​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 4 February 2022

சித்தன் அருள் - 1081 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைத்தளம் அவரின் னின் நேரடிப் பார்வையில் இயங்கி வருகின்றது, என்பதே உண்மை.

ஆயிரம் பதிவுகளை தாண்டியும் குருவின் திருவருளால் அவரின் அடியவர்களுக்கு உபதேசங்களை, அனுபவ பதிவுகளை நல் வழிகாட்டியாக அமைத்து தருகிறார் குருநாதர்.

நாடி வாசித்து பல அடியவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த திரு அகத்தியர் மைந்தன் அவர்களின் மூலம் குருநாதரின் உபதேசங்கள் அனுபவப் பதிவுகள் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபதேசித்த வாக்குகள் இன்றைய தலைமுறையினருக்கும் நல்வழி காட்டியாக வாழ்க்கை துணையாக ஒருவர் எப்படி எல்லாம் வாழ வேண்டும், எப்படி எல்லாம் பக்தியாக இருக்க வேண்டும் என்று நெறி முறையை காட்டி வருகின்றது.

பல அற்புதங்கள் !!பல அதிசயங்கள்!! பல பல புண்ணிய ஷேத்திரங்கள்!!! அவற்றின் மகிமைகள்!!  பலப்பல தேவரகசியங்கள்!!! கொடிய வியாதிக்கான மருத்துவ முறைகள்!!! தூய அன்பான எளிய பக்திக்கும் சித்தர்கள் ஓடோடி வந்து கருணை செய்த நிகழ்வுகள் என இந்த தலைமுறையினருக்கும் ஒரு அற்புத பாடங்களாகவே இருந்து வருகின்றது.

இந்தத் தலைமுறையினருக்கும் குருநாதர் அகத்திய பெருமான் கருணையுடன் திரு ஜானகிராமன் ஐயாவை தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு ஜீவ நாடியின் மூலம் நம் தலைமுறையினருக்கு வாக்கு உபதேசங்களை தந்து நம்மை வழி நடத்திச் செல்கின்றார். பலபல புண்ணியம் வாய்ந்த பெருமைமிகு ஆலயங்கள் அவற்றின் இதிகாசங்கள் பலப்பல மகத்துவம் வாய்ந்த யாரும் அறிந்திராத ஜீவசமாதிகள் அவற்றின் சிறப்புகள் இதுவரை யாரும் அறிந்திராத ஆலயத்தின் சிறப்புகள் என ஜானகிராமன் ஐயாவை வழிநடத்தி புனித யாத்திரை செய்வித்து ஒவ்வொரு புனித ஸ்தலங்களையும் வெளிப்படுத்தி மக்கள் அங்கு சென்றால் அவர்களுடைய துன்பங்கள் தீரும் நல்வழிக்கு வந்துவிட முடியும் என கருணையோடு வாக்குகளை தந்து நம்மையெல்லாம் வழிநடத்தி சென்று கொண்டிருக்கின்றார்

சித்தன் அருள் வலைத்தளம் ஒரு ஆவணமாக இருக்கும். தேடித்தேடி ஓடி ஓடி நாடி நாடி வரும் அனைவருக்கும் வாழ்வியல் ஆன்மிக நெறி காட்டும் ஒரு போதிமரம் ஆக இருக்கும்.

அந்தவகையில் குருநாதர் அகத்தியர், சிறப்பான தொண்டாற்றி வரும் அந்த மதுரை அடியவருக்கு தித்திக்கும் தேன் மதுர வாக்கினை அவருடைய திருவாய் மலர்ந்தருளியதை காண்போம்.

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே யானும் வந்தேனப்பா. உன் அருகிலே அப்பனே. அப்பனே எவை என்று கூற அப்பனே பின் உன்னாலும் முடியவில்லை என்பேன். ஆனாலும் யான் கையைப்பிடித்து அழைத்தேன் என்பேன். அப்பனே நலமாக நலம் ஆக நீ என் மீது காட்டும் அன்பு அப்பனே பெரியதப்பா. 

அப்பனே அதனால் என் பிள்ளையாகவே வாழ்ந்துவிடு என்பேன். யான் இருக்கின்றேன் உன் தந்தையாக லோபமுத்ராவும் இருப்பாள் கடைசி நாள் வரையிலும் குற்றங்கள் இல்லை அப்பனே.

அப்பனே இன்னும் பல புண்ணியங்கள் அப்பனே நீ செய்வாய் அப்பனே. அப்பனே யானே அங்கு(பொதிகைமலை) அப்பனே பூஜைகள் செய்யும் பொழுது உன்னை நல் விதமாக ஆசீர்வதித்தேன் அப்பனே.

அனைவருக்கும் எம் ஆசிகள் அப்பனே.

அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே நல்லோருக்கு கலியவன்(கலிபுருஷன்) அப்பனே எதை எதை என்று கூறாத அளவிற்கு கஷ்டங்கள் கொடுப்பான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே குறைகள் இல்லை யான் எதனை என்று கூறும் அளவிற்கு கூட அப்பனே அதனை நீக்கி விடுவேன் அப்பனே. என்னுடைய அருளால்.

அப்பனே எவை என்று கூற அப்பனே யானும் மறு ரூபத்தில் வந்தேனப்பா.

அப்பனே ஓர் ஏழை இல்லாள் திருமணத்திற்கு நல் விதமாக கையேந்தினேன் உன்னிடத்தில் அப்பனே.

நீயும் தந்தாயப்பா அப்பனே அதையும் சேர்த்து விட்டேன் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே. புண்ணியங்கள்!

அப்பனே எதை என்றும் எதனை என்று கூற நீ எதனை உன்னிடத்தில் எவை என்று சில விற்பனை செய்யும் இடத்திற்கு.

அப்பனே நலமாக நலமாக அப்பனே இக்கலியுகத்திலும் அப்பனே யாங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. நல்லோர்கள் யார்? யார்? என்றுகூட கண்டு ஆசீர்வதித்து வருகின்றோம். 

அப்பனே இவைதன் மனித ரூபத்தில் இன்னும் வருவோமப்பா. 

அப்பனே யாரும் செய்ய இயலாத உதவியைக் கூட நீ செய்து கொண்டிருக்கின்றாய் அப்பனே!  இதுதான் அப்பனே நல்விதமாக பின் புண்ணியம் என்பேன் அப்பனே. 

இவையன்றி கூற அதனால்தான் அப்பனே இன்னும் அடிக்கடி உன்னிடத்தில் யான் வருவேன் அப்பனே.

அப்பனே எதனை என்று கூற அப்பனே சில ஆன்மாக்களுக்கு எவை என்று கூறாத அளவிற்கு கூட அப்பனே பின் மறைமுகமாகவே உதவிகள் ஆனாலும் மனித ரூபத்தில் யான் உன்னிடத்திலே எவ்வாறு என்பதையும் கூட வருவேனப்பா.

வருவேனப்பா அடிக்கடி என்பேன். 

அப்பனே இவைபோன்று அப்பனே மனிதர்கள் செய்தாலே போதுமானது அப்பனே. யான் அப்பனே வந்து அப்பனே சில கர்மங்களை எடுத்து விட்டு செல்வேன் அப்பனே. ஆனாலும் இதை மனிதர்கள் யாரும் உணர்வதில்லை அப்பனே. அவை இவை என்று கூட அப்பனே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே இன்னும்.

அப்பனே அவை செய்கின்றேன் இவை செய்கின்றேன் அப்படி எல்லாம் இப்படி எல்லாம் ஆகும் என்பதைக் கூட அப்பனே தரித்திர மனிதன் என்பேன் அப்பனே.

அவை கூட பரவாயில்லை அப்பனே இதையன்றி கூற என்னால் அனைத்தும் செய்ய இயலும் என்று கூட மனிதன் பொய்யான கணக்கை வகுத்துள்ளான் என்பேன்.

அப்பனே இவையெல்லாம் மனிதனின் ஆட்டங்களே. சிறிது நேரம்தானப்பா அப்பனே அவை ஆட்டங்கள் அப்பனே யாங்களே கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்போம். அப்பனே ஆட்டம் முடிந்தால் அப்பனே அவந்தன் அப்பனே எழும்பவே முடியாது அப்பனே கடைநாள் வரையில்.

மனிதனுக்கு தெரிவதில்லையப்பா.

ஆனாலும் அப்பனே பொய் சொல்லி அதைச் சொல்லி இதைச் சொல்லி எல்லாம் அப்பனே இவ்வாறு இருக்க அவ்வாறு இருக்க இவ்வாறு மந்திரங்களை ஜெபித்தால் அவ்வாறு இருக்கலாம் என்பதெல்லாம் அப்பனே மனிதனின் பின் அப்பனே வேடிக்கையாக உள்ளது.

யானும் அப்பனே ரசித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதனால்? ரசித்துக் கொண்டிருக்கின்றேனென்றால் இப்படியெல்லாம் சொல்லி இவனே இவந்தனை அழித்து கொண்டிருக்கின்றானே என்று கூட அப்பனே.

ஆனாலும் செய்த புண்ணியங்கள் நீ செய்த புண்ணியங்கள் அப்பனே பெரும் புண்ணியமப்பா. அப்பப்பா!! அளவிட முடியாதது அப்பனே! 

இன்னும் உந்தனக்கு பொருள்கள் யான் தருவேன் அப்பனே. அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.

கவலைகள் இல்லை அப்பனே. 

அப்பனே யான் எதைச் சொன்னாலும் அப்பனே அப்படியே ஏற்றுக்கொண்டு செய்கின்றாய் அப்பனே. ஆனாலும் அப்பனே சிறிது சோதனையும் கொடுப்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே அதிலும் கூட மறைந்திருந்து முருகன் பார்ப்பான் என்பேன். அப்பனே, நல் விதமாக மாற்றங்களோடு ஏற்றங்களும் உண்டு கவலைகள் இல்லை அப்பனே.

அப்பனே உண்டாயப்பா யான் சொல்லியபடியே போலவே பின் அப்பனே இவை என்று கூற
அன்றைய தினத்தில் அப்பனே பெருமாளும் அப்பனே வந்தானப்பா நல் விதமாக அப்பனே என்னுடைய அப்பனே திருத்தலத்திற்கே (பசுமலை) என்பேன்.

அப்பனே இவைதான் புண்ணியங்கள் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே யானும் சொன்னேன் எதனை என்று கூற பெருமாளிடத்திலே .

அப்பனே இவை என்று கூற அப்பனே *அவன் செய்த புண்ணியங்களை பார் என்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

ஆனாலும் நாராயணனும், அப்பனே அகத்தியா இவையெல்லாம் பல மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் எனக்கு பல சரியான வேலைகள் இருக்கின்றது. யான் வருவதற்கில்லை என்று கூட மறுத்துவிட்டான்.

ஆனாலும் யான் சொன்னேன் நாராயணனுக்கு.

நாராயணா !!!இவை என்று கூற உந்தனுக்கு பல வழிகளிலும் பல யுகத்திலும் யான் உதவிகள் செய்து இருக்கின்றேன்.

சிறு உதவி!!! இவ் அடியேனினை நீ காண். என்றேன். ஆனாலும் கண்டுகொண்டான்!!

நீ பல மனிதர்களுக்கு எவை என்று கூற இயலாதவர்களுக்கு பின் கைவிடப்பட்டவர்களுக்கே உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றாய் என்று. 

யானும் நாராயணனை கையோடு அழைத்து வந்தேன். அதனால் அவந்தனும் நீ செய்த உதவிகளை பார்த்து பின் கண்ணீர் விட்டு விட்டான். 

இதனால் இவந்தன் பின் எவை என்று கூற இவந்தனிடத்தில் நிச்சயமாய் கையேந்துவேன் என்று கூட பெருமாளும் வந்துவிட்டான். அப்பனே உன் கைகளால் அவந்தனும் அருந்திவிட்டான் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற சேவைகளை செய்யவே அப்பனே நல் விதமாக செய்து கொண்டே இரு அப்பனே. மற்றவை அப்பனே உன் குடும்பத்தையும் யான் பார்த்துக்கொள்கின்றேன். எது தேவையோ அதை கொடுக்கின்றேன். உன் குழந்தைகளுக்கும் நல் வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன் உன் கடமையை சரிவர நீ செய்து வா அப்பனே.

அப்பனே நலமாக நலமாக சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூற மீண்டும் பிறப்புக்கள் இல்லையப்பா. இன்னும் பல தரிசனங்கள் கொடுப்பேனப்பா.

அதுமட்டுமில்லாமல் அப்பனே கந்தன் தரிசனமும் உந்தனுக்கு நிச்சயமாய் கொடுப்பானப்பா.

அப்பனே இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூற ஏதும் இயலாதவர்களுக்கு எல்லாம் மனிதர்கள் அப்பனே தம் தம் இயன்ற அளவு அப்பனே உதவிகள் செய்து வந்தால் யாங்களே அப்பனே மனித ரூபத்தில் வந்து அப்பனே அவர்களை அணைத்துக் கொள்வோம் பாசத்தையும் காட்டுவோம் அப்பனே இது கலியுகத்தில் நிச்சயமாய் இனிமேலும் நடைபெறும் என்பேன்.

ஆனால் மாய உலகத்தில் அப்பனே மாயாஜாலத்தை யே பின்பற்றுகின்றான் மனிதன் என்பேன். இவை தான் மனிதனின் முட்டாள் செயல் என்பேன்.

அப்பனே யான் முன்னே சொல்லி இருக்கின்றேன் அப்பனே ஒன்றும் ஆகாது என்பேன் மந்திரத்தால் கூட.

மந்திரங்கள் கூட எப்படி எப்போது பலிக்கும்? என்றால்?
  
அப்பனே அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று கூட எண்ணி பல தான தர்மங்கள் செய்தால் கூட அப்பனே அவ் மந்திரத்தை கூட யாங்களே வந்து சொல்லித் தருவோம் ஏதாவது ஒரு மனித ரூபத்தில் கூட. 

ஆனாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு தன் சுயநலத்திற்காகவே பின் மந்திரத்தை ஓதிக் கொண்டே இருந்தால் அவ் மந்திரமே அவனை அழித்துவிடும். இதுதானப்பா உண்மை.

அப்பனே அதனால் தான் மனிதர்களுக்கு இன்னும் பலப்பல சுவடிகளில் யான் எழுதி வைத்து இருக்கின்றேன். 

அதை யான் கிடைக்க பின் மனிதனுக்கு அது கிடைத்து விட்டாலும் தரித்திர மனிதன் சுலபமாக அப்பனே எதை எதை என்று கூட பின் பணத்தை பறித்துக் கொண்டு அப்பனே அவந்தன் மட்டும் சுலபமாக வாழ்ந்து விடுவான்.

அதனால்தான் அப்பனே எப்போழுது எதைக்? கொடுக்க வேண்டும்? என்பதைக்கூட யாங்களே சில சுவடிகளை அப்பனே அடியில் மறைத்துள்ளோம்.

அப்பனே அவை மட்டுமில்லாமல் இன்னும் பல அப்பனே சூட்சுமங்கள் உள்ளது என்பேன்.

அப்பனே ஈசனே அப்பனே தில்லையில்(சிதம்பரம் நடராஜன்) அவந்தன் காலடியில் பல சுவடிகளை ஒளித்து வைத்துள்ளான் என்பேன்.

ஏனென்றால் அப்பனே பல புலவர்களும் பல வழிகளில் அரசர்களும் இதை கொடுத்தால் இவை பின் மனிதர்களை நன்றாக்குவோம்!! உருவாக்குவோம்!! என்றெல்லாம் அப்பனே பின் மனிதர்களும் எடுத்துச் செல்வார்கள் என்பதற்கிணங்க ஆனாலும் நேரங்கள் வரட்டும் தக்க சமயத்தில் மனிதர்களுக்கு இவையெல்லாம் போய் சேரும் என்பதைக் கூட அவன் காலடியில் அப்பனே அப்படியே பலகோடி சுவடிகள் புதைந்துள்ளன என்பேன் அப்பனே.

இவையன்றி கூற அதுவும் யாருக்கும் தெரியாது அப்பனே.

ஈசன்!! கால்!!!! அப்பனே பின் அதனையும் எடுத்தால்தான் அப்பனே உண்டு என்பேன். அதனால் அப்பனே அவன் காலடியில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா!!! 

சிதம்பர இரகசியத்தில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா. 

இதனால்தான் தில்லை என்கின்றார்களே!!! அப்பனே இவையன்றி கூற அனைத்தும் அவனிடத்தில் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று கூட அவந்தனிடத்தில் சென்று விட்டால் ...

அவந்தன் உந்தனக்கு எவை என்று கூறும் அளவிற்கு கூட அவந்தன் இல்லை என்றே சொல்லி விட மாட்டான் என்பேன்.

இதுதானப்பா தில்லை.!!!

இல்லை என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்பேன்.

அப்பனே எதனையும் என்று கூட இன்னும் பல வாக்குகளும் உந்தனக்கு உண்டு என்பேன் அப்பனே.

இன்னும் எதனை என்று செய்வதற்கறியா அப்பனே உன் அருகிலேயே அப்பனே நீ படும் பாட்டையும் பார்த்தேனப்பா அப்பனே.

அப்பனே இருந்தபோதிலும் அப்பனே ஏறினாய்!! (பொதிகை மலை பயணம்) 

அப்பனே யானும் வந்தேனப்பா உன்னருகிலே இருந்தேனப்பா!!! 

மூச்சை பார்த்தால் அப்பனே யானே இவந்தனும் இப்படியா?? என்று கூட யோசித்து விட்டேன்.

அப்பனே நலமாக நலமாக இதனால்தான் அப்பனே இவ்வுலகத்தில் அன்பு பெரியது அப்பனே.

அன்பே தெய்வம் என்றெல்லாம் சொல்லி விட்டு போனார்கள் என்பேன் அப்பனே.

அப்பனே இன்னும் பல சூட்சமங்கள் அதிவிரைவில் அப்பனே உந்தனக்கு தெரிய வைப்பேன் அப்பனே.

கவலைகள் இல்லை எண்ணிய இடமெல்லாம் யான் காட்சி அளிப்பேன் அப்பனே. 

மகத்தான சேவையை செய்து கொண்டிருக்கின்றாய் அப்பனே நல் விதமான மாற்றங்களோடு ஏற்றங்களும் உண்டு என்பேன்.

ஆனாலும் ஒன்றை மனதில் தெரிவித்துக் கொள்கிறேன் அப்பனே எவை என்று இது எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக் கொண்டேதான் வருகின்றேன்.

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே.

அப்பனே எவை என்று கூற *இன்பம் துன்பம் என்பது அப்பனே மனித வாழ்க்கையில் வருவது சகஜமே என்பேன் அப்பனே.

அவையெல்லாம் கடந்து சென்றால் தான் இறைவனை தரிசிக்க முடியும் என்பேன். 

ஆனாலும் அப்பனே பட்ட சிரமங்கள் எவை எவை என்றெல்லாம் எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே அதனால் தான் அப்பனே உன் நல் உள்ளத்திற்காகவே யானும் அப்பனே வந்தேனப்பா.

இன்னும் இவை வேண்டுமோ அதையெல்லாம் உந்தனுக்கு தந்து கொண்டே இருப்போம் என்பேன்.

அப்பனே கவலைகள் இல்லை அப்பனே அனைத்து நலன்களும் தந்து அப்பனே இன்னும் பல சிறப்பான உரைகளும் சொல்கின்றேன் அப்பனே.

கவலைகள் இல்லை அப்பனே நல் விதமாகவே வாக்குகள் சொல்லச் சொல்ல அப்பனே இனிக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே இன்னும் உந்தனுக்கு முருகன் காட்சிகள் அளிப்பான் என்பேன்.

அப்பனே முருகனுக்கும் நல் விதமான அப்பனே எவை என்று கூற வரும் அமாவாசை திதிகளில் அப்பனே நல் படையல் இட்டு அப்பனே பின் முருகனுக்கும் அப்பனே உன் முன்னோர்களுக்கும் படையல் இட்டு அப்பனே சிலசில தானங்களை செய்து வா அப்பனே.

அதில் கூட வருவார்களப்பா உன் முன்னோர்கள் பின் அருந்துவார்கள் அப்பனே.

இவையன்றி கூற யான் செய்கின்றேன் அனைத்தும் கூட அப்பனே.

நல் வாக்குகள் மீண்டும் காத்துக் கொண்டிருக்கின்றது

யாங்கள் சப்தரிஷிகளும் வந்தோமப்பா. உந்தனுக்கு ஆசிர்வாதங்கள் தந்தோமப்பா

அப்பனே இவை போன்று அப்பனே எதனை என்று கூறும் அளவிற்கு கூட உண்மைதானப்பா. அப்பனே அதனால்தான் புண்ணியங்கள் செய் செய் என்றெல்லாம் மனிதர்களுக்கு அப்பனே எவை என்று கூற மனிதர்களுக்கு யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அதனால் அப்பனே புண்ணியங்கள் செய்தால் அப்பனே அனைத்து தேவர்களும் அனைத்து ரிஷி மார்களும்!! ஞானியர்களும்!! அப்பனே!!

இவ்வாறு மனிதன் இருக்கின்றானா என்பதை கண்டு கொள்வார்கள் என்பது மெய்யே அப்பனே. நீயும் உணர்ந்தது மெய்யே அப்பனே.

இவையன்றி கூற அப்பனே அங்கும் ஈசனார் வந்தானப்பா நல் தரிசனங்கள் உண்டு என்பேன் ஆசிர்வாதமும் உண்டு என்பேன் உத்தரகோசமங்கையில் நல் முறையாக ஈசன் ஆசிர்வதித்து சென்றானப்பா... இனியும் நல் தரிசனங்கள் பின் ஆசீர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே.

மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் ஐயனே!

அந்த அகத்தியர் அடியவர் எப்படி எல்லாம் பக்தி செய்து தானம் தர்மங்கள் செய்து நம் குருநாதர் மீது அன்பு செலுத்தி இருந்தால் குருநாதரே இப்படி தித்திக்கும் வாக்குக்கள் தந்திருப்பார்!!!! பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனை கையோடு அழைத்து வந்து என் மைந்தனை பார் அவன் செய்யும் காரியங்களை பார் என்று உரிமையோடு அருள் ஆசிர்வாதம் பெற வைத்த குருவின் கருணை எப்பேற்பட்டது!

தன் மகன் நல்ல மதிப்பெண் பெற்று பார்போற்றும் வகையில் உயர்ந்த இடத்திற்கு செல்லும் பொழுது அதை அனைவருக்கும் காட்டி பெருமைப்படும் ஒரு தகப்பனின் பெருமித மன மகிழ்ச்சியை நம் குரு ஸ்ரீமன் நாராயணனை அழைத்து வந்து காண்பித்து ஆசீர்வதிக்கும்படி செய்தது எப்படிப்பட்ட கருணைச் செயல் நினைக்கும் போதே மனம் பேருஉவகை கொள்கின்றது.

உற்றமும் சுற்றமும் வெறுத்தொதுக்கி கைவிடப்பட்ட தொழு நோயாளிகளை நல் முறையில் அவர்கள் விரும்பும் வண்ணம் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்னபிற அனைத்து உதவிகளும் தன்னலம் பாராது சிறந்த முறையில் சேவையாற்றி கொண்டு வந்த அந்த புண்ணிய செயலுக்காக குருநாதர் தரிசனமும் சப்தரிஷிகள் தரிசனமும் ஸ்ரீமன் நாராயணன் அனுக்கிரகமும் ஈசனின் நற்பார்வையும் கிடைக்கப்பெற்ற அந்த அடியவரை வாழ்த்தி வணங்கி இதுபோன்ற புண்ணியச் செயல்களை நாமும் செய்து இறையருள் பெறுவோம்.

""மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்!!!

என்னும் திருக்குறள் வாக்கு போல நாம் அனைவரும் குருநாதர் அகத்தியரை தாயாக தந்தையாக தான் வணங்கி வருகின்றோம் ஒரு மகன் தன் தந்தைக்கு பெருமை தேடித்தர வேண்டும் அவர் சொற்படி நடந்து அவர் வாக்கை அனுசரித்து நடந்து அவர் வகுத்துத் தந்த வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் அது நம் தந்தை குருநாதர் அகத்திய பெருமானுக்கு பெருமை!!!!

நாம் வாழும் இந்த சிறு காலத்தில் நம்மால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து இறையருளும் திருவருளும் குருவருளும் பெற்று நம் தந்தையான அகத்தியருக்கு பெருமை தேடித்தருவோம்!! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........ தொடரும்!

2 comments:

  1. குரு காட்டிய வழியில் தீர்க்கமாக கடை நாள் வரை நடக்க பெரியோர்கள்(ஈசன், முருகன், அகத்தியன், முன்னோர்கள்) ஆசிர்வதிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் அடியை வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete