையை கையைப் பிடித்துக்கொண்டு ஆமோதிப்பது போல் தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.
அகத்தியர் அடியவரும் ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அவரது அந்த சிறு கடையை நம்பித்தான் அவருடைய குடும்பமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் குரு அகத்தியர் மீது அளவுகடந்த நம்பிக்கை.எமக்கு எல்லாமே என் குரு அகத்தியர் தான் என்று வாழ்ந்து வருபவர் அவர்.
தன்னுடைய சேவை செயலும் தான தர்மங்களும் நண்பர்கள் உதவியுடன் குழுவாக சேர்ந்து முன்னின்று வருடக்கணக்காக செய்து வந்து கொண்டே இருக்கின்றார்.
அந்தப் பெரியவர் உதவி கேட்ட பொழுது அவரிடம் பெரிதாக நிதி இல்லை. தன் கையிலிருந்த ரூபாய் 500 எடுத்து பெரியவரிடம் கொடுத்து விட்டு பெரியவரே தற்போது என்னிடம் இவ்வளவு தான் உள்ளது உங்களுடைய தொலைபேசி எண்ணை தாருங்கள்.
எனக்கு மருத்துவ உதவிகள் என்றாலும் கல்வி உதவிகள் என்றாலும் ஏழை பெண்கள் திருமணம் என்றாலும் ஓடோடி வந்து உதவிடும் நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்களுடன் கலந்து பேசி உங்களுக்கு தேவையானவற்றை முடிந்தவரை செய்து தருகிறோம் உங்களை தொடர்பு கொள்ள உங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த பெரியவரும் என்னிடம் தொலைபேசி இல்லையப்பா எனக்கு காது கேட்காது நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்று பதில் உரைத்து விட்டு அடுத்த கடைக்குச் செல்வது போல் மகளை அழைத்துச் சென்று விட்டார்.
அகத்தியர் அடியவரும் மனம் தாங்காது கடையில் இருந்து இறங்கி அவர்கள் சென்ற வழியிலேயே சென்று இரண்டு மூன்று கடைகள் தள்ளி நின்று கொண்டிருந்த அவர்களிடம் சென்று பெரியவரே தொலைபேசி எண் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் உங்களுடைய முகவரியையாவது தாருங்கள். அடியேன் முடிந்தவரையில் நிதியுதவி ஏற்பாடு செய்து தருகிறேன் என்று முகவரியை கேட்டார்.
என்னுடைய பெயர் தாமோதரன் கதவு எண் 3 ஏழாவது தெரு. சோழவந்தான் கிராமம் திருமங்கலம் என்று முகவரி தந்து விட்டு அங்கும் இங்கும் செல்வதாக போக்கு காட்டி விரைவில் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
அகத்தியர் அடியவரும் தன் நண்பருடன் உடனடியாக பேசி ரூபாய் பத்தாயிரம் வாங்கி கொண்டு நண்பரையும் கையோடுஅழைத்துச்சென்று அடுத்த நாளே அவர் சொன்ன முகவரிக்கு சென்று இருக்கின்றார்.
முதல்கட்ட உதவியாக இந்த பத்தாயிரத்தை கொடுத்து விடலாம் என்று. பிறகு அடியவரின் நண்பர் ஒருவர் சென்னையில் இருக்கிறார்.
இறையருள் மன்றத்தில் உறுப்பினர் ஆக இருக்கிறார் அவரிடமும் அந்த பெரியவரின் மகள் திருமணம் குறித்து ஆலோசனை செய்ய, அவரும் மாங்கல்ய தாலிக்கு தங்கம் நான் வாங்கி தருகிறேன் என்று நம்பிக்கை அளித்தார்.
மறுநாள் திருமங்கலம் சென்று அந்த பெரியவர் கூறிய முகவரியை, காலை முதல் மாலை வரை தேடி இருக்கின்றார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் விசாரித்திருக்கிறார். அப்படி ஒரு நபரே இல்லை அப்படி ஒரு தெருவே இல்லை. இந்த ஊரில் 7வது தெரு என்று இல்லவே இல்லை இந்த ஊரில் மொத்தம் மூன்று தெருக்கள் தான் உள்ளது என்று கூறியிருக்கின்றனர்.
அடியவரும் அவர் பெயரைச் சொல்லி அவருக்கு சரியாக காது கேட்காது வயதானவர் அவருடைய மகள் பெயரும் காயத்ரி கல்யாண வீடுகளுக்கு சமையல் செய்து தருபவர் என்றெல்லாம் கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு விசாரித்திருக்கிறார் அப்படி இந்த ஊரில் யாரும் இல்லை அப்படி ஒரு நபரே இல்லை அப்படிபட்ட மனிதரை பார்த்ததாகவோ கேள்வி பட்டதாகவோ இல்லை என்று அடித்து கூறிவிட்டார்கள் அந்த ஊர்க்காரர்கள்.
நாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த ஊரில்தான் நீங்கள் கேட்கும் நபர் எங்கள் ஊரில் இல்லை இல்லை என்று ஊர்காரர்களும் சொல்லிவிட மாலை வரை வருத்தத்துடன் தேடி தேடி அலுத்து விட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது தான் மனதில் ஒரு விஷயமும் உறைத்திருக்கின்றது.
குருநாதர் நமக்கு உரைத்த வாக்கில் அடுத்த முறை யானும் அன்னை லோபமுத்திரை தேவியும் வந்து தரிசனம் தருவோம் என்று உரைத்ததை மனதில் எண்ணி அவர் ,வந்தது இந்த திருவிளையாடல் புரிந்தது குரு அகத்தியராக இருக்குமோ??? என்று மனதுக்குள்ளே வைத்து சுய ஆலோசனை செய்து பார்த்திருக்கிறார்.
சரி குருவிடமே ஜீவ நாடியில் கேட்டு விடுவோம் என்று எண்ணி திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு ஜீவ நாடி வாக்கு வாசித்த பொழுது குருநாதர் உரைத்த வாக்குகள் அதி அற்புதம்!!! அதி உன்னதம்!!! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
குரு அகத்திய பெருமான் ஜீவநாடி வாயிலாக அந்த அகத்திய அடியவருக்கு தன் பவளச் செவ் வாய் திறந்து உரைத்த வாக்குகள் ஒவ்வொன்றும் அதிகாலை பொழுதில் மரத்திலிருந்து உதிரும் பவளமல்லி போல்!!!
சிறு சிறு துளியாய் விழும் மழைச்சாரல் போல் அன்பு மழை , கருணை மழை!!! இதைவிட என்ன? வார்த்தைகள் சொல்வது??
குருநாதரின் ஒவ்வொரு சொல்லிலும் அன்பும் கருணையும் ஒரு நதியைப் போல் பிரவாகம் எடுத்து பொங்கி வழிந்தது.
அந்த கருணை வாக்கினை பார்க்கும் முன் அந்த அடியவர் செய்து வரும் சிறப்பான தொண்டை கண்டு கண்ணீர் விட்டு அவர் கைகளால் அன்னம் பெற்று அவருக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்ற ஸ்ரீமன் நாராயணனின் லீலையை அடுத்த பதிவில் பார்ப்போம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............தொடரும்!
Om sri lopamudrasamathae Agasthiar thiruvadi Saranam.Appa enekum anthamathri udavi seim manathai koduappa.
ReplyDeleteமெய் சிலிர்க்கிறது சுவாமி
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteநன்றி. நான் நிறைய அகத்தியர் அடியவர்களை சந்தித்து உள்ளேன். மிகவும் நல்லவர்களாக தர்மத்தை கடைபிடித்து அவர்கள் வாழும் வாழ்க்கை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளேன்.அகத்தியர் பெயர் கொண்டு ஏமாற்றம் செய்பவர்களையும் சந்தித்து உள்ளேன். ஏமாற்றுபவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். நல்லவர்கள் இருப்பது போதும் என்ற மனதிருப்தியுடன் மனநிறைவோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள்..
ReplyDeleteமிக உன்னதமான சேவை. இவர் போன்ற அகத்தியர் அடியவர்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். அவருடைய account no கொடுத்தால் தன்னால் முடிந்த ஒரு தொகையை அனுப்ப விருப்பம். மற்றவை அகத்தியர் விருப்பம்.
ReplyDeleteIf u got his account details please share to me also .thank you sir
Deleteஅவரது தொடர்பு எண் 9842170513
Deleteஅவரது தொடர்பு எண் 9842170513
DeletePlease try to make a group to work together
DeleteOm Namahshivaya
ReplyDeleteOm Namahshivaya
Om Namahshivaya