7/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நல்லருள்கள்.
எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும் எவை என்று கூற இதனையே தான் யான் மக்களுக்கு தெரியப் படுத்திக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
அப்பனே துன்பம் இல்லாமல் எவரும் இவ் உலகில் வர இயலாது எதனையும் என்று கூட அப்பனே இதனையுமென்று நன்கு அறிந்து விட்டால் அப்பனே உண்மைநிலை தெரிந்துவிடும் அப்பனே.
துன்பம் வந்தால் தான் அப்பனே பக்குவங்கள் பிறக்கும். பக்குவங்கள் பிறந்தால்தான் அனுபவங்கள் பிறக்கும் அனுபவங்கள் பிறந்தால் தான் இறைவனை காண இயலும்.
அன்பு மகன்களே இவையன்றி கூற அதனால் தான் அப்பனே வரும் போகும் அப்பனே இவையன்றி கூற
இரவும் பகலும் வரும்!! இதனால் எவை என்று கூற பின் அதனையும் அகற்ற முடியுமா???
இரவை பகலாக்க முடியுமா??
பகலை இரவாக்க முடியுமா??
துன்பத்தை இன்பமாக முடியுமா?? இன்பத்தை துன்பமாக முடியுமா??
ஆனாலும் அப்பனே எங்களால் முடியும் என்பேன்.
ஆனாலும் அப்பனே இவை என்று கூற விதியின் பாதையில் அப்பனே அதன் வழியில் சென்றால் தான் முக்தி கிடைக்கும் என்று என்பேன் அப்பனே!
அதனால்தான் அப்பனே எத் துன்பம் வந்தாலும் அப்பனே கவலைகள் இல்லை யான் இருக்கின்றேன் அப்பனே உங்கள் தந்தையாக அனைத்தும் செய்கின்றேன். எவ்வாறு விதவிதமாக சில வினைகள் வந்தாலும் அவையெல்லாம் யான் அகற்றிக் கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே மனிதன் எவை என்று கூற மனிதனுக்கு எதை எதை என்று உணராமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் எது உண்மை?? எது பொய்?? என்பதை கூட.
ஆனாலும் உலகில் பிறந்த அனைவருக்கும் தானாகவே வந்துவிடும் மன சஞ்சலங்கள். அதனால்தான் அப்பனே மனதை அடக்க வேண்டும் என்பேன்.
இதனால்தான் அப்பனே பரிகாரங்கள்!! அப்பனே பல பூஜைகள்!! அப்பனே பல மந்திரங்கள்!! எவற்றிற்காக தெரியுமா???
அப்பனே மனதை அடக்குவதற்காகத்தான். ஆனாலும் அப்பனே மனதை அடக்கினால் அப்பனே ஒன்றும் தேவை இல்லையப்பா.
இறைவன் குடி கொள்வான் மனதில் கூட அப்பனே எவை என்று கூற அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்று யான் முன்பே உரைத்திருக்கிறேன். இவையன்றி கூற அப்பனே மனிதன் மனதை அடக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அகத்தியன் இருக்கும் பொழுது என் தந்தை இருக்கின்றான் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர துன்பம் அவை இவை எல்லாம் அப்பனே தானாகவே வருபவை என்பேன்.
இன்பம் வரும் போதெல்லாம் மனிதர்கள் அப்பனே இப்படி சொல்வதில்லை யான் இன்பமாக இருக்கின்றேன் என்று அப்பனே.
ஆனால் துன்பம் வரும்போது மட்டும் அப்பனே துன்பம் வந்து இறைவனை நாடினால் என்ன செய்வது ??அப்பனே.
இதனைதான் தெரிந்து கொள்ள வேண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் கடை நாள் வரையிலும் அப்பனே.
இவையன்றி கூற பிறக்கும் பொழுதே அப்படியே இன்பம் துன்பம் இறைவன் படைத்து விடுகின்றான் நோயும் படைத்து விடுகின்றான் இதனால் தாம் தம் செயல்களுக்கு ஏற்றவாறு தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.
ஆனால் அப்பனே புண்ணிய பாதையில் சென்று கொண்டிருந்தால் அவ் புண்ணியமே உங்களைக் பாதுகாக்கும் என்பேன் அழகாக அப்பனே . புண்ணியங்கள் செய்து நல் விதமாக பின் சித்தர்கள் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பேன்.
அதனால்தான் "புண்ணியம் செய்!!! "புண்ணியம் செய்!!! என்றெல்லாம் மனிதர்களுக்கு யாங்கள் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஆனால் மனிதனோ மாயையில் சிக்கிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான். அவை செய்தால் இது நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்றெல்லாம் ஆனால் இவையெல்லாம் வெற்று பேச்சுக்கள் தான் அதிகம் என்பேன் மனிதர்களிடத்தில் அப்பனே.
இவையன்றி கூற எதையும் எதனையும் என்று அனைவரும் எவ்வாறு என்பதும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட உண்மையான மனிதன் என்பவன் அப்பனே எதையும் கூற மாட்டான் என்பதை என்னால் அது முடியும் இது முடியும் என்றெல்லாம் விளம்பரங்கள் எல்லாம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே.
அப்பனே எவை என்று கூற ஆனாலும் நல்வழியில் போகும்பொழுது சில பிரச்சனைகள் நிச்சயமாய் வரும் என்பேன். அவையெல்லாம் எதிர்த்து நின்றால் இறைவன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பேன்.
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே நல்வழியில் போகும் பொழுது இறைவன் அப்பனே சில சோதனைகளை செய்வான் அவன் தாங்கிக் கொள்கின்றானா?? என்று கூட.
அவ் சோதனைகளிலிருந்து மைண்டு வந்துவிட்டால் இறைவன் தரிசனம் அப்பனே உங்களை நோக்கி வரும் என்பேன் அப்பனே.
ஆனால் மனிதன் முட்டாளாகவே போய்க் கொண்டிருக்கின்றான். வரும் வரும் காலங்களில் எவை?? ஏது?? எது?? என்று கூட தெரியாமல் அப்பனே தவித்துக் கொண்டிருக்கிறான்.
வாழ்க்கையா??!!!!! வாழ்கின்றான் !!??அப்பனே.
இல்லையப்பா போலியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உண்மை நிலை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதனால்தான் அப்பனே கலியவன் (கலி புருஷன்)) செயல்கள் வரும் அதி விரைவிலேயே அப்பனே.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இனிமேலும் பாதிக்கப்படுவார்கள். எதனால்?? அவந்தனக்கு இப் பிழைப்பு என்பது தெரியாது என்பேன். உண்மையானது எது என்று தெரியாது என்பேன். அப்பனே இவ்வாறு உண்மை நிலையை அறிந்தால்தான் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே பின் கடை நாள் வரையிலும் அப்பனே தொய்வின்றி வாழலாம் என்பேன்.
ஆனால் மனிதனோ வாழ முடியாது அப்பனே. கலியவன் கெடுத்தே வருகின்றான் அப்பனே இவையன்றி கூற இதனால்தான் அப்பனே இறைவன் நன்றாக புத்திகள் படைத்திருக்கின்றான்.அப் புத்திகள் மனிதன் ஒருபோதும் அப்பனே உபயோகிக்கவில்லை அப்பனே.
யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பலபல யுகங்களில் கூட அப்பனே.
இவ்வாறு அப்பனே புத்திகள் அப்பனே இவையன்றி கூற அப்பனே யோசித்து கொள்ளாமல் அப்பனே மற்றவையே நாடிக் கொண்டிருந்தால் எப்படியப்பா?? இறைவன் அருள் கிடைக்கும்?? அப்பனே இல்லையப்பா போலியப்பா!!!!
மனிதர்கள் இதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாங்களும் பல பல யுகங்களாக வாழ்ந்திட்டும் பார்த்திட்டும் விட்டோம் மனிதனை . அப்பனே பொய்யாக வாழ்ந்து பொய்யாகவே பின்னர் இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து வருகின்றானப்பா. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா.
பல வழிகளிலும் சொல்லிவிட்டோம் அப்பனே.
உந்தனுக்கு கொடுத்த அறிவையும் மற்றவனுக்கும் கொடுத்திருக்கின்றான் ஆனாலும் அவன் உபயோகிக்கிறான் அப்பனே ஆனாலும் மற்றவர்களுக்கும் கொடுக்கின்றான் என்பதெல்லாம் அப்பனே இறைவன் பிறக்கும்பொழுது ஆனால் சமமான அறிவுகளை கொடுத்து விடுகின்றான். அதில்தான் அப்பனே உண்டு என்பேன் சூட்சமங்கள்.
அப்பனே உண்மை இல்லையப்பா.இவ்வுலகத்தில் அப்பனே ஆனாலும் உண்மை உள்ளவைகளாக யாங்கள் செய்வோம் பல மனிதர்களை ஏற்படுத்துவோம் அப்பனே.
ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே என்னையும் நாடி வந்து விட்டால் யான் கஷ்டங்கள் தான் முதலில் ஏற்படுத்துவேன். ஏனென்றால் அப்பனே கர்மா தீர வேண்டும். கர்மா தீர்ந்து கொண்டே சென்றால் அதன் மூலமே யான் பக்குவப்படுத்தி விடுவேன்.
ஆனால் அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே இருபது!! முப்பது!! நாற்பது!! ஐம்பது !!அறுபது!! வருடங்களில் கூட கஷ்டங்கள் ஒவ்வொருவருக்கும் அப்பனே பத்து!! பத்து !!என்று எண். !! ஆகவே வகுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இவையெல்லாம் சேர்ந்து அப்பனே எங்களிடத்தில் வருபவர்களுக்கு ஒரே நேரத்தில் கொடுத்து விடுவோம்.
அதனால்தான் அப்பனே ஒரே நேரத்தில் கொடுத்தால் கஷ்டங்கள் அதையும் தாங்கி கொண்டால் அப்பனே வாழ்க்கையில் அப்பனே துன்பமே இல்லை அப்பனே.
அதனால்தான் எவை என்று கூற இதனால்தான் பத்து பத்து என்று அடுக்கடுக்காக பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான்.
பத்து வருடங்கள் உண்மையாக வாழ்ந்தால் அப்பனே அடுத்த பத்து வருடங்கள் நல் விதமாக எவை என்று கூற இன்னமும் சூட்சமங்கள் உள்ளது அப்பனே.
அவை என்று கூற இன்னமும் சொல்கிறேன் கேளுங்கள் எவை எவை என்று கூற அடுத்த அடுத்த வாக்குகளும் அப்பனே.
இவையன்றி கூற! அதனால்தான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்
இதில் கூட ஒரு வருடம்அப்பனே கூட்டி இன்னொரு வருடமும் கூட்டினால் அப்பனே பன்னிரெண்டு(10+1+1=12) இவற்றிற்கும் சான்றுகள் எவ்வாறு என்பதைக்கூட உண்டு என்பேன் இவற்றை பற்றியும் தெளிவாக அனைத்தும் அப்பனே.
எவ்வாறு என்பதையும் கூட வட்டம் எதனால் வட்டம் ஏற்பட்டுகின்றது அப்பனே வட்டத்தோடு வாழ வேண்டும் அப்பொழுதுதான் அப்பனே இறைவன் காட்சி அளிப்பான். வட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் அப்பனே மனிதனின் செயல்கள் அப்பனே எல்லை மீறிக் கொண்டு அப்பனே அழித்து விடுவான்.
அதனால்தான் முதலிலேயே வட்டம் அப்பனே வட்டத்தை நோக்கித்தான் அப்பனே சிறிது நேரம் சிந்தியுங்கள் ஓய்வாக இருக்கும்போது வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே அவ்வட்டத்தில் எவ்வாறு வாழலாம் என்பதை கூட உங்களுக்கு அறிவுகள் கொடுக்கின்றேன். அப்பனே.
ஆனாலும் அவ் வட்டத்திற்குள் மனிதன் வெளியே வந்துவிட்டால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.
அதனால்தான் முதலிலே பின் பூஜ்ஜியத்திற்கே மதிப்பு என்பேன் அப்பனே.
அதில் எவ்வாறு மனிதன் வாழலாம்?? என்று கூட தெரிந்துவிட்டால் அப்பனே மற்றவையெல்லாம் ஒன்றிலிருந்து பல கோடிகள் வரை வாழ்ந்து விடலாம் என்பேன்.
இதுதானப்பா வாழ்க்கை.
வாழ்க்கை பற்றி இன்னும் தெரியவில்லை இவ்வாறே தேய்ந்து தேய்ந்து தேய்வு நிலை ஏற்படுவதால் அப்பனே மனிதனுக்கு மூட நம்பிக்கை பிறக்கின்றது. மூடநம்பிக்கையில் வாழ்கின்றான் அப்பனே. பின் இறைவனை பின் சரணடைந்தால் அனைத்து துன்பங்களும் கரைந்துவிடும் என்று. ஆனாலும் அது பொய் அப்பனே எவை என்று கூற ஆனாலும் ஒரு நிலைக்காகவே இறைவனையும் வணங்குகின்றான். அதுவும் பொய்யப்பா.
அப்பனே இறைவனை வணங்குவதால் என்ன பயன்?? எவ்வாறு என்பதையும் எதனையும் என்று கூற மனதாலும் எதையும் நினைத்து கூடாது வணங்கினால் அப்பனே முதன்மை ஏற்படும் என்பேன்.
நல் விதமாக அப்பனே எவை என்று கூற எதை என்று பேராற்றல் இவை இவ்வுலகத்தில் உண்டு என்பேன் அப்பனே .
அப்பனே வட்டத்தை இடவேண்டும் அவ் வட்டத்திற்குள் எவ்வாறெல்லாம் வாழலாம் என்று அப்பனே தெரிந்து கொண்டு நல் முறையாகவே எவ்வாறு என்பதையும் கூட கடைப்பிடித்தால் அப்பனே அப்பனே இவையன்றி கூற உலகத்திலுள்ள அனைத்தும் கிடைக்கும் என்பேன்.
எவ்வாறு என்பதையும் கூட இதனையும் திரும்பவும் சொல்கின்றேன் அவ் வட்டத்திற்குள் வெளியே வந்தால் அப்பனே முடிந்துவிட்டது அவரவருடைய செயல் அவரவரையே பாதிக்கும் கடைசியில் மாய்ந்து விடுவான் அப்பனே.
இவையன்றி கூற அவ் வட்டத்திற்குள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதைக்கூட யான் எடுத்துரைக்கிறேன் வரும் வரும் காலங்களில் அப்பனே குறைகள் இல்லை.
எவை என்று கூற அப்பனே நலமாக நலமாக எதனையும் என்று கூற அப்பனே உங்கள் கடமையைச் செய்யுங்கள். மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே இவையன்றி கூற துன்பம் யாருக்கு வராது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். அப்பனே எவ்வாறு என்பதை கூட இபுவியுலகில் எவ்வாறு இதனையும் யான் முன் கூட்டியே தெரிவிப்பேன் பல வாக்குகளில் அப்பனே.
இறைவனே இப்புவியுலகத்தில் வந்துவிட்டால் அப்பனே கஷ்டங்கள் தான். ஏன்?? ஈசன் கஷ்டப்படவில்லையா?? அப்பனே எவை என்று கூற ராமன் அப்பனே கஷ்டப்பட வில்லையா?? ஏன் கிருஷ்ணன் கஷ்டப்பட வில்லையா??
அப்பனே இவையன்றி கூற எதனையும் என்று கூற அப்பனே கஷ்டப்பட்டு எவ்வாறு என்பதை கூட அப்பொழுதுதான் இறைவன் பாதையை தேர்ந்தெடுக்க முடியுமே தவிர இன்ப நிலையில் இருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை இன்பநிலையிலேயே இருந்து, அவ் இன்பநிலையே துன்பமாக்கினால் அப்பனே மனிதனால் ஈடு செய்ய முடியாது என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே மனிதனுக்கு சரிவு ஏற்படும் பொழுது அப்பனே எவை காக்கும் என்றால் துன்பம் மட்டுமே .அவ் துன்பத்தை மக்கள் அப்பனே அதை செய்தால் இது போகும் இதை செய்தால் அது போகும்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள்.
இது நியாயமா??? அப்பனே.
நீங்களே கூறுங்கள் ஆனாலும் அப்பனே இவையன்றி கூற துன்பத்திற்கு அப்பனே யாராலும் விடிவுகாலம் கற்க முடியாது என்பேன்.
அதனால்தான் அப்பனே சித்தர்கள் பெயரைச் சொல்லிச் சொல்லி இதைச் செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் என்றெல்லாம் சொல்லி சொல்லி கெடுத்து விட்டார்கள் அப்பனே.
இனிமேலும் உண்மையாகவே யாங்கள் வந்துவிட்டோம் இப்புவியுலகத்தில் அப்பனே எவை என்று கூற சில மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
ஆனாலும் எவை என்று கூற அதனால் தான் அப்பனே மனிதர்களை யாங்கள் இனி மேலும் நம்ப போவதில்லை எதற்காக?? என்றால் அப்பனே
சித்தன்!!! இவையன்றி கூற இதனையும் என்று கூற இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் !!!!
அப்பனே!!! கோபங்கள்!!!! அப்பனே சித்தர்களுக்கு..!!
இவையன்றி கூற ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள் ஒன்றுமே தெரியவில்லை அப்பனே ஆனால் இவையன்றி கூற இவ் பரிகாரத்தின் மூலம் அனைத்தும் நடத்திவிடலாம் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள்.
ஏன் ??அப்பனே இவை என்று கூற இதனையுமென்று கூற ஏன்??? பறக்கலாமே!!!! ஆகாயத்தில்!!!!! ஏன்?? நீந்தலாமே கடலில் இவற்றிற்கெல்லாம் பரிகாரம் உண்டா?? சொல்லுங்கள்.
இவை என்று கூற அப்பனே புத்திகள் யூகித்துக் கொள்ளுங்கள் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே உங்களுக்கும் அறிவுகள் உண்டு என்பேன்.
தெளிவு பெறுக ....!!அப்பனே சொல்லிவிட்டேன்.
இவை என்று கூற தெளிவு பெற்றவர்களுக்கே யாங்கள் வாக்குகள் கூறமுடியும் அப்பனே. இனிமேலும் தெளிவு பெறாதவர்களுக்கு அப்பனே வாக்குகள் சொன்னாலும் ஒன்றும் பிரயோஜனமில்லையப்பா.
அதனால்தான் எடுத்துரைக்கிறேன் இப்பொழுது உங்களுக்கு.
எவை என்று கூற பதிலடியாக இவையன்றி கூற அப்பனே இதனையும் மாற்றலாமே அப்பனே பின் பரிகாரத்தால்
சூரியனை அப்பனே கீழே வர வைக்க முடியுமே!!!!!!!!!!!!
அப்பனே சந்திரனையும் கீழே வர வைக்க முடியுமே!!!!!!
ஆனாலும் ஏன்?? முடிவதில்லை!!! அவ் பரிகாரங்கள் பலிப்பதில்லை.??
அப்பனே தெரிந்து கொள்க!!
பரிகாரம் என்பது அப்பனே காசுக்காகவே என்பேன்.
அப்பனே இவையன்றி கூற மனிதன் பிழைப்புக்காகவே என்பேன். அவையெல்லாம் அப்பனே வீண் என்பேன் அப்பனே.
துன்பம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். பிரம்மா எழுதி வைத்திருப்பதை அப்பனே ஆனாலும் நல் முறையாக சில தான தர்மங்கள் நல் விதமாக புண்ணிய காரியங்கள் செய்து வந்தால் அப்பனே அப்பனே நல்விதமாக பக்திகளும் யாருக்கும் துன்பம் அளிக்காமல் அப்பனே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இறைவா!! இறைவா அனைத்தும் நீயே!!! நீயே!!!
உன்னையே நம்பி கொண்டிருக்கின்றேன்!! என்றிருந்தால் நிச்சயம் யாங்கள் எடுத்துரைப்போம் பிரம்மாவிடம் கூறி அப்பனே,மாற்றத்தை.
அப்பனே உண்டு இவ்வுலகில் நிச்சயம் மாற்றம் நல்லோர்களுக்கு. அப்பனே ஆனாலும் இதில் கூட வருவார்களப்பா இன்னும் திருடர்கள் தான் அப்பனே.
அப்பனே சித்தர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவார்கள் திருடர்கள் அப்பனே. இதனால்தான் அப்பனே யானும் மௌனத்தை காத்து காத்து அப்பனே இருந்தேன் 'போனால் போகட்டும் "என்று ஆனாலும் இனிமேலும் காத்திருந்தால் யான் ஏற்கனவே நல்விதமாகவே வாக்குகள் செப்பிவிட்டேன். அகத்தியனே பொய் என்று கூடச் சொல்லிவிடுவார்கள்.
அப்பனே!! சித்தர்கள் இவ்வுலகத்தை காக்க வந்தவர்கள் என்பேன்.
மனிதர்களை திருத்தி இப்படி வாழ்!! இப்படிச்செல்!! என்றெல்லாம் அப்பனே.
ஆனாலும் இவையன்றி கூற வரும் வரும் காலங்களில் அகத்தியன் சொன்னான் !!!பின் அந்த முனிவன் சொன்னான்!! இந்த முனிவன் சொன்னான் !! இவை எல்லாம் சொன்னான் என்று அப்பனே மனிதனே!!! திருத்தி எழுதி விட்டான் அப்பனே இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது இக்கலியுத்தில் கூட அப்பனே.
இவையன்றி கூற இன்னும் உண்மை நிலையை யான் எடுத்துரைப்பேன் அப்பனே பல வாக்குகளும் உண்டு என்பேன் கவலைகள் இல்லை.
அப்பனே நல்விதமாக ஆசிகள். மறுவாக்கும் சொல்கின்றேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteTranslation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/1U6pM7S2R_GEH4IdbV6LWg7HNipkAJEcu/view?usp=sharing